முகப்பு |
அசுரர் தோற்று படலம்
|
|
|
1922.
|
கந்தார் மொய்ம்பில் காசிபன் என்போன் கடிது அம்கண்
வந்தாள் செய்கை காணுதலோடு மகிழ்வு எய்தி அந்தா உய்ந்தேன் யான் என மின்கண்டு அலர்கின்ற கொந்தார் கண்டல் போல் நகையொடும் குலவு உற்றான். |
1 |
|
|
|
|
|
|
|
1923.
| ஆடா நின்றான் குப்புறல் உற்றான் அவள் தன்மேல் பாடா நின்றான் யாக்கைப் பொடிப்பில் படர் போர்வை மூடா நின்றான் அன்னதொர் மாயை முன் சென்றான் வீடா நின்ற தன் உயிர் காக்கும் விதி கொண்டான். |
2 |
|
|
|
|
|
|
|
1924.
|
என்னே செய வேண்டிற்று அவை எல்லாம் இசைவாலே
முன்னே புரிகிற்பேன் இவண் முனி கின்றதை ஒருவி
நன் நேயமொடு எனை ஆளுதிர் நனி வல்லையில்
என்னாப்
பொன் நேர் அடி மிசை தாழ்தலும் அவள் இன்னது
புகல்வாள்.
|
3 |
|
|
|
|
|
|
|
1925.
|
வெரு உற்றிடல் இவண் நின்ற என் வியன் மெய்யினுக்கு
இயையும்
திருமிக்கு உறு தகவு ஆகிய திறன் மேனியும் மேல்
கொள்
உரு ஒப்பதொர் வடிவும் உடன் உடனெய்திடு வாயேல்
மரு உற்றிடு கின்றேன் என மயில் சொற்றனள் அன்றே. |
4 |
|
|
|
|
|
|
|
1926.
|
ஏம் உற்றிடு முனிவர்க்கு இறை இது கேட்டலும் முன்னம்
காமக்கடல் படிகின்றவன் களிசேர் தரும் உவகை நாமக் கடல் இடை ஆழ்ந்தனன் நன்றால் இஃது என்றான் சேமத் திரு நிதி பெற்றிடும் இரவோன் எனத் திகழ்வான். |
5 |
|
|
|
|
|
|
|
1927.
|
அற்றே மொழி தரு தன்மையில் ஆர்வத்தொடு தமியேன்
குற்றேவல் செய்கிற்பேன் இளம் கொடியோர் இடை
என்னாச்
சொற்றே தவ முயல் வன்மையில் துகடீர் தரும் அனிலப்
பொற்றேர் அவர்க்கு இலது என்பதொர் புத்தேள் உருக்
கொண்டான். |
6 |
|
|
|
|
|
|
|
1928.
|
அன்றாதய தொரு உரு எய்திய அறிவன் தனை வியவா
நன்றால் உனது இயல்பாம் என நகையாக் கரம் பற்றாக்
குன்று ஆகிய முலையாள் அவற் கொடு போந்தனள்
அங்கண்
பொன் தாழ் கிரி என ஓங்கும் ஓர் பொலன் மண்டபம்
புகுந்தான். |
7 |
|
|
|
|
|
|
|
1929.
|
கற்பனை இன்றியே கடிதின் முன் உறும்
அற்புத மண்டபத்து ஆணையால் வரும் பொற்புறு சேக்கையில் பொருந்தினார் அரோ எற்படு கங்குலின் முதல் யாமத்தில். |
8 |
|
|
|
|
|
|
|
1930.
| சூர் உறு வெம் பசி தொலைப்ப வைகலும் ஆரஞர் எய்தினோன் அரிதின் வந்திடு பேர் அமுது உண்குறு பெற்றி போல அக் காரிகை தனை முனி கடிதில் புல்லினான். |
9 |
|
|
|
|
|
|
|
1931.
| புல்லலும் எதிர் தழீஇப் புகரில் காசிபன் தொல்லையில் உணர்வொடு தொலைவில் செய்தவம் வல்லை இல் வாங்குறு மரபில் அன்னவன் மெல் இதழ் அமிர் தினை மிசைதல் மேயினாள். |
10 |
|
|
|
|
|
|
|
1932.
| பின் உற மாயவள் பெரிதும் காமுறும் அன்னவன் புணர்தர அறிவது ஒன்றையும் தொல் நெறி அளித் தெனத் தொண்டை சே இதழ் முன் உறும் அமிர்தினை முனிக்கு நல்கினாள். |
11 |
|
|
|
|
|
|
|
1933.
| உள் தெளிவு இன்றியே உலப்பின்று ஓடிய மட்டறு காமம் ஆம் வாரி உற்றுளான் அட்டு ஒளிர் பொன் அனாள் அல்குலாம் சுழிப் பட்டனன் இன்பமாம் பரவை நண்ணுவான். |
12 |
|
|
|
|
|
|
|
1934.
