2713. கலைவீசு மதிச் சடையோன் கடல் துறைவன் தலைச்
                                                       சென்று
வலைவீசி அவன் பாச வலை வீசும் பரிசு இது மேல்
அலை வீசும் புனல் வாதவூரரை வந்து அவிச்சை வலி
நிலை வீசிப் பணி கொண்ட நெறி அறிந்த படி
                                                       மொழிவாம்.
1
உரை
   
2714. தொடுத்த வறுமையும் பயனும் தூக்கி வழங்குநர் போல
அடுத்த வயல் குளம் நிரப்பி அறம் பெருக்கி அவனி
                                                           எலாம்
உடுத்த கடல் ஒருவர்க்கும் உதவாத உவரி என
மடுத்து அறியாப் புனல் வைகைக் கரை உளது வாதவூர்.
2
உரை
   
2715. விழவு அறா நகர் எங்கும் விருந்து அறா மனை எங்கும்
மழ அறா மகிழ் எங்கும் மறை அறா கிடாஇ எங்கும்
முழவு அறா அரங்கு எங்கும் முகில் அறா பொழில் எங்கும்
உழவு அறா வயல் எங்கும் உடம்பு அறா உயிர் என்ன.
3
உரை
   
2716. ஆய வளம் பதியதனில் அமாத்தியரில் அரு மறையின்
தூய சிவ ஆகம நெறியின் துறை விளங்க வஞ்சனையான்
மாயன் இடும் புத்த இருள் உடைந்தோட வந்து ஒருவர்
சேய இளம் பரிதி எனச் சிவன் அருளால் அவதரித்தார்.
4
உரை
   
2717. பேர் வாத ஊரர் எனப் பெற்றுத் தம் பிறங்கு மறைச்
சார்வாய நூல் வழியால் சடங்கு எல்லாம் நிலை வெய்தி
நீர்வாய இளமதி போல் நிரம்புவார் வேத முதல்
பார்வாய் எண் எண் கலையும் பதினாறு ஆண்டினில்
                                                       பயின்றார்.
5
உரை
   
2718. இத்தகை யோர் நிகழ் செய்தி அறிந்தவர் சென்று இயம்ப
                                                           அரி
மர்த்தன பாண்டியன் கேட்டு வரவழைத்து மற்று அவரைச்
சித்தம் மகிழ் வரிசையினால் சிறப்பு அளித்துத் தன்
                                                           கோயில்
வித்தக நல் மதி அமைச்சின் தொழில் பூட்டி மேம்
                                                           படுத்தான்.
6
உரை
   
2719. செற்றம் மிகும் கருவிகளின் திறல் நூலும் மனு வேந்தன்
சொற்ற பெரும் தொல் நூலும் துளக்கம் அற விளக்கம்
                                                            உறக்
கற்று அறிந்தோர் ஆதலினால் காவலற்குக் கண் போன்ற
முற்றும் உணர்ந்த அமைச்சரினும் முதல் அமைச்சராய்
                                                            நிகழ்வார்.
7
உரை
   
2720. புல்லாதார் முரண் அடக்கிப் பொருள் கவர் வார் என்பது
                                                           எவன்
செல்லாத பல் வேறு தீபத்துச் செம் கோன்மை
வல்லாரும் தத்தமதேத்து அரிய பொருள் வரவிடுத்து
நல்லாராய் ஒப்புரவு நட்பு அடைய நடக்கின்றார்.
8
உரை
   
2721. அண்ணல் அரிமருத்தனனுக்கு அடல் வாதவூர் அமைச்சர்
கண்ணும் இடும் கவசமும் போல் காரியம் செய்து
                                                          ஒழுகுவார்
தண் அளி செய்து அவனி எலாம் தம் கிளைபோல் குளிர்
                                                          தூங்க
வண்ண மதிக் குடை நிழற்றி முறை செய்து வாழும் நாள்.
9
உரை
   
2722. மெய்ம்மை ஆம் பொருள் விவேக மும் வேறு பாடு ஆய
பொய்ம்மை ஆம் பொருள் விவேகமும் புந்தியுள் தோன்ற
இம்மை ஆசையும் மறுமையில் ஆசையும் இகந்து
செம்மை ஆகிய கருத்தராய்ப் பரகதி தேர்வார்.
10
உரை
   
2723. புத்தர் ஆதியோர் புறவுரை நெறிகளும் பொய்யா
நித்த வேத நூல் தழுவிய அகவுரை நெறியும்
சித்தம் மாசு அறுத்து அரன் அருள் தெளிவியாது
                                                        அதனான்
மித்தை ஆணவத் தொடக்கு அறாதில்லை ஆம் வீடும்.
11
உரை
   
