2322. பாய் உடையார் விடுத்த பழி அழல் வழுதி உடல் குளிப்பப்
                                                பதிகம் ஓதும்
சேய் உடையார் அணைந் திளைக்கும் செவியுடையார்
                                     அளவு இறந்த திசைகள் எட்டும்
தோய் உடையார் பொன் இதழித் தொடையுடையார் விட
                                                அரவும் சுற்றும் ஆல
வாய் உடையார் புகழ் பாடப் பெறு வேமேல் வேண்டுவது
                                                இம் மனித யாக்கை.
1
உரை
   
2323. வேதன் நெடு மால் ஆதி விண் நாடர் மண் நாடர் விரத
                                                      யோகர்
மாதவர் யாவரும் காண மணி முறுவல் சிறிது அரும்பி
                                                      மாடக் கூடல்
நாதன் இரு திருக் கரம் தொட்டு அம்மியின் மேல்
                                       வைத்தகையான் நாட்டச் செல்வி
பாதமலர் எழுபிறவிக் கடல் நீந்தும் புணை என்பர் பற்று
                                                      இலாதோர்.
2
உரை
   
2324. ஓலவாய் மறைகள் தேறா ஒருவன் தன் உலகம் தன்னைச்
சேலவாய் உழலும் நாரைக்கு அருளிய செயல் ஈது அம்ம
நீலவாய் மணி நேர் கண்ட நெடிய நான் மாடக் கூடல்
ஆலவாய் ஆகச் செய்த அருள் திறம் எடுத்துச் சொல்வாம்.
3
உரை
   
2325. சித்திர மேரு வென்ற திரண்ட தோள் சுகுணன் பின்பு
சித்திர விரதன் சித்ர பூடணன் திண்தேர் வல்ல
சித்திர துவசன் வென்றிச் சித்திர வருமன் வன் தோள்
சித்திர சேனன் சீர்சால் சித்ர விக்கிரமன் என் போன்.
4
உரை
   
2326. மணி கெழு தேரி இராச மார்த்தாண்டன் இராச சூடா
மணி அணி முடி இராச சார்த்தூல வழுதி சிந்தா
மணி நிகர் துவிசராச குலோத்தமன் மடங்கா வென்றி
மணிதிகழ் பொலம் பூண் ஆய் அயோதனப் பிரவீணன்
                                                       மன்னோ.
54
உரை
   
2327. இயம்பரும் திறலி ராச குஞ்சரன் பரவி ராச
பயங்கரன் கைக்கும் பைந்தார் உக்கிர சேனன் பாரைச்
சயம் கெழு தோள் மேல் ஏந்து சத்துரும் சஞ்சயன்
                                                       வீமத்தேர்
வயம் கெழு மன்னன் வீம பராக்கிரம வழுதி மாதோ.
6
உரை
   
2328. பெய் வளை விந்தை சேர்ந்த பிரதாப மார்த்தாண்டப் பேர்த்
தெவ்வடு சிலையான் தேர் விக்கிரம கஞ்சுகன் தேரார்
                                                         போர்த்
வௌவிய சமர கோலாகலன் எனும் வாகை வேலான்
அவ்வியம் அவித்த சிந்தை அதுல விக்கிரமன் என்போன்.
7
உரை
   
2329. எழில் புனை அதுல கீர்த்தி என இருபத்திரண்டு
வழி வழி மைந்தர் ஆகி வையகம் காத்த வேந்தர்
பழி தவிர் அதுல கீர்த்தி பாண்டியன் தன்பால் இன்பம்
பொழிதர உதித்த கீர்த்தி பூடணன் புரக்கும் நாளில்.
8
உரை
   
2330. கரும் கடல் ஏழும் காவல் கரை கடந்து ஆர்த்துப்
                                                        பொங்கி
ஒருங்கு எழுந்து உறுத்துச் சீறி உம்பரோடு இம்பர் எட்டுப்
பொரும் கட கரியும் எட்டுப் பொன் னெடும் கிரியும்                                                         நேமிப்
பெருங் கடி வரையும் பேரப் பிரளயம் கோத்தது அன்றே.
9
உரை
   
2331. அப்பெரும் சலதி வெள்ளத்து அழிந்தன அழி விலாத
எப்பெரும் பொழிலும் ஏழு திபமும் இவற்றுள் தங்கி
நிற்பன செல்வ ஆன திணைகளும் நீண்ட சென்னி
பர்ப்பத வகையும் ஈறு பட்டன ஆக அம் கண்.
10
உரை
   
2332. தேன் இழி குதலைத் தீம் சொல் சேல் நெடும் கண்ணி
                                                        கோயில்
வன் இழி விமானம் பொன் தாமரை விளையாட்டின் வந்த
கான் இழி இடபக் குன்றம் கரிவரை நாகக் குன்றம்
ஆன் இழி வரை வராக வரை முதல் அழிவு இலாத.
11
உரை
   
2333. வெள்ளநீர் வறப்ப ஆதி வேதியன் ஞாலம் முன்போல்
உள்ளவாறு உதிப்ப நல்கி உம்பரோடு இம்பர் ஏனைப்
புள்ளொடு விலங்கு நல்கிக் கதிர் உடல் புத்தேள் மூவர்
தள்ளரு மரபின் முன் போல் தமிழ் வேந்தர் தமையும்
                                                        தந்தான்.
12
உரை
   
