தொடக்கம் |
|
|
3174. | பஞ்சவன் அடைந்த நோயைப் பால் அறா வாயர் தீர்த்து நஞ்சு அணி கண்டன் நீறு நல்கிய வண்ணம் சொன்னேம் அஞ்சலர் ஆகிப் பின்னும் வாது செய்து அடங்கத் தோற்ற வஞ்சரைக் கழு வேறிட்ட வண்ணமும் சிறிது சொல்வாம். | 1 |
|
|
உரை
|
|
|
|
|
3175. | தென்னவன் தேவியாரும் அமைச்சருள் சிறந்த சிங்கம் அன்னவன் தானும் காழி அந்தணர் அடியில் வீழ்ந்து எம் மன்னவன் வெப்பும் கூனும் பாசமும் மாற்றி நீரே இன்னமும் அடியேம் வேண்டும் குறை செயத் தக்கது என்றார். | 2 |
|
|
உரை
|
|
|
|
|
3176. | கன்னி நாடு எங்கும் இந்தக் கார் அமண் காடு மூடித் துன்னின இதனை இன்னே துணித்திடல் வேண்டும் என்றார் அன்னவர் ஆலவாயர் திரு உள்ளம் அறிவேன் என்னா உன்னிய மனத்தர் ஆகி ஒய் எனக் கோயில் புக்கார். | 3 |
|
|
உரை
|
|
|
|
|
3177. | அவ் இருவோரும் கூட அடைந்து பொன் கமலம் பூத்த திவ்விய தீர்த்தம் தோய்ந்து சேல் நெடும் கண்ணி பாக நவ்வி அம் கமலச் செம்கை நாதனைத் தாழ்ந்து வேந்தன் வெவ்விய வெப்பு நீத்தார் தொழுது இது வினவு கின்றார். | 4 |
|
|
உரை
|
|
|
|
|
3178. | காயமே ஒறுத்து நாளும் கைதவம் பெருக நோற்கும் போயரை இம்மை யோடு மறுமையும் பேறு அற்றாரை நீ உரை செய்த வேத வேள்வியை நிந்தை செய்யும் தீயரை ஒறுத்தல் செய்யத் திருஉளம் செய்தி என்றார். | 5 |
|
|
உரை
|
|
|
|
|
3179. | வெம் மத வேழம் காய்ந்த விடையவர் விசும்பில் சொல்வார் எம்மனோர் அவிர் நுங்கட்கு இசைந்ததே எமக்கும் வேண்டும் சம்மதம் ஆனால் வெல்லத் தக்கவர் ஆக நீரே அம் மதம் உடையார் தேற்கத் தக்கவர் ஆக என்றே. | 6 |
|
|
உரை
|
|
|
|
|
3180. | எம் மொழி தேறினீர் போய் இறை மகன் அவையத்து எய்திச் செம்மை இலாரை வாது செய்திர் நீர் அனையார் தோற்று வெம் முனைக் கழுவில் ஏறி விளகுவர் என்னக் கேட்டு மைம் மலி களத்தான் மைந்தர் தொழுது தம் மடத்தில் போனார். | 7 |
|
|
உரை
|
|
|
|
|
3181. | இருவரும் மீண்டு தத்தம் இருக்கையில் போகி அற்றைப் பருவம் அங்கு அகலப் பின் நாள் பாண்டிமா தேவியாரும் பெரு மதி அமைச்சர் ஏரும் பிள்ளையார் மடத்தில் போகி அருகரை வெல்லும் சூழ்ச்சி யாது என அளந்து தேர்வார். | 8 |
|
|
உரை
|
|
|
|
|
3182. | பேர் அருள் நிறைந்த காழிப் பெருந்தகை உடன் போய்த் தம்கோன் சீர் அவை குறுகி ஈது செப்புவார் செய்ய கோலாய் கார் அமண் காடே எங்கும் கழியவும் இடைந்த இன்ன வேரோடும் களைந்தார் சைவ விளைபயிர் ஓங்கும் என்றார். | 9 |
|
|
உரை
|
|
|
|
|
3183. | அவ்வண்ணம் செய்வதே என்று அரசனும் அனுச்சை செய்யச் செவ் வண்ண வெண் நீற்று அண்ணல் அனுச்சையும் தெரிந்த தேயம் உய் வண்ணம் இது என்று அங்கண் உள் மகிழ்ந்து இருந்தார் நீண்ட பை வண்ண ஆரம் பூண்டார் புகழ் எங்கும் பரப்ப வல்லார். | 10 |
|
|
உரை
|
|
|
|
|
