2433. சொற்குவை தேரும் பாவலர் மேவத் தொகு பீடம்
அற் குவை கண்டத்து அண்ணல் அளித்தது அறைந்தேம்
                                                           ஆல்
தற்குவை தந்தால் உய்குவல் என்னும் தருமிக்குப்
பொற் குவை நல்கும் வண்ணம் எடுத்துப் புகல்கிற்பாம்.
1
உரை
   
2434. மன்னவர் மன்னன் வங்கிய சூடா மணி மாறன்
தென்னவர் ஆகித் திகிரி உருட்டும் தென்கூடல்
முன்னவர் அன்னம் கண்டு அறியாத முடிக்கு ஏற்றப்
பன் மலர் நல்கு நந்தனம் வைக்கும் பணி பூண்டான்.
2
உரை
   
2435. மாதவி பாதிரி தாதகி கூவிளம் மந்தாரம்
தாது அவிழ் மல்லிகை முல்லை இலஞ்சி தடம் கோங்கம்
வீதவழ் கொன்றை கரந்தை செழுங்கரம் வீரம் தண்
போது அவிழ் நந்தி செருந்தி குருந்தம் புன்னாகம்.
3
உரை
   
2436. முண்டகம் மென்கடி நீலம் முதல் பல முப்போதும்
எண் திசையும் கமழும் படி நந்தன மெங்கும் தேன்
உண்டு இசை வண்டு படிந்து முரன்றிட உண்டாக்கி
வண்டு இமிர் சண்பக நந்தனமும் தனி வைத்தான் ஆல்.
4
உரை
   
2437. பொய்த்திடு நுண் இடை மங்கல மங்கையர் பொன்
                                                        பூண்டார்
ஒத்து எழு சண்பகம் மொய்த்து அரும்பு உடைந்து எங்கும்
வைத்திடு நந்தன வாசம் விழுங்கி மணம் கான்று
பைத்து மலர்ந்தன கண்டு மகிழ்ந்து பரித்தேரான்.
5
உரை
   
2438. செருக்கிய வண்டு விழா மலர் கொய்து தெரிந்து ஆய்ந்து
செருக்கிய இண்டை நிரைத் தொடை தொங்கல் நெடும்
                                                               தாமம்
மருக்கிளர் கண்ணி தொடுத்து அணிவித்து வணங்கு ஆரூர்
கருக்கிய கண் நுதலார் திருமேனி கவின் செய்தான்.
6
உரை
   
2439. அன்ன வியன் பொழில் மா மதுரேசர் அடித்தாழ் வோன்
பொன் அவிர் சண்பக மாலை புனைந்த புதுக் கோலந்
தன்னை வியந்து இவர் சண்பக சுந்தரர் தாம் என்னா
முன்னர் இறைஞ்சினன் நிம்பம் அணிந்த முடித் தென்னன்.
7
உரை
   
2440. அன்னது ஒர் நாமம் பெற்றனர் இன்று மணிக் கூடல்
முன்னவர் அந்தத் தாமம் அவர்க்கு முடிக்கு ஏற்றும்
இன்னது ஓர் நீரார் சண்பக மாறன் என்ற பேர்
மன்னி விளங்கினன் வங்கிய சூடா மணிதானும்.
8
உரை
   
2441. சண்பக மாறன் சண்பக சுந்தரர் தம் மாடே
நண்பக மாறா நல் பணி செய்யும் நல் நாளில்
பண்பகர் சொல்லார் தம் புடை மாரன் படுபோர் மூண்டு
எண்பக வெய்யவான் ஆகிய வந்தது அன்று இளவேனில்.
9
உரை
   
2442. மனிதர் வெம் கோடை தீர்க்கும் வசந்த மென் காலும்
                                                          வேறு
துனிதவிர் இளம் கால் வேண்டும் சோலையும் சோலை
                                                      வேண்டும்
புனித நீர்த் தடமும் வேறு புது மலர் ஓடை வேண்டும்
பனி தரு மதியும் வேறு பால் மதி வேண்டும் காலம்.
10
உரை
   
2443. அண்ட வான்தரு மேல் சீறிச் சிவந்து எழுந்தாங்குத்
                                                       தேமாத்
தண் தளிர் ஈன்று வானம் தைவர நிவந்த காசு
கொண்டு இடை அழுத்திச் செய்த குழை அணி மகளிர்
                                                        போல
வண்டு இறை கொள்ளப் பூத்து மலர்ந்தன செருந்தி
                                                      எல்லாம்.
11
உரை
   
2444. செம்கதிர் மேனியான் போல் அவிழ்ந்தன செழும் பலாசம்
மங்குல் ஊர் செல்வன் போல மலர்ந்தன காஞ்சித் திங்கள்
புங்கவன் போலப் பூத்த பூம் சினை மர அம் செங்கை
அம் கதிர் ஆழியான் போல் அலர்ந்தன விரிந்த காய.
12
உரை
   
2445. தரை கிழித்து எழுநீர் வைகைத் தடம் கரை எக்கர்
                                                       அல்குல்
அரமே கலை சூழ்ந்து என்ன அலர்ந்து தாது உகுப்ப
                                                       ஞாழல்
மரகதம் தழைத்து வெண் முத்து அரும்பிப் பொன்
                                                  மலர்ந்து வாங்கும்
திரை கடல் பவளக்காடு செய்வன கன்னிப் புன்னை.
13
உரை
   
2446. ஊடினார் போல வெம்பி இலை உதிர்ந்து உயிர்
                                                   அன்னாரைக்
கூடினார் போல எங்கும் குழை வரத் தழைத்து நீங்கி
வாடினார் போலக் கண்ணீர் வார மெய் பசந்து மையல்
நீடினார் அலர் போல் பூத்து நெருங்கின மரங்கள்
                                                      எல்லாம்.
14
உரை
   
