3311. கன்னிதன் வதுவைக் கரிகளாய் இலிங்கக் கடவுளும்
                                                  கவைக்கரும் கோட்டு
வன்னியும் படுநீர்க் கூவலும் வந்த வழி இது மதுரை
                                                  நாயகனைக்
சென்னியில் வைத்த முனிவனைச் பூசை செய்து மாதவரொடு
                                                  ஒருங்கு எய்திப்
பன்னிற மலர் தூஉய் ஆலவா யானைப் பரவிய பரிசு
                                                  அது பகர்வாம்.
1
உரை
   
3312. போத ஆனந்தத் தனிக் கடல் பருகும் புயல் புரை
                                                   முனிவனை வசிட்ட
மாதவன் ஆதி முனிவரும் உலோபா முத்திரை தன்
                                                   னொடும் வரித்துப்
போதொடு சாந்த மான் மதம் தீபம் புகை முதல்
                                                   கருவிகைக் கொண்டு
மேதகு சிறப்பால் அருச்சனை செய்து பின்னும் ஓர்
                                                   வினாவுரை செய்வார்.
2
உரை
   
3313. கோட்டம் சிலை குனித்த கூடல் பிரான் ஆடல்
கேட்ட அம் செவி படைத்த பேறு அடைந்தேம் கெட்ட
                                                            படி
நாட்டம் களிப்ப நறுமலர் தூஉய்க் கண்டு இறைஞ்ச
வேட்டங்கள் யாங்கள் என ஓதினார் மெய்த் தவரே.
3
உரை
   
3314. என்ற அறவோர் எதிரே முகம் மலர்ந்து
குன்றம் அடக்கும் குறு முனிவன் கூறுவான்
நன்று முனிகாள் இதனை நான் உள்ளத்து எண்ணியாங்கு
ஒன்ற மொழிந்தீர் என்றான் பின்னும் வியந்து ஓதுவான்.
4
உரை
   
3315. பண்ணான் மறை முடியும் தேறாப் பரசிவனை
எண்ணால் அளவு இறந்த எக் கலையால் கண்டு உளக்
கண்ணால் அறியாதார் வீட்டு இன்பம் காண்பரோ
மண் ஆதி ஆறு ஆறு நீத்த தனி மாதவரே.
5
உரை
   
3316. அம் செவியில் ஊறு படக் கேட்டபடி ஆலவாய்ப்
பஞ்ச முகச் சோதி பரனைப் போய் அர்ச்சித்து
நெஞ்சம் நெகக் கண்டு நினையா வழி நினைந்து
வஞ்ச வினை வேர் களைவான் வம்மின்கள் என்றானே.
6
உரை
   
3317. மங்கல ஓரை வருதினத்தில் வான் இழிந்த
கங்கை படிந்து உலக நாயகனைக் கை தொழுது
புங்கவர் முன் சங்கற்பம் செய்து அனுச்சை பூண்டு ஒழுகி
அங்கு அவர் வாய் ஆசி மொழி கேட்டு அகம் மகிழ்ந்தே.
7
உரை
   
3318. ஐம் புலனும் கூடல் பெருமான் அடி ஒதுக்கி
நம்பன் உரு ஐந்து எழுத்து நாவாடக் கை கூப்பித்
தம் புனித சைவ தவத் தெய்வத் தேர் மேல் கொண்டு
உம்பர் வழி நடக்கல் உற்றார்கள் நற்றவரே.
8
உரை
   
3319. செய்ய சடையர் திரு நீறு சண்ணித்த
மெய்யர் தவம் நோற்று இளைத்த மேனியின் அருட்
                                                       புறம்பும்
துய்யர் அணி கண்டிகையர் தோலும் மருங்குடையர்
ஐயர் தவத்துக்கு அணிகலம் போல் போதுவார்.
9
உரை
   
3320. புண்ணியம் தழைக்கும் தெய்வத் தலங்களும் புலன்கள்
                                                          வென்றோர்
நண்ணிய வனமும் தீர்த்த நதிகளும் தவத்தோர் நோற்கும்
வண்ணமும் நோக்கி நோக்கி மலயமா முனிவன் காட்டக்
கண் இணை களிப்ப நோக்கிக் கை தொழுது இறைஞ்சிச்
                                                          செல்வார்.
10
உரை
   
