2297. அத்தி தந்த விமான அழகியார்
பத்தி தந்த பறவைக்கு மந்திர
சித்தி தந்த திறன் இது நாரைக்கு
முத்தி தந்த கருணை மொழிகுவாம்.
1
உரை
   
2298. தேக்கு நீர் வைகை நாட்டு ஒரு தென் புலத்து
ஆக்கும் மாடவை வைப்பு ஒன்று உள அவ்வயின்
வீக்கு யாழ் செயும் வண்டுக்கு வீழ் நறவு
ஆக்கு தாமரை வாவி ஒன்று உள்ளது ஆல்.
2
உரை
   
2299. ஆழம் மிக்க கயம் தலை அத்தலை
வாழும் மீனம் அனைத்தையும் வாய்ப் பெய்து
சூழநந்து முத்து ஈனும் துறைக் கணே
தாழ்வதோர் செய்ய தாள் மட நாரையே.
3
உரை
   
2300. சிறிய நாள் மழை இன்றி அச்சே இதழ்
வெறிய தாமரை ஓடை வியன் கரை
இறை கொள் நாரை இருவினைப் பௌவமும்
வறியது ஆகி வறப்ப வறந்தது ஆல்.
4
உரை
   
2301. நுரை செறித்து அன்ன நோன் சிறை நாரையும்
இரை விரும்பி அவ்வாவி இகந்து ஒரீஇ
விரைவந்து ஒரு கான் இடை வீழ்ந்ததால்
புரையிலோர்க்கு இடன் ஆகும் அப் பொங்கர் வாய்.
5
உரை
   
2302. முத்தர் ஆன முனிவர் குழாத் தொடும்
சுத்த ஆனந்த வாரியுள் தோய்ந்து தன்
சித்த மாசு கழீச் சிவம் ஆகிய
சத்தியத் தவ மா முனி தங்கும் ஆல்.
6
உரை
   
2303. கூப்பிட்டு எல்லைக் குணித்துச் சதுர மா
யாப்ப மைந்து சுற்று எங்கும் படித்துறைக்
கோப்பு அமைந்து குளிர் சந்தி யாம் மடம்
காப்ப அமைந்து ஓர் கயம் தலை உள்ளது ஆல்.
7
உரை
   
2304. விரை செய் சண்பகம் பாதிரி வேங்கை தேன்
இரை செய் வஞ்சி இலஞ்சி குரா மரா
நிரை செய் கிஞ்சுக நீள் மருது ஆதியா
உரை செய் பன் மரமும் புறத்து உள்ள ஆல்.
8
உரை
   
2305. அந்த வாவியின் பேர் அச்சோ தீர்த்தம் என்று
இந்த ஞாலம் இயம்புவதால் இரை
உந்த வாவு கொடு ஊக்க எழுந்து முன்
வந்த நாரை அதன் கரை வைகும் ஆல்.
9
உரை
   
2306. ஆய்ந்த மாதவர் அப்புனிதத் தடம்
தோய்ந்து தோய்ந்து அங்கு எழும் தொறும் தோள் புறம்
சாய்ந்த வார் சடைக் கற்றையில் தத்து மீன்
பாய்ந்து பாய்ந்து புரள்வன பார்த்தரோ.
10
உரை
   
2307. ஈண்டை இத் தவத்தோர் திரு மேனியைத்
தண்ட எத்தவம் செய்தனவே கொல் என்று
ஆண்டை மீன் நம்கு ஆகா என விரை
வேண்டு நாரை வெறுத்து அங்கு இறுத்தலால்.
11
உரை
   
2308. தன் நிகர் தவத்தோர் யாரும் தடம் படிந்து ஏறி நித்த
மன்னிய கருமம் முற்றிச் சந்தியா மடத்தில் வைகி
மின்னிய மகுடம் சூடி வேந்தனாய் உலகம் காத்த
பொன்னியல் சடையான் கூடல் புராண நூல் ஒதுகின்றார்.
12
உரை
   
2309. அண்ணல் எம் பெருமான் செய்த அருள் விளையாட்டும்
                                                            ஆதிப்
பண்ணவன் சிறப்பும் கூடல் பழம் பதிச் சிறப்பும் தீர்த்தத்
தெண்ணரும் சிறப்பும் சேர்ந்தோர்க்கு எளிவரும் இறைவன்
                                                          என்னும்
வண்ணமும் எடுத்துக் கூறக் கேட்டு அங்கு வதியும் நாரை.
13
உரை
   
