மேருப் படலம்
 
411.
பன்னரும் சிறப்பின் மிக்க பனிவரை அரசன் தன் பால்
கன்னி அம் புதல்வி ஆகிக் கௌரி நோற்று இருந்த
                                      காலைத்
துன்னிய அவுணர் சூழச் சூரபன்மா வாம் வெய்யோன்
இந் நில வரைப்பின் அண்டத்து இறைவனே ஆகி
 
                                     உற்றான்.
1
   
412.
மற்று அது போழ்தில் தொல்லை மறைப் பொருள்
                             வடத்தின் பாங்கர்ப்
பெற்றிடும் சனகனாதி முனிவரர் பின்னும் பன்னாள்
அற்றம் இல் தவம் செய்து எந்தை அருளினால் கயிலை
                                       நண்ணி
முற்று உணர் நந்தி போற்றும் முதல்நிலை வாயில் புக்கார்.
2
   
413.
நோன்மையின் முனிவர் ஆனோர் நுவல் அரும் காட்சி                                         நந்தி
கான் முறை வணங்கி நிற்ப அனையவன் கருணை
                                    தன்னால்
வான்மலி கடவுள் கோயில் மந்திரம் கொண்டு செல்ல
நான்முகன் முதலோர்க்கு எய்தா ஞான நாயகனைக்
                                    கண்டார்.
3
   
414.
மொழியது தவறல் செல்ல முற்று உடல் பொடிப்புக்                                     கொள்ள
விழி புனல் பெருகத் தீ சேர் மெழுகு என உள்ளம்
                                    விள்ள
அழகிய மறைக்கும் எட்டா ஆதிநாயகனை நோக்கித்
தொழுதனர் உவகைப் பூத்து துள்ளினர் துளக்கம்
                                     உற்றார்.
4
   
415.
மண்ணவர் அமரர் யாரை வணங்கினும் அவைகள்
                                     எல்லாம்
நண்ணிய பரமன் தாளினால் பெரும் தவத்தினோரும்
தண்ணளி நெறியில் பல்கால் தாழ்ந்தனர் எழுந்து நின்று
பண் இசைமறைகள் தம்மால் துதித்து இவை பகர்தல்
                                      உற்றார்.
5
   
416.
இருள் பெரும் கடலுள் யாமத்து எறி மருத்திடைப்                                     பட்டாங்குப்
பொருள் பெரும் கடலாம் வேதம் புடைதொறும்
                              அலைப்ப இந் நாள்
அருள் பெரும் கடலே எய்த்தேம் அமைந்திலது
                               உணர்வி யாங்கண்
மருள் பெரும் கடலின் நீங்கும் வண்ணம் ஒன்று
                                 அருடி என்றார்.
6
   
417.
நவை அறு தவங்கள் ஆற்றி நல் அருள் படைத்த                                 தொல்லோர்
இவை புகன்றிடலும் அன்பர்க்கு எளிவரும் கருணை
                                   வள்ளல்
அவர் முகம் தெரிந்து நுங்கள் அறிவு அமைந்து
                              அடங்கு மாறு
தவல் அரும் சிறப்பின் நன்னூல் சாற்றுதும் இருத்திர்
                                   என்றான்.
7
   
418.
என்று இவை அருள எந்தை இணை அடி தனாது
                                     முன்னர்
நன்று உணர் காட்சி கொள்ளும் நால்வரும் இருந்தார்
                                    அங்கண்
சென்றிடும் நந்திப் புத்தேள் சிறப்பு உடை வதனம்
                                    நோக்கிக்
கொன்றை அம் தொடையல் வேய்ந்த குழகன் ஒன்று
                              இயம்பு கின்றான்.
8
   
419.
பூம் கணைக் கிழவன் அன்றிப் புங்கவர் யார்
                                போந்தாலும்
ஈங்கு உறத் தகுதி யல்லை ஈது உனக்கு அடைத்தது
                                     என்ன
ஆங்கது புரிவன் என்னா அமலனை இறைஞ்சி அம்கண்
நீங்கி அக் கணத்தின் நந்தி நெறி முதல் போற்றல்
                                   செய்தான்.
9
   