2724. பத்தி செய்து அரன் அருள் பெரும் பத்தருக்கு அன்றி
முத்தி எய்தரிது என மறை மொழிவது அப் பொது நூல்
சத்தியாப் பொருள் தெளிவு எலாம் சத்திநி பாதர்க்கு
உய்த்து உணர்த்துவது ஆகமம் என்பர் மெய் உணர்ந்தோர்.
12
உரை
   
2725. வேத ஆகமச் சென்னியில் விளை பொருள் அப் பேதம்
பேதம் ஆகிய பிணக்கு அறுத்து இருள் பிணி அவிழ்த்து
நாதன் ஆகிய தன்னையும் என்னையும் நல்கும்
போதன் ஆகிய குருபரன் வருவது எப்பொழுது ஆல்.
13
உரை
   
2726. கரவு இலாத பேர் அன்பினுக்கு எளிவரும் கருணைக்
குரவனார் அருள் அன்றி இக் கொடிய வெம் பாசம்
புரை இல் கேள்வியால் கடப்பது புணையினால் அன்றி
உரவு நீர்க்கடல் கரம் கொடு நீந்துவது ஒக்கும்.
14
உரை
   
2727. என்று அவ் வாதவூர் மறையவர் இன்ப வீடு எய்தக்
துன்றும் ஆசையால் தொடக்கு உண்டு சுருதி ஆகம நூல்
ஒன்று கேள்வியோர் வருந்தொறும் உணர்ந்தவர் இடைத்
                                                               தாம்
சென்று காண் தொறும் அளவளாய்த் தேர்குவர் ஆனார்.
15
உரை
   
2728. எண்ணிலார் இடத்து அளந்து அளந்து அறிபொருள்
                                                     எல்லாம்
உண்ணி நீர் விடாய்க்கு உவரி நீர் உண்டவர் ஒப்ப
அண்ணலார் அகத்து அமைஉறாது அரசனுக்கு உயிரும்
கண்ணுமாய் அமைச்சு உரிமையும் கை விடாது இயல்வார்.
16
உரை
   
2729. கள்ளக் காதலன் இடத்து அன்பு கலந்து வைத்து ஒழுகும்
உள்ளக் காரிகை மடந்தை போலும் உம்பரைக் காப்பான்
பள்ளக் காரி உண்டவனிடத்து உள்ளன்பு பதிந்து
கொள்ளக் காவலன் இடைப் புறத் தொழிலும்
                                                  உட்கொண்டார்.
17
உரை
   
2730. இன்ன செய்கையின் ஒழுகுவார் ஒரு பொழுது ஏகித்
தென்னர் தம்பிரான் அவை இடைச் சென்று எதிர் நின்றார்
அன்னபோது அடு பரி நிரை காப்பவர் அரசன்
முன்னர் வந்து தாழ்ந்து ஒரு சிறை நின்று அது மொழிவார்.
18
உரை
   
2731. மறம் தவாத வேல் வலவ நம் வயப் பரி வெள்ளத்து
இறந்தவாம் பரி போக நின்று எஞ்சிய எல்லாம்
நிறைந்த நோயவும் நெடிது மூப்பு அடையவும் அன்றிச்
சிறந்தவாம் பரி ஒன்று இலை தேர்ந்திடின் என்றார்.
19
உரை
   
2732. மன்றல் வேம்பனும் வாதவூர் வள்ளலை நோக்கி
இன்று நீர் நமது அறை திறந்து இருநிதி எடுத்துச்
சென்று வேலை அம் துறையில் வந்து இறங்குவ தெரிந்து
வென்றி வாம் பரி கொடு வரப் போம் என்று விடுத்தான்.
20
உரை
   
2733. உள்ளம் வேறுபட்டு அமைச்சியல் நெறியில் நின்று ஒழுகும்
வள்ளலார் நிதியறை திறந்து அரும் பெறல் வயமான்
கொள்ள வேண்டிய பொருள் எலாம் கொண்டு தாழ்
                                                            இறுக்கி
வெள்ளை மா மதி வேந்தனை விடை கொடு போவார்.
21
உரை
   
2734. எடுத்த பொன் சுமை ஒட்டகத்து இட்டு முன் ஏக
விடுத்து விண் தொடு திண் திமில் விடையவன் கோயில்
அடுத்த விழ்ந்த பொன் அம்புயத் தடம் படிந்து அனைய
மடுத் தடம் கரைச் சித்தி ஐங்கரத்தனை வணங்கா.
22
உரை
   
2735. கருணை நாயகி அம் கயல் கண்ணி எம் பிராட்டி
அருண நாள் மலர்ச் செய்ய சீற் அடித்தலம் இறைஞ்சி
வருணனார் பெரு வயிற்று நோய் வலி கெடுத்து ஆண்ட
தருண நாள் மதிச் சடை உடை அடிகள் முன் தாழா.
23
உரை
   
