தொடக்கம் |
|
|
3106. | வான அமுத மதி முடிமேல் மதுரைப் பெருமான் மண் சுமந்து தேன் அமுத வாசகரைக் கதியில் விடுத்த திறன் இது மேல் பால் நன் மணிவாய்க் கவுணியனை விதுத்துச் சமணர் படிற்றெழுகும் கூனல் வழுதி சுரம் தணித்து ஆட் கொண்ட கொள்கை கூறுவாம். | 1 |
|
|
உரை
|
|
|
|
|
3107. | வாகு வலத்தான் சகநாத வழுதி வேந்தன் மகன் விர வாகு அவன் சேய் விக்கிரம வாகு அவன் சேய் பராக்கிரம வாகு அனையான் மகன் சுரபி மாறன் அனையான் திருமைந்தன் வாகு வலத்தான் மறம் கடிந்து மண் ஆளும் குங்குமத் தென்னன். | 2 |
|
|
உரை
|
|
|
|
|
3108. | அன்னான் குமரன் கருப்புர பாண்டியன் ஆம் அவன் சேய் காருணிய மன்னாம் அவன் தன் மகன் புருடோத்தமனாம் அவன் தன் மகன் ஆகும் மின்னார் மௌலிச் சத்துரு சாதன பாண்டியன் ஆம் விறல் வேந்தன் இன்னான் மகன் கூன் பாண்டியன் ஆம் இவன் தோள் வலியால் இசைமிக் கான். | 3 |
|
|
உரை
|
|
|
|
|
3109. | திண் தோள் வலியால் குட நாடர் செம் அறனையும் மார் அலங்கல் வண் தோல் இடு தார் இரவி குல மருமான் தனையும் மலைந்து புறம் கண்டு ஓர் குடைக் கீழ் நிலம் முன்றும் காவல் புரிந்து கோல் ஓச்சிப் புண் தோய் குருதி மறக் கன்னிப் புகழ் வேல் வழுதி நிகழ் நாளில். | 4 |
|
|
உரை
|
|
|
|
|
3110. | துண் துழாவும் கைம்மாவும் வெறுக்கைக் குவையும் மணிக் குவையும் வண்டு வீழும் தார் அளக வல்லி ஆய மொடு நல்கிக் கண்டு கூடல் கோமகனைக் காலில் வீழ்ந்து தன்னாடு பண்டு போலக் கைக் கொண்டு போனான் தேன் ஆர் பனம் தாரான். | 5 |
|
|
உரை
|
|
|
|
|
3111. | சென்னிக் கோனும் தான் ஈன்ற திலகப் பிடியை உலகம் எலாம் மின்னிக் கோது இல் புகழ் ஒளியால் விளக்கும் சைவ மணி விளக்கை கன்னிக் கோல மங்கையருக்கு அரசி தன்னைக் கௌரியற்கு வன்னிக் கோமுன் மணம் புணர்த்தி வாங்கினான் தன் வள நாடு. | 6 |
|
|
உரை
|
|
|
|
|
3112. | வளவர் கோன் செழியன் கற்பின் மங்கையர்க்கு அரசியார்க்கு அளவு அறு நிதியும் செம் பொன் கலிங்கமும் மணியும் போகம் விளை நிலம் அனைய ஆய வெள்ளமும் பிறவும் தென்னன் உளம் மகிழ் சிறப்ப வேந்தர் வரிசையால் உதவிப் பின்னர். | 7 |
|
|
உரை
|
|
|
|
|
3113. | கோது அறு குணத்தின் மிக்க குலச்சிறை என்பான் அங்கு ஓர் மேதகு கேள்வியானை விடுத்தனன் ஈண்டு தென்னன் காதலியோடு காவல் கடவுள் செம் பதுமக் கோயில் மாதரை மணந்து செல்வான் போல் வந்து மதுரை சேர்ந்தான். | 8 |
