2274. வரிக்கு உருகிப் பத்திரற்குப் பலகை இட்ட மணி கண்டன்
அரிக்குருளை வடிவான அடல் வீரர்க் அரசன்பார்
பரிக்கும் அமைச் சியல் அளித்த பரிசு உரைத்தாம் பசுபதி
                                                              யாற்
கரிக்குருவி குரு மொழி கேட்டு அருள் அடைந்த கதை
                                                       பகர் வாம்.
1
உரை
   
2275. மன்னவன் இராச ராசன் வானவர்க்கு அரசன் ஆன
பின்னவன் குமரன் ஆன பெருவலி மடங்கல் அன்னான்
துன்னலர் அடுபோர் சாய்க்கும் சுகுண பாண்டியன் நீர்
                                                          ஞாலம்
இன்னல் தீர்த்து அறக் கோல் ஓச்சி ஈரங் குடை நிழற்றும்
                                                          நாளில்.
2
உரை
   
2276. ஆற்றல் சால் ஒருவன் மேல் நாள் ஆற்றவும் அறனே
                                                         ஆற்றி
மாற்றம் இல் சிறிது பாவம் செய்த தன் வலத்தால் வந்து
தேற்றம் இல் கயவாய் ஆகிச் செனித்தலால் காகம் ஆதி
கூற்று என ஊற்றம் செய்யக் குருதி சோர் தலையது ஆகி.
3
உரை
   
2277. புட்கு எல்லாம் எளிதா ஊறு பாடு அஞ்சிப் புரத்துள் வைகி
உட்கி நீள் வனத்துள் போகி வழி மருங்கு ஒரு சார் நிற்கும்
கட்கு அவிழ்ந்து ஒழுகப் பூத்த கவிழ் இணர் மரம் மேல்
                                                        வைகி
வெட்கம் மீதூரச் சாம்பி வெய்து உயிர்த்து இருக்கும்
                                                        எல்லை.
4
உரை
   
2278. விடையவன் நீறு பூசும் மெய்யவன் பூண்ட கண்டித்
தொடையவன் புறம்பும் உள்ளும் தூயவன் குடையும் கையில்
உடையவன் தரும தீர்த்த யாத்திரை ஒழுக்கம் பூண்ட
நடையவன் ஒருவன் அந்த நறும் தரு நிழலில் சார்ந்தான்.
5
உரை
   
2279. இருந்தவன் சிலரை நோக்கி இயம்புவான் எர்க்கும் பேறு
தரும் தலம் தீர்த்தம் மூர்த்தித் தன்மையில் சிறந்த அன்பு
அரும் தமிழ் மதுரை பொன் தாமரைத் தடம் சுந்தரேசப்
பெரும் தகை என்று சான்றோர் பேசுவார் ஆதலாலே.
6
உரை
   
2280. ஓர் இடத்து இனைய மூன்று விழுப்பமும் உள்ளது ஆகப்
பார் இடத்து இல்லை ஏனை பதி இடத்து ஒன்றே என்றும்
சிர் உடைத்து ஆகும் கூடல் செழும் நகர் இடத்தும்
                                                        மூன்றும்
பேர் உடைத்து ஆகும் என்றால் பிறிது ஒரு பதி யாது
                                                       என்றான்.
7
உரை
   
2281. இம் மது ரேசன் சேவித்து ஏத்து வோர்க்கு எளியன் ஆகிக்
கைம் மலர் நெல்லி போலக் கருதிய வரங்கள் எல்லாம்
இம்மையின் உடனே நல்கும் ஏனைய தலத்து வானோர்
அம் மையின் அன்றி நல்கார் ஆதலால் அதிகன் என்றான்.
8
உரை
   
2282. மற்று அது கேட்டுக் கொம்பர் வைகிய கயவாய் ஞானம்
பெற்றது பறவை ஆகிப் பிறந்ததும் பிறவும் தேற்றம்
உற்றது நாம் இச் சன்மம் ஒழிப்பதற்கு அறவோன் இங்ஙன்
சொற்றதே உறுதி என்று துணிவு கொண்டு எழுந்தது
                                                      அன்றே.
9
உரை
   
2283. ஆய் மலர்க் கான நீங்கி ஆடக மாடக் கூடல்
போய் மலர்க் கனக கஞ்சப் புண்ணியப் புனல் தோய்ந்து
                                                    ஆம்பல்
வாய் மலர்க் கயல் உண் கண்ணாள் மணாளனை வலம்
                                                    செய்து அன்பில்
தோய் மலர் கழல் இனானை அகத்தினால் தொழுது
                                                    அர்ச்சித்தே.
10
உரை
   
