தொடக்கம் |
|
|
2926 | ஞான நாயகன் அணையா நரி பரி வெள்ளம் ஆன வாரு உரை செய்து மீண்டு அப் பரி நரியாய்ப் போன வாறு கண்டு அமைச்சரைப் புரவலன் கறுப்ப வான ஆறு போல் வைகை நீர் வந்தவாறு உரைப்பாம். | 1 |
|
|
உரை
|
|
|
|
|
2927. | நெருங்கு தூரிய முழக்கமும் தானையும் நிமிர மருங்கு இலாதவர் வந்து எதிர் மங்கலம் ஏந்த அரம் கொல் வேலினான் அருளிய வரிசை யோடு அணைந்து புரம் கொல் வேதியர்க்கு அன்பர் தம் திரு மனை புகுந்தார். | 2 |
|
|
உரை
|
|
|
|
|
2928. | உடுத்த சுற்றமும் கழகமும் ஒட்டிய நட்பும் அடுத்த கேண்மையால் வினவுவார் அவர் அவர்க்கு இசைய எடுத்த வாய்மையான் முகமனும் மகிழ்ச்சியும் ஈந்து விடுத்த வாதவூர் ஆளிகள் வேறு இடத்து இருந்து. | 3 |
|
|
உரை
|
|
|
|
|
2929. | கரந்தை சூடிய ஆலவாய்க் கண் நுதல் ஆம் அன்று இரந்த வண்ணமே யாம் கொடு போகிய எல்லாம் பரந்த அன்பரும் தானும் கொண்டு எம்மையும் பணி கொண்டு அரந்தை தீர்த்தனன் அன்றியும் அரசனுக்கு இசைய. | 4 |
|
|
உரை
|
|
|
|
|
2930. | நல்ல வாம்பரி செலுத்தினன் நமக்கு இனிக் கவலை இல்ல வாம்படி ஆக்கினன் இன்னம் ஒன்று உலகை வெல்ல வாம் படி தன் அருள் விளைக்கும் ஆனந்தம் புல்லவாம் பதி எமைத் தவம் பூட்டுவான் வேண்டும். | 5 |
|
|
உரை
|
|
|
|
|
2931. | என்ற ஆதரம் தலைக் கொள இக பரத்து ஆசை ஒன்றும் இன்றியே உணர் வினுக்கு உள் உணர்வாகத் துன்று பூரணம் ஆகிய சுந்தரச் சோதி மன்றுள் ஆடிய சேவடி மனம் புதைத்து இருந்தார். | 6 |
|
|
உரை
|
|
|
|
|
2932. | நாளையும் திரு ஆலவாய் நாயகன் தமரை ஆள மண் சுமந்து அருளும் என்று அதனையும் காண்பான் ஊளை வெம்பரிப் பூழிப் போர்ப்பு உண்ட மெய் கழுவி மீள வேண்டுவான் போல் கடல் குளித்தனன் வெய்யோன். | 7 |
|
|
உரை
|
|
|
|
|
2933. | ஈசன் ஆடல் வெம் பரிக் குழாத்து எழுந்த செம் தூளான் மாசு மூழ்கிய அண்டத்தை வான் நிலா என்னும் தூசினால் அறத் துடைப் பவன் என மணித் தொகுதி வீசும் ஆழியுள் முளைத்தனன் வெண் மதிக் கடவுள். | 8 |
|
|
உரை
|
|
|
|
|
2934. | சேய தாரகை வருணம் ஆம் தீட்டிய வானம் ஆய வேட்டினை இருள் எனும் அஞ்சனம் தடவித் தூய வாணிலா என்னும் வெண் தூசினால் துடைப்பான் பாய வேலையின் முளைத்தனன் பனி மதிக் கடவுள். | 9 |
|
|
உரை
|
|
|
|
|
2935. | கள் ஒழுக்கு தார் மீனவன் கடி மனை புகுந்த புள்ளுவ அப் பரி நள் இருள் போது வந்து எய்தப் பிள்ளை ஆகிய மதி முடிப் பிரான் விளை யாட்டால் உள்ளவாறு தம் வடிவு எடுத்து ஒன்றொடு ஒன்று சாவும். | 10 |
|
|
உரை
|
|
|
|
|