3184. | அந்த வேலை அருகந்தக் கையரைக் குந்த வேல் கண் குல மட மாதரும் மைந்தர் ஆகிய மக்களும் கண் அழல் சிந்த நோக்கி இகழ்ந்து இவை செப்புவார். | 11 |
|
|
உரை
|
|
|
|
|
3185. | செழியர் கோமகன் மூழ்கிய தீப் பிணி கழிய மாற்றும் வலியின்றிக் கற்றிலா மழலை வாய் ஒரு மைந்தற்குத் தோற்று வெம் பழி விளைத் தீர் பகவன் தமர்க்கு எலாம். | 12 |
|
|
உரை
|
|
|
|
|
3186. | சாம்பர் ஆடும் சமயம் புகுந்து வெம் பாம்பு அணிந்தவனே பகவான் என வேம்பன் உங்கள் விரத நெறி எலாம் சோம்பல் எய்தத் துறந்தான் இகழ்ந்து அரோ. | 13 |
|
|
உரை
|
|
|
|
|
3187. | ஏது உமக்கு நிலை இனி என்ற அப் போது மற்றவர் தம்மைப் புறகிட வாது செய்தற்கு எழுந்தனர் வஞ்சகர் போதும் என்னத் தடுத்தனர் பூவை மார். | 14 |
|
|
உரை
|
|
|
|
|
3188. | செல்லன் மின் கண் உமக்கு இது செவ்வி அன்று அல்லல் கூர வரும் துன்பத்து ஆழ நாம் எல்லி கண்ட கனவு உண்டு அதனை யாம் சொல்லு கேம் இன்று கேண்ம் எனச் சொல்லுவார். | 15 |
|
|
உரை
|
|
|
|
|
3189. | இடையறாது நம் பாழியும் பள்ளியும் எங்கும் சடையர் முஞ்சியர் சாம்பலர் தாங்கிய சூலப் படையர் தீவிழிப் புலவு வாய்ப் பாய் பெரும் புலித்தோல் உடையராய்ச் சிலர் வந்து வந்து உலவுதல் கண்டேம். | 16 |
|
|
உரை
|
|
|
|
|
3190. | கன்னியில் துறவு அன்னங்கள் கணவனின் துறவின் மன்னும் ஆரியாங் கனைகள் நுல் வாங்கும் அக் குசைகள் என்ன மூவகைப் பெண் தவப் பள்ளிகள் எல்லாம் சின்ன வெண் பிறைக் கோட்டுமா சிதைக்கவும் கண்டேம். | 17 |
|
|
உரை
|
|
|
|
|
3191. | முண்டிதம் செய்த தலையராய் முறுக்கு உறி தூங்கும் குண்டிகை கைத் தடம் கையராய்க் கோவணம் பிணித்த தண்டு தாங்கிய சுவலராய்ச் சடையன் பேர் நாவில் கொண்டு அசைத்தனராய் எங்கும் குலாவவும் கண்டேம். | 18 |
|
|
உரை
|
|
|
|
|
3192. | காந்து வெங்கதம் உடையது ஓர் கயம் தலை வந்து சூழ்ந்து கொண்டு நம் அடிகள் மார் கணம் எலாம் துரத்தி ஏந்து பூம் சினை அலைந்திட இரங்கி வண்டு இரியப் பாய்ந்து பிண்டியை வேரொடும் பறிக்கவும் கண்டேம். | 19 |
|
|
உரை
|
|
|
|
|
3193. | அந்த மூவிலை வேலினும் மயில் முனைக் கழுவின் பந்தி மீது நீர் ஏறவும் கண்டு உளம் பனிப்பச் சந்த மார்பகம் சேப்ப அம் தளிர்க்கரம் புடைத்துக் கந்த வார் குழல் சோரவும் கலுழவும் கண்டேம். | 20 |
|
|
உரை
|
|
|
|
|
3194. | தள் அரும் திறல் இந்திர சாலமோ காதி உள்ள விஞ்சை இவ் எல்லை வந்து உதவிலா ஒன்றும் கள்ளரால் பறி பட்டவோ கனவில் வெந்தனவோ வெள்ளம் கொண்டவோ சேமத்தில் கிடப்பவோ விளம்பீர். | 21 |
|
|
உரை
|
|
|
|
|
3195. | தாவு தீ வளர்த்து எழு கரி தன்னை ஆடு அரவை ஆவையேவி முன் நம்மனோர் பட்டது மறந்தீர் காவலன் பிணி தணித் திலீர் இனிச் செய்யும் கருமம் யாவது ஆகுமோ அதனையும் எண்ணுமின் என்றார். | 22 |
|
|
உரை
|
|
|
|
|
