முகப்பு |
காசிபன் புலம்புறு படலம்
|
|
|
1870.
|
தேன் நீர்மை எனப் புகல்வாள் சிறிதும்
தான் ஈரம் இலாள் தனி மாயவளே மானீர் உமதாம் வயின் உற்றனளோ ஏனீர் மொழியா திரிகின்றதுவே. |
1 |
|
|
|
|
|
|
|
1871.
| சிலை வாண் நுதல் திறன் மாயை எனும் வலை வீசி என் ஆருயிர் வவ்வினள் ஆல் கலையீர் இவண் நீர் அது கண்டன் இரோ நிலையீர் வெருளா நெடிதோடு இரால். |
2 |
|
|
|
|
|
|
|
1872.
| கடி தேர் களிறே கழிகாதலையாய்ப் பிடி தேர் பரிசால் பெயர்வாய் தமியேன் நொடிதே தளரா நெறி நேடினையக் கொடியாள் தனையும் கொணராய் கொணராய். |
3 |
|
|
|
|
|
|
|
1873.
| அருளால் உனையே அளி என்றனர் ஆல் பெரியார் அவர் சொல் பிழை ஆகுவதோ தரியா அரியே தமியேன் உயிரைத் தெரிவான் நினைவோ திரி கின்றனையே. |
4 |
|
|
|
|
|
|
|
1874.
| மேவிப் பிரிவாள் விழிபோல் அடுவாய் ஆவிக்கு உறவோ அலை மன்மதனப் பாவிக்கும் இனிப் படையாய் வருவாய் வாவிக்கு உவளாய் எனை வாட்டுதி யோ. |
5 |
|
|
|
|
|
|
|
1875.
| செம் தாமரை மேல் திருவாம் எனவே வந்தாள் தணியா மயல் செய்து அகல்வாள் அந்தோ வினவா அவளைக் கொணர்வான் சந்தாகிலை என் சந்தே உரையாய். |
6 |
|
|
|
|
|
|
|
1876.
| பொன்னில் பொலி உற்றிடும் பூம் கமலம் தன்னில் துணையோடு தழீஇத் தணவா அன்னப் பெடைகாள் அறனோ புகலிர் என்னைத் தனி வைத்து அவள் ஏகியதே. |
7 |
|
|
|
|
|
|
|
1877.
| தணியா வகை மால் தமியேற்கு அருளித் துணியா அகல்வாள் படர் தொல் நெறியைக் குணியா உரைசெய்குதி என்றிடினும் கணியாய் இதுவோ கணிதன் இயல்பே. |
8 |
|
|
|
|
|
|
|
1878.
| படைவேள் கணையே பரிதிக்கு உறவே மடவார் முகமே மதியின் பகையே விடமே புரையும் விழி மெல் இயல் நின் இடமே வருவாள் ஒளியாது இசையாய். |
9 |
|
|
|
|
|
|
|
1879.
| நின்றீர் மிகவும் நெடியீர் பெரியீர் இன்று ஈரம் இலாது எனை நீங்கினள் முன் சென்றீர் அவள் போம் செயல் காணுதிர் செய் குன்றீர் மொழியீர் குறை செய்து உளனோ. |
10 |
|
|
|
|
|
|
|
1880.
| மயில் ஏர் இயலாள் ஒரு மாயவளே இயலே தறியேன் இவண் நின்றனளோ பயிலே சில நீ பகர்வாய் அதனால் குயிலே எனது ஆர் உயிர் கொள்ளுதியோ. |
11 |
|
|
|
|
|
|
|
1881.
| நின்பால் வரவே நினைவாய் மொழிவாள் என்பால் இலை இவ்வழி ஏகினள் ஆல் மென்பால் என மேவிய மாருதமே என்பால் வருவாய் செயல் கூறுதி நீ. |
12 |
|
|
|
|
|
|
|
1882.
| ஆரத் தடமே அருள் நீரினை உள் ஈரத்தினை என்று எவரும் புகல்வார் சாரில் சுடுவாய் தளரேல் எனவே சோர் உற்றிடும் என் துயர் தீர்க்கிலையே. |
13 |
|
|
|
|
|
|
|
1883.
