தொடக்கம் |
|
|
2992. | பண் சுமந்த மறை நாடரும் பொருள் பதம் சுமந்த முடியார் மனம் புண் சுமந்த துயர் தீர வந்த பரி நரிகளாய் அடவி போன பின் விண் சுமந்த சுர நதி எனப் பெருகு வித்த வைகை இது விடையவன் மண் சுமந்து திரு மேனிமேல் அடி வடுச் சுமந்த கதை ஓதுவாம். | 1 |
|
|
உரை
|
|
|
|
|
2993. | கரும் கடல் திரை இடைக் கிடந்து சுழல் கலம் எனக் கன முகடளாய் வரும் புனல் பரவை உட் கிடந்து நகர் மறுகி உள் கமற வேலினான் ஒருங்கு அமைச்சரை விளித்து நீர் கரை சுமந்து ஒருங்கி வரும் ஓத நீர்ப் பொருங் கதத்தினை அடக்குவீர் என அமைச்சரும் தொழுது போயினார். | 2 |
|
|
உரை
|
|
|
|
|
2994. | வெறித் தடக்கை மத யானை மந்திரிகள் வேறு வேறு பல குடிகளும் குறித்து எடுத்து எழுதி எல்லை இட்டு அளவு கோல் கிடத்தி வரை கீறியே அறுத்து விட்டு நகர் எங்கணும் பறை அறைந்து அழைத்து விடும் ஆள் எலாம் செறித்து விட்டு அவர்க்கு அளந்த படி செய்மின் என்று வருவித்தனர். | 3 |
|
|
உரை
|
|
|
|
|
2995. | மண் தொடும் கருவி கூடை யாளரும் மரம் சுமந்து வருவார் களும் விண் தொடும் படி நிமிர்ந்து வண் படு விரி பசும் தழையல் ஆலமும் கொண்டு அதிர்ந்து வருவாரும் வேறு பல கோடி கூடிய குழாமும் நீர் மொண்டு அருந்த வரும் ஏக காலம் என வருபுனல் கரையின் மொய்த்தனர். | 4 |
|
|
உரை
|
|
|
|
|
2996. | கிட்டுவார் பரி நிறுத்துவார் அரவு உருட்டுவார் அடி கிடத்துவார் இட்டுவார் தழை நிரப்பு வார் விளி எழுப்புவார் பறை இரட்டுவார் வெட்டுவார் மணல் எடுத்துவார் செல வெருட்டுவார் கடிது துடும் எனக் கொட்டுவார் கரை பரப்புவார் உவகை கூருவார் குரவை குழறுவார். | 5 |
|
|
உரை
|
|
|
|
|
2997. | கட்டுவார் கரை உடைப்பு நீர் கடுகல் கண்டு நெஞ்சது கலங்குவார் மட்டிலாத முனிவு என்னை அன்னை இனி ஆறுக என்று எதிர் வணங்குவார் கொட்டுவார் மணல் உடைப்பு அடங்க மகிழ் கொள்ளுவார் குரவை துள்ளுவார் எட்டு மாதிரமும் எட்ட வாய் ஒலி எழுப்புவார் பறை இரட்டுவார். | 6 |
|
|
உரை
|
|
|
|
|
2998. | இந் நிலை ஊரில் உள்ளார் யாவர்க்கும் கூலி யாளர் துன்னி முன் அளந்த எல்லைத் தொழில் முறை மூண்டு செய்வார் அந்நிலை நகரின் தென் கீழ்த் திசை உளாள் அளவில் ஆண்டு மன்னிய நரை மூதாட்டி ஒருத்தி பேர் வந்தி என்பாள். | 7 |
|
|
உரை
|
|
|
|
|
2999. | செவி உணவு ஆன வேதசிரப் பொருள் உணர்ந்து செந்தீ அவி உணவு ஊட்டும் ஈசன் அன்பரின் ஆற்ற நோற்ற தவ நிறை பேறு துய்ப்பாள் தாய் இலார்க்கு அன்னை ஒப்பாள் சுவை உறு பிட்டு விற்று உண் தொழிலினாள் தமியள் ஆவாள். | 8 |
|
|
உரை
|
|
|
|
|
3000. | வைகலும் அவித்த செவ்விப் பிட்டினை மருங்கு நான்கு கைகளாய் முளைத்த முக்கண் கரும்பினை அரும்பு மூரல் செய்கதிர் முகத்தான் அந்தத் தேறலை ஆலவாய் எம் ஐயனை அகத்தான் நோக்கி அன்பினால் அருத்தி விற்பாள். | 9 |
|
|
உரை
|
|
|
|
|
3001. | வளைந்த மெய் உடைய அந்த மாதவ நரை மூதாட்டிக்கு அளந்த பங்கு அடைப்பான் கூலி ஆள் கிடையாமல் ஆற்றத் தளர்ந்து இனி என்னே மன்னன் தண்டிக்கின் என் செய்கேன் என்று உளம் தடுமாறிக் கூடல் உடைய நாயகனை உன்னா. | 10 |
|
|
உரை
|
|
|
|
|
3002. | பிட்டு விற்று உண்டு வாழும் பேதையேன் இடும்பை என்பது எள் துணை யேனும் இன்றி இரவி எங்கு எழுகென்று இந் நாள் மட்டு நின் அருளால் இங்கு வைகினேற்கு இன்று வந்து விட்டது ஓர் இடையூறு ஐய மீனவன் ஆணை யாலே. | 11 |
|
|
உரை
|
|
|
|
|
3003. | துணை இன்றி மக்கள் இன்றித் தமர் இன்றி சுற்றம் ஆகும் பணை இன்றி ஏன்று கொள்வார் பிறர் இன்றிப் பற்றுக் கோடாம் புணை இன்றித் துன்பத்து ஆழ்ந்து புலம்பு உறு பாவியேற்கு இன்று இணை இன்றித் இந்தத் துன்பம் எய்துவது அறனோ எந்தாய். | 12 |
|
|
உரை
|
|
|
|
|
3004. | தேவர்க்கும் அரியன் ஆகும் தேவனே அன்பர் ஆவார் யாவர்க்கும் எளியன் ஆகும் ஈசனே வேந்தன் ஆணைக் காவல் செங்கோலார் சீற்றம் கடுகுமுன் கூலி ஆளாய் ஏவல் செய்வாரைக் காணேன் ஏழையேன் இனி என் செய்கேன். | 13 |
|
|
உரை
|
|
|
|
|
3005. | கூலியாள் வருவது உண்டோ என்று தன் கொங்கை முற்றத் தாலி போல் கண்ணீர் சோர்வாள் குறித்து முன்பு அருத்தும் பிட்டை வேலை நீர் ஞாலம் காண மிசைந்தவள் இடும்பை தீர்ப்பான் பாலின் நேர் மொழியாள் பாக மறைத்து அருள் படிவம் கொள்வார். | 14 |
