2394. வேடு உரு ஆகி மேரு வில்லி தன் நாமக் கோல் எய்து
ஆடு அமர் ஆடித் தென்னன் அடுபகை துரந்த வண்ணம்
பாடினம் சங்கத்தார்க்குப் பகை தந்து அவரோடு ஒப்பக்
கூடி முத் தமிழின் செல்வம் விளக்கிய கொள்கை
                                                   சொல்வாம்.
1
உரை
   
2395. வங்கிய சேகரன் கோல் வாழும் நாள் மேலோர் வைகல்
கங்கை அம் துறை சூழ் கன்னிக் கடிமதில் காசி தன்னில்
பங்கயசூ முளரிப் புத்தேள் பத்து வாம் பரிமா வேள்வி
புங்கவர் மகிழ்ச்சி தூங்க மறை வழி போற்றிச் செய்தான்.
2
உரை
   
2396. நிரப்பிய வழி நாள் நவ் நீர் ஆடுவான் நீண்ட வீணை
நரப்பிசை வாணி சாவித்திரி எனும் நங்கை வேத
வரப்பிசை மநு ஆம் ஆயத்திரி எனும் மடவா ரோடும்
பரப்பிசைக் கங்கை நோக்கிப் படருவான் எல்லை.
3
உரை
   
2397. நானவார் குழலினாரம் மூவருள் நாவின் செல்வி
வான ஆறு இயங்கும் விஞ்சை மாதராள் ஒருத்தி பாடும்
கானவாறு உள்ளம் போக்கி நின்றனள் கமலயோனி
ஆனவால் அறிவன் ஏகி அந் நதிக் கரையைச் சேர்ந்தான்.
4
உரை
   
2398. நாமகள் வரவு தாழ்ப்ப நங்கையர் இருவரோடும்
தாமரைக் கிழவன் மூழ்கித் தடம் கரை ஏறும் எல்லைப்
பாமகள் குறுகி என்னை அன்றி நீ படிந்த வாறு என்
ஆம் என வெகுண்டாள் கேட்ட அம்பயத்து அண்ணல்
                                                      சொல்வான்.
5
உரை
   
2399. குற்றம் நின் மேலது ஆக நம்மை நீ கோபம் கொள்வது
எற்று என வினைய தீங்கை எண்ணறு மாக்கள் தோற்றம்
உன் தனை ஒழித்தி என்னா உரைத்தனன் சாபம் ஏற்கும்
பொன் தொடி மடந்தை அஞ்சிப் புலம்பு கொண்டு
                                                  அவலம் பூண்டாள்.
6
உரை
   
2400. ஊன் இடர் அகன்றோய் உன் ஆருயிர்த் துணை ஆவேன்
                                                             இந்த
மானிட யோனிப் பட்டு மயங்கு கோ என்ன வண்டு
தேனிடை அழுந்தி வேதம் செப்பும் வெண் கமலச் செல்வி
தாள் இடர் அகல நோக்கிச் சதுர் முகத் தலைவன் சாற்றும்.
7
உரை
   
2401. முகிழ்தரு முலை நின் மெய்யா முதல் எழுத்து ஐம் பத்
                                                      தொன்றில்
திகழ்தரு ஆகார் ஆதி ஹாகாரம் ஈறாச் செப்பிச்
புகழ் தரு நாற்பத்து எட்டு நாற்பத்து எண் புலவர் ஆகி
அகழ் தரு கடல்சூழ் ஞாலத்து அவதரித்து இடுவாக.
8
உரை
   
2402. அத் தகு வருணம் எல்லாம் ஏறி நின்று அவற்றின்
மெய்த்தகு தன்மை எய்தி வேறு வேறு இயக்கம் தோன்ற
உய்த்திடும் அகாரத்திற்கு முதன்மையாய் ஒழுகும் நாதர்
முத்தமிழ் ஆலவாய் எம் முதல்வர் அம் முறையான்
                                                      மன்னோ.
9
உரை
   
