2540. மாரனைப் பொடி கண்டவர் அந்தண மைந்தனுக்கு
ஆர நல் கனகக் கிழி ஈந்தது அறைந்தனம்
ஏர் அனத்திரள் சூழ் மலர் ஓடை இடத்தினும்
கீரனைக் கரை ஏற்றிய வாறு கிளத்துவாம்.
1
உரை
   
2541. தாழ்ந்த வேணியன் நெற்றி முளைத்த அழல் கணால்
போழ்ந்த நாவலன் ஆடக பங்கயப் போய்கைவாய்
வீழ்ந்து அரும் படர் வேலையில் வீழ்ந்தனன் விம்முறச்
சூழ்ந்த நாவலர் கண்டு போறாது துளங்குவார்.
2
உரை
   
2542. ஏன்ற வேந்தன் இலாக்குடி ஈட்டமும் மின் கதிர்
கான்ற நாயக மாமணி போகிய கண்டியும்
ஆன்ற நானம் இலாதவர் கல்வியும் ஆனதே
சான்ற கீரன் இலாத அவை கூடிய சங்கமே.
3
உரை
   
2543. ஐய சொல் பொருள் தன் வடிவானவர் ஆலவாய்
மை தழைத்த மிடற்றினார் தம்மொடும் வாது தான்
செய்த இப்பிழையோ பெரிது எப்படி தீருமோ
உய்வது அற்பதமே என யாவரும் உன்னினார்.
4
உரை
   
2544. எய்தி வெள்ளி மலை பெயர்த்தானும் இறுத்த தன்
கையில் வீணைத் தொட்டு இன்னிசை பாடக் கனிந்தவன்
செய்த தீங்கு பொறுத்ததும் அன்றித் திண் தேரோடும்
மொய் கொள் வாளும் கொடுத்தனன் புண்ணிய மூர்த்தியே.
5
உரை
   
2545. யாவராலும் அகற்ற அரிது இப்பிழை யாவர்க்கும்
தேவர் ஆம் அவரே திரு உள்ளம் திரும்பினால்
போவதே இதுவே துணிபு என்று புகன்று போய்ப்
பாவலோர் பரன் தாள் நிழலில் பணிந்து ஏத்துவார்.
6
உரை
   
2546. திருத்தனே சரணம் சரணம் மறைச் சென்னி மேல்
நிருத்தனே சரணம் சரணம் நிறை வேத நூல்
அருத்தனே சரணம் சரணம் திரு ஆலவாய்
ஒருத்தனே சரணம் சரணங்கள் உனக்கு நாம்.
7
உரை
   
2547. பாயும் மால் விடை மேல் வருவோய் பல் உயிர்க்கு எலாம்
தாயும் தந்தையும் ஆகும் நின் தண் அளி தாமரைக்கு
ஏயும் மாதவன் போல் அல்ல தீய இயற்றினார்க்கு
ஆயும் இன்பமும் துன்பமும் ஆக்குவது ஆதலால்.
8
உரை
   
2548. அத்த கற்ற செருக்கின் அறிவழி கீரனின்
வித்தகக் கவியைப் பழுது என்ற விதண்டையான்
மத்தகக் கண் விழித்து வெதுப்பின் மலர்ந்த பொன்
முத்தகக் கமலத்து இடை வீழ முடுக்கினாய்.
9
உரை
   
2549. இருள் நிறைந்த மிடற்று அடிகேள் இனி இப்பிழை
கருணை செய்து பொறுத்து அருள் என்று கபிலனும்
பரணனும் முதல் ஆகிய பாவலர் யாவரும்
சரணம் என்று விழுந்து இரந்தார் அடி சாரவே.
10
உரை
   
2550. அக்கீர வேலை ஆலம் அயின்ற எம் கருணை வள்ளல்
இக்கீர மழலைத் தீம் சொல் இறைவியோடு எழுந்து போந்து
நக்கீரன் கிடந்த செம் பொன் இனப் பூந் தடத்து ஞாங்கர்ப்
புக்கீர மதுரத் தீம் சொல் புலவர் தம் குழாத்துள் நின்றான்.
11
உரை
   
2551. அனல் கணான் நோக்கினான் பின் அருள் கணால் நோக்க                                                               வாழ்ந்த
புனல் கணே கிடந்த கீரன் பொறி புலன் கரணம் எல்லாம்
கனல் கணார் தமவே யாகக் கருணை மா கடலில் ஆழ்ந்து
வினைக் கணே எடுத்த யாக்கை வேறு இல் அன்பு உருவம்                                                               ஆனான்.
12
உரை
   
2552. போதையார் உலகம் ஈன்ற புனிதையார் பரஞானப் பூம்
கோதையார் குழற்குத் தீங்கு கூறிய கொடிய நாவின்
தீதை யார் பொறுப்பரேயோ அவர் அன்றித்
                                                  திருக்காளத்திக்
காதையார் குழையினாரைக் காளத்தி கயிலை என்னா.
13
உரை
   
2553. எடுத்த சொல் மாறி மாறி இசைய நேரிசை வெண்பாவால்
தொடுத்த அந்தாதி சாத்தத் துணைச் செவி மடுத்து நேர்
                                                               வந்து
அடுத்தவன் கையைப் பற்றி அகன் கரை ஏற்றினார் தாள்
கொடுத்து எழு பிறவி வேலைக் கொடுகரை ஏற்ற வல்லார்.
14
உரை
   