420.
நந்தி முன் கடையைப் போற்ற ஞான நாயகன் ஆம்                                     அண்ணல்
முந்து உறை சனகன் ஆதி முனிவரர் தொழுது கேட்ப
அந்தம் இல் ஆகமத்தின் அரும்பதம் மூன்றும் கூறப்
புந்தி அது ஒடுங்கும் ஞான போதகம் போதி என்றார்.
10
   
421.
என்னலும் நகைத்து யாது எதிர் மொழி புரிந்தான்
                                     அல்லன்
பன்னுவது அன்றால் மற்று இப் பரிசினால் இருத்தல்
                                    கண்டீர்
அந்நெறி ஆகும் என்றே அனையவர்க்கு உணர்த்தும்
                                    ஆற்றால்
உன்னரும் பரத்தின் மேலோன் ஒரு செயல் புரிதல்
                                    உற்றான்.
11
   
422.
இருவரும் உணரா அண்ணல் ஏன வெள் எயிறி யாமை
சிர நிரை அநந்தகோடி திளைத்திடும் உரத்தில் சீர்
                                     கொள்
கரதலம் ஒன்று சேர்த்தி மோன முத்திரையைக் காட்டி
ஒரு கணம் செயல் ஒன்று இன்றி யோகு செய்வாரில்
                                     உற்றான்.
12
   
423.
இனையது ஓர் தன்மை காட்டி எம்பிரான் உணர்த்தக்
                                        கண்டு
சனகனே முதலா உள்ளோர் தவலரும் ஞான போதம்
பனுவலின் அளவு அன்று என்னும் பான்மையைத்
                                தெரிந்து முக்கண்
புனிதனது அருளால் தத்தம் புந்தியின் ஒடுக்கம் பெற்றார்.
13
   
424.
தத்தம் உள் ஒடுங்கல் பெற்ற தாபத கணத்தர் யாரும்
முத்தொழில் புரியும் மூவா முதல்வனாம் முக்கண் மூர்த்தி
மெய்த்தவ வடிவம் உன்னி மேவினர் சூழ்ச்சி மேலோன்
சித்திரம் புணர்த்த பாவை செயல் அற இருக்கு மாபோல்.
14
   
425.
தற்பரன் இனைய வாற்றால் தாபதர் உணரும் தன்மை
அற்புத ஞான போதம் அளித்திடும் கணமது ஒன்றின்
முற்படு கமலப் புத்தேள் முதலிய அமரர்க்கு எல்லாம்
பற்பல உகங்கள் சென்ற பிறர்க்கு இனிப் பகர்வது
                                    என்னோ.
15
   
426.
இத்திறஞான போதம் என்று தொல் முனிவர்க்கு எந்தை
கைத்தலம் கொண்டு காட்டும் கணத்தினில் அமரர்க்
                                     கெல்லாம்
மெத்து பல் லுகங்கள் சென்ற விழுமிய காஞ்சி தன்னில்
அத்தன் மெய் குழைத்த நங்கை அவன் விழி புதைத்த
                                    நாள் போல்.
16
   
427.
காரண முதல்வன் மோனக் காட்சியால் அமரர் எல்லாம்
சுர் அர மகளிர் தங்கள் துணை முலைப் போகம் இன்றி
ஆரிடர் நிலைமை தன்னை அடைந்தனர் அளக்கர்
                                        சூழ்ந்த
பார் இடை உயிரும் காமப் பற்று விட்டு இருந்த வன்றே.
17
   
428.
ஆரணன் தனது மைந்தர்க்கு அரும் பெறல் ஞான
                                    போதம்
ஓர் இறை காட்டும் முன்னர் உலகு எலாம் ஒரு பாடு
                                    ஒன்றி
ஈர் உடல் முயங்கும் ஆர்வம் இன்றியே இருந்த
                                     யார்க்கும்
காரணன் சிவனே என்கை கழறவும் வேண்டற் பாற்றோ.
18
   