|
|
உரை
|
|
|
|
|
3006. | குறட்கு நீர் அருத்தி வைகைக் குடிஞையாய் ஒழுகும் கங்கை அறம் குழல் பிரிவின் ஆற்றாது அன்பினால் அவளைக் காண்பான் மறக் கயல் நெடும் கணாளை வஞ்சித்து வடிவம் மாறிப் புறப்படு வாரைப் போலப் போதுவார் போத மூர்த்தி. | 15 |
|
|
உரை
|
|
|
|
|
3007. | அழுக்கு அடைந்த பழந்துணி ஒன்று அரைக்கு அசைத்து விழுத்தொண்டர் குழுக் கடந்த இண்டை நிகர் சுமை அடை மேல் கூடை கவிழ்த்து எழுக் கடாந்து திசை கடந்திட்டு இணை கடந்த திருத்தோள் மேல் மழுக்கடைந்து விளங்கிய வாய் மண் தொடு திண் படை ஏந்தி. | 16 |
|
|
உரை
|
|
|
|
|
3008. | திடம் காதல் கொண்ட அறவோர் திரு வேள்வி தரும் அமுதும் இடம் காவல் கொண்டு உறைவாள் அருத்த அமுதும் இனிது உண்டும் அடங்காத பசியினர் போல் அன்னை முலைப் பால் அருந்த அடங்காத பெரு வேட்கை மகவு போல் புறப்பட்டார். | 2 |
|
|
உரை
|
|
|
|
|
3009. | ஆலு மறைச் சிரமுடியார் அடிக்கமலம் நிலம் சூடக் கூலி கொடுத்து எனை வேலை கொள்வார் உண்டோ என்று என்று ஓல மறைத் திருமொழி போல் உரை பரப்பிக் கலுழ் கண்ணீர் வேலை இடைப் படிந்து அயர்வாள் வீதி இடத்து அணைகின்றார். | 18 |
|
|
உரை
|
|
|
|
|
3010. | தந்தை தாய் பிறர் இன்றி வருகின்ற தனிக் கூலி மைந்தனார் வாய் மலரும் குரல் கேட்டு வந்தி உந்தன் சிந்தை ஆகுலம் இழந்து நல் கூர்ந்தார் செல்ல மகத் தந்தபோது எழு மகிழ்ச்சி தலைக் கொள்ளப் புறம் போந்தாள். | 19 |
|
|
உரை
|
|
|
|
|
3011. | அன்னை எனத் தன் பாலின் அருள் சுரந்து வருகாளை தன்னை அழைத்து எனக்கு அளந்த கரை அடைத்துத் தருவாயோ என்ன இசைத்தனள் ஆக அடைக்கின்றேன் எனக்கு அன்னை பின்னை அதற்கு இடும் கூலி யாது என்றார் பெரு முதியாள். | 20 |
|
|
உரை
|
|
|
|
|
3012. | பிட்டு இடுவேன் உனக்கு என்றான் அதற்கு இசைந்து பெரும் பசியால் சுட்டிட நான் மிக மெலிந்தேன் சுவைப் பிட்டில் உதிர்ந்த எலாம் இட்டிடுவாய் அது முந்தத் தின்று நான் இளைப்பாறிக் கட்டிடு வேன் நின்னுடைய கரை என்றார் கரை இல்லார். | 21 |
|
|
உரை
|
|
|
|
|
3013. | தெள்ளி அடு சிற்றுண்டி சிக்கடைந்த பொதி நீக்கி அள்ளி எடுத்து அருந்தப்பா என்று இட்டாள் அரைக்கு அசைத்த புள்ளி உடைத் துகில் நீத்தார் புறத்தானை விரித்து ஏந்தி ஒள்ளியது என்று அவன் அன்பும் உடன் கூட்டி அழுது செய்வார். | 22 |
|
|
உரை
|
|
|
|
|
3014. | அன்னை முலைத் தீம் பாலின் அரிய சுவைத்து இஃது அந்தத் தென்னவனாய் உலகு ஆண்ட திரு ஆல வாய் உடைய மன்னர் பிரான் தனக்கே ஆம் என்று என்று வாய்ப் பெய்து சென்னி அசைத்து அழுது செய்தார் தீவாய் நஞ்சு அமுத செய்தார். | 23 |
|
|
உரை
|
|
|
|
|
3015. | தந்தை யொடு தாய் இன்றித் தனிக் கூலி ஆளாக வந்த எனக்கு ஒரு தாயாய் அருள் சுரந்து மாறாத இந்த இளைப்பு ஒழித்தனையே இனி வேலைத் தலைச் சென்று உன் சிந்தை களிப்பு எழவேலை செய்வேன் என்று இசைத்து எழுந்தார். | 24 |
|
|
உரை
|
|
|
|
|
3016. | தந்தி வாய் மருப் பிடறி வரும் குடிஞைத் தடம் கரையில் வந்தியான் வந்தியாள் என்று ஏட்டில் வரை வித்துப் புந்தியால் உரையான் நூல் பொருளினான் அளப்பு அரிய அந்தி வான் மதிச் சடையார் கரை அடைப்பார் ஆயினார். | 25 |
|
|
உரை
|
|
|
|
|
3017. | வெட்டுவார் மண்ணை முடி மேல் வைப்பார் பாரம் எனக் கொட்டுவார் குறைத்து எடுத்துக் கொடு போவார் சுமடு விழத் தட்டுவார் சுமை இறக்கி எடுத்து அதனைத் தலை படியக் கட்டுவார் உடன் சுமந்து கொடு போவார் கரை சொரிவார். | 26 |
|
|
உரை
|
|
|
|
|
3018. | இவ் வண்ணம் இவர் ஒருகால் இருகால் மண் சுமந்து இளைத்துக் கை வண்ண மலர் கன்றக் கதிர் முடிமேல் வடு அழுந்த மை வண்ணன் அறியாத மலர் அடி செம் புனல் சுரந்து செவ் வண்ணம் படைப்ப ஒரு செழும் தருவின் மருங்கு அணைந்தார். | 27 |
|
|
உரை
|
|
|
|
|
3019. | தரு மேவும் மலை மகளும் சலமகளும் அறியாமல் திரு மேனி முழுது நிலமகள் தீண்டித் திளைப்பு எய்தக் குரு மேவு மதி முடியைக் கூடை அணை மேல் கிடத்தி வரும் மேரு அனையார் தம் வடிவு உணர்ந்து துயில் கின்றார். | 28 |
|
|
உரை
|
|
|
|
|
3020. | அத்தருவே ஆல நெடும் தருவாக அலை புரட்டித் தத்தி வரும் புனல் அடைப்பார் சனகாதி முழுது உணர்ந்த மெய்த் தவராய்க் கண் களிப்ப மெய் உணர்ச்சி மோன மயச் சுத்த உருத் தெளிவிப்பார் எனத்துயிலும் துயில் உணர்ந்தார். | 29 |