2554. கை தந்து கரையேறிட்ட கருணை அம் கடலைத் தாழ்ந்து
மை தந்த கயல் கணாளை வந்தித்துத் தீங்கு நன்கு
செய் தந்தோர்க்கு இகலும் அன்பும் செய்தமை பொருளாச்
                                                          செய்யுள்
பெய் தந்து பாடுகின்றான் பிரான் அருள் நாடுகின்றான்.
15
உரை
   
2555. அறன் இலான் இழைத்த வேள்வி அழித்த பேர் ஆண்மை
                                                         போற்றி
மறன் இலாச் சண்டிக்கு ஈந்த மாண் பெரும் கருணை
                                                         போற்றி
கறுவி வீழ் கூற்றைக் காய்ந்த கனைகழல் கமலம்
                                                         போற்றி
சிறுவனுக்கு அழியா வாழ் நாள் அளித்து அருள் செய்தி
                                                         போற்றி.
16
உரை
   
2556. சலந்தரன் உடலம் கீண்ட சக்கரப் படையாய் போற்றி
வலம் தரும் அதனை மாயோன் வழிபடக் கொடுத்தாய்
                                                        போற்றி
அலர்ந்த செம் கமலப் புத்தேள் நடுச் சிரம் அரிந்தாய்
                                                        போற்றி
சிலந்தியை மகுடம் சூட்டி அரசு அருள் செல்வம்
                                                        போற்றி.
17
உரை
   
2557. திரிபுரம் பொரிய நக்க சேவகம் போற்றி மூவர்க்கு
அருளிய தலைமை போற்றி அனங்கனை ஆகம் தீய
எரி இடு நயனம் போற்றி இரதி வந்து இரப்ப மீளக்
கரியவன் மகனுக்கு ஆவி உதவிய கருணை போற்றி.
18
உரை
   
2558. நகைத்தட வந்த வந்த நகுசிரம் திருகி வாங்கிச்
சிகைத்திரு முடிமேல் வைத்த திண் திறல் போற்றி கோயில்
அகத்து அவி சுடரைத் தூண்டும் எலிக்கு அரசாள மூன்று
சகத்தையும் அளித்த தேவர் தம்பிரான் சரணம் போற்றி.
19
உரை
   
2559. பொருப்பு அகழ்ந்து எடுத்தோன் சென்னி புயம் இற
                                              மிதித்தாய் போற்றி
இருக்கு இசைத்து அவனே பாட இரங்கி வாள் கொடுத்தாய்
                                                       போற்றி
தருக்கொடும் இருவர் தேடக் அழல் பிழம்பு ஆனாய்
                                                       போற்றி
செருக்கு விட்டு அவரே பூசை செய்ய நேர் நின்றாய்
                                                       போற்றி.
20
உரை
   
2560. பரும் கை மால் யானை ஏனம் பாய் புலி அரிமான் மீனம்
இரும் குறள் ஆமை கொண்ட இகல் வலி கடந்தாய்
                                                        போற்றி
குரங்கு பாம்பு எறும்பு நாரை கோழி ஆண் அலவன்
                                                        தேரை
கருங்குரீஇ கழுகின் அன்புக்கு இரங்கிய கருணை
                                                        போற்றி.
21
உரை
   
2561. சாலநான் இழைத்த தீங்குக்கு என்னையும் தண்டம் செய்த
கோலமே போற்றி பொல்லாக் கொடியனேன் தொடுத்த புன்
                                                          சொல்
மாலை கேட்டு என்னை ஆண்ட மலைமகள் மணாள
                                                          போற்றி
ஆலவாய் அடிகள் போற்றி அம்மை நின் அடிகள்
                                                          போற்றி.
22
உரை
   
2562. ஆவல் அலந்தனே அடியனேற்கு அருளல் என்னாக்
கோவமும் பிரசாதமும் குறித்து உரை பனுவல்
பா அலங்கலால் பரனையும் பங்கில் அம் கயல் கண்
பூவை தன்னையும் முறை முறை போற்றி என்று ஏத்தா.
23
உரை
   
2563. தேவ தேவனானப் பின் பெரும் தேவ பாணியொடும்
தாவில் ஏழ் இசை ஏழுகூற்று இருக்கையும் சாத்திப்
பூவர் சேவடி சென்னி மேல் பூப்ப வீழ்ந்து எழுந்தான்
பாவலோர்களும் தனித்தனி துதித்தனர் பணிந்தார்.
24
உரை
   
2564. துதித்த கீரனுக்கு இன்னருள் சுரந்து நீ முன் போல்
மதித்த நாவலர் குழாத்து இடை வதி என மறைநூல்
உதித்த நாவினார் கருணை செய்து உருக்கரந்து அயன்
                                                              சேய்
விதித்த கோயில் புக்கு அமர்ந்தனர் விளங்கு இழையோடும்.
25
உரை
   
2565. கற்ற கீரனும் கலைஞரும் கழக மண்டபத்தில்
உற்ற ஆடகக் கிழி அறுத்து அந்தணற்கு உதவி
கொற்ற வேந்தனும் வரிசைகள் சில செயக் கொடுப்பித்து
அற்றம் நீங்கிய கல்வியின் செல்வராய் அமர்ந்தார்.
26
உரை
   
2566. சம்பக மாறன் என்னும் தமிழ்நர்தம் பெருமான் கூடல்
அம்பகல் நுதலினானை அங்கயல் கண்ணி னாளை
வம் பக நிறைந்த செந்தா மரை அடி வந்து தாழ்ந்து
நம்பக நிறைந்த அன்பால் பல் பணி நடாத்தி வைகும்.
27
உரை