2447. விழைதரு காதலார் தாம் மெலிவுற மெலிந்து நெஞ்சம்
குழைவுறக் குழைந்து நிற்கும் கோதிலாக் கற்பினார் போல்
மழை அறும் கோடை தீப்பமரம் தலை வாட வாடித்
தழைவுறத் தழைத்து நின்ற தழீஇய பைங் கொடிகள்
                                                      எல்லாம்.
15
உரை
   
2448. சேட்டிகைத் தென் காற்று தள்ளத் தெள் மதுச் சிதறத்
                                                         தும்பி
நீட்டிசை முரலச் சாயா நின்று பூம் கொம்பர் ஆடல்
நாட்டியப் புலவன் ஆட்ட நகை முகம் வெயர்வை சிந்தப்
பாட்டிசைத்து ஆடா நின்ற பாவைமார் போன்ற அன்றே.
16
உரை
   
2449. மலர்ந்த செவ் அந்திப் போதும் வகுளமும் முதிர்ந்து வாடி
உலர்ந்து மொய்த்து அளி தேன் நக்க கிடப்பன
                                                   உள்ளமிக்க
குலம் தரு நல்லோர் செல்வம் குன்றினும் தம்பால்
                                                    இல்லென்று
அலந்தவர்க்கு உயிரை மாறி யாயினும் கொடுப்பர்
                                                      அன்றோ.
17
உரை
   
2450. நாறிய தண் அம் தேமா நறும் தளிர் கோதிக் கூவி
ஊறிய காமப் பேட்டை உருக்குவ குயில் மென் சேவல்
வீறிய செம்கோல் வேந்தன் வெளிப்படத் தேயம் காவல்
மாறிய வேந்தன் போல ஒடுங்கின மயில்கள் எல்லம்.
18
உரை
   
2451. பொங்கரின் நுழைந்து வாவி புகுந்து பங்கயம் துழாவிப்
பைங்கடி மயிலை முல்லை மல்லிகைப் பந்தர் தாவிக்
கொங்கு அலர் மணம் கூட்டு உண்டு குளிர்ந்து மெல்
                                                 என்று தென்றல்
அங்கு அங்கே கலைகள் தேரும் அறிவன் போல்
                                               இயங்கும் அன்றே.
19
உரை
   
2452. தாமரை களாஞ்சி தாங்கத் தண் குயின் முழவம் ஏங்க
மா மருது அமரும் கிள்ளை மங்கலம் இயம்பத் தும்பி
காமரம் இசைப்ப முள் வாய்க் கைதை வாள் எடுப்ப
                                                          வேனில்
கோமகன் மகுடம் சூடி இருப்பது அக் குளிர் பூம் சோலை.
20
உரை
   
2453. கலையினால் நிறைந்த இந்து காந்த மண்டபத்தும் செய்த
மலையினும் எழுது மாட மருங்கினும் நெருங்கு சோலைத்
தலையினும் கமல வாவித் தடத்தினும் தண் முத்து ஆரம்
முலையினும் அன்றிக் கோடை முடிவிடம் காணார் மைந்தர்.
21
உரை
   
2454. நிலம் தரு திருவின் ஆன்ற நிழல் மணி மாடக் கூடல்
வலந்தரு தடம் தோள் மைந்தர் வானமும் வீழும் போக
நலம் தரு மகளிரோடு நாக நாடவர் தம் செல்வப்
பொலம் தரு அனைய காட்சிப் பூம் பொழில் நுகர் வான்
                                                          போவார்.
22
உரை
   
2455. மாத் தாண் மதமான் எருத்தின் மடங்கல் எனச் செல்வாரும்
பூத்தார் ஒலிவாம் பரிமேல் புகர் மா எனப் போவாரும்
பார்த்தார் பரிதி என வாம் பரித்தேர் உகைத்து ஊர்வாரும்
தேத்தார் உளர் வண்டு அலம்பச் சிலம்பின் நடக்கின்றாரும்.
23
உரை
   
2456. நீலப் பிடிமேல் பிடிப்போன் நெறிக் கொள்வாரும் தரள
மாலைச் சிவிகை மிசை வெண் மலராள் எனச் செல்வாரும்
ஆலைக் கரும்பன் துணை போல் அணித்தார்ப்
                                                   பரியூர்வாரும்
கோலத் தடக்கை பற்றிக் கொழுநருடன் போவாரும்.
24
உரை
   
2457. சுருப்புக் கமழ் தேம் கண்ணித் தொடுபைங் கழல்
                                                      ஆடவரும்
கருப்புச் சிலை மன்னவனால் கருவிப் படை அன்னவரும்
விருப்புற்று எறிநீர் வையை வெள்ளைத் தரளம் தெள்ளிப்
பொருப்பில் குவிக்கும் புளினம் புறம் சூழ் சோலை புகுவார்.
25
உரை
   
2458. கூந்தல் பிடியும் பரியும் ஊர் வார் கொழுநர் தடம் தோள்
ஏந்தச் சயமாது என்னத் தழுவா இழிந்து பொழில் வாய்ப்
பூந் தொத்து அலர் பொன் கொடி தாது உகு மாறு என்னப்
                                                          புனைந்த
சாந்தக் கலவை புகப் போய் வனமங்கையர் போல்
                                                     சார்ந்தார்.
26
உரை
   