429.
பிணை விழைச் சூழ்தம் துய்ப்பப் பெருமறை விதிவழாமல்
அணைவிழச் சடங்கில் கொண்ட அரிவையர் ஓடு தேவர்
இணை விழைச் சியற்கை கூடாது இரங்கினர் கவர்ச்சி
                                        எய்திப்
புணை விழச் சலதி ஆழ்ந்து புலம்பு கொள் மாக்களே
                                        போல்.
19
   
430.
வன் முலை அணங்கின் ஓரும் வானவர் யாரும் காமத்
தன்மையும் புணர்ப்பும் இன்றித் தளர்ந்தனர் வறிஞர்
                                       தம்பால்
இன்மை கொண்டோர்கள் செல்ல ஈவது கூடா எல்லைப்
புன்மையொடு இருவர் தாமும் புலம்பு உறு தன்மையே
                                       போல்.
20
   
431.
பொற்புருக் குறை இன்று உற்றும் புவன மேல் மகளிர்                                         மைந்தர்
அற்பொடு கலந்து காமத்து அரும் பயன் கோடல் ஏற்றார்
தற்பர வடுகன் ஆணைத் தன்மை யால் அலகை ஈட்டம்
நல் புனல் நீழல் பெற்று நணுக அரும் தன்மையே போல்.
21
   
432.
மாடக வெழாலை அன்ன பணிமொழி மகளிர் மைந்தர்
கூடினர் இருந்து இன்பம் கொண்டிலர் சிறார் குழாமும்
ஆடவர் குழாமும் வாள் கண் அரிவையர் குழாமும்
                                        ஏனைத்
பேடியர் குழாமும் வெவ்வேறு உற்றிடும் பெற்றியே போல்.
22
   
433.
இருந்திட விரிஞ்சன் மாயோன் இருவரும் ஈசன் தன் பால்
பொருந்திடும் உணர்ச்சி கொண்டு முத்தியில் புக்க சேயும்
திருந்து சீர் வசிட்டன் சொல்லால் சிலை எனப் பன்னாள்
                                          நின்ற
அருந்ததி மாதும் போன்றார் ஆடவர் மகளிர் எல்லாம்.
23
   
434.
ஏமரு புவனம் மூன்றும் இனிது அருள் கமலக் கண்ணர்
பூ மட மாதர் தம்பால் புணர்கிலர் பொருவில் வேளும்
காமரு மகளிர் கூட்டம் கருதலன் இவர் போல் சிந்தை
ஆமையின் ஒடுங்கல் பெற்றார் ஆசை உள்ளோர்கள்
                                      எல்லாம்.
24
   
435.
மண்ணகத்து உயிர்கள் முற்றும் மாதிரத்து உயிர்கள்
                                     முற்றும்
விண் அகத்து உயிர்கள் முற்றும் வேற்றகத்து உயிர்கள்
                                     முற்றும்
பெண் அகத்து ஆண்மை கூடும் சிறு நலம் பிழைத்த
                                     ஞானக்
கண்ணகத்து இறைவர்கண்டு கடை நின்ற காட்சியார்
                                     போல்.
25
   
436.
நாகமார் சடிலத்து அண்ணல் நால் பெரும் தவரும் உய்ய
யோகு சேர் நிலைமை காட்டும் ஒரு கணத்து உயிரின்
                                      பொம்மல்
வாகை வேடானும் நிற்க மையலும் புணர்ப்பும் அற்ற
ஆகையால் அகிலம் எல்லாம் அவன் என்கை தெரிந்தது
                                     அன்றே.
26
   
437.
சிலையொடு பகழி வாடத் திருமதிக் குடைச்சீர் குன்ற
வலி தளர்வு எய்தத் தென்றல் மறி கடல் சுறவு தூங்க
அலை புரி ஆணை நீங்கி ஆடல் மா மதனும் மாதின்
கலவியது ஒழிந்தான் என்னில் பிறர் செயல் கழறல்
                                     பாற்றோ.
27
   
