தொடக்கம் |
|
|
2256. | தந்தை தாய் இழந்து அலமரு குருளையத் தாயாய் வந்து நாயகன் முலை கொடுத்து அருளிய வகையீது அந்த வாறு இரு மைந்தரு மந்திரர் ஆகி எந்தையார் சிவபுரம் புகுந்து இருந்தவாறு இசைப்பாம். | 1 |
|
|
உரை
|
|
|
|
|
2257. | ஆதி நாயகன் திரு உரு மறைந்தபின் அனைய கோது இல் ஆறு இரண்டு ஏனம் ஆக் குமரரும் காலைச் சோதி ஆறு இரண்டு அருக்கர் போல் தோன்றி அப் பொருப்பில் ஓதி ஆய்ந்த பல் கலைஞராய் ஒருங்கு வீற்று இருந்தார். | 2 |
|
|
உரை
|
|
|
|
|
2258. | அனையராய் அவர் வைகு நாள் அறைபுனல் கூடல் புனித நாயகன் அருள் திறம் உயிர்க்கு எலாம் பொதுவாய் இனிய ஆவன என்பதை யாவரும் தேற வனிதை பால் மொழி மங்கைதன் மணாளனை வினவும். | 3 |
|
|
உரை
|
|
|
|
|
2259. | வெவ் விலங்கினும் வெய்யவாய் அசேதன விலங்காம் இவ் விலங்கே இற்றேம் என குருளைகட்கு இரங்கிக் கை விலங்கினை எய்த நீ கருணையாய் முலை தந்து இவ்விலங்கு அறிவகற்றியது யாது என இறைவன். | 4 |
|
|
உரை
|
|
|
|
|
2260. | அகில வேதமும் ஆகம பேதமும் நம்மைச் சகல சிவ தயாபரன் என்று உரை சால்பால் இகலில் சேதன அசேதனம் ஆகிய இரண்டும் புகலில் வேறு அல எமக்கு அவை பொதுமைய அதனால். | 5 |
|
|
உரை
|
|
|
|
|
2261. | தாய் இழந்து வெம் பசித்து அழல் அகம் சுடத் தழன்று காயும் மா தபம் புறம் சுடக் கான் இடைக் கிடந்து தீயும் ஏனம் மென் குருளைக்கு தெருமர இரங்கி ஆயும் ஆய் முலை அளித்து உயிர் அளித்தனம் அதனால். | 6 |
|
|
உரை
|
|
|
|
|
2262. | அளவு இல் ஆற்றலும் திறனும் நல் அரும் பெறல் கல்வி விளைவும் ஞானமும் கிடைத்தனர் மீனவற்கு இனிமேல் வளைவு இலாத கோல் அமைச்சராய் வளம் பல பெருக்கிக் களைவு இல் பாசம் நீத்து எம்பெரும் கணத்தவர் ஆவார். | 7 |
|
|
உரை
|
|
|
|
|
2263. | என்று நாயகன் நாயகிக்கு இறை கொடுத்து இயம்பி அன்று மீனவன் கனவில் வந்து அரச கேள் பன்றிக் குன்றில் ஏன மா முகத்தராய்ப் பன்னிரு குமரர் வென்றி வீரராய் வைகுநர் மிக்க அறிவுடையார். | 8 |
|
|
உரை
|
|
|
|
|
2264. | அவரை நின் கடைக் அமைச்சராக் கோடி என்ற அளவில் சிவ பரம் சுடர் அருள் செயச் செழியர் கோ வேந்தன் கவலரும் களிப்பு உடையனாய்க் கண் மலர்ந்து எழுமான் தவழ் நெடும் திரைக் கரும் கடல் தத்தி நீந்து எல்லை. | 9 |
|
|
உரை
|
|
|
|
|
