முகப்பு |
மணம் பேசு படலம்
|
|
|
670.
|
பொரு தரு மலைக் கொடி புரியும் நோன்பு கண்டு
அருள் தனை நல்கிய ஆதி நாயகன் தெருடரும் கயிலையில் சேர்வுற்று ஏழ்வகை இருடிகள் தங்களை இதயத்து உன்னினான். |
1 |
|
|
|
|
|
|
|
671.
| நினைதலும் கண் நுதல் நிமலன் ஏழ் பெரு முனிவரும் அன்னதை முன்னியுள் வெரீஇப் பனிவரும் மெய்யொடு படர்ந்து வல்லையில் அனையனை இறைஞ்சி நின்று அறைதல் மேயினார். |
2 |
|
|
|
|
|
|
|
672.
| பங்கயன் மான்முதல் பகரும் பண்ணவர் உங்கு உனது ஏவலுக்கு உரியர் ஆய் உற எங்களை உன்னினை யாங்கள் செய்தவம் அங்கு அவர் தவத்தினும் அதிகம் போலும் ஆல். |
3 |
|
|
|
|
|
|
|
673.
| எந்தை எம் பெரும நீ எம்மை வம்மின் என முந்து உறு கருணையின் முன் நிற்று ஆதலின் உய்ந்தனம் அடியரேம் உடைய தீப் பவம் சிந்தினம் இனி ஒரு தீது உண்டாகுமோ. |
4 |
|
|
|
|
|
|
|
674.
| ஒருதலை ஐந்தொழில் உலப்பு உறாவகை புரிதரு பகவ நம் புன்மை நீக்குவான் கருணையொடு உன்னினை கடிதில் செய் பணி அருளுதி என்றனர் ஆற்றும் நோன்பினோர். |
5 |
|
|
|
|
|
|
|
675.
|
அமலன் அம் முனிவர் மாற்றம் கேட்டலும் அவரை நோக்கி
இமைய மேல் இறைவன் தன் பால் ஏகியே எமக்கு இவ் வைகல்
உமை தனை வதுவை நீரால் உதவுவான் வினவி வல்லே
நமது முன் வம்மின் என்னா நன்று அருள் புரிந்தான் அன்றே.
|
6 |
|
|
|
|
|
|
|
676.
|
நாயகன் அருளக் கேளா நன்று என இறைஞ்சி ஏகி
ஏய தொல் முனிவர் யாரும் இமைய மேல் இறை முன் நண்ண
ஆயவன் மனைவி யோடும் அடைந்து எதிர்கொண்டு தாழ்ந்து
நேயமொடு அருச்சித்து ஏத்தி நின்று இது புகலுகின்றான். |
7 |
|
|
|
|
|
|
|
677.
|
படி அறு நும் தாள் ஈண்டுப் படுதலால் இமைய மேருத்
தடவரை அதனில் தூய் தாய்த் தலைமையும் பெற்றது அன்றே
நெடிய என் பவமும் இன்னே நீங்கின நீவிர் எல்லாம்
அடியனேன் தன்பால் வந்த நிமித்தம் என்ன அறையும் என்றான்.
|
8 |
|
|
|
|
|
|
|
678.
|
அங்கு அது வினவும் எல்லை அரும் தவர் அகிலம் ஈன்ற
மங்கையை வதுவை செய்வான் மன் உயிர்க்கு உயிராய் நின்ற
சங்கரன் நினைந்து உன்னோடு சாற்றுதற்கு எம்மை உய்த்தான்
இங்கு எம் வரலாறு என்ன இசைவு கொண்டு இறைவன் சொல்வான்.
|
9 |
|
|
|
|
|
|
|
679.
|
துன்னிய உயிர்கள் யாவும் தொல் உலக அனைத்தும்
ஈன்ற
கன்னிகை உமையாள் தன்னைக் கடி மணம் முறையின் நல்கி
என்னையும் அடிமை ஆக ஈகுவன் இறைவற்கு என்ன
மன்னவன் அயலே நின்ற மனைவி ஈது உரைக்கல்
உற்றாள். |
10 |
|
|
|
|
|
|
|
680.