438.
சாலிகள் வளரும் எல்லை தடம் புனல் வறுமைத்து ஆக
வால் இது குரல் வாங்காது வருத்தொடு மாய்வதே போல்
மேலவன் அருளால் போகம் வெறுத்தலில் கருமல் குன்றி
ஞாலம் மன் உயிர்கள் முற்றும் நாள் தொறும் குறைந்த
                                        அன்றே.
28
   
439.
முள்ளரை முளரிப் புத்தேள் முதல் புரிதுணையே அன்றித்
தள்ளுரும் உயிர்கள் பின்னும் தலைத்தலை அல்காது
                                         உற்ற
தெள்ளிதின் உலகம் ஈன்ற தேவி இன்றாகி ஈசன்
வெள்ளி அம் கயிலை தன்னில் மேவிய மேலை நாள்
                                        போல்.
29
   
440.
இம் முறை நிகழ நாதன் ஈர் இரு தவத்தினோர்க்கும்
மெய்ம்மை கொள் உணர்ச்சி காட்டி வீற்று இருந்து
                                அருளும் எல்லை
தெம் முயல் சூரன் தீங்கு செய்தலால் மகவான் வானோர்
தம்மொடும் துறக்கம் விட்டுச் சசியொடும் தரணி புக்கான்.
30
   
441.
மேகம் ஊர் கடவுள் வெள்ளி வெற்பினில் ஏகி முக்கண்
ஏக நாயகனைக் காணும் எல்லை இன்றாக மீண்டு
சோகமோடு அம்பொன் மேருத் துன்னியே சூரன்
                                     மைந்தன்
மாக நாடு அழித்துச் சேயைச் சிறை செய்த வண்ணம்
                                    சேர்ந்தான்.
31
   
442.
தமனிய மேரு வெற்பில் தன் உளம் ஒருப்பாடு எய்த
நிமலனை உன்னிப் பல்நாள் நெடும் தவம் உழத்தல் ஓடும்
இமில் விடை மிசைக் கொண்டு அம்கண் எம்பிரான் ஏகக்
                                        காணூஉ
அமரர் கோன் வணங்கிப் போற்ற அனையவன் அருளிச்
                                      செய்வான்.
32
   
443.
நொந்தனை அளப்பு இல் கால நோற்றனை ஆற்றல்                                     தீர்ந்தாய்
இந்திர நினக்கு வேண்டிற்று என்னை அது இயம்புக
                                    என்னா
அந்தம் இல் அறிவின் மேலோன் அறிகிலன் போலக்
                                    கேட்ப
வந்தனை புரிந்து போற்றி மகபதி புகலல் உற்றான்.
33
   
444.
பன்னரும் பழிசேர் சூரன் பருவரல் படுத்திப் பின்னர்
என் ஒரு புதல்வன் தன்னை இமையவர் பலரை வாட்டித்
தன் நகர்ச் சிறை இட்டு எம் ஊர் தழல் கொளீஇத் தவறு
                                    செய்தான்
அன்னவன் தன்னை அட்டே அளித்தி ஆல் எம்மை
                                    என்ன.
34
   
445.
மெய்ம்மை அது அகன்ற தக்கன் வேள்வியின் இருந்த                                        பாவம்
நும் இடை இருந்தது அற்றால் நோதகவு உழந்தீர் மேல்
                                        நாள்
நம் இ டை ஒரு சேய் வந்து நணுகி வெம் சூரைக் காதி
இம் என உம்மைக் காப்பன் எனப் புகன்று இறைவன்
                                    போனான்.
35
   
446.
மறைந்தனன் இறைவன் ஏக மகபதி இரக்கம் எய்திக்
குறைந்தனன் உணர்வு துன்பம் கூர்ந்தனன் குமரன்
                                     அம்கண்
பிறந்து உமைக் காப்பன் என்றே பிரான் அருள் புரிந்த
                                     பெற்றி
சிறந்த தன் மனத்தில் உன்னித் தேறினன் உவகை
                                     செய்தான்.
36
   