2736. ஒன்று வேண்டும் இப் பொருள் எலாம் உனக்கும் ஐயம்
                                                            பொறியும்
வென்று வேண்டும் நின் அன்பர்க்கும் ஆக்குக வெள்ளி
மன்று வேண்டி நின்று ஆடிய வள்ளல் என் குறை ஈது
என்று வேண்டிய நின்று ஏத்துவார்க்கு இறைவனின் அருள்
                                                            போல்.
24
உரை
   
2737. ஆதி சைவன் ஆம் அருச்சகன் ஒருவன் நேர் அணைந்து
பூதி ஈந்தனன் நமக்கு இது போல் இலை நிமித்தம்
ஈது நல் நெறிக்கு ஏது என்று இரு கை ஏற்று அணிந்து
வேத நாதனை இறைஞ்சினார் விடை கொடு மீண்டார்.
25
உரை
   
2738. இன்னியம் அதிர்ந்தன எழுந்தன பதாதி
துன்னிய இணைக்கவரி துள்ளின துகில் கால்
பொன் இயல் மதிக் குடை நிழன்றன பொலம் கொள்
மின்னிய மணிச் சிவிகை மேல் கொடு நடந்தார்.
26
உரை
   
2739. மற்று இவர் வழிப்படு முன் மாறி நடம் ஆடும்
வெற்றி விடையார் இவர் வினைத் தொகையின் ஒப்பும்
பற்றிய இருட்டு மல பக்குவமும் நோக்கா
உற்று அடிமை கொண்டு பணி கொண்டு அருள உன்னா.
27
உரை
   
2740. சந்த மறை தீண்ட அரிய தம் கருணையால் ஓர்
அந்தணர் குலக் குரவன் ஆகி அடி நீங்கா
மைந்தர் பலர் தம்மொடு பெருந்துறையில் வந்தோர்
கொந்து அலர் நெருங்கிய குருந்து அடி இருந்தார்.
28
உரை
   
2741. பெரும் கடல் அனீகமொடு போய்ப் புற அடுத்த
இரும் கடம் அளப்பு இல கடந்து எழு பிறப்பு ஆம்
கரும் கடல் கடக்க வருவார் கருணை வெள்ளப்
பெருங்கடல் நிறைந்து உறை பெரும் துறை அடைந்தார்.
29
உரை
   
2742. அடுத்திட அடுத்திட அகத்து உவகை வெள்ளம்
மடுத்திட முகிழ்த்த கைம் மலர் கமலம் உச்சி
தொடுத்திட விழிப்புனல் துளித்திட வினைக்கே
விடுத்திடும் மனத்து அருள் விளைந்திட நடந்தார்.
30
உரை
   
2743. பித்து இது எனப் பிறர் நகைக்க வரு நாலாம்
சத்தி பதியத் தமது சத்து அறிவு தன்னைப்
பொத்திய மலத்தினும் வெரீஇச் சுமை பொறுத்தோன்
ஒத்து இழி பிணிப்பு உறு ஒருத்தனையும் ஒத்தார்.
31
உரை
   
2744. நெருப்பில் இடு வெண்ணெய் என நெஞ்சு உருக என்னை
உருக்கும் இதனால் எனை ஒளித்த மல ஆற்றால்
கருக்கும் அவன் ஆகி எனை ஆள் கருணை வெள்ளம்
இருக்கும் இடனே இனிது என எண்ணி நகர் புக்கார்.
32
உரை
   
2745. காய் இலை அடைந்த கழு முட் படை வலத்தார்
கோயிலை அடைந்து குளிர் வான் புனல் குடைந்து
வாயிலை அடைந்து உடலம் மண் உற விழுந்து
வேயிலை அடைந்தவரை மெய்ப் புகழ் வழுத்தா.
33
உரை
   
2746. ஆலய மருங்கு வலமாக வருவார் முன்
மூல மறை ஓதி முடியாத பொருள் தன்னைச்
சீல முனிவோர் தெளிய மோனவழி தேற்றும்
கோல முறைகின்ற ஒர் குருந்தை எதிர் கண்டார்.
34
உரை
   
2747. வேத நூல் ஒரு மருங்கினும் மெய்வழிச் சைவப்
போத நூல் ஒரு மருங்கினும் புராணத்துட் கிடந்த
கீத நூல் ஒரு மருங்கினும் கிளை கெழு சமய
போத நூல் ஒரு மருங்கினும் வாய்விட்டுப் பிறங்க.
35
உரை
   
