தொடக்கம் |
|
|
2193. | இருளைக் கந்தரத்தில் வைத்தோன் தன் இடத்து என்றும் அன்பின் தெருளைத்தந்து அவட்கு மாறாத் தெரிவையை இசையால் வெல்ல அருளைத் தந்து அளித்த வண்ணம் அறைந்தனம் தாயாய்ப் பன்றிக் குருளைக்கு முலை தந்து ஆவி கொடுத்தவாறு எடுத்துச் சொல்வாம். | 1 |
|
|
உரை
|
|
|
|
|
2194. | முறை என இமையோர் வேண்ட முளைத்த நஞ்சாய் இன்று சான்றாய் உறை என மிடற்றில் வைத்த உம்பரான் மதுரைக்கு ஆரம் திறை என எறி நீர் வைகைத்து எற்கது குரு இருந்த துறை என உளது ஓர் செல்வத் தொல் மணி மாடமூதூர். | 2 |
|
|
உரை
|
|
|
|
|
2195. | தரு நாதன் ஆதி வானோர் தம் குரு இருந்து நோற்பக் குரு நாதன் எனப் பேர் பெற்றுக் கோது இலா வரம் தந்து ஏற்றில் வருநாதன் சித்திரத் தேர் வலவனார் உடனே கஞ்சத் திரு நாதன் பரவ வைகி இருக்கும் அச் சிறந்த ஊரில். | 3 |
|
|
உரை
|
|
|
|
|
2196. | சுகலன் என்று ஒரு வேளான் அவன் மனை சுகலை என்பாள் இகல் அரும் கற்பினாள் பன்னிரு மகப் பெற்றாள் செல்வப் புகல் அரும் செருக்கால் அன்ன புதல்வரைக் கடியார் ஆகி அகல் அரும் களிப்பு மீதூர் அன்பினால் வளர்க்கும் நாளில். | 4 |
|
|
உரை
|
|
|
|
|
2197. | தந்தையும் தாயும் மாயத் தறுகண் மிக்கு உடையார் ஆகி மைந்தரும் வேட ரோடு கூடி வெம் கானில் வந்து வெம் தொழில் வேட்டம் செய்வார் வெயில் புகாப் புதர் கீழ் எய்தி ஐந்து அவித்து இருந்து நோற்கும் குரவனை அங்குக் கண்டார். | 5 |
|
|
உரை
|
|
|
|
|
2198. | கைத்தலம் புடைத்து நக்குக் கல்லும் வெம் பாலும் வாரி மெய்த்தவன் மெய்யில் தாக்க வீசினார் வினையை வெல்லும் உத்தமன் விக்கம் செய்தார் தவத்தினுக்கு உவர் என்று உன்னிச் சித்தா நொந்து இனைய வஞ்சத் தீயரைச் செயிர்த்து நோக்கா. | 6 |
|
|
உரை
|
|
|
|
|
2199. | தொழும் தொழில் மறந்து வேடத் தொழில் உழந்து உழல் வீர் நீர் மண் உழும் தொழில் உடைய நீரால் பன்றியின் உதரத்து எய்திக் கொழும் தொழில் அனைய ஏன குருளையாய்த் தந்தை தாயை இழந்து அலம் உறுமின் என்னா இட்டனன் கடிய சாபம். | 7 |
|
|
உரை
|
|
|
|
|
2200. | பாவத்தை அனைய மைந்தர் பன்னிருபேரும் அஞ்சிச் சாவத்தை ஏற்று எப்போது தணிவது இச் சாபம் என்ன ஆவத்தை அகற்றும் ஈசன் அருள் கழல் நினைந்து வந்த கோவத்தை முனிவு செய்தக் கடவுளர் குரவன் கூறும். | 8 |
|
|
உரை
|
|
|
|
|
