திருநகரப் படலம்
 
147.
மா உலகு எங்கும் மலர்த் தடம் ஆகத்
தா அறு சீர் புனை தண்டக நாடே
மேவிய கஞ்சம் அது ஆவதின் மேவும்
தே வினை ஒத்தது சீர் பெறு காஞ்சி.
1
   
148.
பூக் கமலத்து உறை புங்கவன் மாயோன்
பாங்கு உறை தேவர் பல் ஆண்டு இசை பரவ
ஓங்கிய புள் இனம் ஊர்ந்தவன் உறலால்
ஆங்கு அவர் மேவும் அரும் பதம் ஆமே.
2
   
149.
இன்னியல் தேர் தரு இந்திரன் முதலா
மன்னிய வானவர் மற்று உளர் யாரும்
துன்னினர் ஆய் இடை சூழ்ந்து உறை செயலால்
பொன் நகர் என்று புகன்றிடலாம் ஆல்.
3
   
150.
கின்னரர் சித்தர் கெழீஇ அதனால் அத்
தன் நிகர் இல்லவர் தம்பதி போலும்
பன்னக வேந்தர் பராயினர் உறலால்
அன்னவர் தம்பதி ஆகியது அன்றே.
4
   
151.
எண் திசை காவலர் யாவரும் ஈண்டப்
பண்டு அவர் பெற்ற பதங்களை மானும்
மண்டலம் ஆர் சுடர் மற்றைய உறலால்
அண்டமும் ஆகியது அப்பதி என்பார்.
5
   
152.
இப்படி யாவரும் எய்திய திறனால்
ஒப்பன போல உரைத்திடல் ஒப்போ
அப்பதியே அதனுக்கு இணை அன்றிச்
செப்பு அரிதால் பிற சீர் கெழு காஞ்சி.
6
   
153.
மறை முதல் ஓர் தனி மாவின் நிழல் கீழ்
உறை தரு காஞ்சி தனக்கு உலகு எல்லாம்
பெறும் அயனாதியர் பெற்றிட அன்னான்
நிறுவிய தொல் நகரோ நிகர் ஆமே.
7
   
154.
மேய தொல் ஊழியில் வேலைகள் ஏழும்
தூய அதன் எல்லை சுலா உற நிற்றல்
ஆய பரம் சுடர் ஆங்கு உளதாயும்
மாயைகள் சுற்றிய மன் உயிர் ஒக்கும்.
8
   
155.
பாழி மால் வரை எறி திரை வையகம் பலவும்
வாழும் அண்டங்கள் சிற்றுரு அமைந்து வந்து என்னச்
சூழும் நேமியம் புள் இனம் முதலிய சுருங்கும்
ஆழி நீத்தம் அது ஒத்தது மதில் புறத்து அகழி.
9
   
156.
மண்டலப் பொறை ஆற்றுவான் பல பல வகுத்து
முண்டக ஆசனம் மீ மிசை இருந்திடும் முதல்வன்
அண்டகோளகை தாங்க ஓர் சுவர்த்தலம் அதுவும்
பண்டு செய்தென ஓங்கிய நெடு மதில் பரப்பு.
10
   
157.
சென்று மூ எயில் அழல் எழ நகைத்தவன் செழும்
    
                                 பொன்
குன்று தோள் உற வாங்கலும் உலகுஎலாம் குலைந்த
அன்று நான்முகன் அனைத்தையும் தாங்குக என்று
                                     அருள
நின்றது என்னவும் பாதலம் புகுந்து மேல் நீண்ட.
11
   
158.
மேக நாட்டிற்கும் விஞ்சையர் நாட்டிற்கும் விண்ணோர்
மாக நாட்டிற்கும் மலர் அயன் நாட்டிற்கும் மற்றை
நாக நாட்டிற்கும் பாதல நாட்டிற்கும் நணுகிப்
போக நாட்டிய பொன் மதில் ஆனது அப்புரிசை.
12
   
159.
முதிரை வண்ண மா நவமணிக் குவையும் வான்
                                 முளைக்கும்
கதிரின் எல் எனும் பொருள் உடன் ஏனவும் காட்டிப்
பொதிவது ஆகிய முழுவதும் நிரம்புதல் பொருந்தா
நிதியம் மேய கூடு ஒத்தது நெடிய மா மதிலே.
13
   
160.
நிறையும் வார் கடல் சுற்றிய நேமியும் நேமிக்
குறை உள் ஆகிய கணிப்பு இலா அண்டமும் ஒப்ப
சிறையில் வான் கிரி நிரை எனச்செவ் விதிற் கிளர்ந்து
மறுகு எலாம் திகழ் மாளிகைப் பத்தி சூழ் மதிலே.
14
   
161.
தடுக்கும் ஆற்றலர் நால் வகைப் படையொடும் சாய
முடுக்கும் வாள் கொடு விதிர்த்திடும் எழுவினான்
                                   முருக்கும்
எடுக்கும் எற்றிடும் எறிந்திடும் விழுங்கிடும் ஈர்க்கும்
படுக்கும் கல் மழை சொரிந்திடும் வில் படை பயிலும்.
15
   
162.
உருக்கும் செம்பினை வங்கத்தை இழுதொடும் ஓச்சும்
வெருக் கொள் நேமிகள் எறிந்திடும் வச்சிரம் வீசி
இருக்கும் நின்றிடும் குப்புறும் செறு நரை இகலி
நெருக்கும் தாழ்ந்திடும் உலகு அளந்தோன் என நிமிரும்.
16
   
163.
பீடுதங்கிய பணை முரசு இயம்பிடும் பிடிக்கும்
கோடும் ஆர்த்திடும் துடிகளும் ஒலித்திடும் கொட்புற்று
ஆடும் மீ உயர் புள்ளையும் எறிந்திடும் அரண்மேல்
ஓடும் மீளும் அக் கதிரையும் தடுப்ப போல் உந்தும்.
17
   
164.
சூலம் வீசிடும் தோமரம் வீசிடும் சுடர் வேல்
ஆலம் வீசிடும் சுடுமணல் வீசிடும் அளப்பில்
சாலம் வீசி நின்று ஈர்த்திடும் அகழியில் தள்ளும்
சீலம் வீசிய பார் இடமாம் எனத் திரியும்.
18
   
165.
திகழும் வெம் கனல் உமிழ்ந்திடும் ஒன்னலர் செலுத்தும்
பகழி மாரியை விழுங்கிடும் பறவையில் படரும்
இகழும் நாவையும் மனத்தையும் எறிந்திடும் என்னால்
புகழும் நீரவன் தம் மதில் மேல் உறும் பொறிகள்.
19
   