2748. சுருதி கூறிய அறம் முதல் நான்கும் அத் தொல் நூல்
அரியது ஆம் கதிக்கு ஏது என்று ஆகமம் காட்டும்
சரியை ஆதி நால் பதமும் தலை தெரிந்து உணர்ந்த
பெரிய மாணவர் கழகமும் வினா விடை பேச.
36
உரை
   
2749. சரியை வல்ல மெய்த் தொண்டரும் சம்புவுக்கு இனிய
கிரியை செய்யும் நல் மைந்தரும் கிளர் சிவ யோகம்
தெரியும் சாதகக் கேளிரும் தேசிகத் தன்மை
புரியும் போதகச் செல்வரும் அளவு இலர் பொலிய.
37
உரை
   
2750. ஒழிந்த நோன்பினர் ஆடலர் பாடலர் உலகம்
பழித்த செய்கையர் அழுகையர் நகையினர் பாசம்
கழித்த கண்ணினால் அரன் உருக் கண்டு கொண்டு
                                                           உலகில்
விழித்த கண் குருடாத் திரி வீரரும் பலர் ஆல்.
38
உரை
   
2751. கரவு இல் உள்ளம் ஆம் விசும்பு இடைக் காசு அற
                                                       விளங்கும்
பரசிலா சுடர்க்கு உதயம் ஈறு இன்மையால் பகலும்
இரவு நேர் படக் கண்டிலர் இயன்று செய் நித்த
விரதம் ஆதி னோன்பு இழந்து உறை விஞ்சையர் பலர்
                                                       ஆல்.
39
உரை
   
2752. உடையும் கோவணம் உண்டியும் கைப்பலி உறவு என்று
அடையும் கேளிரும் அரன் அடியார் கண்டிகலன் கண்
படையும் பாரிடம் ஆயினும் பகல் இரா முதல் ஈறு
இடை இன்று ஆம் இடத்து உறங்குவது இஃது அவர்
                                                         வாழ்க்கை.
40
உரை
   
2753. இத்தகைப் பல தொண்டர் தம் குழத்து இடையால் அம்
ஒத்த பைங் குருந்து அடியினில் யோக ஆசனத்தில்
புத்தகத்து எழுதிய சிவஞான மெய்ப் போதம்
கைத்தலம் தரித்து இருப்பது ஓர் கருணையைக் கண்டார்.
41
உரை
   
2754. மன்றுள் ஆடிய ஆனந்த வடிவமும் வடவால்
ஒன்றி நால்வருக்கு அசைவு அற உணர்த்திய உருவும்
இன்று நாயினேற்கு எளிவந்த இவ் உரு என்னா
அன்று நாயகன் குறிப்பு உளத்து உணர்த்திட அறிந்தார்.
42
உரை
   
2755. முன்பு அணிந்தனர் அணிந்தனர் அஞ்சலி முடிமேல்
என்பு நெக்கிட உருகினர் இனியார் எளி வந்து
அன்பு எனும் வலைப் பட்டவர் அருள் வலைப் பட்டார்
துன்ப வெம் பவ வலை அறுத்திட வந்த தொண்டர்.
43
உரை
   
2756. காலமும் கனாக் காட்சியும் நிமித்தமும் கடிந்தார்
சீல மாணவர் செவ்வி தேர் தேசிகன் என்ன
மூல ஆகமம் ஓதினான் முறுக்கு அவிழ் கழுநீர்
மாலை சாந்து அணிந்து அடியின் மேல் வன் கழல் வீக்கி.
44
உரை
   
2757. அண்ணல் வேதியர் ஒழுக்கமும் அன்பும் கண்டு யாக்கை
உள் நிலா உயிர் பொருள் புனலுடன் கவர்ந்து உள்ளக்
கண் இலான் மலம் கழீஇப் பத கமலமும் சூட்டி
வண்ண மாமலர்ச் செம்கரம் சென்னி மேல் வையா.
45
உரை
   
2758. சூக்கம் ஆகும் ஐந்து எழுத்தினில் சுற்றிய பாச
வீக்க நீக்கி மெய் ஆனந்தம் விளை நிலத்து உய்த்துப்
போக்கு மீட்சியுள் புறம்பு இலாப் பூரண வடிவம்
ஆக்கினான் ஒரு தீபகம் போல் வரும் அண்ணல்.
46
உரை
   
2759. பார்த்த பார்வையால் இரும்பு உண்ட நீர் எனப் பருகும்
தீர்த்தன் தன்மையும் குருமொழி செய்ததும் தம்மைப்
போர்த்த பாசமும் தம்மையும் மறந்து மெய்ப் போத
மூர்த்தியாய் ஒன்றும் அறிந்திலர் வாதவூர் முனிவர்.
47
உரை
   