2459. ஏமா சல மென் முலையார் நடை ஓவியமே என்னப்
பூ மாதவி சேர்வாரும் புன்னை நிழல் சேர்வாரும்
தேமா நிழல் சேர்வாரும் செருந்தி நிழல் சேர்வாரும்
காமாயுத சாலைகள் போல் கைதை நிழல் சேர்வாரும்.
27
உரை
   
2460. கோடும் பிறை வாண் நுதலார் குழலைக் கருவிக் கார்
                                                         என்று
ஆதும் தோகை அவர் கண் நோக்கிக் கணை என்று
                                                        அஞ்சி
ஒடும் கொடியின் அன்னார் உரு மாந்தளிர் என்று
                                                   அயில் வான்
நாடும் குயில் அன்னவர் பண் இசைக் கேட்டு ஒதுங்கி
                                                        நாணும்.
28
உரை
   
2461. நீடும் தரங்கம் இரங்கு நிறைநீர் நிலையே அன்றிப்
பாடும் சுரும்பு உண் கழுநீர் பைந்தாள் குமுதம் பதுமம்
கோடும் பூத்த என்னக் கொடியேர் இடையார் குழையும்
தோடும் கிடந்த வதனத் தொகையால் பொலிவ சோலை.
29
உரை
   
2462. பிடிகள் என்ன நடந்தார் உடன் போய்க் கொழுநர் பெரும்
                                                              தண்
கொடிகள் மிடைந்த வில்லில் இயக்கர் போலக் குறுகிக்
கடி கொள் பனிநீர் தெளித்து வேடை தணித்தும் கன்றும்
அடிகள் பிடித்தும் சேடியவர் கைக்கு உதவி ஆவார்.
30
உரை
   
2463. மைவார் தடம் கண் மடவார் வளைப்பர் கொம்பின்
                                                          மலரைக்
கொய்வார் குமிழ் போந்து உயிர்ப்பார் குழையும்
                                                    செவியும் குழலும்
பெய்வார் மகிழ்ச்சி செய்வார் பேரா மையல் கூர
எய்வார் கணைபோல் தைப்பக் கொழுநர் மார் பத்து
                                                          எறிவார்.
31
உரை
   
2464. முத்து ஏர் நகையார் வளைப்ப முகை விண்டு அலர் பூங்
                                                    கொம்பர்ப்
புத்தேள் வண்டும் பெடையும் புலம்பிக் குழலில் புகுந்து
தெத்தே எனப் பாண் செய்து தீந்தேன் அருந்தும்
                                                    துணையோடு
ஒத்து ஏழ் இசை பாதிக் கள் உண்ணும் பாணர் ஒத்தே.
32
உரை
   
2465. இம்பர் வீடு அளிக்கும் தெய்வ மகளிரே என்பார் கூற்றம்
வம்பல மெய்யே போலும் வளைக்கையார் வளைப்பத்
                                                       தாழ்ந்து
கம்பம் உற்று அடிப் பூச் சிந்தி மலர் முகம் கண்ணீர்
                                                        சோரக்
கொம்பரும் பணிந்தது என்றால் உலகியல் கூறல் பாற்றோ.
33
உரை
   
2466. மைக் கணாள் ஒருத்தி எட்டா நிமிர் கொம்பை வளைக்கும்
                                                        தோறும்
கைக்கு நேர் படாமை வாடும் கடிமலர்க் கொடிபோல்
                                                        நிற்பத்
தைக்கும் பூம் கணை வேள் அன்ன ஒருமகன் தலைபட்டு
                                                        என்னை
எய்க்கின்றாய் தோள் மேல் ஏறிப் பறி என ஏந்தி
                                                        நின்றான்.
34
உரை
   
2467. தையலாள் ஒருத்தி எட்டா மலர்க் கொம்பைத் தளிர்க்கை
                                                           நீட்டி
ஐய நுண் மருங்குல் நோவ வருந்தலும் ஆற்றாக் கேள்வன்
ஒய் யென இதுவும் என்னை யூடிய மகளிர் ரேயோ
கொய் என வளைத்து நின்றான் கண் முத்தம் கொழிப்ப
                                                           நின்றாள்.
35
உரை
   
2468. மைக்குழல் ஒருத்தி காதில் வட்டப் பொன் ஒலை யூடே
திக் கயம் அனையான் கொய்த செருந்திப்பூச் செருகி
                                                        நோக்கி
இக் குழை அழகிது என்றான் இடும் எம் கைக்கு இடுதி
                                                        என்னா
அக் குழை யோடும் வீசி அன்பனுக்கு அலக்கண்
                                                       செய்தாள்.
36
உரை
   
2469. மயில் இளம் பெடை அன்னாள் ஓர் மாதர் மாங் குடம்பை
                                                        செல்லும்
குயில் இளம் பெடை தன் ஆவிச் சேவலைக் கூவ நோக்கி
அயில் இளம் களிறு அன்னானைக் கடைக் கணித்து
                                                    அளியும் தேனும்
பயில் இளம் சோலை மாடு ஓர் மாதவிப் பந்தர் சேர்ந்தாள்.
37
உரை
   
2470. பாசி இழை ஒருத்தி ஆற்றாப் புலவியாள் பைந்தாரான்
                                                          முன்
பூசு அகில் வாசம் காலில் போக்கியும் புனைபூண் காஞ்சி
ஓசையைச் செவியில் உய்த்தும் கலவியின் உருவம் தீட்டும்
தூசினை உடுத்தும் போர்த்தும் தூது விட்டவள் போல்
                                                       நின்றாள்.
38
உரை
   