2201. | என்னை ஆளுடைய கூடல் ஏக நாயகனே உங்கள் அன்னையாய் முலைதந்து ஆவி அளித்து மேல் அமைச்சர் ஆக்கிப் பின்னை ஆனந்த வீடு தரும் எனப் பெண் ஓர் பாகன் தன்னை ஆதரித்தோன் சொன்னான் பன்னிரு தனயர் தாமும். | 9 |
|
|
உரை
|
|
|
|
|
2202. | தொன்மைசால் குரு இருந்த துறை அதன் புறத்த ஆன பன்மைசால் கான வாழ்க்கைப் பன்றிகட்கு அரசாய் வைகும் தன்மைசல் தனி ஏனத்தின் தன் பெடை வயிற்றில் சென்று வன்மை சால் குருளை ஆகிப் பிறந்தனர் வழக்கான் மன்னோ. | 10 |
|
|
உரை
|
|
|
|
|
2203. | ஆன நாள் ஒருநாள் எல்லை அரசருக்கு அரசன் ஆன மீனவன் மதுரை நீங்கி மேல் திசைக் கானம் நோக்கி மானமா வேட்டம் செய்வான் மத்தமா உகைத்துத் தண்டாச் சேனை தன் புறம் பே மொய்ப்பச் செல்கின்றான் செல்லும் எல்லை. | 11 |
|
|
உரை
|
|
|
|
|
2204. | மா வழங்கு இடங்கள் தேர வல்ல தோல் வன்கால் ஒற்றர் பாவடிச் சுவடு பற்றிப் படர்ந்து நாறு அழல் புலால் வாய்த் தீ விழி உழுவை ஏனம் திரி மருப்பு இரலை புல்வாய் மேவிடம் அறிந்து வல்லே விரைந்து வந்து எதிரே சொன்னார். | 12 |
|
|
உரை
|
|
|
|
|
2205. | மறத்துறை வேட்ட மாக்கள் வல்லை போய் ஒடி எறிந்து புறத்துவார் வலைகள் போக்கி நாய் அதன் புறம்பு போர்ப்ப நிறைத்து மா ஒதுக்கி நீட்டும் படைஞராய் நிரை சூழ்ந்து நிற்ப அறத்துறை மாறாக் கோலான் ஆனைமேல் கொண்டு நிற்ப. | 13 |
|
|
உரை
|
|
|
|
|
2206. | சில்லரித் துடி கோடு எங்கும் செவிடு உறச் சிலையா நிற்பப் பல்வகைப் பார்வை காட்டிப் பயில் விளி இசையா நிற்பர் வல்லியம் இரலை மையன் மான் இனம் வெருளா நிற்ப வில் இற வலித்து வாங்கி மீளி வெம் கணைகள் தூர்த்தார். | 14 |
|
|
உரை
|
|
|
|
|
2207. | செறிந்த மான் முறிந்த தாள் சிதைந்த சென்னி செம்புனல் பறிந்தவாறு வெள் நிணம் பரிந்து வீசு கை இறா மறிந்த ஏழு உயர்ந்த வேழம் மாண்ட எண்கு வல்லியம் பிறிந்த ஆவி யோடும் வாய் பிளந்தவாய் விழுந்ததே. | 15 |
|
|
உரை
|
|
|
|
|
2208. | தொட்ட புல் கிழங்கு வாடை தொட விரைந்து கண்ணியுள் பட்டவும் பொறித்து வைத்த பார்வை வீழ்ந்து அடுத்தவும் கட்டி இட்ட வலை பிழைத்து ஞமலி கௌவ நின்றவும் மட்டிலாத ஒட்டிநின்ற மள்ளர் வேலின் மாய்ந்தவே. | 16 |
|
|
உரை
|
|
|
|
|
2209. | பட்டமா ஒழிந்து நின்ற மற விலங்கு பல் சில வட்டமா வளைந்து உடுத்த வலையின் உந்தி அப்புறத்து எட்டி நின்ற கொலை ஞர் மேல் எதிர்ந்து மீள்வ வெயில் வளைந்து ஒட்டினாரை மலையும் மாப் பொறிக்கணங்கள் ஏத்தவே. | 17 |