3321. சீறு கொள் இலங்கை வேந்தைச் செகுத்திட இராமன்
                                                           பூசித்து
ஆறு அணி விருபக் கண்ணருள் பெறுதலம் மீது உம்பர்
ஏறி வீழ்ந்து இறந்தோர் முன்னம் எண்ணிய எண்ணி
                                                           ஆங்கே
மாறிய பிறப்பின் நல்கு மலை இது காண்மின் காண்மின்.
11
உரை
   
3322. சுரபி நீள் செவியில் இலிங்கச் சுடர் உரு ஆயினான் தன்
இரவினில் திருத்தேர் மன்ற நடக்கும் ஊர் மேலை
உரவு நீர்க் கரைத் தேள் மாதத்து உயர்ந்த
                                            கார்த்திகையில்தேர் ஊர்ந்து
தரவு நீர்ச் சடையான் வேள்வி நடக்கும் ஊர் அவ்வூர்
                                                       காண்மின்.
12
உரை
   
3323. வில் பயில் தடக்கை வேடன் மென்ற ஊன் பாகம்
                                                         பார்த்தோன்
பொற்பு உறு கிரி ஈது அண்டம் புழை பட விடத்தாள்
                                                         நீட்டி
அற்புதன் காளி தோற்க ஆதியது இது மா நீழல்
கற்புடை ஒருத்தி நோற்கும் பிலம் இது காண்மின்
                                                         காண்மின்.
13
உரை
   
3324. திருமறு மார்பன் கவல் செயல் பெற அரனைப் பூசித்து
இருகரம் முகிழ்த்து நேர் நின்று ஏத்திட இதுவாம் ஓத்தின்
உரைவரம்பு அகன்ற முக்கண் உத்தமன் சந்தை கூட்டி
அருமறை அறவோர்க்கு ஓது வித்த இடம் அதனைக்
                                                       காண்மின்.
14
உரை
   
3325. அடி முடி விலங்கும் புள்ளும் அளந்திடாது அண்டம்
                                                       கீண்டு
நெடுகிய நெருப்பு நின்ற நிலை இது முள்வாய்க் கங்க
வடிவு எடுத்து இருவர் நோற்கும் மலை இது பல்வேறு
                                                       ஊழி
இடை உற முன்னும் பின்னும் இருக்கும் இக் குன்றைக்
                                                       காண்மின்.
15
உரை
   
3326. அவுணரில் கள்வனான அந்தகன் காய்ந்து மூன்று
புவனமும் கவலை தீர்த்த புண்ணியன் புரம் ஈது ஆகும்
தவலரும் புரங்கள் மூன்றும் தழல் நுதல் திருக் கண்
                                                       சாத்திப்
பவம் அறு மூவர் அன்பில் பட்டவன் பதியைக் காண்மின்.
16
உரை
   
3327. சத்திய ஞான ஆனந்த தத்துவம் அசைவற்று ஆடும்
நித்திய பரமானந்த நிறை அருள் மன்றம் ஈது
முத்தி அங்கு உதித்தோர் எய்தும் பதி அது முதல்நூல்
                                                          நான்கும்
பத்தியில் பூசித்து ஏத்தும் பதி இதுவாகும் பார்மின்.
17
உரை
   
3328. பிரமன் மால் முதல் ஆம் தேவர் பிரளயத்து இறவா
                                                       வண்ணம்
பரமனார் தோணி யேற்றும் பன்னிருநாமம் பெற்ற
புரம் இது சடாயு சம்பாதிகள் பெரும் பூசை செய்ய
வரம் அளித்து இருள் நோய் தீர்க்கும் மருத்துறைபதி
                                                       ஈது ஆகும்.
18
உரை
   
3329. மதி நுதல் இமயச் செல்வி மஞ்சையாய் வழிபட்டு ஏத்தும்
இது துலாப் பொன்னித்தானம் எம்மனோர் மூன்று கோடி
மதி பெறு முனிவர் வந்து வழிபடு மூதூர் இது இப்
பதி அறக் கடவுள் பூசை பண்ணிய தானம் காண்மின்.
19
உரை
   
