மார்க்கண்டேயப் படலம்
 
1985.
நச்சகம் அமிர்தம் அன்ன நங்கையர் நாட்ட வைவேல்
தைச்சக மயக்கல் செய்யாது அடுப்பரும் தவத்தின்
                                    மிக்கான்
இச்சகம் புகழுகின்ற இருபிறப் பாளர் கோமான்
குச்சகன் என்னும் பேரோன் கொடி மதில் கடகம்
                                  வாழ்வோன்.
1
   
1986.
அவற்கு ஒரு புதல்வன் உண்டால் அருமறை பயின்ற
                                    நாவான்
கவுச்சிகன் என்னும் பேரோன் கரை ஒரு சிறிதும்
                                   காணாப்
பவக் கடல் கடக்கும் ஆற்றால் பராபர முதல்வன்
                                  போற்றித்
தவத்தினை இழைப்ப ஆங்கோர் தண் புனல் தடாகம்
                                   சார்ந்தான்.
2
   
1987.
அத்தலை ஒரு சார் எய்தி ஆன் இனம் தீண்டு குற்றி
ஒத்தென அசைதல் இன்றி உயிர்ப் பொரீஇ உலகம்
                                   எல்லாம்
பித்தென உன்னி மாயாப் பேர் இன்ப அளக்கர் மூழ்கி
நித்தன்ஐ எழுத்தும் அன்னான் நிலைமையும் நினைந்து
                                    நோற்றான்.
3
   
1988.
ஒவிய மவுனம் உற்று ஆங்கு உணவொடும் உறக்கம்
                                     நீங்கித்
தா வற நோற்கும் வேலைத் தட மரை கடமை ஆதி
மேவிய விலங்கு தத்தம் மெய்ய கண்டு ஊயம் யாவும்
போவது கருதி அன்னான் புரத்து இடை உரைத்துப்
                                   போமோல்.
4
   
1989.
இப்பரிசு இயன்ற போழ்தும் யாவதும் உணரான் ஆகி
ஒப்பற நோற்கும் வேலை ஒல்லையில் அதனை நாடி
முப்புரம் சிதைய மேனாள் முனிந்தவன் அருளிது
                                    என்னாத்
செப்பினன் இமையோர் சூழ சேண் இடைத் திருமால்
                                   சேர்ந்தான்.
5
   
1990.
அற்புதம் எய்தி மைந்தன் அருந்தவம் புகழ்ந்து முன்
                                     போய்
எற்படும் அவன் தன் மேனி எழின் மலர்க் கரத்தால்
                                       நீவி
வெற்பன முனிவ நின்பேர் மிருககண்டு ஊயன் என்னாச்
சொல் பயில் நாமம் சாத்த எழுந்து கை தொழுது
                                      நின்றான்.
6
   
1991.
தொழுது எழு முனியை நோக்கித் தூமதிச்
                          சென்னியோன் தன்
முழுது உறு கருணை நின்பால் முற்று உக முன்னம்
                                    செய்த
பழுது அவை நீங்க என்னாப் பரிவு செய்து அருளி
                                  வானோர்
குழுவுடன் உவண ஊர்தி கொம் என மறைந்து
                                 போனான்.
7
   
1992.
போனபின் முனிவர் மேலோன் புரம் எரிபடுத்த முக்கண்
வானவன் அருளினாலே வல் விரைந்து ஏகித் தாதை
ஆனவன் முன்னர் எய்தி அடி முறை வணங்க
                                     அன்னான்
தான் உளம் மகிழ்ந்து கண்டு ஆங்கு எடுத்தனன்
                            தழுவிக் கொண்டான்.
8
   
1993.
தவத்து இடை உற்ற தன்மை மொழிக எனத் தனயன்
                                     தானும்
உவப்புறு தாதை கேட்ப உள்ளவாறு உரைத்த லோடும்
நிவப்புறும் உவகை மிக்கு நின் குலத்தவர்க்குள்
                                    நின்போல்
எவர்க்கு உளது இனைய நோன்மை யாது நிற்கு அரியது
                                        ஒன்றே.
9
   
1994.
பார் உளார் விசும்பின் பாலார் பயன் நுகர் துறக்கம்
                                    என்னும்
ஊர் உளார் அல்லா ஏனை உலகுறு முனிவர் தம்மில்
ஆர் உளார் நின்னை ஒப்பார் ஐய நீ புரிந்த நோன்மை
கார் உளார் கண்டத்து எந்தை அன்றி மற்று எவரே
                                     காண்பார்.
10
   
1995.
எனப் பல புகழ்தலோடும் இவன் வழி மரபு தன்னில்
மனப்படும் ஒருசேய் பின்னாள் மறலியைக் கடக்கும்
                                    கூற்றால்
வினைப்பகை இயல்பு நீக்கும் விமலனது அருளால்
                                  வேறு ஓர்
நினைப்பது வரலும் தாதை நெடுமகற்கு உரைக்கல்
                                   உற்றான்.
11
   
1996.
கிளத்துவது உனக்கு ஒன்று உண்டால் கேண்மதி ஐய
                                    மேனாள்
அளப்பரும் மறைகள் ஆதி அறைந்தன யாவரேனும்
தளத்தகு பரிசும் அன்றால் சால்புடை அந்தணாளர்
கொளப்படு கடனே ஆகும் நாற்பெரும் கூற்றுது அன்றே.
12
   
1997.
உனற்கு அரும் பிரமம் தன்னில் ஒழுகல் இல்லறத்தில்
                                      நிற்றல்
வனத்து இடைச் சேறல் பின்னர் மா தவத்து உறவில்
                                    வாழ்தல்
எனப்படும் அவற்றின் ஆதி இயற்றினை இன்று காறும்
நினக்கு அது புகல்வது என்னோ நீ அவை அறிதி
                                     அன்றே.
13
   
1998.
பின்னவை இரண்டும் பின்னர்ப் பேணுதல் பேச ஒண்ணா
முன்னதும் இயற்றல் ஆலே முற்றியது இடையின் வைத்துச்
சொன்னது ஓர் கடன் இஞ்ஞான்று தொடங்கிய வேண்டும்
                                        தூயோய்
அன்னதன் நிலைமை தன்னை ஆற்றினை கோடி என்றான்.
14
   