3196. | இற்றை வைகலுக்கு ஏகன் மின் என்றனர் அறத்தைச் செற்ற வஞ்சகர் செல்லுவார் திரும்பவும் கையைப் பற்றி ஈர்த்தனர் பெண்டிர் சொல் கேட்பது பழுது என்று உற்ற தீவினை வழிச் செல்வார் ஒளித்தனர் செல்வார். | 23 |
|
|
உரை
|
|
|
|
|
3197. | கொங்கலர்க் குழல் சரிந்திடக் குரத்தியர் பின்னும் எங்கள் சொல் கொளது ஏகுவிர் பரிபவம் எய்தி உங்களுக்கு இடையூறு வந்து உறுக எனச் சபித்தார் அங்கு அதற்கும் அஞ்சார் செல்வார் அழியும் நாள் அடுத்தார். | 24 |
|
|
உரை
|
|
|
|
|
3198. | புட்களும் பல விரிச்சியும் போகல் என்று எதிரே தட்கவும் கடந்து ஏகுவார் தடம் கயல் உகைப்பக் கட் கவிழ்ந்து அலர் கிடங்கர் சூழ் கடி நகர்ப் புறம் போய் உட்கு நெஞ்சராய் யாவரும் ஓர் இடத்து ஈண்டி. | 25 |
|
|
உரை
|
|
|
|
|
3199. | யாது சூழ்ச்சி என்று எண்ணுவார் இறைவனைக் கண்டு ஈது ஓதி நாம் அவன் அனுமதி உறுதி கொண்டு அனைய ஏதிலாளனை வாதினால் வென்றும் இசைந்து போதுவார் நகர் புகுந்து வேத்து அவைக் களம் புகுவார். | 26 |
|
|
உரை
|
|
|
|
|
3200. | ஆய போது இளம் காலையில் கவுணியர் ஆல வாயர் சேவடி பணிந்து தம் மடத்தினில் செல்லக் காயும் மாதவச் செல்வனைக் கங்குல் சூழ்ந்தாங்கு மாய வஞ்சகர் வந்து இடை வழித் தலை மறித்தார். | 27 |
|
|
உரை
|
|
|
|
|
3201. | மறித்த கையர் பின் செல்ல முன் மன் அவைக் குறுகிக் குறித்த வாளரித் தவிசின் மேல் கொச்சையர் பெருமான் எறிந்த சேய் இளம் பரிதியின் ஏறி வீற்று இருந்தார் பறித்த சீத்தலை புலையர்கள் பொறாது இவை பகர்வார். | 28 |
|
|
உரை
|
|
|
|
|
3202. | மழலை இன்னமும் தெளிகிலா மைந்த கண் மணி ஒன்று உழல் கருங்கொடி இருந்திடக் கனி உதிர்ந்தாங்கு உன் கழல் கொள் விஞ்சையின் அன்மையான் மன்னனைத் தொடுத்த அழல இத்தனம் என்று நீ தருக்குறத் தகுமோ. | 29 |
|
|
உரை
|
|
|
|
|
3203. | நந்து நாகு நீர் வண்டு செல் நடை வழி எழுந்தாய் வந்து வீழினும் வீழும் அவ் வழக்கு நின் கையற்று சிந்து சாம்பரும் சிறு சொலும் மருந்து மந்திரம் போல் சந்து சூழ் மலையான் சுரம் தணிந்தன கண்டாய். | 30 |
|
|
உரை
|
|
|
|
|
3204. | உங்கள் மந்திரம் ஏடு ஒன்றில் தீட்டுக ஓர் ஏட்டு எங்கள் மந்திரம் தன்னையும் தீட்டுக இரண்டும் அங்கி வாய் இடின் வெந்தது தோற்றது அவ் அங்கி நுங்கிடாது வென்றது என்று ஒட்டியே நுவலா. | 31 |
|
|
உரை
|
|
|
|
|
3205. | செக்கர் அம் சடையான் உறை பதிகளில் செய்யத் தக்க தன் தவநிலை பிழைத்தும் நும் சார்வாய் விக்க எம் மனோர்க்கு இயற்றுவான் வேறு ஒரு தலத்தில் புக்கு அமர்ந்து தவம் செயப் போதுகம் என்னா. | 32 |
|
|
உரை
|
|
|
|
|
3206. | வென்றி மா முரசு உறங்கிட வியன் நகர்ப் புறம் போய் மன்றல் வேம்பன் முன் கதழ் எரி மடுத்திடில் பிழைப்ப தொன்று வேவது ஒன்று ஈது கொண்டு உமர்களும் எமரும் இன்று வெல்வதும் தோற் பதும் காண்டும் என்று எழுந்தார். | 33 |