3330. கோடு நான்கு உடைய வேழம் தானவன் குறைத்த
                                                        கோட்டைப்
பாடு அற நோற்றுப் பெற்ற பதி இது மாலை சாத்தும்
தாடகை மானம் காப்பான் தாழ்ந்து பூம் கச்சு இட்டு
                                                        ஈர்க்கும்
பீடு உறு கலயன் அன்பின் நிமிர்ந்த எம் பிரான் ஊர்
                                                        ஈதல்.
20
உரை
   
3331. கரி முகத்து அவுணற் காய்ந்து கரி முகத்து அண்ணல்
                                                         பூசை
புரிசிவ நகரம் ஈது தாரகற் பொருது செவ்வேள்
அரனை அர்ச்சித்தார்க் கீழ் மணல் குறியான் பால்
                                                         ஆட்டிப்
பரன் முடி மாலை சூடும் சேய் வளம் பதி ஈது ஆகும்.
21
உரை
   
3332. கறுவி வீழ் காலன் மார்பில் சேவடிக் கமலம் சாத்திச்
சிறுவனுக்கு ஆயுள் ஈந்த சேவகப் பெருமான் மேய
அறைபுனல் பழன மூதூர் அது இது வானை தந்த
குறை உடல் போர்வை போர்த்த கொற்றவன் கோயில்
                                                          காண்மின்.
22
உரை
   
3333. பங்கயக் கடவுள் ஈந்த பரிகலம் வாங்கிக் கொண்ட
அம் கண் இடம் மீது ஆட அனங்கனை அமுது செய்த
செம் கணான் இருக்கை ஈது ஏழகச் சென்னி தன்னை
மங்கல மாமற்கு ஈந்த மருகனார் இருக்கை காண்மின்.
23
உரை
   
3334. திண் திறல் அவுணன் தன்னைப் பெருவிரல் தீட்டு நேமி
உண்டிட விருந்தக் கொண்டோன் உறை அதாம் ஒருத்தி
                                                            மன்றல்
கண்டிடு கரியாய்க் கூவல் கண்ணுதல் லிங்கம் வன்னி
எண் திசை அறியக் காட்ட நின்றிடம் இதனைக் காண்மின்.
24
உரை
   
3335. சாம கண்டத்தன் தன்னைத் தான் அருச்சித்த தென்னர்
கோமகன் பிரம சாயை குறைத்தது இப் பதியாம் கங்கை
மா மகம் தோறும் வந்து வந்துதல் படிந்தோர் விட்டுப்
போ மகம் போக மூழ்கும் புனித நீர்ப் பதியைக் காண்மின்.
25
உரை
   
3336. குருமொழி நந்தைக்கு ஈந்த எங் குரு உறை மலை ஈது
                                                         எம் கோன்
கரு முகில் வண்ணத்து அண்ணல் கண்ணிடந்து அடியில்
                                                         சாத்தப்
பொருவிறல் ஆழி ஈந்த புரம் இது நந்தி எந்தை
திருவுரு அடைய நோற்ற தலம் இது தெரிந்து காண்மின்.
26
உரை
   
3337. முடங்கு கால் சிலந்தி யானை மலை மகள் முளரி
                                                     நாட்டத்து
தடங்கடல் வண்ணன் நோற்ற தவ நகர் இது முச் சென்னி
மடங்கல் ஏறு அனையான் நாம வரை இது குடைந்தோர்
                                                     பாவம்
அடங்கலும் பருகும் பொன்னி ஆறு இது காண்மின்
                                                     காண்மின்.
27
உரை
   
3338. இந் நதி வெண் முத்து ஆரம் எனக் கிடந்து இலங்கும்
                                                          சென்னி
மன்னவன் நாடு ஈது என்ப தமிழ் அறி வைகைப் பேர்யாறு
அந்நதி துறக்க மண்மேல் வழுக்கி வீழ்ந்தாங்குத் தோற்றித்
தென்னவன் நாடு சேய்த்தாத் தெரிவதே காண்மின்
                                                          என்றான்.
28
உரை
   
