2611. குடைக்காடன் பசிக்கு அன்னக் குழி அருத்தி வேட்கை
                                               அறக் கொடுத்த கங்கைச்
சடைக் காடன் புலவர் இகம் தணிவித்த முறை இது மேல்
                                                      தன்னைப் பாடும்
தொடைக் காடன் பகன் திகழ்ந்த தென்னவனை முனிந்து
                                               தன்னைத் தொழுது போன
இடைக் காடன் உடன் போய்ப் பின்பு எழுந்து அருளிப்
                              பிணக்கு அறுத்த இயல்பு சொல்வாம்.
1
உரை
   
2612. இந்திரன் தன் பழி துரத்தி அரசு அளித்துப் பின்பு கதி
                                                       இன்பம் ஈந்த
சுந்தரன் பொன் அடிக்கு அன்பு தொடுத்து நறும்
                                      சண்பகத்தார் தொடுத்துச் சாத்தி
வந்தனை செய் திருத்தொண்டின் வழிக்கு ஏற்பச் சண்பகப்
                                                       பூமாற வேந்தன்
அந்தர சூட மணியாம் சிவ புரத்து நிறை செல்வம்
                                                 அடைந்தான் இப்பால்.
2
உரை
   
2613. ஆற்றல் மிகு பிரதப சூரியன் வங்கிசத்துவன் அளவு இல்
                                                       சீர்த்தி
சாற்ற அரிய இரிபும மருத்தனன் சோழ வங்கி சாந்தகன்
                                                       தான் வென்றி
மாற்ற அரிய புகழ்ச் சேர வங்கி சாந்தகன் பாண்டி வங்கி
                                                       கேசன்
தோற்றம் உறு பரித்தேர் வங்கிச் சிரோமணி பாண்டீச் சுரன்
                                                       தான் மன்னோ.
3
உரை
   
2614. துணிவுடைய குலத்துவசன் வங்கிச பூடண மாறன்
                                                     சோம சூடா
மணிகுல சூடா மணியே இராச சூடா மணியே மாற்றார்
                                                         போற்றிப்
பணிய வரும் பூப சூடா மணியே குலேச பாண்டியனே
                                                         என்னக்
கணிதம் உறு பதினைவர் வழி வழி வந்து உதித்து நிலம்
                                                     காவல் பூண்டோர்.
4
உரை
   
2615. அத்தகைய பாண்டியருள் குலேச பாண்டியன் என்னும்
                                                   அரசன் தோள் மேல்
வைத்தவன் இத்தலம் புரபோன் இலக்கணமும் இலக்கியமும்
                                                   வரம்பு கண்டோன்
எத்தகைய பெருநூலும் எல்லை கண்டோன் ஆதலினால்
                                                   இவனுக்கு ஏற
முத்தமிழோர் பயில் சங்கம் இடங்கொடுத்தது அனைய மணி
                                                   முழவுத் தோளான்.
5
உரை
   
2616. கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது
                                            உணர்ந்த கபிலன் தன் பால்
பொழிந்த பெரும் காதல் மிகு கேண்மையினான் இடைக்
                                            காட்டுப் புலவன் தென் சொல்
மொழிந்து அரசன் தனைக் காண்டும் எனத் தொடுத்த
                                            பனுவலோடு மூரித் தீம் தேன்
வழிந்து ஒழுகு தாரனைக் கண்டு தொடுத்து உரைப்
                                            பனுவல் வாசித்தான் ஆல்.
6
உரை
   
2617. வழுக்காத சொல் சுவையும் பொருள் சுவையும் பகிர்ந்து
                                            அருந்த வல்லோன் உள்ளத்து
அழுக்காற்றால் சிரம் துளக்கான் அகம் மகிழ்ச்சி சிறிது
                                            முகத்து அலர்ந்து காட்டான்
எழுக்காயும் திணி தோளான் ஒன்றும் உரையான் வாளா
                                                 இருந்தான் ஆய்ந்த
குழுக்காதன் நண்புடையான் தனை மானம் புறம் தள்ளக்
                                                 கோயில் புக்கான்.
7
உரை
   
