முகப்பு |
துணைவர் வரு படலம்
|
|
|
978.
|
நஞ்சு
அயின்றவன் நெற்றி நாட்டத்தினால் நல்கும்
வெம் சுடர்ப்பொறி வெம்மையை ஆற்றலள் விமலை செம் சிலம்பு அடி தாக்கலின் நவமணி சிதற அஞ்சி ஓடினள் இத்திறம் உணர்ந்தனள் அகத்துள். |
1 |
|
|
|
|
|
|
|
979.
| மாயவன் முதல் அமரர்கள் ஈசனை வணங்கி நீ ஒர் மைந்தனைத் தருக என நெற்றி நாட்டத்தால் ஆயவன் சுடர் உதவியோர் மதலையாய் அமர்வான் ஏயினான் சரவணத்து எனத்தெரிந்தனள் இறைவி. |
2 |
|
|
|
|
|
|
|
980.
| அன்னதன் பினர் உமையவள் எனதுபால் அமலன் தன் அருள் பெறு மதலை தோன்றாவகை தடுத்த பொன்நகர்க்கு இறை விரிஞ்சன் மால் முதல புத்தேளிர் பன்னியர்க்கு எலாம் புதல்வர் இன்றாகெனப் பகர்ந்தான். |
3 |
|
|
|
|
|
|
|
981.
| இமைய மாமகள் இத்திறம் புகன்று மீண்டு ஏகிச் சமயம் யாவையும் நிறுவிய கண் நுதல் தலைவன் அமலம் ஆம் திரு முன்னர் வந்தரிக்கு முன்னரி தாம் கமல மார் அடி கண்டனள் பணிந்து கண் களித்தாள். |
4 |
|
|
|
|
|
|
|
982.
| உம்பர் யாவரும் குறை இரந்திடலும் நீ உதவும் செம் பொறித் தொகை ஆற்றலும் வெம்மையும் தெரிந்து வெம்பி முற்றுடல் பதைப்புற அகன்று இவண் மீண்டேன் எம் பெரும் தகை அவ்வழல் நீக்கலால் என்றாள். |
5 |
|
|
|
|
|
|
|
983.
| கன்னி இங்ஙனம் பகர்தலும் கருணை செய்து அருளித் தன் இடத்தினில் இருத்தினன் இருந்திடு தையல் முன்னம் ஓடலில் சிதறு நூபுர மணி முழுதும் என்னை ஆளுடை நாயகன் முன் இலங்கினவால். |
6 |
|
|
|
|
|
|
|
984.
|
தளிரின் மெல் அடிப் பரிபுரம் ஆயின தணந்து
மிளரும் அந் நவ மணிகளின் ஆணையால் விமலை
ஒளிரு நல் உருத் தோன்றின ஐம் முகத் தொருவன்
தெளிரு முச்சுடர் அகத்து இடை அமர்ந்திடும் செயல் போல்.
|
7 |
|
|
|
|
|
|
|
985.
| எண் இலா நவ மணிகளின் உமையுரு வெனைத்தும் கண்ணினால் தெரிந்து அருளினால் வம் எனக் கழற அண்ணல் ஓர் வகை மணிக்கு ஒரு சத்திகளாக நண்ணினார் நவ சத்திகள் அமரர் நல் தவத்தால். |
8 |
|
|
|
|
|
|
|
986.
|
பருப் பதக் கொடி புரை நவ சத்திகள் பரமன்
திருப்பதத்து இடை வணங்கி நின்றவன் இடைச் சிந்தை
விருப்பம் வைத்தலும் முனிவர் தம் மகளிற் போல் விரைவில்
கருப்பம் உற்றனர் யாவதும் உமையவள் கண்டாள். |
9 |
|
|
|
|
|
|
|
987.