1999.
முனிவரன் இதனை ஆம் கண் மொழிதலும் இதனைக்
                                      கேளா
இனியது ஓர் உறுதி சொற்றார் எந்தையார் எனக்கு
                               ஈண்டு என்னா
மனம் உற முறுவல் செய்து மதலையாம் ஒருவற்கு ஈது
வினையறு தவத்தின் நீரும் விளம்புதல் மரபோ என்றான்.
15
   
2000.
பேதைப் படுக்கும் பிறவிக் கடல் நீந்தும்
ஓதித் திறத்தை உணர்ந்து உடையோன் ஆதலினால்
காதல் புதல்வன் கவுச்சிகன் என்போன் தனது
தாதைக்கு இனைய பரிசுதனைச் சாற்றுகின்றான்.
16
   
2001.
முன் அருள் பாசம் முயக்கு அறுக்க வேண்டிய நான்
பின்னும் ஒரு பாசம் பிணிக்கப் பருவேனேல்
தன் நிகர் இல் ஈசன் தனை எவ்வாறு எய்துவன் யான்
இன்னல் எனும் ஆழி இடைப் பட்டு உலைவேனே.
17
   
2002.
மொய்யானது இல்லா முடவன் ஒருவன் தனது
கையானவை இரண்டும் கந்தாத் தவழ் தருவான்
ஐயா அதற்கும் அரும் பிணி ஒன்று எய்தியக் கால்
உய்யானே யானும் உவன் போல் தளர்வேனோ.
18
   
2003.
மொய் உற்றிடவே முயலும் தவத்தினது அன்றிப்
பொய் உற்ற இல் ஒழுக்கம் பூண்டு வினைப் போக்குவது
மெய் உற்றிடு துகளை மிக்க புனல் இருக்கச்
செய்யற் சின்னீரிடத்துத் தீர்க்கும் செயல் அன்றோ.
19
   
2004.
மண் உலகில் உள்ள வரம்பு இல் பெரும் பவத்தைப்
பெண் உருவமாகப் பிரமன் படைத்தனன் ஆல்
அண்ணல் அஃது உணர்தி அன்னவரைச் சிந்தை தனில்
எண்ண வரும் பாவம் எழுமையினும் நீங்குவதோ.
20
   
2005.
ஆதரவு கொண்டே அலமந்த ஐம்புலமாம்
பூத வகை யீர்க்கப் புலம்பு உற்ற புன்மையினேன்
மாதர் எனும் கணமும் வந்து என்னைப் பற்றியக் கால்
ஏது செய்கேன் அந்தோ எனக்கோ இது வருமே.
21
   
2006.
பல் நாளும் பாரில் பருவரலின் மூழ்கு விக்கும்
பின் நாள் நிரயப் பெரும் பிலத்தின் ஊடு உய்க்கும்
எந் நாளில் ஆண் தகையோர்க்கு இன்பம் பயந்திடுமோ
மின்னார்கள் தம்மை விழை வுற்ற வேட்கை அதே.
22
   
2007.
துன்பம் நுகரும் வினையின் தொடர்ச்சியின் ஓர்
இன்பம் நுகர்வார் போல் ஏந்திழையார் கண் பட்டார்
தன் பல் மிக நடுங்க ஞாளி தசை இல்லா
என்பு கறித்திட்டால் இரும் சுவையும் பெற்றிடுமோ.
23
   
2008.
அஞ்சன வை வேல்கண் அரிவையர் தம் பேராசை
நெஞ்சு புகின் ஒருவர் நீங்கும் நிலைமைத்தோ
எஞ்சல் புரியாது உயிரை எந் நாளும் ஈர்ந்திடும் ஆல்
நஞ்சம் இனிது அம்ம ஓர் நாளும் நலியாதே.
24
   
2009.
கள் உற்ற கூந்தல் கனம் குழை நல்லார் கருத்தில்
கொள்ளப் படும் எண் குணிக்கும் தகைமை அதோ
தள்ளற்கு அரிதாகித் தம்மொடு பல் நாள் பழகி
உள் உற்ற தேவும் உணர்தற்கு அரிதன்றோ.
25
   
2010.
ஓதலும் ஒன்றா உளம் ஒன்றாச் செய்கை ஒன்றாப்
பேதை நிலைமை பிடித்துப் பெரும் பவம் செய்
மாதர் வலைப் பட்டு மயக்கு உற்றார் அல்லரோ
சாதல் பிறப்பில் தடுமாறு கின்றாரே.
26
   
2011.
ஆனால் உலகில் அரும் கற்பினை உடைய
மானார் இலரோ எனவே வகுப்பீரேல்
கோன் ஆன தங்கள் கொழுநன் இயல் வழுவாத்
தேனார் மொழியாரும் உண்டு சிலர் தாமே.
27
   
2012.
உற்ற உலவை இடை ஓர் புலிங்கம் ஊட்டியக்கால்
கற்றை விடு சுடர் மீக் கான்று கனல் மிக்குப்
பற்றுதல் செல்லாத பலவினும் போய்ப் பற்றிடும் ஆல்
அற்று எனலாம் ஈங்கு ஓர் அரிவை முயங்கு ஆதரமே.
28
   
2013.
சந்திரற்கு நேருவமை சாலும் திருமுகத்துப்
பைம் தொடிக்கை நல்லார் பலரும் புடை சூழக்
குந்தம் ஒத்த நாட்டத்துக் கோதமனார் பன்னியினால்
இந்திரற்கு நீங்கா இடப் பழி ஒன்று எய்தியதே.
29
   
2014.
கூன்முகத் திங்கள் நெற்றிக் கோதையர் குழுவுக்கு
                                    எல்லாம்
தான் முதல் இறைவி ஆகத் தன் கையால் சமைக்கப்
                                      பட்ட
மான் முகம் நோக்கி முன்னோர் மலர் அயன் மையல்
                                       எய்தி
நான் முகன் ஆனான் என்ப நாம் உணராதது அன்றே.
30
   