2618. சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே
                                                  தன்னைச் சார்ந்தோர்
நல் நிதியே திரு ஆலவாய் உடைய நாயகனே நகுதார்
                                                          வேம்பன்
பொன் நிதி போல் அளவு இறந்த கல்வியும் மிக்கு உளன்
                                                  என்று புகலக் கேட்டுச்
சொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் சிறிது
                                                  முடி துளக்கான் ஆகி.
8
உரை
   
2619. பரிவாயின் மொழிதொடுத்து வருணித்தோர்க்கு அகம்
                                              மகிழ்ந்தோர் பயனும் நல்கா
விரிவாய தடம் கடலே நெடும் கழியே அடும் கான
                                                  விலங்கே புள்ளே
பொரிவாய பராரை மரநிரையே வான் தொடு குடுமிப்
                                                  பொருப்பே வெம்பும்
எரிவாய கொடும் சுரமே என இவற்று ஓர் அஃரிணை
                                              ஒத்து இருந்தான் எந்தாய்.
9
உரை
   
2620. என்னை இகழ்தனனோ சொல் வடிவாய் நின்னிடம் பிரியா
                                                     இமையப் பாவை
தன்னையும் சொல் பொருளான உன்னையுமே இகழ்ந்தனன்
                                           என் தனக்கு ஆகியது என்னா
முன்னை மொழிந்து இடைக் காடன் தணியாத முனி ஈர்ப்ப
                                                     முந்திச் சென்றான்
அன்ன உரை திருச்செவியின் ஊறுபாடு என உறைப்ப
                                                     அருளின் மூர்த்தி.
10
உரை
   
2621. போன இடைக் காடனுக்கும் கபிலனுக்கும் அகத்து உவகை
                                                  பொலியும் ஆற்றான்
ஞான மயம் ஆகிய தன் இலிங்க உரு மறைத்து உமையா
                                                  நங்கை யோடும்
வானவர் தம் பிரான் எழுந்து புறம் போய் தன் கோயிலின்
                                                  நேர் வடபால் வைகை
ஆன நதித் தென்பால் ஓர் ஆலம் கண்டு அங்கண் இனிது
                                                  அமர்ந்தான் மன்னோ.
11
உரை
   
2622. சங்கவான் தமிழ்த் தெய்வப் புலவரோடும் உடன் எழுந்து
                                                  சைல வேந்தன்
மங்கை நாயகன் போன வழிபோய் அங்கு இருந்தார் அவ்
                                                  வழி நாள் வைகல்
கங்குல்வாய் புலரவரும் வை கறையில் பள்ளி உணர்
                                                  காலாத்து எய்தி
அங்கண் நாயகன் அடியார் சேவிப்பார் இலிங்க உரு
                                                  அங்குக் காணார்.
12
உரை
   
2623. என்ன அதிசயமோ ஈது என்று அயிர்த்தார் இரங்கினார்
                                                      இதனை ஓடி
மன்னவனுக்கு அறிவிப்பான் வேண்டும் எனப் புறப்பட்டு
                                                      வருவார் ஆவி
அன்னவரைப் பிரிந்து உறையும் அணங்கு அனையார்
                                            எனவும் மலர் அணங்கு நீத்த
பொன் அவிர் தாமரை எனவும் புலம்பு அடைந்து பொலிவு
                                            அழிந்த புரமும் கண்டார்.
13
உரை
   
2624. அரசன் இடை புகுந்து உள்ளம் நடு நடுங்கி நா உணங்கி
                                                 அரசே யாம் ஒன்று
உரை செய அஞ்சுதும் உங்கள் நாயகனைத் திருப்பள்ளி
                                                 உணர்ச்சி நோக்கி
மரை மலர் சேவடி பணியப் புகுந்தனம் இன்று ஆங்கு
                                           அவன் தன் வடிவம் காணேம்
புரமும் நனி புலம் படைந்தது என்று அழல் வேல் எனச்
                                                 செவியில் புகுதலோடும்.
14
உரை
   