|
முனம் புரிந்து உலகு அளித்தவள் அனையர் பால்
முதிரும்
சினம் புரிந்து இவண் எமக்கு மாறு ஆகிய திறத்தால்
கனம் புரிந்தஇக் கருப்பமோடு இருத்திர் பல்காலம்
இனம் புரிந்த நீர் யாவரும் என்று சூள் இசைத்தாள். |
10 |
|
|
|
|
|
|
|
988.
| ஆவது எல்லையில் நடுக்கம் உற்று அஞ்சியே அம்கண் மேவு மாதர் மெய் வியர்த்தனர் அவ்வியர்ப்பு அதனில் தேவ தேவன் அது அருளினால் தினகரத் திரள் போல் ஓவிலா விறல் வீரர்கள் இலக்கர் வந்து உதித்தார். |
11 |
|
|
|
|
|
|
|
989.
|
வடுத்தனைப் பொரும் கண்ணினர் வியர்ப்பினில் வந்து ஆங்கு
அடுத்த மானவர் ஓர் இலக்கத்தவரும் அசனி
கடுத்த சொல்லினர் பொன் துகில் உடையினர் கரத்தில்
எடுத்த வாளினர் பல கையர் ஆகி ஈண்டினர் ஆல். |
12 |
|
|
|
|
|
|
|
990.
| அனையர் யாவரும் ஈசனை அடைந்தனர் அன்பு உற்று இனிய வாகிய அமலன் நாமங்களை ஏத்தி வனை கரும் கழல் வணங்கி முன் நிற்றலும் மற்றப் புனித நாயகன் அவர் தமை நோக்கியே புகல்வான். |
13 |
|
|
|
|
|
|
|
991.
|
மைந்தர்
கேள் மினோ நீவிர்கள் யாவரும் வயத்தால்
இந்திர ஆதியர் பகைவரை அடுவதற்கு எமது கந்த வேள் படை யாகுதிர் என்னவே கழறி முந்து பேர் அருள் புரிந்தனன் யாவர்க்கும் முதல்வன். |
14 |
|
|
|
|
|
|
|
992.
| இன்ப நீருடன் இவை அருள் புரிதலும் இலக்கம் நன் பெரும் திறல் மைந்தர்கள் ஆயினோர் நாளும் அன்பு மேதகு பரிசனர் ஆகியே அமலன் முன்பு நீங்கலாது ஒழுகினர் செய்பணி முறையால். |
15 |
|
|
|
|
|
|
|
993.
| மாற்றரும் சினத் தம்மைமுன் கொடுமொழி வழங்கத் தோற்று நன்மணி உருவமாம் தோகையர் துளங்கிப் போற்றி வந்தனை செய்து பின் அவள் பணி புரிந்தே ஆற்று தொல் கருப் பத்துடன் பற்பகல் அமர்ந்தார். |
16 |
|
|
|
|
|
|
|
994.
| இகலும் மாமணி மகளிர் தம் கருவினுள் இறைவற் புகழும் நந்தி அம் கணத்தவர் குழவியாய்ப் போந்து நிகர் இல் காளையர் ஆகி வீற்று இருந்தனர் நெறி சேர் சுகன் எனும் படி பரமனை முன்னியே தொழுது. |
17 |
|
|
|
|
|
|
|
995.
| அர தனங்களில் தோன்றிய மங்கையர் அகட்டில் கருவின் வந்திடு ஆடவர் ஈசனைக் கருதிப் புரியும் யோகுடன் இருத்தலின் ஆற்றரும் பொறையாய்ப் பரம் அது ஆதலும் உமையுடன் பரமனைப் பணிந்தார். |
18 |
|
|
|
|
|
|
|
996.
| இருவர் தம்மையும் பணிந்தவர் இன்று காறு இனைய கருவின் நொந்தனம் இன் இனியாம் பரிக் கல்லேம் அருள் புரிந்திடும் என்றலும் ஆதி அம் கடவுள் பரிவினால் உமை திருமுகம் நோக்கியே பகர்வான். |
19 |
|
|
|
|
|
|
|
997.