447.
மாசு அறு காட்சி கொண்ட மாதவர்க்கு அருளி
                                 எம்கோன்
தேசு உறு கயிலை உற்றான் உமையவள் இமயம்
                                 சேர்ந்தாள்
ஆசு அறு குமரன் அன்னார்க்கு அடைவது எத்தன்மை
                                 என்னா
வாசவன் இருந்து நாடி மனம் மிசைக் கவலை கூர்ந்தான்.
37
   
448.
மயர் வொடு துறக்க மன்னன் மனோவதி என்னும்                                      ஆண்டை
வியன் நகர் எய்தி ஆம் கண் வீற்று இருந்து அருளும்
                                    பொன்னின்
இயன் முறை மனைவி தன்பால் இல்லினை இருத்தல்
                                 செய்து ஆங்கு
அயன் உறு கடி மாண் கோயில் அடைந்தனன்
                                  அமரரோடும்.
38
   
449.
இனையது ஓர் காலை முக்கண் எம்பிரான் ஞானபோதம்
முனவரர்க்கு உணர்த்தி வைகும் முறையினால் படைப்பு
                                    இன்றாகித்
துனியொடு வேதா வைகும் தொன் முறை அவையை
                                    நண்ணி
அனையவன் கழல் முன் றாழூஉ அளப்பு இல வழுத்தி
                                    நின்றான்.
39
   
450.
நிற்றலும் மகவான் தன்னை நீடு அருள் புரிந்து நோக்கிப்
பொன் தனிக் கமலம் மேய புங்கவர் முதல்வன் வானோர்
கொற்றவ வந்தது என்னை கூறுதி என்ன லோடும்
சொற்றனன் சூரபன்மன் செய்திடும் துன்பம் எல்லாம்.
40
   
451.
வெய்யது ஓர் சூரன் செய்கை விளம்பியே முனிவர்க்கு
                                         ஈசன்
ஐயம் இல் உணர்வு காட்டி அமர்வதும் உரைத்துத் தான்
                                         பின்
செய் உறு தவங்கள் தன்னான் அருளிய திறனும் செப்பி
உய்வது ஓர் பரிசு என்னோ உம்பரும் யானும் என்றான்.
41
   
452.
என்றலும் மலரோன் கேளா எவர்க்கும் மேலாகும் ஈசன்
ஒன்றிய அருளினோனும் உற்றவர்க்கு உதவு வோனும்
அன்றியும் முறை செய் வோனும் ஆதலின் முனிபோல்
                                     வெள்ளிக்
குன்று இடை எம்மை ஆளும் குறிப்பின் வீற்று இருந்தான்
                                    அன்றே.
42
   
453.
செம் கண் மால் தானும் நானும் தேடுதற்கு அரிதாய்
                                     நின்ற
எங்கள் தம்பிரார்க்கு மேலா எண்ண ஓர் தேவும்
                                     உண்டோ
அங்கு அவன் ஞானபோதம் அறிவருக்கு உணர்த்தி
                                     வைகல்
நம் குறை முழுது மாற்றும் நல் அருள் ஆகும் அன்றே.
43
   
454.
படர் மதி மிலைச்சும் சென்னிப் பகவன் ஆர் உயிர்கள்                                       எல்லாம்
அடுவதும் வருத்தம் தீர்க்கும் ஆர் அருளான வா போல்
கொடிய வெம் சூரன் தன்னைக் கொண்டு எமக்கு
                              கலக்கண் செய்கை
விடல் அரும் பவப் பேறு ஆர்த்தி வீடு அருள் கருணை
                                       அன்றே.
44
   
455.
பெற்றிடும் குரவர் ஆனோர் பிள்ளைகள் தம்பால் நோய்                                         ஒன்று
உற்றிடில் பிறரைக் கொண்டும் உறுதுயர் செய்து தீர்ப்பார்
மற்று அவர் தம்பால் அன்போ வன்கணோ அது போல்
                                        நம்பால்
பற்றிய பவங்கள் தீர்ப்பான் பரமனும் இவைகள் செய்தான்.
45
   