2625. வழுதி அரியணையிலிருந்து அடி இற வீழ் பழுமரம் போல்
                                                   மண்மேல் யாக்கை
பழுது உற வீழ்ந்து உயிர் ஒடுங்க அறிவு ஓடுங்கி மண்
                                       பாவை படிந்து ஆங்கு ஒல்லைப்
பொழு கிடந்து அறிவு சிறிது இயங்க எழுந்து அஞ்சலிக்
                                                   கைப் போது கூப்பி
அழுது இரு கண்ணீர் வெள்ளத்து ஆழ்ந்து அடியேன் என்
                              பிழைத்தேன் அண்ணா அண்ணால்.
15
உரை
   
2626. கொலையினை ஓர் அவுணர் புரம் நோடி வரையில்
                                             பொடியாகக் குனித்த மேருச்
சிலையினையோ பழைய சிவ புரத்தினையோ அருவி மணி
                                                 தெறிக்கும் வெள்ளி
மலையினையோ தம்மை மறந்து உனை நினைப்பார்
                                       மனத்தினையோ வாழ்த்தும் வேதத்
தலையினையோ எங்கு உற்றாய் எங்கு உற்றாய் என்று
                                                 என்று தளரும் எல்லை.
16
உரை
   
2627. சிலர் வந்து மன்னா ஓர் அதிசயம் கண்டனம் வைகைத்
                                                         தென் சாராக
அலர் வந்தோன் படைத்த நாள் முதல் ஒரு காலமும்
                                               கண்டது அன்று கேள்வித்
தலை வந்த புலவரொடு ஆலவய் உடைய பிரான் தானே
                                                         செம்பொன்
மலைவந்த வல்லியொடும் வந்து இறை கொண்டு உறை
                                               கின்றான் மாதோ என்றார்.
17
உரை
   
2628. அவ்வுரை தன் செவி நுழைந்து புகுந்து ஈர்ப்ப எழுந்து
                                               அரசன் அச்சத்து ஆழ்ந்து
தெவ்வர் முடித் தொகை இடறும் கழல் காலான் அடந்து
                                               ஏகிச் செழுநீர் வைகை
கௌவை நெடும் திரைக் கரத்தால் கடிமலர் தூய உய்ப்ப
                                          பணியத் தென் கரைமேல் வந்து
மௌவல் இள முகை மூரல் மாதி னொடும் இருக்கின்ற
                                               மணியைக் கண்டான்.
18
உரை
   
2629. படர்ந்து பணிந்து அன்பு உகுக்கும் கண்ணீர் சோர்ந்து
                                         ஆனந்தப் பௌவத்து ஆழ்ந்து
கிடந்து எழுந்து நாக்குழறித் தடுமாறி நின்று இதனைக்
                                                  கிளக்கும் வேதம்
தொடர்ந்து அறியா அடி சிவப்ப நகர்ப் புலம்ப உலகு
                                         ஈன்ற தோகை யோடு இங்கு
அடைந்து அருளும் காரணம் என் அடியேனால் பிழை
                                                  உளதோ ஐயா ஐயா.
19
உரை
   
2630. அல்லதை என்று அமரால் என் பகைஞரால் கள்வரால்
                                                 அரிய கானத்து
எல்லை விலங்கு ஆதிகளால் இடையூறு இன் தமிழ்
                                                 நாட்டில் எய்திற்றலோ
தொல்லை மறையவர் ஒழுக்கம் குன்றினரோ தவம்
                                                 தருமம் சுருங்கிற்றாலோ
இல்லறனும் துறவறனும் பிழைத்தனவோ யான் அறியேன்
                                                 எந்தாய் எந்தாய்.
20
உரை
   