2015.
மற்றும் உள முனிவர் தேவர் மாயமாம் காமம் தன்னால்
உற்றிடு செயற்கை எல்லாம் உரைப்பினும் உலப்பு
                                    இன்றாமால்
அற்று எலாம் நிற்க யான் அவ் ஆயிழை மடந்தை
                                      கூட்டம்
பெற்றிடும் ஒழுக்கம் தன்னைப் பேணலன் பிறப்பு
                                     நீப்பேன்.
31
   
2016.
பூண் தகு விலங்கல் திண் தோள் புரந்தரன் முதலோர்
                                       சீரும்
வேண்டலன் இல் வாழ்வு என்னும் வெம் சிறை
                             அகத்தும் வீழேன்
மாண் தகு புலத்தின் மாயும் மயக்கு ஒரீஇத் தவம்
                                 என்று ஓதும்
ஈண்டிய வெறுக்கை மேவி இன்பம் உற்று இருப்பன்
                                    என்றான்.
32
   
2017.
இவை பல உரைத்தலோடும் இருந்த குச்சகன் தான்
                                    இந்தக்
குவலயம் மதிக்கும் ஆற்றால் கூறும் இல் ஒழுக்கம்
                                   தன்னை
நவை என இகழா நின்றான் நான் மறைத் துணிவும்
                                கொள்ளான்
தவ மயல் பூண்டான் என்னாத் துயர் கொடு சாற்றல்
                                   உற்றான்.
33
   
2018.
புலத்தியன் போலும் மேலோய் பொருவின் மங்கலம்
                            சேர் பொன்னின்
கலத்து இயல் வதுவை பூண்டோர் கன்னியைக் கலத்தல்
                                        செய்து
குலத்து இயல் மரபின் ஓம்பக் குமரரைப் பயந்தே
                                      அன்றோ
நலத்து இயல் தவத்தை ஆற்றி நண் அரும் கதியில்
                                        சேரல்.
34
   
2019.
மன்பதை உலகமே போல் மால் உறா மயங்கு காம
இன்பம் நீ நுகர்தற்கு ஏயோ இசைத்தனன் இறந்த
                                 மேலோர்
துன்பமும் நிரயம் சேர்வும் துடைத்திடும் தொன்மை
                                   நோக்கி
அன்பு உறு புதல்வர்க்காக அரிவையைக் கோடி ஐயா.
35
   
2020.
சித்திரம் இலகு செவ்வாய்ச் சீறடிச் சிறுவர் தம்மைப்
புத்திரன் என்னும் சொற்குப் பொருள் நிலை அயர்த்தி
                                    போலாம்
இத்தகவு அதனை நாடி இல்லறம் பூண்டு நிற்றல்
உத்தம நெறியே ஆகும் தவத்தினது ஒழுக்கும் அஃதே.
36
   
2021.
குவவுறு நிவப்பின் மிக்க கோடு உயர் குடுமிக் குன்றின்
இவர் உறு காதலாளர் இயல் படு சாரல் எய்தித்
திவவொடு போதல் அன்றிச் சேண் உற உகளும்
                                   தன்மைக்கு
உவமையது ஆகும் இன்னே உயர் தவத்து ஒழுக
                                     உன்னல்.
37
   
2022.
தருவினில் விலங்கில் அன்ன தகையன பிறவில் சால
வரு பயன் கோடற்கு அன்றோ மற்று அவை வரைதல்
                                     செய்யார்
பெருகும் இல்லறத்தினோடும் பெருமகப் பொருட்டால்
                                       நீயும்
அரிவையை மணந்து பின்னாள் அரும் தவம் புரிதி
                                     அன்றே.
38
   
2023.
இந்த நல் நிலை மேல் நாளே எண்ணிலை இந்நாள்
                                    காறும்
முந்து செய் கடனது ஆற்றி முற்றினை முறையே பல்
                                       நாள்
சிந்தனை செய்த வானோர்க்கு அவிமுதல் சிறப்புச்
                                   செய்யாய்
மைந்த நீ இன்னே நோற்கும் வண்ணமே எண்ணல்
                                    பாற்றோ.
39
   
2024.
இந்திரர் புகழும் தொல் சீர் இல்லறம் புரிந்துளோர்க்குத்
தத்தமது ஒழுக்கம் தன்னில் தகுமுறை தவறிற்று ஏனும்
சிந்திடும் தீர்வும் உண்டால் செய்தவர்க்கு அனைய
                                       சேரின்
உய்ந்திடல் அரிதால் வெற்பின் உச்சியின் தவறல் ஒப்ப.
40
   
2025.
சுழி தரு பிறவி என்னும் சூழ் திரைப் பட்டுச் சோர்வு
                                       உற்று
அழி தரு துயர நேமி அகன்றிடல் வேண்டும் ஏனும்
கழி தரு நாளான் அல்லால் கது மெனத் துறக்கல்
                                     ஆமோ
வழி முறை நும் முன்னோரின் மற்று அது புரிதி
                                    மன்னோ.
41
   
2026.
தேவரும் முனிவர் தாமும் செம் கண் மால் அயனும்
                                     மற்றும்
யாவரு மடந்தை மாரோடு இல்லறத்து ஒழுகும் தன்மை
மேவரப் பணித்தான் அன்றே விமலை யோடு அணுகி
                                   மேல் நாள்
தாவரும் புவனம் ஆதி சராசரம் பயந்த தாணு.
42
   
2027.
மறுக்கலை அவன்தான் செய்த வரம்பினை வழியை
                                   வேண்டி
வெறுக்கலை எனது கூற்றை விலக்கலை உலகின்
                                   செய்கை
செறுக்கலை இகலும் ஆற்றால் செப்பலை சிறிது மாற்றம்
துறக்கலை எமரை இன்னே தொல் முறை உணர்ந்த
                                      தூயோய்.
43
   