|
|
உரை
|
|
|
|
|
3114. | மலர் மகள் மார்பன் பொன்னி மன்னவன் பயந்த தெய்வக் குல மகள் உடனே வந்த குலச் சிறை குணனும் கேள்வித் தலைமையும் மதியின் மிக்க தன்மையும் தூக்கி நோக்கி நலம் மலி அமைச்சன் ஆக்கி நால் நிலம் புரக்கும் நாளில். | 9 |
|
|
உரை
|
|
|
|
|
3115. | வல்வினை வலியான் மெய்யில் வலிய கூன் அடைந்தன் போலக் கொல் வினை இலராய் வஞ்சம் கொண்டு உழன்று உடுத்த பாசம் வெல் வினை அறியா நக்க வேடர் சொல் வலையில் பட்டு நல் வினை உதவாத் தென்ன நால் மறை ஒழுக்கம் நீத்தான். | 10 |
|
|
உரை
|
|
|
|
|
3116. | போது அவிழ் தாரான் அக்கர் புன் நெறி ஒழுக்கம் பூண்டோன் ஆதலில் கன்னி நாடும் அமண் இருள் மூழ்கிப் பூதி சாதன நெறி ஆம் சைவ சமயமும் முத்திச் செல்வ மாதவ நெறியும் குன்ற மறைந்தது வேத நீதி. | 11 |
|
|
உரை
|
|
|
|
|
3117. | பறி படு தலையும் பாயின் உடுக்கையும் பாசிப் பல்லும் உறி பொதி கலனும் அத்தி நாத்தி என்று உரைக்கும் நாவும் அறி வழி உளம் போல் நாண் அற்று அழிந்த வெற்றரையும் கொண்டு குறிகெடு அணங்கு சூழ்ந்து ஆங்கு அமண் இறை கொண்டது எங்கும். | 12 |
|
|
உரை
|
|
|
|
|
3118. | அரும் தமிழ்ப் பாண்டி வேந்தற்கு உறுதி ஆக்கம் செய்யும் மருந்தினில் சிறந்த கற்பின் மங்கையர்க்கு அரசி யாரும் பெருந்தகை அமைச்சு நீரில் குழைத்து அன்றி பிறங்கப் பேறு தரும் திரு நீறு இடாராய் சிவ அடிச் சார்பில் நின்றார். | 13 |
|
|
உரை
|
|
|
|
|
3119. | பொய் உரை பிதற்றும் இந்தப் புன் சமண் களைகட்டு ஈண்டு மெய் உரை வேத நீதி வியன் பயிர் தலைச் செய்து ஓங்கச் செய்யுநர் எவரோ என்று சிந்தையில் கவலை பூண்டு நையுநர் ஆகிக் கூடல் நாதனை வணங்கப் போனார். | 14 |
|
|
உரை
|
|
|
|
|
3120. | பேது உற்ற முனிவர்க்கு அன்று பெரு மறை விளக்கம் செய்த வேதத்தின் பொருளே இந்த வெம் சமண் வலையில் பட்டு போதத்தை இழந்த வேந்தன் புந்தியை மீட்டு இப்போது உன் பாதத்தில் அடிமை கொள்வாய் என்று அடி பணியும் எல்லை. | 15 |
|
|
உரை
|
|
|
|
|
3121. | வேதியன் ஒருவன் கண்டி வேடமும் பூண்டோன் மெய்யில் பூதியன் புண்டரிக புரத்தினும் போந்தோன் கூடல் ஆதியைப் பணிவான் வந்தான் மங்கையர்க்கு அரசியாரும் நீதிய அமைச்சர் ஏறு நேர்பட அவனை நோக்கா. | 16 |
|
|
உரை
|
|
|
|
|