2631. கள் ஏறு கடுக்கை நறும் சடையானே போற்றி பெரும்
                                                      கருணை போற்றி
வெள்ஏறு கொடி உயர்த்த விடையானே போற்றி அருள்
                                                      விகிர்தா போற்றி
புள் ஏறு கொடி உயர்த்த புனிதன் அயன் அன்று தேறாத
                                                      புனிதா போற்றி
வள் ஏறு சிறு குழவி மதி நுதல் அம் கயல் கண்ணி
                                                      மணாள போற்றி.
21
உரை
   
2632. பாத மலர் இணை போற்றி பன்னிரண்டு கையானைப்
                                                     பயந்தாய் போற்றி
வேத முடி கடந்த பர ஞானத்தில் ஆனந்த விளைவே
                                                        போற்றி
போத வடிவாய் நால்வர்க்கு அசைவிறந்து நிறைந்த பரம்
                                                     பொருளே போற்றி
மாதவள நீறு அணிந்த மன்னா அம் கயல் கண்ணி
                                                     மணாள போற்றி.
22
உரை
   
2633. பொக்கம் உடையார் செய்யும் பூசை தவம் கண்டு நகும்
                                                   புராண போற்றி
தக்கன் மகம் பொடி ஆகத் திருப் புருவம் நெரித்த
                                             கொடும் தழலே போற்றி
செக்கமலக் கண்ணிடந்த கண்ணனுக்குத் திகிரி அருள்
                                                   செல்வா போற்றி
மைக் குவளை அனைய மணிகண்ட அம் கயல் கண்ணி
                                                   மணாள போற்றி.
23
உரை
   
2634. தென்னவன் இன்ன வண்ணம் ஏத்தினான் செம் பொன்
                                                           கூடல்
மன்னவன் கேட்டா ஆகாய வாணியால் வைகை நாட
உன்னது சோத்த நாம் கேட்டு உவந்தனம் இனிய தாயிற்று
இன்னம் ஒன்று உளது கேட்டி என்றனன் அருளிச்
                                                        செய்வான்.
24
உரை
   
2635. இயம்ப அரும் பதிகள் தம்முள் ஆலவாய் ஏற்றம் ஈங்குச்
சயம்புவாய் அனந்தம் உள்ள தானவர் இயக்கர் சித்தர்
வயம் புரி அரக்கர் வானோர் முனிவரர் மனிதர் உள்ளார்
நயம் பெற விதியால் கண்ட நம் குறி அனந்தம் உண்டு
                                                           ஆல்.
25
உரை
   
2636. அக் குறிகளின் மேம் பட்ட குறி அறுபத்து நான்காம்
இக் குறிகளின் மேம் பட்ட குறிகள் எட்டு இனைய எட்டுத்
திக்கு உறை வானோர் பூசை செய்தன அவற்றில் யாம்
                                                         வந்து
புக்கு உறை குறி நம் தோழன் பூசித்த குறிய தாகும்.
26
உரை
   
2637. அறைந்தவித் தெய்வத்து ஆன அனைத்தும் ஓர் ஊழிக்
                                                        காலத்து
இறந்த நம் தோழன் கண்ட இலிங்கமாம் அதனால் இங்கே
உறைந்தனம் உறைதலாலே உத்தர ஆலவாய் ஆய்ச்
சிறந்திடத் தகுவது இன்று முதல் இந்தத் தெய்வத் தானம்.
27
உரை
   
2638. ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போ
                                                        தேனும்
நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு
தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே
ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால்
                                                  வந்தேம் என்னா.
28
உரை
   
2639. பெண்நினைப் பாகம் கொண்ட பெரும் தகைப் பரம யோகி
விண் இடை மொழிந்த மாற்றம் மீனவன் கேட்டு வானோர்
புண்ணிய சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை அன்றோ
எண்ணிய பெரியோர்க்கு என்னா ஏத்தினான்இறைஞ்சி 
                                                          னானே.
29
உரை
   