3339. பொங்கர் மென் புதல்கள் என்னப் பொரு நதி சிறு கால்
                                                          என்னக்
கொங்கு அலர் தடம் சிற்றுறல் குழி எனப் பழனம் சில்லி
தங்கு மென் பாத்தி என்னத் தாழை தாழ் சிறுபுல் என்னப்
பைம் குலைக் கதலி மஞ்சள் பாத்தி போல் தோற்றக்
                                                          கண்டார்.
29
உரை
   
3340. பல் நிற மாட மாலை உபரிகைப் பந்தி செய் குன்று
அன்னம் வெண் குருகு செம் போத்து அளகு பைம்
                                                     கிள்ளை மஞ்சை
இன்ன புள் வேறு வேறாய் ஒழுங்கு பட்டு இருப்பது
                                                     ஒப்ப
மின்னு பூம் கொடியப் புட்கள் சிறகு என விதிர்ப்பக்
                                                     கண்டார்.
30
உரை
   
3341. கண்டு நாட்டு நகர் வளங்கள் நடந்து நடந்து கண்கள்
                                                     விருந்து
உண்டு மீள அகல் விசும்பு ஆறு ஒழுகி வலமா
                                                     வருமுனிவர்
விண் துழாவும் கொடும் குன்றும் தளிப் புத்தூரும்
                                                     விரிபொழில் வாய்
வண்டு பாட மயில் ஆடல் பயில் ஆடானை வள நகரும்.
31
உரை
   
3342. சரத வேதம் பரவு புனவாயில் நகரும் தவ சித்தர்
இரத வாதம் செய்து சிவன் உருவம் கண்ட எழில் நகரும்
வரதன் ஆகி அரன் உறையும் கானப் பேரு மலை மகளை
வரத யோக நெறி நின்று மணந்தார் சுழியல் வியன் நகரும்.
32
உரை
   
3343. மறவாள் இலங்கை இறை மகனை வதைத்த பழியான்
                                                     மருண்டு அரியன்
அறவாண் நேமி அளித்தவனை அர்ச்சித்து அகன்ற
                                                     அணிநகரும்
நிறவாள் முத்தும் வயிடூரிய நிறையும் பொன்னும் விளை
                                                     பொருநைத்
துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த
                                                     தொல் நகரும்.
33
உரை
   
3344. துளபக் குன்றைக் கொன்றை முடிக் குன்றம் ஆக்கும்
                                                    தொல் நகரும்
அளகைப் பொரித்த கொடி இளையோன் மான் நேர்
                                            நோக்கின் ஆனைமகள்
புளகக் குன்றை மணந்து முதல் இருந்த பொருப்பும்
                                                     போர்விசயன்
வளை வில் தாக்க வடுக்கிடந்த முடியோன் மேய வள
                                                     நகரும்.
34
உரை
   
3345. கொண்டல் படியும் திருவாப்பனூரும் தொழுது
                                                      குளிர்திரைக்கை
வண்டு படியும் கமலமுக வைகைப் பிராட்டி எதிர்
                                                      வண்ங்கிக்
கண்டு பணிந்து திசை எட்டும் விழுங்கி அண்டம் கடந்து
                                                      உலகம்
உண்ட நெடியோன் என உயர் கோபுரம் முன் இறைஞ்சி
                                                      உள்புகுதா.
35
உரை
   
3346. மறுகு தோறும் பணிந்து எழுந்து வளைந்து வளந்து
                                                     பொன் கோயில்
குறுகி விதியால் பொன் கமலம் குடைந்து செய்யும்
                                                     குறை நிறுவி
உறுதி பெற ஐந்து எழுத்து எண்ணி ஊற்று மதத்து
                                                     நால்தடம் தோள்
சிறுகு கண்ண ஐங்கரத்துச் சித்தியானை அடி வணங்கா.
36
உரை
   
3347. மும்மை உலகு நான் மறையும் முறையன் ஈன்ற அம்
                                                   கயல் கண்
அம்மை அடிகண் முடியுறத் தாழ்ந்து அன்பு கொடுத்து
                                                   இன் அருள் வாங்கி
வெம்மை ஒளிகான் மணிக் கனக விமானத்து
                                                   அமர்ந்ததனிச்சுடரின்
செம்மை அடித்தாமரை மரை வேணிச் சிரமேல் மலர்ப்
                                                   பணிந்து ஏத்தா.
37
உரை
   