2936. | சங்கின் ஓசையும் பிணப் பறை ஓசையும் சரிந்த மங்குல் ஓதிய அழுகுரல் ஒசையும் வடம் தாழ் கொங்கை சேப்புறக் கை எறி ஓசையும் குளிர எங்கு நாஞ்செவி பருகுவ இன் அமுது என்ன. | 11 |
|
|
உரை
|
|
|
|
|
2937. | வாம் பரித்திரள் ஆகி நாம் மனித்தரைச் சுமந்து தாம்பு சங்கிலி தொடக்கு உண்டு மத்திகை தாக்க ஏம்பல் உற்றனம் பகல் எலாம் இப்பொழுது ஈண்டு நாம் படைத்தன நம் உரு நம் விதி வலத்தால். | 12 |
|
|
உரை
|
|
|
|
|
2938. | கானகம் தனில் ஒழுகு நாள் முதல் இந்தக் கவலை ஆன துன்பம் நாம் அறிந்தில இன்னமும் ஆர்த்த மான வன் தொடர் வடுக்களும் மத்திகைத் தழும்பும் போன அன்றின் இப் புலருமுன் போவதே கருமம். | 13 |
|
|
உரை
|
|
|
|
|
2939. | உள்ளம் ஆர நாம் தின் பதற்கு கூன் சரிந்து ஒழுகும் நொள்ளை நாகில நந்தில நுழைந்தளை ஒதுங்கும் கள்ள நீள் சுவைக் கான ஞெண்டும் இலவினில் கடலை கொள்ளின் ஓடும் பைம் பயறு புல் கொள்வதை அடாதால். | 14 |
|
|
உரை
|
|
|
|
|
2940. | நாடிக் காவலன் தமர் உளார் நகர் உளார் கண்டால் சாடிக் காய்வரே புலரும் முன் சங்கிலித் தொடர் நீத்து ஓடிப் போவதே சூழ்ச்சி என்று ஊக்கம் உற்று ஒருங்கே கூடிப் பேசின ஊளை வாய்க் குறு நரிக் குழாங்கள். | 15 |
|
|
உரை
|
|
|
|
|
2941. | வெறுத்த காணமும் கடலையும் விரும்பின கோழ் ஊன் துறுத்த நாகு நம் தலைவனைச் சங்கிலித் தொடரை முறித்த கால்களில் கட்டிய கயிற்றொடு முளையைப் பறித்த ஊளை இட்டு எழுந்தன போம் வழி பார்ப்ப. | 16 |
|
|
உரை
|
|
|
|
|
2942. | நின்ற நீள் நிலை பந்தியுள் நெருங்கு மா நிரையைச் சென்று தாவி வாள் எயிறு உறச் சிதை படக் கடித்து மென்று சோரியைக் குடிப்பன வீக்கிய முளையோடு ஒன்ற ஓடவே அண்டத்தில் ஊறு செய்வன ஆல். | 17 |
|
|
உரை
|
|
|
|
|
2943. | ஊளை ஓசை கேட்டு இம் என உறக்கம் நீத்து எழுந்து காளை வீரராம் மந்துரை காப்பவர் நெரு நல் ஆளி போல் வரு பரி எலாம் நரிகளாய் மற்றை ஒளி மா நிரை குடர் பறித்து உண்பன கண்டார். | 18 |
|
|
உரை
|
|
|
|
|
2944. | காண்டலும் சில வலியுள் கடிய உள் அரணம் தாண்டி ஓடின சில நரி சாளர முழையைத் தூண்டி ஓடின சில நரி சுருங்கையின் வழியால் ஈண்டி ஓடின நூழில் புக்கு ஏகின சிலவே. | 19 |
|
|
உரை
|
|
|
|
|
2945. | முடங்கு கால் உடைச் சம்புவும் மூப்பு அடைந்து ஆற்றல் அடங்கும் ஓரியும் கண் குருடாகிய நரியும் ஒடுங்கி நோய் உழந்து அலமரும் இகலனும் ஓடும் இடங்கள் கண்டில பந்தியில் கிடந்தன ஏங்கி. | 20 |
|
|
உரை
|
|
|
|
|