2265. | மாண்ட கேள்வி சால் மந்திரர்க்கு உணர்த்தி அம் மலை மேல் காண்ட ஏனமா வீரரைக் கொணர்க எனக் கருணை பூண்ட காவலன் அமைச்சரும் போய் அவர்க் கண்டு வேண்ட வீரரும் ஈண்டினார் மீனவன் திருமுன். | 10 |
|
|
உரை
|
|
|
|
|
2266. | வந்து இறைஞ்சிய வராக மா மைந்தரை நேர் கண்டு அந்தம் இல் களிப்பு அடைந்து வேந்து அமைச்சியல் கிழமை தந்து வேறு பல் வரிசையும் தக்க வா நல்கிக் கந்து சீறிய கடகரிக் கைதவன் பின்னர். | 11 |
|
|
உரை
|
|
|
|
|
2267. | பழைய மந்திரக் கிழார் மடப்பாவை போல் வாரை விழவு சால் கடி மங்கலம் விதியினால் புணர்த்தி அழகு இதாம் என நடத்தினான் அனையரும் வீரக் கழலினாற்கு ஒரு கவயமும் கண்ணுமாய் நடப்பார். | 12 |
|
|
உரை
|
|
|
|
|
2268. | உடம்பு ஆறு இரண்டில் உயிர் ஒன்று என ஒன்றி இயைவாய் விடம்பாய் அரவும் விழுங்கும் இரை ஒத்து நெஞ்சம் திடம் பாடு கொள்ள வினை வாங்கிச் செழியன் கல்வி இடம் பாடு நல்கும் பயன் போல் மகிழ்வு எய்த நின்றார். | 13 |
|
|
உரை
|
|
|
|
|
2269. | நல் ஆவின் பாலில் நறும் தேன் கலந்து என்னப் பல் நூல் வல் ஆரும் ஆகி மதி நுட் பரும் ஆகிச் சோர்வில் சொல்லால் அடையார் மனமும் களிதூங்கச் சொல்லிப் பல்லார் பிறர் சொல் பயன் ஆய்ந்து கவர வல்லார். | 14 |
|
|
உரை
|
|
|
|
|
2270. | பழை யேம் இறையுள் கொளப்பட்டம் என்று ஏமாப்பு எய்தார் உழை யேவல் செய்யும் சிறார் போல ஒதுங்கி வேந்தன் விழைவு ஏது அதனை விடம் போல் வெறுத்து வெஃகார் அழல் போல் அணுகார் அகலார் நிழல் அன்ன நீரார். | 15 |
|
|
உரை
|
|
|
|
|
2271. | மறுக்கும் செயல் நீத்து நடக்கையின் வையத் தோரை ஒறுக்கும் பொருளும் பணி கேட்கையின் ஒன்னலாரைச் செறுக்கும் பொருளும் கவரார் விளை செல்வ மாக்கள் இறுக்கும் பொருளே இறைவற்கு இவர் ஈட்டும் செல்வம். | 16 |
|
|
உரை
|
|
|
|
|
2272. | மறத் தாம வேலான் மனக் கொள்கை தன் நெஞ்சு மள் வான நிறத்தாடி நீழல் எனத் தோற்றம் நிறுத்து மற்ற அறத்து ஆறு எனில் ஆற்று வார் அன்று எனில் ஆக்கம் ஆவி இறத்தான் வரினு மனத்தானும் இழைக்க ஒண்ணார். | 17 |
|
|
உரை
|
|
|
|
|
2273. | இன்னவாறு ஒழுகும் பன்னிரு வோரும் ஈகையும் தருமமும் புகழும் தென்னர் கோ மகற்கு வைகலும் பெருகத் திசை எலாம் விசயம் உண்டாக்கிப் பன்னக ஆபரணன் சிவபுரம் அடைந்து பரன் கண நாதருள் கலந்து மன்னி வீற்று இருந்தார் மன்னர் மன்னவனும் வான் பதம் அடைந்து வீற்று இருந்தான். | 18 |
|
|
உரை
|
|
|
|