|
|
உரை
|
|
|
|
|
3207. | ஈட்டு வஞ்ச நெஞ்சரே எழீ நகர்ப் புறம்பு போய்க் கீழ் திசைக்கண் ஓர் அழல் கிடங்கு தொட்டு எழுந்து வான் நீட்டு கோடு அரம் குறைத்து நிறைய விட்டு நெட்டு எரி மூட்டினார் மாதரார் வயிற்றும் இட்டு மூட்டினார். | 34 |
|
|
உரை
|
|
|
|
|
3208. | ஞானம் உண்ட முனிவர் தம்மை எள்ளி எள்ளி நாயினும் ஈனர் அங்கியை அடுத்து இருப்ப எண்ணாராயிரர் ஆன தொண்டர் உடன் எழுந்து சண்பை வேந்தும் அரசனும் மானன் ஆர் மந்திரக் கிழானும் வந்து வைகினார். | 35 |
|
|
உரை
|
|
|
|
|
3209. | உள் அவிழ்ந்த முலை சுரந்து ஒழுக்கு பால் அருந்தியே துள்ளி ஓடும் கன்று பின் தொடர்ந்து செல்லும் ஆன் என வெள்ளி அம்பலத்துள் ஆடும் வேதகீதர் காதல் கூர் பிள்ளை போன வாறு தம் பிராட்டி யோடும் எய்தினார். | 36 |
|
|
உரை
|
|
|
|
|
3210. | ஆறினோடு இரண்டு அடுத்த ஆயிரம் சமணரும் வேறு வேறு தாம் முயன்ற மந்திரங்கள் வேறு வேறு நீர் சுந்தர ஒலையில் பொறித்து ஒருங்கு போய்ச் சீறி வான் நிமிர்ந்து எழுந்த தீயின் வாய் நிரப்பினார். | 37 |
|
|
உரை
|
|
|
|
|
3211. | அக்கி வாய் மகுத்த ஏடு அனைத்தும் அக் கணத்தினே இக்கு வாய் உலர்ந்த தோடு எனக் கரிந்து சாம்பராய் உக்க வாறு கண்டு நீசர் உட்கிடந்து பொங்கவே திக்கு உளார்கள் கண்டபேர் சிரித்து உளார்கள் ஆயினார். | 38 |
|
|
உரை
|
|
|
|
|
3212. | விரிந்த வேத நாவர் தாம் விரித்த வேத மெய்ப் பொருள் வரைந்த புத்தகத்தை வண் கயிற்றினால் வகிர்ந்து தாம் அருந்த ஞான அமுது அளித்த அம்மை போகப் படத் தெரிந்த ஏடு எடுத்து அடுத்த தீயின் வாயில் இட்டனர். | 39 |
|
|
உரை
|
|
|
|
|
3213. | மறைப் புலப் படுத்த நூல் வரைந்த ஏடு அனந்த நாள் அறை புனல் கிடந்ததாம் எனப் பசந்த அரசனும் நிறை அமைச்சும் அரசியாரும் நின்றபேரும் அந்தணர்க் இறைவரை புகழ்ந்து அளப்பு இல் இன்ப வெள்ளம் மூழ்கினார். | 40 |
|
|
உரை
|
|
|
|
|
3214. | வெந்த சிந்தை அமணர் வாது வெல்வதற்கு வேறு இடம் புந்தி செய்து வந்த அப் பொதுத் தலம் பொதுக் கடிந்து அந்தணாளர் வாது வென்ற அன்று தொட்டு ஞானசம் பந்தன் என்ற நாமமே படைத்து உயர்ந்த இன்றுமே. | 41 |
|
|
உரை
|
|
|
|
|
3215. | அன்ன ஏடு முறையினோடு இறுக்கி அந்தணாளர் கோன் மன்னை நோக்க வினையினோடு பாய் உடுத்த மாசர் தாம் சொன்ன சூள் புலப்படத் துணிந்தும் வாய்மை நாண் ஓரி இக் கன்னி நாடன் அவை சிரிக்க ஆற்றலாது கத்துவார். | 42 |
|
|
உரை
|
|
|
|
|
3216. | ஏட நாங்கள் எழுதி இட்ட பச்சை ஏடு எணாயிரம் வீட வந்த நீ வரைந்து விட்ட ஓலை ஒன்றும் என் வாடல் இன்றி நீரில் இட்ட வண்ணம் ஆனது ஆல் இது உன் பாடவம் செய் விஞ்சை கொண்டு பாவ கல் பிணித்ததே. | 43 |
|
|
உரை
|
|
|
|
|