166.
பூணின் ஏர் தரும் பொன்னவாம் புரிசை மேல் புனைந்த
வாண் இலா நெடும் துகிலிகை பெயர்வன மலரோன்
சேண் உலாய தீம் சுடர் எனும் கோபுர சிகரம்
காணவே பல வெகினம் ஆய்த் தேடல் போல் கவினும்.
20
   
167.
ஈர்த்த மாமதி சசி என்பது உலகு உளோர் இட்ட
வார்த்தை அல்லது சரதமோ கடி மதில் மருங்கில்
தூர்த்த கேதனம் அவன் மணி மேனியில் துடக்கப்
போர்த்த வெண் நிலாக் கஞ்சுகம் பீறிய போலாம்.
21
   
168.
காட்சி மேய அக் கடி மதில் கதலிகை காணூஉச்
சூட்சி நாடிய பரிதியும் கீழ் உறத் தொடர்ந்தான்
மாட்சி தேய்ந்திலன் வரன் முறை மனப்படும் மதியோர்
தாட்சி செய்யினும் மனையர் பால் அணுகுமோ தவறு.
22
   
169.
புடை பரப்பிய புரிசையின் நால் திசைப் புறத்தும்
தட நிலைப் பெரும் கோபுரம் உளது அழல் நிறத்துக்
கடவுள் உச்சியின் வதனம் ஒன்று இன்றியே காண்பான்
அடைதல் உற்றிடும் திசை முகம் பொருவின அவையே.
23
   
170.
என்று மாமதிக் கடவுளும் பிறரும் ஈரியல் பாங்கு
குன்றமே எனக் கீழ்த் திசை அதன் ஒடும் குடபால்
நின்ற கோபுரம் கடக்க அலர் வாய்தலின் நெறியே
சென்று சென்று போய் அப்புறத்து ஏகினர் திரிவார்.
24
   
171.
தீ புரத்து இடை மடுத்தவன் ஆணையால் சிறந்த
மா புரத்து இடை வான் தொடும் கடி மதில் வரைப்பில்
ஆ புரத்த வாய்க் கிளர்ந்தவே அமைத்தவன் என்னக்
கோபுரத்து இடைக் கொழுந்து போல் ஓங்கிய கொடிகள்.
25
   
172.
மாட மாளிகை மண்டபம் கோபுரம் மருங்கில்
கோடி கோடியின் மேலும் உண்டு அன்னதார் குணிப்பார்
ஆடு கேதனத்து அளவையும் அன்னதே அகல் வான்
ஊடு போகலாது அலமரும் பறவைகள் ஒப்ப.
26
   
173.
சிகர மால் வரை அன்ன மாளிகை தொறும் சிவணும்
மகர தோரண மாடிகள் பல உற வயங்கல்
இகலும் வெய்ய கோள் இரண்டுமாய் ஒரு வடிவு எய்தி
அகல் விசும்பு இடைக் கதிர்களின் புறம் அறைத்து
                                     அனைய.
27
   
174.
செம் பொன்னில் புரி நிலை உடைத் திகிரி அம் தேர்கள்
அம் பரத்து இடை வசி உற வீற்று வீற்று ஆகும்
தம்பம் உற்று அலமருவன செய்ய கோல் தலையில்
பம் பரத்து உருத் திரிப்பு உறக் கறங்கிய படிய.
28
   
175.
பளிங்கினால் செய்த தெற்றியின் தலைமிசைப் பனிதோய்
வளம் கொள் நித்திலம் செம் மணி குயிற்றிய வைப்பில்
துளங்க நாற்றிய பொன் மணிப் பாலிகை தொகுவ
குளம் கொள் தாமரை மலர்ப் பொகுட்டு ஆயின
                                     குறிக்கின்.
29
   
176.
ஓவியத்தின் மரகதத் தலத்தின் உம்பர்த்
தாவில் ஆடகத் தலம் மிசை நித்திலத் தலம் மேல்
கோவை பட்ட செம் மணித் தலம் பொலிதலால்
                                 கொண்மூ
மூ வகைக் கதிர் வியல் இடம் தெரிப்பது அம் மூதூர்.
30
   
177.
கன்னல் வேள் எனும் மைந்தரும் மாதரும் கலந்து
மன்னு நித்தில மாளிகைப் பத்தியின் மாடே
பொன்னவாம் சிறை மணி மயில் குழாத்தொடும் போகும்
அன்னம் மா மதி முகில் இடை நுழைந்து போய்
                                     அனைய.
31
   
178.
தண்டம் ஆகியே புவி உறு பணி எலாம் தழுவி
அண்ட மீ மிசை இரவியும் மதியமும் அடைதல்
கண்டு மாளிகைச் சூளிகை மருங்கு போய்க் கவர் வான்
கொண்ட சீற்றத்தின் நா வெறிந்து அன்ன பூம் கொடிகள்.
32
   
179.
தேனை வென்ற சொல்லார் ஒடு மைந்தரும் திளைக்கும்
மீன வாவி போல் வியன் படிகத்தினால் விளங்கும்
தானம் மீ மிசைத் தயங்கிய முழு மணித் தலந்தான்
வான நின்றிடு தெய்வத மானமே மானும்.
33
   
180.
தேவர் தானவர் முனிவரர் சித்தரோடு இயக்கர்
வாவு கின்னரர் உவணர் கந்தருவர் மற்று உள்ளோர்
ஏவரும் தமது அகன்பதி இகந்து அவண் எய்தா
மேவுகின்றன தனித்தனி இருக்கை கண் மிகுமால்.
34
   
181.
தூங்கு குண்டிகை அருகு உறக் கால் எதிர் தூண்டி
ஓங்கு நாசிமேல் விதி முறை நயனங்கள் உறுத்தி
ஆங்கு ஒர் ஆசனத்து இருந்த அரன் அடி அகத்து
                                   அடக்கிப்
பாங்கர் மா தவம் புரிகுநர் சாலைகள் பலவால்.
35
   
182.
பாடு நான் மறை அந்தணர் வேள்விகள் பயில
மூடு தண் புகை அண்டமும் கடந்தன முன்னம்
தேடு கின்றது ஓர் பரஞ்சுடர் மீட்டும் இத் திறத்தால்
நீடு கின்றதோ என்று நான் முகத்தனும் நினைய.
36
   
183.
நான் மறைக் குலத்து அந்தணர் நவையறு காட்சி
ஊன் மறைத்திடும் உயிர் என ஓம்பிய ஒழுக்கார்
மேல் முறைக் கண் ஓர் ஐம்புலப் படிற்றினை
                               வென்றோர்
வான் மறைத்திடு மாளிகை வீதியும் மலிந்த.
37
   
184.
ஏவு பல்படை வலியினர் வெம்சமம் இகந்தோர்
நாவினால் மறை பயில்பவர் நணுகுறு நலத்தால்
கோவு நீள் நகர் மறுகு எலாம் குரு மணிச் சிகரத்
தேவு நீள் நகர் நிலைமையே போல்வது தெரியின்.
38
   