3122. | எங்கு இருந்து அந்தணாளீர் வந்தனிர் என்றார் ஆய்ந்த புங்கவன் சென்னி பொன்னி நாட்டினும் போந்தேன் என்றான் அங்கு அவர் அங்கு உண்டான புதுமை யாது அறைதிர் என்றார் சங்கரற்கு அன்பு பூண்டோன் உண்டு என்று சாற்று கின்றான். | 17 |
|
|
உரை
|
|
|
|
|
3123. | ஏழ் இசை மறை வல்லாளர் சிவபாத இதயர் என்னக் காழியில் ஒருவர் உள்ளார் கார் அமண் கங்குல சீப்ப ஆழியில் இரவி என்ன ஒரு மகவு அளித்தி என்னா ஊழியில் ஒருவன் தாளை உள்கி நோற்று ஒழுகி நின்றார். | 18 |
|
|
உரை
|
|
|
|
|
3124. | ஆய மாதவர் பால் ஈசர் அருளினால் உலகம் உய்யச் சேய் இளம் கதிர் போல் வந்தான் செல்வனுக்கு இரண்டு ஆண்டு எல்லை போய பின் மூன்றாம் ஆண்டில் பொரு கடல் மிதந்த தோணி நாயகன் பிராட்டியோடும் விடையின் மேல் நடந்து நங்கை. | 19 |
|
|
உரை
|
|
|
|
|
3125. | திருமுலைப் பாலினோடு ஞானமும் திரட்டிச் செம் பொன் குரு மணி வள்ளத்து ஏந்திக் கொடுப்ப அப் பாலன் வாங்கிப் பருகி எண் இறந்த வேத ஆகமம் இவை பற்றிச் சார்வாய் விரிகலை பிறவும் ஒதாது உணர்ந்தனன் விளைந்த ஞானம். | 20 |
|
|
உரை
|
|
|
|
|
3126. | நம் பந்தம் அறுப்போன் ஞான நாயகன் ஞானத் தோடு சம்பந்தம் செய்து ஞான சம்பந்தன் ஆகி நாவில் வம் பந்த முலை மெய்ஞ்ஞான வாணியும் காணி கொள்ள அம் பந்த மறைகள் எல்லாம் அரும் தமிழாகக் கூறும். | 21 |
|
|
உரை
|
|
|
|
|
3127. | கரும் பினில் கோது நீத்துச் சாறு அடு கட்டியே போல் வரம்பு இலா மறையின் மாண்ட பொருள் எலாம் மாணத் தெள்ளிச் சுரும்பு இவர் கொன்றை வேணிப் பிரான் இடம் தோறும் போகி விரும்பிய தென் சொல் மாலை சிவ மணம் விளையச் சாத்தி. | 22 |
|
|
உரை
|
|
|
|
|
3128. | பருமுத்த முலையாள் பங்கன் அருளினால் பசும் பொன் தாளம் திரு முத்தின் சிவிகை காளம் தெள் முத்தின் பந்தர் இன்ன நிருமித்த வகைபோல் பெற்றுப் பாலையை நெய்தல் ஆக்கி பொரு முத்த நதி சூழ் வீழிப் பொன் படிக்காசு பெற்று. | 23 |
|
|
உரை
|
|
|
|
|
3129. | அருமறை வணங்கும் கோயில் கதவினை அடைக்கப் பாடிப் பரன் உறை பதிகள் எங்கும் தொழுதனர் பாடிப் பாடி வரும் அவர் நுங்கள் நாட்டு வணங்கவும் வருவார் என்னத் தரும நூல் அணிந்த தெய்வத் தாபதன் சாற்றலோடும். | 24 |
|
|
உரை
|
|
|
|
|
3130. | கற்பு அலர் கொடி அன்னாரும் தென்னவன் கண் போல்வாரும் அற்புரை அமண் பேய் ஓட்டி அன்று தம் கோமான் மெய்யில் பொற்பு உறு நீறு கண்டு பூதி சாதனத்தால் எய்தும் சிறபர வீடு கண்ட மகிழ்சியுள் திளைத்தோர் ஆனார். | 25 |
