முகப்பு |
மோன நீங்கு படலம்
|
|
|
602.
|
இரதி
இன்னணம் வருந்திடத் தொன்மை போல் எம்கோமான்
விரதம் மோன மோடு இருத்தலும் முன்னரே விறல்
காமன்
கருது முன் பொடி பட்டது கண்டனர் கலங்கு உற்றார்
சுருதி நன்று உணர் திசை முகன் முதலிய சுரர் எல்லாம். |
1 |
|
|
|
|
|
|
|
603.
|
சிதலை மெய்த் தொகை வன் மிகத்து எழுந்து எனச்
செலக் கண்ணீர்
பதலை ஒத்தன அல்லல் கூர்ந்து அரற்றிட பகுவாய்கள்
விதலை பெற்று மெய் வியர்ப்பு உற உள நனி விதிர்ப்பு எய்த
மதலை இற்றுழி நாய்கர் போல் துயர்க் கடல் மறிகின்றார். |
2 |
|
|
|
|
|
|
|
604.
|
மை உலா வரு கறை மிடற்று இறையவன் மருங்கு ஆக
எய்யும் மாரனை விடுத்தனம் அவனையும் இறச் செய்தான்
பொய்யில் தன் நிலை தவிர்ந்திலன் தொன்மையே போல் உற்றான்
ஐய கோ இனிச் செய்வது என்னோ வெனா அயர்கின்றார். |
3 |
|
|
|
|
|
|
|
605.
|
பூத்தரும் கணை மாரனை விழியினால் பொடி செய்த
ஆத்தன் ஆற்றலைப் புணர்ப்பினால் நீக்குவது அரிது அன்னான்
காத்து நம் துயர் அகற்றிட வேண்டும் மேல் கடிதே
ஆம்
ஏத்தல் செய்வதே கடன் என யாவரும் இசைவு உற்றார். |
4 |
|
|
|
|
|
|
|
606.
|
எகினம்
ஊர்பவன் முதலிய கடவுளர் எல்லோரும்
அகன் அமர்ந்து இவை இசைந்து தொல் கயிலையின்
அக நாப்பட்
புகலது ஆய பொன் நகர் இடைக் கோபுரப் புறன் ஏகித்
தொகுதி யோடு எமது இறைவனை ஒல் எனத் துதிக்கின்றார்.
|
5 |
|
|
|
|
|
|
|
607.
|
நஞ்சு அருந்தியும் நதியினைச் சூடியும் நடு நெற்றித்
துஞ்சும் வெம் கனல் பரித்தும் வெவ் வலியரைத் தொலைத்திட்டும்
அஞ்சல் என்று முன் காத்தனை இன்று எமக்கு அருளாயேல்
தஞ்சம் ஆர் உளர் தாதையே அல்லது தனயர்க்கே. |
6 |
|
|
|
|
|
|
|
608.
|
கோள் இல் அன்பர்கள் இழுக்கிய புரியினும் குணன்
ஆக்
கொண்டு
ஆளும் எம்பிரான் நின் அடி அரணம் என்று
அடைந்தேம்
கண்
நாளும் வெம்திறல் சூரபன் மாவினால் நலிவு எய்தி
மாளுகின்றதோ சிறிதும் எம் உறு துயர் மதியாயோ. |
7 |
|
|
|
|
|
|
|
609.
| தையலைப் பிரீஇ யோகியல் காட்டிடு தனிச்செய்கை ஐய நிற்கி தோர் இறைவரை ஆகுமால் அது காலை நையும் எங்களுக்கு உகம் பல சென்றன நாம் எல்லாம் உய்வது எப்படி இன்னும் நீ புறக்கணித்து உறுவாயேல். |
8 |
|
|
|
|
|
|
|
610.
|
நோற்று மாயவன் முதலினோர் யாவரும் நுனதாளைப்
போற்றி அர்ச்சனை புரிய இத்திரு எலாம் புரிந்து
உற்றாய்
தோற்றம் இன்றியே ஐம் தொழில் இயற்றிய தொல்லோய்
நீ
ஆற்றுகின்றது ஓர் தவ நிலை எம் பொருட்டு
அளவன்றோ.
|
9 |
|
|
|
|
|
|
|
611.
| எய்த்திடும் சிறியேங்களைத் தவறு கூர் இடர் வாளால் நித்தலும் துணித்து ஈருதி செய்வினை நெறி நேடி அத்த இங்கு இனி காத்து அருள் அல்லதேல் அடுவல்லே சித்தம் என் உனக்கு அன்னவாறு ஒன்றினைச் செய்வாயே. |
10 |
|
|
|
|
|
|
|
612.