|
|
உரை
|
|
|
|
|
2210. | வல்லியம் துளைத்து அகன்று மான் துளைத்து அகன்று வெம் கல் இயங்கு எண்கினைத் துளத்து அகன்று கயவு வாய் வெல் இன்பம் துளைத்து மள்ளர் விட்ட வாளி இங்ஙனம் சொல்லினும் கடிந்து போய்த் துணித்தமா அளப்பு இல. | 18 |
|
|
உரை
|
|
|
|
|
2211. | மடுத்த வாளியில் பிழைத்து வலையை முட்டி அப்புறத்து அடுத்த மானை வௌவி நாய் அலைத்து நின்ற ஆதிநாள் உடுத்த பாசவினையினின்று உய்கு வாரை ஒய் எனத் தடுத்த வா விளைத்து நின்ற தையலாரை ஒத்தவே. | 19 |
|
|
உரை
|
|
|
|
|
2212. | மதியை நேர் வகிர்ந்து கௌவி அனைய வான் மருப்பு வெங் கதிய வேழம் மீது தாது காலு நீல முகையின் நீள் நுதிய வேல் நுழைந்து செம் புண் நூழில் வீழு முதிர நீர் முதிய கான வரையின் மீது மொய்த்த தீயை ஒத்தவே. | 20 |
|
|
உரை
|
|
|
|
|
2213. | மள்ளர் ஓசை துடியினோன் ஓசை வாளிபோய்த் தள்ள வீழ் விலங்கின் ஓசை தப்பி ஓடும் மானின் மேல் துள்ளு நாய் குரைக்கும் ஓசை கான மூடு தொக்கு வான் உள் உலா உடன்று ஒலிக்கும் உருமின் ஓசை புரையுமால். | 21 |
|
|
உரை
|
|
|
|
|
2214. | இன்ன வேறு பல் விலங்கு எலாம் மலைத் இலங்குவேல் மன்னர் ஏறு தென்னர் கோ மகன் குடக்கின் ஏகுவான் அன்னபோது ஓர் ஏனம் அரசு இருக்கும் அடவி வாய் முன்னர் ஓடி வந்து நின்று வந்த செய்தி மொழியும் ஆல். | 22 |
|
|
உரை
|
|
|
|
|
2215. | எங்களுக்கு அரசே கேட்டி இங்கு உள மிருகம் எல்லாம் திங்களுக்கு அரசன் கொன்று வருகிறான் என்று செப்ப வெம் களிப்பு அடைந்து பன்றி வேந்தனும் அடுபோர் ஆற்றச் சங்கை உற்று எழுந்து போவான் தன் உயிர்ப் பெடையை நோக்கா. | 23 |
|
|
உரை
|
|
|
|
|
2216. | இன்று பாண்டியனை நேரிட்டு அரும் சமர் ஆடி வென்று வன்திறல் வாகையோடு வருகுவன் ஏயோ அன்றிப் பொன்றுவன் ஏயோ நீ உன் புதல்வரைப் பாதுகாத்து நன்று இவண் இருத்தி என்ன நங்ககைப் பேடு இன்ன கூறும். | 24 |
|
|
உரை
|
|
|
|
|
2217. | ஆவி அங்கு ஏக இந்த வாகம் இங்கு இருப்பதே இப் பாவியோ மேல் நாள் அந்தப் பறழினை வகுத்த தெய்வம் மாவ அமர் ஆடி வென்று வருதியேல் வருவேன் அன்றி நீ விளிந்து இடத்து மாய்வேன் நிழலுக்கும் செயல் வேறு உண்டோ. | 25 |
|
|
உரை
|
|
|
|
|
2218. | போதுகம் எழுக என்னாப் பொருக்கு என எழுந்து நீலத் தாது உறழ் எனப் பாட்டி தன் புடை தழுவிச் செல்லும் பேது உறழ் பறழை நூக்கிப் பின் தொடர்ந்து அணைந்து செல்லக் காது எயிற்று எறுழி வேந்தன் கால் என நடந்தான் அன்றே. | 26 |