|
|
உரை
|
|
|
|
|
3131. | தங்கள் பேர் தீட்டி ஓலை விண்ணப்பம் சண்பை நாடர் புங்கவர்க்கு உணர்த்த அந்தப் பூசுரன் கையில் போக்கி மங்கையர்க்கு அரசியாரும் அரசர்க்கு மருந்து அன்னானும் அம் கயல் கண்ணி கோனைப் பணிந்து தம் அகத்தில் புக்கார். | 26 |
|
|
உரை
|
|
|
|
|
3132. | பண் படு வேதச் செல்வன் வல்லை போய்ப் பழன வேலிச் சண்பையர் பிரானைக் கண்டு பறியுண்டு தலைகள் எல்லாம் புண் படத் திரியும் கையர் பொய் இருள் கடந்தார் தந்த எண் படும் ஓலை காட்டிப் பாசுரம் எடுத்துச் சொன்னான். | 27 |
|
|
உரை
|
|
|
|
|
3133. | வெம் குரு வேந்தர் அடி பணிந்து அடியேன் குலச் சிறை விளம்பும் விண்ணப்பம் இங்கு எழுந்து அருளிச் சமண் இருள் ஒதுக்கி எம் இறை மகற்கு நீறு அளித்துப் பொங்கி வரும் பணை சூழ் தென் தமிழ் நாட்டைப் பூதி சாதன வழி நிறுத்தி எங்களைக் காக்க என்ற பாசுரம் கேட்டு எழுந்தனர் கவுணியர்க்கு இறைவர். | 28 |
|
|
உரை
|
|
|
|
|
3134. | ஆதகாது இது என்று ஓதுவார் நாவுக் கரையர் நீர் சிறியர் அவரோ பாதகம் அஞ்சார் தம் மொடும் பல் நாள் பழகிய எனை அவர் செய்த வேதனை அளந்து கூறுவது என்னை விடுகதில் அம்மவோ உமக்கு இப் போது நாள் கோள்கள் வலி இல என்னப் புகலியர் வேந்தரும் புகல்வார். | 29 |
|
|
உரை
|
|
|
|
|
3135. | எந்தை எம் பெருமான் அருள் இலார் போல இன்னணம் இசைப்ப தென்னவர் செய் வெந்த வேதனையின் உய்த்த நீர் நாள் கோள் விளங்கு புள் அவுணர் பேய் பூதம் அந்தம் இல் பலவும் அம்மையோடு அப்பன் ஆணையால் நடப்பன அவர் நம் சிந்தையே கோயில் கொண்டு வீற்று இருப்பத் தீங்கு இழையா என எழுந்தார். | 30 |
|
|
உரை
|
|
|
|
|
3136. | மா முரசு ஒலிப்பச் சங்கம் காகளம் வாய்விட்டு ஏங்கச் சாமரை பனிப்ப முத்தின் பந்தரில் தரளத் தெய்வக் காமரு சிவிகை மேல் கொண்டு அமண் இருள் கழுவும் சோதி யாம் என நெறிக் கொண்டு ஈசன் இடம் தொறும் அடைந்து பாடி. | 31 |
|
|
உரை
|
|
|
|
|
3137. | செம்பியன் நாடு நீந்தித் தென்னவன் நாடு நண்ணி வெம்பிய சுரமும் முல்லைப் புறவமும் மேக வில்லைத் தும்பிகை நீட்டி வாங்கும் மலைகளும் துறந்து பாகத் தம்பி கையுடையான் கூடல் நகர்ப் புறம் அனுகச் செல்வார். | 32 |
|
|
உரை
|
|
|
|
|
