தொடக்கம் |
|
|
2350. | அம் கணர் உரகம் அணிந்து அருள் வடிவம் அடைந்து அரசு அகம் மகிழக் கங்கண விட அரவம் கொடு கடி நகர் கண்டு அருண் முறை இதுவாம் சங்கு அணி குழையினர் பஞ்சவன் வழிபடு தம் பெயர் எழுதிய கூர் வெம் கணை கொடு வன் படை முடுகிய வென்றியை இனி மொழிவாம். | 1 |
|
|
உரை
|
|
|
|
|
2351. | வெம் கயல் நீள் கொடி வங்கிய சேகரன் வெண்குடை நீழலின் வாய் வங்கம் உலாவிய தெண் கடல் ஞாலம் அடைந்து ஐயுள் மாசு அறு சீர்ச் செம் கமல ஆலய மங்கையும் வாலிய திண் பதும அலயம் மேல் நங்கையும் ஓவற மங்கல மான நயம் பெற வாழ்வு உறு நாள். | 2 |
|
|
உரை
|
|
|
|
|
2352. | வேழ மறப்படை சூழ எதிர்த்தவர் வீறு கொடுத்து அடியில் தாழ அடர்த்தி கல் வாகை தொடுத்து அலர் தார் புனை விக்கிரமச் சோழன் மதிக்குல நாயகனைப் பொரு சூள் கருதிக் தொலையா ஆழ் கடலுக்கு இணை ஆம் அனிகத் தொடு மாட அமருக்கு எழுவான். | 3 |
|
|
உரை
|
|
|
|
|
2353. | கயபதி காய்சின நரபதி பாய் துரகத பதியே முதலா வயமிகு தோள் வட திசையின் நராதிபர் வலி கெழு சேனையினோடு இயம் இடி ஏரி இமிழ் இசை என வாய்விட விரதம் ஏறி நடாய்ப் பயன் மலி காவிரி நதி அருகே உறை பதி கொடு மேயினன் ஆல். | 4 |
|
|
உரை
|
|
|
|
|
2354. | சிலைத்து எழு செம்பியன் வெம் படை மள்ளர் செயிர்த்து மதிக் கடவுள் குலத்தவன் நாட்டில் இருந்து எழில் ஆன் நிரை கொண்டு குறும்பு செய்து மலர்த்தம் ஏரி உடைத்து நகர்க்கு வரும் பல பண்டமும் ஆறு அலைத்து முடுக்கி நடுக்கம் விளைத்து அமர்க்கு அடி இட்டனர் ஆல். | 5 |
|
|
உரை
|
|
|
|
|
2355. | மாறன் அறிந்து இனி என் செய்தும் நேரியன் வன் படையோ அளவு இன்று ஏறி எதிர்ந்து அமர் ஆடல் எனக்கு அரிது இக் குறையைப் பிறையோடு ஆறு அணி பூரண சுந்தரன் எந்தை அடித்தல முன் குருகாக் கூறி இரந்து வரம் பெறுகென் இறை கோயில் அடைந்தனன் ஆல். | 6 |
|
|
உரை
|
|
|
|
|
2356. | அடைந்து பணிந்து அருள் நாயகனே அடியேனொடு விக்கிரமன் தொடர்ந்து அமர் ஆடல் அயல் புல மன்னர் தொகையொடு பாசறை வாய்ப் படர்ந்து இறை கொண்டனனே பொர ஒத்த பதாதி எனக்கு இலையே மிடைந்து வரும் படை மிக்க விடத்து அரண் வேறு உளதோ இறைவா. | 7 |
|
|
உரை
|
|
|
|
|
2357. | என்னை இனிச் செயும் ஆறு என மாறன் இரந்து மொழிந்திடலும் முன்னவன் வான் இடை நின்று அசரீரி மொழிந்து அருள்வான் முதல் நீ அன்னவனோடு அமர் ஆடு பின் நாமும் அடைந்து உதவித் துணையாய் நின்னது வாகை எனப் பொருகின்றனன் நீ இனி அஞ்சல் என. | 8 |
|
|
உரை
|
|
|
|
|
