முகப்பு |
திரு கைலாசப் படலம்
|
|
|
353.
|
பாசம்
நீக்கித் தன் பாற் படு நல்லருள்
ஈசன் நல்கும் இயல்பு என எய்தினோர்
தேசு மாற்றிச் சிறந்த தன் மெய் ஒளி
வீசு கின்றது வெள்ளி அம் குன்றமே. |
1
|
|
|
|
|
|
|
|
354.
| ஆறு சூடிய வாதி அம் பண்ணவன் ஏறு மூரி வெள் ஏறும் அக் கண் நுதல் நீறு சேர் தரு கோலமும் நித்தனைத்து ஏறும் அன்பர் தம் சிந்தையும் போன்றதே. |
2 |
|
|
|
|
|
|
|
355.
| மோன நல் நிலை முற்றிய பெற்றியர் ஞானம் ஆர் பிழம்பு அன்ன நலத்தது ஆய் ஊன் உலாய உயிர்த் தொகை மாசு ஒரீஇத் தான் எலாம் செறிந்து என்னவும் சான்றதே. |
3 |
|
|
|
|
|
|
|
356.
| கானம் ஆர்ந்த கடுக்கை நல் கூவிளைத் தேனவாம் பொழில் திண் சிகரத்து இடை வான ஆறு வருதலின் மாசு இலா ஞான நாயகன் போல நணியதே. |
4 |
|
|
|
|
|
|
|
357.
| தண் நறும் துள வாற்புனை தார் முடிப் பண்ணவன் கண் படுத்திடும் பால் கடல் கண்நுதற்கும் ஒர் காமரு பீடமாய் நண்ணுகின்றது போலும் நலத்ததே. |
5 |
|
|
|
|
|
|
|
358.
| பொதியும் இன் அமுதோடு பொருந்துவ கதிரின் மிக்க கறை அறு காட்சிய மதியம் ஆயிரம் கோடி மணந்து தாம் உதய மானது போன்றது அவ் ஒண்கிரி. |
6 |
|
|
|
|
|
|
|
359.
| நெற்றி மேல் நிமிர் கண்ணும் நிலா ஒளிர் பொன் தடம் புயம் நான்கும் பொருந்துறப் பெற்ற எம்மான் அருளால் பிரம்பு ஒன்று கைப் பற்று நந்தி பரிவொடு காப்பது. |
7 |
|
|
|
|
|
|
|
360.
| புரந்தரன் முதல் ஆகிய புங்கவர் வரம்பின் மாதவர் மாசு அறு காட்சியர் நிரந்த பூத கணவர் நிரந்தரம் பரிந்து போற்றிப் பயில்வதம் மால் வரை. |
8 |
|
|
|
|
|
|
|
361.
| மின் அரம்பையர் ஆடலும் விஞ்சையர் கின்னரம் பயில் பாடலும் கீழ்த்திசை மன்னன் ஆதியர் வாழ்த்தும் அவ் வானவர் இன்னியங்களும் எங்கணும் ஆர்ப்பது. |
9 |
|
|
|
|
|
|
|
362.
| கீண் நிலா உறும் உலகெலாம் நீங்கியே கீழ் போய்ச் சேண் நிலா உறுபதம் எலாம் உருவி மீச் சென்று மாண் நிலா உறும் அண்டத்தின் அடி முடி மருவத் தாண்உவாய் உலகு இறுதியின் நிற்பதச் சயிலம். |
10 |
|
|
|
|
|
|
|
363.
|
மாடு சூழ் தரு மேருவே ஆதி ஆம் வரைகள்
பாடு சேரினும் உலகு எலாம் அழியினும் பரந்து
கூடும் அண்டங்கள் குலையினும் கொன்றை வேணியன் போல்
கேடு இலாமலே அமர்வது கயிலை அம் கிரியே. |
11 |
|
|
|
|
|
|
|
364.