3348. அன்று இரு போது உண்டி துறந்து இரா அறுக்கும் தீவாள்
என்று எழு முன்னீர் ஆடி நியதிகள் இயற்றி ஐந்தும்
வென்று உளத்து அன்பு பாய விளை முதலைப் பார்மேல்
மின் திரண்டு என்ன நின்ற விமானம் மீது இருப்பக்
                                                         கண்டார்.
38
உரை
   
3349. வாச மஞ்சனம் தேன் கன்னல் பைங்கனி மறு இல்
                                                      ஆன் ஐந்து
ஆசறு அமுதம் ஐந்து தென் மலை ஆரம் வாசம்
வீசு தண் பனி நீர் வெள்ள மான் மதம் விரை மென்
                                                       போது
துசணி மணிப்பூண் நல்ல சுவை அமுது இன்ன தாங்கா.
39
உரை
   
3350. சத உருத் திரத்தால் ஆட்டி மட்டித்துச் சாத்தி பூட்டிப்
பதம் உற மனுவால் அட்ட பால் அமுது அருத்திப் பஞ்ச
விதம் உறு வாசம் பாகு வெள்ளிலை அளித்துப் போகம்
உத உறு தூப தீபா ஆதிகள் பல உவப்ப நல்கா.
40
உரை
   
3351. ஐம் முகச் சைவச் செம் தீ அகத்தினும் துடுவை ஆர
நெய்ம் முகந்து அருத்திப் பூசை நிரப்பி நால் வேதம்
                                                         சொன்ன
மெய்ம் மனு நூற்றுப் பத்தான் மூவிலை வில்ல நீலம்
கைம்மலர் ஏந்திச் சாத்திக் கடவுளை உவப்பச் செய்து.
41
உரை
   
3352. வாச மஞ்சன நீரோடு மந்திர மலர் கைக் கொண்டு
பூசையின் பயனை முக்கண் புண்ணியன் கையில் நல்கி
நேச நெஞ் சூறக் கண்கள் நிறைய நீர் ஊறிச் சோர
ஈசனை இறைஞ்சி யாரும் அஞ்சலித்து ஏத்தல் செய்வார்.
42
உரை
   
3353. பழியொடு பாசம் மாறு கெட வாசவன் செய் பணி
                                               கொண்ட வண்ட சரணம்
வழிபடு தொண்டர் கொண்ட நிலை கண்டு வெள்ளி மணி
                                               மன்றுள் ஆடி சரணம்
செழியன் விளிந்திடாத படி மாறி ஆட தெளிவித்த
                                               சோதி சரணம்
எழு கடல் கூவி மாமியுடன் மாமன் ஆட இசைவித்த
                                               வாதி சரணம்.
43
உரை
   
3354. வெம் கரி ஆவி சோர நரசிங்க வாளி விடு வேடர்
                                                     ஏறு சரணம்
புங்கவர் தேற ஆதி மறையுள் கிடந்த பொருள் ஓது
                                                     போத சரணம்
வங்கம் தேறி வேலை மகரம் பிடித்த வலையாள்
                                                     மணாள சரணம்
கங்கண நாகம் விசி நகர் எல்லை கண்ட கறை கொண்ட
                                                     கண்ட சரணம்.
44
உரை
   
3355. மைந்தனி ஆழி மேரு மகவான் அகந்தை மடிவித்த
                                               நித்த சரணம்
சுந்தர நாம வாளி பணி கொண்டு கிள்ளி தொகை வென்ற
                                               வீர சரணம்
வெம் திறல் மாறன் முன் கல் உரு ஆனை கன்னல்
                                               மிசைவித்த சித்த சரணம்
முந்திய கல்லின் மாதர் பெற அட்ட சித்த முயல் வித்த
                                               யோகி சரணம்.
45
உரை
   
3356. திரு மணி மைந்தன் மைந்தன் முடி சூட விற்ற திருமல்கு
                                                     செல்வ சரணம்
மருமகன் என்று மாமன் உருவாய் வழக்கு வலிபேசு
                                                     மைந்த சரணம்
குரு மொழி தந்து நாரை குருவிக்கு வீடு குடி தந்த
                                                     எந்தை சரணம்
வரு பழி அஞ்சி வேட மகனுக்கு இரங்கு மதுரா புரேச
                                                     சரணம்.
46
உரை
   