2760. தேனும் பாலும் தீம் கன்னலும் அமுதும் ஆய் தித்தித்து
ஊனும் உள்ளம் உருக்க உள் ஒளி உணர்ந்து இன்பம்
ஆனவாறு தேக்கிப் புறம் கசிவது ஒத்து அழியா
ஞான வாணி வந்து இறுத்தனள் அன்பர் தம் நாவில்.
48
உரை
   
2761. தொழுத கையினர் துளங்கிய முடியினர் துளும்ப
அழுத கண்ணினர் பொடிப்புறும் யாக்கையர் நாக்குத்
தழு தழுத்தவன் புரையினர் தமை இழந்து அழல் வாய்
இழுதை அன்ன மெய்யினர் பணிந்து ஏத்துவார் ஆனார்.
49
உரை
   
2762. பழுது இலாத சொல் மணியினைப் பத்தி செய்து அன்பு
முழுதும் ஆகிய வடத்தினான் முறை தொடுத்து அலங்கல்
அழுது சாத்தும் மெய் அன்பருக்கு அகம் மகிழ்ந்து ஐயர்
வழு இலாத பேர் மாணிக்க வாசகன் என்றார்.
50
உரை
   
2763. பாட்டிற்கு இன்புறு குருபரன் பாதம் மேல் கண்ணீர்
ஆட்டிச் சொல் மலர் அணிந்து தற் போத இன் அமுதை
ஊட்டித் தற்பர ஞானம் ஆம் ஓம வெம் கனலை
மூட்டிச் சம்புவின் பூசை மேல் முயற்சியர் ஆனார்.
51
உரை
   
2764. ஆசை வெம் பவ வாசனை அற்று மாணிக்க
வாசகப் பிரான் தேசிகன் மாணவர் ஓதும்
ஓசை ஆகம உபநிடத பொருள் எலாம் கேட்டு
நேசம் அங்கு வைத்து இருந்தனர் அது கண்டு நிருத்தன்.
52
உரை
   
2765. தித்திக்கும் மணி வார்த்தை இன்னம் சின்னாள் திருச்
                செவியில் அருந்தவும் கைச் செம் பொன் எல்லாம்
பத்திப் பேர் அன்பு அளித்துக் கவர்ந்து வேண்டும் பணி
                      கொடு பாண்டியனை இவர் பண்பு தேற்றி
முத்திக்கே விடுத்திடவும் புத்தை வாது முடித்திடவும்
                                திருவுள்ளம் உன்னம் எய்தி
எத்தித் தொண்டரைக் கருமம் சிறிது உண்டு இங்கே
                      இருத்தி என உருக்கரந்தான் அடிய ரோடும்.
53
உரை
   
2766. கனவில் வரும் காட்சி எனக் கருணை மூர்த்தி காட்டி
                        மறைத்தலும் அன்பர் கலக்கத்து ஆழ்ந்து
நனவு கொல்லோ கனவு கொல்லோ இன்று நாதன்
                       ஞமலிக்குத் தவிசு இட்ட நலம் போல் என்னை
நினைவரிய திருமேனி காட்டி ஆண்டு நீத்ததை என்று
                                   ஐயுற்று நெஞ்சம் தேறி
இன அடியாருடன் கூட்டாது ஏகினாயோ என்னையும் என்
                            வினையையும் இங்கு இருத்தி எந்தாய்.
54
உரை
   
2767. வஞ்ச வினைக் கொள் கலனாம் உடலைத் தீவாய்
            மடுக்கிலேன் வரை உருண்டு மாய்ப் பேன் அல்லேன்
நஞ்சு ஒழுகு வாளாலும் குறைப்பேன் அல்லேன் ஆதனே
                                  அதுவும் நினது உடைமை என்றே
அஞ்சினேன் தனேயும் அழியாது ஆவி ஐயனே நினைப்
                                 பிரிந்து ஆற்ற கில்லேன்
என் செய்கோ எந்தாயோ எந்தாயோ என்று இரங்கினார்
                            புரண்டு அழுதார் இனைய சொல்வார்.
55
உரை
   
2768. வறியவனாம் ஒரு பிறவிக் குறுடன் கையில் வந்த பெரு
                                   விலை மணி போல் மழலை தேறாச்
சிறியவனாம் ஒரு மதலை கையில் கொண்ட செம் பொன்
                                   மணி வள்ளம் போல் தேவர் யார்க்கும்
அறிவரியாய் சிறியேனை எளிவந்து ஆண்ட அருமை
                            அறியேன் துன்பத்து அழுவத்து ஆழாப்
பிறிவறியா அன்பரொடு அகன்றாய் கல்லாப் பேதையேன்
                                   குறை அலது எம்பிரானால் என்னே.
56
உரை
   
