2799. அரிகணை தொடுத்து வேழம் அட்டவன் செழியன் வாயில்
தெரி கலை அமைச்சர் ஏற்றைச் தேசிக வடிவத்து தீண்டி
வரிகழல் சூட்டி ஆண்ட வண்ணம் இவ் வண்ணம் ஐயன்
நரிகளைப் பரிகள் ஆக்கி நடத்திய வாறும் சொல்வாம்.
1
உரை
   
2800. சுற்றம் ஆம் பாச நீவித் துகள் அறுத்து இருந்தார் தம்மை
மற்றை நாள் அழைத்து வேந்தன் வந்தில போலும் இன்னம்
கொற்றவாம் பரிகள் என்னக் குறுமதி முடித்தான் அன்பர்
இற்றை நாண் முதனான் மூன்றில் ஈண்டுவ இறைவா என்னா.
2
உரை
   
2801. சிந்துர நுதன் மால் யானைச் செல்வப் பரிக்கு வேறு
மந்துறை அகன்ற ஆக வகுக்க சூழ் தண்ணீர் ஊட்ட
நந்து உறை தடங்கள் வேறு தொடுக நீள் நகரம் எங்கும்
இந்து உறை மாடம் எல்லாம் அழகு செய்திடுக என்றார்.
3
உரை
   
2802. காவலன் கருமம் செய்வோர் கந்துகப் பந்தி ஆற்றி
ஓவற நகரம் எங்கும் ஒளி பெற அழகு செய்யத்
தாவு தெண் கடல் ஏழ் கண்ட சகரர் போல் வைகல்
                                                       மூன்றில்
வாவியும் குளனும் தொட்டார் மண் தொடுகருவி மாக்கள்.
4
உரை
   
2803. வரையறை செய்த மூன்று வைகளும் கழிந்த பின்னாள்
கரையறு பரிமா வீண்டக் கண்டிலம் இன்னம் என்னா
விரையறை வண்டார் தண்டார் வேம்பனும் விளித்து வந்த
உரையறை நாவினாரை ஒறுப்பவன் ஒத்துச் சீறா.
5
உரை
   
2804. என் இவன் பரிமா கொண்டது என்று அவை வருவது
                                                         என்னாத்
தன் எதிர் நின்ற வஞ்சத் தறுகணார் சிலரை நோக்கிக்
கொன்னும் இக் கள்வன் தன்னைக் கொண்டு போய்
                                                தண்டம் செய்து எம்
பொன் எலாம் மறுவு கொண்டு வாங்குமின் போமின்
                                                         என்றான்.
6
உரை
   
2805. கல் திணி தோளான் சீற்றம் கண்டு எதிர் நில்லாது அஞ்சிச்
சுற்றிய பாசம் போலத் தொடர்ந்து கொண்டு ஏகி மன்னர்
எற்று இனி வகைதான் பொன்னுக்கு இயம்பும் என்று
                                                       எதிர்த்துச் சீறிச்
செற்றம் இல் சிந்தையார் மேல் செறிந்த கல் ஏற்றினாரே.
7
உரை
   
2806. பொன் நெடும் சயிலம் கோட்டிப் புரம் பொடி படுத்த
                                                       வீரர்
சொல் நெடும் தாளை உள்கி நின்றனர் சுமந்த பாரம்
அந் நெடும் தகையார் தாங்கி ஆற்றினார் அடைந்த
                                                       அன்பன்
தன் நெடும் பாரம் எல்லாம் தாங்குவார் அவரே
                                                       அன்றோ.
8
உரை
   
2807. சிலை அது பொறை தோற்றாது சிவன் அடி நிழலில்
                                                       நின்றார்
நிலை அது நோக்கி மாய நெறி இது போலும் என்னாக்
கொலை அது அஞ்சா வஞ்சர் கொடும் சினம் திருகி
                                                       வேதத்து
தலை அது தெரிந்தார் கையும் தாள்களும் கிட்டி
                                                       ஆர்த்தார்.
9
உரை
   
2808. அக் கொடும் தொழிலும் அஞ்சாது இருந்தனர் அரனை
                                                       உள்கி
இக் கொடும் தொழிலினார் தாம் இனி நனி ஒறுப்பர்
                                                       என்னாப்
புக்கு அது காண்டற்கு உள்ளம் பொறான் என இரவிப்
                                                       புத்தேள்
மிக்க தன் ஒளி கண் மாழ்கி விரிகடல் அழுவத்து
                                                       ஆழ்ந்தான்.
10
உரை
   
2809. சுந்தர விடங்கர் அன்பர் சூழ் துயர் அகற்ற நேரே
வந்து எழு காட்சி போல வந்தது செக்கர் வானம்
இந்தவர் மார்பம் தூங்கும் ஏன வெண் கோடு போன்ற
அந்தர உடுக்கள் எல்லாம் அயன் தலை மாலை ஒத்த.
11
உரை
   
2810. சுழிபடு பிறவித் துன்பத்து தொடு கடல் அழுவத்து ஆழ்ந்து
கழிபடு தனையும் காப்பான் கண் நுதல் மூர்த்தி பாதம்
வழிபடும் அவரைத் தேரான் வன் சிறை படுத்த தென்னன்
பழி படு புகழ் போல் எங்கும் பரந்தது கங்குல் ஈட்டம்.
12
உரை
   
2811. கங்குல் வந்து இறுத்த லோடும் அரும் சிறை அறையில்
                                                       போக்கிச்
சங்கிலி நிகளம் பூட்டித் தவத்தினைச் சிறை இட்டு
                                                       என்னச்
செம் கனல் சிதற நோக்கும் சினம் கெழு காவலாளர்
மங்குலின் இருண்ட கண்டர் தொண்டரை மறுக்கம்
                                                       செய்தார்.
13
உரை
   
2812. மிடைந்தவர் தண்டம் செய்ய வெம் சிறை வெள்ளத்து
                                                             ஆழ்ந்து
கிடந்தவர் கிடந்தோன் பூ மேல் இருந்தவன் தேடக் கீழ்
                                                             மேல்
நடந்தவர் செம் பொன் பாத நகை மலர் புணையாய்ப்
                                                             பற்றிக்
கடந்தனர் துன்ப வேலை புலர்ந்தது கங்குல் வேலை.
14
உரை
   
2813. அந்தம் இல் அழகன் தன்னை அம் கயல் கண்ணியோடும்
சுந்தர அமளிப் பள்ளி உணர்த்துவான் தொண்டர் சூழ
வந்தனை செய்யும் ஆர்ப்பும் மங்கல சங்கம் ஆர்ப்பும்
பந்த நால் மறையின் ஆர்ப்பும் பருகினார் செவிகள் ஆர.
15
உரை
   