| ஏல வார் குழல் கவுரி நின் செய்ய தாள் இடையில் சாலு நூபுரத்து உதித்தவர் உனது சாபத்தால் சூலினான் மிகமெலிந்தனர் பற்பகல் சுமந்தார் பாலரைப் பெற இனி அருள் புரிக எனப் பணித்தான். |
20 |
|
|
|
|
|
|
|
998.
| இறைவன் இங்கு இது பணித்தலும் நன்று என இசையா முறுவல் செய்துமை மாதரை நோக்கி மொய்ம் பினரைப் பெறுதிரால் இனி என்றலும் அவர் வயிற் பெயராது உறையும் யோகு உடை வீரர்கள் இத்திறம் உணர்ந்தார். |
21 |
|
|
|
|
|
|
|
999.
| மறத்தல் இல்லதோர் உணர்வுடை வீரர்கள் மற்றித் திறத்தை நாடியே யோகு விட்டு உள மகிழ் சிறப்ப இறத்தல் நீங்கிய பரம்பொருள் அருள்முறை இறைஞ்சிப் பிறத்தல் உன்னியே முயன்றனர் ஆயிடைப் பெயர்வார். |
22 |
|
|
|
|
|
|
|
1000.
|
பரிபுரந்தனின் முன் வரு மங்கையர் பரைதன்
கருணை கொண்ட சொல் கேட்டலும் கவற்சியை
அகன்று
விரைவின் மேலவர் பதம் பணிந்து ஏத்தியே விடை கொண்டு
ஒருவி மைந்தரை அளித்தனர் யாவரும் ஒருசார். |
23 |
|
|
|
|
|
|
|
1001.
| நந்தி தன்கண முதல்வர்கள் ஆகியே நணியோர் பந்த நீங்கியே சனித்தனர் ஒன்று இலாப் பதின்மர் எந்தையார் அருள் பெயர் கொடே இரு நில வரைப்பில் சுந்தரன் விடை முகத்தவன் தோன்றிய வாபோல். |
24 |
|
|
|
|
|
|
|
1002.
|
பேர
ஆகுவை உடையவன் இளவல் பேர் அருளால்
சூர வாகுலம் வானவர் பெறாவகை தொலைப்பான் ஏர வாகுறும் செம் மணிப்பாவை தன் இடத்தில் வீரவாகு வந்து உதித்தனன் உலகெலாம் வியப்ப. |
25 |
|
|
|
|
|
|
|
1003.
|
விரள வல்லியார் தந்திசூ ரரிவியன் படை ஆம்
கரள வல் இருள் அகற்றுவான் எழுந்த வெண் கதிர் போல்
திரள வல்லினை அனைய பூண் முலை உடைத் தெய்வத்
தரள வல்லிபால் தோன்றினன் வீரகே சரியே. |
26 |
|
|
|
|
|
|
|
1004.
| மக்கள் வானவர்க்கு அரும் துயர் புரியும் வல் அவுணர் தொக்க வீரமா மகேந்திரப் பெரு வளம் தொலையச் செக்கர் நூபுரப் புட்ப ராகத்தி பால் சிறப்பால் தக்க வீரமா மகேந்திரன் வந்து அவதரித்தான். |
27 |
|
|
|
|
|
|
|
1005.
| ஆதவத் தனிக் கடவுளும் வடவை ஆர் அழலும் சீதளப் புது மதியமும் வெள் குறத் திகழ்கோ மேதகத்து அமர் பாவை பால் விண்ணவர் புரியும் மாதவத்தினால் வீரமா மகேச்சுரன் வந்தான். |
28 |
|
|
|
|
|
|
|
1006.
| தான மாநிலத் தேவர்கள் மகிழ் உறத் தகுவர் ஆன பேர் எலாம் முடிவுற அறம் தலை எடுப்பக் கானல் சேர் வயிடூரிய மின்னிடைக் கழற்கால் மான வீரமா புரந்தரன் என்பவன் வந்தான். |
29 |
|
|
|
|
|
|
|
1007.