185.
அணியின் ஓங்கலும் பன் மணிக் குவால்களும் ஆர்வம்
தணிவில் ஆடகக் குவைகளும் பிறவும் முன் தழைப்பக்
கணிகணான் உறு கற்பகம் அனையன காட்சி
வணிகர் ஆவணத் தெற்றிகள் வயின் தொறும் வயங்கும்.
39
   
186.
கங்கை மா மகள் தொல் பெருங் குலத்தர் காசினியின்
மங்கையாள் அருள் புரிதரு மகார் எனும் வழக்கு ஓர்
செம் கண் மான் நிகர் வெறுக்கையர் அயன் பதம்
                                  சேர்ந்தோர்
துங்க வீதியும் ஏனையர் மறுகொடும் தொகுமே.
40
   
187.
கண்டு கேட்டு அவை உண்டு உயிர்த்து உற்று அறி
                                        கருவி
கொண்ட ஐம்புலன் ஒருங்கு உற நடாத்திய கொள்கைத்
தொண்டர் கூட்டமும் விழிவழிப் புனல் உகத் தொழும்
                                         கை
அண்டர் கூட்டமும் ஆலயம் தொறும் தொறும்
                                     அறாவால்.
41
   
188.
ஆதி நான்முகன் எகினத்தின் அடிகளும் அமலன்
பாதியாளன் தன் உவணத்தின் அடிகளும் பனிக்கார்
நாதனூர் தரு தந்தியின் அடிகளும் நாளும்
வீதி வீதிகள் தொறும் காண் வர விளங்கும்.
42
   
189.
மாவின் ஓதையும் களிற்று இன தோதையும் மருங்கின்
மேவும் தேர்களின் ஓதையும் கவிகையாய் விரிந்த
காவு சூழ் தரு மன்னர் சீர் ஓதையும் கறங்கும்
தேவ துந்துபி ஓதையும் இறுத்தில தெருவு.
43
   
190.
நாட்டியச் செயல் யாவையும் சிவனது நடனம்
பாட்டு இசைத்திறம் யாவையும் அன்னதே பதி ஓர்
கேட்டு இருப்பன யாவையும் அவன் இசைக் கேள்வி
கூட்டம் யாவையும் மன்னவன் தொண்டு செய் கூட்டம்.
44
   
191.
பால் உறுந் ததி இழுது தேன் இருக்கைகள் பலவும்
கோலம் ஆகும் அந் நகர் இடை அவை உறை கூவல்
போலும் ஆயிடை மா தவத்து அவள் அறம் புரியும்
சாலை ஆயின வரம்பு இலா அடிசிலம் சாலை.
45
   
192.
அளவு இல் பற்பகல் தம்மினும் நீங்கியோர் அடுத்த
கிளைஞர் வந்து உழி எதிர் தழீஇ நல் நயம் கிளத்தி
உளம் மகிழ்ந்தவர்க் கூட்டும் இன் அடிசில் போல்
                                  உறுவோர்
எளிதி னுங்கிட வழங்கும் ஆல் ஓதன இருக்கை.
46
   
193.
மாட மாளிகை வாயில் தொறும் தொறும்
நீடூ கண் உளர் ஆம் என நின்று நின்று
ஆடு சித்திரப் பத்தி அமரரும்
நாடி நோக்கி நயந்திடப் பட்டதே.
47
   
194.
எல்லை தீர்ந்த விரவி கடூண்டிய
சில்லி ஆழித் திகரி கண் மானுமால்
மல்லன் மா நகர் மைந்தர்கள் ஊர் தரும்
பல்வகைச் சுடர்ப் பண் உறு தேர்களே.
48
   
195.
வெள்ளை ஆதி வியன் கவி யாவையும்
தெள்ளிதின் மொழி தென் கலையே முதல்
உள்ள பல்கலை ஓது கின்றார்களும்
வள்ளியோர் களும் மன்று தொறும் ஈண்டுவார்.
49
   
196.
இகலும் வேழத்து எயிற்றினை எய்ந்திடும்
நகிலினார் கண் நறும் குழன் மேல் இடும்
அகிலின் ஆவியும் ஆய் மணி மாடம் மேல்
முகிலும் வேற்றுமை இன்றி முயங்குமே.
50
   
197.
பண்ணின் ஓசையும் பானலை வென்றிடும்
கண்ணினார்கள் களி நட ஓசையும்
தண் ணரம்பிய தந்திரி ஓசையும்
விண் உளோர்க்கும் விருந்து எனல் ஆயவே.
51
   
198.
அணிகுலாவும் அரம் பையர் காளையர்
நணிய தோளை நயப்பு உற நாகரும்
கணிகை மாதரைக் காமுற மேவலான்
மணி கொள் காஞ்சி மதன் அரசு ஆயதே.
52
   
199.
கூற்றில் செல்லும் கொலைக் கரித் தானமும்
ஏற்றில் செல்லும் இடையர் தம் சேரியின்
ஊற்றில் செல்லும் ஒண்பாலும் உடன் உறா
ஆற்றில் செல்லும் அவ் ஆவணம் தோறுமே.
53
   
200.
பண் உளர் நரம்பு இயல் பாணிக்கு ஏற்றிட
எண் உள கணிகையர் இனத்தொடு ஆடலும்
கண் உளர் ஆடலும் காமன் ஆடலும்
விண் உளர் ஆடலும் வெறுப்ப மேவுமே.
54
   
201.
அரிவையர் மைந்தர்கள் அணிந்து நீத்ததே
திருமகள் காமுறும் செல்வம் ஆகுமேல்
கருதரு நான்முகக் கடவுட்கு ஆயினும்
பொருவரு நகர் வளம் புகலல் பாலதோ.
55
   
202.
மாறாய்ச் சிறார்கள் எறிந்து ஆடிய மான் மதத்தால்
சேறாய்ப் பொன் சுண்ணத்து உலர் வாய்ப்பனி நீர்கள்
                                       சிந்த
ஆறாய்ப் பளிதத்தினில் வால் உகத்து ஆறும் ஆகி
வேறாய் புவியோர் உணர்வாம் என மேய வீதி.
56
   
203.
தண் தாமரை எந்திய வானவன் தன்னை ஒத்தான்
எண்டாவிய மாமதன் ஏந்திழையார் இலஞ்சி
வண்டாமரை பூத்தன ஒத்தனர் வந்து செந்தேன்
உண்டு ஆடிய தேன்களை ஒத்தனர் ஓங்கல் மைந்தர்.
57
   
