வழி நடைப் படலம்
 
1629.
குருமணி மகுடம் ஆறும் குழைகளும் திருவில் வீசத்
திருமணி வரையின் மேவும் திருக்கைவேல் பெருமானுக்குக்
கருமணி ஆழிப் புத்தேள் கையுறை ஆக ஆங்கோர்
பருமணி நீட்டிற்று என்னப் பானு வந்து உதயம் செய்தான்.
1
   
1630.
மங்குல் வான மேல் வெய்யவன் கதிர் என வழங்கும்
செம் கை கூப்பியே தொழுதிடு வான் எனச் செல்ல
அங்கு அவ்வேலையில் அறுமுகன் கடவுள் வெற்பு
                                  அகன்று
பொங்கு தானையும் அமரரும் சூழ்தரப் போந்தான்.
2
   
1631.
தன்னை நீக்கியே சூழ் உறும் தவம் உடைப் பிருங்கி
உன்னி நாடிய மறைகளின் முடிவினை உணரா
என்னை ஆளுடையான் இடம் சேர்வன் என்று இமையக்
கன்னி பூசனை செய்த கேதார முன் கண்டான்.
3
   
1632.
பை அராவின் மேல் கண் துயில் பண்ணவன் தனக்கும்
தையல் பாதியனே பரம் பொருள் எனும் தன்மை
மையல் மானுடர் உணர்ந்திட மறை முனி யெடுத்த
கையதே உரைத் திட்டது ஓர் காசியைக் கண்டான்.
4
   
1633.
பருப்பதப் பெயர்ச் சிலாதனற் பாலகன் பரமன்
இருப்ப ஓர் வரை யாவன் என்று அரும்தவம் இயற்றிப்
பொருப்பது ஆகியே ஈசனை முடியின் மேல் புனைந்த
திருப் பருப்பதத்து அற்புதம் யாவையும் தெரிந்தான்.
5
   
1634.
அண்டம் மன் உயிர் ஈன்றவளுடன் முனிவாகித்
தொண்டகம் கெழு சுவாமிதன் மால்வரை துறந்து
மண்டு பாதலத்து ஏகியே ஓர் குகை வழியே
பண்டு தான் வரு வேங்கட கிரியையும் பார்த்தான்.
6
   
1635.
சிலந்தி மாசுணம் மும்மதக் கரிசிவ கோசன்
மலைந்திடும் சிலை வேட்டுவன் கீரனே மடவார்
பலம் தரும் வழி பாட்டினால் பாட்டினால் பரனைக்
கலந்து முத்தி சேர் தென் பெரும் கயிலையும் கண்டான்.
7
   
1636.
கொடிய வெஞ் சினக் காளி இக் குவலய முழுதும்
முடிவு செய்வன் என்று எழுந்த நாள் முளரியான்
                                    முதலோர்
அடைய அஞ்சலும் அவள் செருக்கு அழிவுற வழியாக்
கடவுள் ஆடலால் வென்றது ஓர் வடவனம் கண்டான்.
8
   
1637.
அம்பு ராசி கொள் பிரளயத்தினும் அழிவின்றி
உம்பர் மால் அயற்கு உறை யுளாய்க் கயிலை போல்
                                    ஒன்றாய்
எம்பிரான் தனிமா நிழல் தன்னில் வீற்று இருக்கும்
கம்பை சூழ் தரு காஞ்சி அம் திரு நகர் கண்டான்.
9
   
1638.
ஏலவார் குழல் உமையவள் பூசை கொண்டு இருந்த
மூல காரணம் ஆகிய முதல்வன் ஆலயமும்
மாலும் வேதனும் அமரரும் வழிபடு மற்றை
ஆலயங்களாய் உள்ளவும் கண்டனன் ஐயன்.
10
   
1639.
என்னிகர் எவரும் இல் என்று இருவரும் இகலும் எல்லை
அன்னவர் நடுவு தோன்றி அடி முடி தெரியாது ஆகி
உன்னினர் தங்கட்கு எல்லாம் ஒல்லையின் முத்தி நல்கித்
தன் நிகர் இன்றி நின்ற தழல்பெரும் சயிலம் கண்டான்.
11
   
1640.
மண் உலகு இறைவன் செய்யும் மணம் தனை விலக்கி
                                   எண்தோள்
அண்ணல் ஓர் விருத்தன் போல் வந்து ஆவண ஓலை
                                     காட்டித்
துண் என வழக்கில் வென்று சுந்தரன் தனை
                               ஆட்கொள்ளும்
பெண்ணை அம் புனல் சூழ் வெண்ணெய்ப் பெரும் பதி
                             தனையும் கண்டான்.
12
   
1641.
தூசினால் அம்மை வீசத் தொடையின் மேல் கிடத்தித்
                                     துஞ்சும்
மாசு இலா உயிர்கட்கு எல்லாம் அஞ்சு எழுத்து இயல்பு
                                         கூறி
ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்தக்
காசியின் விழுமிது ஆன முதுகுன்ற வரையும் கண்டான்.
13
   
1642.
விரிகனல் வேள்வி தன்னில் வியன் தலை அரிந்து
                                      வீட்டிப்
பொருவரு தவத்தை ஆற்றும் பதஞ்சலி புலிக்கால்
                                    அண்ணல்
இருவரும் உணர்வால் காண எல்லையில் அருளால் ஈசன்
திரு நட இயற்கை காட்டும் தில்லை மூதூரைக் கண்டான்.
14
   
1643.
தண் தளிர்ச் சோலைத் தில்லைத் தபனிய மன்றில்
                                    என்றும்
தொண்டை அம் கனிவாய் மாது தொழச் சுடராட்
                             புருடன் உள்ளத்
தண்டரும் மதிக்கல் ஆற்றா அற்புதத் தனிக் கூத்து
                                    ஆடல்
கண்டனன் கசிவால் உள்ளம் களிப்புற வணங்கிப்
                                 போனான்.
15
   
1644.
குடமுனி கரத்தில் ஏந்தும் குண்டிகை இருந்து நீங்கிப்
படிதனில் வேறு வேறாய்ப் பற்பல நாமம் தாங்கிக்
கடல் கிளர்ந்தது என்னச் செல்லும் காவிரி என்னும்
                                      ஆற்றின்
வடகரை மண்ணியின் பால் வந்தனன் கருணை வள்ளல்.
16