2028.
ஆடக வனப்பு உடை அருந்ததியை நீங்கான்
மாடு உற இருத்தியும் வசிட்ட முனி என்போன்
நீடுதவ நோன்மை கொடு நின்றனன் அதன்றிப்
பீடு கெழு ஞாலமிசை பெற்ற பழி உண்டோ.
44
   
2029.
துயக்குறு பவத்திடை தொடர்ச்சி அறு தூயோர்
நயப்பொடு வெறுப் பகலின் நாளும் மடம் ஆனார்
முயக்கு உறினும் மாதவம் முயன்றிடினும் அன்னோர்
வியத்தகு மனத்து உணர்வு வேறுபடுமோ தான்.
45
   
2030.
மேன இயல் பான் வரையும் மெல்லியலை மேவில்
தானம் உளதாகும் அரிதான தவம் ஆகும்
வானம் உளதாகும் இவண் மண்ணும் உளதாகும்
ஊனம் இலதாகும் அரிது ஒன்றும் இலை அன்றே.
46
   
2031.
காண் தகைய தம் கணவரைக் கடவுளார் போல்
வேண்டல் உறு கற்பினர் தம் மெய் உரையில் நிற்கும்
ஈண்டை உள தெய்வதமும் மா முகிலும் என்றால்
ஆண் தகைமை யோர்க்களும் அவர்க்கு நிகர் அன்றே.
47
   
2032.
ஆயிழையொடு இன்புறும் அறத்தை முதல் ஆற்றாய்
தூய தவ நல் நெறி தொடங்கல் புரிவாயேல்
மாய மிகு காமவிடம் வந்து அணுகின் அம்மா
மேய விதி காக்கினும் விலக்கியிடல் ஆமோ.
48
   
2033.
துறந்தவர்கள் வேண்டியது ஒர் துப்புரவு நல்கி
இறந்தவர்கள் காமுறும் இரும் கடன் இயற்றி
அறம் பலவும் ஆற்றி விருந்து ஒம்பும் முறை அல்லால்
பிறந்த நெறியால் உளது ஒர் பேர் உதவி யாதோ.
49
   
2034.
மெத்து திறல் ஆடவரும் மெல்லியல் நல்லாரும்
சித்தம் உற நன்கினொடு தீது செயல் ஊழே
உய்த்தபடி அல்லது இலை ஆம் உழவர் ஒண்செய்
வித்து பயனே அலது வேறு பெறல் ஆமோ.
50
   
2035.
நல் தவம் அது ஆகும் இல் அறம் தனை நடாத்திச்
சுற்றம் அற நீங்கு துறவே துறவு அது அம்மா
மற்று அது புரிந்திடின் உனக்கு நவை வாரா
அற்றது மறுத்து உரையல் ஆணை நமது என்றான்.
51
   
2036.
அன்னபல மாமுனி அறைந்திடலும் ஒரா
முன்னம் மறை ஆதிய மொழிந்த துணிவு என்றார்
பன்னகம் அணிந்திடும் பரன் பணியும் என்றார்
என் இனி உரைப்பது என எண்ணி இனை கின்றான்.
52
   
2037.
தத்தமது அருள் குரவர் தாவில் வளம் நீங்கி
அத்தி இடை ஆழ் கெனினும் அன்பினது செய்கை
புத்திரர்கள் தங்கள் கடனாம் புதுமை அன்றே
இத்திறம் மறுக்கலன் இசைந்திடுவன் யானும்.
53
   
2038.
தந்தை சொல் மறுப்பவர்கள் தாய் உரை தடுப்போர்
அந்தம் அறு தேசிகர் தம் ஆணையை இகந்தோர்
வந்தனை செய் வேத நெறி மாற்றினர்கள் மாறாச்
செம் தழல வாய நிரயத்தின் இடை சேர்வார்.
54
   
2039.
ஆதலின் விலக்கல் முறை அன்று என வலித்துக்
கோது அறு குணத்தின் மிகு குச்சகர் தம் அம் பொன்
பாதம் அது இறைஞ்சி முனியேல் பணியில் நிற்பன்
ஓதுவது உனக்கு உளது எனக் கழறல் உற்றான்.
55
   
2040.
தன் உரை கொளாத மனை வாழ்க்கை அது தன்னில்
வெந் நிரயம் வீழும் வகையே விழுமிது அம்மா
அன்னரொடு மேவி அமர் ஆடவர் தமக்குப்
பின்னும் ஒரு கூற்றும் உளதோ பிணியும் உண்டோ.
56
   
2041.
என் உரையினில் சிறிதும் எஞ்சல் இலவாகி
மன்னும் இயல் பெற்றிடும் மடந்தை உளன் ஏல் அக்
கன்னிதனை யான் வரைவல் காய் எரி முன் என்னாச்
சொன்ன மொழி கேட்டு மகிழ்வுற்று முனி சொல்லும்.
57
   
2042.
யானும் உய்ந்தனன் என் கிளை உய்ந்தன இனையதால்
                                நினை ஈன்றாள்
தானும் உய்ந்தனள் தவங்களும் உய்ந்தன தண் அளி
                                 அது மற்றால்
வானும் உய்ந்தன மண் உலகு உய்ந்தன வாசவன் என
                                      வாழும்
கோனும் உய்ந்தனன் என் உரை மறாமல்
                     உட்கொண்டனை அதனாலே.
58
   
2043.
வேண்டும் வேட்கையை உரைத்தியால் மைந்த நீ
                 விளம்பிய இயல்பு எல்லாம்
பூண்டு குற்றம் ஓர் சிறிதும் இல்லாதது ஓர் பூவையைப்
                                 புவியின் பால்
தேண்டி நின் வயின் புணர்க்குவன் அங்கு அது
                    செய்கலாது ஒழிவனேல்
மாண்டு இறந்திடும் குறைமதிக் கதிர் என மாய்க என்
                               தவம் என்றான்.
59
   
2044.
இனைய பான்மையில் குச்சகன் சூள் உரை இயம்பலும்
                                திருமால் முன்
புனையும் மெய்ப் பெயர் தரித்த சேய் ஆங்கு அவன்
                பொலம் கழல் தனைப் பூண்டோர்
தனயன் உய் பொருட்டால் இது புகன்றனை தவத்தினில்
                                     தலையான
முனிவ நீ உனக்கு அரிதாய் ஒரு பொருள் முச்சகந்தனில்
                                      உண்டோ.
60
   