204.
ஏமம் குலவு முரசங்கள் இரட்ட வாசத்
தாமம் கமழ் பந்தரின் ஊடு தமக்கு இயன்ற
ஓமங்களின் மா மணம் செய் தனது ஊர் குலாவும்
மா மங்கலமே உலப்பின்றி மலிந்தது அன்றே.
58
   
205.
மாகம் திகழும் அகிலாவிகொள் மாடம் மீதில்
பாகின் மொழியார் இளமைந்தர் தம் பாலினோச்சப்
போகும் சிவிறிப் பனி நீர் புறம் சிந்த என்று
மேகம் சிதறும் பெயல் என்ன விளங்கும் வீதி.
59
   
206.
வன் மாமுலை யேந்திய மங்கையர் மைந்தர் ஆனோர்
தொன் மாடம் மீதில் எறிந்து ஆடு பொன் சுண்ணமோடு
நன்மா மலர்த் தாது விசும்பு உற நண்ண மேகம்
பொன் மா முகிலாய்ப் பனிநீரில் பொழியும் அன்றே.
60
   
207.
தாரால் பொலி பொன் புயவீரர் தவாது செல்லும்
தேர் ஆர்ப்பு நால்வாய்க் கரியார்ப்பும் வெம் சேனை
                                    ஆர்ப்பும்
ஏர் ஆர்ப்பு மிக்க பதி மானவர் ஈண்டு மார்ப்பும்
கார் ஆர்ப்பும் வேலைக் கடல் ஆர்ப்பும் கடுத்த
                                    அன்றே.
61
   
208.
வான் நோக்கி நிற்கும் உலகு என்னவும் மன்னவன் செம்
கோன் நோக்கி நிற்கும் குடி என்னவும் கோது உம்பர்
ஆனோர்க்கு நாகர் உலகோர்க்கும் அவனியோர்க்கும்
ஏனோர்க்கும் நாடும் நகராகி இருந்தது அவ்வூர்.
62
   
209.
கோடு நெறியும் இகலும் மனக் கோட்டம் ஆய
கேடும் பிணியும் முதல் ஆகிய கேதம் யாவும்
நீடும் பரிவோடு உறைவார் இடை நீங்கலாலே
வீடு அந் நகரே எனில் என்னின் விளம்ப வற்றோ.
63
   
210.
ஏமமே தரு வாச்சினை களும் அனைத்து ஆவிலை தளிர்                              செய்யபூம் துகிராக்
காமர்பூ மணியா உதித்து ஒரு காஞ்சி கண்ணர் ஓர் ஐவர்
                             முன்கண்டு
தாம் இனிது அருளும் பொய்கையின் மருங்கே தன் நிழல்
                             பிரிகிலாது உறலால்
பூமி எண் காஞ்சி மாபுரம் எனும் பேர் புனைந்தது
                            அப்பொருவிலா நகரம்.
64
   
211.
கருதியான் உறங்கு இராத்தொறும் முடிவில் துஞ்சிய                              ஊழிகள் தொறும்
விரைய வந்து உலகம் அழித்திடும் கடல் அவ்வியன்
                         பதி எல்லையுள் சிறிதும்
வருவதை அஞ்சிப் புறம் தனில் சூழ வந்து ஒரு சத்தி
                                  காத்திடலால்
பிரளய சித்து என்று ஒரு திரு நாமம் பெற்றது அக்
                             காஞ்சிஅம் பேரூர்.
65
   
212.
கயிலையில் அரனை அம்மை பூம் காவில் கண்களை                                 மூடலும் உலகில்
பயில் உறு கொடிய வினை இருள் அகலும் பான்மையால்
                            வந்து மா நிழல் கீழ்
இயல் ஒடும் பரமன் பூசனை இயற்றி இரைத்து எழும்
                          கம்பை கண்டு அஞ்சிச்
செயன் முறை தழுவக் குழைந்து அருள் செய்யச்
                        சிவபுரம் ஆனது அச்சீரூர்.
66
   
213.
விண் உறை மகவான் கரிபுரி தவத்தால் வெற்பதாய்த்                         தன்னை முன்தாங்கு
புண்ணிய கோடி இபகிரி மிசையே பொருவிலா வேதி
                                உத்தரத்தில்
அண்ணல் அம் கமலத் திசைமுகன் வேள்வி ஆற்றலும்
                       அவற்கு அருள் செய்வான்
கண்ணன் வந்திடலால் விண்டுமா புரமாம் கட்டுரை
                           பெற்றது அக் காஞ்சி.
67
   
214.
கார்த் திரு மேனித் தண் துழாய் மௌலிக் கண்ணனும்                              கமலமேல் அயனும்
ஆர்த்திடும் தரங்கப் பகீரதி மிலைந்த அவிர் சடை
                              அமலனும் ஆகும்
மூர்த்தி கடத்த உலகமே போல முன்னியப் பதி அமர்
                                     செயலால்
சீர்த் திரிமூர்த்தி வாசம் ஆகிய பேர் சிறந்தது அக்
                                கச்சி மா நகரம்.
68
   
215.
தரணி கண் முழுதும் புரிதரும் விரிஞ்சன் தன் மனம்                     புனிதமாம் பொருட்டால்
திருமகள் கணவன் கமடமாய்ப் பூசை செய்திடு கச்ச
                    பாலயத்தில்
அரன் அடி பரவி அருச்சனை இயற்றி அங்கண் வீற்று
                    இருந்திடும் நெறியால்
வரமிகு பிரம புரம் என ஒருபேர் மன்னியது அன்னது
                    ஓர் நகரம்.
69
   
216.
வீடு உறு முத்தி போகம் என்று அவற்றில் வெஃகிய                         வெஃகியாங்கு என்றும்
கூடு உறு தவத்தால் வழிபடு வோர்க்குக் கொடுத்திடும்
                        தன்மையால் காம
பீடம் என்று ஒரு பேர் பெற்றது மலர்மேல் பிரமனே
                        முதலினோர் தவத்தை
நாடினர் செயலால் தபோமயம் எனும் நணியது கச்சி மா
                        நகரம்.
70
   
217.
சகங்களோர் மூன்றில் அறம் பெரிது உளது இத் தரணி                             இத்தரணிமா நகர்க்குள்
மிகுந்தருமத்தின் பலத்தினைத் தரலால் வியன் சகற் சாரம்
                            என்று ஒரு பேர்
புகும் பரிசுடைய அட்டசித்திகளும் பொருவின் மாதவர்க்கு
                            அருள்திறத்தால்
பகர்ந்திடும் சகல சித்திஎன்று ஒரு பேர் படைத்தது கச்சி
                            அம் பதியே.
71
   