2814. போதவா நந்தச் சோதி புனித மெய்த் தொண்டர்க்கு ஆக
நாதம் ஆம் முரசம் ஆர்ப்ப நரிப் பரி வயவர் சூழ
வேத வாம் பரிமேல் கொண்டு வீதியில் வரவு காணும்
காதலன் போலத் தேர் மேல் கதிரவன் உதயம் செய்தான்.
16
உரை
   
2815. கயல் நெடும் கண்ணியோடும் கட்டு அவிழ் கடிப் பூம்
                                                       சேக்கைத்
துயில் உணர்ந்து இருந்த சோம சுந்தரக் கருணை
                                                       வெள்ளம்
பயில் நெடும் சிகரம் நோக்கிப் பங்கயச் செம்கை கூப்பி
நயன பங்கயம் நீர் சோர நாதனைப் பாடல் உற்றார்.
17
உரை
   
2816. எந்தாய் அனைத்து உலகும் ஈன்றாய் எத் தேவர்க்கும்
தந்தாய் செழும் குவளைத் தாராய் பெரும் துறையில்
வந்தாய் மதுரைத் திரு ஆலவாய் உறையும்
சிந்தா மணியே சிறியேற்கு இரங்காயோ.
18
உரை
   
2817. மூவா முதலாய் முது மறையாய் அம் மறையும்
தாவாத சோதித் தனி ஞான பூரணமாய்த்
தேவாதி தேவாய்த் திரு ஆல்வாய் உறையும்
ஆவார் கொடி யாய் அடியேற்கு இரங்காயோ.
19
உரை
   
2818. முன்னா முது பொருட்கு முன்னா முது பொருளாய்ப்
பின் ஆம் புதுமைக்கும் பின் ஆகும் பேர் ஒளியாய்த்
தென்னா மதுரைத் திரு ஆலவாய் உறையும்
என் நாயகனே எளியேற்கு இரங்காயோ.
20
உரை
   
2819. மண்ணாய்ப் புனலாய்க் கனலய் வளி ஆகி
விண்ணாய் இரு சுடராய் இத்தனையும் வேறு ஆகிப்
பண்ணாய் இசையாய்ப் பனுவலாய் எங்கண்ணும்
கண் ஆனாய் என்று கண் காணவாறு என் கொலோ.
21
உரை
   
2820. பொங்கும் சின மடங்கல் போன்று உறுத்து வெம் கூற்றம்
அங்கும் புரியா வரும் துன்பத்து ஆழ்ந்து நான்
மங்கும் பதி அறிந்தும் வந்து அஞ்சல் என்கிலை ஆல்
எங்கும் செவி உடையாய் கேளாயோ என் உரையே.
22
உரை
   
2821. பூட்டி அருள் பாசம் இரு பாதம் பொறித்து உடலில்
கூட்டி அடியாருள் அகப்படுத்து ஆட் கொண்டு அருமை
காட்டியவோ இன்று என்னைக் கைவிட்டாய் வெய்யர்
                                                           எனை
ஆட்டி ஒறுக்கு இடத்து ஆர் ஏன்று கொள்வாரே.
23
உரை
   
2822. ஊரார் உனைச் சிரிப்பது ஓராய் என்று உன் அடிமைக்
காராய் அடியேன் அயர்வேன் அஃது அறிந்து
வாராய் அரசன் தமர் இழைக்கும் வன் கண் நோய்
பாராய் உன் தன்மை இதுவோ பரமேட்டி.
24
உரை
   
2823. என்று இரங்குவோர் இரங்கு ஒலி இளம் சிறார் அழுகை
சென்று தாயார் தம் செவித் துளை நுழைந்து எனச்
                                                       செல்லக்
குன்று இரும் சிலை கோட்டிய கூடல் நாயகன் கேட்டு
அன்று வன் சிறை நீக்குவான் திரு உளத்து அமைத்தான்.
25
உரை
   
2824. நந்தி ஆதி ஆம் பெரும் கண நாதரை விளித்தான்
வந்து யாவரும் பணிந்தனர் மன்னவற்கு இன்று
முந்தி ஆவணி மூலநாள் வந்தது முனிவு
சிந்தியா முனம் பரி எலாம் செலுத்துவான் வேண்டும்.
26
உரை
   
2825. யாவரும் புனத்து இயங்கு குறு நரி எலாம் ஈட்டித்
தாவரும் பரி ஆக்கி அத் தாம் பரி நடாத்தும்
சேவகம் செய்வோர் ஆகி முன் செல்லும் முன் யாமும்
பாவகம் பட வருதும் அப்படியே எனப் பணித்தான்.
27
உரை
   
2826. ஏக நாயகன் ஆணை பூண்டு எழு கணத்தவரும்
நாக நாடரும் வியப்பு உற நரி எலாம் திரட்டி
வேக வாம் பரி ஆக்கி அவ் வெம் பரி நடாத்தும்
பாகர் ஆயினார் அவர் வரும் பரிசு அது பகர்வாம்.
28
உரை
   
2827. தூக்கி ஆர்த்த செம் பட்டினர் சுரிகையர் தொடு தோல்
வீக்கு காலினர் இருப்பு உடல் காப்பினர் வெருளின்
நோக்கு பார்வையர் புண்டர நுதலினர் அடியில்
தாக்கி ஆர்ப்பு எழு நகையினர் அழன்று எழு சினத்தோர்.
29
உரை
   
2828. வட்டத் தோல் வரி புறம் கிடந்து அசைய வை வடிவாள்
தொட்ட கையினர் சிலர் நெடும் தேமரம் சுழல
விட்ட கையினர் சிலர் வெரிநிடை நெடுக விசிகப்
புட்டில் வீக்கி வில் தூக்கிய புயத்தினர் சிலர் ஆல்.
30
உரை
   
2829. செம் படாம் செய்த போர்வையர் சிலர் பசும் படத்தான்
மொய்ம்பு வீக்கிய கவயத்தார் சிலர் கரு முகில் போல்
அம்புயம் புதை காப்பினர் சிலர் சிலர் அவிரும்
பைம் பொன் வாள் நிறப் படாம் செய்குப் பாயத்தார்
                                                       சிலரால்.
31
உரை
   
2830. பிச்ச ஒண் குடையார் பலர் கவரிபால் பிறங்கத்
தைச்ச தண் குடையார் பலர் சல்லி சூழ் நாற்றி
வைச்ச வண்குடையார் பலர் வாண் நிலா முத்தம்
மொய்ச்ச வெண் குடையார் பலர் மொய்ம் பினர் இவருள்.
32
உரை
   