| களிசேர் மயிலே கவிர் ஆகிய வாய்க் கிளியே குயிலே கிளைதான் அலவோ தளரா வகை நீர் தகவே மொழியா அளியேன் உயிருக்கு அரண் ஆகுதிரால். |
14 |
|
|
|
|
|
|
|
1884.
| அறவே துயர் செய்து அணுகாது இகலித்து உறவே துணிவாள் தொடர்பும் தொடர்போ உறவே இனிநீர் உவள் போம் நெறியைப் புறவே தமியேன் பெறவே புகல்வீர். |
15 |
|
|
|
|
|
|
|
1885.
| எனவே பலவும் இயல் சேர் முனிவன் மனமால் கொடு சொற்றிடம் மற்று அதனை வினவா மகிழா வியன் மெய்ம் மறையா அனமே அனையாள் அவண் உற்றிடலும். |
16 |
|
|
|
|
|
|
|
1886.
|
நோற் குறு முனிவன் தன்பால் நொய்து என மாயை
எய்தித்
தீர்க்கலா மையல் பூட்டிச் செய்தவம் அழித்தாள்
அந்தோ
பார்க்கிலன் இதனை என்னாப் பரிவு செய்து
அகன்றான்
போலக்
கார்க் கடல் வரைப்பின் ஏகிக் கதிரவன் கரந்தான்
அன்றே. |
17 |
|
|
|
|
|
|
|
1887.
|
தந்தை காசிபன் என்று ஓதும் தவமுனி அவன் பால் சார
வந்துளாள் யாயே அன்றோ மற்று இவர் தலைப்
பெய்கின்ற
முந்து உறு புணர்ச்சி காண்டல் முறை கொலோ
புதல்வற்கு என்னாச்
சிந்தை செய்து அகன்றான் போன்று தினகரக் கடவுள்
சென்றான். |
18 |
|
|
|
|
|
|
|
1888.
|
அந்தம் இல் நிருதர் என்னும் அளவை தீர் பானாட்
கங்குல்
வந்திடும் இன்னே என்னா வல்லையின் மதித்து
வானத்து
இந்திரன் ஆணை போற்றும் இலங்கு எழில் நேமிப்
புத்தேள்
சிந்துவில் கரத்தல் போன்று செங்கதிர்ச் செல்வன்
போனான். |
19 |
|
|
|
|
|
|
|
1889.
|
வேலையின் இரவி செல்ல விண்ணவர் யாரும் கொண்ட
வாலிய திருவும் சீரும் வன்மையும் அகல மாயை
பால் உறும் அவுணர்தானைப் பல் குழுப் பரவிற்று என்ன
மாலையும் இருளின் சூழ்வும் வல்லை வந்து இறுத்த
அன்றே. |
20 |
|
|
|
|
|
|
|
1890.
|
மாக மேல் நிமிர்ந்த செக்கர் மாலை அம் பொழுது
நல்கூர்ந்
தீ கெனா இரக்கும் நீரார்க்கு இம்மியின் துணையது
ஏனும்
ஓகையால் வழங்கா நீதி ஒன்னலான் ஒருவன் செல்வம்
போகுமாறு என்ன வாளா பொள் எனப் போயிற்றாம்
ஆல்.
|
21 |
|
|
|
|
|
|
|
1891.
|
இரும் பிறை உருவின் எஃகார் கூர்ங் குயத்தினும்
ஈர்க்கல்லா
வரம் பறும் இருளின் கற்றை கணங்களும் மருளும்
நீரால்
பரம்பியது யாண்டும் ஆகிப் பார் எனப் பட்ட மாது
கரும் படாம் ஒன்று மேற்கோள் காட்சியைப் போன்றது
அன்றே. |
22 |
|
|
|
|
|
|
|
1892.