2045.
ஆவது ஏனும் யான் உரைப்பது உண்டு அத்தனை
                     அற்றவர் அருளும் யாய்
சாவது ஆயினர் தன்னையர் இல்லவர் தங்கையர் இலர்
                                     ஆனோர்
காவல் ஆடவர் தம்முடன் உதித்திடார் காசினி தனில்
                                   அன்னோர்
வீவது ஆயினர் பெரும் கிளை இல்லவர் வியத்தகு
                                 திருவற்றோர்.
61
   
2046.
குடிப் பிறந்திலர் பிணியுறும் இருமுது குரவர் பால்
                            குறுகு உற்றோர்
கடுத் தயங்கிய மிடற்று இறை ஆதி ஆம் கடவுளர்
                           பெயர் கொள்ளா
தடுத்த மாக்கடம் பெயர் பெறு பீடு இலர் அலகை
                            தன் நாமத்தோர்
படித்தலம் தனில் புன்னெறிச் சமயம் ஆம் படுகுழி
                            பட்டு உள்ளோர்.
62
   
2047.
பிணியர் மூங்கையர் பங்கினர் வெதிரினர் பிறர்
                     மனை தனில் செல்வோர்
கணிகை மாதரின் விழிப்பவர் பன்முறை காளையர்
                              தமை நோக்கி
நணிய காதலான் முன் கடை நிற்பவர் நலம் பெறப்
                             புனைகின்றோர்
தணிவு இல் உண்டியர் துயில் மிகும் இயல்பினர்
                    தன்னினும் மூப்பு உற்றோர்.
63
   
2048.
ஒருமை தங்கிய கோத்திர மரபினோர் உயர்ந்தவர்
                            குறள் ஆனோர்
பருமை தங்கிய யாக்கையர் மெல் உருப் படைத்தவர்
                               பயன் இல்லாக்
கருமை தங்கிய வடிவினர் பொன் எனக் கவின்று எழு
                                   காயத்தோர்
இருமை தங்கிய பசப்பினர் விளர்ப்பினர் எருவையின்
                                 உருமிக்கோர்.
64
   
2049.
நாண் இலாதவர் ஆடவர் புணர்ச்சியில் நணியவர்
                             நகைக்கின்றோர்
ஏண் இலாதவர் பெரு மிடல் சான்றவர் இருமுது
                              குரவோர் தம்
ஆணை நீங்கினர் சினத்தினர் இகலினர் அடுதிறம்
                            முயல் கின்றோர்
காண வேண்டினர் நட முதல் ஆயின காமனால்
                            கவல் கின்றோர்.
65
   
2050.
ஈசன் அன்பிலர் பெருந்தகை முனிவரை இகழ்பவர்
                                உயிர் மீது
நேசம் என்பன இல்லவர் தம் குல நெறி தனில்
                               நில்லாதோர்
மாசு தங்கிய குணத்தினர் நிறையிலார் மனம் எனும்
                             காப்பு இல்லோர்
தேசிகன் தனை மனிதன் என்று உன்னினர் தேவரைச்
                               சிலை என்றோர்.
66
   
2051.
பத்தின் மேற்படும் ஆண்டினர் பூத்திடு பருவம் வந்து
                                அணுகுற்றோர்
ஒத்த பண்பு இலர் அச்சம் இல் மனத்தினர் உரும் என
                               உரை செய்வோர்
அத்தன் அன்னை ஈந்து அருளும் முன் ஒருவர் பால்
                      ஆர்வம் உற்று அவர் சேர
வைத்த சிந்தையர் பெருமிதம் உற்று உளோர் மடம் ஒடு
                              பயிர்ப்பு இல்லோர்.
67
   
2052.
பிறப்பின் எல்லையில் விழி இலார் தோற்றிய பின்றையே
                                இழக் கின்றோர்
மறுப் பயின்றிடும் கண்ணினர் படல் இகை வயங்கிய
                                  நோக்கத்தார்
குறிப்பின் மெல்லென வெஃகியே விழித்திடும் குருடர்
                              சாய் நயனத்தோர்
சிறப்பு இல் பூஞையின் நாட்டத்தர் கணத்தினில் திரி
                           தரு செங்கண்ணோர்.
68
   
2053.
தூறு சென்னியர் நரை முதிர் கூந்தலர் துகள் உறும்
                                 ஐம் பாலார்
வீறு கோதையர் சின்னமார் குழலினர் விரிதரும்
                                அளகத்தோர்
ஈறு இல் செம் மயிர்ப் பங்கியர் நிலன் இடை இறக்கிய
                                   கேசத்தோர்
ஊறு சேர் தரும் ஓதியர் விலங்கு என உரம் மிகு குரல்
                                     உள்ளோர்.
69
   
2054.
சிறுகு கண்ணினர் மிக நெடும் துண்டத்தர் சேர்ந்திடும்
                                  புருவத்தோர்
குறிய காதினர் உயர் தரும் எயிற்றினர் கோண் உறு
                                கண்டத் தோர்
மறுவிர் ஆவிய முகத்தினர் சுணங்கு உறா மணிமுலை
                                  மார்பத்தோர்
வெறிது ஆகிய நுசுப்பிலர் சிலை என வியன் மிகு
                              வயின் உள்ளோர்.
70
   
2055.
காய நூல் முறை உரைத்திடும் இயல்பு இலாக் கடிதட
                                நிதம்பத்தோர்
வாயும் அம் கையும் நகமும் முள் அடிகளும் வனப்பு
                         உறு சிவப்பு இல்லோர்
மேய சில் மயிர் பரந்திடும் பதத்தினர் மென் சிறை
                               எகினம் போல்
தூய நல் நடை இல்லவர் அங்குலி தொல் புவி
                                தோயாதோர்.
71
   