2946. | கிட்டி ஓடினர் வெருட்டு வோர் கீழ் விழக் கடித்துத் தட்டி ஓடுவ சில எதிர் தடுப்பவர் அடிக் கீழ் ஒட்டி ஓடுவ சில கிடந்து ஊளை இட்டு இரங்கும் குட்டியோடு அணைத்து எயில் இறக் குதிப்பன சிலவே. | 21 |
|
|
உரை
|
|
|
|
|
2947. | மறம் புனைந்த வேல் மீனவன் மாளிகை தள்ளிப் புறம்பு அடைந்த இந் நரி எலாம் பொய்கையும்யானம் அறம் பயின்ற நீள் மனை மறு கால் அங் கவலைத் திறம் படர்ந்த பல் மாட நீள் நகர் எல்லாம் செறிந்த. | 22 |
|
|
உரை
|
|
|
|
|
2948. | மன்றும் சித்திர கூடமும் மாடமும் மணி செய் குன்றும் தெற்றியும் முற்றமும் நாளோடு கோள்வந்து என்றும் சுற்றிய பொங்கரும் எங்கணும் நிரம்பி ஒன்றும் சுற்றமோடு ஊளை இட்டு உழல்வன நரிகள். | 23 |
|
|
உரை
|
|
|
|
|
2949. | கரியின் ஓசையும் பல்லிய ஓசையும் கடும் தேர்ப் பரியின் ஓசையும் இன் தமிழ் ஓசையும் பாணர் வரியின் ஓசையும் நிரம்பிய மணி நகர் எங்கும் நரியின் ஓசையாய்க் கிடந்தது விழித்தது நகரம். | 24 |
|
|
உரை
|
|
|
|
|
2950. | விழித்த ஞாளிகள் விழித்தன கேகயம் வெருவி விழித்த கோழிகள் விழித்தன மதுகரம் வெருண்டு விழித்த ஓதிமம் விழித்தன குருகினம் விரைய விழித்த வாரணம் விழித்தன கரும் கொடி வெள்ளம். | 25 |
|
|
உரை
|
|
|
|
|
2951. | அட்டில் புக்கன நிணத்தினை அழல் பசி உருக்கப் பட்டு அடுக்கிய கரும் கலம் உருட்டுவ பாகு சுட்ட சோறு பல் உணவு வாய் மடுப்பன சூழ்ந்த குட்டி உண்ணவும் கொடுப்பன கூவிளி கொள்வ. | 26 |
|
|
உரை
|
|
|
|
|
2952. | புறவு பூவை பைங் கிள்ளைகள் பூத் தலைச் சேவல் பிறவும் ஆருவ உறங்கிய பிள்ளையைக் கொடுபோய் நறவு நாறிய குமுதவாய் நகை எழ நக்கி உறவு போல் விளையாடுவ ஊறு செய்யாவால். | 27 |
|
|
உரை
|
|
|
|
|
2953. | பறிப்ப வேரொடு முன்றில் வாய்ப் படர் பசும் கொடியைக் கறிப்ப நாகு இளம் காய் எலாம் கரும்பு தேன் கவிழ முறிப்ப வாய் இட்டுக் குதட்டுவ வண்டு வாய் மொய்ப்பத் தெறிப்ப ஊளை இட்டு ஆடுவ திரிவன பலவே. | 28 |
|
|
உரை
|
|
|
|
|
2954. | ஆயிரம் பொரி திரி மருப் படல் கெழு மேடம் ஆயிரம் கரும் தாது நேர் ஆக்கையை ஏனம் ஆயிரம் கவிர் அனைய சூட்டவிர் தலைக் கோழி ஆயிரம் குறும் பார்ப் பொடும் ஆருயிர் செகுப்ப. | 29 |
|
|
உரை
|
|
|
|
|
2955. | பின் தொடர்ந்து நாய் குரைப் பொடு துரந்திடப் பெயர்ந்து முன் தொடர்ந்து உயிர் செகுப்பன வெம் சினம் ஊட்டி வன் தடம் புய மள்ளர் போய் வலி செயப் பொறாது கன்றி வந்து செம் புனல் உகக் கடிப்பன அனந்தம். | 30 |
|
|
உரை
|
|
|
|
|
