திருச்செந்திப் படலம்
 
1766.
சுரமது கடந்து நீங்கிச் சோதி வேல் உடைய வள்ளல்
விரிபுனல் சடிலத்து அண்ணல் மேவும் செம்குன்றூர்
                                    நோக்கிப்
பருமணி வயிர முத்தம் பல வளம் பிறவும் ஆழித்
திரையெறி அலைவாய் ஆகும் செந்திமா நகரம் புக்கான்.
1
   
1767.
அறுமுகன் அம் கண் ஏகி அகில கம்மியனை நோக்கி
இறையிலோர் சினகரத்தை இயற்றுதி ஈண்டை என்னத்
திறன் உணர் புனைவர் செம்மல் சிந்தையின் நாடித்
                                      தேவர்
உறை திரு நகரம் வெஃக ஒரு திருக்கோயில் செய்தான்.
2
   
1768.
பொன் உறும் இரதம் நீங்கிப் புறன் எலாம் தானை
                                   நண்ண
அந்நகர் அதன் உள் ஏகி அரும் பெரும் துணைவர்
                                      பூதர்
மன்னவர் அயன் மால் ஆதி வானவர் யாரும் போற்ற
மின்னு பொன் பீடத்து ஐயன் வீற்று இருந்து
                                அருளினானே!.
3
   
1769.
பான் நிமிர் மென் குரல் பாற்படு நல்யாழ்
கானம் இசைத்தனர் கந்தருவத் தோர்
ஆன பல் சட்டுவம் அங்கை தொறும் ஏந்தி
வான் அமிர்தைச் செவி வாக்குறு மாபோல்.
4
   
1770.
சுருதி எலாம் உணர் தூயவன் வானோர்
புரவலன் மா முனி புங்கவர் யாரும்
மரு மலர் மாரி வழுத்தினர் வீசி
இரு புடை தன்னினும் எய்தினர் ஈண்டி.
5
   
1771.
வாலிய தூய் ஒளி வானதி யாவும்
பாலகன் மெய் அணி பார்த்தனர் ஆடி
ஏல் உறு பாங்கரின் ஈண்டிய வாபோல்
காலினர் சாமரை கைக் கொடு அசைத்தார்.
6
   
1772.
ஒண் நிழல் மா மதியோர் இரு வடிவாய்
அண்ணல் முகத்து எழில் ஆர்ந்திட நண்ணி
விண் இடை நின்று என வெம் கனல் வருணன்
தண் நிழல் வெண் குடை தாங்கினர் நின்றார்.
7
   
1773.
கட்டழல் கான்றிடு காமரு நாகம்
எட்டும் அலாதன யாவையும் ஈண்டி
உட்டெளிவால் பணி உற்று என ஆல
வட்டம் அசைத்தனர் வானவர் பல்லோர்.
8
   
1774.
வான் உயர் தோள் விறல் வாகெனும் அண்ணல்
தான் உடை வாள் கொடு சார்ந்து அயல் நிற்ப
ஏனைய தம்பியர் எண்மர் இலக்கர்
ஆனவர் போற்றி அகன் கடை நின்றார்.
9
   
1775.
பொருந்தி இன்னவர் புறத்து உற அம்கண்
இருந்த ஞான முதல் எல்லையில் காலம்
வருந்துகின்ற மகவான் முகம் நோக்கித்
தெரிந்திடாதவரின் இன்னன செப்பும்.
10
   
1776.
துறந்து நீதி அமர் சூர் முதலானோர்
பிறந்தவாறும் அவர் பேணிய நோன்பும்
இறந்த செய்ய வரம் எய்திய வாறும்
சிறந்து பின் அரசு செய்திடு மாறும்.
11
   
1777.
மற்ற வெய்யவர் தம் மாயமும் முற்கொள்
வெற்றியும் வலியும் மேன்மையும் நும்பால்
இற்றை நாள் வரை இயற்றிய துன்பும்
முற்றும் ஒன்று அற மொழிந்திடுக என்றான்.
12
   
1778.
கோக் குமாரன் இவை கூற இசைந்தே
மீக் கொள் பொன் உலக வேந்து அயல் நின்ற
வாக்கின் வல்ல குரவன் தனை அன்பால்
நோக்கி நீ இவை நுவன்று அருள்க என்றான்.
13
   
1779.
வச்சிரம் கொள் கரன் மற்று அது செப்ப
அச்சு எனக் குரவன் அன்னது இசைந்தே
செச்சை மொய்ம்புடைய சேய் இரு பொன்தாள்
உச்சி கொண்டு தொழுது இன்னது உரைப்பான்.
14
   
1780.
அறிதி எப்பொருளும் ஆவிகள் தோறும்
செறிதி எங்கள் துயர் சிந்துதல் முன்னிக்
குறிய சேய் உருவு கொண்டனை யார்க்கும்
இறைவ நின் செயலை யார் உணர் கிற்பார்.
15
   
1781.
எல்லை இல் புவனம் யாவையும் யாண்டும்
ஒல்லு மூவரும் உயிர்த் தொகை யாவும்
தொல்லை மேனி கொடு தோன்றினை யால் நீ
வல்ல மாய இயல் மற்று எவர் தேர்வார்.
16
   
1782.
வெய்யர் தன்மையை வினாவிய தன்மை
ஐய அன்னதை அறிந்திட அன்றே
கையர் ஏந்துயர் களைந்து உளமீதில்
செய்ய இன்பு உதவு சீரர் உளாமால்.
17
   
1783.
ஆகையால் அவுணர் தன்மைகள் எல்லாம்
போகும் எல்லை புகல் கின்றனன் என்னா
வாகை சேர் குமர வள்ளலை நோக்கி
ஓகை யோடு அரசன் ஓதிடு கின்றான்.
18