2471. வாய்ந்த நாள் மலர் கொய்து ஈவான் மெய்யில் அம் மலர்த்
                                                        தேம் தாது
சாந்த மான் மதம் போல் சிந்திக் கிடப்ப ஓர் தையல்
                                                        யாரைத்
தோய்ந்த சாந்து என்றாள் உள்ளத்து உன்னையும் சுமந்து
                                                        கொய்த
ஆய்ந்த சண்பகத் தாது என்றான் நெய் சொரி அழலின்
                                                        நின்றாள்.
39
உரை
   
2472. பிணி அவிழ் கோதையாள் ஓர் பேதை தன் பதி தன்
                                                        ஊடல்
தணிய வந்து அடியில் வீழத் தன்னிழல் அனையான்
                                                       சென்னி
மணி இடைக் கண்டு கங்கை மணாளனை ஒப்பீர் எம்மைப்
பணிவது என் என்று நக்குப் பரிவு மேல் பரிவு செய்தாள்.
40
உரை
   
2473. மதுகை வாள் ஒருவன் அங்கு ஓர் மங்கை தன் வடிவை
                                                      நோக்கிப்
பதுமமே அடிகை காந்தள் பயோதரம் கோங்கு காவிப்
புது மலர் விழிவாய் ஆம்பல் போது நும் மூரல்
                                                     ஒப்பபோது
அதனை வாய் திறந்து காட்டிப் போமின் என்று
                                                அடுத்து நின்றான்.
41
உரை
   
2474. விடைத் தனி ஏறு அன்னான் ஓர் விடலை ஓர் வேற்
                                                 கண்ணாள்முன்
கிடைத்து நும் இடத்து என் நெஞ்சம் கெட்டு வந்து
                                              ஒளித்தது அல்குல்
தடத் திடை ஒளித்ததேயோ தனத்திடை ஒளித்ததோ
                                                          பூம்
படத்தினைத் திறந்து காட்டிப் போ கெனப் பற்றிச்
                                                     சென்றான்.
42
உரை
   
2475. மாந்தளிர் அடியார் சாய்ப்ப வளைந்த பூம் சினை வண்டு                                                          அன்னார்
கூந்தலில் கிடந்த செம்மல் கோதை மேல் வீழ்ந்த கற்பின்
ஏந்திழை அவரை நீத்துப் பலர் நுகர்ந்து எச்சில் ஆக்கும்
பூந்தொடியவரைத் துய்க்கும் பேதையர் போன்ற தன்றே.
43
உரை
   
2476. புல்லி மைந்தர் பொருள் கவர்ந்தார் என
வல்லி அன்ன மடந்தையர் கொய்தலின்
அல்லி நாண்மலர் அற்றபின் கைப் பொருள்
இல்லி என்ன விளைத்தன கா எலாம்.
44
உரை
   
2477. மை உண் கண்ணியர் மைந்தரோடு அம்மலர்
கொய்யும் செல்வ நுகர்ந்து கொழுங்கணும்
மெய்யும் தோயில் கொழுநரின் வேற்றுமை
செய்யும் பொய்கை திளைப்பச் சென்றாரரோ.
45
உரை
   
2478. அன்ன மன்னவர் ஆடும் கயம் தலை
நன்னர் நீல நளினம் குமுதம் என்று
இன்ன அன்றி எழில் முல்லை சண்பகம்
பொன் அம் கோங்கமும் பூத்தது போன்றதே.
46
உரை
   
2479. குரவ ஓதியர் கயம் தலை குறுகுமுன் கயலும்
அரவும் ஆமையும் அலவனும் அன்ன அமும் அகன்ற
பருவரால் களும் இரிந்தன பகைஞர் மேல் இட்டு
வருவரேல் எதிர் நிற்பரோ வலி இழந்தவரே.
47
உரை
   
2480. பண் எனும் சொலார் குடை தொறும் பல் மலர் வீழ்ந்த
தண் எனும் திரை அலை தொறும் நிரை நிரை தாக்கல்
கண்ணும் நீலமும் முகங்களும் கமலமும் வாயும்
வண்ண ஆம்பலும் தத்தம்மின் மலைவன அனைய.
48
உரை
   
2481. குழை பாசியின் விரிந்திட மகிழ்ந்து நீர் குடையும்
மாழை உண் கணார் கொங்கையும் முகங்களும் மருங்கர்
சூழ் அரும் பொடு மலர்ந்த செந்தாமரைத் தொகுதி
ஆழ் தரங்க நீர் இடைக் கிடந்து அலைவன அனைய.
49
உரை
   
2482. தூய நீர் குடைந்து ஏரும் தன் துணைவியைத் துணைவன்
வாயும் கண்களும் வேறு உற்ற வண்ணம் கண்டு என் கண்
ஏய இன்னுயிர் அனையவள் எங்கு உளாள் என்றான்
காயும் வேல் கணாள் முலை குளிப் பாட்டினாள் கண்ணீர்.
50
உரை
   
2483. மங்கை நல்லவள் ஒருத்தி நீர் ஆடுவான் மகிழ் நன்
அங்கை பற்றினள் ஏகுவாள் அவன் குடைந்து ஏறும்
பங்கயக் கணாள் ஒருத்தியைப் பார்த்தலும் சீசீ
எங்கை எச்சில் நீர் ஆடலேன் எனக் கரை நின்றாள்.
51
உரை
   
2484. வனைந்த பைங் கழலான் புனல் ஆடலின் மார்பின்
நனைந்த குங்குமத் தலை எறி நளின மொட்டு அழுந்தப்
புனைந்த கொங்கையால் வடுப் படப் பொறித்தவள் யார்
                                                            என்று
இனைந்து அழுகினாள் நெய் சொரி எரி என ஒருத்தி.
52
உரை
   