|
வண் துழாய் மோலி மைந்தன் மால் இருள் கங்குல்
வேழத்து
எண்டரு வதனம் பட்ட இரும் புகர்ப் புள்ளி என்ன
அண்டர் தம் தருக்கள் சிந்தும் அணி மலர் என்ன
வான்தோய்
கொண்டலில் படுமுத்து என்னத் தாரகை குலவிற்று
அன்றே. |
23 |
|
|
|
|
|
|
|
1893.
|
துண் என உலகம் முற்றும் சூழ்ந்த பேர் இருளா
நஞ்சைத்
தெண் நிலவாகி உள்ள செம் கையால் வாரி நுங்கி
விண்ணவர் புகழ நீல வியன் நிறம் தன் பால் காட்டும்
கண் நுதல் போன்று முந் நீர்த் தோன்றினன் கதிர்
வெண் திங்கள். |
24 |
|
|
|
|
|
|
|
1894.
|
அழுந்து உறு பாலின்வேலை அமர்கள் கடைந்த
காலைச்
செழுந்துளி மணிகளோடும் தெறித்து என உடுக்கள்
தோன்றக்
கழுந்து உறும் அவுணர் என்னும் கார் இருள் தொலைய
அம்கண்
எழுந்தது ஓர் அமுதம் போன்றும் இலங்கினன் இந்து
என்பான். |
25 |
|
|
|
|
|
|
|
1895.
|
இரவு எனும் வல்லோன் ஞாலம் என்பது ஓர் உலையில்
வேலைக்
கரி உறு வடவைத் தீயில் களம் கொடு வெண் பொன்
சேர்த்தி
விரைவொடு செம்மை செய்து மீட்டும் ஓர் மருந்தால்
தொல்லை
உருவு செய்து என்னச் செம்கேழ் ஒளி மதி வெளியன்
ஆனான். |
26 |
|
|
|
|
|
|
|
1896.
|
அண்டரும் ககனம் என்னும் அகல் இரும் தடத்தில்
பூத்த
விண்டது ஓர் குவளை ஆம்பல் போலும் ஆல் மீன்கள்
வெள்ளைப்
புண்டரீகத்தைப் போலும் புது மதி அதன் கண் ஏனார்
வண்டு இனம் ஒப்பது அன்றே மாசு தோய் களங்க
மாதோ. |
27 |
|
|
|
|
|
|
|
1897.
|
அலைதரு நேமி என்னும் ஆன்றது ஓர் தடத்தின்
பாலாம்
நிலவு எனும் வலையை ஓச்சி நிழல் மதிப் பரதன்
ஈர்த்துப்
பல நிறம் கொண்ட மீன்கள் பன் முறை கவர்ந்து
வான்மேல்
புலர் உற விரித்ததே போல் பொலிந்தன உடுவின்
பொம்மல். |
28 |
|
|
|
|
|
|
|
1898.
|
கழி தரும் உவரி நீத்தம் கையகப்படுத்து மாந்தி
எழிலிகள் வான மீப் போய் இரு நிலத்து உதவல்
காணூஉப்
பழிதவிர் மதியப் புத்தேள் பால் கடல் பருகி யாண்டும்
பொழிதரும் அமிர்தம் என்னப் புது நிலாப் பூத்தது
அன்றே. |
29 |
|
|
|
|
|
|
|
1899.
|
மலர்ந்திடும் கடவுள் திங்கள் வாண் நிலாக் கற்றை
எங்கும்
கலந்தன உலகில் யாரும் களித்தனர் குமுதம் ஆதி
அலர்ந்தன தளிர்த்த சோலை அம்புயப் போது செவ்வி
புலர்ந்தன ஒடுங்குகின்ற புகைந்தன பிரிந்தோர் புந்தி. |
30 |
|
|
|
|
|
|
|
1900.
|
அல்லவை புரியார் ஏனும் அறிவினில் பெரியார் ஏனும்
எல்லவர் தமக்கு நண்பாய் இனியவே புரிதற் பாற்றோ
பல் உயிர்த் தொகைக்கும் இன்பம் பயந்திடும் மதி
கண்டு அன்றோ
புல்லிய கமலம் எல்லாம் பொலிவு அழிந்திட்ட அன்றே. |
31 |
|
|
|
|
|
|
|
1901.