|
|
உரை
|
|
|
|
|
3021. | ஆடுவார் சாமம் எனத் தித்திக்கும் அமுத இசை பாடுவார் நகை செய்வார் தொழில் செய்வார் பராக்கு அடையக் கோடுவார் மணல் குவிப்பார் குதிப்பார் தூள் எழ அடிபாய்ந்து ஓடுவார் உடன் மீள்வாள் உன் மத்தர் என இருப்பார். | 30 |
|
|
உரை
|
|
|
|
|
3022. | வேலையினால் அற வருந்தி இளைத்தார் போல் மெய் வேர்வை காலமிசை மூச்சு எறிந்து வாய் ஒலியால் காற்று அழைத்துச் சால நெடும் பசியினார் போல் தளர்ந்து அடியாள் இடும் பிட்டின் மேல் அடைந்த விருப்பினர் ஆய் மீண்டும் அவள் பால் அணைவார். | 31 |
|
|
உரை
|
|
|
|
|
3023. | இடும்பை நோய் வெள்ளம் நீந்தி இன்ப நீர் வெள்ளத்து ஆழ்ந்த கொடும் புற முதியாள் முன் போய்க் கூறுவார் கோலுக்கு ஏற இடம் படு கரைகள் எல்லாம் அடை படு கின்ற இன்னம் கடும்பசி உடையேன் அன்னே பிட்டு இடு கடிதின் என்றார். | 32 |
|
|
உரை
|
|
|
|
|
3024. | ஆங்கு அவள் அப்போது அட்ட சிற்றுணவு அளித்தாள் ஐயர் வாங்கி அங்கு கையும் நாவும் கனல் எழ வாயில் பெய்து பாங்கு இரு கொடிறும் ஒற்றிப் பதம் உறப் பருகிக் கொண்டு நீங்கி முன் போல போந்து நெடும் கரை அடைக்கல் உற்றார். | 33 |
|
|
உரை
|
|
|
|
|
3025. | பிட்டு வாய் மிதப்ப உண்பார் பெருவலி உடையார் போல வெட்டுவார் எடுத்த மண்ணைக் கொண்டு போய் வேற்றுப் பங்கில் கொட்டுவார் உடைப்பு மாரும் கொள்கை கண்டு ஆர்த்துத் திண் தோள் தட்டுவார் அயல் நின்றாரைத் தழுவார் களிப்புத் தாங்கி. | 34 |
|
|
உரை
|
|
|
|
|
3026. | எடுத்த மண் கூடையோடு இடறி வீழ்வார் போல் ஆற்றில் மடுத்திட வீழ்வார் நீந்தி வல்லை போய்க் கூடை தள்ளி எடுத்து அகன் கரை மேல் ஏறி அடித்து அடித்து ஈரம் போக்கித் தொடுத்த கட்டு அவிழ்ப் பார் மீளத் துன்னுவார் தொடுவார் மண்ணை. | 35 |
|
|
உரை
|
|
|
|
|
3027. | கொட்டு மண் சுமந்து செல்வர் கூடையை உடைப்பில் வீழத் தட்டுவார் எடுப்பார் போலத் தாவி வீழ்ந்து அலையில் ஓட விட்டு ஒரு மரத்தைப் பற்றி மிதப்பார் திண் கரையில் ஏற முட்டுவார் சுழியில் ஆழ்வார் சேண் சென்று முளைப்பார் மீள்வர். | 36 |
|
|
உரை
|
|
|
|
|
3028. | கொட்டினைக் கழலப் பார்ப்பார் கோப்பர் கோல் இடை ஆப்பு இட்டுத் தட்டுவார் உயிர்ப்பு வீங்கித் தள்ள நின்று இளைப்பார் கச்சில் பிட்டினை நுகர்வார் வேலை வினை கெடப் பிறர்க்கும் அள்ளி இட்டு மாறு ஓச்ச நோக்கி நகைப்பர் கை இரண்டும் தாக்கி. | 37 |
|
|
உரை
|
|
|
|
|
3029. | வானத்தின் மண்ணில் பெண்ணின் மைந்தரில் பொருளில் ஆசை தான் அற்றுத் தமையும் நீத்துத் தத்துவம் உணர்ந்த யோகர் ஞானக் கண் கொண்டே அன்றி நாடரும் சோதி மண்ணோர் ஊனக் கண் கொண்டும் காண உடன் விளையாடல் செய்வார். | 38 |
|
|
உரை
|
|
|
|
|
3030. | அருளினால் உலகம் எல்லாம் ஆக்கியும் அளித்தும் நீத்தும் பெரு விளையாடல் செய்யும் பிறை முடிப் பெருமான் இங்ஙன் ஒரு விளையாடல் செய்ய ஓச்சு கோல் கையர் ஆகி அருகு நின்று ஏவல் கொள்வார் அடை கரை நோக்கப் புக்கார். | 39 |
|
|
உரை
|
|
|
|
|
3031. | நெட்டு அலை ஒதுங்கி ஓட நிவப்பு உற வரை போல் இட்டுக் கட்டிய கரைகள் எல்லாம் கண்டு கண்டு ஒப்பு நோக்கி அட்டமே செல்வார் திங்கள் ஆயிரம் தொழுதாள் பேரால் விட்ட பங்கு அடை படாமை கண்டனர் வெகுளி மூண்டார். | 40 |
|
|
உரை
|
|
|
|
|
3032. | வந்திக்குக் கூலி யாளய் வந்தவன் யார் என்று ஓடிக் கந்தர்ப்பன் என நேர் நின்ற காளையை நோக்கி ஏடா அந்தப் பங்கு உள்ள எல்லாம் அடை பட்டது எவன் நீ இன்னம் இந்தப் பங்கு அடையாய் வாளாது இருத்தியால் அம்பீ என்றார். | 41 |
|
|
உரை
|
|
|
|
|
3033. | வேறு உரையாது தம்மை உணர்ந்தவர் வீறு தோன்ற ஈறு இலான் இறுமாப்பு எய்தி இருந்தனன் ஆக மேல் இட்டு ஆறு வந்து அடுத்த பங்கில் அடை கரை கல்லிச் செல்ல மாறு கொண்டு ஓச்ச அஞ்சி மயங்கினார் வலிய கோலார். | 42 |
|
|
உரை
|
|
|
|
|
3034. | பித்தனோ இவன் தான் என்பார் அல்லது பேய் கோட் பட்ட மத்தனோ இவன் தான் என்பார் வந்தியை அலைப்பான் வந்த எத்தனோ இவன் தான் என்பார் இந்திர சாலம் காட்டும் சித்தனோ இவன் தான் என்பார் ஆர் என்றும் தெளியோம் என்பார். | 43 |
|
|
உரை
|
|
|
|
|