| தோமறு முனிவரன் சுரதத்து ஆற்றினால் காமரு மதன நூல் கருத்தில் சிந்தியாத் தே மொழி மயிலொடு செறிந்து போகம் ஆர் பூமியினோர் எனப் புணர்தல் மேயினான். |
13 |
|
|
|
|
|
|
|
1935.
| செம் மயில் அன்ன இத் தெரிவை தன் இடை எம்மையும் இல்லதோர் இன்பம் இங்ஙனம் மெய்ம்மையின் நல்கிய விதியினார்க்கு யான் அம்ம செய்கின்றதோர் அளவு உண்டோ என்றான். |
14 |
|
|
|
|
|
|
|
1936.
|
ஆறறி முனிவரன் அநங்க நூல் முறை
வீறொடு புணர்தலும் வெய்ய மாயவள் கீறினள் நகத்தினால் கீண்ட பால் தொறும் ஊறிய காம நீர் ஓழுகிற்று என்பவே. |
15 |
|
|
|
|
|
|
|
1937.
| உணர்வு உடை முனிவரன் உயர்ந்த விஞ்சையர் மண முறை இது என மாயை தன்னொடு புணர் தொழில் புரிந்தனன் போக முற்றினான் துணை அறும் இன்பு எனும் கடலில் தோய்ந்துளான். |
16 |
|
|
|
|
|
|
|
1938.
|
அந்த வேலையில் முகுந்தனும் அம்புயத் தவனும்
இந்திராதியர் யாவரும் முனிவரர் எவரும் தம் தம் உள்ளம் மேல் நடுக்குற மாயவள் தன்பால் வந்து தோன்றினன் சூரபன்மா எனும் வலியோன். |
17 |
|
|
|
|
|
|
|
1939.
| துயக்கம் இல்லதோர் சூரன் வந்திடுதலும் தொல்லை முயக்க வேலையில் இருவர் பால் முறை முறை இழிந்த வியர்ப்பில் வந்தனர் முப்பதினாயிர வெள்ளம் வயக்கடும் திறல் தானவர் யாரினும் வலியோர். |
18 |
|
|
|
|
|
|
|
1940.
| அன்னர் தம்மையும் முதலவன் தன்னையும் அம்கண் நின்மினீர் என நிறுவியே ஆயிடை நீங்கி மின்னு நூலணி முனியொடு மாயவள் வேறோர் பொன்னின் மாமணி மண்டபம் அதனிடைப் புகுந்தாள். |
19 |
|
|
|
|
|
|
|
1941.
| மானை நேர்பவள் ஆயிடைத் தொல் உரு மாற்றி மேன சூர் அரிப்பிணா உருக் கொள்ளலும் விரைவில் தானும் ஓர் திறல் மடங்கலே ஏறாம் எனச் சமைந்தான் மோனமாய் முனம் அருந்தவம் இயற்றிய முதல்வன். |
20 |
|
|
|
|
|
|
|
1942.
| மங்கையோடு அவன் மடங்கலாய் மகிழ்வுடன் புணரக் கங்குல் வாய் இரண்டாகிய யாமமேல் கடிதே அங்கை ஓர் இரண்டாயிரம் ஆயிர முகமாய்ச் சிங்க மாமுகன் தோன்றினன் திடுக்கிடத் திசைகள். |
21 |
|
|
|
|
|
|
|
1943.
| இத்திறத்து இவர் இருவரும் புணர்வுழி யாக்கை மெத்தி வீழ்தரும் வியர்ப்பினில் விறல் அரி முகராய்ப் பத்து நால்வகை ஆயிர வெள்ளம் ஆம் படைஞர் கொத்தினோடு வந்து உதித்தனர் கூற்று உயிர் குடிப்பார். |
22 |
|
|
|
|
|
|
|
1944.
|
மற்றும் அத்தொகை யோரையும் மாமகன் தனையும்
நிற்றிர் ஈண்டு என மாயவள் வீற்று ஒரு நிலயம்
தெற்று எனப் புகுந்து ஓர் பிடி உருக்கொடு சேரக்
கொற்ற மால் களிற்று உருவினை முனிவனும்
கொண்டான். |
23 |
|
|
|
|
|
|
|
1945.
| பேரு மும்மத மால் களிற்று உருக்கொடு பிடிமேல் சேரு கின்று உழி மூன்று எனச் செல்லும் யாமத்தில் ஈர் இரண்டு வாள் எயிற்றுடன் யானை மா முகத்துத் தாரகா சுரன் தோன்றினன் அவுணர்கள் தழைப்ப. |
24 |
|
|
|
|
|
|
|
1946.
| ஏலும் அங்கு அவர் மெய்ப்படு வியர்ப்பினும் இபத்தின் கோலம் ஆனவர் தோன்றினர் அவர் குழுக் குணிக்கின் நாலு பத்தின் மேல் ஆயிர வெள்ளமா நவின்றார் மூல நாடியே இப் பரிசு உணர்த்திய முனிவர். |
25 |
|
|
|
|
|
|
|
1947.