|
கங்கை வேணியாய் அம்மையை மணந்து எமை கடிகொள்ளத்
திங்கள் வெண் குடை மதனனை விடுத்தனம்
தெளிவில்லேம்
அங்க வன்புரம் பொடித்தனை முன்பு போல் அமர்ந்து உற்றாய்
இங்கு யான் தளர்கின்றதே இனிச் சிறிது இரங்காயோ. |
11 |
|
|
|
|
|
|
|
613.
|
ஆர் அழழ் சின வயப்புலி முதலிய அடன் மாவின்
பேர் உரித்து திறம் தரித்தனை சிறு விதி பெருவேள்வி
வீரனைக் கொடு தடிந்தனை அஃது என மிகுவெய்ய
சூரபன் மனைத் தொலைவு செய்து எம்துயர் தொலைக்க என்றார்.
|
12 |
|
|
|
|
|
|
|
614.
|
முரல் கொள் வண்டு சூழ் சததளப் பண்ணவன் முதலோர்கள்
உருக் கரக்கு என மெய் தளர்ந்து இவ்வகை உளநொந்தே
அரற்றி யேத்தலும் அவர் பவ முடிவதற்கு அணித்தாக
இரக்கமாய் அருள் நந்தியை நினைந்தனன் இறையோனே. |
13 |
|
|
|
|
|
|
|
615.
|
எந்தை நந்தியை உன்னலும் அவன் அறிந்து இறைவன்
முன்
வந்து வந்தனை செய்து கை தொழுதலும் மறைமேலோன்
கந்தமா மலர்க் கடவுள் ஆதியர் தமைக் கடிது எம் முன்
தந்திடு என்றனன் நன்று என முதற் கடை தனில்
வந்தான். |
14 |
|
|
|
|
|
|
|
616.
|
கணங்கள் காப்பு உறு முதல் கடை குறுகலும் கண்டு ஏத்தித்
தணங் கொள் பங்கயன் வாசவன் விண்ணவர் தாம்
எல்லாம்
வணங்க எம்பிரான் உமைத் தருக என்றனன் வறிதேனும்
அணங்கு கொள்ளலீர் வம்மினோ நீவிர் என்று அருள் செய்தான்.
|
15 |
|
|
|
|
|
|
|
617.
|
சீர்த்த
நந்தி வந்து இவ்வகை உரைத்த சொல்
செவிதோறும்
வார்த்த பேர் அமுது ஆதலும் உவகையின் மதர்ப்
பாகிப்
போர்த்து ஒர் மாற்றமும் உரைத்திலர் பிரமனே முதல் தேவர்
ஆர்த்து நாதனைப் பாடினர் ஆடினர் அலமந்தார். |
16 |
|
|
|
|
|
|
|
618.
|
பெரிது நோய் உழந்து அருள்பவர் இன்றியே பெரும்
காலம்
நிரயம் உற்றுளோர் தங்களை எடுத்திடும் நிலைத்தன்றோ
அருளின் நீர்மையால் உமை அரன் விளித்தனன் அனைவீரும்
வருதிர் என்ற சொல் பங்கயன் முதலிய வானோர்க்கே. |
17 |
|
|
|
|
|
|
|
619.
|
செய்யல் ஆவது ஒன்று இன்றியே மகிழ்ச்சியில் திளைத்தோர்
ஆய்
மையல் ஆகிய பண்ணவர் தங்களை வல்லே கொண்டு
ஐயன் முன் உற உய்த்தனன் இருவகை அறத்தோரும்
உய்ய வெம் சமன் உடைதரப் புவியினில் உதிக்கின்றோன். |
18 |
|
|
|
|
|
|
|
620.
| வண்டு உளர் கமல மேல் மதலை வாசவன் அண்டர்கள் அனைவரும் அன்பொடு ஏகியே பண்டு உயிர் முழுது அருள் பரனைக் கண்களால் கண்டனர் வழுத்தினர் கரங்கள் கூப்பினார். |
19 |
|
|
|
|
|
|
|
621.
| விண் மதி படர் சடை வேத கீதனை அண்மினர் வணங்கினர் அரி முன் ஆற்றிய உள் மகிழ் பூசனை ஒப்பப் போத நீர் கண் மலர் அதனொடு கழல்கள் சேரவே. |
20 |
|
|
|
|
|
|
|
622.
| வணங்கிய பண்ணவர் வல்ல வல்லவா பணம் கிளர் அரவரைப் பரமற் போற்றலும் உணங்கிய சிந்தையீர் உமது வேண்டலும் அணங்கு உறு நிலைமையும் அறைமின் என்னவே. |
21 |
|
|
|
|
|
|
|
623.
| பேர் உகம் அளப்பில பெயர்தல் இன்றியே சூரனது ஆணையில் துயர்ப் பட்டு ஆழ்ந்தனம் கார் உறழ் கந்தரக் கடவுள் நீ அலாது ஆர் உளர் அடியர் ஏம் அலக்கண் நீக்குவார். |
22 |
|
|
|
|
|
|
|
624.