2485. வீழ்ந்த காதலன் செய்த தீங்கு ஆகிய வேலால்
போழ்ந்த நெஞ்சினாள் புலவி நோய் பொறாள் அவன்
                                                         காண
ஆழ்ந்த நீர் இடை அமிழ்த்து வாள் போன்று அயர்ந்து
                                                        அயலே
தாழ்ந்த அன்னத்தை நோக்கிக் கை தா என இரந்தாள்.
53
உரை
   
2486. கரும்பு போல் மொழியாள் ஒரு காரிகை வதனம்
சுரும்பு சூழ் கமலங்களுள் கமலமாய்த் தோன்ற
விரும்பு காதலன் ஐயுற்று மெலிந்தனன் மெல்ல
அரும்பு முல்லை கண்டு ஐயத்தின் நீங்கிச் சென்று
                                                   அணைந்தான்.
54
உரை
   
2487. களித்த காதலன் மொக்குள் வாய்த் தன் நிழல் கண்டு
தெளித்து வாள் நகை செய்ய மாற்றாள் என்று சீறித்
தளிர்க்கை நீட்டினாள் கண்டிடல் தடவினள் சலத்துள்
ஒளித்தியோ எனா உதைத்தனள் பேதை மாது ஒருத்தி.
55
உரை
   
2488. நாறு சுண்ணம் மென் கலவையும் நானமும் தம்மின்
மாரி வீசி நின்று ஆடுவார் மாலை தாழ் அகலத்து
ஊறு பாடு அற வந்து அந்தரத்து அளிகவர்ந்து உண்ப
ஆறு செல்பவர் பொருள் வௌவும் ஆரட்டரே போல.
56
உரை
   
2489. கொய்யும் நீலமும் கமலமும் கொண்டு கொண்ட நங்கன்
எய்யும் வாளியின் எறிவரால் எறிந்திடு மலரைக்
கையினால் புடைத்து எறிந்தவர் கதிமுகம் படக்கண்டு
ஐது வாள் நகை செய்து அக மகிழ்ச்சியுள் ஆழ்வார்.
57
உரை
   
2490. வாச மென் பனி நீரோடு சுண்ணமும் வாரி
வீசுவார் இளம் பிடியொடு வேழ மா நிரை போல்
காசு உலாந் தொடி வில்லிடக் கைகளால் அள்ளிப்
பூசு சாந்து அவை அழிந்திடப் புனித நீர் இறைப்பார்.
58
உரை
   
2491. அப் பெரும் புனல் தடம் குடைந்து ஆடுவார் ஆயத்து
ஒப்ப அரும் தனி ஒருமகள் ஒருவன் தன் முகத்துத்
துப்பை வென்ற செம் துவர் இதழ்ச் செய்ய வாய்த் தூநீர்
கொப்பளித்தனள் ஆம்ப அம் தேன் எனக் குடித்தான்.
59
உரை
   
2492. ஆழம் அவ்விடைச் செல்லலை நில் என அடுத்தோர்
வேழ மன்னவன் விலக்குவான் போல் ஒரு வேல் கண்
ஏழை தன்னைக்கையால் வளைத்து ஏந்தி வண்டு அறை
                                                             தார்
சூழு மார் பணைத்து இரதி தோள் தோய்ந்தவன் ஒத்தான்.
60
உரை
   
2493. மாசுஇல் நானமும் சூடிய மாலையும் மெய்யில்
பூசு சாந்தமும் ஆரமும் பொய்கைக்குக் கொடுத்து
வாச மெய்யினில் அம்புய வசமும் மயங்க
ஆசை மைந்தரோடு இளையவர் அகன் கரை அடைவார்.
61
உரை
   
2494. தையலார் சிலர் நனைந்த நுண் தானையுள் பொதிந்த
மெய் எலாம் வெளிப் படக் கரை ஏறுவான் வெள்கி
ஐய தா பொலம் துகில் என அன்பரைக் கூய்க் கண்
செய்ய மாயனைக் கேட்கும் ஆய்ச் சிறுமியர் ஒத்தார்.
62
உரை
   
2495. உலத்தை வென்ற தோள் ஆடவர் உச்சிமேல் பொறித்த
அலத்து அகத்தொடு குங்குமம் அனைந்து செம் புனலாய்
மலர்த் தடம் குடைந்து அவர்க்கு நீராஞ்சன வட்டக்
கலத்தை ஒத்தன சுற்றி நின்றார் ஒத்த கடிக்கா.
63
உரை
   
2496. பட்டும் பல் நிறக் கலிங்கமும் பன் மணிக் கலனும்
கொட்டும் சாந்தமும் நானமும் குங்குமச் சேறும்
கட்டும் தாமமும் தமது கட்டழகு எலாம் கவர
மட்டு உண் கோதையர் ஆடவர் மனம் எலாம் கவர்ந்தார்.
64
உரை
   
2497. காவியும் கமலப் போதும் கள் ஒழுகு ஆம்பல் போதும்
வாவியுள் பூத்த போல வாடி உள் பூப்ப நோக்கி
ஏய் இரண்டு அன்ன கண்களால் அனங்கனை ஏவல்
                                                        கொள்ளும்
பூவிரி பொலம் கொம்பு அன்னார் புது மது நுகரப்
                                                        புக்கார்.
65
உரை
   
2498. பொன்னினும் வெள்ளியானும் பளிங்கினும் புலவன் செய்த
நன்னிறக் கலத்தில் கூர் வாள் நட்டு என ஆக்கிச் சேடி
மின் அனார் அளித்த தேறல் சிறு துளி விரலில் தெள்ளித்
துன்னி வீழ் களி வண்டு ஒச்சி தெண்டை அம் கனிவாய்
                                                           வைப்பார்.
66
உரை
   