3035. | பாடல் விஞ்சையனோ என்பார் பண்ணினால் பாணிக்கு ஏற ஆடல் விஞ்சையனோ என்பார் அரும் பெறல் செல்வத்து ஆழ்ந்து வாடிய மகனோ என்பார் இசை பட வாழ்ந்து கெட்ட ஏடு அவிழ் தாரினாருள் யார் மகன் இவன் கொல் என்பார். | 44 |
|
|
உரை
|
|
|
|
|
3036. | கரும்பனும் விரும்ப நின்ற கட்டழகு உடையான் என்பார் அரும் பெறல் இவன் தான் கூலிக்கு ஆள் செய்தது எவனோ என்பார் இரும் பெரும் குரவர் அற்ற தமியனோ என்பார் வேலை புரிந்தவன் அல்லன் என்பார் அது மேனி புகலும் என்பார். | 45 |
|
|
உரை
|
|
|
|
|
3037. | கூலியும் கொண்டான் தானே கணக்கிலும் குறிக்கச் சொன்னான் வேலையும் செய்யான் இன் சொல் விளம்பினும் கேளான் கல்லின் பால் அறை முளையே ஆகிப் பராமுகம் பண்ணி நின்றான் ஏல நாம் இதனை வேந்தற்கு உணர்த்துதும் என்று போனார். | 46 |
|
|
உரை
|
|
|
|
|
3038. | தலைமகன் திருமுன் தாழ்ந்து சாற்றுவார் அடிகேள் இந்த அலை புனல் நகரார் தம் தம் பங்கு எலாம் அளந்த ஆற்றான் மலையினும் வலியவாகச் சுமந்தனர் வளைந்த சிற்றூண் விலை நரை யாட்டி தன் பங்கு அடைத்திலன் வென்றி வேலோய். | 47 |
|
|
உரை
|
|
|
|
|
3039. | வேளையும் வனப்பினாலே வென்றவன் ஒருவன் வந்தி ஆள் என ஆங்கே வந்து பதிந்தனன் அரசர் செல்வக் காளைபோல் களிப்பன் பாடும் ஆடுவான் காலம் போக்கி நீளுவான் வேலை ஒன்று நெஞ்சினும் நினைதல் செய்யான். | 48 |
|
|
உரை
|
|
|
|
|
3040. | ஆண் தகை வனப்பை நோக்கி அடிக்கவும் இல்லேம் அஞ்சி ஈண்டினேம் என்று கூற இம் என அமைச்ச ரோடும் பாண்டியன் எழுந்து நாம் போய்ப் பங்கு அடை பட்ட எல்லாம் காண்டும் என்று எறிநீர் வைகைக் குடிஞை அம் கரையைச் சார்ந்தான். | 49 |
|
|
உரை
|
|
|
|
|
3041. | எடுத்த திண் கரைகள் எல்லாம் இறை மகன் உள்ளத்து ஓகை மடுத்தனன் நோக்கிச் செல்வான் வந்தி பங்கு அடைப்பார் இன்றி அடுத்த நோன் கரையும் கல்லி அழித்து எழு வெள்ளம் நோக்கி கடுத்து நின்று எங் குற்றான் இக் கரை சுமந்து அடைப்பான் என்றான். | 50 |
|
|
உரை
|
|
|
|
|
3042. | வள்ளல் தன் கோபம் கண்ட மாறு கோல் கையர் அஞ்சித் தள்ளரும் சினத்தர் ஆகித் தடக்கை தொட்டு ஈர்த்துப் பற்றி உள்ளொடு புறம் கீழ் மேலாய் உயிர் தொடும் ஒளித்து நின்ற கள் வனை இவன் தான் வந்தி ஆள் எனக் காட்டி நின்றார். | 51 |
|
|
உரை
|
|
|
|
|
3043. | கண்டனன் கனன்று வேந்தன் கையில் பொன் பிரம்பு வாங்கி அண்டமும் அளவு இலாத உயிர்களும் ஆகம் ஆகக் கொண்டவன் முதுகில் வீசிப் புடைத்தனன் கூடையோடு மண் தனை உடைப்பில் கொட்டி மறைந்தனன் நிறைந்த சோதி. | 52 |
|
|
உரை
|
|
|
|
|
3044. | பாண்டியன் முதுகில் பட்டது செழியன் பன்னியர் உடம்பினில் பட்டது ஆண் தகை அமைச்சர் மேனி மெல் பட்டது அரசு இளம் குமரர் மேல் பட்டது ஈண்டிய கழல் கால் வீரர் மேல் பட்டது இவுளி மேல் பட்டது பருமம் பூண்ட வெம் கரிமேல் பட்டது எவ் உயிர்க்கும் போதன் மேல் பட்ட அத் தழும்பு. | 53 |
|
|
உரை
|
|
|
|
|
3045. | பரிதியும் மதியும் பாம்பும் ஐங் கோளும் பல் நிறம் படைத்த நாள் மீனும் இரு நிலம் புனல் கால் எரி கடும் கனல் வான் எனும் ஐம் பூதமும் காரும் சுருதியும் ஆறு சமய வானவரும் சுரர்களும் முனிவரும் தொண்டின் மருவிய முனிவர் கணங்களும் பட்ட மதுரை நாயகன் அடித் தழும்பு. | 54 |
|
|
உரை
|
|
|
|
|
3046. | வானவர் மனிதர் நரகர் புள் விலங்கு மாசுணம் சிதல் எறும்பு ஆதி ஆன பல் சரமும் மலை மரம் கொடி புல் ஆதி ஆம் அசரமும் பட்ட ஊன் அடை கருவும் பட்டன தழும்போடு உதித்தன உயிர் இல் ஒவியமும் தான் அடி பட்ட சரா சர சடங்கள் தமக்கு உயிர் ஆயினோன் தழும்பு. | 55 |
|
|
உரை
|
|
|
|
|
3047. | துண் என மாயோன் விழித்தனன் கமலச் சோதியும் யாது என வியந்தான் விண்ணவர் பெருமான் வெருவினான் வானோர் வேறு உளார் மெய் பனிப்பு அடைந்தார் வண்ண யாழ் இயக்கர் சித்தர் சாரணர் தம் வடுப் படா உடம்பினில் பட்ட புண்ணை யாது என்று தத்தமில் காட்டி மயங்கினார் புகுந்த வாறு அறியார். | 56 |
|
|
உரை
|
|
|
|
|
3048. | ஏக நாயகன் எவ் உயிர்களும் தானே என்பதும் அன்பினுக்கு எளியன் ஆகிய திறனும் காட்டுவான் அடி பட்டு அங்கு ஒரு கூடை மண் கொட்டி வேக நீர் சுருங்கக் கரையினை உயர்த்தி மிகுத்து உடன் வேலை நீத்து ஒளித்துப் போகிய வாறு கண்டு கோல் கையர் போய் நரையாட்டியைத் தொடர்ந்தார். | 57 |
|
|
உரை
|
|
|
|
|