2403. தாம் ஒரு புலவர் ஆகித் திரு உருத் தரித்துச் சங்க
மாமணிப் பீடத்து ஏரி வைகியே நாற்பத்து ஒன்பது
ஆம் அவர் ஆகி உண்ணி நின்று அவர் அவர்க்கு அறிவு
                                                           தோன்றி
ஏமுறப் புலமை காப்பார் என்றனன் கமலப் புத்தேள்.
10
உரை
   
2404. அக்கரம் நாற்பத்து எட்டும் அவ்வழி வேறு வேறு
மக்களாய்ப் பிறந்து பல் மாண் கலைகளின் வகைமை
                                                        தேர்ந்து
தொக்க ஆரியமும் ஏனைச் சொல் பதினெட்டும் ஆய்ந்து
தக்க தென் கலை நுண் தேர்ச்சிப் புலமையில் தலைமை
                                                      சார்ந்தார்.
11
உரை
   
2405. கழுமணி வயிரம் வேந்த கலன் பல அன்றிக் கண்டிக்
கொழுமணிக் கலனும் பூணும் குளிர்நிலா நிற்று மெய்யர்
வழுவறத் தெரிந்த செம் சொல் மாலையால் அன்றி ஆய்ந்த
செழு மலர் மாலையானும் சிவ அர்ச்சனை செய்யும் நீரார்.
12
உரை
   
2406. புலம் தொறும் போகிப் போகிப் புலமையால் வென்று
                                                        வென்று
மலர்ந்த தண் பொருனை நீத்த வளம் கெழு நாட்டில் வந்து
நிலம் தரு திருவின் ஆன்ற நிறை நிதிச் செழியன் செம்
                                                            கோல்
நலம் தரு மதுரை நோக்கி நண்ணுவார் நண்ணும் எல்லை.
13
உரை
   
2407. பல பல கலைமாண் தேர்ச்சிப் பனுவலின் பயனாய் நின்ற
அற்புத மூர்த்தி எந்தை ஆலவாய் அடிகள் அங்கு ஓர்
கற்பமை கேள்வி சான்ற கல்வியின் செல்வர் ஆகிச்
சொற்பதம் கடந்த பாதம் இரு நிலம் தோய வந்தார்.
14
உரை
   
2408. அவ் இடை வருகின்றாரை நோக்கி நீர் யாரை நீவிர்
எவ்விடை நின்றும் போது கின்றனிர் என்ன அன்னார்
வெவ்விடை அனையீர் யாங்கள் விஞ்சையர் அடைந்தோர்
                                                          பாவம்
வௌவிடு பொருனை நாட்டின் வருகின்றேம் என்ன
                                                          லோடும்.
15
உரை
   
2409. தனி வரு புலவர் நீவிர் தண் தமிழ் ஆலவாய் எம்
நனி வரு கருணை மூர்த்தி கனைகழல் இறைஞ்சல்
                                                      வேண்டும்
இனி வருகென்ன நீரே எங்களுக்கு அளவு இல் கோடி
துனி வரு வினைகள் தீர்க்கும் சுந்தரக் கடவுள் என்றார்.
16
உரை
   
2410. மறையினால் ஒழுகும் பன்மாண் கலைகள் போல் மாண்ட
                                                         கேள்வித்
துறையின் ஆறு ஒழுகும் சான்றோர் சூழ மீண்டு ஏகிக்
                                                         கூடல்
கறையினார் கண்டத்தாரைப் பணிவித்துக் கரந்தார்
                                                         ஒற்றைப்
பிறையினார் மகுடத் தோற்றத்தார் அறிஞராய் வந்த
                                                         பெம்மான்.
17
உரை
   
2411. விம்மிதம் அடைந்து சான்றோர் விண் இழி விமானம் மேய
செம்மலை வேறு வேறு செய்யுளால் பரவி ஏத்திக்
கைம் மலை உரியினார் தம் கால் தொழுது இறைஞ்சி
                                                         மீண்டு
கொய்ம் மலர் வாகைச் செவ்வேல் செழியனைக் குறுகிக்
                                                       கண்டார்.
18
உரை
   