2640. அடி பணிந்து ஏத்தினானை அருள் சுரந்து அசையு
                                                          மின்னுக்
கொடி அணி மனையில் போக்கிக் கோமன வல்லியோடும்
உடன் உறை புலவரோடு ஒல்லை தன் கோயில் புக்கான்
வட திரு ஆல வாயில் வந்து வீற்று இருந்த வள்ளல்.
30
உரை
   
2641. மின் மதிச் சடையினான்பின் அடைந்து போய் விடை
                                                        கொண்டு ஏகும்
மன்னவன் தன்னைப் பாடி வந்தவன் தன்னை மாட்சித்
தன்மை சால் சங்க வாணர் தம் மொடும் கொடுபோய்
                                                        என்றும்
பொன்மகள் காணி கொண்ட புரிசை சூழ் கோயில் புக்கான்.
31
உரை
   
2642. விதி முறை கதலி பூகம் கவரி வால் விதானம் தீபம்
புதிய தார் நிறை நீர்க் கும்பம் கதலிகை புனைந்த மன்றல்
கதிர்மணி மாடத் தம் பொன் சேக்கை மேல் கற்றோர் சூழ
மதி புனை காடன் தன்னை மங்கல அணி செய்து ஏற்றி.
32
உரை
   
2643. சிங்கமான் சுமந்த பொன் அம் சேக்கை மேல் இருந்து
                                                        வெள்ளைக்
கொங்கு அவிழ் தாமம் தூசு குளிர் மணி ஆரம் தாங்கி
மங்கல முழவம் ஆர்ப்ப மறையவர் ஆக்கம் கூற
நங்கையர் பல்லாண்டு ஏத்த நல் மொழிப் பனுவல் கேட்டு.
33
உரை
   
2644. அறிவுடைக் காடனுக்கும் அருமை மாண் புலமை
                                                        யோர்க்கும்
முறைமையால் ஆரம் தூசு முகிழ் முலைக் கொடியின்
                                                        அன்னார்
நிறை நிதி வேழம் பாய்மான் விளை நிலம் நிரம்ப நல்கி
அறை கழல் காலில் பின்னே ஏழடி நடந்து இதனை
                                                        வேண்டும்.
34
உரை
   
2645. புண்ணியப் புலவீர் யான் இப்போது இடைக் காடனார்க்குப்
பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க என பரவித்
                                                         தாழ்ந்தான்
நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்
தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா.
35
உரை
   
2646. இன்னமும் ஆலவாய் எம் இறைவன் கருணை நோக்கால்
பன்னரும் புகழ்மை குன்றாப் பாக்கியம் உனக்கு உண்டாக
என்ன நல் வாக்கம் கூறி ஏகினார் ஆக அந்தத்
தென்னவன் குலேசன் செய்த தவம் உருத் திரிந்தால்
                                                          என்ன.
36
உரை
   
2647. எரி மருத்து அவனி முன்னா எண் வகை மூர்த்தி அன்பு
புரி மருத்துவனைச் சூழ்ந்த பொரு பழி துடைத்தோன்
                                                          சோதி
விரிமருத்து உடல் வான் திங்கள் மிலைந்தவன் அருளின்
                                                          வந்தான்
அரி மருத்தனன் ஆம் தென்னன் அரிக் குருளை
                                                          அன்னான்.
37
உரை
   
2648. பரிசிலைப் புலவருக்கு அருள் குலேசன் பல பகல் கழீஇத்
திரி மருப்பு இரலை வெம் மழு எடுத்தவன் மதிச்
                                                     சென்னிமேல்
வரிசிலைப் படை பொறித்தவன் எனப் பெறு வர
                                                     மைந்தனாம்
அரி மருத் தனன் இடத்து அவனி வைத்து அரன் அடி
                                                     எய்தினான்.
38
உரை