| ஆய வெம் சூரனது ஆவி நீக்க ஓர் சேயினை அருளுவான் சிமையம் ஆகிய மீ உயர் வரை யிடை மேவி நோற்றிடும் மாயையின் முதல்வியை மணத்தல் வேண்டும் நீ. |
23 |
|
|
|
|
|
|
|
625.
| என்றிவை கூறியே ஆரும் எம்பிரான் மன்றல் அம் தாள்மலர் வணங்கிப் போற்றலும் மின்திகழ் பசும் கதிர் மிலைச்சும் வேணியான் நன்று என இசைந்து இவை நவிறல் மேயினான். |
24 |
|
|
|
|
|
|
|
626.
| புங்கவர் யாவரும் பொருமல் கொள்ளலீர் உங்கள் தம் பொருட்டில் அவ் வோங்கல் வைகிய மங்கையை மணந்து நும் வருத்தம் நீக்குதும் இங்கு இனி யாவரும் ஏகும் என்றனன். |
25 |
|
|
|
|
|
|
|
627.
| முழுது உணர் பரன் இது மொழியப் போதனும் செழுமையில் பொன்னகர்த் தேவும் யாவரும் தொழுதனர் விடைகொடு துயரம் சிந்தியே விழுமிய மேருவின் மிசைக்கண் ஏகினார். |
26 |
|
|
|
|
|
|
|
628.
|
அன்னார் விடை
கொண்டு ஏகிய பின் அது கண்டு இரதி எம்
பெருமான்
முன்னா இறைஞ்சிப் போற்றி செய்து முறையோ முறையோ இறையோனே
பொன்னார் கமலத்து அயன் முதலோர் புணர்ப்பால் எம்கோன்
போந்து இங்கே
உன்னால் முடிந்தான் அவன் பிழையை உளம் கொளாமல் அருள்
என்றாள்.
|
27 |
|
|
|
|
|
|
|
629.
|
இனைய கூறினள் இரதி வேண்டிடுதலும் இணை தீர்ந்த
புனிதன் நல் அருள் எய்தியே மங்கை நீ புலம்பாய் கேள்
வனை கரும் குழல் கவுரியை மேவியாம் வரை போதில்
உனது கேள்வனை அளிக்குதும் போதி என்று உரைசெய்தான்.
|
28 |
|
|
|
|
|
|
|
630.
|
தன்னையே தனக்கு ஒப்பவன் இரதியைத் தளரேல் என்று
இன்னவாறு அருள் செய்தலும் மகிழ்ந்து அடி இறைஞ்சிப் போய்ப்
பொன்னின் மால் இமையக் கிரி புகுந்து ஒரு புடை
உற்றாள்
வன்ன மா முகில் வரவு பார்த்து உறைதரு மயிலே போல். |
29 |
|
|
|
|
|
|
|
631.
| * தமியளாய் இரதி போய்த் தான் அங்கு உற்றிட அமரர்கள் ஆயுளார் அரந்தை தீர்க்கவும் இமைய மால் வரை மிசை இருந்து நோற்றிடும் உமைதனை மணப்பவும் முதல்வன் உன்னினான். |
30 |
|
|
|
|
|
|
|
632.
| மனம் தனில் இத்திறம் மதித்து வானதி புனைந்தவன் சனகன் என்று உரைக்கும் புங்கவன் சனந்தனன் சனாதனன் சனற் குமாரன் ஆம் இனம் தரு முனிவரை இனிது நோக்கினான். |
31 |
|
|
|
|
|
|
|
633.
| நன் நல மைந்தர்காள் ஞான போதகம் சொன் நடை அன்று அது துயரம் நீங்கியே இந்நிலை மோன மோடு இருந்து நம் தமை உன்னுதலே என உணர ஓதினான். |
32 |
|
|
|
|
|
|
|
634.
| கண் படும் இமைத் துணை காட்சி யோகினை நுட்பம் அது ஆகவே நுதலிக் காட்டினோன் ஒட்ப மொடு இவ்வகை உரைப்ப ஆற்றவும் தெட்பமது அடைந்தனர் விதியின் சேயினோர். |
33 |
|
|
|
|
|
|
|
635.
| அந்த நல் வேலையில் ஆற்றும் நோன்பினோர் சிந்தை கொள் அன்பொடு சிவன் பொன் தாள் முறை வந்தனை செய்து நம் மருட்கை நீங்கியே உய்ந்தனம் யாம் என உரைத்துப் போற்றினார். |
34 |
|
|
|
|
|
|
|
636.
| போற்றலும் அத்துணைப் புனிதன் இன்னினி ஏற்றிடும் நிட்டையில் இருந்து வீடு உறீஇ மேல் திகழ் எம்பதம் மேவுவீர் எனாச் சாற்றினன் விடுத்தனன் தவத்தினோர் தமை. |
35 |
|
|
|
|
|
|