|
|
உரை
|
|
|
|
|
2219. | பல் வகைக் சாதி உள்ள பன்றியில் கணங்கள் எல்லாம் வெல் படைத் தறுங்கண் சேனை வீரராய் முன்பு செல்லச் செல் எனத் தெழித்துச் செம் கண் தீயுக மானம் என்னும் மல்லர் வாம் புரவி மேல் கொண்டு எழுந்தனன் வராகவீரன். | 27 |
|
|
உரை
|
|
|
|
|
2220. | முன்படு தூசி ஆக நடக்கின்ற முரட் கால் பன்றி மல் படு சேனை நேரே வருகின்ற மன்னர் மன்னன் வெற்படு தடம் தோள் வன் தாள் வீரர் மேல் சீறிச் செல்லப் பிற்பட ஒதுங்கி வீரர் பெய்தனர் அப்பு மாரி. | 28 |
|
|
உரை
|
|
|
|
|
2221. | சொரிந்தன சோரி வெள்ளம் சொரிந்தன வீழ்ந்த யாக்கை சரிந்தன குடர்கள் என்பு தகர்ந்தன வழும்பு மூளை பரிந்தன சேனம் காகம் படர்ந்தன உயிரும் மெய்யும் பிரிந்தன ஏன நின்ற பிறை மருப்பு ஏன வீரர். | 29 |
|
|
உரை
|
|
|
|
|
2222. | பதைத்தனர் எரியில் சீறிப் பஞ்சவன் படைமேல் பாய்ந்து சிதைத்தனர் சிலரைத் தள்ளி செம்புனல் வாயில் சோர உதைத்தனர் சிலரை வீட்டி உரம் பதை படக் கோடு ஊன்றி வதைத்தனர் சிலரை நேரே வகிர்ந்தனர் சிலரை மாதோ. | 30 |
|
|
உரை
|
|
|
|
|
2223. | தாள் சிதைந்தாரும் சில்லோர் தலை சிதைந்தாரும் சில்லோர் தோள் சிதைந்தாரும் சில்லோர் தொடை சிதைந்தாரும் சில்லோர் வாள் சிதைந்தாரும் சில்லோர் வரை அறுத்து அலரோன் தீட்டும் நாள் சிதைந்தாரும் சில்லோர் நராதிபன் சேனை வீரர். | 31 |
|
|
உரை
|
|
|
|
|
2224. | கண்டனர் கன்னி நாடு காவலன் அமைச்சர் சீற்றம் கொண்டனர் முசல நேமி கூற்று என வீசி ஆர்த்தார் விண்டனர் மாண்டார் சேனை வீரரும் அனைய எல்லைப் புண் தவழ் எயிற்று வேந்தைப் புடைநின்ற பேடை நோக்கா. | 32 |
|
|
உரை
|
|
|
|
|
2225. | ஏவிய சேனை எல்லாம் இறந்தன இனி நாம் செய்யல் ஆவது என் வாளா நாமும் அழிவது இங்கு என்னை தப்பிப் போவதே கருமம் என்று புகன்ற அத் துணையை நோக்கிச் சாவதை அஞ்சா ஏனத் தனி அரசு ஒன்று சாற்றும். | 33 |
|
|
உரை
|
|
|
|
|
2226. | நுண் அறிவு உடையர் ஆகி நூலொடு பழகினாலும் பெண் அறிவு என்பது எல்லாம் பேதைமைத்து ஆதலால் உன் கண் அறிவு உடைமைக்கு ஏற்ற காரியம் உரைத்தாய் மானம் எண் அறிவு உடை யோர்க் எல்லா இழுக்கு உடைத்து அன்றோ ஈதால். | 34 |
|
|
உரை
|
|
|
|
|