2831. தருமம் ஆதி நால் பொருள் எனும் தாளது ஞான
கரும காண்டம் ஆம் செவியது காட்சியைக் கடந்த
ஒருமை ஆம் பரம பரமாம் உணர்வு எனும் கண்ணது
அருமை ஆம் விதி முகத்தது நிடேத வால் அதுவால்.
33
உரை
   
2832. தந்திரங்களால் புறவணி தரித்தது விரிந்த
மந்திரங்களால் சதங்கை தார் மணிச் சிலம்பு அணிந்த
அந்தரம் சுழல் சேமனும் அருக்கனும் மிதிக்கும்
சுந்தரப் பதம் பொறை கொளத் தூங்கு இரு புடைத்தால்.
34
உரை
   
2833. மாண்ட தாரகப் பிரமம் ஆம் கலினம் வாய் கிழியப்
பூண்ட தாற் புறச் சமயம் ஆம் பொரு படை முரிய
மூண்டு பேர் எதிர் விளைத்திகன் முடிப்பது முளரி
ஆண்ட கோமுகம் அந்துரை ஆகம் மேவியதால்.
35
உரை
   
2834. அண்ட கோடிகள் அனைத்தும் ஓர் பிண்டமா அடுக்கி
உண்ட நீரதா முதுகின் மேல் உப நிடக் கலனை
கொண்ட வாலிய வைதிகப் புரவி மேல் கொண்டான்
தொண்டர் பாச வன் தொடர் அவிழ்த்திட வரும் சோதி.
36
உரை
   
2835. ஆன மந்திரக் கிழார் பொருட்டு அன்றியும் வென்றி
மீனவன் பிறப்பு அறுக்கவும் வார் கழல் வீக்கி
வான நாயகன் ஏந்திய மறையுறை கழித்த
ஞான வாள் புற இருளையும் நக்கி வாள் எறிப்ப.
37
உரை
   
2836. சாய்ந்த கொண்டையும் திரு முடிச் சாத்தும் வாள் வயிரம்
வேய்ந்த கண்டியும் தொடிகளும் குழைகளும் வினையைக்
காய்ந்த புண்டர நுதலும் வெண் கலிங்கமும் காப்பும்
ஆய்ந்த தொண்டர் தம் அகம் பிரியாது அழகு எறிப்ப.
38
உரை
   
2837. பிறக்கும் ஆசையோர் மறந்தும் இங்கு அணுகன் மின்
                                                       பிறப்பை
மறக்கும் ஆசையோர் இம் என வம்மின் அன்பரை
                                                       வேந்து
ஒறுக்கும் நோய் களை வான் என ஒருவனும் பிறவி
அறுக்க வந்தனன் என்ப போல் பரிச் சிலம்பு அலம்ப.
39
உரை
   
2838. கங்கையைச் சடை முடியின் மேல் கரந்தனை அவள்
                                                          போல்
எங்கள் தம்மையும் கரந்திடு என்று இரந்து காவேரி
துங்கபத்திரை ஆதி ஆம் நதிகளும் சூழப்
பொங்க வீழ்வ போல் ஒலியலும் கவரியும் புரள.
40
உரை
   
2839. வாவி நாறிய வால் இதழ்த் தாமரை மலரோன்
நாவிநாள் உமை நாயகன் நால் மறை பரியா
மேவினான் எனத் தான் ஒரு வெண் குடை ஆகிப்
பாவினால் என முடியின் மேல் பால் நிலாக் கால.
41
உரை
   
2840. முறையின் ஓதிய புராணம் மூ ஆறு நா மொழியும்
இறைவன் ஆம் இவன் படைத்து அளித்து அழிப்பவன்
                                                       இவனே
மறை எலாம் முறையிடு பரம் பொருள் என வாய் விட்டு
அறையு மாறுபோல் இயங்கள் ஈர் ஒன்பதும் ஆர்ப்ப.
42
உரை
   
2841. மிடைந்த மாயவாம் பரித்திரள் மேல் திசை நோக்கி
நடந்த நாயகன் நான் மறைப் புரவியும் நாப்பண்
அடைந்ததால் எழும் தூளிகள் அண்டமும் திசையும்
படர்ந்த போம் வழி யாது என மயங்கினான் பரிதி.
43
உரை
   
2842. பள்ளம் ஆக்குவ திடரினைப் பள்ளத்தை மேடு
கொள்ள ஆக்குவ பார் எலாம் விலாழி கொப்பளித்து
வெள்ளம் ஆக்குவ துளியால் வெள்ளத்தை வெறிதாய்
உள்ளது ஆக்குவ புள்ளுவ உருக் கொண்ட பரிமா.
44
உரை
   
2843. கொய்யுளைப் பரி எழுந்த தூள் கோப்ப வான் கங்கை
வையை ஒத்த ஏழ் பசும் பரி செம்பரி மாவாச்
செய்தது ஒத்தது சிந்துரம் திசைக் கய முகத்துப்
பெய்தது ஒத்தது ஆல் ஒத்தது பெரும் பகல் மாலை.
45
உரை
   
2844. விளம்பு கின்ற அச் சம்பு வெம் பரித்திரள் மிதிக்கும்
குளம்பு கிண்டிய எழுந்த தூள் குன்று இறகு அரிந்தோன்
வளம் புகுந்து அடைவார் குர வழி புரி வேள்விக்
களம் புகைந்து எழு தோற்றமே அல்லது கடாதால்.
46
உரை
   
2845. மட்புலம் திசை வான் புதை பூழியுள் மறைந்து
கொட் புறும் பரி சதங்கை தார் ஒலியினும் குளிர் வான்
பெட்புறும் குரல் ஒலியினும் செவியினில் பிறிது
கட் புலங்களால் கண்டிலர் வழி வரக் கண்டோர்.
47
உரை
   
2846. தரங்கம் எறி முத்திவை விலாழி அல தார்மா
இரங்கும் ஒலி அல்ல திரை ஓங்கு ஒலி இன்ன
துரங்கம் அல மற்று இவை சுரர்க்கு அரசன் இன்றும்
புரம் கொல விடுத்திட வரும் புணரி என்பார்.
48
உரை
   
2847. இம்பர் உலகு உள்ள வல பண்டினைய பாய்மா
உம்பர் உலகு ஆளி பரியே கொல் அது ஒன்றே
வெம் பரிதி வெம் பரிகொல் ஏழ் அவைகள் ஏழும்
பைம் பரிகள் யா இனைய பாய் பரிகள் என் பார்.
49
உரை
   