3217. | உங்களேடும் எங்கள் ஏடும் உம்பர் வானளாய் விரைஇப் பொங்கி ஓடும் வைகை நீரில் இடுக இட்ட போது தான் அங்கு நீர் எதிர்க்கும் ஓலை வெல்லும் ஓலை அன்றியே துங்க வேலை செல்லும் ஓலை தோற்கும் ஓலை யாவதே. | 44 |
|
|
உரை
|
|
|
|
|
3218. | வென்று வீறு அடைந்தவர்க்கு வீறு அழிந்து தோற்றபேர் என்றும் ஏவல் அடிமை ஆவது என்று இசைந்து கைதவக் குன்று போலும் நின்ற குண்டர் கூறலோடும் ஈறு இலா மன்று ஆடும் அடிகள் மைந்தர் வாய் மல்ர்ந்து பேசுவார். | 45 |
|
|
உரை
|
|
|
|
|
3219. | அடியார் பதினாறாயிரவர் உள்ளார் சிவனை அவமதித்த கொடியார் நீவிர் உமக்கு ஏற்ற தண்டம் இதுவோ கொன்றை மதி முடியார் அருளாள் உங்களை நாம் வென்றேம் ஆயின் மூ இலை வேல் வடிவான் நிரைத்த கழு முனை இடுவேம் அதுவே வழக்கு என்றார். | 46 |
|
|
உரை
|
|
|
|
|
3220. | ஊழின் வலியால் அமணர் அதற்கு உடன் பட்டார்கள் அஃது அறிந்து சூழி யானைக் குலைச் சிறையும் தச்சர் பலரைத் தொகுவித்துக் காழின் நெடிய பழு மரத்தில் சூல வடிவாய்க் கழு நிறுவிப் பாழி நெடிய தோள் வேந்தன் முன்னே கொடு போய் பரப்பினார். | 47 |
|
|
உரை
|
|
|
|
|
3221. | தேறலாதார் தமைக் காழிச் செம்மல் நோக்கி இனி வம்மின் நீறு பூசிக் கண்டிகையும் பூண்டு நிருத்தர் எழுத்து ஐந்தும் ஊற ஒதிப் பாசம் ஒழித்து உய்மின் என்னா அற நோக்கிக் கூறினார் மற்று அது கேட்டுக் குண்டர் எரியில் கொதித்து உரைப்பார். | 48 |
|
|
உரை
|
|
|
|
|
3222. | முன்பு தீயில் வென்றனமே நீரில் யாதாய் முடியும் என அன்பு பேசி எமை இணக்கி அகல நினைத்தாய் அல்லதை நீ பின்பு வாது செயத் துணியும் பெற்றி உரைத்தாய் அல்லை புலால் என்பு பூணி அடி அடைந்த ஏழாய் போதி என மறுத்தார். | 49 |
|
|
உரை
|
|
|
|
|
3223. | ஊகம் தவமும் பழு மரத்தை உதைத்துக் கரை மாறிட ஒதுக்கிப் பூகம் தடவி வேர் கீண்டு பொருப்பைப் பறித்துப் புடை பரப்பி மாகம் துழாவிக் கடுகிவரும் வைகைப் புனலை மந்திரத்தால் வேகம் தணிவித்து ஏடு எழுதி விடுத்தார் முன் போல் வெள்காதார். | 50 |
|
|
உரை
|
|
|
|
|
3224. | சிறை ஏய் புனல் சூழ் வேணுபுரச் செல்வர் யாரும் தெளிவு எய்த மறையே வாய்மை உரையாய் இன் மறைக் கண் முழுதும் துணி பொருள் தான் பிறையேய் வேணிப் பிரான் ஆகில் பெரு நீர் எதிரே செல்க என முறையே பதிகம் எடுத்து எழுதி விட்டார் முழங்கி வருபுனலில். | 51 |
|
|
உரை
|
|
|
|
|
3225. | தேசம் பரவும் கவுணியர் கோன் விடுத்த ஏடு செழுமதுரை ஈசன் அருள் ஆம் கயிறு பிணித்து ஈர்ப்ப நதியில் எதிர் ஏற நாசம் செய்யும் பொறிவழியே நடக்கும் உள்ளம் எனச் சென்று நீசரே எண்ணாயிரம் நீத்த வழியே ஒழுகிய ஆல். | 52 |
|
|
உரை
|
|
|
|
|
3226. | சிங்கம் அனையார் எழுது முறை எதிர் ஆற்று ஏற தெரிந்தமரர் அம் கண் நறும் பூமழை பொழிந்தார் அறவோர் துகில் விண் எறிது ஆர்த்தார் கங்கை அணிந்தார் திருத்தொண்டர் கண்ணீர்க் கடலில் அமிழ்ந்தினார் வெம் கண் அமணர் நடுங்கி உடல் வெயர்வைக் கடலில் அமிழ்ந்தினார். | 53 |
