முகப்பு |
அயனைச் சிறைபுரி படலம்
|
|
|
1205.
|
மேடம்
ஊர்தி ஆக உய்த்து விண்ணும் மண்ணும் முருகவேள்
ஆடல் செய்து உலாவி வெள்ளி அசலம் மீதில்
அமர்தரும்
நீடு நாளில் ஒரு பகல் கண் நெறி கொள் வேதன் முதலினோர்
நாடி ஈசன் அடி வணங்க அவ் வரைக்கண்
நண்ணினார். |
1 |
|
|
|
|
|
|
|
1206.
|
எனாதியான் எனும் செருக்கு இகந்து தன் உணர்ந்து உளார்
மனாதி கொண்ட செய்கை தாங்கி மரபின் முத்தி
வழிதரும்
அனாதி ஈசன் அடி வணங்கி அருள் அடைந்து
மற்றவன்
தனாது மன்றம் நீங்கி வாயில் சாருகின்ற வேலையில். |
2 |
|
|
|
|
|
|
|
1207.
|
ஒன்பதோடி லக்கம் ஆன அனிகவீரர் உள் மகிழ்ந்து
அன்பினோடு சூழ்ந்து போற்ற அமலன் அம்பொனால் ஆய
முன்பு நீடு கோபுரத்துள் முழுமணித் தலத்தின்மேல்
இன்பொடு ஆடி வைகினான் இராறு தோள்
படைத்துளான். |
3 |
|
|
|
|
|
|
|
1208.
|
அங் கண் வைகும் முருகன் நம்பன் அடி வணங்கி வந்திடும்
புங்கவர்க்குள் ஆதி ஆய போதினானை நோக்குறா
இங்கு நம்முன் வருதியால் எனா விளிப்ப ஏகியே
பங்கய ஆசனத்தினோன் பணிந்திடாது தொழுதலும். |
4 |
|
|
|
|
|
|
|
1209.
|
ஆதி தேவன் அருளும் மைந்தன் அவன் உள்ளத்தை நோக்கியே
போதனே இருக்க எனாப் புகன்று இருத்தி வைகலும்
ஏது நீ புரிந்திடும் இயற்கை யென்ன நான்முகன்
நாதன் ஆணையால் அனைத்தும் நான் படைப்பன் என்றனன்.
|
5 |
|
|
|
|
|
|
|
1210.
| முருக வேள் அது கேட்டலும் முறுவல் செய்து அருளித் தரணி வான் உயிர் முழுவதும் தருதியே என்னில் சுருதி யாவையும் போகுமோ மொழிக எனத் தொல்சீர்ப் பிரமன் என்பவன் இத்திறம் பேசுதல் உற்றான். |
6 |
|
|
|
|
|
|
|
1211.
|
ஐய கேள் எனை ஆதி காலம் தனில் அளித்த
மை உலாவரு களத்தினன் அளப்பு இலா மறைகள்
செய்ய ஆகமம் பல பல புரிந்து அதில் சில யான்
உய்யுமாறு அருள் செய்தனன் அவை உணர்ந்து உடையேன்.
|
7 |
|
|
|
|
|
|
|
1212.
| என்று நான்முகன் இசைத்தலும் அவற்றினுள் இருக்காம் ஒன்று நீ விளம்புதி என முருகவேள் உரைப்ப நன்று எனா மறை எவற்றிற்கும் ஆதியின் நவில்வான் நின்றது ஓர் தனி மொழியை முன் ஓதினன் நெறியால். |
8 |
|
|
|
|
|
|
|
1213.
|
தாமரைத்தலை இருந்தவன் குடிலை முன் சாற்றி
மா மறைத்தலை எடுத்தனன் பகர்தலும் வரம்பில்
காமர் பெற்றுடைக் குமரவேள் நிற்றி முன் கழறும்
ஓம் எனப்படும் மொழிப் பொருள் இயம்புக என்று உரைத்தான்.
|
9 |
|
|
|
|
|
|
|
1214.