3049. | வன்பு தாழ் மனத்தோர் வலி செய இன்ன மன்னான் மறுக்கம் உண்டேயோ முன்பு போகிய ஆள் என் செய்தான் என்னாய் முடியுமோ இனி எனத் திரங்கி என்பு போல் வெளுத்த குழலினாள் கூடல் இறைவனை நோக்கி நின்று இரங்க அன்பு தேன் ஆக வருத்திய சிற்றூண் அமுது செய்து அருளினார் அருளால். | 58 |
|
|
உரை
|
|
|
|
|
3050. | கண் நுதல் நந்தி கண்த்தவர் விசும்பில் கதிர் விடு திப்பிய விமானம் மண் இடை இழிச்சி அன்னை வா என்று வல்லை வைத்து அமரர் பூ மழையும் பண் நிறை கீத ஒதையும் வேதப் பனுவலும் துந்துபி ஐந்தும் விண் இடை நிமிரச் சிவன் அருள் அடைந்தோர் மேவிய சிவபுரத்து உய்த்தார். | 59 |
|
|
உரை
|
|
|
|
|
3051. | மன்று உடையான் ஒர் கூடை மண் கொட்டி மறைந்ததும் அடை கரை நீண்ட குன்று என உயர்ந்த தன்மையும் தம் மேல் கோல் அடி பட்டது நோக்கி என்றன் மேல் பட்டது என்றன் மேல் பட்டது இது என அது என அமைச்சர் நின்றவர் உணர்ந்து நிகழ்ச்சியும் பிறர் பால் நிகழ்ச்சியும் நோக்கி அந் நிருபன். | 60 |
|
|
உரை
|
|
|
|
|
3052. | உள்ளத்தால் சங்கை பூண்டான் ஆக மண் உடைப்பில் கொட்டிக் கள்ளத்தார் ஆகிப் போனார் ககனத்தார் ஆகிச் சேனை வெள்ளத்தார் பிறரும் கேட்ப மீனவற்கு உவகை வெள்ளம் கொள்ளத் தாம் அழைத்து ஆகாய வாணியால் கூறல் உற்றார். | 61 |
|
|
உரை
|
|
|
|
|
3053. | மறத்து ஆறு கடந்த செம் கோல் வழுதி நின் பொருள்கள் எல்லாம் அறத்து ஆற்றின் ஈட்டப் பட்ட அனையவை புனிதமான திறத்தாலே நமக்கு நம்மைச் சேர்ந்தவர் தமக்கு ஆர்வம் உறத்தாவில் வாதவூரன் உதவினான் ஆதலாலே. | 62 |
|
|
உரை
|
|
|
|
|
3054. | அனையனை மறுக்கம் செய்தாய் அரும் பிணப் புலவுத் தீவாய் வன நரித் திரளை ஈட்டி வாம்பரி ஆக்கித் தந்தேம் கனை இருள் கங்குல் போதில் கழிந்தன பின்னும் தண்ட வினையர் பால் விடுத்துத் துன்பம் விளைத்தனை அது பொறாதேம். | 63 |
|
|
உரை
|
|
|
|
|
3055. | வருபுனல் பெருகப் பார்த்தேம் வந்திகைப் பிட்டு வாங்கிப் பருகிவந்து ஆளாய் மாறு பட்டன மண் போகட்டுப் பொருகரை உயரச் செய்து போகிய அவ் அன்னை போல்வாள் பெருகிய இடும்பை தீர்த்து எம் பேர் உலகு அடையச் செய்தோம். | 64 |
|
|
உரை
|
|
|
|
|
3056. | இத்தனை எல்லாம் செய்தது இவன் பொருட்டு இந்த வேத வித்தகன் தன்மை ஒன்றும் அறிந்திலை வேட்கை எம்பால் வைத்துனக்கு இம்மை யோடு மறுமையும் தேடித் தந்த உத்தமன் தொடை சந்து ஆதிப் புறப்பற்றும் ஒழிந்த நீரான். | 65 |
|
|
உரை
|
|
|
|
|
3057. | நிறை உடை இவனை இச்சை வழியினால் நிறுத்தி ஆன்ற மறை வழி நின்று நீதி மன்னவர்க்கு அளந்த வாழ் நாள் குறை படாது ஆனச் செல்வ வாரியுள் குளித்து வாழ்க என்று நிறையவன் மொழிந்த மாற்றம் இரு செவி நிரப்பத் தென்னன். | 66 |
|
|
உரை
|
|
|
|
|
3058. | அச்சம் உற்று உவகை ஈர்ப்ப அதிசய வெள்ளத்து ஆழ்ந்து பொச்சம் இல் அன்பர் எங்கு உற்றார் எனப் புகுந்து தேடி நச்சு அரவு அசைத்த கூடல் நாயகன் கோயில் நண்ணி இச்சையில் இருக்கின்றாரைக் கண்டு போய் இறைஞ்சி வீழ்ந்தான். | 67 |
|
|
உரை
|
|
|
|
|
3059. | தொல்லை நீர் உலகம் ஆண்டு சுடு துயர் நரகத்து ஆழ வல்ல என் அறிவுக்கு ஏற்ற வண்ணமே செய்தேன் நீர் என் எல்லை தீர் தவப் பேறாய் வந்து இக பர ஏது ஆகி அல்லல் வெம் பிறவி நோய்க்கு அருமருந்து ஆனிர் ஐயா. | 68 |
|
|
உரை
|
|
|
|
|
3060. | செறுத்து நான் உம்மை எண்ணாது இழைத்த இத் தீங்கு தன்னைப் பொறுத்து நீர் முன் போல் உங்கள் புவி எலாம் காவல் பூண்டு மறுத் துடைத்து ஆள்வதாக என்று இரந்தனன் மண்ணில் ஆசை வெறுத்தவர் நகை உள் தோன்ற வேந்தனை நோக்கிச் சொல்வார். | 69 |
|
|
உரை
|
|
|
|
|
3061. | பாய்திரை புரளும் முந்நீர்ப் படுகடல் உலகுக்கு எல்லாம் ஆயிரம் செம் கணான் போல் அரசு வீற்று இருப்பீர் உங்கள் நாயகன் அருளிச் செய்த வண்ணமே நயந்து செய்வீர் தூயவர் அன்றோ நுங்கள் சூழல் சேர்ந்து ஒழுக வல்லார். | 70 |
|
|
உரை
|
|
|
|
|
3062. | உம்மை நான் அடுத்த நீரால் உலகு இயல் வேத நீதி செம்மையால் இரண்டு நன்றாத் தெளிந்தது தெளிந்த நீரான் மெய்மை யான் சித்த சுத்தி விளைந்தது விளைந்த நீரால் பொய்ம்மை வானவரின் நீந்திப் போந்தது சிவன் பால் பத்தி. | 71 |
|
|
உரை
|
|
|
|
|