2056.
இனைய தன்மையர் அகிய மாதர்கள் ஏனையர் இவர்
                                    யாவரும்
புனையும் மங்கலம் ஆகிய கடிவினை புரிதர
                                வரையாதோர்
அனையரே எனின் வேண்டலன் முழுவதும் அவர்
                              இயல் அணுகாத
வனிதை உண்டு எனின் வேண்டுவன் தேர்ந்தனை
                        மரபினில் தருகென்றான்.
72
   
2057.
காட்டில் நின்றிடும் குற்றியின் நோற்புறு கவுச்சிகன்
                                 இவை கூறக்
கேட்டு மூரலும் உவகையும் கிடைத்தனன் கேடில் சீர்
                                உலகு உள்ள
நாட்டகம் தனில் நாடி நல் இயல்பு உள நங்கையை
                                 நின் பாலில்
கூட்டு கின்றனன் மானுதல் ஒழிகெனக் குச்சகன் உரை
                                    செய்தான்.
73
   
2058.
உரைத்த குச்சகன் மைந்தனை நிறுவியே ஒல்லை
                         சென்று அகிலத்தில்
திருத் தகும் சுடர் மலிதரு செம் பொனில் செய்தது
                         ஓர் அணி நாப்பண்
அருத்தி சேர் தரக் குயிற்றிட வேண்டி ஓர் அருமணி
                           தனைக் கொள்வான்
கருத்தில் உன்னுபு தெரிபவன் போல் ஒரு கன்னியைத்
                                 தேர்கின்றான்.
74
   
2059.
அன்னவன் தன் நேர் முனிவரர் சிலர் வந்து
              அணுகலும் அவரொடும் வினாவிச்
சென்னிதன் தேயத்த நாமயம் என்னும் செயிர் இலா
                       வனத்து சத்தியன் பால்
கன்னிகை இருத்தல் உணர்ந்துமல் தவன் பால் கதும்
                      எனச் சேறலும் காணூஉத்
தன் அடி வணங்க வெதிர் உறத் தொழுது தழுவியே
                            அவனொடும் சார.
75
   
2060.
மாசு அற இயன்ற உறை உளில் கொடு போய் வரன்
                     முறை வழாமலே அமைத்த
ஆசனத்து இருத்திக் கன்னிகை யொடு தன் பன்னியை
                         ஆய் இடை அழைத்துத்
தேசிகன் உற்றான் பணிமின் நீர் என்னாச் சென்னியால்
                           இறைஞ்சுவித்து உரிய
பூசனை புரிந்து நகையொடு முகமன் புகன்று
                          அளவாயினன் புனிதன்.
76
   
2061.
அறு சுவை கெழுவும் நறிய சிற்றுண்டி அமுதினில்
                           தூயன அருத்திக்
குறை வறும் அடிகட்கு என்னிடை வேண்டும்
                கொள்கையது என் எனக் கூற
மறு அறு தவத்துக் குச்சக முனிவன் மகிழ்ந்து நீ
                            மாதவம் புரிந்து
பெறும் மகள் தன்னை எனது ஒரு மகற்குப் பேசுவான்
                         பெயர்ந்தனன் என்றான்.
77
   
2062.
இனைய சொல் வினவி முனிவரன் மகிழா என் மகள்
                        விருத்தையை இயல்சேர்
உனது மைந்தற்கு நல்க முன் செய்த உயர் தவம்
                     என்கொல் என்று உரைத்து
மனம் உற நகையும் உவகையும் கிளர மண வினை
                          இசைந்து மாதவத்துப்
புனிதனை அம் கண் சில பகல் இருத்திப் போற்றி
                    செய்து ஒழுகுறும் பொழுதின்.
78
   
2063.
பங்கம் இல் உசத்தியன் பன்னி ஆகிய
மங்கலை விடுத்திட மகள் விருத்தை தான்
அங்குள இகுளையர் ஆயம் தன்னுடன்
செம்கயல் பாய் புனல் திளைப்பப் போயினாள்.
79
   
2064.
காடு உற வந்திடு கலுழி மாண் புனல்
ஆடினள் மகிழ் சிறந்த அணங்கு அனார் ஒடு
மாடு உறு பொதும்பர் போய் மலர் கொய்து அன்னவை
சூடினள் இருந்தனள் தொடலை ஆற்றியே.
80
   
2065.
பாசிழை மங்கையர் பண்ணையோடு எழீஇ
ஆசறு பொதும்பினும் அணங்கை அன்னவள்
மாசறு தாரகை மரபில் சூழ்தரும்
தேசு உறு மதி எனத் திரும்பும் வேலையே.
81
   
2066.
உருகெழு கனை ஒலி உருமுக் கான்றிடும்
கருமுகில் இஃதென கனன்று காய்கனல்
சொரிதரும் விழியது சூர்த்த மெய்யது
பெருமத நதியொடு பெயரு கின்றதே.
82
   
2067.
தாழ் உறு கரத்தது தடத்தின் சால்பு எனக்
காழ் உறும் எயிற்றது கறை கொள் காலதால்
ஏழ் உயர் குறும் பொறை இபம் ஒன்று ஏற்று எதிர்
பாழிய வரை துகள் படுத்துச் சென்றதே.
83
   
2068.
காண்டலும் வெருவினர் கவன்று அவ்வாறு செல்
ஆண்டகை யோர்களும் அகன்று சிந்தினார்
நீண்டிடு கடல் இடை நிமிர்ந்த வெவ்விடம்
ஈண்டலும் இரிந்த புத்தேளிர் என்னவே.
84
   
2069.
கன்னிகை விருத்தையாள் கண்டு துன்புறா
அன்ன மென் நடையினர் அகன்று சிந்தலும்
என் இனி இழைப்பது என்று இரங்கி ஏங்கியே
உன்னரும் கடுப் பினில் உஞற்றி ஓடலும்.
85
   
2070.
கீழ்ந்து அறை போகிய கிளைஞர் ஆம் எனத்
தாழ்ந்திடு பசும்புதல் செறியத் தான் மறைந்
தாழ்திடு கூவல் ஒன்று அணுக அன்னதில்
வீழ்ந்தனள் அழுந்தினள் விளவுற்றாள் அரோ.
86
   