218.
உன் அரும் கயிலை நாயகன் உமையை ஒரு பாகனீலி                                 என்று உரைப்ப
அன்னவன் தனது காளிமங் கழிப்ப அங்கு கதிலையை
                                வந்து எழலும்
முன்னவன் அவளை இந் நகரில் இருந்து முறை புரிந்து
                           அருள் என விடுப்பக்
கன்னி காத்திடலால் கன்னிக் காப்பு என்னும் கவின்
                         பெயர் உடையது கச்சி.
72
   
219.
அரியதோர் கயிலைக் கணங்களில் ஒருவன் ஆன                         துண்டீரன் மாலதிபால்
பெருமயல் கொள்ளச் சிவன் இவளொடு நீ பிறந்து
                 இருந்து இன்பம் உற்று எம்பால்
வருகென நிலம் மேன் மன்னர் பால் தோன்றி
                    மற்றவளோடு சேர்ந்து அரசு
புரி தரு செயலால் காஞ்சி துண்டீர புரம் எனப் புகல
                                   நின்றதுவே.
73
   
220.
தன்னையே அருச்சித்திட மலர்க்குஏகித் தடம் தனில்                             கராவின் வாய்ப்பட்டுத்
தன்னையே நினைந்து தன்னையே அழைத்த தந்தியைக்
                            காத்த வொண் புயமால்
தன்னையே வேண்டித் தழன் மகஞ் செய்யத் தண்டகற்கு
                            எண்திசை அரசு
தன்னை ஈந்திடலால் தண்டக புரமாம் தனிப் பெயர்
                            பெற்றது அத்தனியூர்.
74
   
221.
அழகிய அயோத்தி மதுரையே மாயை அவந்திகை காசி
                                    நல் காஞ்சி
விழுமிய துவரை எனப் புவி தன்னின் மேலவாய்
                               வீடுஅருள் கின்ற
எழு நகரத்துள் சிறந்தது காஞ்சி என்று எம்பிரான்
                                     உமைக்கு
மொழி தரு நகரம் நகர் எனில் அதற்கு மூவுலகத்து நேர்
                                      உளதோ.
75
   
222.
பங்கம் இல் வசிட்டன் பசுப் பொழி பாலி படர்ந்திடும்                                 உத்தரம் சேயைச்
செங்கமலத் தோன் முதலினோர் ஆட்டுத் திரு நதி தென்
                                திசைச் செல்லும்
அங்கு அவற்றிடையே கம்பமே முதலாம் ஆலயத்
                                   தந்தரு வேதி
கங்கை காளிந்தி இடைப்படும் தலத்தின் முற்படும்
                               காஞ்சி மா நகரம்.
76
   
223.
தொல்லையோர் பிரமன் துஞ்சிய காலைத் தோன்றிய
                         நீத்த மேல் அரிபோல்
செல்லும் மார்க் கண்டன் கரத்தினில் கம்பை சேர்ந்தது
                        ஓர் தனிப் பெரும் சூதம்
எல்லை நீர் இகந்து வளர்தலும் மருப்பு ஒன்று எய்தவக்
                       கொம்பர் தொட்டு இழிந்து
நல் உமை குறிக் கொள் முதல்வனை வணங்கி நயந்தவன்
                             இருந்த அந் நகரம்.
77
   
224.
சமையமா றினையும் தாய் என வளர்த்துச் சரா சர                         அணுக்கள் உய்ந்திடுவான்
அமைதரும் எண்ணான்கு அறத்தினைப் போற்றி ஆதி
                        பீடத்தில் வீற்று இருக்கும்
உமை அமர் காமக் கோட்டியைக் கதிரோன் உடுபதி
                          கணங்கள் சூழ் தரலால்
இமையவர் தமக்கும் திசை மயக்கு அறாத இயல்
                    புடையத்து அந் நகரம் என்றும்.
78
   
225.
பாவம் ஓர் கோடி புரியினும் ஒன்றாம் பரிவினில் தருமம்                                 ஒன்று இயற்றின்
ஏவரும் வியப்பக் கோடியாய் மல்கும் இன்னது ஓர்
                                பெற்றியை நாடித்
தேவர் கண் முனிவர் தம்பதம் வெறுத்துச் சிவன்
                       அருச்சனை புரிந்து அங்கண்
மேவினர் தவம் செய்து இருத்தலால் காஞ்சி வியன்
                     நகர்ப் பெருமையார் விரிப்பார்.
79
   
226.
கங்கை தன் சிறுவன் அருள் பெறு வேதாக் கண் படை                         கொண்ட காலையினும்
அங்கு அவன் துஞ்சும் பொழுதுதினும்காஞ்சி அழிஉறா
                        இருந்த பான்மையினால்
துங்க வெண் பிறையும் இதழியும் உரவும் சுராதிபர்
                        முடிகளும் அணிந்த
மங்கை ஓர் பங்கன் படைத்ததே அன்றி மலர் அயன்
                        படைத்தது அன்று அதுவே.
80
   
227.
அரிய பல் இசையும் மறைபுனல் கங்கை அரும் சிலையில்                         இங்கு அங்கும் உறைவோர்
சுரர் தருவனைத்தும் கற்பக இன்பம் துய்ப்பது வேள்வி
                        ஊண் பூசை
உரை செப நடத்தல் வலம் வரும் தன்மை உன்னலே
                        தியானம் வீழ்ந்திடுதல்
பரனடி வணக்க மாவது காஞ்சிப் பதிக்கு அலால் எந்
                        நகர்க்கு உளதே.
81
   
228.
கண முகில் செக்கர் போர்த்து எனும் கரிய கஞ்சுகச்
                             செம் நிறக் கடவுள்
மணி சுடர் வயிரக் கிம்புரி மருப்பு மால்கரி முகத்தவன்
                                       வருசூர்
துணி பட எறிந்த வேலவன் அயன் போல் தோன்றிய
                           சாத்தன் மால் விசயை
இணை இல் சீர்க்காளி முதலினோர் என்று இனிது
                          காத்திடுவது அந் நகரம்.
82
   
229.
அறு சமயத்தில் கடந்த சைவத்தின் அன்றி வீடு இலது                                 எனத் தெளிந்து
பிறர் அறியாது தொன்மை போல் இருந்து பிஞ்சகன் மீது
                                   கன் மலரால்
எறி தரு தேரர் அன்பர் தம் கலிங்கம் எழிலிகள்
                            நனைத்தலும் சிரத்தை
முறை புரி சிலை மேல் மோதினோர் முதலோர் முத்தி
                     பெற்று உடையது அம் மூதூர்.
83
   
230.
ஈசனது அருளால் கயிலையை நீங்கி இமைய மா மயில்                                 அறம் புரிவான்
காசியில் இருந்து முடி உறாது ஏகிக் கனகமா நீழலில்
                                     பரனைப்
பூசனை புரிந்து கம்பை கண்டு அஞ்சிப் பூண் முலை
                           வளைக் குறிப்படுத்தி
ஆசிலா அருள் பெற்று இன்னு நோற்றிடலால் அனைய
                        காஞ்சிக்கு நேர் அதுவே.
84
   