456.
தெருமருகின்ற நம்பால் தீங்கு எலாம் நீங்கும் எல்லை
ஒரு சிறிது அணுகிற்று ஆகும் ஆதலால் உணர்வின்
                                    மேலோன்
பரிவொடு நின்பால் வந்து பரிசு இவை அருளிப்
                                    போனான்
இருவினைப் பௌவ வேலை ஏறு இனம் போலும்
                                    அன்றே.
46
   
457.
ஆதலின் இறைவன் ஏ மேல் அருள் செயும் அதற்கு                                         யாமும்
தீது அற முயலும் ஆறு சிறிது உள இவற்றை மாயோற்கு
ஓதினம் வேண்டும் செய்கை ஒல்லையில் செய்தும் என்னா
ஏதம் இல் கமலப் புத்தேள் இருக்கை விட்டு எழுந்தான்
                                        அன்றே.
47
   
458.
அன்ன காலை அது நன்று நன்று எனாத்
துன்னு வானவர் சூழ லொடு இந்திரன்
பின்னர் ஆகப் பெயர்ந்து உடன் வந்திடச்
சென்னி நான்கினன் செல்லுதல் மேயினான்.
48
   
459.
ஞாலம் யாவையும் நல்கிய புங்கவன்
வாலிதாம் தன் மனோவதி நீங்குறா
மேலை வைகுந்தம் என்னும் வியன் நகர்
ஆலயத்தின் அகன் கடை ஏகினான்.
49
   
460.
ஆங்கு அவ் எல்லை அது கண்டு நேமியும்
சங்கும் ஏந்திய தானை அம் காவலன்
செம் கண் மாயன் முன் சென்று விண்ணோருடன்
பங்கயத்தன் படர்ந்தது செப்பினான்.
50
   
461.
பணிலம் ஏந்திய பண்ணவன் அன்னரைக்
கொணர்தி ஆல் எனக் கூறி விடுத்து உழி
இணை இல் காவலன் உய்த்திட இந்திரன்
கணம் ஒடு ஏகினன் காசினி நல்கியோன்.
51
   
462.
பொருவில் மாமுனி புங்கவர் போற்று தன்
உருவு கொண்ட உலப்பறு கண்ணர்கள்
மரபின் ஏத்த மணிப் பணிப் பீடம் மேல்
அரி இருந்த அவைக் களம் நண்ணினான்.
52
   
463.
அன்னம் ஊர்தி அமர் உலகு ஆளுறும்
மன்னனோடும் அவ் வானவர் தம்மொடும்
பன்னக ஆசனப் பங்கயக் கண்ணவன்
பொன்னின் மாண் அடி போற்றி வணங்கினான்.
53
   
464.
தரை அளந்திடும் தாளினன் அவ்வழிக்
கருணை செய்து தன் காதலன் ஆகிய
பிரமனுக்கு ஒரு பீடிகை பெற்றி ஆல்
அருளி அம் கண் அவனை இருத்தினான்.
54
   
465.
குல்லை மா முடிக் கொண்டவன் அத்துணை
அல்லி மா மலர் அண்ணலை நோக்கு உறீஇ
ஒல்லும் நின் விதி ஊறு இலது ஆகியே
செல்லுகின்ற கொல் என்றலும் செப்புவான்.
55
   
466.
கனகன் அச் சுறக் கந்திடை வந்து எழும்
அனக இத்திறம் கேட்க அறிவுடைச்
சனகன் முற்படு தாபதர் நால்வரும்
என கருத்திடை முற்பகல் எய்தினார்.
56
   
467.
அறிவின் மிக்க அனையரை நோக்கி யான்
பெறுவதாம் இப் பெரும் தொழில் ஆற்றி ஈண்டு
உறுதிர் என்ன உளத்தது கொண்டிலர்
முறுவல் செய்து மொழிந்தனர் இவ்வுரை.
57
   
468.
பாசவன் சிறைப்பட்டுப் படைப்பு எனப்
பேசல் உற்ற பெரும் தளை பூணலம்
ஈசன் மாண் அடி எய்துதும் யாம் எனா
மாசு இல் காட்சியர் வல் விரைந்து ஏகினார்.
58
   