|
|
உரை
|
|
|
|
|
3227. | வேமே என்பது அறியாதே வெல்வேம் என்றெ சூள் ஒட்டி நாமே இட்ட ஏடு எரியில் வேவக் கண்டு நதிக்கு எதிரே போமே இன்னம் வெல்வேம் என்று இட்ட ஏடும் புணரி புகத் தாமே தம்மைச் சுட நாணி நின்றார் அமணர் தலை தூக்கி. | 54 |
|
|
உரை
|
|
|
|
|
3228. | பொருப்பே சிலையாய் புரம் கடந்த புனிதனே எத்தேவர்க்கும் விருப்பேய் போகம் வீடுதரும் மேலாம் கடவுள் என நான்கு மருப்பேய் களிற்றான் முடி தகர்த்தான் மருமான் அறியக் குருமொழி போல் நெருப்பே அன்றி வேகவதி நீரும் பின்னர்த் தேற்றியதால். | 55 |
|
|
உரை
|
|
|
|
|
3229. | பொய்யின் மறையின் புறத்து அமணர் புத்தர்க்கு அன்றி வாய்மை உரை செய்யும் மறை நூல் பல தெரிந்தும் சிவனே பரம் என்பது அறியாதே கையில் விளக்கினொடும் கிடங்கில் வீழ்வார் கலங்கி மனம் ஐயம் அடைந்த பேதையர்க்கும் அறிவித்தனவே அவை அன்றோ. | 56 |
|
|
உரை
|
|
|
|
|
3230. | கண்டு கூடல் கோமகனும் கற்பும் நிறைந்த பொற்புடைய வண்டு கூடும் தார் அளக வளவன் மகளும் மந்திரியும் தொண்டு கூடி மடியாரும் காழிக்கு அரசைத் தொழுது துதி விண்டு கூடற்கு அரிய மகிழ் வெள்ளத்து அழுந்தி வியந்தனர் ஆல். | 57 |
|
|
உரை
|
|
|
|
|
3231. | நன்றிதேறார் பின்பு உள்ள மானம் இழந்து நாண் அழிந்து குன்று போலும் தோணி புரக் கோமான் எதிரே யாங்களும் உமக்கு இன்று தோற்றேம் எமை ஈண்டு நீரே வென்றீர் என நேர்ந்து நின்று கூறக் கவுணியர் கோன் அனையார் உய்யும் நெறி நோக்கா. | 58 |
|
|
உரை
|
|
|
|
|
3232. | இன்னம் அறத்தாறு இசைக்கின்றே நீர் ஏன் வாள இறக்கின்றீர் அன்னை அனையான் எம் இறைவன் அவனுக்கு ஆளாய் உய்மின்கள் என்ன ஏட சிறியாய் நீ எவ்வாறு எங்கட்கு அடாத மொழி சொன்னது என்று மானம் உளார் கழுவில் ஏறத் தொடங்கினார். | 59 |
|
|
உரை
|
|
|
|
|
3233. | மதத்தினின் மான மிக்கார் தாங்களே வலிய ஏறிப் பதைத்திட இருந்தார் ஏனைப் பறி தலை அவரைச் சைவ விதத்தினால் ஒழுக்கம் பூண்ட வேடத்தார் பற்றிப் பற்றிச் சிதைத்து இடர் செய்து ஏறிட்டார் திரி தலைக் கழுக்கோல் தன்னில். | 60 |
|
|
உரை
|
|
|
|
|
3234. | வழி வழி வரும் மாணக்கர் சாதற்கு வருந்தி நெஞ்சம் அழிபவர் திரு நீறு இட்டார் அது கிட்டாது அயர் வார் ஆவின் இழிவு இல் கோமயத்தை அள்ளிப் பூசினார் இதுவும் கிட்டாது ஒழிபவர் ஆவின் கன்றைத் தோளில் இட்டு உயிரைப் பெற்றார். | 61 |
|
|
உரை
|
|
|
|
|
3235. | கூறிட்ட மூன்றும் கிட்டாது அயர்பவர் குற்றம் தீர நீறு இட்டார் நெற்றியோடு நிருமல கோமயத்தின் சேறு இட்டார் நெற்றியோடு நெற்றியைச் செறியத் தாக்கி மாறிட்ட பாசம் தன்னை மறித்திட்டுப் பிறப்பை வெல்வார். | 62 |
|
|