2358. | சிந்தை களித்து இரு கண் துளித்து இரு செம்கை குவித்து இறைவன் அந்தி மதிச்சடை அந்தணனைத் தொழுது அன்று புறப்பட முன் வந்தனன் ஒற்றுவன் அந்தி வரைக்கயல் வந்தது விக்கிரமன் வெம் தறு கண் படை என்று அரசற்கு விளம்பினன் அப்பொழுதே. | 9 |
|
|
உரை
|
|
|
|
|
2359. | அரசனின் இயம் பல அதிர வலம்புரி அலற வலங்கு உளை மான் இரதம் அணைந்திட விசை கொடு சிந்தை பினிட வலவன் கடவப் புரசை நெடும் கரி திரை எறியும் கடல் பொரு பரிவிண்தொடு தேர் விரைசெய் நறும் தொடை விருதர் கணம் புடைவிரவ நடந்தனன் ஆல். | 10 |
|
|
உரை
|
|
|
|
|
2360. | அளந்து சூழ் திரு ஆலவாய் மதில் இன்புறத் தக ஆழிபோல் வளைந்த சோழ நெடும் படைக்கு எதிர் வஞ்சி வேய்ந்து எழு பஞ்சவன் கிளர்ந்த சேனை அதிர்ந்து கிட்டின கிட்டி அவ் இரு படைஞரும் களம் சிறந்திட வஞ்சினம் கொடு கை வகுத்து அமர் செய்வர் ஆல். | 11 |
|
|
உரை
|
|
|
|
|
2361. | சையம் ஒத்து எழு தேரினாரொடு சையம் ஒத்து எழு தேரரும் மையன் மைக்கரி வீர ரோடு எதிர் மையன் மைக்கரி வீரரும் கொய்யுளைப் பரி வயவரோடு இகல் கொய்யுளைப் பரி வயவரும் கை அழல் படை வீசி மின் விடு கார் எனப் பொருவார் அரோ. | 12 |
|
|
உரை
|
|
|
|
|
2362. | முடங்கு வெம் சிலை வில்லவ ரோடு முடங்க வெம் சிலை வில்லரும் விடங்கலுழ்ந்திடு வேலரோடு விடம் கலுழ்ந்திடும் வேலரும் இடம்கை தோல் வல வாளரோடு இடங்கை தோல் வல வாளரும் மடங்கல் ஏறு மடங்கல் ஏறு மலைப் பது என்ன மலைப்பர் ஆல். | 13 |
|
|
உரை
|
|
|
|
|
2363. | அரவினன் நில அம்புயம் பொறை ஆற்று மீனவன் ஆற்றல் கூர் புரவியின் நிரை வையம் மேல் கொடு போந்த நேரியர் வேந்தன் நேர் விரவி மின்னிய முரசு இயம்ப மிடைந்து வெம்சமர் ஆடு மாறி இரவி தன்னொடு மதியவன் பொர ஏகினான் நிகர் ஆகும் ஆல். | 14 |
|
|
உரை
|
|
|
|
|
2364. | துள்ளு மா ஒலி தான யாரு துளும்பும் மா ஒலி தூண்டு தேர் தள்ளு மா ஒலி படையொடும் படை தாக்கும் மா ஒலி பொருநர் ஆர்த்து தெள்ளு மா ஒலி மள்ளர் பைம் கழல் ஏங்கு மா ஒலி வீங்கி அந் தெள்ளு மா ஒலி வேறு பாடு திரிந்து கல் எனல் ஆயதே. | 15 |
|
|
உரை
|
|
|
|
|
2365. | துடித்த வாள் அரவு என்ன வீசிய தூங்கு கையின வீங்கு நீர் குடித்த காரொடு கார் மலைந்திடும் கொள்கை போல உடன்று உடன்று இடித்த ஆயின அசனி ஏறு இன் இருப்பு உலக்கை எடுத்து எறிந்து அடித்த சோரி யொடு ஆவி சோர விழுந்த வெம் சின ஆனையே. | 16 |
|
|
உரை
|
|
|
|
|
2366. | எய்த வாளி விலக்குவார் பிறிது எய்யும் வாளிதம் மார்பு தோள் செய்த போது அவர் ஆண்மை கண்டு சிரித்து வென்றி வியப்பரால் வைத வா வடி வேல் எறிந்திட வருவதைக் குறி வழியினால் கொய்த தார் மற வாள் எறிந்து குறைத்து வேறு படுத்துவார். | 17 |
|
|
உரை
|
|
|
|
|