2227. | தூங்கு இருள் வறுவாய்ச் சிங்கம் இரண்டு உறை துறையின் மாடோர் ஆங்கு இரு மருப்புக் கேழல் வந்து நீர் பருகி மீளும் வீங்கு இருள் உடல் கார் எனும் ஒன்று உறை துறையில் வீரத்து ஆங்கு இரு மடங்கல் நீர்க்குத் தலைப்பட அஞ்சும் அன்றே. | 35 |
|
|
உரை
|
|
|
|
|
2228. | அத்திட மரபின் வந்து பிறந்து உளேன் ஆதலாலே கைத்திடு தாரான் வீரம் கவர்ந்து திசை திசையும் வானும் வைத்திட வல்லேன் அன்றி மடந்திட வல்லேன் ஆகில் பொய்த்திடும் உடம்பே அன்றி புகழ் உடம்பு அழிவது உண்டோ. | 36 |
|
|
உரை
|
|
|
|
|
2229. | நீநில் எனத் தன் பெடை தன்னை நிறுத்தி நீத்து என் கானில் என வாழ் கருமாவின் கணங்கள் எல்லாம் ஊனில் உயிர் உண்டனம் என்று இனி ஓடல் கூடல் கோனில் என ஆர்ப்பவன் போலக் கொதித்து நேர்ந்தான். | 37 |
|
|
உரை
|
|
|
|
|
2230. | நிலத்தைக் கிளைத்துப் பிலம் காட்டி நிமிர்ந்த தூள்வான் தலத்தைப் புதைப்பத் தனியேன் வரவு நோக்கி வலத்தைப் புகழ்ந்தான் வியந்தான் சிலைவாங்கி வாளிக் குலத்தைச் சொரிந்தான் பொருனைத் துறைக் கொற்கை வேந்தன். | 38 |
|
|
உரை
|
|
|
|
|
2231. | குறித்துச் செழியன் விடு வாளியைக் கோல வேந்தன் பறித்துச் சில வாளியை வாய் கொடு பைம்புல் என்னக் கறித்துச் சில வாளியை கால் கொடு தேய்த்துத் தேய்த்து முறித்துச் சில வாளியை வாலின் முறித்து நின்றான். | 39 |
|
|
உரை
|
|
|
|
|
2232. | மானம் பொறாது மதியின் வழி வந்த வேந்தன் தானம் பொறாது கவிழ்க்கும் புகர்த் தந்தி கையில் ஊனம் பொறாத முசலம் கொடுத்து ஏறி உய்த்தான் ஏனம் பொறாது ஆர்த்து இடி யேற்றின் எழுந்தது அன்றே. | 40 |
|
|
உரை
|
|
|
|
|
2233. | தந்திப் பொருப்பைத் துணிக்க என்று அழன்று சீற்றம் உந்திக் கதலிக் கொழும் தண்டு என ஊசல் கையைச் சிந்திப் பிறைவாள் எயிறு ஓச்சித் சிறைந்து வீட்ட முந்திக் கடும் தேர் மிசைப் பாய்ந்தனன் மூரித்தாரான். | 41 |
|
|
உரை
|
|
|
|
|
2234. | திண் தேர் மிசை நின்று அடல் நேமி திரித்து விட்டான் கண்டு ஏன வேந்தன் விலக்கிக் கடும் காலில் பாய்ந்து தண் தேர் உடையத் தகர்த்தான் பரி தன்னில் பாய்ந்து வண்டு ஏறு தாரான் விட வேலை வலம் திரித்தான். | 42 |
|
|
உரை
|
|
|
|
|
2235. | சத்திப் படைமேல் விடு முன்னர்த் தறுகண் வீரன் பத்திச் சுடர் மாமணித் தார்ப் பரிமாவின் பின் போய் மொத்திக் குடர் செம்புனல் சோர முடுகிக் கோட்டால் குத்திச் செகுத்தான் பொறுத்தான் அலன் கூடல் வேந்தன். | 43 |
|
|
உரை