2412. மறவலி நேமிச் செம்கோல் மன்னவன் வந்த சான்றோர்
அறமலி கேள்வி நோக்கி அவைக்களக் கிழமை நோக்கித்
திறமலி ஒழுக்கம் நோக்கிச் சீரியர் போலும் என்னா
நிறை மலி உவகை பூத்த நெஞ்சினான் இதனைச் செய்தான்.
19
உரை
   
2413. திங்கள் அம் கண்ணி வேய்ந்த செக்கர் அம் சடில நாதன்
மங்கலம் பெருகு கோயில் வட குட புலத்தின் மாடு ஓர்
சங்க மண்டபம் உண்டாக்கித் தகைமை சால் சிறப்பு நல்கி
அங்கு அமர்ந்து இருத்திர் என்ன இருத்தினான் அறிஞர்
                                                           தம்மை.
20
உரை
   
2414. வண் தமிழ் நாவினார்க்கு மன்னவன் வரிசை நல்கக்
கண்டு உளம் புழுங்கி முன்னைப் புலவர் அக் கழகத்
                                                        தோரை
மண்டினர் மூண்டு மூண்டு வாது செய் ஆற்றன் முட்டிப்
பண்டைய புலனும் தோற்றுப் படர் உழந்து எய்த்துப்
                                                        போனார்.
21
உரை
   
2415. இனையர் போல் வந்து வந்து மறுபுலத்து இருக்கும் கேள்வி
வினைஞரும் மதம் மேல் கொண்டு வினாய் வினாய் வாதம்
                                                             செய்து
மனவலி இளைப்ப வென்று வைகுவோர் ஒன்றை வேண்டிப்
புனை இழை பாக நீங்காப் புலவர் முன் நண்ணினாரே.
22
உரை
   
2416. முந்து நூல் மொழிந்தார் தம்மை முறைமையால் வணங்கி
                                                         எம்மை
வந்து வந்து எவரும் வாதம் செய்கின்றார் வரிசையாக
அந்தம் இல் புலமை தூக்கி அளப்பதாம் எம் மனோர்க்குத்
தந்து அருள் செய்தி சங்கப் பலகை ஒன்று என்று
                                                         தாழ்ந்தார்.
23
உரை
   
2417. பாடிய பாணற்கு அன்று வலியவே பலகை இட்டார்
பாடிய புலவர் வேண்டில் பலகை தந்து அருளார்
                                                     கொல்லோ
பாடிய புலவர் ஆகும் படி ஒரு படிவம் கொண்டு
பாடிய புலவர் காணத் தோன்றினார் பலகை யோடும்.
24
உரை
   
2418. சதுரமாய் அளவின் இரண்டு சாண் அதிப் பலகை அம்ம
மதியினும் வாலிது ஆகும் மந்திர வலியது ஆகும்
முதிய நும் போல் வார்க்கு எல்லாம் முழம் வளர்ந்து
                                                இருக்கை நல்கும்
இது நுமக்கு அளவு கோலாய் இருக்கும் என்று இயம்பி
                                                        ஈந்தார்.
25
உரை
   
2419. நாமகள் உருவாய் வந்த நாவலர் தமக்கு வெள்ளைத்
தாமரை அமளி தன்னைப் பலகையாத் தருவது என்னக்
காமனை முனிந்தார் நல்கக் கைக் கொடு களிறு தாங்கும்
மாமணிக் கோயில் தன்னை வளைந்து தம் கழகம் புக்கார்.
26
உரை
   
2420. நாறு பூம் தாமம் நாற்றி நறும் பனி தோய்ந்த சாந்தச்
சேறு வெண் மலர் வெண் தூசு செழும் புகை தீபம் ஆதி
வேறு பல் வகையால் பூசை வினை முடித்து இறைஞ்சிக்
                                                          கீரன்
ஏறினான் கபிலனோடு பரணனும் ஏறினானே.
27
உரை
   