2367. | பின்னிடாது இருபடையும் ஒத்து அமர் ஆடும் எல்லை பெரும் படைச் சென்னி தன் துணை ஆன உத்தர தேய மன்னவர் படையொடும் துன்னி ஞாலம் முடிக்கு நாள் எழு சூறை தள்ள அதிர்ந்து எழும் வன்னி என்ன உடன்று எதிர்ந்தனன் வழுதி சேனை உடைந்ததே. | 18 |
|
|
உரை
|
|
|
|
|
2368. | மின்னல் அங்கு இலை வாளொடும் சிலை வில் இழந்தனர் வீரரே பன்னல் அம் புனை தேரொடும் கரி பரி இழந்தனர் பாகரே தென்னவன் பொருவலி இழந்தனன் என்று செம்பியன் வாகையும் தன்னது என்று தருக்கு மேல் கொடு சங்கு எடுத்து முழக்கினான். | 19 |
|
|
உரை
|
|
|
|
|
2369. | அந்த வேலையின் முன் அரும் தமது அருள் எனக்குளிர் கடிபுனல் பந்தர் நீழல் அளித்தும் ஓடை படுத்தியும் பகை சாயவே வந்த வேடர் அவ்வண்ணமே ஒரு மான வேட அரசாய் வலம் சிந்த ஆகுலம் மூழ்கு மீனவன் சேனை காவலர் ஆயினார். | 20 |
|
|
உரை
|
|
|
|
|
2370. | குன்ற வில் வேடன் சாபம் குழைவித்துச் சுந்தரேசன் என்ற தன் நாமம் தீட்டி இட்ட கூர்ங் கணைகள் தூண்டி வென்றனம் என்று வாகை மிலைந்து வெண்சங்கம் ஆர்த்து நின்றவன் சேனைமீது நெறி படச் செலுத்தா நின்றான். | 21 |
|
|
உரை
|
|
|
|
|
2371. | அம் முனை வாளி ஒவ் ஒன்று அடல் புனை நூற்று நூறு தெம் முனைவீரர் தம்மைச் செகுத்து உயிர் உண்ண நோக்கி இம்முனை வாளி ஒன்றுக்கு இத்துணை வலியாது என்னா வெம் முனை மற வேல் சென்னி வியந்து அனுமானம் எய்தா. | 22 |
|
|
உரை
|
|
|
|
|
2372. | அன்ன கூர் வாளி தன்னைக் கொணர்க என அதனை வாசித்து இன்னது சுந்தரேசன் என வரைந்திருப்பது ஈது தென்னவற்கு ஆலவாயன் துணை செய்த செயல் என்று அஞ்சிப் பொன்னி நாடு உடையான் மீண்டு போகுவான் போகுவானை. | 23 |
|
|
உரை
|
|
|
|
|
2373. | செருத்துணை ஆகி வந்த உத்தர தேயத்து உள்ளார் துருக்கர் ஒட்டியர் வேறு உள்ளார் யாவரும் சூழ்ந்து நில் என்று உருத்தனர் வைது நீ போர்க்கு உடைந்தனை போதி ஈது உன் கருத்து எனின் ஆண்மை யாவர் கண்ணது உன் மானம் என்னாம். | 24 |
|
|
உரை
|
|
|
|
|
2374. | செல்லலை வருதி என்னாச் செயிர்த்து எழுந்து இடியின் ஆர்த்துக் கல் எழு அனைய திண்தோள் கௌரியன் மடைமேல் சென்று வில் இற வலித்து வாங்கி வேறு வேறு ஆகி நின்று சொல்லினும் கடிய வாளி தொடுத்தனர் விடுத்தார் தூர்த்தார். | 25 |
|
|
உரை
|
|
|
|
|
2375. | வடுத்தவா மருமச் செம்புண் மற மகனாகி நின்ற கடுத்தவா மிடற்று முக்கண் கண்ணுதல் சாமி தான் முன் எடுத்தவா அக வில் என்ன இரும் சிலை வாளி ஒன்று தொடுத்த ஆடவர் தாம் விட்ட சுடு சரம் தொலைத்துப் பின்னும். | 26 |
|
|
உரை
|
|
|
|
|