2848. வெம் பணிகளைப் பொர வெகுண்டு எழுவதே யோ
பைம் புனல் உடுத்த முது பார் முதுகு கீறும்
உம்பர் உலகைப் பொர உருத்து எழுவதே யோ
அம்பர முகட்டள வடிக்கும் அழுத்தும்.
50
உரை
   
2849. உத்தர திசைப் புரவி தெற்கு அடையுமாறும்
அத்தகைய தெற்கு உள வடக்கு அடையு மாறும்
அத்தகை குடக் கொடு குணக்கு அடையு மாறும்
சித்தர் விளையாடலின் வெளிப் படுதல் செய்யா.
51
உரை
   
2850. மறை மரபு சாலவரும் வன்னி இவை பொன்னித்
துறைவன் உளமும் சுடும் இரும் பனை தொடுக்கும்
அறைவன் உளமும் சுடும் அமைச்சரை ஒறுக்கும்
இறைவழுதி உள்ளமும் இனிச் சுடுவது என்பார்.
52
உரை
   
2851. முந்தை ஒரு மந்திரி பொருட்டு அரசன் முன்னா
அந்தம் இல் அனீக மொடு அரும் பரியில் வந்து ஆங்கு
இந்தமறை மந்திரி இடும்பை தணிவிப்பான்
வந்தனர் கொல் இப் பரி வரும் பொருநர் என்பார்.
53
உரை
   
2852. காமன் இவனே கொல் அறு கல் உழு கடப்பந்
தாமன் இவனே கொல் பொரு தாரகனை வென்றோன்
மாமன் இவனே கொல் மலை வன் சிறகு அரிந்த
நாமன் இவனே கொல் என நாரியர் அயிர்த்தார்.
54
உரை
   
2853. அடுத்திடுவர் கண் நிறைய அண்ணல் அழகு எல்லாம்
மடுத்திடுவர் கை வளையை மாலை விலை என்னக்
கொடுத்திடுவர் மாலைகள் கொடுத்திடுதி அன்றேல்
எடுத்திடுதி எங்கள் வளை எங்கள் கையில் என்பார்.
55
உரை
   
2854. ஏந்தல் முடி மாலை மலர் சிந்தின எடுத்துக்
கூந்தலில் மிலைந்து மதன் வாகை மலர் கொள்வார்
சாந்து அனைய சிந்தின தனம் தடவி அண்ணல்
தோய்ந்து அளவு இலா மகிழ் துளும் பினவர் ஆவார்.
56
உரை
   
2855. பொட்டு அழகன் மார்பில் இடு போர்வை கவசப் பேர்
இட்டது மெய் நம் உயிர் தடுத்தமையின் என்பார்
கட்டழகன் மாலையது கண்ணி என ஓதப்
பட்டது மெய் நம் உயிர் படுத்தமையின் என்பார்.
57
உரை
   
2856. இச்சையால் வடிவு எடுப்பவன் இந்திர சால
விச்சை காட்டுவான் எனப் பரி வீரனில் உலகைப்
பிச்சது ஏற்றிட மயக்கியும் காமனில் பெரிது
நச்சு மாதரை மயக்கியும் இங்ஙனம் நடந்தான்.
58
உரை
   
2857. தாவு கந்துகம் இந்தியம் ஒத்தன சயமா
வாவு திண் கண மள்ளர் கண் மனங்களை ஒத்தார்
மேவி அம் மனந் தொறும் இடை விடாது நின்று இயக்கும்
ஆவி ஒத்தது நடு வரும் அரு மறைப் பரியே.
59
உரை
   
2858. துன்னும் இன்னிய முழக்கமும் துரகத ஒலியும்
அன்ன வீரர் வாய் அரவமும் திசை செவிடு அடைப்பக்
கன்னி மா மதில் சூழ் கடி நகர்க் கரைக் காதம்
என்ன எய்தினான் மறைப் பரிப் பாகன் அவ் எல்லை.
60
உரை
   
2859. கண்டவர் கடிது ஓடிக் கடி நகர் குறுகிக் கார்
விண் தவழ் மணி மாடத்து அடு சிறை மிடைகின்ற
கொண்டலின் அனையார் முன் குறுகினர் மலர் செவ்வி
முண்டக வதனத்தார் முகிழ் நகையினர் சொல்வார்.
61
உரை
   
2860. மன்னவன் நெறி கோட மந்திரர் அடல் ஏறே
பன்னிற எழு முந்நீர்ப் பரவைகள் வருமா போல்
துன்னின வருகின்ற துரகதம் உள எல்லாம்
பொன் எயில் மணிவாயில் புகுவன இது போதில்.
62
உரை
   
2861. ஒல்லையில் அது மன்னற்கு உரையுமின் என மேரு
வில்லவன் அருள் பெற்ற வேதியர் பெருமான் போய்ச்
செல்லது தளை இட்ட திரு மகன் அருகு எய்தி
மல் அணி திணி தோளாய் வருவன பரி என்றார்.
63
உரை
   
2862. மருத்து என வருகின்ற மாக் கடல் என மன்னன்
திருத்தணி கடகப் பூண் தெரித்திட உடல் வீங்கிப்
பெருத்து எழு மகிழ் தூங்கிப் பெருவிலை மணி ஆரம் அருத்தி கொள் கலை நல்கி அமைச்சரை மகிழ்வித்தான்.
64
உரை
   
2863. ஏந்து அரி அணை நீங்கி எழுதிய தலை வாயில்
போந்து அருகு ஒளிர் மாடம் புகுந்து அரி அணை மேவிக்
காந்தளின் விரல் நல்லார் கவரிகள் புடை வீச
ஆய்ந்தவர் புறம் சூழ வரு பரி வரவேற்பான்.
65
உரை
   
2864. பரன் அருள் விளையாடல் காட்டிய பரி வெள்ளம்
வருவன சிறு காலம் தாழ்த்தலும் மதி வேந்தர்
புரவலன் மனம் வெள்கிப் பொய் இது என உள்கி
அருகு அணை உழை யோரைக் குறித்தனன் அழல்
                                                      கண்ணான்.
66
உரை
   
2865. மன்னவர் நினைவாற்றான் மந்திரர் பெருமானைத்
துன்னினர் கொடு போய் அத் தோள் வலி மற மள்ளர்
உன்ன அரிது என அஞ்சாது ஒறுத்தனர் உரவோர் தம்
தென்னவர் தமை உள்கிச் சேவடி துதி செய்வார்.
67
உரை
   
2866. பூவார் முளரிப் புத்தேள் அறியா நெறி தந்தாய்
பாவார் தென் சொல் பனுவல் மாலைப் பணி கொண்டாய்
தேவா தேவர்க்கு அரசே சிறியேன் உறு துன்பம்
ஆவா என்னாய் அஞ்சேல் என்னாய் அறனேயோ.
68
உரை
   