2769. மண் ஆதி ஆறு ஆறு மனம் துழாவித் தடு மாறிப்
புண் ஆகி எனைக் காணாது உழல் கின்றேனைப் போத
                                                             அருள்
கண்ணால் அவை முழுதும் கரைய நோக்கி யான் யான்
                                                             என்று
எண்ணா எனைத் தந்தாய் எங்கு உற்றாயோ என் தாயோ.
57
உரை
   
2770. வான் ஆதி ஐந்து முதல் வகுத்த ஓசை முதல் ஐந்தும்
ஆனாதி அங்கு மனம் ஆதி நான்கும் வழி அடைப்பத்
தேன் ஆதி அறு சுவையும் கழிய ஊறும் தெள் அமுதம்
யான் ஆர நல்கினையால் எங்கு உற்றாயோ என் தாயே.
58
உரை
   
2771. மாசாய் மறைக்கும் மல வலியும் நானும் வேறு இன்றி
ஆசா விகார மலம் ஆயினேனைப் பொருள் படுத்திப்
பேசாத இன்பு உருவின் ஒடு என்னைப் பின் வைத்த
ஈசா எனை இங்கு இட்டு எங்கு உற்றாயோ என்தாயே.
59
உரை
   
2772. என்று வாய் திறந்து அரற்றினார் இரங்கினார் புனிற்றுக்
கன்று நீங்கிய ஆன் எனக் கரைந்த நெஞ்சினராய்ச்
சென்று கோபுர வாயிலின் புறம்பு போய்த் திரண்டு
நின்ற காவலன் தமர்களை நேர்ந்தனர் நோக்கா.
60
உரை
   
2773. துங்க வாரியில் கடும் பரித் தொகை எலாம் ஆடித்
திங்களின் தலைவரும் என முன்பு போய்த் தென்னர்
புங்கவன் தனக்கு உணர்த்துமின் போம் என விடுத்தார்
அம் கண் நாயகன் பெருந்துறை நாயகன் அன்பர்.
61
உரை
   
2774. புரசை மா வயப் புரவிதேர் பொருநர் போய்ப் பொறி
                                                       வண்டு
இரை செய்தார் முடி வேந்தன் முன் இறைஞ்சினார்
                                                       உள்ளது
உரை செய்தார் அது கேட்டு ஒன்றும் உரைத்திலன்
                                                       இருந்தான்
நிரை செய்து தார்ப் பரி வரவினை நோக்கிய நிருபன்.
62
உரை
   
2775. வள்ளல் வாதவூர் முனிகளும் மன்னவன் பரிமாக்
கொள்ள நல்கிய பொருள் எலாம் குருந்தில் வந்து ஆண்ட
பிள்ளை வாண் மதிச் சடை முடிப் பெருந்துறை
                                                      மறையோர்க்கு
உள்ள ஆதரம் பெருக முன் வேண்டியாங்கு உய்ப்பார்.
63
உரை
   
2776. சிறந்த பூசைக்கும் திருவிழாச் சிறப்புக்கும் செல்வம்
நிறைந்த ஆலயத் திருப்பணித் திறத்துக்கும் நிரப்பி
அறந்த வாத பேர் அன்பர்க்கும் செலுத்தி அத்தலத்தே
உறைந்த தவாவற இன்னணம் ஒழுகு நாள் கழிப்பார்.
64
உரை
   
2777. எல்லை கூறிய குளிர் மதி அடுக்கம் வந்து எய்த
வல்லல் யானையான் இன்னமும் வயப்பரி வந்தது
இல்லையால் இது என் என ஓலையும் எழுதிச்
செல்ல உய்த்தனன் வாதவூர் அமைச்சர் திருமுன்.
65
உரை
   
2778. மன்னவன் திரு முகம் கண்டு முறைமையால் வாங்கி
அன்ன வாசகம் தெரிந்து கொண்டு ஆதி ஈது இல்லா
முன்னவன் திரு அருள் கடல் மூழ்கிய முனிவர்
என்னை வேறு இனிச் செய்யுமாறு என்று நின்று அயர்வார்.
66
உரை
   
2779. சிந்தை ஆகிய செறுவினுள் சிவ முதல் ஓங்கப்
பந்த பாசம் வேர் அறக் களைந்து அருள் புனல் பாய்ச்சி
அந்தம் ஆதியின்று ஆகிய ஆனந்த போகம்
தந்த தேசிக உழவன் தன் கோயிலைச் சார்ந்தார்.
67
உரை
   