2071.
முடங்கு உளை அலங்கு உறு முதிய பூ நுதல்
மடங்கலின் ஏறு எதிர் வரினும் மாறு கொள்
கடம் கலுழ் மால் கரி கல் என் ஆர்ப்பொடு
நடந்தது மலைய மா நாடு சாரவே.
87
   
2072.
இரிந்திடு மாதரார் யாண்டும் ஆகியே
விரிந்திடு வோர் குழீஇ வியர்க்கு மேனியர்
சரிந்திடு கூந்தலர் தளரும் நெஞ்சினர்
பிரிந்திடும் உவகையர் பெயர்ந்து நாடினார்.
88
   
2073.
தண்டம் அது எங்கணும் தானம் சிந்திடக்
கொண்டலின் எய்திய கோட்டு மாதிரம்
கண்டிலர் கன்னிகை தனையும் காண்கிலர்
உண்டிலை என உயிர் உயிர்ப்பு நீங்கினார்.
89
   
2074.
மண் இடை ஆறன வழிகொண்டு ஏகவே
கண் இணை புனல் உகக் கலுழ்ந்து சோர் உறாத்
துண் என உணர் உறத் துளங்கிச் சூழ்கனல்
புண் உறுவோர் எனப் புலம்பல் மேயினார்.
90
   
2075.
பெண்ணுக் அணிகலமே பேரழகுக்கு ஓர் உருவே
கண்ணுக்கு அணியே கமலத்துச் செந்திருவே
மண்ணில் புனல் படிந்தாய் வானதியும் ஆடுவதற்கு
கெண்ணித் துணிந்தோ எமை விட்டுப் போயினையே.
91
   
2076.
வன்னப் புனல் ஆட்டி வல்லே புறங் காத்து என்
மின்னைத் தருதிர் எனவே விடை கொடுத்த
அன்னைக்கு என் சொல்வேம் அடுகளிற்றின் முன்னாக
உன்னைத் தனி விட்டு உயிர் கொண்டு போந்தனமே.
92
   
2077.
ஐயர் உசத்தியரும் அன்னை யெனும் மங்கலையும்
வையம் பரவுகின்ற மாதுலராம் குச்சகரும்
கையறவின் மூழ்கக் கரந்தாய் இனி ஒருகால்
செய்ய முகமும் திருநகையும் காட்டாயோ.
93
   
2078.
என்னப் பலவும் புலம்பி இரங்குற்றே
உன்னற்கு அரும் சீர் உசத்தியன்தான் நல்தவத்தின்
மன் உற்ற தெய்வ வனத்தின் மனை வாழ்க்கைப்
பன்னிக்கு இவை உரைத்துப் பாவை நல்லார்
                              ஆவலித்தார்.
94
   
2079.
கேட்டிடலும் அன்னை வயிறு அதுக்கிக் கேழ் கிளர்தீ
ஊட்டரக்கே என்ன உருகி மனம் மறுகி
வாள் தடம் கண் நீர் குதிப்ப வாய் வெரீஇத் தன்
                                    கணவன்
தாள் துணையில் வீழ்ந்து புகுந்தபடி சாற்றினள் ஆல்.
95
   
2080.
ஒன்று புரி காட்சி முனிவன் உவை கேட்டுக்
கன்று பிரிதாயின் கவன்று அரற்றிக் கன்னியொடு
சென்று பிரிவு உற்றோரை நோக்கிச் சினக் களிறு
கொன்றதுவோ அஞ்சாது கூறும் எனச் செப்புதலும்.
96
   
2081.
தூய புனல் ஆடித் துறை புகுந்து சூழ் பொதும்பில்
ஆயம் உடன் ஆடி அகன்று இங்கு வந்திடலும்
காயும் அழல் வெம் கண் கடகளிறு வந்தது கண்
டோயும் உணர்வு எய்தி எல்லோமும் ஓடினமால்.
97
   
2082.
ஓடி உலையா ஒருவர் நெறி ஒருவர்
கூடல் இலதா அணியின் குழாம் சிந்திச்
சாடு மத கரியில் தப்பி விருத்தை தனைத்
தேடி அங்ஙன் காணாது சென்றனம் யாம் என்றிடலும்.
98
   
2083.
சென்று ஆங்கு அவ் எல்லைதனில் தேடித் தியங்கு
                                     உற்று
நின்றான் மகள் தன் நிறம் கிளரும் பொன் கலனோர்
ஒன்றாக வெவ்வேறு ஒரு நெறியில் சிந்திடக் கண்டு
ஒன்றாய் படர்ந்த நெறி ஈது கொல் என்று ஏமுற்றான்.
99
   
2084.
பூண் போகிய நெறியே தொட்டுப் புதல்வி தனைக்
காண் போம் எனவே கனம் குழையாரோடு ஏகி
மாண் போய கூவல் ஒன்று வந்து அணுக ஆங்கு
                                 அதனில்
சேண் போய தன் மகளைக் கண்டு தெருமந்தான்.
100
   
2085.
கூவல் உறுவது நோக்கி நெடிது உயிர்த்து விழி வழி
                        நீர் குதிப்பக் குப்புற்று
ஆவலியா மகளை எடுத்து அகன் கரையின் பாற்
                     படுத்தி அழுங்க லோடும்
பாவையர்கள் தழீஇக் கொண்டு புலம்பினர் ஆல் அது
                        கேட்டுப் பயந்த நற்றாய்
காவில் உறு கோகிலம் போல் நெடிது அரற்றிப் பெரும்
                         துயரக் கடலுள் பட்டாள்.
101
   
2086.
தன் பால் வந்து அவதரித்த நங்கை தனைக் கைவிட்டுத்
                                 தரியாள் ஆகி
அன்பாலே உயிர் பதைப்ப வயிறு அதுக்கி ஆகுலியா
                                அரற்றி ஏங்கி
மின் பாலோர் மின் படிந்த தன்மை என அவளாக
                            மிசையே வீழ்ந்து
தென்பாலில் புகுந்தனையோ ஓ மகளே எனப் புலம்பித்
                              தேம்பல் உற்றாள்.
102
   