|
திங்களின் மலர்ந்த செவ்வித் தேன் முரல் குமுதம் எம்
கோன்
பங்கம் உற்றார் கண் மேவான் பதுமம் ஏன் ஒடுங்கிற்று
என்னாத்
தங்களில் உரைத்தல் போலாம் சசிக்கு அது உண்மை
எம்பால்
இங்கு இலை என்ப போன்ற இசை அளி பொதிந்த
கஞ்சம். |
32 |
|
|
|
|
|
|
|
1902.
|
கங்குல் வந்து இறுத்த காலைக் கடிமனைக் கதவம்
பூட்டிச்
செங்கண் மால் தன்னைப் புல்லித் திருமகள் இருந்தாள்
என்னக்
கொங்கு அவிழ் கின்ற செங்கேழ்க் கோகன தங்கள்
எல்லாம்
பொங்கு இசை மணி வண்டோடும் பொதிந்தன
பொய்கை எங்கும். |
33 |
|
|
|
|
|
|
|
1903.
|
ஆனதோர் காலையில் அமரர் தம்மையும்
தானவர் தம்மையும் தந்த காசிபன் வானகம் எழுதரும் மதியின் தெண்ணிலா மேனியது அடைதலும் வெதும்பினான் அரோ. |
34 |
|
|
|
|
|
|
|
1904.
| குலைந்தனன் தன் உளம் குறைந்த வன்மையன் அலந்தனன் உயிர்த்தனன் அறிவு சோர்ந்தனன் புலர்ந்தனன் ஒடுங்கினன் புலம்பி அம் கண்வான் நிலந்தனில் எழுதரு நிலவை நோக்கினான். |
35 |
|
|
|
|
|
|
|
1905.
| காலையில் எழுந்த செம் கதிரின் நாயகன் மாலை அம் பொழுதினில் மறைந்து கீழ்த்திசை வேலையில் விரைவுடன் மீண்டும் வந்துளான் போலும் அந்தோ இது புதுமையோ என்பான். |
36 |
|
|
|
|
|
|
|
1906.
| ஞாயிறும் அன்று எனில் நடுவண் ஆகியே பாய் இரும் புணரி உள் பயின்று தோன்றலால் ஏய் என உலகட எண்ணி யாண்டு உறும் தீ எனும் கடவுளே திங்கள் அன்று என்பான். |
37 |
|
|
|
|
|
|
|
1907.
| இந்து என்று உலகு எலாம் இசைப்ப நின்றது ஓர் செம் தழல் கடவுள் இத்திசையில் செல்வுழி வந்தது ஓர் சோதி கொல் வானம் எங்கணும் அந்தி அம் செக்கர் என்று அடைந்தவாறு என்பான். |
38 |
|
|
|
|
|
|
|
1908.
| காண் தகு மதிஎனக் கழறும் செம்தழல் மூண்டிடும் புகை கொலோ முன்னம் வானமும் ஈண்டு உறு தரணியும் திசையும் எங்கும் ஆய் நீண்டது ஓர் இருள் என நிமிர்ந்தவாறு என்பான். |
39 |
|
|
|
|
|
|
|
1909.
| தெண் திரைப் பிறந்திடும் திங்கள் செம்தழல் கொண்டது வாலிதாம் கோலம் கார் இடைக் கண்டனன் இத்திறம் கரைகள் ஆவிகள் உண்டதில் பெற்றது இவ் உருவமே என்பான். |
40 |
|
|
|
|
|
|
|
1910.
| ஊனம் இல் செக்கராய் உதித்துப் பின்னரே வான் நிறன் ஆகிய மதியத் தீத்தரத் தானிறை புலிங்கமே அலது தாரகை மீன் எனப் படுவது வேறு உண்டோ என்பான். |
41 |
|
|
|
|
|
|
|
1911.
| மால் கடல் அதன் இடை வந்த பான்மையால் ஆலம் இது ஆகும் ஆல் அமரர்க்கு அன்று எழு நீல மெய் உருவினை நீத்துத் திங்களின் கோலமொடு இன்றி இவட்கு குறுகிற்றோ என்பான். |
42 |
|
|
|
|
|
|
|
1912.