2376. | பத்து அம்பு தொடுத்து நூற்றுப் பத்து மான் தேரைச் சாய்த்தான் பத்து அம்பு தொடுத்து நூற்று பத்து வெம் களிற்றை மாய்த்தான் பத்து அம்பு தொடுத்து நூற்றுப் பத்து வாம் பரியைக் கொன்றான் பத்து அம்பு தொடுத்து நூற்றுப் பத்து மானுடரை வென்றான். | 27 |
|
|
உரை
|
|
|
|
|
2377. | நூறு அம்பு தொடுத்து நூற்று நூறு வெம் பரிமேல் எய்தான் நூறு அம்பு தொடுத்து நூற்று நூறு வெம் கரிமேல் பெய்தான் நூறு அம்பு தொடுத்து நூற்று நூறு தேர் சிதைய விட்டான் நூறு அம்பு தொடுத்து நூற்று நூறு சேவகரை அட்டான். | 28 |
|
|
உரை
|
|
|
|
|
2378. | ஆயிரம் வாளியான் நூறு ஆயிரம் பரியைக் கொன்றான் ஆயிரம் வாளியான் நூறு ஆயிரம் கரியை வென்றான் ஆயிரம் வாளியான் நூறு ஆயிரம் தேரைச் சாய்த்தான் ஆயிரம் வாளியான் நூறு ஆயிரம் பேரைத் தேய்த்தான். | 29 |
|
|
உரை
|
|
|
|
|
2379. | தடிந்தன தோளும் தாளும் தகர்ந்தன சென்னி மண்ணில் படிந்தன மடிந்தோர் யாக்கை பரிந்தன தும்பைத் தாமம் மடிந்தன மையல் யானை மாண்டன தாண்டும் பாய்மான் ஒடிந்தன கொடிஞ்சி மான் தேர் ஒதுங்கின ஒழிந்த சேனை. | 30 |
|
|
உரை
|
|
|
|
|
2380. | ஆவி முன் ஏகத் தாமும் அருக்க மண்டலத்து ஆரு ஏகத் தாவுவ என்ன ஆடும் தலை பல சிலைவாள் பட்டுக் கூவிளி எழுத்து விழும் குறைத்தலை ஆடப் பாதிச் சாவு உடல் நின்று கைகள் கொட்டுவ தாளம் என்ன. | 31 |
|
|
உரை
|
|
|
|
|
2381. | தறை விழத் தனது சென்னி வீட்டினர் தம்மை நின்ற குறை உடல் கை வேல் குத்தி நூக்குவ குரவை பாடி எறி பது தலைகள் வாய்மென்று எயிறது கறித்து வீழ்ந்து கருவின மார்பம் தட்டி நிற்பன கவந்தயாக்கை. | 32 |
|
|
உரை
|
|
|
|
|
2382. | ஒரு வழிப் பட்டு வீழும் இருதலை ஒன்றற்கு ஒன்று மருவிய கேண்மைத்து ஆகி வால் எயிறு இலங்க நக்குப் பிரிவு அற வந்தாய் நீயும் என்று எதிர் பேசிப் பேசிப் பரிவு உற மொழிந்து மோந்து பாடி நின்று ஆடல் செய்த. | 33 |
|
|
உரை
|
|
|
|
|
2383. | மாக வாறு இயங்கு சேனம் வல் இருட் குவை இன் அன்ன காகம் வன் கழுகு வெம்போர்க் களன் இடை அவிந்து வீழ்ந்தோர் ஆகம் மேல் சிறகு ஆதிக் கொண்டு அசைவன வேடை நீக்கப் பாகம் நின்று ஆல வட்டம் பணிப்பன போன்ற அன்றே. | 34 |
|
|
உரை
|
|
|
|
|
2384. | வெள்ளமாச் சோரி ஈர்ப்ப மிதக்கின்ற தேர்கள் வெம்பேய்ப் பிள்ளைகள் மூழ்கிக் கீழ் போய் மறித்து என வீழ்வ தெள்ளுநீர்க் கடலின் மீதூர் சிதைக்கல நிரையும் தாக்கித் துள்ளி மற்று அவற்றைச் சாய்க்கும் சுறவமும் போன்ற அன்றே. | 35 |
|
|
உரை
|
|
|
|
|
2385. | கத்தி நின்று ஒருபால் ஈர்ப்பக் கருங் கொடி சேனம் துண்டம் கொத்தி நின்று ஒருபால் ஈர்ப்பக் குட வயிற்று அழல் கண் பூதப் பத்தி நின்று ஒருபால் ஈர்ப்பப் பட்டவர் ஆகம் கூளி பொத்தி நின்று ஒருபால் ஈர்ப்ப அம் பொறி போல மன்னோ. | 36 |