3138. | புண்ணிய நீற்றுத் தொண்டர் குழாத்தினுள் புகலி வேந்தர் நண்ணிய சிவிகை மீது நகைவிடு தரளப் பந்தர் கண்ணிய தோற்றம் தீம் பால் கடல் வயிறு உதித்து தீர்ந்து விண் இயல் முழு வெண் திங்கள் விளக்கமே ஒத்தது அன்றே. | 33 |
|
|
உரை
|
|
|
|
|
3139. | தேம் படு குமுதச் செவ்வாய் சிர புரச் செல்வர் முன்னம் போம் பரி கனத்தார் தம்மில் பொன் நெடும் சின்னம் ஆர்ப்போர் தாம் பர சமய சிங்கம் சமண் இருள் கிழியப் பானு ஆம் படி வந்தான் என்று என்று ஆர்த்து எழும் ஒசை கேளா. | 34 |
|
|
உரை
|
|
|
|
|
3140. | நின்று உண்டு திரியும் கையர் எதிர் வந்து நீவிர் நுங்கள் கொன்று அறம் சொன்ன தேவைக் கும்பிட வந்தால் இந்த வென்றி கொள் சின்னம் என் கொல் வீறு என் கொல் யாரை வென்றீர் என்றனர் தடுத்தார் என்று ஈறு இலா அடியார் தம்மை. | 35 |
|
|
உரை
|
|
|
|
|
3141. | மா மதம் ஒழுகச் செல்லும் திண் திறல் மத்த வேழம் தாமரை நூலால் கட்டத் தடைபட அற்றோ கொற்றக் காமனை முனிந்தார் மைந்தர் கயவர் தம் தடையை நீத்துக் கோமணி மாட மூதூர் அடைந்து அரன் கோயில் புக்கார். | 36 |
|
|
உரை
|
|
|
|
|
3142. | கைம் மலைச் சாபம் தீர்த்த கருணை அம் கடலைத் தாழ்ந்து மும்முறை வளைந்து ஞான முகிழ் முலைப் பாலினோடு செம் மணி வள்ளத்து ஈந்த திரு வொடும் தொழுதான் அந்த மெய்ம் மய வெள்ளத்து ஆழ்ந்து நின்றனர் வேதச் செல்வர். | 37 |
|
|
உரை
|
|
|
|
|
3143. | மறை வழி நின்று நின்னை வந்தி செய்து உய்ய மாட்டா நிறை வழி வஞ்ச நெஞ்சச் சமணரை நெறிகள் எல்லாம் சிறை பட வாது செய்யத் திருவுளம் செய்தி கூற்றைக் குறைபட உதைத் தோய் என்று குறித்து உரை பதிகம் படி. | 38 |
|
|
உரை
|
|
|
|
|
3144. | வேண்டு கொண்டு அருளைப் பெற்று மீளும் அப்போது கண்டு மூண்ட ஐம் பொறியும் வென்று வாகீச முனிகள் என்ன ஆண்டு ஊளார் ஒருவர் வேண்ட அவர் திரு மடத்தில் அன்பு பூண்டு எழு காத லோடும் போயினார் புகலி வேந்தர். | 39 |
|
|
உரை
|
|
|
|
|
3145. | அங்கு எழுந்து அருளி எல்லின் அமுது செய்து இருப்பவற்றைக் கங்குல் வாய் அமணர் செய்யும் கருது அரும் செயலும் தங்கள் மங்கல மரபில் வந்தாள் வருத்தமும் காண அஞ்சிச் செங் கதிரவன் போல் மேலைச் செழும் கடல் வெள்ளத்து ஆழ்ந்தான். | 40 |
|
|
உரை
|
|
|
|
|
3146. | மாறு கொள் அமணர் செய்யும் வஞ்சனைக்கு இடனாய் ஒத்து வேறு அற நட்புச் செய்வான் வந்து என விரிந்த கங்குல் ஈறு அற முளைத்த வான் மீன் இனம் அவர் பறித்த சென்னி ஊறு பட்டு எழுந்த மொக்குள் ஒத்த அக் கங்குல் எல்லை. | 41 |