| இங்கு இவை யாவும் மன்றேர் கொள் வேலையில் வெம் கனல் முழுவதும் விடமும் ஆர்ந்தெழீஇ மங்குலில் சிதறிட வானில் புக்கனன் திங்களேயாம் இது திண்ணம் என்கின்றான். |
43 |
|
|
|
|
|
|
|
1913.
| இனையன மருட்கையால் இசைத்த காசிப முனிவரன் என்பவன் முன்னை மாயையை நினைபவன் ஆகியே நெடிது காதலால் அனையவள் தனை விளித்து அரற்றல் மேயினான். |
44 |
|
|
|
|
|
|
|
1914.
|
கொங்கு உண் கோதைத் தாழ்குழல் நல்லீர்
கொடியேன் முன்
எங்கும் எங்கும் காணுறு கின்றீர் எழின் மின்னின்
பொங்கும் சோதி போல் எதிர் புல்லும் படி நில்லீர்
மங்கும் போதோ சேருதிர் நெஞ்சம் வலியீரே. |
45 |
|
|
|
|
|
|
|
1915.
| முன்னம் செய்தீர் காதலை நோன்பை முதலோடும் பின்னம் செய்தீர் மாரனை ஏவிப் பிழை செய்தீர் சின்னம் செய்தீர் நல் உணர்வு எல்லாம் சிறியேனுக் கின்னம் செய்யும் பெற்றியும் உண்டேல் இசையீரே. |
46 |
|
|
|
|
|
|
|
1916.
| வாகாய் நின்ற குன்றமும் யாவும் வருவித்தீர் ஏகா நின்றீர் இவ்விடை தன்னில் ஏனை நீங்கிப் போகா நின்றீர் வல்லையின் மீண்டும் புவி எங்கும் ஆகா நின்றீர் நும் செயல் யாரே அறிகிற்பார். |
47 |
|
|
|
|
|
|
|
1917.
|
பற்றே நும்பால் ஆயினன் முன்னம் பயில் செய்கை
அற்றேன் வேளால் ஆற்றவும் நொந்தேன் அஃதாயும் உற்றேன் அல்லேன் உம்மொடும் இன்னும் உழல்கின்றேன் பெற்றேன் வாளா மாய்ந்தனன் என்னும் பிழை ஒன்றே. |
48 |
|
|
|
|
|
|
|
1918.
| நேயம் கொண்டீராம் என வந்தீர் நெறிநில்லா மாயம் கொண்டீர் வன் திறல் கொண்டீர் மயல் செய்யும் காயம் கொண்டீர் ஆர் உயிர் நிற்கக் கருதீர் ஏல் ஆயம் கொண்டீர் கூற்றொடு போலும் தனிவந்தீர். |
49 |
|
|
|
|
|
|
|
1919.
|
வேண்டேன் வேறு ஓர் மாதரை நும்பால் வியன் மோகம்
பூண்டேன் உம்மை மாயவர் என்னும் பொருள் கண்டேன் ஈண்டே சென்றீர் போல் கர உற்றீர் எய்தீர் ஏல் மாண்டேன் இன்னே ஆருயிர் நிற்பான் வருவீரே. |
50 |
|
|
|
|
|
|
|
1920.
| ஒன்றே ஆகும் மாயம் அதால் நீர் உலகு எல்லாம் வென்றே செல்வீர் என் உயிர் கொள்வான் விழைவீரேல் நன்றே நன்றே நல்குவன் யானே நனி நண்பால் சென்றே ஓர் கால் மா மயல் தீரச் சேர்வீரே. |
51 |
|
|
|
|
|
|
|
1921.
| என்னா வென்னா இத்தகை பன்னி இடர் ஆழித் துன்னா மாழ்கிச் சோர்தரும் எல்லைத் துகடீரும் மின்னாகின்ற மாயவள் அன்னான் விழிகாண முன்னாய் நின்றாள் எவ் வினை கட்கு முதல் ஆனாள். |
52 |
|
|
|
|
|
|