469.
மா தவத்தினை மைந்தர்கள் ஆற்றலும்
ஆதி நாயகன் அவ்வுழி வந்து அக்
கேது வேண்டியது என்றலும் எண் இலா
வேத உண்மை விளம்புதி ஆல் என்றார்.
59
   
470.
என்றல் ஓடும் இறையவன் வெள்ளி அம்
குன்றம் மீது தென் கோட்டு இடை நிற்புறும்
ஒன்று ஒரு ஆல் நிழல் உற்று மறை எலாம்
நன்று உணர்த்திட நால்வரும் தேர்ந்தனர்.
60
   
471.
முந்தை வேதம் முழுதும் உணர்த்தியே
எந்தை ஏக இரு நிலம் போந்து தம்
சிந்தை ஒன்றும் திறன் அரிது ஆதலின்
நொந்து பின்னரும் நோற்றலை மேயினார்.
61
   
472.
பின்னும் மைந்தர் பெரும் தவம் ஆற்றியே
தொல் நலம் பெறுதூய உள்ளத்தராய்
என்னை ஆள் உடை ஈசன் அருளினால்
மன்னும் வெள்ளி வரை இடை யேகினார்.
62
   
473.
ஏகல் பெற்றிடும் மக்கள் இனிது உளம்
பாகம் உற்ற பரிசு உணர்ந்து எம்பிரான்
ஆகமத்தின் அரும்பதம் மூன்றையும்
ஓகை பற்றி உணர் வகை கூறியே.
63
   
474.
கூனன் மா மதிக் கோடு மிலைச்சிய
வான நாயகன் மற்று அவர் காண்தக
ஞான போதம் நவில் அரும் தன்மை ஆல்
மோனம் மேய முதல் குறி காட்டினான்.
64
   
475.
அந்த எல்லை அரன் அருள் கண்டு தம்
புந்தி ஒன்றி அப் புங்கவன் தாள் மலர்
சிந்தை செய்து செயல் அற்று வைகினார்
முந்தி ஆப்பு உறு முத்தளை மூட்டு அற.
65
   
476.
வேத நாயகன் மெய்தவர்க்கு ஓர் கணம்
போத யோகின் பொருண்மையைக் காட்டு உழி
ஓதல் ஆகும் உகம் பல சென்றன
சீத வானதி சேர்ந்தது தொல் நாளினே.
66
   
477.
அன்னை தன்னை அகன்று அரன் யோகி போல்
என்னதும் செயல் இன்றி இருத்தலான்
முன்னை ஆண் பெண் முயக்கம் அது இன்மையாய்
மன் உயிர்த்தொகை மல்கல் இன்று ஆயதே.
67
   
478.
நவிறல் என் இனி ஞாலம் விசும்பு உளார்
இவறு காமப் புணர்ச்சி அது இன்றியே
கவறல் கொண்டு கலங் கஞர் எய்தினார்
தவறல் கொண்டு அது நல்கும் தனிச்செயல்.
68
   
479.
நல்கல் பெற்ற தமியனும் நா மகட்கு
புல்கல் பெற்ற புணர்ச்சி இன்று ஆகியே
அல்கல் பெற்ற அரும் தவ யோகரின்
ஒல்கல் பெற்றனன் உண்மை இது ஆகும் ஆல்.
69
   
480.
நிற்க இங்கு இது நித்தன் வரத்தினால்
ஒற்கம் இல் வளன் உண்டிடு வெய்ய சூர்
எற்கும் நித்தலும் ஏவல் ஒன்று இட்டனன்
சொற்க நாட்டில் துயரினை நாட்டினான்.
70
   
481.
தேசு நீங்குறு தேவரை ஈண்டுள
வாசவன் தனை மாதிரத் தோர்களைப்
பாசனத்தொடு பற்றினன் நித்தலும்
கூசல் இன்றிக் குற்றேவல் கொண்டான் அரோ.
71
   