2284. இன்னணம் மூன்று வைகல் கழிந்தபின் எம்பிராட்டி
தன் அமர் காதலானைத் தாழ்ந்து எதிர் நோக்கி ஐய
என்னைக் இக் கயவாய் செய்யும் செயல் இதன் வரவு யாது
                                                            என்ன
முன்னவன் அதன் தன் செய்தி வரவு எலாம் முறையால்
                                                            கூறா.
11
உரை
   
2285. பத்திமை நியமம் பூண்ட பறவை மேல் கருணை நாட்டம்
வைத்து இமையாத முக்கண் மறை முதல் ஒரு சேய்க் கன்று
நித்திய நிலைமை நல்கி நேர்ந்த வெம் கூற்றைக் காய்ந்த
சத்திய ஞான மிருத்திஞ்சயத்தினை உபதேசித்தான்.
12
உரை
   
2286. உவமை அற்றவன் உரைத்த மந்திரம்
செவி மடுத்தலும் சிற்றுணர்ச்சிபோய்ப்
பவம் அகற்றிடப் படுக் கரிக் குரீஇ
கவலை விட்டரன் கழல் வழுத்தும் ஆல்.
13
உரை
   
2287. எண் இலா உயிர்க்கு இறைவ போற்றி வான்
தண் நிலா மதிச் சடில போற்றி என்
புண்ணியப் பயன் போற்றி அம் கயல்
கண்ணி நாத நின் கருணை போற்றி ஆல்.
14
உரை
   
2288. தெளிதல் இன்றியே செய்த தீமையால்
விளியும் என்னையும் ஆளல் வேண்டுமோ
எளியர் எங்கு உளார் என்று தேர்ந்து தேர்ந்து
அளியை ஆவது உன் அருளின் வண்ணமே.
15
உரை
   
2289. உம்மை நல் அறம் உடைய நீர்மையால்
இம்மை இம் மனு இயம்பினாய் இது
அம்மை நல் நெறிக்கு ஏது ஆதலான்
மும்மையும் நலம் உடைய மொய்ம்பினேன்.
16
உரை
   
2290. ஆயினும் எனக்கு ஐய ஓர் குறை
தீய புள் எலாம் ஊறு செய்து எனைக்
காயும் மனமும் கழியக் கண்ட பேர்
ஏ எனும் படிக்கு எளியன் ஆயினேன்.
17
உரை
   
2291. என்ன அக் குரீ இயம்ப எம்பிரான்
அன்ன புட்கு எலாம் வலியை ஆகெனப்
பின்னும் அக் குரீஇ தாழ்ந்து பேதை யேற்கு
இன்னும் ஓர் வரந் தருதி என்றதால்.
18
உரை
   
2292. வலியை என்பது என் மரபினுக்கு எலாம்
பொலிய வேண்டும் எப்போதும் நீ சொன
ஒலிய மந்திரம் ஓதி ஓதி நாங்
கலியை வெல்லவும் கருணை செய்கென.
19
உரை
   
2293. ஆவது ஆக என்று அமரர் நாயகன்
மூ எழுத்தினான் முடிந்த அம்மனு
தாவி தெய்வதம் இருடி சந்தமோடு
ஓவில் ஓசை மூன்று ஒடு தெருட்டினான்.
20
உரை
   
2294. குரு மொழி பயின்று முள் வாய்க் குருவி தன் குலனும்
                                                         தன் போல்
அரு மறை முதல்வன் ஈந்த ஆற்றலால் பறவைக்கு
                                                         எல்லாம்
பெருமை சால் வலியான் என்னும் பெயரவாய் உலகின்
                                                         மன்னக்
கருமணி கண்டன் செம்பொன் கனை கழல் அடி சேர்ந்த
                                                         அன்றே.
21
உரை
   
2295. இக்கரிக் குருவி தான் நோற்று எய்திய வரத்தைத் தன்
                                                          போல்
ஒக்கலும் எளிதாய் எய்தப் பெற்றதால் உலகின் மேன்மை
தக்கன் ஒருவன் வாழத் தன் கிளை வாழ்வது என்ன
மிக்கவர் எடுத்துக் கூறும் பழமொழி விளக்கிற்று அன்றே.
22
உரை
   
2296. ஈசன் அடிக்கு அன்பு இல்லார் போல் எளியார் இல்லை
                                                    யாவர்க்கும்
ஈசன் அடிக்கு அன்பு உடையார் போல் வலியார்
                                                 இல்லை யாவர்க்கும்
ஈசன் அடிக்கு அன்பு இன்மையினால் எளிதாய் திரிந்த
                                                    இக் கயவாய்
ஈசன் அடிக்கு அன்பு உடைமையினால் வலிது ஆயிற்றே
                                                    எவ்வுயிர்க்கும்.
23
உரை