உரை
|
|
|
|
|
3236. | மற்று இவர் தம்மை ஊற்றம் செய்திலர் மடிந்தோர் யாரும் சுற்றிய சேனம் காக நரிகள் நாய் தொடர்ந்து கௌவிப் பற்றி நின்று ஈர்த்துத் தின்னக் கிடந்தனர் பரும யானை வெற்றி கொள் வேந்தன் காழி வேந்தரைத் தொழுது நோக்கா. | 63 |
|
|
உரை
|
|
|
|
|
3237. | இன்று நீர் இட்ட ஏடு இங்கு யாவரும் காண நேரே சென்றதே எங்கே என்றான் அதனை யாம் செம்பொன் கூடல் மன்றவர் அருளால் இன்னே வருவிப்பம் என்று வாது வென்றவர் நதியின் மாடே மேல் திசை நோக்கிச் செல்வார். | 64 |
|
|
உரை
|
|
|
|
|
3238. | செல்லு நர் காண ஓலை காவதம் செல்வது அப்பால் ஒல்லை அங்கு ஒளித்தலோடும் வியந்து அவண் ஒருங்கு கூடிக் கொல்லையான் மேய்த்து நின்றார் சிலர் தமைக் குறித்து நீர் இவ் எல்லையுள் விசேடம் உண்டோ இவண் கண்டதிசை மினென்றார். | 65 |
|
|
உரை
|
|
|
|
|
3239. | அவ் இடைச் சிறார்கள் யாங்கள் ஒன்றையும் அறியேம் என்ன இவ்விடை விசேடம் காணல் வேண்டும் எத்திறத்தும் என்னாத் தெவ்விடை வாது செய்யத் திரு உளக் கருணை செய்த வெவ்விடைக் கொடியினாரைப் பாடினார் வேத நாவார். | 66 |
|
|
உரை
|
|
|
|
|
3240. | பாட்டின் மேல் கருணை வைத்தார் சயம்பு வாய்ப் பராரை வில்லக் காட்டினுள் இருப்ப நேரே கண்டு தாழ்ந்து எழுந்து சண்பை நாட்டினர் வலம் கொண்டு ஏத்தி எதிர் நின்றார் நகைத்தார் நிம்பத் தோட்டினான் அது கேட்டு அங்கே தோன்றினான் தானை யோடும். | 67 |
|
|
உரை
|
|
|
|
|
3241. | அந்த மா இலிங்கத்து ஈசன் ஆயிரம் மதியம் கண்ட முந்தை வேதியராய்த் தோன்றி முத் தமிழுக்கு அரசை நீ என் மைந்தன் ஆம் இளையோன் ஒப்பாய் வருக என நீறு சாத்திச் சிந்தை நீள் ஆர்வம் கூரத் திரு அருள் சுரந்து நின்றார். | 68 |
|
|
உரை
|
|
|
|
|
3242. | நின்ற அந்தணரை அன்று நிருமல ஞானம் ஈந்தார் என்று கண்டு இறைஞ்சி ஐய நீரில் யான் இட்ட ஏடு சென்றது இங்கு எடுத்தீர் நீரே அஃது நும் செல்வர்க்கு ஏற்ற அன்று அதைத் தருதி என்றார் அறுமுகச் செம்மல் அன்னார். | 69 |
|
|
உரை
|
|
|
|
|
3243. | இன்னமும் பல் நாள் எம்மை இடம் தொறும் பாடி எஞ்சும் புன் நெறி ஒழுகுவாரை வென்று நம் புனித வீடு பின்னர் நீ பெறுதி என்னா ஏடு தந்து ஆசி பேசி மின் என மறைந்து நின்றார் வேதியர் ஆய வேடர். | 70 |
|
|
உரை
|
|
|
|
|
3244. | தாதையார் கவர்ந்து மீளத் தந்த ஏடு அதனை வாங்கிப் போதையார் ஞானம் உண்டார் புரிசடைப் பிரானார் வௌவி ஈதை யாம் இரந்து வேண்டத் தந்தனர் என்று கூறிக் கோதை ஆர் வேலினார்க்குக் காட்ட அக் கொற்கை வேந்தன். | 71 |
|
|
உரை
|
|
|
|
|
3245. | கச்சு ஆன அரவம் ஆர்த்த கருணை அம் கடலில் தோன்றும் விச்சான ஞானம் உண்டீர் ஆற்றலின் விளைவு தேறாது அச்சான வலியான் உம்மை அளந்தனன் அடியேன் இந்தக் துச்சான பிழைதீர்த்து ஆள்க என்று இறைஞ்சினான் துணர்த்தார் வேம்பன். | 72 |