231.
ஆருயிர் முழுதும் வீடு பெற்று உய்வான் அறம் புரி                             சாலைய அணித்தாப்
பேரரவு இறைவன் தவத்தின் முன் இருந்த பிலத்திடைக்
                       கோயில் கொண்டு என்றும்
பூரணி நோற்று வழிபட அணையாள் பூசனை கொண்டு
                                    யாவர்க்கும்
காரணமான பரசிவன் அனந்த கலையொடு நிலையது
                                    அக்காஞ்சி.
85
   
232.
இன்னமும் உமையாள் நோற்றிடும் ஆங்கே இறப்பினும்                             பிறப்பினும் நிலையாய்
மன்னியே உறினும் ஒருகணம் ஏனும் வைகினும்
                              மறைகளாம் தனிமா
நன் நிழல் இருந்த பரஞ்சுடர் புரியும் நடந்தரி சிக்கினும்
                                       அதனை
உன்னினும் முத்தி வழங்கு காஞ்சியைப் போல் உலகில்
                         வேறு ஒரு நகர் உளதோ.
86
   
233.
கண்ணுதல் பரனும் தண் துழாய் மவுலிக் கடவுளும்
                         கமலம் மேல் அயனும்
விண்ணவர்க்கு இறையும் கொற்ற மாலினியும் மேலை
                    நாள் பிறந்த தொன் மனுவும்
தண் அளி புரி துண் டீரனும் நள்ளார் சமர்த் தொழில்
                            கடந்த தண்டகனும்
அண்ணல் அம் கரிகால் வளவனும் பிறரும் அரசு
                   செய்து அளித்தது அந் நகரம்.
87
   
234.
வேலை சூழ் உலகில் எங்கணும் இருபால் வீட்டினை                         வெஃகினோர்க்கு உதவும்
ஆலய நூற்று எட்டு உள்ள மற்று அவற்றுள் ஐம் முகப்
                             பரஞ் சுடர் அமரும்
கோலம் ஆர் நிலயம் இருபது மாயோன் கோ நகர்
                               எட்டு மாக்குழுமி
நால் எழு தானம் உள்ள அந் நகர் போல் நாம் புகழ்
                            நகரம் மற்று எவனோ.
88
   
235.
கச்ச பாலயமே கம்பமே மயானம் கவின் கொள்
                             காரோண மாகாளம்
பச்சி மால் அய நல் அநேகபங் கடம்பை பணாதர
                             மணீச் சரம் வராகம்
மெய்ச் சுர கரமுன்னி இராமம் வீரட்டம் வேத நூபுர
                                  உருத்திரர் கா
வச்சிர னகரம் பிரமமால் பேறு மறை சையாம் சிவ
                               ஆலயம் இருபான்.
89
   
236.
கரிகிரி அட்ட புயம் திரு வெஃகாக் கருதும் ஊர் அகம்                                  சகாள் ஆங்கஞ்
சுரர் புகழ் நிராகாரந் நிலாத்து திங்கட் டுண்ட நல்
                                 பாடகம் இனைய
அரி திரு முற்றம் எட்டவை அன்றி அறுமதினாயிர
                                 நிலயம்
பரசிவன் சத்தி குமரர் மால் புறத்தோர் பலரும்
                          வீற்றிருப்பது அப்பதியே.
90
   
237.
ஒன்று தீ விளக்கம் ஈரிடம் ஒரு மூன்று உற்றிடு தெற்றி                                    நால் கரணம்
நின்றிடு தரு ஐந்து ஆறு புள் ஏழு நெடு நதி எண்
                                 பொது ஒன்பான்
மன்றலம் பொய்கை வியன் சிலை ஒரு பான் மன்ற
                       அவை பத்தின் மேல் ஒன்று
நின்று அமர்ந்து ஒழுகு நெறியில் அற்புதம் ஆய் நிகர்
                       இலாது உறையும் அந் நகரம்.
91
   
238.
சிறந்திடும் மதியும் இரவியும் மாழ்கச் செகம் எலாம்
                             தனது ஒளி பரப்பி
அறம் புரி காமக்கோட்டி மந்திரத்துள் அம்மை வாழ்
                           பிலத்தினுள் அழியாது
உறைந்திடும் தூண்டா விளக்கம் ஒன்று உதித்த உயிர்த்
                  தொகை இறந்திடா விடம் ஒன்று
இறந்திடும் உயிர்கள் பிறந்திடா விடம் ஒன்று எம்பிரான்
                             இருந்த வீர் இடமே.
92
   
239.
தோற்று உயிர்க்கு உணவு நல்கும் ஓர் தெற்றி சொற்றவை                               உதவும் ஓர் தெற்றி
தேற்று சொன் மூகர்க்கு அளிக்கும் ஓர் தெற்றி தெற்றி
                        மூன்று இவை நகர் எல்லை
ஈற்றினில் கீழ்பால் அளக்கரும் தென்பால் இயல் பெரும்
                           பெண்ணை நல் நதியும்
மேற்றிசைப் பவள சயிலமும் வடபால் வேங்கட வெற்பும்
                                 நான்கு அரணே.
93
   
240.
மறைகளின் உருவாய்ப் பொன் மலர் தனிமா மலரொடு
                            காய் இலாது என்றும்
செறி தரு பலங்கள் உதவி நுங்கினர்க்குச் சித்திகள்
                           வழங்கு உறும் எகினம்
வெறி மலர் பலவும் மலர்ந்திடு மதூகம் விண்ணினை
                            நோக்கும் ஓர் அத்தி
நறு நிழல் பிரியாது இருந்தது ஓர் காஞ்சி நல்நகர்
                             தன்னில் ஐந்தருவே.
94
   
241.
உம்பர் ஊண் பகிரும் சாதக மணிகள் உதவிடும் அன்ன                                 நூல் உரைத்துக்
கெம்பு உறு கிள்ளை அலகு சொல் ஆந்தை குறை
                          பெறில் கூவுறாக் கோழி
இம்பரில் பாவம் துடைத்திடும் நேமி இவை அறு புள்
                                  எழு நதிதான்
கம்பை நல் பம்பை மஞ்சனீர் பிச்சி கலிச்சி பொன்
                             மண்ணி வெஃகாவே.
95
   
242.
குரை புனல் வேட்டோர்க்கு உதவியே திரியும் கூவலம்                         பொதுக்கு உறு முயல்போய்
கரி தொடர் பொது ஏழ் இசை உறுபொது மால் கண்டு
                        இன்று இடுபொது வேறோர்
உருவு செய் பொதுவோர் புற்றின் மா முழவம் ஒலித்திடும்
                          பொதுத் திசை மயக்கம்
புரிதரு பொது என் அம்மை நோற்று அருளும் பொன்
                  பொது இவைகள் எண் பொதுவே.
96
   