2867. நெஞ்சே உரையே செயலே எல்லா நின வென்றாய்
வஞ்சே போலும் அஃதேல் இன்று வாராயோ
பஞ்சேர் அடியாள் பாகா கூடல் பரமேட்டீ
அஞ்சேல் என்னாய் இது வோ அருளுக்கு அழகு ஐயா.
69
உரை
   
2868. காவி நேரும் கண்டா நாயில் கடையான
பாவி ஏனைப் பொருளாக் கொண்டு என் பணி
                                                       கொண்டாய்
ஆவி யோடு இவ் உடலும் நினதே அன்றோ இன்று
ஓவி வாளாது இருந்தால் யார் என் உடையானே.
70
உரை
   
2869. என்று இரந்து இரங்கும் அன்பர் இரு செவி ஊடே ஏங்கும்
கன்று இளம் செவியின் நல் ஆன் கனை குரல் ஒசை
                                                           போல
ஒன்றிய சின்னம் காளம் காகளம் ஒலிக்கும் ஓசை
வென்றி கொள் புரவிச் செந்தூள் திசை எலாம் விழுங்கக்
                                                           கண்டார்.
71
உரை
   
2870. வழுதியும் அரிந்து வாதவூரரை விளித்து வந்த
தொழுகுல அமைச்சர் தம் பாற்று கடவி அன்பு கூர்ந்து
                                                             எம்
பழுதறு கருமம் நும் போல் பரிக்குநர் யாரை என்னா
எழுதரு மகிழ்ச்சி மேல் கொண்டு அளவளாய் இருக்கும்
                                                             எல்லை.
72
உரை
   
2871. பாய் இருள் படலம் கீறிப் பல் கதிர் பரப்பித் தோன்றும்
சேய் இளம் பரிதி வானோன் அனையராய்ச் சிறந்த காட்சி
மேயின பகரோடும் விலாழியால் பரவை செய்யும்
வாயின ஆகி வந்த மாய வாம் பரிகள் எல்லாம்.
73
உரை
   
2872. வண்டு உழு தாரினான் தன் மரபின் மன்னவரும் முன்
                                                            நாள்
கண்டு அறியாத காட்சிக் கவனவாம் பரியை நோக்கி
அண்டர் நாயகன் போல் நாமும் ஆயிரம் கண் பெற்றாலும்
உண்டமை அரவென்று உள்ளக் குறிப் பொடும் உவகை
                                                            பூத்தான்.
74
உரை
   
2873. தான் என மகிழ்ச்சி என்னத் தலை தடுமாறி வேந்தன்
மான வெம் பரிமேல் வந்த வயவரை வியந்து மிக்கார்
ஆனவர் இவருள் யார் என்று அமைச்சரை வினவ ஐயா
யான் அது அறியேன் என்றார் யாவையும் அறிய வல்லார்.
75
உரை
   
2874. அண்டம் எலாம் ஆதாரம் ஆகத் தாங்கும் ஆனந்தத்
                                          தனிச் சோதி அண்டம் தாங்கும்
சண்ட மறைப் பரிதனக்கு ஆதாரம் ஆகித் தரிக்க ஒரு
                                          காலத்து அசைவு இலாத
புண்ட ரிகத் தாள் அசையப் பாசம் நீக்கும் புனை கரத்தால்
                                          பரி பூண்ட பாசம் பற்றிக்
கொண்டு அரசன் எதிர் போந்து மன்னா எங்கள் குதிரை
                                          ஏற்றம் சிறிது காண்டி என்றார்.
76
உரை
   
2875. இசைத்த ஐம் கதி ஐம் சாரி ஒன்பதில் இரட்டி ஆன
விசித்திர விகற்பும் தோன்ற வேந்தனும் அவையும் அன்றித்
திசைப் புலத்தவரும் மேலைத் தேவரும் மருள
                                                  மேற்கொண்டு
அசைத்தனர் அசைவு அற்று எல்லா உலகமும்
                                                  அசைக்கவல்லார்.
77
உரை
   
2876. ஆண் தகை அவர் போல் நின்ற அடு கணத்தவரும் தம்
                                                             தம்
காண் தகு புரவி எல்லா நடத்தினர் காட்டாக் கண்டு
பாண்டியன் அவரை நோக்கி நுங்களில் பதி ஆம் தன்மை
பூண்டவர் யாவர் என்றான் இவர் என்றார் புரவி வீரர்.
78
உரை
   
2877. சுட்டுதற்கு அரிய சோதி சுருதி வாம் புரவியோடு
மட்டு அவிழ் தாரினான் முன் வருதலும் கருணை நாட்டம்
பட்டுள மயங்கித் தன்னை மறந்து எழீஇப் பாண்டி
                                                       வேந்தன்
தட்டு அவிழ் கமலச் செங்கை தலை மிசைக் கூப்பி
                                                       நின்றான்.
79
உரை
   
2878. பின் அவன் ஆணையாலே மறைப்பு உண்ட பெரு நீர்க்
                                                             கூடல்
மன்னவன் அறிவு தோன்ற இன்று ஒரு வயமா வீரன்
தன்னை நாம் கண்டு எழுந்து தடம் கரம் கூப்பி நின்ற
என் எனத் தவிசின் மீள இருந்திட நாணி நின்றான்.
80
உரை
   
2879. நிற்கின்றான் முகத்தை நோக்கி நேர் நின்ற மறை மா வீரர்
பொன் குன்று ஆம் புயத்தாய் உன் தன் பொருள் எலாம்
                                                  கொண்டு பேந்து உன்
சொல் குன்ற அமைச்சன் தானே நமக்கு நம் சூழல் நீங்கா
மற்குன்ற நமர்க்கும் ஆர வழங்கினான் வழங்கலாலே.
81
உரை
   
2880. வானவர் தமக்கே அன்றி மனிதருக்கு இசையத் தக்க
வானவன் அறிஞர் இட்ட விலை வரம்பு அகன்ற நூலின்
மானம் உள்ளவனாய் நல்ல வாசிகன் உனக்கு வந்த
ஊனம் இல் பரிமா விற்கும் வாணிகம் உரைப்பக் கேட்டி.
82
உரை
   
2881. இன்ன ஆம் பரிகள் என்பால் இன்று நீ கயிறு மாறி
நின்னவாக் கொள்ளும் நீரான் இன்ன ஆம் பரியே நாளை
என்னவாய் இருந்த வேனும் எனக்கும் உன் தனக்கும்
                                                       கொண்டு
மன்னவா கருமம் இல்லை பரிவிலை வழக்கு ஈது
                                                       என்றார்.
83
உரை
   