|
|
|
|
|
2236. | மண்ணில் குறித்து வலிக்கண்டு வராக வேந்தை எண்ணித் தலையில் புடைத்தான் கை இருப்புத் தண்டால் புண்ணில் படு செம் புனல் ஆறு புடவி போர்ப்ப விண்ணில் புகுந்தான் சுடர் கீறி விமான மேலால். | 44 |
|
|
உரை
|
|
|
|
|
2237. | வேனில் கிழவோனில் விளங்கி வியந்து வானோர் தேனில் பொழி பூ மழை பெய்ய நனைந்து தெய்வக் கானத்து அமுது உண்டு இருகாது களித்து வீர வானத்து அமுது உண்டு அரமங்கையர் கொங்கை சேர்ந்தான். | 45 |
|
|
உரை
|
|
|
|
|
2238. | பின் துணை ஆய பெடைத் தனி ஏனம் என் துணை மாய இருப்பது கற்போ வென்றிலன் ஏனும் விசும்பு அடை வேனால் என்று இகல் வேந்தை எதிர்த்த உருத்தே. | 46 |
|
|
உரை
|
|
|
|
|
2239. | விறல் நவில் பேட்டை விளிப்பது வேந்தர்க்கு அறன் அல வென்றவன் ஆள் வினை மள்ளர்க்கு இறை மகன் ஆன சருச்சரன் என்று ஒர் மறமகன் நேர்ந்து அமர் ஆட வளைந்தான். | 47 |
|
|
உரை
|
|
|
|
|
2240. | நனி பொழுது ஆட அமர் ஆடினான் நஞ்சிற் கனி சினவன் பெடை காய்சின வேடத் தனி மகனை தரை வீட்டி தனது ஆற்றல் இனி இலை என்ன விளைத்து உயிர் சோர்வான். | 48 |
|
|
உரை
|
|
|
|
|
2241. | இரும்பு செய் தண்டினை இம் என ஓங்கிப் பொரும் படை சென்னி புடைத்து விளிந்தான் விருந்தினர் ஆய் இருவோரும் விமானத்து அரும் திறல் வானம் அடைந்தனர் அன்றே. | 49 |
|
|
உரை
|
|
|
|
|
2242. | வன் திறல் மன்னவர் மன்னவன் உந்தன் பொன் திகழ் மா நகர் புக்கனன் இப்பால் பன்றி விழுந்து பருப்பதம் ஆகா நின்றது பன்றி நெடும் கிரி என்ன. | 50 |
|
|
உரை
|
|
|
|
|
2243. | அன்று தொடுத்து அதனுக்கு அது பேராய் இன்றும் வழங்குவது இம்பரின் அந்தக் குன்றில் அரும் தவர் விஞ்சையர் கோபம் வென்றவர் எண் இலர் வீடு உற நோற்பார். | 51 |
|
|
உரை
|
|
|
|
|
2244. | என்று கூறிய அரும் தமிழ்க்கு இறைவனை நோக்கித் துன்று மாதவர் அறிவிலாச் சூகர உருவக் குன்றின் மீது இருந்தவர் எலாம் கோதற நோற்று நின்ற காரணம் யாது எனக் குறு முனி நிகழ்த்தும். | 2 |
|
|
உரை
|
|
|
|
|
2245. | வேனில் வேள் என விளங்கு விச்சாதரன் என்னும் தான யாழ் மகன் புலத்தியன் தவத்தினுக்கு இடையூறு ஆன பாண் செயப் பன்றியாச் சபித்தனன் அறவோன் ஏனம் ஆகுவோன் உய்வது என்று எனக்கு என முனிவன். | 53 |
|
|
உரை
|
|
|
|
|