|
|
உரை
|
|
|
|
|
3246. | அந் நெடு மேரு ஆகும் ஆடகச் சிலையினார்க்குப் பொன் நெடும் சிகரக் கோயின் மண்டபம் புயலைக் கீண்டு மின் நெடும் மதியம் சூடும் கோபுர மேகம் தாவும் கல் நெடும் புரிசை வீதி யாவையும் களிப்பக் கண்டான். | 73 |
|
|
உரை
|
|
|
|
|
3247. | அற்றை நாள் ஆதி ஆக வேடகம் என்னும் நாமம் பெற்றதால் ஏடகத்தின் மேவிய பிரானைப் பாண்டிக் கொற்றவன் சமண ரோடும் கூடிய பாவம் எல்லாம் பற்று அறப் பூசை செய்து பாசமும் கழியப் பெற்றான். | 74 |
|
|
உரை
|
|
|
|
|
3248. | நறை கெழு துழாயினானும் கலுழனும் நாகர் வேந்தும் முறையினால் உகங்கள் மூன்றும் பூசித்து முடியா இன்ப நிறை அருள் பெற்றார் அன்ன நிரா மய இலிங்கம் தன்னை இறுதியா முகத்தில் பாண்டி இறை மகன் பூசை செய்தான். | 75 |
|
|
உரை
|
|
|
|
|
3249. | அம் கண் மா நகர் கண்டு ஆங்கு ஓர் ஆண்டு இறை கொண்டு காழிப் புங்கவ ரோடும் பின் நாள் பூழியர் பெருமான் மீண்டு மங்கல மதுரை சேர்ந்து வைகும் நாள் நீற்றுச் செல்வம் எங்கணும் விளங்கச் சின்னாள் இருந்து பின் ஞானச் செல்வர். | 76 |
|
|
உரை
|
|
|
|
|
3250. | வட புலது உள்ள ஈசன் பதிகளும் வணங்கிப் பாடக் கடவம் என்று எழுந்து கூடல் கண் நுதல் பெருமான் தன்னை இடன் உறை கயல் கண்ணாளை இறைஞ்சிப் பல்வரனும் பெற்று விடை கொடு தமிழ் நாடு எங்கும் பணிந்தனர் மீண்டு போவார். | 77 |
|
|
உரை
|
|
|
|
|
3251. | தன் பெரும் கற்பினாளும் அமைச்சனும் தமிழ் நர் கோனும் பின்பு முனம் தண் காழிப் பிரான் அடி பிரிவு ஆற்றார் ஆய் அன்பு தந்தவர் பால் நட்ட அன்று தொட்டு ஆனாக் கேண்மை இன்பமும் துன்பம் ஆகி விளைந்து முன் ஈர்ப்பப் போனார். | 78 |
|
|
உரை
|
|
|
|
|
3252. | சண்பையர் தலைவர் தாமும் அனையராய்த் தம்பின் செல்லும் நன்புடையவரை நோக்கி நம் இடத்து அன்பு நீங்காப் பண்பினர் ஆகி நீறு பாதுகாத்து ஈசன் கீர்த்தி மண் பட வாழ்மின் இது மறுக்கன் மின் நின்மின் என்றார். | 79 |
|
|
உரை
|
|
|
|
|
3253. | ஆள்உடைப் புகலி வேந்தர் அருண்மொழி மறுக்க அஞ்சித் தாள் உடைப் பதுமச் செந்தாள் தலை உறப் பணிந்து மீண்டு வாள் உடைத் தானைத் தென்னன் மதுரையில் வந்தான் கஞ்சத் தோள் உடைச் சிங்கம் அன்னார் சோழர் கோன் நாடு புக்கார். | 80 |
|
|
உரை
|
|
|
|
|
3254. | ஞானமா மதநீர் சோர ஞான சம்பந்தர் என்னும் மானமா யானை வந்து கடம்பமா வனத்தில் துன்னும் ஊனம் ஆம் சமணர் என்னும் தருக்களை ஒடித்து வெண்ணீறு ஆன மாப் பூழி அள்ளித் தூற்றியது அவனி எங்கும். | 81 |
|
|
உரை
|
|
|
|
|
3255. | ஆதி ஆலயத்து அடலை கொண்டு ஆழி சூழ் காழிச் சோதி வேதியர் பாண்டியன் சுரம் தணித்து உடலில் பேதியாத கூன் நிமிர்த்தலால் பிறங்கு கற்பாதிப் பூதி யாவினும் சிறந்தது அவ் வட்டில் வாய்ப் பூதி. | 82 |
|
|
உரை
|
|
|
|