2780. என் நாயகனே பொன் நாடர் ஏறே ஏறு கொடி உயர்த்த
மன்னா தென்னா பெருந்துறை எம் மணியேவழுதி பொருள்
                                                          எல்லாம்
நின் ஆலயத்து நின் அடியார் இடத்தும் செலுத்தும் நெறி
                                                          அளித்தாய்
பின் நான் அவனுக்கு என் கொண்டு பரிமாச் செலுத்தப்
                                                          பெறுமாறே.
68
உரை
   
2781. என்னா இறைஞ்சி எழுந்து ஏத்தி இரந்தார் எதிரே பெருந்
                                                     துறையின்
மின்னார் சடைமேல் பிழைமுடித் தோன் விசும்பின் நிறைந்த
                                                     திருவாக் கான்
மன்னா அவற்குப் பரி எல்லாம் வரும் என்று ஓலை விடுதி
                                                     எனச்
சொன்னான் அது கேட்டு அகத்து உவகை துளும்பி வரிந்து
                                                     சுருள் விடுத்தார்.
69
உரை
   
2782. அந்த ஓலைப் பாசுரமும் அறையக் கேட்டு நின்று ஆங்கு
                                                            ஓர்
சிந்தை ஆனா மகிழ் சிறப்ப இருந்தான் புரவித் தேரோடும்
வந்த ஆதிச் செம் கதிரோன் மறைந்தான் அவனால்
                                                  வையம் எல்லாம்
வெந்த வேடை தணிப்பான் போல் முளைத்தான் ஆதி
                                                  வெம் கதிரோன்.
70
உரை
   
2783. அன்று துயிலும் வாதவூர் அடிகள் கனவில் சுடர் வெள்ளி
மன்று கிழவர் குருந்து அடியில் வடிவம் காட்டி எழுந்து
                                                      அருளி
வென்றி வேந்தன் மனம் கவரும் விசயப் பரி கொண்டு
                                                      அணைகின்றேம்
இன்று நீ முன் ஏகுதி என்று அருளிச் செய்ய
                                                      எழுந்திருந்தார்.
71
உரை
   
2784. கனவின் இடத்தும் தேவர்க்கும் காண்டற்கு அரிய
                                                     கருணை உரு
நனவின் இடத்தும் கனவு இடத்தும் எளிதே அன்றோ
                                                     நமக்கு என்ன
நினைவின் இடைக் கொண்டு இருக்கின்றார் நிருத்தானந்தச்
                                                     சுடர் உள்ளத்து
தின இருளைத் தின்று எழுவது என எழுந்தான் இரவி
                                                     இரவு ஒதுங்க.
72
உரை
   
2785. எழுந்தார் உடைய பெருந்துறையார் இருந்தாள் பணிந்தார்
                                                இனி இப் பிறப்பில்
அழுந்தார் வழிக் கொண்டார் அடைந்தார் அகன்றார்
                                                நெறிகள் அவிர் திங்கள்
கொழுந்தார் சடையார் விடையார் தென் கூடல் அடைந்தார்
                                                பாடு அளி வண்டு
உழும் தார் வேந்தன் பொன் கோயில் உற்றார் காணப்
                                                பெற்றார் ஆல்.
73
உரை
   
2786. மன்னர் பெருமான் எதிர் வந்த மறையோர் பெருமான்
                                                          வழிபாடு
முன்னர் முறையால் செய்து ஒழுகி முன்னே நிற்ப முகம்
                                                          நோக்கித்
தென்னர் பெருமான் எவ்வளவு செம் பொன்கொடுபோய்
                                                          எவ்வளவு
நன்னர் இவுளி கொண்டது எனக் கேட்டான் கேட்ட நால்
                                                          மறையோர்.
74
உரை
   
2787. பொன்னும் அளவோ விலை கொண்ட புரவித் தொகையும்
                                                  அனைத்து அவைதாம்
பின்னர் வரக் கண்டு அருளுதி எம் பெருமான் இதனால்
                                                  துரங்க பதி
என்னும் நாமம் பெறுதி மதி என்றார் என்ற மந்திரர்க்குத்
தென்னன் சிறந்த வரிசை வளம் செய்து விடுப்பச்
                                                  செல்கின்றார்.
75
உரை
   
2788. பொன் அம் கமலத் தடம் படிந்து புழைக்கை மதமா முகக்
                                                        கடவுள்
தன்னம் கமல சரண் இறைஞ்சித் தனியே முளைத்த சிவக்
                                                        கொழுந்தை
மின் அம் கயல் கண் கொடி மருங்கில் விளைந்த தேனை
                                                        முகந்து உண்டு
முன்னம் கருத்து மொழி உடம்பு மூன்றும் அன் பாய்த்
                                                        தோன்றினார்.
76
உரை
   