2421. இரும் கலை வல்லோர் எல்லாம் இம் முறை ஏறி ஏறி
ஒருங்கு இனிது இருந்தார் யார்க்கும் ஒத்து இடம் கொடுத்து
                                                           நாதன்
தரும் சிறு பகை ஒன்றே தன் உரை செய்வோர்க்கு எல்லாம்
சுருங்கி நின்று அகலம் காட்டி தோன்று நூல் போன்றது
                                                           அன்றே.
28
உரை
   
2422. மேதகு சான்றோர் நூலின் விளை பொருள் விளங்கத்
                                                        தம்மில்
ஏதுவும் எடுத்துக் காட்டும் எழுவகை மதமும் கூறும்
போதவை தெளிந்த கிள்ளை பூவையே புறம்பு போந்து
வாது செய்வார்கள் வந்தான் மறுத்து நேர் நிறுத்து
                                                      மன்னோ.
29
உரை
   
2423. ஆய ஆறு எண் புலவரும் ஆய்ந்து உணர்
பாய கேள்விப் பயன் பெற மாட்சியால்
தூய பாடல் தொடங்கினர் செய்து கொண்டு
ஏய வாரு இருந்தார் அந்த எல்லை வாய்.
30
உரை
   
2424. பலரும் செய்த பனுவலும் மாண் பொருள்
மலரும் செல்வமும் சொல்லின் வளமையும்
குலவும் செய்யுள் குறிப்பும் ஒத்து ஒன்றியே
தலை மயங்கிக் கிடந்த அத் தன்மையால்.
31
உரை
   
2425. வேறு பாடு அறியாது வியந்து நீர்
கூறு பாடல் இது என்றும் கோது இல் என
தேறு பாடல் இது என்றும் செஞ் செவே
மாறு பாடு கொண்டார் சங்க வாணரே.
32
உரை
   
2426. மருளு மாறு மயக்கு அற வான் பொருள்
தெருளு மாறும் செயவல்ல கள்வர் சொல்
பொருளும் ஆம் மதுரேசர் புலவர் முன்
அருளும் நாவலராய் வந்து தோன்றினார்.
33
உரை
   
2427. வந்த நாவலர் வந்திக்கும் நாவலர்
சிந்தை ஆகுலம் செய்ய மயக்குறும்
பந்த யாப்பைக் கொணர்க எனப் பாவலர்
எந்தை ஈங்கு இவை என்று முன் இட்டனர்.
34
உரை
   
2428. தூய சொல்லும் பொருளின் தொடர்ச்சியும்
ஆய நாவலர் அவ் அவர் தம் முது
ஆய பாடல் வகை தெரிந்து அவ் அவர்க்கு
ஏயவே எடுத்து ஈந்தனர் என்பவே.
35
உரை
   
2429. வாங்கு சங்கப் புலவர் மனம் களித்து
ஈங்கு நீர் எமரோடு ஒருத்தராய்
ஓங்கி வாழ்திர் என்று ஒல் எனத் தங்களைத்
தாங்கு செம் பொன் தவிசில் இருத்தினார்.
36
உரை
   
2430. பொன்னின் பீடிகை என்னும் பொன் ஆரமேல்
துன்னு நாவலர் சூழ் மணி ஆகவே
மன்னினார் நடு நாயக மாமணி
என்ன வீற்றிருந்தார் மது ரேசரே.
37
உரை
   
2431. நதி அணிந்தவர் தம் மொடு நாற்பத்து ஒன்
பதின்மர் என்னப் படும் புலவோர் எலாம்
முதிய வான் தமிழ் பின்னு முறை முறை
மதி விளங்கத் தொடுத்து அவண் வாழும் நாள்.
38
உரை
   
2432. வங்கிய சேகரன் வங்கிய சூடா மணி தன்னைப்
பொங்கி தேசார் முடி புனை வித்துப் புவி நல்கி
இங்கு இயல் பாச வினைப் பகை சாய இருந்து ஆங்கே
சங்கு இயல் வார் குழையான் அடி ஒன்றிய சார்பு உற்றான்.
39
உரை