முகப்பு |
படையெழு படலம்
|
|
|
1311.
|
கண் நுதல் விடை பெற்று அரி அயன் மகவான்
கடவுளர்
தம்மொடு கடிதின்
அண்ணல் அம் குமரன் தன்னொடு சென்றே அயல்
வரும் மருத்தினை நோக்கித்
தண் அளி புரியும் அறு முகத்து எந்தை தனிப் பெரும்
தேர் மிசை நீ போய்ப்
பண்ணொடும் முட்கோல் மத்திகை பரித்துப் பாகனாய்த்
தூண்டு எனப் பணித்தான். |
1 |
|
|
|
|
|
|
|
1312.
|
மன் புரி திருமால் இனையன பணிப்ப மாருதன்
இசைந்து
வான் செல்லும்
பொன் பொலி தேரின் மீமிசைப் பாய்ந்து பொருக்கென
மருத்துவர் நாற்பான்
ஒன்பது திறத்தார் புடை வரத்தூண்டி உவகை யோடு
அறுமுகத்து
ஒருவன்
முன்புற உய்த்துத் தொழுது மற்று இதன் மேல் முருக நீ
வருக என மொழிந்தான். |
2 |
|
|
|
|
|
|
|
1313.
|
மாருதன் இனைய புகன்று கை தொழலும் மற்று அவன்
செயற்கையை நோக்கிப்
பேர் அருள் புரிந்து கதிர் இளம் பரிதி பிறங்கு சீர் உதயமால்
வரைமேல்
சேருவது என்னக் குமரவேள் அனைய செழுமணி
இரதம் மேல் செல்லச்
சூர் இனி இறந்தான் என்று வாசவனும் சுரர்களும்
ஆர்த்தனர் துள்ளி. |
3 |
|
|
|
|
|
|
|
1314.
|
ஓங்கு தேர் மிசைக் குமரவேள் ஏவலும் உவப்பால்
ஆங்கு அவன் தன் அருள் பெறும் திறலினோர்
அணுகிப்
பாங்கர் நண்ணினர் முனிவரும் தேவர்கள் பலரும்
நீங்கல் இன்றியே அவர் புடை சூழ்ந்தனர் நெறியால். |
4 |
|
|
|
|
|
|
|
1315.
| இனந்தனோடு அவர் முருகனை அடைதலும் இரு நீர் புனைந்த சென்னியன் கயிலையில் இருந்த வெம் பூதர் அனந்த வெள்ளத்தில் இராயிரம் ஆகும் வெள்ளத்தர் வனைந்த வார் கழல் தலைவர் தம் உரை கொடு வந்தார். |
5 |
|
|
|
|
|
|
|
1316.
| எழுவியன் கதை நேமி வெம் சூலம் வாள் எறிவேல் மழு முதல் படை யாவையும் ஏந்திய வலியோர் நிழன் மதிப் பிறை ஞெலிந்தன நிலா உமிழ் எயிற்றர் அழல் உகுத்திடும் விழியினர் அசனியின் அறைவார். |
6 |
|
|
|
|
|
|
|
1317.
|
நெடியர் சிந்தினர் குறியினர் ஐம் பெரு நிறனும்
வடிவில் வீற்று வீற்று எய்தினர் வார் சடைக் கற்றை
முடியர் குஞ்சியர் பல வதனத்தர் ஓர் முகத்தர்
கொடியர் என்னினும் அடைந்தவர்க்கு அருள் புரி
குணத்தோர்.
|
7 |
|
|
|
|
|
|
|
1318.
| நீறு கண்டிகை புனைதரும் யாக்கையர் நெடு நஞ்சு ஏறு கண்டனை அன்றி மற்று எவரையும் எண்ணார் மாறு கொண்டவர் உயிர்ப் பலி நுங்குவோர் மறலி வீறுகொண்ட தொல் படைதனைப் படுத்திடு மேலோர். |
8 |
|
|
|
|
|
|
|
1319.