2499. வள்ளத்து வாள் போல் வாக்கு மதுக் குடம் தன்பால்
                                                           பெய்த
கொள்ளைத் தேன் மதுவைக் கொள்ளைக் கொள வந்த
                                                 வள்ளம் ஈது என்று
உள்ளத்து வெகுண்டு வை வாள் ஊன்றி மார் பிடப்பது
                                                           ஒத்த
கள்ளைச் சூழ் காளை வண்டு செருச் செயல் காண்பது
                                                           ஒத்த.
67
உரை
   
2500. தணியல் உண்டு உள்ளம் சோரும் ஒருமள் தன் இயல்
                                                     உண்பான்
பிணி அவிழ் கோதையாள் ஒர் பெண் மகள் கலத்தில்
                                                      வாக்கும்
துணிமதுத் தாரை தன்னை வாள் எனத் துணிந்து பேதாய்
திணிகதிர் வாளால் வள்ளம் சிதைத்தியோ என்று நக்காள்.
68
உரை
   
2501. மலர் தொறும் சிறு தேன் நக்கித் திரிவண்டு மடவார்
                                                           தம்கைத்
தலம் எடுத்து ஓச்ச ஓடா தழி இத் தடம் சாடி மொய்ப்ப
இலம் எனப் பல்லோர் மாட்டும் இரந்து இரந்து தன்மை
                                                            நீங்கா
அலமரும் வறியோர் வைத்த நிதி கண்டு அகல்வரே யோ.
69
உரை
   
2502. உண்டவள் ஒருத்தி கள்வாய் உதிக்கும் தன் முகமும்
                                                      கண்ணும்
கண்டு தாமரைகள் வேலை முளைத்தக் கள்ளை ஆர
மொண்டு உணாப் பேதைத் தும்பி அம்மது முளரி வார்
                                                        தேன்
நுண் துளி செறிவது என்னா நொடித்துக் கை புடைத்து
                                                       நக்காள்.
70
உரை
   
2503. மங்கையாள் ஒருத்தி தான் உண்டு எஞ்சிய மதுவுள்
                                                     தோன்றும்
திங்களை நோக்கி என்னைப் பிரிவின்கண் தீயாய்ச்
                                                       சுட்டாய்
இங்கு வந்து அகப் பட்டாயே இனி விடேன் கிடத்தி
                                                        என்னா
அங்கு ஒரு வள்ளம் கொண்டு சேமித்தாள் அருந்தல்
                                                      செய்யாள்.
71
உரை
   
2504. வெவ்விய நறவம் உண்ட விளங்கு இழை ஒருத்தி கையில்
கௌவிய வாடி தன்னில் கரும் கயல் நெடும் கண் சேப்பும்
கொவ்வை வாய் விளர்ப்பு நோக்கி என் நலம் கூட்டு
                                                       உண்டு ஏகும்
ஓளவிய மனத்தான் யார் என்று அயர்கின்றாள் அயலார்
                                                       எள்ள.
72
உரை
   
2505. ஒருத்தி கள் உண்கின்றாள் தன் உருவம் அந் நறவுள்
                                                          தோன்ற
ஒருத்தி என்னுடன் வந்து உண்பாள் காண் என உண்ட
                                                          தோழி
ஒருத்தி வந்து என் செய்வாள் தன் உருவமும் நோக்கிப்
                                                          பேதாய்
ஒருத்தியோ இருவர் என்றாள் எச்சில் என்று உகுத்து
                                                          நக்காள்.
73
உரை
   
2506. சாடி உண் நறவம் உண்டாள் தன் உரு வேறு பாட்டை
ஆடியுள் நோக்கி நானோ அல்லனோ எனைத்தான்
                                                      கைக்கொண்டு
ஓடினர் பிறரும் உண்டோ உயிர் அன்னான் வந்து இங்கு
                                                      என்னைத்
தேடி என் செய்கேன் என்னைத் தேடித்தா சேடி என்றாள்.
74
உரை
   
2507. களித்தவள் ஒருத்தி நின்ற வாடியுள் கணவன்றன் பின்
ஒளித்தவன் உருவும் தானு நேர் பட உருத்து நோக்கித்
துளித்த கண்ணீர் ஆகி ஏது இலாள் தோய் தோய்ந்து
                                                        இன்பம்
குளித்தனை இருத்தியோ என்று உதைத்தனள் கோபம்
                                                      மூண்டாள்.
75
உரை
   
2508. இளம் புளிந்தயிர் விராய இன் சுவை பொதிந்த சோறு
வளம் பட விருத்தினோடும் அருந்துவார் வசந்த வீணை
களம் படும் எழாலினோடும் கைவிரல் நடாத்திக் காமன்
உளம் புகுந்து அலைப்ப வெண்ணெய்ப் பாவை போல்
                                               உருகிச் சோர்வார்.
76
உரை
   
2509. இவ் இள வேனில் காலத்து இன்னுயிர்த் துணைவி யோடும்
செவ்விய செங்கோன் நேமிச் செண்பக மாறன் ஓர் நாள்
கைவினை வல்லோன் செய்த கதிர்விடு காந்தக் குன்றில்
வெவ்விய வேடை நீப்பான் இருந்தனன் வேறு வைகி.
77
உரை
   
2510. மாந்தளிர் ஈன்று கோங்கு வண்டள அரும்பித் தண்தேன்
காந்தள் செம் கமலம் ஆம்பல் சண்பகம் கழுநீர் புத்துச்
சாய்ந்த மென் கொடியும் தானும் தனி இடத்து இருப்பான்
                                                           நேரே
வாய்ந்த ஓர் நாற்றம் தோன்ற அசைந்தது வசந்தத்
                                                           தென்றல்.
78
உரை
   