| நலம் வரும் கலை மதியமும் இரவியும் நாகர் குலம் வரும் தனுக் குறையலா மற்றைய கோளும் அலமரும் சுடர் உடுக்களும் அமரரும் பிறரும் வலம் வரும் படி இருப்பது கயிலைமால் வரையே. |
12 |
|
|
|
|
|
|
|
365.
|
ஏற்றம்
மேருவே ஆதியாம் வரைகள் ஏழ் வகையால்
சாற்றும் நேமிகள் ஆழிஅம் கிரி பெரும் சலதி நால் திசைக் கணும் நொச்சி போல் சூழ்தர நடுவண் வீற்று இருப்பது கயிலை ஆகிய தனி வெற்பு. |
13 |
|
|
|
|
|
|
|
366.
| படி எலாம் உண்டும் ஏனமாய்த் தாங்கியும் பண்டு ஓர் அடியினால் அகப்படுத்தியும் இடந்து முற்று அருளும் நெடிய மாயனும் உலகிறும் எல்லையில் நிமலன் வடிவமே எனக் காணுதற்கு அரிய தவ் வரையே. |
14 |
|
|
|
|
|
|
|
367.
|
அன்னது ஓர் கயிலை நாப்பண் அம்பொனின் சுடர்மேல் கொண்ட
நன் நெடும் சிமயத்து ஓங்கல் நவை ஒரீஇ நண்ணிற்று என்னக்
கன்னியும் காப்பு மேவிக் கதிர் மணிக் கற்றை சுற்றப்
பொன் நெடும் கோயில் ஒன்று பொலிவொடும்
பொருந்திற்று அன்றே. |
15 |
|
|
|
|
|
|
|
368.
| திணி கதிர் ஆரம் தன்னில் சிறந்த அச் சிரத்தில் செக்கர் மணி தனில் முழு நீலத்தின் மற்றைய வெறுக்கை தன்னில் பணிபட அருளால் தானே பலித்திடு சிகரம் ஆதி அணியினுக்கு அணியாய் மல்கும் ஆலயச் சூழல் எங்கும். |
16 |
|
|
|
|
|
|
|
369.
|
என்றும் ஈறு என்பது இன்றி இருந்திடும் கயிலை
வெற்பில்
பொன் திகழ் நகரம் தன் உள் பொருவிலாக் கோளும் நாளும்
துன்றிய தன்மைத்து என்னத் தூர்மணிக் கதிர்கள் சூழ
மன்று அமர் உறையுள் ஒன்று வனப்பொடு வைகிற்று அன்றே.
|
17 |
|
|
|
|
|
|
|
370.
| சோதி சேரும் அத் தூ மணி மண்டபத்து ஆதி ஆன அரி அணை உம்பரில் காதல் ஆகும் கவுரி ஒர் பாங்கு உற வேத நாயகன் வீற்று இருந்தனர் அரோ. |
18 |
|
|
|
|
|
|
|
371.
| படு கொண்ட பெருந்தவப் பெற்றியோர் தேடுகின்ற சிறப்பு உடைத் தாம் புகழ் நாடு தும்புரு நாரதர் விஞ்சையர் பாடுகின்றனர் பாணியின் பால் பட. |
19 |
|
|
|
|
|
|
|
372.
| அதிகன் வேணியிலார் தரு கங்கையை விதிபுரந்தரன் விண்டு உலகத்து உள நதிகள் ஆழ்ந்தென நன்னயத்து ஏவல் செய் கதியினோர்கள் கவரிகள் வீசினார். |
20 |
|
|
|
|
|
|
|
373.
| சீல வட்ட முடிப் பிறை தேடுவான் ஞால வட்டத்து எழு தரு நாகர் போல் ஏல வட்ட முகத்தருக எங்கணும் ஆல வட்டம் அசைத்தனர் அன்பினோர். |
21 |
|
|
|
|
|
|
|
374.
| ஆதி தன் அருள் எய்தி அவன் திருப் பாத தாமரை சூடியப் பண்ணவன் கோது இலாத திரு உருக் கொண்டு உளோர் பூதர் ஆதியர் போற்றி முன் ஈண்டினார். |
22 |
|
|
|
|
|
|