|
அண்டம் யாவையும் ஆண்டு உறை உயிர்த்தொகை
அனைத்தும்
உண்டு உமிழ்ந்திட வல்லவர் அன்றியும் உதரச்
சண்ட அங்கியால் அடுபவர் அட்டவை தம்மைப்
பண்டு போல் சிவன் அருளினால் வல்லையில்
படைப்போர். |
9 |
|
|
|
|
|
|
|
1320.
| முன்னை வைகலின் இறந்திடும் இந்திரன் முதலோர் சென்னி மாலை கந்தரத்தினில் உரத்தினில் சிரத்தில் கன்ன மீதினில் கரத்தினில் மருங்கினில் கழலில் பொன்னின் மா மணிக் கலனொடும் விரவினர் புனைவார். |
10 |
|
|
|
|
|
|
|
1321.
|
இந்த வண்ணம் ஆம் சாரதப் படையினர் ஈண்டித்
தம் தம் வெம் சமர்த் தலைவர்களோடு சண்முகன் பால்
வந்து கை தொழுது ஏத்தியே இறுதி சேர் வைகல்
அந்தம் இல் புனல் அண்டம் அது உடைந்து என
ஆர்த்தார். |
11 |
|
|
|
|
|
|
|
1322.
| ஆர்த்த சாரதர் எந்தை பால் ஆயினர் அதுகால் பேர்த்தும் ஆயவர் இடித் தெனப் பூதரில் பெரியோர் வார்த் தயங்கிய தண் உமை திமிலை வான் படகம் சீர்த்த காகள முதலிய இயம்பினர் சிலரே. |
12 |
|
|
|
|
|
|
|
1323.
| ஆன காலையில் அது தெரிந்து அறுமுகத்து ஒருவன் வான் அளாவிய புணரிகள் சூழ்ந்திட வயங்கும் பானு நாயகன் வந்து எனப் பரந்து பாரிடத்துச் சேனை சூழ்தரக் கயிலை நீத்து அவனிமேல் சென்றான். |
13 |
|
|
|
|
|
|
|
1324.
| கொள்ளை வெஞ்சினச் சாரதர் ஈர் ஆயிரம் குணித்த வெள்ளம் வந்திடக் கந்தவேள் அவனி மேல் மேவக் கள்ள வான் படை அவுணர்கள் கலந்து சூழ்ந்து என்னப் பொள் எனத் துகள் எழுந்தது வளைந்தது புவியை. |
14 |
|
|
|
|
|
|
|
1325.
|
எழு தரும் துகள் மாதிர வரைப்பு எலாம் ஏகி
ஒழியும் வான் பதம் சென்றதால் ஆங்கு அவை உறுதல்
குழுவின் மல்கிய சாரதர் ஆர்ப்பு முன் குறுகி
மொழிதல் போன்றன விண் உளோர் இமைப்பில் கண்
மூட.
|
15 |
|
|
|
|
|
|
|
1326.
| கழி அடைத்திடு நேமிகள் பல ஒடு ககன வழி அடைத்திடு பூழியும் ஒலியும் மன் உயிர்கள் விழி அடைத்தன நாசியை அடைத்தன விளம்பு மொழி அடைத்தன அடைத்தன கேள்வியின் மூலம். |
16 |
|
|
|
|
|
|
|
1327.
| பேர் இடங்களாம் தனு உடைப் பூதர்கள் பெயரப் பார் இடங்கள் தாம் இடம் பெறா ஆதலில் பல்லோர் கார் இடம் கொளும் வான் வழிச் சென்றனர் கண்டோர் ஓர் இடங்களும் வெள்ளி இடை இலது என உரைப்ப. |
17 |
|
|
|
|
|
|
|
1328.
| அவனி வான் எலாம் பூழியால் மறைத்தலும் அதனைச் சிவன் மகன் தனது ஒளியினால் அகற்றினன் செல்வான் கவனம் ஆம் பரி இரத மேல் பனி படும் காலைத் தவன நாயகன் அது தடிந்து ஏகு தன்மையைப் போல். |
18 |
|
|
|
|
|
|