3063. | வந்த இப் பத்தியாலே மாயையின் விருத்தி ஆன பந்தம் ஆம் பஞ்சவ வாழ்க்கை விளைவினுள் பட்ட துன்பம் வெந்தது கருணை ஆகி மெய் உணர்வு இன்பம் தன்னைத் தந்தது பாதம் சூட்டித் தன் மயம் ஆக்கிற்று அன்றே. | 72 |
|
|
உரை
|
|
|
|
|
3064. | சச்சிதானந்தம் ஆம் அத் தனிப் பர சிவனே தன்னது இச்சையால் அகிலம் எல்லாம் படைத்து அளித்து ஈறு செய்யும் விச்சை வானவரைத் தந்த மேலவன் பிறவித் துன்பத்து அச்சம் உற்று அடைந்த்தோர்க்கு ஆனா இன்பவீடு அளிக்கும் அன்னோன். | 73 |
|
|
உரை
|
|
|
|
|
3065. | மந்தரம் கயிலை மேருப் பருப்பதம் வாரணாசி இந்த நல் இடங்கள் தோறும் இக பர போகம் யார்க்கும் தந்து அருள் செய்து எம் போல்வார் தம் மனம் புறம் போகாமல் சிந்தனை திருத்தி ஞானத் திருஉரு ஆகி மன்னும். | 74 |
|
|
உரை
|
|
|
|
|
3066. | ஒப்பவர் மிக்கோர் வேறு அற்று ஒருவனாய் எங்கும் தங்கும் அப் பரம் சுடரே இந்த ஆலவாய் உறையும் சோதி கைப் படு கனிபோல் மேல் நாள் கண்ணுவன் ஆதி யோர்க்கு மெய்ப் பொருள் விளங்கித் தோன்றா வேதத்தை விருத்தி செய்தான். | 75 |
|
|
உரை
|
|
|
|
|
3067. | தன் அருளால் ஞானத் தபனியம் ஆகும் தில்லைப் பொன் நகர் இடத்தில் என்னைப் போகெனப் பணித்தான் நீரும் அன்னதற்கு இசைதிர் ஆக என்று ஆலவாய் அடிகள் தம்மைப் பன்னரும் துதியால் ஏத்தி விடை கொடு பணிந்து போவார். | 76 |
|
|
உரை
|
|
|
|
|
3068. | தன் தொடக்கு அறுத்த நாதன் தாள் தொடக்குண்டு போவார் பின் தொடர்ந்து அரசன் செல்லப் பெருந்தவர் நின்மின் நின்மின் என்றனர் செலவும் கூப்பி எல்லை சென்று அணியன் ஆகிச் சென்று அடி பணிந்து தென்னன் விடை கொடு திரும்பினானே. | 77 |
|
|
உரை
|
|
|
|
|
3069. | துறந்தவர் போக மீண்டு தொல் நகர் அடைந்து தென்னன் அறம் தரு பங்கினாரை அடைந்து தான் பிரம்பு நீட்டப் புறம் தரு கருணை வெள்ளம் பூரிப்பத் தாழ்ந்து நெஞ்சம் நிறைந்தது வாய் கொள்ளாமல் நின்று எதிர் துதிப்பது ஆனான். | 78 |
|
|
உரை
|
|
|
|
|
3070. | அடையாளம் பட ஒருவன் அடித்த கொடும் சிலைத் தழும்பும் தொடையாக ஒரு தொண்டன் தொடுத்து எறிந்த கல்லும் போல் கடையானேன் வெகுண்டு அடித்த கைப் பிரம்பு உலகம் எல்லாம் உடையானே பொறுத்ததோ உன் அருமைத் திருமேனி. | 79 |
|
|
உரை
|
|
|
|
|
3071. | கடியேறு மலர் மகன் மால் முதல் ஆய கடவுளரும் படி ஏழும் அளவு இறந்த பல் உயிரும் நீயேயோ முடி ஏற மண் சுமந்தாய் முதுகில் அடி வடுப்பட்டது அடியேனும் பட்டென் நின் திருமேனி ஆனேனோ. | 80 |
|
|
உரை
|
|
|
|
|
3072. | கைக்கும் மருந்து இன் சுவையின் காட்டுமாறு என வினைக்கும் பொய்க்கும் அரும் கலன் ஆகி மண் ஆண்டு புலை நரகம் துய்க்கும் அரும் துயர் களைவான் மாறாய் நின் துணை அடிக்கே ய்க்கும் மருந்து அவர் என்று அறியாமை ஒறுத்தேனே. | 81 |
|
|
உரை
|
|
|
|
|
3073. | பாதி உமை உருவான பரமேட்டீ எனக்கு இம்மை ஊதியமும் பரகதியும் உறுதி பெற விளைவிக்கும் நீதியினான் மந்திரியாய் நின் அருளே அவதரித்த வேதியரை அறியாதே வெறுத்து நான் ஒறுத்தேனே. | 82 |
|
|
உரை
|
|
|
|
|
3074. | மாயா விருத்தியில் நான் மாழாந்து மாதவரை ஆயாது ஒறுத்தேன் அரு நரகத்து ஆழ்ந்து நான் வீயமல் இன்று அனையார் மெய்ம்மை எலாம் தேற்றிய வெண் தாயானாய் தண்ணளிக் என் தமியேன் செய் கைம்மாறே. | 83 |
|
|
உரை
|
|
|
|
|
3075. | நின்னை உணர்ந்தவர் வேத நெறி வேள்வி செய்து ஊட்டும் இன் அமுதில் கழி சுவைத்தோ இவள் இடும் பிட்டு எவ் உயிர்க்கும் மன்னவனே செம் துவர் வாய் மல்ர்ந்து அமுது செய்தனை ஆல் அன்னை இலா உனக்கு இவள் ஓர் அன்னையாய் வந்தாளோ. | 84 |
|
|
உரை
|
|
|
|
|
3076. | அன்று சிறுத் தொண்டர் இடும் பிள்ளைக் கறி அமுதும் மென்று சுவை தெரிந்த வேடன் இட்ட ஊனும் போல் நன்று நரையாட்டி இடு பிட்டு நயந்து அருந்தி என்றும் அடியார்க்கு எளிவந்தாய் எம் தாயே. | 85 |
|
|
உரை
|
|
|
|
|
3077. | நரி யாவும் பரி ஆக்கி நடத்தியும் அம்பரம் அன்றித் தரியா யான் தரு துகிலைத் திரு முடிமேல் தரித்து மறைக்கு அரியாய் நீ என் பாசம் அறுக்க வரும் திரு மேனி தெரியாதே பரி ஆசை திளைத்து இறுமாந்து இருந்தேனே. | 86 |
|
|
உரை
|
|
|
|
|
3078. | விண் சுமக்கும் புள்ளாய் விலங்காய்ச் சுழன்று மனம் புண் சுமக்கும் சூழ்ச்சி வலி உடைய புத்தேளிர் மண் சுமக்கும் மள்ளராய் வந்திலரே வந்தக் கால் பண் சுமக்கும் சொல்லின் பங்கன் பாத முடி காண்பாரே. | 87 |