|
|
உரை
|
|
|
|
|
3147. | வைதிகத்து தனி இளம் சிறு மடங்கலேறு அடைந்த செய்தியைத் தெரிந்து அயன் மலை இடங்களில் திரண்ட கை தவத்த எண்ணாயிரம் கயவரும் ஒருங்கே எய்தி முத்தமிழ் விரகர் மேல் பழித்தல் இழைத்தார். | 42 |
|
|
உரை
|
|
|
|
|
3148. | மெய்யில் சிந்தையார் அத் தழல் கடவுளை விளத்து ஆங்கு எய்தி எம் பகை ஆயினோர் இருக்கையை அமுது செய்து வா எனப் பணித்தனர் சிறு விதி மகத்துக் கை இழந்தவன் செல்லுமோ அஞ்சினான் கலங்கி. | 43 |
|
|
உரை
|
|
|
|
|
3149. | ஈனர் தாம் சடத் தீயினை எடுத்தனர் ஏகி ஞான போனகர் மடத்தினில் செருகினர் நந்தாது ஆன தீப் புகை எழுவதை அடியவர் கண்டு வான நாயகன் மைந்தருக்கு உணர்த்தினார் வல்லை. | 44 |
|
|
உரை
|
|
|
|
|
3150. | சிட்டர் நோக்கி அத் தீயினை தென் தமிழ்க் கூடல் அட்ட மூர்த்தியை அங்கு இருந்து அரு மறைப் பதிகம் துட்டர் பொய் உரை மேற் கொண்டு தொல் முறை துறந்து விட்ட வேந்தனைப் பற்று எனப் பாடினார் விடுத்தார். | 45 |
|
|
உரை
|
|
|
|
|
3151. | அடுத்தது அக்கணத்து அரசனை வெப்பு நோய் ஆகித் தொடுத்ததிட்ட பல் கலன்களும் துகள் எழப் பனி நீர் மடுத்த சாந்தமும் கலவையும் மாலையும் கருகப் படுத்த பாயலும் சருகு எழப் புரவலன் பதைத்தான். | 46 |
|
|
உரை
|
|
|
|
|
3152. | வளவர் கோன் திரு மடந்தையும் மந்திரர் ஏறும் தளர்வு அடைந்து நல் மருத்து நூல் விஞ்சையர் தமைக் கூஉய்ப் பளகில் பல் மருந்து அருத்தவும் பார்வையினாலும் விளைவதே அன்றி வெம் சுரம் தணிவது காணார். | 47 |
|
|
உரை
|
|
|
|
|
3153. | சவலை நோன்பு உழந்து இம்மையும் மறுமையும் சாரா அவல மாசரை விடுத்தனர் அனைவரும் பார்த்துத் தவ வலத்தினும் மருந்தினும் தணிந்திலது ஆகத் கவலை எய்தினார் இருந்தனர் விடிந்தது கங்குல். | 48 |
|
|
உரை
|
|
|
|
|
3154. | வட்ட ஆழி ஒன்று உடைய தேர் பரிதி தன் மருமான் பெட்ட காதல் கூர் மருகனைப் பற்றிய பிணி கேட்டு இட்ட கார் இருள் எழினியை எடுத்து எடுத்து அம் கை தொட்டு நோக்குவான் வந்து எனத் தொடு கடல் முளைத்தான். | 49 |
|
|
உரை
|
|
|
|
|
3155. | வாலிது ஆகிய சைவ வான் பயிரினை வளர்ப்பான் வேலி ஆகி ஓர் இருவரும் வேந்தனை நோக்கி கால பாசமும் சுடும் இந் நோய் அரு மறைக் காழிப் பாலர் அன்றித் தீர்த்திடப் படாது எனப் பகர்ந்தார். | 50 |
|
|
உரை
|
|
|
|
|