482.
நிறை புரிந்த நிலவினை வாள் அரா
மறை புரிந்து என வானகத் தோர் உடன்
இறை புரிந்த இவ் இந்திரன் மைந்தனைச்
சிறை புரிந்தனன் தீத் தொழில் ஆற்றியே.
72
   
483.
நிரந்த பல் உயிர் தங்கட்கு நித்தலும்
அரந்தை மல்க அறிகிலன் போலவே
இருந்தனன் சிவன் என் இனிச் செய்வது
விரைந்து கூறுதி என்று விளம்பினான்.
73
   
484.
அரிய தத்துவம் ஐ ஐந்தின் பேதமும்
மரபின் நாடினர் வால் உணர்வு எய்திய
திருவின் நாயகன் செம் கமலம் திகழ்
பிரமன் மா முகம் நோக்கினன் பேசுவான்.
74
   
485.
ஆவிகள் அனைத்தும் ஆகி அருவமாய் உருவம் ஆகி
மூவகை இயற்கைத்து ஆன மூல காரணம் அது ஆகும்
தேவர்கள் தேவன் யோகின் செயல் முறை காட்டும்
                                       என்னில்
ஏவர்கள் காமம் கன்றித் தொன்மை போல் இருக்கும்
                                         நீரார்.
75
   
486.
ஊழ் வினை நெறியால் முன்னம் ஒரு பெரு வேள்வி                                     ஆற்றித்
தாழ்வினை அடைந்த தக்கன் தன்புடை இருந்தோர்
                                    தம்பால்
சூழ்வினை எச்சம் முற்றும் அருத்தியே தொலைத்துத்
                                    தொல்லை
வாழ்வினை அருள நாதன் மனத்து இடை நினைத்தான்
                                    அன்றே.
76
   
487.
சூர் எனும் அவுணர்க்கு ஆற்றல் புரிந்ததும் சுரர்கள்
                                      யாரும்
சார் வரும் திறத்தால் ஈசன் தவத்தவருக்கு உணர்வு
                                      காட்டி
ஆர் உயிர் எவைக்கும் இன்னல் ஆக்கியவாறும் தூக்கில்
பேர் அருள் முறையே அன்றிப் பிறிது ஒரு செயலும்
                                      அன்றால்.
77
   
488.
முனிவருக்கு உணர்வு காட்டும் மோனத்தை முதல்வன்                                 நீங்கிப்
பனிவரை அணங்கை மேவில் படைப் பயன் முற்றும்
                                அன்னார்க்கு
இனி ஒரு குமரன் தோன்றில் சூர் கிளை யெனைத்தும்
                                பொன்றும்
துனி உறும் உலகமெல்லாம் தொன்மை போல் உய்யும்
                                மாதோ.
78
   
489.
அத்திறம் உற்று மாறு ஒன்று அறைகுவன் அகிலம்
                                     தன்னில்
எத்திறத்து அருமால் கொள்ள வெய்திடும் காமன்
                                     தன்னை
உய்த்திடின் முனிவர் தங்கட்கு உணர்வுசெய் மோனம்
                                     நீங்கிச்
சத்தியை மணந்து சேயைத் தந்திடும் எந்தை என்றான்.
79
   
490.
பதும பீடிகையோன் அன்ன பரிசு தேர்ந்து உவகை எய்தி
இது செயல் முறையே எந்தாய் ஏற்றன புகன்றாய் என்ன
அதுபொழுது அவனை நோக்கி அச்சுதன் அமலன்
                                        தன்பால்
மதனனை விளித்து வேண்டி விடுத்தி நீ வல்லை என்றான்.
80
   
491.
என்னலும் மலரோன் உள்ளத்து இசைவு கொண்டு
                              எழுந்து மாயன்
பொன் அடி வணக்கம் செய்து விடை கொடு
                                புலவரோடும்
மன் ஒடும் அம்கண் நீங்கி மனோவதி அதன் பால்
                                     சென்று
தன்நகர் அடைந்து கஞ்சத் தவிசின் வீற்று இருந்தான்
                                    அன்றே.
81