2882. அப்பொழுது அரசன் தானும் அகம் மகிழ்ந்து அதற்கு
                                                      நேர்ந்து எம்
மெய்ப் புகழ் அமைச்சர் தம்மின் மேம்படு வாத வூரர்
ஒப்புரும் திறத்தர் ஆகியும் இடை நட்பான் மிக்க
துப்புர உடையர் ஆனார் என நனி சொல்லினானே.
84
உரை
   
2883. உரகத வாரந் தோற்றாது உயர் மறைப் பரிமேல் வந்தார்
மரகத நிறத்து நிம்ப மாலை தாழ் மார்பினார்க்குக்
குரகதம் கயிறு மாறிக் கொடுப்பவர் பொதுமை ஆய
துரகத இலக்கணங்கள் சொல்லுவான் தொடங்கினாரே.
85
உரை
   
2884. காயும் வேல் மன்ன ஒரிக் கடும் பரி அமையம் வந்தான்
ஞாயிலும் தாண்டிச் செல்லும் நாட்டமும் நுழையாச் சால
வாயிலும் நுழையும் கண்ட வெளி எலாம் வழியாச்
                                                           செல்லும்
தீய வெம் பசி வந்து உற்றால் தின்னாத எனினும் தின்னும்.
86
உரை
   
2885. பொருவில் சீர் இலக்கணப் புரவி ஒன்று தான்
ஒருவனது இடை வதிந்து உறையின் ஒல் என
மருவுறும் திருமகன் மல்லல் செல்வமும்
பெருகுறும் கீர்த்திகள் பல்கும் பெற்றியால்.
87
உரை
   
2886. நெய்த்திடு மாந்தளிர் நிறத்த நாவின
வைத்திடு குளம்புகள் உயர்ந்த வார்ந்து நேர்
ஒத்திடு எயிற்றின உரமும் கண்டமும்
பைத்திடு அராப் படம் போன்ற பாடலம்.
88
உரை
   
2887. அகலிய நுதலின வாய்ந்த குஞ்சி போல்
நிகர் அறு கொய்யுளை நிறம் ஒன்று ஆயின
புகரறு கோண மூன்றாகிப் பொற்புறு
முகம் உடையன வயமொய் கொள் கோடகம்.
89
உரை
   
2888. முட்டிய சமர் இடை முகத்தில் வாளினால்
வெட்டினும் எதிர்ப்பதாய்க் குரங்கு வேங்கை தோல்
பட்டிமை நரி அரி சரபம் பாய் முயல்
எட்டிய கதியின இவுளி என்பவே.
90
உரை
   
2889. உன்னத நீளம் உண்டாகிச் சங்கு வெண்
கன்னலின் வாலிய விலாழி கால்வதாய்ப்
பின்னம் ஆகிய தனி வன்னம் பெற்றுமை
வன்னமும் உடையது வன்னி ஆவதே.
91
உரை
   
2890. திணி தரு கழுத்தினில் சிறந்த தெய்வதம்
அணி உளது ஆகி எண் மங்கலத்து ஆய்
அணி தரு பஞ்சகல்யாணம் உள்ளதாய்க்
குனிதரு நீரது குதிரை ஆவதே.
92
உரை
   
2891. குங்குமம் கருப்புரம் கொழும் திண் கார் அகில்
பங்க மான் மதம் எனக் கமழும் பாலதாய்ச்
சங்கமும் மேகமும் சரபமும் கொடும்
சிங்கமும் போல் ஒலி செய்வதாம் பரி.
93
உரை
   
2892. நாலு கால்களும் கடைந்து எடுத்து நாட்டினால்
போல் வதாய்க் கொட்புறும் போது சுற்று தீக்
கோலை ஒப்பாகி மேற்கொண்ட சேவகன்
காலினுள் அடங்குவது ஆகும் கந்துகம்.
94
உரை
   
2893. அரணமும் துருக்கமும் ஆரும் தாண்டிடும்
முரண் அது ஆகி இம் முற்றிலக்கணப்
புரணம் எல்லாம் நிறை புரவி போந்தன
இரண வேலாய் வயது எட்டுச் சென்ற ஆல்.
95
உரை
   
2894. பகைத் திறம் உருக்கும் இப் பரிகள் மன்ன நீ
உகைத் திடத் தக்க என்று ஓதி வேத நூல்
சிகைத் தனிச் சேவகர் திரும்பித் தம்மனோர்
முகத்தினை நோக்கினார் மொய்த்த வீரரும்.
96
உரை
   
2895. வாம்பரி மறைக்கு எலாம் வரம்பு காட்டுவது
ஆம் படி கண்டவர் அறிவும் பிற்படப்
போம் படி முடுக்கினார் புரவி யாவையும்
வேம் பணி தோளினான் வியப்பும் எய்தியே.
97
உரை
   
2896. ஆத்தராய் மருங்கு உறை அமைச்சர் யாரையும்
பார்த்து அசையா முடி அசைத்துப் பைப்பயப்
பூத்த வாள் நகையொடு மகிழ்ச்சி பொங்கினான்
தீர்த்தனு நடத்தினான் தெய்வ மாவினை.
98
உரை
   
2897. இருவகைச் சாரியும் எதிர்ந்து வட்டமாய்
வருவழி ஞெகிழிபோல் மறுகு எலாம் ஒரு
துரகதமே நிலை நின்ற தோற்றம் ஒத்து
ஒருவற நடத்தினான் ஒரு கணத்தினே.
99
உரை
   
2898. இந்நிலை அலமரும் இவுளி மேல் ஒரு
மின்னிலை வேலினான் வினவத் தம் கையின்
மன்னிய கங்கணம் விடுத்து மா நகர்
தன் நிலை காட்டிய தன்மை ஒத்ததே.
100
உரை
   
2899. பல் நிறம் உடையவாம் பரியும் வீதியுள்
பின்னிவா எனப் பின்னி வட்டமாய்த்
தன் நிகர் மதுரை ஆம் தையல் கை அணி
துன்னிய பல் மணித் தொடியும் போன்றவே.
101
உரை
   
2900. இந்திய நுதலினார் இடித்த பொன் சுணம்
சிந்திய மருகிடை நடக்கும் திண் பரிப்
பந்தியின் எழும் துள் சுவணப் பாரின் மா
உந்திய எழுந்த பொன் பூழி ஒத்ததே.
102
உரை
   
2901. தேவரும் மனிதரும் திருந்து கூடலார்
யாவரும் உவப்பு உற இவுளி விட்டு மண்
காவலன் முன் குறீஇக் கருணை மாக் கடல்
மா வரும் திறன் எல்லாம் வகுத்துத் தோற்றும் ஆல்.
103
உரை
   