3156. | பொய்யர் சார்பினை விடாதவன் ஈங்கு நீர் புகன்ற சைவர் நீறு இட்டுப் பார்ப்பது தகுவதோ என்ன ஐய நீ எனைத் திறத்தினால் ஆயினும் நோய் தீர்ந்து உய்ய வேண்டுமே இதின் இல்யாது உறுதி என்று உரைத்தார். | 51 |
|
|
உரை
|
|
|
|
|
3157. | அழைமின் ஈண்டு என அரசனும் இசைந்தனன் ஆர்வம் தழையும் மந்திரத் தலை மகன் தனி நகர் எங்கும் விழவு தூங்க நல் மங்கல வினைகளால் விளக்கி மழலை இன் தமிழ் விரகர் தம் மடாத்தில் வந்து எய்தா. | 52 |
|
|
உரை
|
|
|
|
|
3158. | அன்று கேள்வியால் அருந்திய ஞானவார் அமுதை இன்று கண்களால் உண்டு கண் பெற்ற பேறு எய்திச் சென்று இறைஞ்சினான் எழுந்திரும் தீ அமண் சூழ்ச்சி வென்ற சிந்தையீர் என்றனர் பூந்தராய் வேந்தர். | 53 |
|
|
உரை
|
|
|
|
|
3159. | நன்று இருந்தனிரே என நகை மலர்த் தடம் தார் வென்றி மீனவன் கற்பினார் தம்மையும் வினவ என்று நும் அருள் உடையவர்க்கு வென் குறை என்னா ஒன்று கேண்மை கூர் அன்பினார் இதனையும் உரைப்பார். | 54 |
|
|
உரை
|
|
|
|
|
3160. | கையர் மாளவும் நீற்றினால் கவுரியன் தேயம் உய்வது ஆகவும் இன்று நும் அருளினால் ஒலி நீர் வைகை நாடன் மேல் வெப்பு நோய் வந்ததால் அதனை ஐய தீர்த்திடல் வேண்டும் என்று அடியில் வீழ்ந்து இரந்தார். | 55 |
|
|
உரை
|
|
|
|
|
3161. | இரந்த அன்பருக்கு அன்னது ஆக என்று அருள் சுரந்து பரந்த நித்தில யானமேல் பனிக் கதிர் மருமான் சுரம் தணிப்பல் என்று ஏகுவன் ஒத்து மெய்ச் சுருதி புரந்து அளிப்பவர் பாண்டியன் கோயிலில் புகுவார். | 56 |
|
|
உரை
|
|
|
|
|
3162. | வாயில் எங்கணும் தூபமும் மங்கல விளக்கும் தோய கும்பமும் கொடிகளும் சுண்ணமும் துவன்றச் சேய காகள ஒலி மன்னன் செவிப் புலன் சுவைப்பக் கோயில் எய்தினார் அமணர் தம் கோளரி அனையார். | 57 |
|
|
உரை
|
|
|
|
|
3163. | காவலன் மருங்கு இட்ட ஓர் கதிர் மணித் தவிசின் மேவினார் அவர் நோக்கினான் மீனவன் தெளிந்து வாவி தாழ் செழும் தாமரை என முகம் மலர்ந்து பாவியேன் பிணி தணித்து எனைப் பணி கொள் மின் என்றான். | 58 |
|
|
உரை
|
|
|
|
|
3164. | புலைத் தொழிற்கு வித்து ஆயினோர் கேட்டு உளம் புழுங்கிக் கலைத் தடம் கடல் நீந்திய காவலோய் உன் தன் வலப் புறத்து நோய் இவரையும் மற்றை நோய் எமையும் தொலைத்திடப் பணி என்றனர் கைதவன் சொல்வான். | 59 |
|
|
உரை
|
|
|
|
|