|
|
உரை
|
|
|
|
|
2386. | துடுவை வான் முறம் கால் தள்ளும் துணைச் செவி அரிசி கோட்டின் உடுவை நேர் மணியின் குப்பை உரல் அடி உலக்கை திண்கோ அடுகலம் கடம் திச் சோரி மத்தக அடுப்பு என்று யானைப் படுகளம் விசயச் செல்வி அடுமடைப் பள்ளி மானும். | 37 |
|
|
உரை
|
|
|
|
|
2387. | பிணத்தினைக் கோலி புண் நீர் ஆற்றினை பெருக்கி உண் பேய்க் கணத்தினை உதைத்து நூக்கிக் கரை உடைத்து ஒருவன் பூதம் நிணத்தொடும் வரும் அந் நீத்தம் நேர் பட விருந்து கையால் அணைத்து வாய் மடுக்கும் வைகை அருந்திய பூதம் என்ன. | 38 |
|
|
உரை
|
|
|
|
|
2388. | புரத்தினுள் உயர்ந்த கூடல் புண்ணியன் எழுதி எய்த சரத்தினுள் அவிந்தார் சென்னிக்கு உற்றுழிச் சார்வாய் வந்த அரத்தினை அறுக்கும் வை வேல் அயல் புல வேந்தர் நச்சு மரத்தினை அடுத்து சந்துங் கதழ் எரி மடுத்தது என்ன. | 39 |
|
|
உரை
|
|
|
|
|
2389. | மாசு அறு காட்சியான் தன் வாளியால் அவிந்தோர் தம்மை மூசு வண்டு என்னச் சூழ்ந்து மொய்த்தன பைத்த கூளி காய் சினச் சேனம் காகம் கழுகு இனம் பற்றி ஈர்த்துப் பூசல் இட்டு ஒன்றோடு ஒன்று போர் செய்வான் தொடங்கிற்று அம்ம. | 40 |
|
|
உரை
|
|
|
|
|
2390. | வெம்சின மறக்கோன் நம்பி விடுகணை வெள்ளத்து ஆழ்ந்து வஞ்சினம் உரு தன் சேனை மடிந்தது கண்டு மாழாந்து எஞ்சின படையும் சூழ ஏதிலார் நகையும் சூழத் துஞ்சின மறமும் சூழச் சோழனும் உடைந்து போனான். | 41 |
|
|
உரை
|
|
|
|
|
2391. | வில்லொடு மேகம் அன்ன வெம்சிலை வேட வேந்தன் மல்லொடு பயின்ற தென்னவன் மலர் முகச் செவ்வி நோக்கி அல்லொடு மதி வந்தது என்ன அருள் நகை சிறிது பூத்துச் செல்லொடு பகை போல் கொண்ட திரு உரு மறைந்து போனான். | 42 |
|
|
உரை
|
|
|
|
|
2392. | பாடுவாய் அளி தேன் ஊட்டும் பைந்தொடைச் செழியன் வென்றிக் கோடுவாய் வைத்திட்டு ஆர்த்துக் குஞ்சர முகட்டில் ஏறித் தோடுவாய் கிழிக்கும் கண்ணார் மங்கலம் துவன்றி ஏந்த நீடுவார் திரை நீர் வேலி நீள் மதி நகரில் புக்கான். | 43 |
|
|
உரை
|
|
|
|
|
2393. | சிலைவில் சேவகம் செய்து வாகை வாங்கித் திரு அளித்த சேவகற்குச் சிறந்த பூசை நிலை நித்தாய் மணிப் பொலம் பூண் இறு விச் சாத்தி நிழல் விரிக்கும் வெயில் மணியான் நெடிய மேரு மலைவில் தான் என்ன வரிச் சிலையும் நாமம் நாமம் வரைந்த கடும் கூர்ங் கணையும் வனைந்து சாத்தி அலைவித்து ஆழ் கடல் உலகுக் அகலச் செங்கோல் அறம் பெருக்கும் வங்கிய சேகரன் ஆம் அண்ணல். | 44 |
|
|
உரை
|
|
|
|