2902. வளம் கொள் காம் போசம் இப்பரி இம்மா மந்தரம்
                                             இந்தவாம் புரவி
விளங்கு காந்தாரம் இக் குரங்கு உளை வான்மீக மிக்
                                             கந்துகம் சிந்து
துளங்கு இல் பாஞ்சலம் இக் கன வட்டம் துளுவம்
                                             இக் குதிரை இத்துரகம்
களங்கம் இல் இமயம் பருப்பதம் இந்த கற்கி இம்
                                             மண்டிலம் கலிங்கம்.
104
உரை
   
2903. ஆரியம் இந்தப் பாடலம் இந்த அச்சுவம் கூர்ச்சரம் இந்தச்
சீரிய துரங்கள் கேகயம் இந்த திறல் உறு கொய் உளை
                                                     யவனம்
வேரி அம் பணை சூழ் மக்கம் இக் கொக்கு விரி பொழில்
                                                     வனாயுசம் இந்தப்
போர் இயல் இவுளி பல்லவம் இந்தப் பொலம் புனை தார்
                                                     நெடும் பாய் மா.
105
உரை
   
2904. கற்றவர் புகழ் சவ்வீரம் இக் கோரம் கன்னி மாராட்டம்
                                                         இவ் வன்னி
கொற்றவர் பயில் வாசந்திகம் இந்தக் கோடகம் காடகம்
                                                         கன்னல்
உற்ற கான்மீரம் இவ் வயம் வயந்தம் இந்த உத்தம
                                             கோணம் மாளவம் இவ்
வெற்றி சேர் குந்தம் கந்தரம் இந்த விறல் புனை அரி சவு
                                                         ராட்டம்.
106
உரை
   
2905. விரி பொழில் சாலி வேய் மிகு கிள்ளை வேறு தீவந்தரம்
                                                       இந்தக்
துரகதம் இந்தக் குரகதம் கொண்டல் சூழ் குருக்
                                                    கேத்திரம் இன்ன
பரவு பல் வேறு தேயமும் உள்ள பரி எலாம் இவன் தரு
                                                       பொருளின்
விரவிய நசையால் கொணர்ந்து இவர் வந்தார் வேந்த
                                           கேள் இந்த வாம் பரியுள்.
107
உரை
   
2906. வெண்ணிறம் சிவப்பு பொன் நிறம் கறுப்பு வேறு அற
                                                விரவிய நான்கு
வண்ணம் உள்ளனவும் வேறு வேறு ஆய மரபு மை
                                                வண்ணமும் வந்த
எண்ணிய இவற்றின் சிறப்பு இலக்கணத்தை இயம்புதும்
                                                கேள் என இகல் காய்
அண்ணல் அம் களிற்றார் அரு மறை பரிமேல் அழகியார்
                                                அடைவு உற விரிப்பார்.
108
உரை
   
2907. வெள்ளி நித்திலம் பால் சந்திரன் சங்கு வெண் பனி
                                                 போல்வது வெள்ளைத்
துள்ளிய புரவி மாதுளம் போது சுகிர்ந்த செம் பஞ்சியின்
                                                    குழம்பில்
தெள்ளிய நிறுத்த செம் பரி மாமை சிறைக் குயில் வண்டு
                                                    கார் முகில் போல்
ஒள்ளிய கரிய பரி எரி அழலான் உரோசனை நிறத்த
                                                    பொன் பரியே.
109
உரை
   
2908. தெரிதர வகுத்த இந் நிறம் நான்கும் செறிந்தது மிச்சிரம்
                                                         எனப் பேர்
உரை செய்வர் முகமார் புச்சிவால் கால் என்று உரைத்த
                                            எட்டு உறுப்பினும் வெண்மை
விரவியது அட்ட மங்கலம் தலை வால் வியன் உரம் என்ற
                                                         இம் மூன்றும்
ஒருவிய உறுப்பு ஓர் ஐந்தினும் வெள்ளை உள்ளது பஞ்ச
                                                         கல்யாணி.
110
உரை
   
2909. அணி கிளர் கழுத்தில் வலம் சுழித்து இருந்தால் அறிந்தவர்
                                                  அதனையே தெய்வ
மணி என இசைப்பர் முகம் தலை நாசி மார்பம் இந்
                                                  நான்கும் இவ் இரண்டு
பணி தரு சுழியும் நுதல் நடுப் பின்னைப் பக்கமும்
                                                  ஒவ்வொரு சுழியும்
துணி தர இருப்பது இலக்கணம் உளது இச் சுழி இலது
                                                  இலக்கண வழுவே.
111
உரை
   
2910. பிரிஉற உரத்தில் ஐஞ்சுழி உளது பேர் சிரீ வற் சமா
                                                     நுதலில்
இரு சுழி ஆதல் முச்சுழி ஆதல் இருக்கினும் நன்று அது
                                                     அன்றேல்
ஒருவற நான்கு சுழி வலம்புரியா உள்ளது நல்லது அன்றி
இருசுழி முன்னம் கால்களின் மூலத்து இருக்கினும் நல்லது
                                                     என்று இசைப்பார்.
112
உரை
   
2911. கள நடு இரட்டைச் சுழி உடைப் பரிதன் கருத்தினுக்கு
                                                அற இடி காட்டும்
அளவறு துன்ப மரணம் உண்டாக்கும் அவை
                                             கணைக்காலில் உள ஆகில்
உள பயம் துன்பம் நிகள பந்தனம் மேல் உதடு முன்
                                                காலடி கபோலம்
வளர் முழந்தாள் இந் நான்கினும் சுழிகள் மன்னினும்
                                                தலைவனை வதைக்கும்.
113
உரை
   
2912. இச் சுழி உடைய புரவி பந்தியில் யாத்து இருக்கினும்
                                               பழுது இவை கிடக்க
அச்சம் இல் பரிக்குப் பிராயம் நால் எட்டாம் அவத்தை
                                               பத்தாகும் ஒவ் வொன்றில்
வைச்சது மூன்று வருடமும் இரண்டு மதியமும் பன்னிரு
                                                           நாளும்
நிச்சயித்து அளந்தார் இன்னமும் ஒரு சார் நிகழ்த்திடும்
                                               இலக்கணம் அதுகேள்.
114
உரை
   
2913. எவ்வண்ண பேதம் மிகுந்து இருந்தாலும் வெள்ளை
                                            கலந்து இருந்தது ஆனால்
அவ்வண்ணப் பரி நன்று கரும்புரவிக்கு அக டேனும்
                                            அகன் மார்பேனும்
செவ்வண்ணம் இருக்கின் அது சயம் உளது அப்படி
                                            வெண்மை சேர்ந்தால் அந்த
மைவ் வண்ணப் பரியின் பேர் வாருணம் ஆம் சயம்
                                            கொடுக்கும் மாற்றார் போரில்.
115
உரை
   