|
ஆண்டு தாரகன் தன்னையும் அவுணர்கள் தமையும்
ஈண்டு நிற்றிர் என்று ஓர் மணி மண்டபத்து இறுத்து
மாண்ட யாமமேல் தகர்ப்பிணா உருக்கொள மாயை
பூண்ட அன்பினான் செச்சையின் உருக்கொடு
புணர்ந்தான். |
26 |
|
|
|
|
|
|
|
1948.
|
புணர்ந்த காலையில் அசமுகி தோன்றினள் புவியோர்க்குக்
அணங்கு செய் தகர் முகவராய் அங்கு அவர் வியர்ப்பில் கணம் கொள் முப்பதினாயிர வெள்ளமாம் கணிதத்து இணங்கு தானவர் உதித்தனர் இமையவர் கலங்க. |
27 |
|
|
|
|
|
|
|
1949.
| மீள மற்றவர் தம்மையும் நிறுவி வேறு உள்ள சூளி கைப்பெரு மண்டபம் தொறும் தொறும் ஏகி யாளி வல்லியம் புரவி மான் ஒரி எண் கேனம் கூளி ஆதியாம் விலங்கினது உரு எலாம் கொண்டார். |
28 |
|
|
|
|
|
|
|
1950.
| இறுதி இல்லதோர் விலங்கினது உருவு கொண்டு இரவின் புறம் அது ஆகிய புலரி சேர் வைகறைப் பொழுதின் முறையின் மாயையும் முனிவனும் ஆகியே முயங்கி அறுபது ஆயிர வெள்ளமாம் அவுணரை அளித்தார். |
29 |
|
|
|
|
|
|
|
1951.
| மிகுதி கொண்டிடும் இரண்டு நூறு ஆயிர வெள்ளம் தகுவர் தம்மையும் சூரனே முதலினோர் தமையும் புகலும் ஓர் இராப் பொழுதினில் அளித்தது அற்புதமோ அகிலமும் வல மாயவட்கு இச்செயல் அரிதோ. |
30 |
|
|
|
|
|
|
|
1953.
|
அல் எனும் பொழுது இறத்தலும் மாயவள் அரிவைத்
தொல்லை நல் உருக் கோடலும் முனியும் அத்துணையே வல்லை தன் உரு முன்னையில் கொண்டனன் மற்று அவ் வெல்லை தன்னிடை உதயவாய் அணுகினான் இரவி. |
32 |
|
|
|
|
|
|
|
1953.
|
அல் எனும் பொழுது இறத்தலும் மாயவள் அரிவைத்
தொல்லை நல் உருக் கோடலும் முனியும் அத்துணையே வல்லை தன் உரு முன்னையில் கொண்டனன் மற்று அவ் வெல்லை தன்னிடை உதயவாய் அணுகினான் இரவி. |
32 |
|
|
|
|
|
|
|
1954.
|
நிட்டைக்கு ஏற்றிடும் முனிவனை மாயவள் நிசியில்
விட்டுப் போந்திலள் அற்புதம் என் விளைந்ததுவோ கிட்டிக் காண்பன் என்று உதயமாம் கிரிப் புறத்து அணுகி எட்டிப் பார்த்தனன் என்னவே உதித்தனன் இரவி. |
33 |
|
|
|
|
|
|
|
1955.
|
எல்லை வந்திடுதலும் ஈன்ற மாயவள்
செல் உறும் அப்புவி செறிந்து சேணினும் சொல்லிய திசையினும் துவன்றி ஆர்த்திடும் ஒல் எனும் சனத்தினை உவந்து நோக்கினாள். |
34 |
|
|
|
|
|
|
|
1956.
| விண் உறு தானவர் வெள்ளம் யாவையும் கண்டனன் எந்தை தன் கருமம் இச்செயல் கொண்டிலம் மாயையில் கூடிற்று ஈதெனா அண்டரும் அற்புதம் அடை குற்றான் முனி. |
35 |
|
|
|
|
|
|
|
1957.
| பற்பகல் அரும் தவம் பயின்ற தூயனும் பொற்புறு மாயையும் புதல்வர் தம் தொகை அற்புத மோடு கண்டு அன்பின் நீர ராய் நிற்புழித் தெரிந்தனன் நேரில் சூரனே. |
36 |
|
|
|
|
|
|
|
1958.
|
இருமுது குரவரும் ஈண்டு உற்றார் அவர்
திருவடி வணங்கி யாம் செய் திறத்தினை மரபொடு வினவுதும் வம்மின் நீர் எனா அரிமுகன் தாரகன் அறியக் கூறினான். |
37 |
|
|
|
|
|
|
|
1959.
| அறை கழல் இளையவர் அதனைத் தேர் உறீஇ உறுதி இதாம் என உரைத்துப் பின் வரத்து உறுமல் கொண்டு இருந்ததன் தொல் பதாதியை நிறுவினன் அவ்விடை நின்று நீங்கினான். |
38 |
|
|
|
|
|
|