2956. | பன்றி வாய் விடும் இரக்கமும் பல் பொறி முள்வாய் வென்றி வாரணச் சும்மையும் ஏழகத்து ஒலியும் அன்றி நாய் குரைப்பு ஓசையும் ஆடவர் ஆர்ப்பும் ஒன்றி ஊளை வாய் நரிக்குரற்கு ஒப்பது உண்டு ஒருசார். | 31 |
|
|
உரை
|
|
|
|
|
2957. | கங்குல் எல்லை காணிய நகர் கண் விழித்து ஆங்கு மங்குல் தோய் பெரு வாயில்கள் திறந்தலும் மாறா தெங்கும் ஈண்டிய நரி எலாம் இம் என ஓடிப் பொங்கு கார் இருள் துணி எனப் போயின கானம். | 32 |
|
|
உரை
|
|
|
|
|
2958. | ஈறு இலாச் சிவ பரம் சுடர் இரவி வந்து எறிப்பத் தேறு வார் இடைத் தோன்றிய சிறு தெய்வம் போல மறு இலாத பல் செம் கதிர் மலர்ந்து வாள் எறிப்ப வீறு போய் ஒளி மழுங்கின மீன் கணம் எல்லாம். | 33 |
|
|
உரை
|
|
|
|
|
2959. | அண்டருக்கு அரிதாகிய மறைப் பொருள் அழுகைத் தொண்டருக்கு எளிதாகிய மண் சுமந்து அருள வருத்தம் கண்டு அருட்கழல் வருடுவான் கைகள் ஆயிரமும் கொண்டு அருக்க வெம் கடவுளும் குண கடல் உதித்தான். | 34 |
|
|
உரை
|
|
|
|
|
2960. | கவன வெம்பரி செலுத்தி மேல் கவலை தீர்ந்து உள்ளே சிவம் உணர்ந்தவர் சிந்தை போல் மலர்ந்த செம் கமலம் உவமையில் பரம் பொருள் உணர்ந்து உரை இறந்து இருந்தோர் மவுன வாய் என அடங்கின மலர்ந்த பைம் குமுதம். | 35 |
|
|
உரை
|
|
|
|
|
2961. | பந்தியாளர்கள் யாது எனப் பகர்தும் என்று அச்சம் சிந்தியா எழும் தொல்லை போய்த் திரள் மதம் கவிழ்க்கும் தந்தியான் அரசு இறை கொளும் இருக்கையைச் சார்ந்து வந்தியா உடல் பனிப்பு உற வந்தது மொழிவார். | 36 |
|
|
உரை
|
|
|
|
|
2962. | காற்றினும் கடும் கதிய வாய்க் கண்களுக்கு இனிதாய் நேற்று வந்த வாம் பரி எலாம் நின்றவாம் பரிக்குக் கூற்று எனும் படி நரிகளாய் நகர் எலாம் குழுமி ஊற்றம் செய்து போய் காட்டகத்து ஓடிய என்றார். | 37 |
|
|
உரை
|
|
|
|
|
2963. | கருத்துறாத இச் சொல் எனும் கடிய கால் செவியாம் துருத்தி ஊடு போய்க் கோபம் ஆம் சுடுதழல் மூட்டி எரித்த தீப் பொறி சிதறிடக் கண் சிவந்து இறைவன் உருத்த வாறு கண்டு அமைச்சரும் வெருவினார் ஒதுங்கி. | 38 |
|
|
உரை
|
|
|
|
|
2964. | அமுதம் உண்டவன் நஞ்சம் உண்டால் என முதல் நாள் சமர வெம்பரி மகிழ்ச்சியுள் ஆழ்ந்தவன் அவையே திமிர வெம் குறு நரிகளாய்ச் சென்றவே என்னா அமரர் அஞ்சிய ஆணையான் ஆர் அஞர் ஆழ்ந்தான். | 39 |
|
|
உரை
|
|
|
|
|
2965. | அருகு இருக்கும் தொல் அமைச்சர் தமை நோக்கி வாதவூர் ஆளி என்னும் கருகு இருட்டு மனக்கள்வன் நம் முடைய பொருள் முழுதும் கவர்ந்து காட்டில் குருதி நிணக் குடர் பிடுங்கித் தின்று திரி நரிகன் எல்லம் குதிரை ஆக்கி வரவிடுத்தான் இவன் செய்த மாயம் இது கண்டீரோ மதி நூல் வல்லீர். | 40 |