243.
முன் உறு பிணிகள் மாற்றிடும் பொய்கை முதல்வர்கள்
                             முடி உறும் காலைச்
செந் நிறம் ஆகும் பொய்கை முக்காலம் தெரித்திடும்
                        பொய்கை கண் நுதலோன்
தன் அடி காட்டும் பொய்கை வேண்டியது தந்திடும்
                        பொய்கை மெய்ஞ் ஞானம்
பொன் நிறம் செல்வம் வசீகரம் தரு நால் பொய்கையோடு
                             ஒன்பதாம் பொய்கை.
97
   
244.
விடந்தனை அகற்றும் ஒருகல் ஆருயிர்கள் மெய்ப்பிணி                             மாற்றிடும் ஒருகல்
அடைந்தவர் எல்லாம் இமையவராக அளித்திடும் ஒருகல்
                            வெம் படையால்
தடிந்திட வேறு ஆய்த் துணி படு உடலம் சந்து செய்
                            வித்திடும் ஒருகல்
நெடும் படை வரினும் அவை இரிந்தோட நிலை பெறீஇ
                            நிற்கும் ஆங்கொருகல்.
98
   
245.
துஞ்சினர் தம்மை எழுப்புமாங்கு ஒருகல் தொல் வழக்கு                              அறுத்திடும் ஒருகல்
எஞ்சல் இனிது அங்கு எடுத்துளோர் வினவில் ஈது எனக்
                               காட்டிடும் ஒருகல்
விஞ்சிய வினைகள் ஈர்த்திடும் ஒருகல் வேந்தருக்கு
                                அரசியல் உதவித்
தஞ்சமது ஆக நின்றிடும் ஒருகல் தக்க கல்லை
                                  இரண்டவையே.
99
   
246.
அயன் மனைச் சென்றோர் கணவரைப் பிழைத்தோர்             அடிகளை இகழ்ந்து உளோர் அணுகில்
துயர் உறு மூகை ஆக்கும் ஓர் மன்றம் சோரர்முன்
                            சுழலும் ஓர் மன்றம்
வியன் நிறம் பலவாத் தோன்றும் ஓர் மன்றம் விஞ்சைகள்
                          வழங்கும் ஓர் மன்றம்
மயல் புரிகின்ற பொழுதொடு திசையின் மயக்கு அறத்
                         தெளிக்கும் ஓர் மன்றம்.
100
   
247.
நாகர் உய்க்கும் பிலத்தது ஓர் மன்றம் நவமணி உதவும்
                                    ஓர் மன்றம்
மாகர் பேர் அமிர்தம் இருக்கும் ஓர் மன்றம் வடிவினை
                           மறைப்பது ஓர் மன்றம்
மேகம் நின்று அறாது பொழியும் ஓர் மன்றம் வியன் பகல்
                               கங்குலாக் கங்குல்
ஆகிய பகலா இருப்பது ஓர் மன்றம் ஐ இரண்டு ஒன்று
                                மன்று அவையே.
101
   
248.
ஈங்கு இவை அன்றிச் சிலைகளும் தருவும் இடங்களும்                                 கூவலும் நதியும்
பாங்கு உறு குளனும் தீர்த்தமும் பிலமும் பழனமும்
                             சோலையும் பிறவும்
ஆங்கு அவை அனந்த கோடி உண்டோர் ஒன்று
                 அளவில் அற்புதத்தன அவற்றைப்
பூம் கமலத்தோன் சுருக்கு அற விரித்துப் புகலினும்
                            உலப்பு உற அற்றோ.
102
   
249.
தோட்டலர் வனசத் திசைமுகன் முன்னம் சொற்றன
                          அவன் அடி வணங்கிக்
கேட்டு அருள் சனசன் வியாதனுக்கு உரைப்ப கேடு இல்
                    சீர் வியாதன் அங்கு உணர்ந்து
மாட்டு உறு சூதன் தனக்கு இயம்புதலும் மற்று அவன்
                           முனிவரர்க்கு இசைத்த
பாட்டினில் அடங்காக் காஞ்சியின் பெருமை பகர்ந்திடத்
                            தமியனுக்கு எளிதோ.
103
   
250.
சொல் படும் இனைய காஞ்சித் தொன் நகர் அதற்கு                                      நாப்பண்
கற்புறும் இமைய வல்லி கருணையால் வைகி நோற்கும்
பொற்பு உறு காமக் கோட்டம் போலவே அதற்கு ஓர்
                                    சாரில்
எற்படு குமர கோட்டம் என்று ஒர் ஆலயம் உண்டு
                                    அன்றே.
104
   
251.
ஆவது ஓர் குமரக் கோட்டம் அதனிடை அரன் கண்
                                     வந்து
தூ உடை எஃகம் ஒன்றால் சூர் முதல் தொலையச்
                                     செற்றுத்
தேவர் வெம் சிறையை மாற்றிச் சேண் மகபதிக்கு நல்கி
மேவிய குமர மூர்த்தி வியத்தக உறையும் மாதோ.
105
   
252.
மேவரும் கூடல் மேலை வெற்பினில் அலைவாய்
                                     தன்னில்
ஆவின் நன் குடியின் அல்லே ரகம் தனில் தணிகை
                                    ஆதிப்
பூ உலகு உள்ள வெற்பில் பொற்பு உறும் ஏனை
                                    வைப்பில்
கோவில் கொண்டு அருளி வைகும் குமர கோட்டத்து
                                    மேயோன்.
106
   
253.
வச்சிரம் எடுத்த செம்மல் வைகிய துறக்கம் தன்னில்
அச்சுதன் பதத்துக் கப்பால் ஆன தன் பதத்தில்
                                விண்ணோர்
மெச்சுறு கந்த வெற்பில் வீற்று இருந்து அருளும் மா
                                 போல்
கச்சியில் குமர கோட்டம் காதலித்து அமரும்கந்தன்.
107
   
254.
ஈண்டு உள தரணி முற்றும் எல்லை தீர் வான வைப்பும்
ஆண்டகை மகவான் சீரும் அம்புயன் முதலோர் வாழ்வும்
மாண்டிடல் பிறத்தல் இன்றி மன்னிய வீடும் போற்றி
வேண்டினர் வேண்டி யாங்கு வேலவன் புரிந்து மேவும்.
108
   