| முகத்தில் ஒன்றதா அவ் எழுத்து உடையதோர் முருகன் நகைத்து முன் எழுத்தினுக்கு உரை பொருள் என நவில மிகைத்த கண்களை விழித்தனன் வெள்கினன் விக்கித் திகைத்து இருந்தனன் கண்டிலன் அப்பொருள் திறனே. |
10 |
|
|
|
|
|
|
|
1215.
| ஈசன் மேவரும் பீடமாய் ஏனையோர் தோற்றும் வாசமாய் எலா எழுத்திற்கும் மறைகட்கும் முதலாய்க் காசி தன் இடை முடிபவர்க்கு எம்பிரான் கழறும் மாசு இல் தாரகப் பிரமமாம் அதன் பயன் ஆய்ந்தான். |
11 |
|
|
|
|
|
|
|
1216.
| தெருளது ஆகிய குடிலையைச் செப்புதல் அன்றிப் பொருள் அறிந்திலன் என்செய்வான் கண் நுதல் புனிதன் அருளினால் அது முன்னரே பெற்றிலன் அதனால் மருளுகின்றனன் யார் அதன் பொருளினை வகுப்பார். |
12 |
|
|
|
|
|
|
|
1217.
| தூ மறைகள் எலாம் ஆதியும் அந்தமும் சொல்லும் ஓம் எனப்படும் ஓர் எழுத்து உண்மையை உணரான் மா மலர்ப் பெரும் கடவுளும் மயங்கினான் என்றால் நாம் இனிச் சில அறிந்தனம் என்பது நகையே. |
13 |
|
|
|
|
|
|
|
1218.
| எட்ட ஒணாத் தவக் குடிலையில் பயன் இனைத்து என்றே கட்டு உரைத்திலன் மயங்கலும் இதன் பொருள் கருதாய் சிட்டி செய்வது இத் தன்மைய தோ எனாச் செவ்வேள் குட்டினான் அயன் நான்குமா முடிகளும் குலுங்க. |
14 |
|
|
|
|
|
|
|
1219.
| மறை புரிந்திடும் சிவனருண் மதலை மா மலர் மேல் உறை புரிந்தவன் வீழ்தரப் பதத்தினால் உதைத்து நிறை புரிந்திடு பரிசனரைக் கொடே நிகளச் சிறை புரிந்திடு வித்தனன் கந்தமாம் சிலம்பில். |
15 |
|
|
|
|
|
|
|
1220.
| அல்லி மா மலர்ப் பண்ணவன் தனை அரும் சிறையில் வல்லி பூட்டுவித்து யாவையும் புரிதர வல்லோன் எல்லை தீர் தரு கந்தமால் வரைதனில் ஏகிப் பல் உயிர்த் தொகை படைப்பது நினைந்தனன் பரிவால். |
16 |
|
|
|
|
|
|
|
1221.
| ஒரு கரம் தனில் கண்டிகை வடம் பரித்து ஒருதன் கர தலம் தனில் குண்டிகை தரித்து இருகரங்கள் வரத மோடு அபயம்தர பரம் பொருள் மகனோர் திரு முகம் கொடு சதுர் முகன் போல் விதிசெய்தான். |
17 |
|
|
|
|
|
|
|
1222.
|
உயிரினுக்கு
உயிராகியே பரம் சுடர் ஒளியாய்
வியன் மறைத் தொகைக்கு ஈறதாய் விதி முதல்
உரைக்கும்
செயலினுக்கு எலாம் ஆதியாய் வைகிய செவ்வேள்
அயன் எனப் படைக்கின்றதும் அற்புதம் ஆமோ. |
18 |
|
|
|
|
|
|
|
1223.
|
தண் என் அம்பயத் தவிசினோன் சிறை புகத் தானே
எண் இலா உயிர்த் தொகை அளித்து அறுமுகன் இருந்தான்
அண்ணலம் திசை முகனொடு வந்து சூழ் அமரர்
உள் நடுங்கியே தொழுது தம் பதங்களில் உற்றார். |
19 |
|
|
|
|
|
|