|
|
உரை
|
|
|
|
|
2966. | இம் மாயம் செய்தானை என் செய்வது என உலகில் எமருக்கு எல்லாம் வெம் மாசு படு பாவம் பழி இரண்டும் பட இழுக்கு விளைத்துத் தீய கைம் மாறு கொன்றான் தன் பொருட்டு இனியாம் ஏது உரைக்கக் கடவேம் என்று சும்மாது சிரம் தூக்கி எதிர் ஆடாது இருந்தார் அச் சூழ் வல்லோர்கள். | 41 |
|
|
உரை
|
|
|
|
|
2967. | அவ் வேலை மனக்கு இனிய பரி செலுத்தி அரச காரியம் நன்று ஆக்கி வெவ் வேலை மனக் கவலை விடுத்தனம் என்று அக மகிழ்ச்சி விளைவு கூர மைவ் வேலை விடம் உண்ட வானவனை நினைந்து அறிவு மயமாம் இன்ப மெய் வேலை இடை வீழ்ந்தார் விளைந்தது அறியார் வந்தார் வேந்தன் மாடே. | 42 |
|
|
உரை
|
|
|
|
|
2968. | வந்தவரைச் சிவந்த விழிப் பொறி சிதறக் கடுகடுத்து மறவோன் நோக்கி அந்தம் இலாப் பொருள் கொடுபோய் நல்ல வயப் பரி கொடு வந்த அழகு இதாகத் தந்தனை அன்றோ அரச கருமம் முடித்து இசை நிறுத்த தக்கோர் நின்போல் எந்த உலகு உளரேயோ என வெகுண்டான் அது கேட்ட ஈசன் தொண்டர். | 43 |
|
|
உரை
|
|
|
|
|
2969. | குற்றம் ஏது அப் புரவிக்கு எனக் கேட்டார் கோமகனும் குற்ற மேதும் அற்றத்தால் அரை இரவில் நரியாகி அயல் நின்ற புரவி எல்லாம் செற்றுவார் குருதி உக நிணம் சிதறக் குடர் பிடுங்கித்தின்று நேர்வந்து உற்ற பேர்க்கு ஊற்றம் இழைத்து ஊர் கலங்க காட்டகத்தில் ஓடிற்று அன்றே. | 44 |
|
|
உரை
|
|
|
|
|
2970. | கண்ணும் இடும் கவசமும் போல் காரியம் செய்து ஒழுகியதும் காலம் பார்த்து எம் எண்ணரிய நிதி ஈட்டம் கவர்வதற்கோ நின் அமைச்சின் இயற்கை நன்று ஆல் புண்ணிய வேதியர் மரபில் பிறந்தன என்று ஒரு பெருமை பூண்டாயே நீ பண்ணிய காரியம் பழுது பிறரால் தண்டிக்கப் படுவர் என்றான். | 45 |
|
|
உரை
|
|
|
|
|
2971. | தண்ட லாளர்கள் இவனைக் கொடுபோய் நம் பொருள் முழுதும் தடுத்தும் ஈர்த்தும் மிண்டினால் வலி செய்தும் வாங்கும் என வெகுண்டு அரசன் விளம்பக் கூற்றும் அண்டுமேன் மறம் செய்யும் வலி உடையார் கதிரை இருள் அடுத்துப் பற்றிக் கொண்டு போனால் என்னக் கொடு புறம் போய் அறவோரைக் கொடுமை செய்வார். | 46 |
|
|
உரை
|
|
|
|
|
2972. | கதிர் நோக்கிக் கனல் மூட்டும் கடும் பகல் உச்சியில் இரவிக் கடவுள் நேர் நின்று எதிர் நோக்க நிலை நிறுத்திக் கரங்களினும் நுதலினும் கல் ஏற்றிச் செம் தீப் பிதிர் நோக்கத்து அவர் ஒறுப்ப ஆற்றார் ஆய் வீழ்ந்து இருளைப் பிளப்போன் செந்தீ மதி நோக்கத் தனிச் சுடரை அழைத்து அழுது துதி செய்வார் வாதவூரர். | 47 |