2511. வெவ்விய வேலான் வீசும் வாச மோந்து ஈது வேறு
திவ்விய வாசம் ஆக இருந்தது தென்றல் காவில்
வௌவிய வாசம் அன்று காலுக்கும் வாசம் இல்லை
எவ்வியல் வாச மேயோ இது என எண்ணம் கொள்வான்.
79
உரை
   
2512. திரும்பித்தன் தேவி தன்னை நோக்கினான் தேவி
                                                       ஐம்பால்
இரும்பித்தை வாசம் ஆகி இருந்தது கண்டில் வாசம்
சுரும்பிற்கும் தெரியாது என்னாச் சூழ்ந்து இறும் பூது
                                                       கொண்டீ
தரும்பிதைக் இயல்போ செய்கையோ என ஐயம்
                                                     கொண்டாள்.
80
உரை
   
2513. ஐயுறு கருத்தை யாவராயினும் அறிந்து பாடல்
செய்யுநர் அவர்க்கே இன்ன ஆயிரம் செம்பொன் என்றக்
கையுறை வேலான் ஈந்த பொன் கிழி கைக் கொண்டு ஏகி
மெய் உணர் புலவர் முன்னாத் தூக்கினார் வினைசெய்
                                                          மாக்கள்.
81
உரை
   
2514. வங்கத்தார் பொருள் போல் வேறு வகை அமை கேள்வி
                                                          நோக்கிச்
சங்கத்தார் எல்லாம் தம்மில் தனித்தனி தேர்ந்து தேர்ந்து
துங்கத் தார் வேம்பன் உள்ளம் சூழ் பொருள் துழாவி
                                                          உற்ற
பங்கத்தார் ஆகி எய்த்துப் படருறு மனத்தர் ஆனார்.
82
உரை
   
2515. அந்த வேலையில் ஆதி சைவரில்
வந்த மாணவன் மணம் செய் வேட்கையான்
முந்தை ஆச்சிம முயலும் பெற்றியான்
தந்தை தாய் இலான் தருமி என்று உளான்.
83
உரை
   
2516. ஒருவன் நான் முகத்து ஒருவன் மார்பு உறை
திருவன் நாடரும் தேவனாலும் உரு
அருவ நாலகன் தானைத் தன் கலி
வெருவ நாடி முன் வீழ்ந்து வேண்டுவான்.
84
உரை
   
2517. தந்தை தாய் இலேன் தனியன் ஆகிய
மைந்தனேன் புது வதுவை வேட்கையேன்
சிந்தை நோய் செயும் செல்ல தீர்ப்பதற்கு
எந்தையே இது பதம் என்று ஏத்தியே.
85
உரை
   
2518. நெடிய வேத நூல் நிறைய ஆகமம்
முடிய ஓதிய முறையினில் நிற்கு எனும்
வடி இல் இல்லற வாழ்க்கை இன்றி நின்
அடி அருச் சனைக்கு அருகன் ஆவனோ.
86
உரை
   
2519. ஐய யாவையும் அறிதியே கொலாம்
வையை நாடவன் மனக் கருத்து உணர்ந்து
உய்ய ஓர் கவி உரைத்து எனக்கு அருள்
செய்ய வேண்டும் என்று இரந்து செப்பினான்.
87
உரை
   
2520. தென்னவன் குல தெய்வம் ஆகிய
மன்னர் கொங்கு தேர் வாழ்க்கை இன் தமிழ்
சொல் நலம் பெறச் சொல்லி நல்கினார்
இன்னல் தீர்ந்து அவன் இறைஞ்சி வாங்கினான்.
88
உரை
   
2521. பொன் தனிச்சடைப் புவன நாயகன்
சொற்ற பாடல் கைக் கொண்டு தொல் நிதி
பெற்று எடுத்தவன் போன்று பீடு உறக்
கற்ற நாவலர் கழகம் நண்ணினான்.
89
உரை
   
2522. கல்வியாளர் தம் கையில் நீட்டினான்
வல்லை யாவரும் வாங்கி வாசியாச்
சொல்லின் செல்வமும் பொருளும் தூக்கியே
நல்ல நல்ல என்று உவகை நண்ணினார்.
90
உரை
   
2523. அளக்கு இல் கேள்வியார் அரசன் முன்பு போய்
விளக்கி அக்கவி விளம்பினார் கடன்
உள்ளக் கருத்து நேர் ஒத்தலால் சிரம்
துளக்கி மீனவன் மகிழ்ச்சி தூங்கினான்.
91
உரை
   
2524. உணர்ந்த கேள்வியார் இரரோடு ஒல்லை போய்ப்
புணர்ந்த ஆயிரம் பொன்னும் இன் தமிழ்
கொணர்ந்த வேதியன் கொள்க இன்று என
மணந்த தாரினான் மகிழ்ந்து நல்கினான்.
92
உரை
   
2525. வேந்தன் ஏவலால் விபுதர் தம் ஒடும்
போந்து மீண்டு அவைப் புறம்பு தூங்கிய
ஆய்ந்த பொன் கிழி அறுக்கும் நம்பியை
நேர்ந்து கீரன் நில் என விலக்கினான்.
93
உரை
   
2526. குற்றம் இக் கவிக்கு என்று கூறலும்
கற்றிலான் நெடும் காலம் வெம் பசி
உற்றவன் கலத்து உண்ணும் எல்லை கைப்
பற்ற வாடினான் பண்பு பற்றினான்.
94
உரை
   
2527. உலர்ந்த நெஞ்சு கொண்டு ஒதுங்கி நாயகன்
நலம் தரும் கழல் நண்ணினான் அவன்
மலர்ந்தபாடல் கொண்டு அறிஞர் வைகிடத்து
அலர்ந்த சிந்தை கொண்டு அடைந்த மைந்தனே.
95
உரை
   