|
|
உரை
|
|
|
|
|
3079. | என்று பல முறையாலே துதித்து அடைந்தோர்க்கு அன்பர் இவர் இவரைத் தேறின் நன்று மிக பரபோகம் வீடு பெறல் எளிது என்று நகைத்தார் வேந்தன் அன்று திருப்பணி பூசை பிறவும் நனி வளம் பெருக்கி அழகார் வெள்ளி மன்றுடையான் அடிக்கு அன்பும் உயிர்க்கு அன்பும் சுரந்து ஒழுகி வாழும் நாளில். | 88 |
|
|
உரை
|
|
|
|
|
3080. | முன்பு பெரும் துறையார்க்கும் அடியார்க்கும் அறம் தெரிந்த முறையால் ஈட்டும் தன் பொருள் போய் உடன் பலவாய்த் தழைத்து வருபயனே போல் தலை உவாவின் நன் பனி கான் மதி கண்ட உவரி எனப் பல செல்வம் நாளும் ஓங்க இன் புறுவான் சக நாதன் எனும் மகப் பெற்று இன்பத்துள் இன்பத்து ஆழ்ந்தான். | 89 |
|
|
உரை
|
|
|
|
|
3081. | அம் மகனை முடி சூட்டி அரசாக்கி வாதவூர் அமைச்சர் சார்பன் மெய்ம்மை நெறி விளக்கி இரு வினை ஒப்பில் அரன் கருணை விளைந்த நோக்கான் மும்மை மலத் தொடர் நீந்திச் சிவானந்தக் கடல் படிந்து முக்கண் மூர்த்தி செம் மலர்த்தாள் நிழல் அடைந்தான் திறல் அரிமர்த்தனன் எனும் தென்பார் வேந்தன். | 90 |
|
|
உரை
|
|
|
|
|
3082. | வழுதியால் விடுக்கப் பட்ட வாதவூர் முனிகள் தம்மைப் பழுது இலாப் பாடல் கொள்வார் பதி பல பணிந்து போந்து முழுது உணர் மறையோர் வேள்விப் புகை அண்ட முடி கீண்டு ஊழி எழு வட வரை போல் தோன்றும் எழில் தில்லை மூதூர் சேர்ந்தார். | 91 |
|
|
உரை
|
|
|
|
|
3083. | வீதி தொறும் வீழ்ந்து வீழ்ந்து இறைஞ்சி ஆலயத்து எய்தி மெய்மை ஆன கோதி அறிவு ஆனந்தச் சுடர் உரு ஆம் சிவகங்கை தோய்ந்து மேனி பாதி பகிர்ந்தவள் காணப் பரானந்த தனிக் கூத்து பயிலா நிற்கும் ஆதி அருள் ஆகிய அம்பலம் கண்டு காந்தம் நேர் அயம் போல் சார்ந்தார். | 92 |
|
|
உரை
|
|
|
|
|
3084. | அன்று குருந்து அடியில் வைத்து ஆண்ட கோலமே அருள் ஆனந்த மன்று இடத்து எதிர் தோன்றி வா என்பார் என மூரல் மணிவாய் தோற்றி நின்ற தனிப் பெரும் கூத்தர் நிலை கண்டார் அஞ்சலித்தார் நிலமேல் வீழ்ந்தார் ஒன்று அரிய புலன் கரண வழி நீந்தி மெய் அன்பின் உருவம் ஆனார். | 93 |
|
|
உரை
|
|
|
|
|
3085. | வண்டு போல் புண்டரிக மலரில் விளை சிவ அனந்த மதுவை வாரி உண்டு வாசகம் பாடி ஆடி அழல் வெண்ணெய் என உருகும் தொண்டர் விண் துழாவிய குடுமி மன்று உடையான் திருவாக்கான் மிகுந்த நேயம் கொண்டு போய்க் குணதிசையில் அரும் தவர் வாழ் தபோவனத்தைக் குறுகி அம் கண். | 94 |
|
|
உரை
|
|
|
|
|
3086. | குறி குணங்கள் கடந்த தனிக் கூத்தன் உரு எழுத்து ஐந்தின் கொடுவாள் ஓச்சிப் பொறி கரணக் காடு எறிந்து வீசி மனப் புலம் திருத்திப் புனிதம் செய்து நிறை சிவமாம் விதை விதைத்துப் பசு போதம் களைந்து அருணன் நீர் கால் பாய அறி உருவாய் விளைந்த தனிப் பார் ஆனந்த அமுது அருந்தாது அருந்தி நின்றார். | 95 |
|
|
உரை
|
|
|
|
|
3087. | மான் நிரையும் குயவரியும் வந்து ஒருங்கு நின்று ரிஞ்சா மயங்கு கானத்து ஆன் நிரைக கன்று என இரங்கி மோந்து நக்க ஆனந்த அருள் கண்ணீரைக் கான் நிறை புள்ளினம் பருகக் கருணை நெடும் கடல் இருக்கும் காட்சி போலப் பால் நிற வெண் நீற்று அன்பர் அசை வின்றிச் சிவயோகம் பயிலும் நாளில். | 96 |
|
|
உரை
|
|
|
|
|
3088. | புத்தர் சிலர் இலங்கையினும் போந்து மூவாயிர மெய்ப் போத வேத வித்தக ரோடு ஏழு நாள் வரை யறுத்துச் சூள் ஒட்டி விவாதம் செய்வார் இத் தகைய நாள் ஏழில் யாம் இவரை வேறும் எனும் எண்ணம் பூண்ட சித்தம் உடையவர் ஆக அவர் கனவில் எழுந்து அருளித் தேவ தேவர். | 97 |
|
|
உரை
|
|
|
|
|
3089. | வாதவூரனை விடுத்து வாது செய்வீர் என விழித்து மறையோர் அந்தப் போத வேதியரை வனம் புகுந்து அழைத்தார் அப்போது பொதுவில் ஆடும் வேத நாயகன் பணித்த வழி நின்றார் எதிர் மறுப்ப மீண்டு போந்து காதார குல மூழ்கி இருந்தார் தழல் நிமிர்த்துக் கலியைக் காய்வார். | 98 |
|
|
உரை
|
|
|
|
|
3090. | பின்னும் அவர் கனவின் கண் மன்றுள் நடம் பிரியாத பெருமான் வந்து முன்னவனைப் பெருந்துறையில் குருந்தடியில் ஆட் கொண்ட முறையினாலும் இன் இசை வண் தமிழ் மணி போல் பாடும் காரணத்தாலும் யாம் அன்று இட்ட மன்னிய பேர் மாணிக்க வாசகன் என்று அழை மின்கள் வருவான் என்றார். | 99 |
|
|
உரை
|
|
|
|
|