2334. அங்கியை மதி மரபு எனும் ஆழியுள்
தங்கிய கலை எண் நான்கு இரட்டி தன்னொடும்
பொங்கிய நிலா மதி போலத் தோன்றினான்
வங்கிய சேகர வழுதி மன்னனே.
13
உரை
   
2335. தாள் அணி கழலினான் தங்கள் நாயகன்
கோள் அணி புரிசை சூழ் கோயில் சூழ ஓர்
வாள் அணி கடி நகர் சிறிது வைக வைத்து
ஆள் அரி யேறு என அவனி காக்கும் நாள்.
14
உரை
   
2336. செய்யகோன் மனு வழி செலுத்து நீர்மையால்
பொய் கெழு கலிப்பகை புறம் தந்து ஓடத்தன்
வையகம் பல்வளம் சுரப்ப வைகலும்
மெய் கெழு மன்பதை மிக்காஅல் அரோ.
15
உரை
   
2337. பல்கு உறு மானுடப் பரப்பு எலாம் ஒருங்கு
கல் குற விடங்குறைவாக வாய் மதுப்
பில்குறு தாரினான் பிறை முடித்தவன்
மல்குறு கோயிலின் மருங்கர் எய்தினான்.
16
உரை
   
2338. கறை அணி கண்டனைத் தாழ்ந்து கை தொழுது
இறையவ நின் அருள் வலியின் இந்நிலப்
பொறையது ஆற்று வேற்கு ஈண்டு இப்போது ஒரு
குறையது உண்டாயினது என்று கூறுவான்.
17
உரை
   
2339. இத்தனை மாக்களும் இருக்கத் தக்கதாப்
பத்தனம் காணவிப் பதிக்கண் ஆதியே
வைத்து அறை செய்திடும் வரம்பு காண்கிலேன்
அத்தம் அற்று அதனை இன்று அறியக் காட்டு என்றான்.
18
உரை
   
2340. நுண்ணிய பொருளினும் நுண்ணிது ஆயவர்
விண் இழி விமான நின்று எழுந்து மீனவன்
திண்ணிய அன்பினுக்கு எளிய சித்தராய்ப்
புண்ணிய அருட் கடல் ஆகிப் போதுவார்.
19
உரை
   
2341. பாம்பினால் கடி சூத்திரம் கோவணம் பசும் தாள்
பாம்பினால் புரிநூல் சன்ன வீரம் வெம் பகு வாய்ப்
பாம்பினால் குழை குண்டலம் பாத கிண் கிணி நாண்
பாம்பினால் கர கங்கணம் பரித்தனர் வந்தார்.
20
உரை
   
2342. வந்த யோகர் மா மண்டப மருங்கு நின்று அம்கைப்
பந்த ஆலவாய் அரவினைப் பார்த்து நீ இவனுக்குக்
இந்த மாநகர் எல்லையை அளந்து காட்டு என்றார்
அந்த வாள் அரா அடிபணிந்து அடிகளை வேண்டும்.
21
உரை
   
2343. பெரும் இந் நகர் அடியனேன் பெயரினால் விளங்கக்
கருணை செய்தி என்று இரந்திடக் கருணை அம் கடலும்
அருள் நயந்து நேர்ந்து அனையதே ஆகெனப் பணித்தான்
உருகெழும் சின உரகமும் மெல் எனச் செல்லா.
22
உரை
   
2344. கீழ்த் திசைத் தலைச் சென்று தன் கேழ் கிளர் வாலை
நீட்டி மா நகர் வலம் பட நிலம் படிந்து உடலைக்
கோட்டி வாலை வாய் வைத்து வேல் கொற்றவற்கு எல்லை
காட்டி மீண்டு அரன் கங்கணம் ஆனது கரத்தில்.
23
உரை
   
2345. சித்தர் தம் சின கரத்து எழுந்து அருளினார் செழியன்
பைத்த ஆலவாய் கோலிய படி சுவர் எடுத்துச்
சுத்த நேமிமால் வரையினைத் தொட்டு அகழ்ந்து எடுத்து
வைத்தது ஆம் என வகுத்தனன் மஞ்சு சூழ் இஞ்சி.
24
உரை
   
2346. தென் திசைப் பரங் குன்றமும் வடதிசை இடபக்
குன்றமும் குடக் கேடக நகரமும் குணபால்
பொன்றல் அம் கிழித்து எழு பொழில் பூவண நகரும்
என்று நால் பெரு வாயில் கட்கு எல்லையாய் வகுத்தான்.
25
உரை
   
2347. அனைய நீள் மதில் ஆலவாய் மதில் என அறைவர்
நனைய வார் பொழில் நகரமும் ஆலவாய் நாமம்
புனையல் ஆயது எப்போதும் அப் பொன்னகர் தன்னைக்
கனைய வார் கழல் காலினான் பண்டு போல் கண்டான்.
26
உரை
   
2348. கொடிகள் நீள் மதில் மண்டபம் கோபுரம் வீதி
கடி கொள் பும் பொழில் இன்னவும் புதியவாக் கண்டு
நெடிய கோளகை கிரீடம் வாள் நிழல் மணியால் செய்து
அடிகள் சாத்திய கலன்களும் வேறு வேறு அமைத்தான்.
27
உரை
   
2349. பல்வகைப் பெரும் குடிகளின் பரப்பு எலாம் நிரப்பிச்
செல்வ வானவர் புரந்தரன் புரத்தினும் சிறப்ப
மல்லன் மா நகர் பெருவளம் துளும் பிட வளர்த்தான்
தொல்லை நாள் குலசேகரன் போல் வரு தோன்றல்.
28
உரை