2528. செய்யுள் கொண்டு போய்த் திருமுன் வைத்து உளப்
பையுள் கொண்ட அப் பனவன் என்னை நீ
மையுள் கண்ட இவ் வழுவுப் பாடலைக்
கையுள் நல்கினாய் கதி இலேற்கு எனா.
96
உரை
   
2529. வறுமை நோய் பிணிப்பப் பல் நாள் வழிபடு அடியேன்
                                                       நின்பால்
பெறு பொருள் இழந்தேன் என்று பேசில் என் யார்க்கும்
                                                       மேலாம்
கறை கெழு மிடற்றோய் நின்றன் கவிக்குக் குற்றம் சில்
                                                       வாழ்நாள் சிற்
அறிவு உடைப் புலவர் சொன்னால் யார் உனை மதிக்க
                                                       வல்லார்.
97
உரை
   
2530. எந்தை இவ் விகழ்ச்சி நின்னது அல்லதை எனக்கு யாது
                                                       என்னாச்
சிந்தை நோய் உழந்து சைவச் சிறுவன் இன்று இரங்க
                                                       யார்க்கும்
பந்தமும் வீடும் வேதப் பனுவலும் பயனும் ஆன
சுந்தர விடங்கன் ஆங்கு ஓர் புலவனாய்த் தோற்றம்
                                                       செய்தான்.
98
உரை
   
2531. கண்டிகை மதாணி ஆழி கதிர்முடி வயிரம் வேய்ந்த
குண்டலம் குடி கொண்டு அகத்து அழகு எலாம்
                                               கொள்ளைக் கொள்ளத்
தண் தமிழ் மூன்றும் வல்லோன் தான் எனக் குறி இட்டு
                                                         ஆங்கே
புண்டர நுதலில் பூத்துப் பொய் இருள் கிழித்துத் தள்ள.
99
உரை
   
2532. விரிகதிர்ப் படாத்திற் போர்த்த மெய்ப் பையுள் அடங்கிப்
                                                        பக்கத்து
எரி மணிக் கடகத்திண் தோள் இளையவர்
                                                 அடப்பையோடும்
குருமணிக் களாஞ்சி அம் பொன் கோடிகம் தாங்க
                                                        முத்தால்
புரிமதிக் குடைக் கீழ்ப் பொன் கால் கவரி பால் புரண்டு
                                                        துள்ள.
100
உரை
   
2533. சொல் வரம்பு இகந்த பாதம் என்பது தோன்ற வேத
நல்ல பாதுகையாய்ச் சூட நவின்றன கற்றுப் பாட
வல்லவர் மறையின் ஆறு மனு முதல் கலை போல் பின்பு
செல்ல நூல் ஆய்ந்தோர் வைகும் திருந்து அவைக்
                                           களத்தைச் சேர்ந்தான்.
101
உரை
   
2534. ஆரவை குறுகி நேர் நின்று அங்கு இருந்தவரை நோக்கி
யாரை நங் கவிக்குக் குற்றம் இயம்பினார் என்னா
                                                         முன்னம்
கீரன் அஞ்சாது நானே கிளத்தினேன் என்றான் நின்ற
சீரணி புலவன் குற்றம் யாது எனத் தேராக் கீரன்.
102
உரை
   
2535. சொல் குற்றம் இன்று வேறு பொருள் குற்றம் என்றான்
                                                            தூய
பொன் குற்ற வேணி அண்ணல் பொருள் குற்றம் என்னை
                                                            என்றான்
தன் குற்றம் வருவது ஓரான் புனைமல்ர்ச் சார்பால் அன்றி
அல் குற்ற குழற்கு நாற்றம் இல்லையே என்றான் ஐயன்.
103
உரை
   
2536. பங்கய முக மென் கொங்கைப் பதுமினி குழலோ என்ன
அங்கு அதும் அனைத்தே என்றான் ஆலவாய் உடையான்
                                                          தெய்வ
மங்கையர் குழலோ என்ன அன்னதும் மந்தாரத்தின்
கொங்கலர் அளைந்து நாரும் கொள்கையால் செய்கைத்து
                                                         என்றான்.
104
உரை
   
2537. பரவி நீ வழிபட்டு ஏத்தும் பரம் சுடர் திருக்காளத்தி
அரவு நீர்ச் சடையார் பாகத்து அமர்ந்த ஞானப்
                                                      பூங்கோதை
இரவி நீர்ங் குழலும் அற்றோ என அஃதும் அற்றே
                                                      என்னா
வெருவிலான் சலமே உற்றச் சாதித்தான் விளைவு
                                                      நோக்கான்.
105
உரை
   
2538. கற்றை வார் சடையான் நெற்றிக் கண்ணினைச் சிறிதே
                                                        காட்டப்
பற்றுவான் இன்னும் அஞ்சான் உம் பரார் பதி போல்
                                                         ஆகம்
முற்று நீர் கண் ஆனாலும் மொழிந்த நும் பாடல் குற்றம்
குற்றமே என்றான் தன் பால் ஆகிய குற்றம் தேரான்.
106
உரை
   
2539. தேய்ந்த நாள் மதிக் கண்ணியான் நுதல் விழிச் செம் தீப்
பாய்ந்த வெம்மையில் பொறாது பொன் பங்கயத் தடத்துள்
ஆய்ந்த நாவலன் போய் விழுந்து ஆய்ந்தனன் அவனைக்
காய்ந்த நாவலன் இம் எனத் திரு உருக் கரந்தான்.
107
உரை