| சூரர் ஆக்கமும் துணைவர் தம் ஆக்கமும் சூழும் தீரர் ஆக்கமும் வானவர் ஏக்கமும் சிதைய வாரர் ஆக் கமழ் கொன்றை வேணியன் அருள் அதனால் வீர ராக்கதன் வந்தனன் வயிர மெல் இயல்பால். |
30 |
|
|
|
|
|
|
|
1008.
| கரகத்தனி மால் வரை எடுத்து ஒரு கணத்தில் புரகதத்தினை இழைத்தவன் அருளினால் புணரிக் குரகதத்திடைப் பைங்கனல் கொம் என எழல் போல் மரகதத்தி பால் வீரமார்த்தாண்டன் வந்தனனே. |
31 |
|
|
|
|
|
|
|
1009.
| மையல் மாக்கரி வாம்பரி விரவிய மணித் தேர் வெய்ய தானவர் பல் தொகை இமைப்பினில் விளிய மொய்யினார்த் தடுமானவன் பவளமா மொழிப் பேர்த் தையல் தன் வயின் வலிய வீராந்தகன் சனித்தான். |
32 |
|
|
|
|
|
|
|
1010.
| கந்து உதித்திடும் வியன் நர மடங்கலும் கடலின் முந்து உதித்திடும் ஆலமும் வடவையும் முரண நந்து உதித்த நல் களமணிப் பாவை நல் தவத்தால் வந்து உதித்தனன் வீர தீரப் பெயர் வலியோன். |
33 |
|
|
|
|
|
|
|
1011.
|
இந்த வீரர் ஒன்பதின் மரும் ஈசனது அருளால்
தம்தம் அன்னையர் நிறம் கொடே பொலந்துகில் தாங்கி
வந்து பற்பகல் வளர் தரும் உறுப் பொடு மடவார்
உந்தியின் வழி நான் முகத்து அண்ணல் போல்
உதித்தார். |
34 |
|
|
|
|
|
|
|
1012.
|
உதி தருமத் திறல் வீரர் அரி அணைமேல் அம்மை
உடன் உறைந்த நாதன்
பதமலர்கள் பணிந்து எழலும் அவர்க் கண்டு பார்ப்பதியைப்
பரிவால் நோக்கி
மதி உடையர் திறல் உடையர் மானவரும் கலத்தினர் நம் மைந்தர்
இன்னோர்
புதியர் அலர் நந்தி தனிக் கணத்தவர் என்றான் சுருதிப் பொருளாய்
நின்றான். |
34 |
|
|
|
|
|
|
|
1013.
|
தேவி
அது கேட்டு மைந்தர்க்கு அருள் புரிய அவர்க்கு எல்லாம்
சிவன் வெவ் வேறு
தாவில் சுடர் வாள் உதவி வியர்பில் வரும் ஓர் இலக்கம் தனயரோடு
நீவிர்களும் ஒன்றி நுங்கட்கு இறையவன் ஆகிய சேயை நீங்கல்
இன்றி
ஏவல் அவன் பணித்தன செய்து ஒழுகுதிர் என்றான் அவரும்
இசைந்து தாழ்ந்தார். |
35 |
|
|
|
|
|
|
|
1014.
|
ஒன்பானாம் இலக்கத்தோர் ஓர் இலக்கத் தோர்
தம்மோடு ஒன்றிப் புல்லி
அன்பாகி எம் பெருமான் சின கரத்தை அகலாமல் அம்கண்
வைக
மென்பானல் புரையும் விழிச் சத்திகள் ஒன்பதின்மர்களும் விமலக்
கன்னி
தன் பாலை இகவாமல் அவள் பணித்த தொழில் புரிந்து சார்தல்
உற்றார். |
36 |
|
|
|
|
|
|