|
|
உரை
|
|
|
|
|
2973. | நாதவோ நாத முடிவு இறந்த நாடகம் செய் பாதவோ பாதகனாம் என்னைப் பணி கொண்ட வேதவோ வேதமுடிவின் விளைந்த தனிப் போதவோ போத நெறி கடந்த பூரணவோ. | 48 |
|
|
உரை
|
|
|
|
|
2974. | ஐயவோ என்னுடைய அன்பவோ அன்பர்க்கு மெய்யவோ மெய்யில் வினையேன் தலை வைத்த கையவோ செய்ய கழல் காலவோ காலனைக் காய் செய்யவோ வேதப் பரியேறும் சேவகவோ. | 49 |
|
|
உரை
|
|
|
|
|
2975. | அத்தவோ கல்லாக் கடையேனை ஆட் கொண்ட பித்தவோ பொய் உலகை மெய்யாகப் பேதிக்கும் சித்தவோ சித்தம் தெளிவித்து எனைத் தந்த முத்தவோ மோன மயம் ஆன மூர்த்தியவோ. | 50 |
|
|
உரை
|
|
|
|
|
2976. | என்று ஏறிய புகழ் வேதியர் இரங்கும் துதி செவியில் சென்று ஏறலும் விடை ஏறு சுந்தரன் மற்று இவர் செயலை மன்று ஏறவும் முடிமேல் நதி மண் ஏறவும் முதியாள் அன்று ஏறிய தேரோடும் விண் அடைந்து ஏறவும் நினைந்தான். | 51 |
|
|
உரை
|
|
|
|
|
2977. | கங்கைப் புனல் வடிவாகிய கவ்வைத் திரை வைகைச் சங்கச்சரி அறல் ஆம் மலர்த் தார் ஓதியை நோக்கா வங்கக் கடல் பேர் ஊழியில் வருமாறு என எவரும் இங்கு அற்புதம் அடையப் பெருக என்றான் அருள் குன்றான். | 52 |
|
|
உரை
|
|
|
|
|
2978. | தும்பைச் சடை முடியான் ஒரு சொல்லாடவும் முன்னாள் வம்பைப் பெரு முலையால் வரி வளையால் வடு அழுத்தும் கொம்பைத் தவம் குலைப்பான் கடும் கோபம் கொடு நடக்கும் கம்பை பெரு நதியில் கடும் கதியால் வரும் வைகை. | 53 |
|
|
உரை
|
|
|
|
|
2979. | பத்திக் குளிர் கமுகின் குலை பரியக் கரை முரியக் குத்திப் பழம் சிதறச் சேறி கோட்டங்களை வீட்டி முத்திக் கொடு கதலிப் புதன் முது சாலிகள் அரித்துக் தத்திப் பல தருவேரொடும் தள்ளிக் கடுகியதே. | 54 |
|
|
உரை
|
|
|
|
|
2980. | பல்லாயிரம் செந்தாமரை பரப்பிக் கொடு வரலால் நல் ஆயிரம் கண்ணான் எழில் நயக்கும் குளிர் நளினம் கல் ஆரமும் கடி முல்லையும் கரும்பும் கொடு வரலால் வில் ஆயிரம் கொடு போர் செயும் வேள் வீரனும் மானும். | 55 |
|
|
உரை
|
|
|
|
|
2981. | மணிமாலையும் மலர் மாலையும் சிதறா இறு மருங்கே அணி காஞ்சியும் ஒளிர் சங்கமும் மலறப் புடை எறியாக் கணியால் எழில் முகத்தாமரை கண்ணீரொடும் கவிழாத் தணியா முனிவுடன் ஊடிய தடம் கண்ணியர் போலும். | 56 |
|
|
உரை
|
|
|
|
|
2982. | வரை உந்திய மது முல்லையின் எய்பாற அயிர் மருதத் தரை உந்திய கரும்பின் குறை சாறு ஓடு உவர் ஆறோடு இரையும் தெழு தூர் நிர் வைகை இந் நகர் வைகும் திரையும் தெழு கடல் தம்மிடம் சென்றால் அவை போலும். | 57 |