3357. விருத்த குமார பால அருள் மேனி கொண்டு விளையாதும்
                                                    அண்ணல் சரணம்
குரத்தியை நச்சு பாவி உயிர் உண்டு சோரி குடை வாகை
                                                    வேல சரணம்
கருத்திசை பாணன் ஆளி இசை பாடி மாறு களை வேத
                                                    கீத சரணம்
நரித்திரள் மாவை மீள நகரம் கலங்க நரிசெய்த நம்ப
                                                    சரணம்.
47
உரை
   
3358. முற்பகல் ஆறில் இரண்டு சிறு பன்றி உண்ண முலை
                                                 தந்த அன்னை சரணம்
பொற்புறு மாய ஆவை அடல் ஏறு கொண்டு பொருது
                                                 அட்ட சிட்ட சரணம்
பற்பல ஞாலம் எங்கும் அடையப் பிரம்பு படு அட்ட
                                                 மூர்த்தி சரணம்
கற்பின் ஒருத்தி மன்றல் அறிவிக்க மூன்று கரி தந்த
                                                 வள்ளல் சரணம்.
48
உரை
   
3359. அளவை களாலும் வேத முதல் நூல் களாலும் அயன்
                                             மாயனாலும் அளவாக்
களவை உனக்கு நாம குண சின்ன சாதி கதி செய்தி
                                             இல்லை அவையும்
உள என யாம் அறிந்து துதி செய்யவே கொல் உலகம்
                                             செயன் பின் எளிதாய்
விளை அருள் மேனி கொண்டு இவ் அறுபத்து நாலு
                                             விளையாடல் செய்த படியே.
49
உரை
   
3360. எனத் துதித்த வசிட்டாதி இருடிகளைக் குரு முனியை
                                             எறிதேன் நீப
வனத்து உறையும் சிவ பெருமான் இலிங்கத்தின்
                                             மூர்த்தியாய் வந்து நோக்கிச்
சினத்தினை வென்று அகம் தெளிந்தீர் நீர் செய்த பூசை
                                             துதி தெய்வத் தானம்
அனைத்தினுக்கும் எனைத்தும் உயிர்க்கும் நிறைந்து நமக்கு
                                             ஆனந்தம் ஆயிற்று என்னா.
50
உரை
   
3361. சிறந்த அருள் சுரந்து குறு முனியை வருக கரம் சிரம்
                                              மேல் வைத்து
புறம் தடவி எமை ஒப்பாய் நீயே நின் கற்பு உடைய
                                              பொலம் கொம்பு அன்னாள்
அறம் தழையும் உமை ஒப்பாள் ஆதலினால் உமையும்
                                              ஒப்பவர் அகிலத்து யாரே
நிறைந்ததவம் புரிந்தோனும் தவத்து உறுதி பெற்றோனும்
                                              நீயே அன்றோ.
51
உரை
   
3362. உனக்கு அரிய வரம் இனி யாம் தருவது எவன் உனக்கு
                                              அரிதாம் ஒன்றும் காணேம்
எனக் கருணை செய்து இலிங்கத்து இடை இச்சை
                              வடிவாய்ச் சென்று இருந்தான் ஆகத்
தனக்கு அரிய வரம் நல்கும் சிவலிங்கம் தன் பெயரால்
                                              தாபித்தான் தன்
இனக்கருணை வசிட்டாதி முனிவர்களும் தம் பெயரால்
                                              இலிங்கம் கண்டார்.
52
உரை
   
3363. ஏத்தி அருச்சனை செய்து நினைவில் அரிதாய் அன்பின்
                                            எளிய அட்ட
மூர்த்தியை அம் கயல் கண்ணி அன்பனை முப் போதும்
                                            போய் முடி தாழ்ந்து இன்பம்
பூத்த மனத்தினர் ஆகிக் கருவித் தேன் பொதிந்த சிறு
                                            புட் போல் அந்த
மாத் தலனில் வசிட்டாதி முனிவர் தபோ வனம் செய்து
                                            வதிந்தார் மன்னோ.
53
உரை