2310. மடம்படு அறிவும் நீங்கி வல்வினைப் பாசம் வீசித்
திடம்படு அறிவு கூர்ந்து சிவ பரஞ்சோதி பாதத்து
திடம்படு அன்பு வா என்று ஈர்த்து எழ எழுந்து நாரை
தடம் படு மாடக் கூடல் தனி நகர் அடைந்து மாதோ.
14
உரை
   
2311. வாங்கிய திரை சூழ் பொற்றா மரை படிந்து இமையா வேழந்
தாங்கிய விமான மேய தலை வனைத் தாழ்ந்து சூழ்ந்து
தேங்கிய அருள் கண் நோக்கத் தெரிசித்துத் திருமுன் வைகி
ஓங்கிய கருணை மேனி உள்ளுறத் தியானம் செய்து.
15
உரை
   
2312. இந் நிலை நியமம் மூ ஐந்து எல்லை ஞான்று இயன்று பின்
                                                            நாள்
அந் நிலை ஒழுகு நாரை ஆடக கமலம் தோய்வான்
வன் நிலை மதில் சூழ் ஞாங்கர் வந்துழிப் பசியால் வெந்து
மின் நிலை வேல் போல் துள்ளும் மீன் கவர்ந்து உண்கும்
                                                            என்னா.
16
உரை
   
2313. சிறிது உளத்து உள்ளி நாதன் திருவருள் வலத்தால் பின்னர்
அறிவு வந்து அச்சோ இந்த அறப் பெரும் தீர்த்தத்து
                                                         உள்ளே
எறியும் மீன் அருந்த ஆசை எழுந்ததே எனக்கு இப்போதிப்
பிறவி என்று ஒழிவது என்னாப் பேர் அஞர் அடைந்து
                                                        பின்னும்.
17
உரை
   
2314. சுந்தரச் செம்மல் பாதத் துணை மலர் அன்பில் தோய்ந்து
சிந்தை வைத்து இருக்கும் எல்லை தேவரும் மறையும்
                                                       செய்யும்
வந்தனைக்கு அரியா னாரை மன நினை வடிவாய்த்
                                                       தோன்றி
எம் தமக்கு இனியாய் வேண்டும் வரம் என் கொல்
                                               இயம்புக என்றான்.
18
உரை
   
2315. செய்ய கால் மட நாரையும் சென்று தாழ்ந்து
ஐயனே இப் பிறவி அறுத்து நின்
மெய்யர் வாழ் சிவ லோகத்தின் மேவி நான்
உய்ய வேண்டும் ஒன்று இன்னமும் உண்டு அரோ.
19
உரை
   
2310. மடம்படு அறிவும் நீங்கி வல்வினைப் பாசம் வீசித்
திடம்படு அறிவு கூர்ந்து சிவ பரஞ்சோதி பாதத்து
திடம்படு அன்பு வா என்று ஈர்த்து எழ எழுந்து நாரை
தடம் படு மாடக் கூடல் தனி நகர் அடைந்து மாதோ.
14
உரை
   
2317. என்று இத் தட மின் இலவாக நீ
நன்று சால் வர நல் கென வெள்ளி மா
மன்று உளானும் வரம் தந்து போயினான்
சென்று நாரை சிவலோகம் சேர்ந்தது ஆல்.
21
உரை
   
2318. இயங்கள் ஐந்தும் இயம்ப விமான மேல்
புயங்க கணான்குமுக் கண்களும் பொற்ப வான்
வியம் கொள் பூ மழை வெள்ளத்துள் ஆழ்ந்து போய்
வயம் கொள் நந்தி கணத்துள் வதிந்ததே.
22
உரை
   
2319. அன்று தொட்டு இன்று அளவும் பொன் தாமரை
என்று உரைக்கும் எழில் மலர் ஓடையில்
சென்று உகைத்துத் திரிகின்ற மீன் அலால்
ஒன்று மற்றன நீர் வாழ் உயிர்களும்.
23
உரை
   
2320. தன் கிளை அன்றி வேற்றுப் பறவைகள் தாமும் தன் போல்
நன் கதி அடைய வேண்டிற்றே கொல் இந் நாரை செய்த
அன்பினில் வியப்போ ஈசன் அருளினில் வியப்போ
                                                       அன்பர்க்கு
இன்பு உருவான ஈசன் அன்பருக்கு எளிதே ஐய.
24
உரை
   
2321. மறக் குறும்புக் களைக் கட்டு மண்ணின் மேல்
அறப் பெரும் பயிர் ஆக்கி அதன் பயன்
சிறக்க நல்கிட உண்டு செருக்கு வான்
துறத்தம் எய்தி இருந்தான் சுகுணனும்.
25
உரை