3091. | உறக்கம் ஒழிந்த அறவோர் சென்றவர் நாமம் மொழிந்து அழைப்ப உணர்ந்து நாதன் அறக் கருணை இதுவோ என்று அவரோடும் எழுந்து நகர் அடைந்து மண்ணும் துறக்கமும் நீத்து அருவத்தார் மன்று ஆடும் துணைக் கமலம் தொழுது மீண்டோர் நிறக் கனக மண்டபத்தில் புக்கு இருந்தார் அறிஞர் சூழா நெருங்கிச் சூழ. | 100 |
|
|
உரை
|
|
|
|
|
3092. | தத்து நீர்க் கலத்தில் போந்த சீவரப் போர்வை தாங்கும் புத்தரை வேறு வைத்துப் புகன்மின் நும் இறையும் நூலும் அத்தலை நின்றோர் எய்தும் கதியும் என்று ஆய்ந்த கேள்வி மெய்த்தவ நெறி மாணிக்க வாசகர் வினவினாரே. | 101 |
|
|
உரை
|
|
|
|
|
3093. | கனவினும் நீறு காணாக் கைதவர் காட்சி யானும் மன அனுமானத் தானும் வாசகப் பெருமான் தம்மை வினவிய மூன்று முத்தே சாதியின் விரித்தார் வேதம் அனையவர் கேட்ட அம் மூன்று மனு வாதம் செய்து உட்கொள்ளா. | 102 |
|
|
உரை
|
|
|
|
|
3094. | இன்று இவர்க்கு அனுமான் ஆதி எடுப்பது என் என்று காட்சி ஒன்று கொண்டு அவர்கள் தாமே உடம்படல் மறுத்தார் காட்சி அன்றி ஏது இன்மையாலே அனுமான அளவை யாலும் நின்றவன் நும் கோன் ஆதி நிறுத்திய மூன்றும் என்றார். | 103 |
|
|
உரை
|
|
|
|
|
3095. | பொன்று தன் முத்தி என்பார் பூசுரர் பிரானை நோக்கி இன்று எமைக் காட்சி ஒன்றால் வென்றனம் என்றீர் ஆனால் நன்று நும் கடவுள் தன்னை அளவையான் ஆட்சி எம்மை வென்றிடும் என்றார் ஐந்தும் வென்றவர் முறுவல் செய்யா. | 104 |
|
|
உரை
|
|
|
|
|
3096. | பிறவி அந்தகர்க்கு வெய்யோன் பேரொளி காட்டலாமோ மறைகளால் அளவை தன்னால் தேவரான் மனத்தால் வாக்கால் அறிவரும் சோதி எங்கோன் அவன் திரு நீற்றுத் தொண்டின் குறிவழி அன்றிக் காணும் கொள்கையான் அல்லன் என்றார். | 105 |
|
|
உரை
|
|
|
|
|
3097. | தோற்றம் இல்லாதவர் உங்கள் சிவனுக்கும் திரு நீற்றுக்கும் தோற்றம் எப்படித் திட்டாந்தம் சொல்லுமின் என்றார் தூயோர் வேற்றுமை அற நாம் இன்னே விளக்குதும் அதனை நீங்கள் தோற்ற பின் நுமக்குத் தண்டம் யாது கொல் சொல்மின் என்றார். | 106 |
|
|
உரை
|
|
|
|
|
3098. | செக்கு உரலிடை இட்டு எம்மைத் திரிப்பது தண்டம் என்னா எக்கர் ஆம் தாமே இசைந்தனர் எரிவாய் நாகம் கொக்கு இறகு அணிந்தார் அன்பர் உலர்ந்த கோ மயத்தை வாங்கிச் செக்கரம் தழல் வாய்ப் பெய்து சிவந்திட வெதுப்பி வாங்கி. | 107 |
|
|
உரை
|
|
|
|
|
3099. | இவ்வண்ணம் இருக்கும் எங்கள் இறை வண்ண வடிவு அந்தச் செவ் வண்ண மேனி பூத்த திரு வெண்ணீறு அதுவும் என்னா மெய் வண்ணம் உணர்ந்த வேத வித்தகர் அவை முன் காட்டா உய்வ் வண்ணம் அறியா மூடர் உள்ளமும் உயிரும் தோற்றார். | 108 |
|
|
உரை
|
|
|
|
|
3100. | இங்கு இவர் தோற்ற வண்ணம் கேட்டவர் இறப்ப இன்பம் தங்கு வீடு என்று தேற்றும் சமயத்தில் ஆழ்ந்த ஆத்திக் கொங்கு இவர் தாரான் மூங்கைக் குயில் பெடை எனத்தான் ஈன்ற மங்கையைக் கொண்டு தில்லை மல்லன் மா நகரில் வந்தான். | 109 |
|
|
உரை
|
|
|
|
|
3101. | யாவரே ஆக இன்று இங்கு என் மகன் மூங்கை தீர்த்தோர் ஆவரே வென்றோர் என்றன் ஆற்றவும் மானம் பூண்டு சாவதே முத்தி என்பார் மணி முதன் மூன்றும் தங்கள் தேவரே என்று என்று உள்கிச் செய்யவும் தீராதாக. | 110 |
|
|
உரை
|
|
|
|
|
3102. | அந்தணர் பெருமான் முன் போய் அரசன் மகளைப் போகட்டி இந்த நோய் நீரே தீர்க்க வேண்டும் என்று இரந்தான் ஐயன் சுந்தர நாதன் மன்றுள் துணைத்தாள் தன்னைத் சிந்தை செய்து அருட் கண் நோக்கால் திருந்து இழை அவளை நோக்கா. | 111 |
|
|
உரை
|
|
|
|
|
3103. | வேறு வேறு இறைவன் கீர்த்தி வினா உரையாகப் பாடி ஈறு இலா அன்பர் கேட்ப இறை மொழி கொடுத்து மூங்கை மாறினாள் வளவன் கன்னி மடவரல் வளவன் கண்டு தேறினான் சிவனே எல்லாத் தேவர்க்கும் தேவன் என்னா. | 112 |
|
|
உரை
|
|
|
|
|
3104. | பின்பு அரவு ஆரம் பூண்ட பிரான் அருள் விளையப் பாடும் அன்பரை முனிவர் மூவாயிரவரை அடியில் தாழ்ந்து முன்பு அவர் சொன்னவாறே மூர்க்கரைத் தடிந்து மன்றுள் இன்பரை நடம் கண்டு ஏத்தி இறைமகன் சைவன் ஆனான். | 113 |
|
|
உரை
|
|
|
|
|
3105. | மாசு அறு மணிபோல் பல் நாள் வாசக மாலை சாத்திப் பூசனை செய்து பல் நாள் புண்ணிய மன்றுள் ஆடும் ஈசனை அடிக் கீழ் எய்தி ஈறு இலா அறிவு ஆனந்தத் தேசொடு கலந்து நின்றார் சிவன் அருள் விளக்க வந்தார். | 114 |
|
|
உரை
|
|
|
|