2914. மகவு அளிக்கும் பிடர் வெளுப்பு மகிழ்வு அளிக்கும் உரம்
                                    வெளுப்பு மணி தார்க் கண்டத்து
அக வெளுப்புப் பொருள் கொடுக்கும் முக வெளுப்புச்
                            சயம் கொடுக்கும் அதன் பின் பக்கத்து
அக வெளுப்புச் சுகம் பயக்கும் இட வெளுப்புச் சந்தானம்
                                                   தழைக்கும் செல்வம்
மிக வளர்க்கும் தனம் பலதானியம் நல்கும் வலப் புறத்து
                                                   வெள்ளை மாதோ.
116
உரை
   
2915. நல் புறம் வான் முக மூன்றும் வெளுத்த பரி வென்றி
                                                  தரும் நாபி தொட்டு
முன் புறம் எலாம் பரிதி எனச் சிவந்து மதி எனப் பின்
                                                  முழுதும் வெள்கும்
பொற்புடைய வயப் பரிக்குப் பகல் விசய மதி என முற்
                                                  புறம்பு வெள்கிப்
பின் புறம் எல்லாம் கதிர் போல் சிவந்த பரிக்கு இரா
                                              விசயம் பெருகும் அன்றே.
117
உரை
   
2916. வந்தனவால் இவ்விரண்டு வகைப் பரியும் புரவி
                                                   அடிவைத்தால் ஒத்த
பந்து எனவும் நின்றாலோ மலை எனவும் ஒலித்தாலோ
                                                   பகடு சீறும்
வெம் தறுகண் அரி எனவும் வேகத்தால் காற்று எனவும்
                                                   மிதிக்கும் கூத்தால்
சந்த நடமகன் எனவும் நடக்கில் அரி களிறு எனவும்
                                                   தகையது ஆகி.
118
உரை
   
2917. குல மகள் போல் கவிழ் முகமும் கரு நெய்தல் எனக்
                                          கண்ணும் கொண்டு கார் போல்
நிலவி சீர் வண்ணமும் கார் நெய்தல் எனக் கடிமணமும்
                                                       நிறைந்து நாற்ற
மலர் அகில் சந்தெரி மணிப் பூண் அலங்கரிக்கில் ஆனாத
                                                       மகிழ்ச்சி எய்தி
இலகுவதுத் தமவாசி என்று உரைப்பர் பரிவேதம் எல்லை
                                                       கண்டோர்.
119
உரை
   
2918. நூறு விரல் உத்தமம் ஆம் பரிக்கு உயர் ஈர் எட்டு வில்
                                                     நூறு நீக்கிக்
கூறு விரல் மத்திமம் ஆம் பரிக்கு அறுபத்து ஒன்று தமக்
                                                     குதிரைக்கு என்ப
ஈறு இல் புகழாய் பொரு நரிப் பரியைப் பூசனம் செய்து
                                                     இறைஞ்சிப் பாசம்
மாறுவார் என மணித்தார் சதங்கை சிலம்பு அணிவித்து
                                                     மதிக்கோ மாறன்.
120
உரை
   
2919. கொத்து அவிழ் தார் நறும் சாந்தம் கொண்டு செழும் புகை
                                                தீபம் கொடுத்துப் பூசை
பத்திமையால் செய்து இறைஞ்சி எதிர் நிற்ப ஆலவாய்ப்
                                                பரனை நோக்கிக்
கைத்தலம் தன் சிரம் முகிழ்த்து வாழி எனப் பரி
                                                கொடுத்தான் கயிறு மாறி
முத் தொழிலின் மூவராய் மூவர்க்கும் தெரியாத முக்
                                                கண் மூர்த்தி.
121
உரை
   
2920. உவநிடக் கலணை வாசி ஒன்று அலால் நின்ற மாயக்
கனவாம் புரவி எல்லாம் கொடுத்திடக் கவர்ந்து வீறு
தவனன் இல் விளங்கும் தென்னன் தன் பெரும் கோயில்
                                                           உய்ப்பப்
பவனமும் கடலும் போலக் கொண்டு போய்ப் பந்தி
                                                           சேர்த்தார்.
122
உரை
   
2921. வாசி வாணிகர்க்குத் தென்னன் வெண் துகில் வரிசையாக
வீசினான் பாணற்கு ஏவல் செய்தவர் வெள்கு வாரோ
கூசிலா நேசர்க் காப்பான் குதிரையின் இழிந்து ஏற்றம் தத்
தூசினை இரண்டாம் கங்கை என முடி சூடி நின்றார்.
123
உரை
   
2922. இனைய தூசு இவன் பால் ஊர்தி இழிந்து நின்று ஏற்றுச்
                                                         சென்னி
புனைவது என் இவர் கை யோடும் புனைந்த திக்கு
                                                      உடையும் பூண்ட
கனல் அராப் பூணு மன்னன் கவருமோ என்று தம்மின்
வினவினர் வெகுண்டு சொன்னார் கணத் தனி வீரர்
                                                         எல்லாம்.
124
உரை
   
2923. அறம் தரு கோலான் வெவ்வேறு அடுபரி வயவர்
                                                       யார்க்கும்
நிறம் தரு கலிங்கம் ஈந்தான் நேர்ந்து அவை வாங்கி
                                                       அன்பில்
சிறந்து அருள் வடிவாய் வந்தார் செழு மறைப் புரவி
                                                       யோடு
மறைந்தனர் மறைந்தார் ஒக்க மாய வாம் பரிமேல்
                                                       வந்தார்.
125
உரை
   
2924. இருமைக்கும் துணையாய் நின்ற இரு பிறப்பாளர்க்கு ஏற்ப
அருமை தாம் சிறப்பு நல்கி அவர் இடத்து அவரை
                                                          உய்த்துப்
பருமத்த யானை வேந்தன் பகல் கதிர் வானத்து உச்சி
வரும் அப்போது எழுந்து செம் பொன் மாட நீள் கோயில்
                                                          புக்கான்.
126
உரை
   
2925. ஏனை மந்திரரும் தம் தம் இல் புகப் புரவி பார்த்த
மா நகராரும் தம்தம் மனை புகப் பரியின் பாகர்
ஆனவர் தாமும் கோயில் அடைந்து தம் விளையாட்டு
                                                       எல்லாம்
மீன் நெடும் கண்ணி னாட்கு விளம்பினர் இருந்தார்
                                                       அன்றே.
127
உரை