|
|
உரை
|
|
|
|
|
2983. | கல் என்று அதிர் சும்மைப் புனல் கடி மா மதில் புறம் போய் இல்லங்களும் சிறு துச்சிலும் மறித்திட்டு இரும் கடல் வாய்ச் செல்லும் கல நாவாய் பல திமில் போல் சுமந்து ஏகிப் புல்லும் புரிசையும் தள்ளி உள் புகுகின்றதை அன்றே. | 58 |
|
|
உரை
|
|
|
|
|
2984. | மறுகும் பல பொருள் ஆவண மணிவீதியும் மன்றும் சிறுகும் கண மதமா நிரை சேரும் தெருவும் போய் முறுகும் சினமொடு தெண் திரை மூரிப் புனல் தாவிக் குறுகும் படி கண்டு அஞ்சினர் கொடி மா நகர் உள்ளார். | 59 |
|
|
உரை
|
|
|
|
|
2985. | சிலர் மைந்தரை எடுப்பார்களும் சிலர் மைந்தரைக் காணாது அலமந்து அழுவாரும் சிலர் அம் கைத் தளிர் பற்றிக் குல மங்கையர் தமைக் கொண்டுயப் போவார்களும் குறுகும் தலம் எங்கு எனத் திகைப்பார் களும் தடுமாறு கின்றாரும். | 60 |
|
|
உரை
|
|
|
|
|
2986. | பொன் உள்ளன பணி உள்ளன பொருள் பேணல் செய்வாரும் மன்னும் சில பொருள் கைக்கொள மறப்பார்களும் மாடம் மின்னும் கொடி நெடு மாளிகை மேல் ஏறுகின்றாரும் இந் நன்னகர் துயர் மூழ்குதற்கு ஏது ஏது என்பாரும். | 61 |
|
|
உரை
|
|
|
|
|
2987. | நேற்றும் பரி நரியாயின நெடு மாநகர் எங்கும் ஊற்றம் செய்த என்பார்களும் ஒரு காலமும் இந்த ஆற்றின் பெருக்கு இலை என்று அயர்வாரும் கடல் அரசன் சீற்றம் கொடு முன்போல்வாரும் செயலே கொல் என் பாரும். | 62 |
|
|
உரை
|
|
|
|
|
2988. | நம் கோமகன் செம் கோல் பிழைத் தனனோ என நவில்வார் அம் கோல் வளை பங்கன் விளையாட்டோ என அறைவார் இங்கு ஆர் இது தணிப்பார் என இசைப்பார் இது தணிப்பான் பொங்கு ஆலம் உண்டு அருள் சுந்தரன் அலது யார் எனப் புகல்வார். | 63 |
|
|
உரை
|
|
|
|
|
2989. | அடுத்து ஆயிரம் குண்டோதரர் எதிர் ஏற்று இருந்து அகல் வாய் மடுத்தாலும் அடங்காது என மதிப்பார் இது தனையும் எடுத்து ஆயிரம் முக கங்கையின் இறைவன் சடை ஏறக் கொடுத்தால் அலது அடங்காது இதன் கொடும் கோபமது என்பார். | 64 |
|
|
உரை
|
|
|
|
|
2990. | வான் ஆறு இழி நதி ஆயிர முகத்தால் வருவது போல் ஆனாது எழு நீத்தம் தணியாவாறு கண்டு அன்பு தான் ஆகிய சிவன் அன்பரை ஒறுக்கும் தறு கண்ணர் போனார் தமது அகத்தே உள பொருள் பேணுதல் கருதா. | 65 |
|
|
உரை
|
|
|
|
|
2991. | வழுதி தன் தமர் விட்டு ஏக மதுரை நாயகன் பால் ஏகி அழுது இசை பாடும் தொண்டில் அகப்படும் பாதம் போற்றித் தொழுது கொண்டு அறிவாய் ஊறும் சுகப் பெரும் கடலின் மூழ்கி எழுது சித்திரம் போல் மன்னி இருந்தனர் வாத ஊரர். | 66 |
|
|
உரை
|
|
|
|