|
மலர் அயன் புதல்வர் தன்னோர் மடந்தையை மணத்தின் நல்க
அலை புனல் சடிலத்து அண்ணல் அவன் தலை கொண்டான்
என்பர்
நிலைமை அங்கு அதனை உன்னி நெஞ்சகம் அஞ்சும் எங்கள்
குலமகள் தனை அவற்குக் கொடுத்திடல் எவனோ
என்றாள். |
11 |
|
|
|
|
|
|
|
681.
|
என்றலும் அவளை நோக்கி எழு முனிவோரும் சொல்வார்
ஒன்று நீ இரங்கல் வாழி ஒப்பு இலா முதல்வன் செய்கை
நன்று தேர்ந்திலை ஆல் தக்கன் நலத்தகும் அவியை
மாற்றி
அன்று தன் இகழ்தல் ஆலே அவன் தலை முடிவு செய்தான்.
|
12 |
|
|
|
|
|
|
|
682.
|
அடைந்துளோர்க்கு அருளுமாறும் அல்லவர் தமக்குத் தண்டம்
படும் துணை தெரிந்து கூட்டும் பான்மையும் பரமன் செய்கை
மடந்தை இத் தன்மை யாரும் மனப் படுத்து உணர்வது ஈதே
திடம் பட உணர்தி வேறு சிந்தனை செய்யேல் என்றார். |
13 |
|
|
|
|
|
|
|
683.
|
இயல்
உறு முனிவோர்கள் இவை மொழிதலும் ஓரா
மயல் அறு வரை அண்ணல் வாய்மை இது எனலோடும் அயல் உறு மனை மேனை அஞ்சினள் அமலன் தன் செயல் இது உணராதே செப்பினன் இவை என்றே. |
14 |
|
|
|
|
|
|
|
684.
| உள் நலிவொடு மேனை உவர் மலர் அடி தா ழூஉப் பெண் அறிவு எவையேனும் பேதைமை வழி அன்றோ அண்ணல் தன் அருள் நீர்மை அணுவதும் அறிகில்லேன் புண்ணிய முனிவீர் என் புன் மொழி பொறும் என்றாள். |
15 |
|
|
|
|
|
|
|
685.
| பணிவுடன் இவை மேனை பகர்தலும் அவள் தன் பால் கணி தமில் அருள் செய்யக் காவலன் அது காணா இணை தவிர் முனிவீர்காள் இவள் உரை கருதன் மின் மணம் இயல் இறையோனை வர மொழிகுதிர் என்றான். |
16 |
|
|
|
|
|
|
|
686.
| பனி படு வரை அண்ணல் பகர் மொழி அது கேளா மனம் மிக மகிழ்வாகி மற்றவர் தமை அம் கண் இனிமை யொடு உற நல்கி எழுவரும் அவண் நீங்கித் தனை நிகர் பிறிது இல்லாத் தண் கயிலையில் வந்தார். |
17 |
|
|
|
|
|
|
|
687.
| வந்து எழு முனிவோரும் மா நகர் இடை சாரா நந்தி கண் முறை உய்ப்ப நாதனை நணுகு உற்றே அந்தம் இல் அளியோடும் அவன் அடி தொழுது ஏத்தி எந்தையை இது கேள் என்று யாவதும் உரை செய்தார். |
18 |
|
|
|
|
|
|
|
688.
|
வரை மிசை அரசு ஆள்வோன் மண வினை இசைவு எல்லாம்
உரை செய அருள் செய்தே உம்பரின் முனிகாள் நீர்
புரிதரு செயல் ஆற்றப் போகுதிர் எனல் ஓடும்
அரன் அடி தொழுது ஏத்தி அவர் பதம் அணுகுற்றார். |
19 |
|
|
|
|
|
|
|
689.
| எம் குறை தீர்ந்தது என்று எழு தவத்தருந் தங்கள் தம் பதத்து இடைத் தணப்பின்று எய்தினார் இங்கு இது நின்றிட இமைய மேல் இறை அங்கு இனிச் செய்தவாறு அறியக் கூறுவாம். |
20 |
|
|
|
|
|
|