2789. மன்னே என்னை ஆட்கொண்ட மணியே வெள்ளி மன்று
                                                    ஆடும்
அன்னே அடியேன் வேண்டியவாறு அரசன் ஈந்த நிதி
                                                    எல்லாம்
முன்னே கொண்டு என் பணி கொண்டாய் முனியாது
                                                    அரசன் நனி மகிழ
என்னே புரவி வரும் வண்ணம் என்று வேண்டி
                                                    நின்றிடலும்.
77
உரை
   
2790. மெய் அன்பு உடையாய் அஞ்சலை நீ வேட்ட வண்ணம்
                                                      விண் இரவி
வையம் பரிக்கும் பரி அனைய வயமாக் கொண்டு
                                                      வருதும் என
ஐயன் திருவாக்கு அகல் விசும்பு ஆறு எழுந்தது ஆக
                                                      அது கேட்டுப்
பொய் அன்பு பகன்றார் சிவன் கருணை போற்றி
                                               மனையில் போயினார்.
78
உரை
   
2791. கடி மனை அடைந்த எல்லை வாதவூர்க் காவலோரை
மடிமையில் சுற்றத் தோரும் கேளிரும் மாண்ட காதல்
அடிமை உள்ளாரும் ஏதில் ஆளரும் பிறரும் ஈண்டி
இடி மழை வாய் விட்டு என்னப் புந்திகள் இனைய
                                                       சொல்வார்.
79
உரை
   
2792. மந்திரக் கிழமை பூண்டு மன்னவர் கருமம் செய்வ
அந்தணர்க்கு அறனே அல்ல அமைச்சியல் அறத்து
                                                       நின்றால்
வெம் திறல் அரசர்க்கு ஏற்ற செய்வதே வேண்டும் என்னத்
தந்திரம் அது நூல் வல்லோர் சாற்றுவார் அன்றோ ஐயா.
80
உரை
   
2793. அரைசியல் அமைச்சு நீதி ஆய்ந்த நுங்கட்கு நாங்கள்
உரை செய்வது எவன் நீர் செய்வது ஒன்று நன்று ஆவது
                                                             இல்லை
விரை செறி தாராற்கு இன்று வெம்பரி வருவது ஆக
வரையறை செய்தீர் நாளை என சொல் வல்லீர் ஐயா.
81
உரை
   
2794. தழுவிய கிளைஞர் நட்டோர் சார் உளோர் தக்க
                                                       சான்றோர்
குழுவினைக் காக்க வேண்டும் குறிப்பு இலீர் போலும்
                                                       நீவிர்
ஒழுகு உறு செயலினாலே உம் செயல் உமக்கே சால
அழகு இது போலும் என்னக் கழறினார் அது கேட்டு
                                                       ஐயன்.
82
உரை
   
2795. சுற்றமும் தொடர்பும் நீத்தேம் துன்பமும் இன்பும் அற்றேம்
வெற்று உடல் மானம் தீர்ந்தேம் வெறுக்கை மேல்
                                              வெறுக்கை வைத்தேம்
செற்றமும் செருக்கும் காய்ந்தேம் தீவினை இரண்டும்
                                                        தீர்ந்தேம்
கற்றைவார் சடையான் கோலம் காட்டி ஆட் கொண்ட
                                                        அன்றே.
83
உரை
   
2796. தந்தை தாய் குரவன் ஆசான் சங்கரன் நிராசை பெண்டிர்
மைந்தர் பால் உயிரும் சுற்றம் மாசிலா ஈசன் அன்பர்
அந்தம் இல் பிறவி ஏழும் அடு பகை என்பது தேர்ந்தோம்
எந்தையார் கருணை காட்டி எம்மை ஆட் கொண்ட
                                                           அன்றே.
84
உரை
   
2797. ஊர் எலாம் அட்ட சோறு நம்மதே உவரி சூழ்ந்த
பார் எலாம் பாயல் துன்னல் கோவணம் பரிக்கும் ஆடை
சீர் எலாம் சிறந்த சாந்தம் தெய்வ நீறு அணிபூண் கண்டி
நீர் எலாம் சுமந்த வேணி நிருத்தன ஆட் கொண்ட
                                                            அன்றே.
85
உரை
   
2798. இறக்கினும் இன்றே இறக்குக என்று இருக்கினும் இருக்குக
                                                        வேந்தன்
ஒறுக்கினும் ஒறுக்க உவகையும் உடனே ஊட்டினும் ஊட்டுக
                                                        வானில்
சிறக்கினும் சிறக்க கொடிய தீ நரகம் சேரினும் சேருக
                                                        சிவனை
மறக்கிலம் பண்டைப் பழவினை விளைந்தால் மாற்றுவார்
                                                   யார் என மறுத்தார்.
86
உரை