3165. | அனைய செய்திர் என்று இசையுமுன் சமணரும் அசோகன் தனை நினைந்து கைப் பீலியால் தடவியும் கரத்துக் கனை கொளாலி நீர் சிதறியும் நெய் சொரி கனல் போல் சினவி மேல் இடக் கண்டனர் தீர்ந்திடக் காணார். | 60 |
|
|
உரை
|
|
|
|
|
3166. | தீயர் மானம் மிக்கு உடையராய்க் செருக்கு அழிந்து இருப்பப் பாய கேள்வியோர் புண்ணியப் பையுள் நீறு அள்ளிக் காயும் நோய் அது தணித்திடக் கருதினார் அதனை மாய நீறு என விலக்கினார் மாயை செய்து அழிவார். | 61 |
|
|
உரை
|
|
|
|
|
3167. | அண்ட நாயகன் திரு மடைப் பள்ளி நீறு அள்ளிக் கொண்டு வாரும் என்று அருமறைக் கவுணியர் கூறக் கண்டு காவலன் ஏவலர் கைக் கொடு வந்தார் வண்டு உலாவு தார் வழுதி நோய் தணிப்பவர் வாங்கி. | 62 |
|
|
உரை
|
|
|
|
|
3168. | மருந்து மந்திரம் யாவையும் மறை உரைப்பதுவும் பொருந்து இன்ப வீடு அளிப்பதும் போகமும் பொருளும் திருந்து ஆலவாயான் திரு நீறு எனச் சிறப்பித்து அருந்து இன் அமுது அனைய சொல் பதிகம் பாடி அறைந்து. | 63 |
|
|
உரை
|
|
|
|
|
3169. | மெய்யில் இட்டனர் வருடலும் வெம் சுரம் துறந்த மை இல் சிந்தையோர் வெகுளியில் தணிந்தது வாசம் செய்த தண் பனி நீர் விரைச் சந்தனம் திமிர்ந்தால் எய்து தண்மையது ஆயினது இறை வலப் பாகம். | 64 |
|
|
உரை
|
|
|
|
|
3170. | பொழிந்த தண் மதுத் தார் புனை பூழியர் கோனுக் கிழிந்த செய்கையர் கைதொட வெரி இடு சுரத்தால் கழிந்த துன்பமும் கவுணியர் கை தொடச் சுரம் தீர்ந்து ஒழிந்த இன்பமும் இருவினை ஒத்தபோல் ஒத்த. | 65 |
|
|
உரை
|
|
|
|
|
3171. | ஐய இச்சுரம் ஆற்றரிது ஆற்றரிது என்னா வைகை நாடவன் வல் அமண் மாசு தீர்ந்து அடியேன் உய்ய வேண்டுமேல் அதனையும் அடிகளே ஒழித்தல் செய்ய வேண்டும் என்று இரந்தனன் சிரபுரக் கோனை. | 66 |
|
|
உரை
|
|
|
|
|
3172. | பிள்ளையார் இடப் பாகமும் பண்டு போல் பெருமான் வெள்ளை நீறு தொட்டு அம்கையால் நீவும் முன் மேல் நாள் உள்ள கூனோடு வெப்பு நோய் ஒழிந்து மீன் உயர்த்த வள்ளல் மாசு அறக் கடைந்த விண் மணி எனப் பொலிந்தான். | 67 |
|
|
உரை
|
|
|
|
|
3173. | அன்னது ஒரு காரணத்தால் சவுந்தரிய பாண்டியன் என்று ஆகி அன்ன தென்னவர் கோன் கவுணியர் கோன் திரு நோக்கால் பரிசத்தால் தெருட்டும் வாக்கால் பொன் அடி தாழ்ந்து ஐந்து எழுத்து உபதேசப் பேறு அடைந்த பொலிவால் வஞ்சம் துன் அமணர் நெறி இகழ்ந்து தொல் வேத நெறி அடைந்து துயன் ஆனான். | 68 |
|
|
உரை
|
|
|
|