2246. | மன்னர் மன்னன் ஆம் தென்னவன் வந்து நின் வனத்தில் துன்று பல்வகை விலங்கு எலாம் தொலைத்து உனை மாய்க்கும் பின்னர் இவுரு பெறுக எனப் பணித்தனன் இயக்கன் அன்னவாறு வந்து இறந்து பின் பழ உரு அடைந்தான். | 54 |
|
|
உரை
|
|
|
|
|
2247. | ஆய புண்ணிய விஞ்சையன் ஆகமாய்க் கிடந்த தூய நீர் ஆதலால் அவ்வரை மீமிசைத் துறந்த பாய கேள்வியர் இறை கொளப் பட்டது எவ் உயிர்க்கும் நாயனார் மதுரே நயந்து அவண் உறைவார். | 55 |
|
|
உரை
|
|
|
|
|
2248. | என்று அகத்தியன் விடை கொடுத்து இயம்பினன் இப்பால் பன்றி ஏற்றையும் பாட்டியும் பைம் புனத்து இட்டுச் சென்று அவிந்தபின் பன்னிரு குருளையும் திகைப்பு உற்று அன்று அலக்கண் உழந்தமை யார் அளந்து உரைப்பார். | 56 |
|
|
உரை
|
|
|
|
|
2249. | ஓடுகின்றன தெருமரல் உறுவன நிழலைத் தேடுகின்றன தாய் முலைத் தீய பால் வேட்டு வாடு கின்றன ஆக வெம் பசி நனி வருத்த வீடுகின்றன வெயில் சுட வெதும்பு கின்றன ஆல். | 57 |
|
|
உரை
|
|
|
|
|
2250. | இன்ன வாறு இவை அணங்கு உறு எல்லை வேல் வல்ல தென்னர் ஆகிய தேவர்கள் தேவர் அம் கயல் கண் மின்னனாள் ஒடு மின் அவிர் விமானம் மீது ஏறி அன்ன கானகத்து இச்சையால் ஆடல் செய்து இருந்தார். | 58 |
|
|
உரை
|
|
|
|
|
2251. | ஏனம் என்பறழ் உறுகண் நோய்க்கு இரங்கினார் இச்சை ஆன அன்பு தந்து அத் துயர் அகற்றுவான் ஈன்ற மான அன்புடைப் பெடையின் வடிவு எடுத்து அயரும் கான வன் பறழ் கலங்கு அஞர் கலங்க நேர் வந்தார். | 59 |
|
|
உரை
|
|
|
|
|
2252. | கிட்டுகின்ற தம் தாய் எதிர் குட்தியும் கிட்டி முட்டுகின்றன மோப்பன முதுகு உறத்தாவி எட்டு கின்றன கால் விசைத் தெரிவன நிலத்தை வெட்டு கின்றன குதிப்பன ஓடுவ மீள்வ. | 60 |
|
|
உரை
|
|
|
|
|
2253. | ஏனம் இன்னமும் காண்ப அரிதாகிய ஏனம் ஆன மெய்ம் மயிர் முகிழ்த்திடத் தழுவி மோந்து அருளினன் மான மென் முலை அருத்தி மா வலனும் வன் திறனும் ஞானமும் பெருந் தகையும் நல் குணங்களும் நல்கா. | 61 |
|
|
உரை
|
|
|
|
|
2254. | துங்க மா முகம் ஒன்றுமே சூகர முகமா அங்கம் யாவையும் மானுட ஆக்கைய ஆக்கிக் கங்கை நாயகன் கடவுளர் நாயகன் கயல் கண் மங்கை நாயகன் கருணை ஆம் திரு உரு மறைந்தான். | 62 |
|
|
உரை
|
|
|
|
|
2255. | இம்மை இப்பவத் தன்னையாய் இனிவரு பவமும் செம்மை செய்த சேதனத்தையும் கேதனம் செய்தார் எம்மை எப்பவத்து ஆயினும் எனைப் பல உயிர்க்கும் அம்மை அப்பராய்க் காப்பவர் அவர் அலால் எவரே. | 63 |
|
|
உரை
|
|
|
|