255.
கொண்டலை அளக்கும் நொச்சிக் குமரக் கோட்டத்துச்                                     செவ்வேள்
கண்டிகை வடமும் தூ நீர்க் கரகமும் கரத்தில் ஏந்திப்
பண்டையில் அயனை மாற்றிப் படைத்து அருள் வேடம்
                                    தாங்கி
அண்டர்கள் எவரும் போற்ற அருள் புரிந்து அமர்ந்தான்
                                    அன்றே.
109
   
256.
ஆயது ஓர் காஞ்சி மூதூர் அதன் இடை அம்புயத்தின்
மேயவன் தனது புந்தி விமலம் ஆம் பொருட்டான் மேல்
                                          நாள்
மாயவன் கமடம் ஆகி வழிபடு தலத்தின் முக்கண்
நாயகன் தனையர்ச் சித்து நாமகளுடன் ஆங்கு உற்றான்.
110
   
257.
உற்றிடுகின்ற நாளில் உலகினில் அறத்தை ஆற்றி
நல் தவம் பலவும் போற்றி நண்ணிய முனிவர் எல்லாம்
மற்று அவன் ஏகிக் கஞ்ச மலர் மிசை இருந்த ஐயன்
பொன் திருவடியைத் தாழ்ந்து போற்றினர் புகலல் உற்றார்.
111
   
258.
அத்தகேள் இந்நாள் காறும் அடியம் இல் அறத்தை
                                        ஆற்றி
இத்தல நகரம் எங்கும் இருந்தனம் இனிமேல் நாங்கள்
சித்தம் அது ஒருங்க நோற்று செய்கடன் இயற்றி வைக
மெய்த்தவ வனமது ஒன்றை விளம்பியே விடுத்தி என்றார்.
112
   
259.
என்றலும் தருப்பை ஒன்றை ஏழ் உலகு அளித்தோன்                                       வாங்கி
ஒன்று ஒருதிகிரி ஆக்கி ஒய்யென உருட்டிப் பாரில்
இன்று இதன் பின்னர் ஆகி எல்லீரும் ஏகியீது
நின்றிடும் வனத்தின் ஊடே நிலைப் பட இருத்திர்
                                      என்றான்.
113
   
260.
திருப் பதுமத்து வள்ளல் சேவடிக் கமலம் தாழா
விருப் பொடு விடை கொண்டு ஏக விரைவினில்
                             அன்னான் விட்ட
தருப்பையின் நேமி சென்று ஓர் தனி வனத்தில்
                             இறுத்தலோடும்
இருப்பிடம் எமக்குஈது என்னா இருந்தவர் இருந்தார்
                            அங்ஙன்.
114
   
261.
தாமரை அண்ணல் உய்த்த தருப்பையின் நேமி தன்னால்
நாமம் அது ஒன்று பெற்ற நைமி சாரணியம் வைகும்
தூ முனிவரர்கள் எல்லாம் சொல்லரும் தவத்தை ஆற்றி
மா மறை நெறியின் நின்று மகம் ஒன்று புரிதல் உற்றார்.
115
   
262.
அகன் அமர் புலன் ஓர் நான்கும் ஆன்று அமை                         பொருட்டால் ஆங்கு ஓர்
மகவினை செய்து முற்றி வாலிதாம் உணர்ச்சி எய்தி
இகல் அறும் உளத்தர் ஆகி இருந்தனர் இதனை நாடிச்
சுகன் என உணர்வு சான்ற சூதமா முனிவன் போந்தான்.
116
   
263.
முழுது உணர் சூதன் தன்னை முனிவரர் கண்டு நேர்                                  போய்த்
தொழுதனர் பெரியோய் எம்பால் உன்னலால் இன்ன
                                 வைகல்
விழுமிது சிறந்தது என்னா வியத்தகு முகமன் கூறித்
தழையொடு தருப்பை வேய்ந்த தம்பெரும் சாலை
                                 உய்த்தார்.
117
   
264.
திருக்கிளர் பீடம் ஒன்று திகழ்தர நடுவண் இட்டுச்
சுருக்கம் இல் கேள்வி சான்ற சூதனை இருத்தி ஆங்கே
அருக்கிய முதல நல்கி அவனது பாங்கராகப்
பொருக்கு என யாரும் வைகி இஃது ஒன்று புகலல்
                                        உற்றார்.
118
   
265.
முந்து ஒரு ஞான்று தன்னில் முளரி அம்தேவன்
                                     சொல்லால்
வந்து இவண் இருந்தேம் ஆக மற்றியாம் புரிந்த நோன்பு
தந்தது நின்னை அற்றால் தவப் பயன் யாங்கள் பெற்றேம்
சிந்தையின் உவகை பூத்தேம் சிறந்தது இப்பிறவி என்றார்.
119
   
266.
அன்னது சூதன் கேளா ஆதிஅம் பரனை ஏத்தி
மன்னிய வேள்வி ஆற்றி வால் அறிவு அதனை எய்தித்
துன்னிய முனிவிர் காணும் தொல் குழு அடைதல்
                                     அன்றோ
என் நிகர் ஆயினோருக்கு இம்மையில் பெறும் பேறு
                                     என்றான்.
120
   
267.
அவ்வழி முனிவர் சொல்வார் அருமறை கண்ட அண்ணல்
செவ்விய மாணாக்கர்க்குள் சிறந்து உளோய்திறல் சூர்
                                        ஆவி
வவ்விய நெடு வேல் அண்ணல் மாண் கதை தேர்வான்
                                     பன்னாள்
இவ்வொரு நசை கொண்டு உள்ளே இயம்புதி எமக்கு
                                 அது என்றார்.
121
   
268.
அம் மொழி சூதன் கேளா அழல் படு மெழுகே என்னக்
கொம் என உருக உள்ளம் குதூகலித்து வசம் ஆகி
மெய்ம் மயிர் பொடிப்பத் தூநீர் விழித்துணை அரும்ப
                                       ஆசான்
பொய்ம்மையில் படிவம் உன்னித் தொழுது இவை புகலல்
                                       உற்றான்.
122
   
269.
மன்னவன் மதலை ஆசான் மா மகன் தனது மைந்தன்
பன்னு சொல் கொள்வோன் ஈவோன் வழிபடுபண்பின்
                                    மிக்கோன்
என்னும் இங்கு இவர்க்கு ஈவது ஏனைநூல் உங்கள்
                                    போலச்
செந்நெறி ஒழுகுவார்க்கே செப்புவன் புராணம் முற்றும்.
123
   
270.
தனை நிகர் பிறர் இன்று ஆய சண்முகற்கு அன்பு சான்ற
முனிவிர் காள் உரைப்போர் கேட்போர் முத்திசேர்
                               காந்தத்து உண்மை
வினவினீர் அதனை இன்னே விளம்புவன் புலன் வேறு
                                         இன்றி
இனிது கேண் மின்கள் என்னா எடுத்து இவை இயம்பல்
                                       உற்றான்.
124