2087.
அன்னேயோ அன்னேயோ ஆகொடியது அறனேயோ
                            அறியேன் அந்தோ
முன்னேயோ நெடும் காலம் குழவியின்றிப் பெரு
                        நோன்பு முயன்று பெற்ற
மின்னேயோ உயிர் இழந்து வெள் இடையில்
                  கிடந்திடுமால் விதியார் செய்கை
இன்னேயோ யான் ஒருத்தி பெண் பிறந்து பெற்றபயன்
                              இதுவே அன்றோ.
103
   
2088.
புலிக் கணங்கள் திரிகானில் ஒரு மானை வளர்த்து
                   அதனைப் போக்கி நின்றே
அலக் கண் உறுவோர் எனவே கைவிட்டுத் தமியேனும்
                             அழுங்கா நின்றேன்
மலர்க் கமலத் திருவை நிகர் என் மகளைக் கொல்லிய
                            முன் வந்தது அந்தக்
கொலைக் களிற்றின் வடிவு அன்றே கொடியேன் செய்
               பெரும் பவத்தின் கோலம் அன்றோ.
104
   
2089.
அறம் காட்டில் சென்றதுவோ தெய்வதமும் இங்கு
                      இலையோ அரிதா முத்தித்
திறம் காட்டும் தவ நெறியும் பொய்த்தனவோ கலியும்
                          இனிச் சேர்ந்ததேயோ
மறம் காட்டும் வனக்களிறு வந்து அடர்க்க ஈண்டு
                            எனது மாதுமாண்டு
புறம் காட்டில் கிடந்திடுமோ என்னே என்னே
                       இதுவோர் புதுமை ஆமே.
105
   
2090.
என்று இவை பலவும் பன்னி இடர் உழந்து அரற்றும்
                                    வேலை
மன்றல் அம் குழலின் மாதர் வளைந்தணர் இரங்கி
                                    மாழ்க
ஒன்றிய கேளிர் அல்லார் யாவரும் உருகி நைந்தார்
அன்று அவண் நிகழ்ந்த பூசல் ஆகுலம் அறைதல்
                                   பாற்றோ.
106
   
2091.
கோட்டம் இல் சிந்தையோன் ஆம் குச்சகன் குறுகி
                                   அங்கண்
நாட்ட நீர் பனிப்பச் சோரும் நங்கையர் தம்பால் எய்தி
மீட்டு இனித் தருவன் மாதை விம்மலர் என்னா வேறு ஓர்
மாட்டுற விருந்த தந்தைக்கு இனையன வகுத்துச்
                                     சொல்வான்.
107
   
2092.
மறை முதல் ஆய நுண் சூநூதல் மருள் அற உணரா
                                    மாக்கள்
சிறியரே முதியர் பாலர் சேய் இழை மகளிர் இன்னோர்
உறுவது ஓர் அவலம் செய்தாய் ஊழ்வினை முறையும்
                                       ஓராய்
அறிவ நீ இன்னே ஆயின் ஆர் இது தணிக்கல் பாலார்.
108
   
2093.
கேளையா மனத்தில் துன்பம் கிளைத்தலை கேடு நீங்கி
நீளயா உயிர்த்தார் போல் இந்நேர் இழைக் கன்னி
                                      தன்னை
நாளையான் விளித்து நின்பால் நல்குவன் நல்க நீ நம்
காளையான் அவற்குப் பின்னாள் கடி மணம் புரிதி
                                     அன்றே.
109
   
2094.
ஐயம் என்று உளத்தில் உன்னி அழுங்கலை விதியும்
                                     அற்றே
மெய் உணர்வு அதனால் கண்டாம் விருத்தை தன்
                            யாக்கை தன்னை
மொய்யுறு தயிலத் தோணி மூழ்கு வித்து இருத்தி இன்றே
ஒய்யென நோற்று மீட்டுத் தருகுவன் உயிரை என்றான்.
110
   
2095.
சாற்றியது உணர்ந்து தாதை தயிலத்தில் இட்டு மாதைப்
போற்றினன் இருப்ப மோலோன் போய் ஒரு பொய்கை
                                      மூழ்கிக்
கூற்றுவன் புகழ்ந்து நோற்பக் கொடும் குழை மடவார்
                                     அஞ்சக்
காற்று என முன்னர் வந்த களிறு மீண்டு அணைந்தது
                                      அம்மா.
111
   
2096.
தடமிகு புனலுள் புக்குத் தாளினால் உழக்கிச் சாடிப்
பட வரவு அனைய செய்கைப் பருவலித் தடக்கை
                                   தன்னால்
இடை தொறும் துழாவி நின்ற இருந்தவ முனிவர் பற்றிப்
படர் மிசை யேற்றிக் கொண்டு பெரிது சேண்பெயர்ந்தது
                                       அன்றே.
112
   
2097.
கோதறு குணத்தின் மேலாம் குச்சகன் என்னும் தொல்
                                        பேர்
மாதவன் உணர்ந்து பின்னர் மதக்களிறு அதனை
                                     நோக்கி
ஈது எனைப் பற்றி செல்வது என் கொல் காரணம் என்று
                                       எண்ணி
ஓதியின் வலியால் அன்னது ஊழ் முறை உன்னல்
                                 உற்றான்.
113
   
2098.
மாவ தத்தினை இழைத்திடும் பூட்கையின் மத நீர்
காவ தத்தினும் கமழ் தரு கலிங்க நாட்டு அதன்பால்
ஆ வதத்த நேர் மாக்கள் வாழ் அரிபுரம் அதனில்
தேவ தத்தன் என்று உளன் ஒரு வணிகரில் திலகன்.
114
   
2099.
தவத்தின் அன்னவன் பெறு மகன் தரும தத்தன் எனப்
புவிக்கண் மேல் அவர் புகழ் செய அறம் புரி புகழோன்
கவற்சி இன்றியே மூவகைப் பொருளையும் காண்போன்
உவப்பு நீடிய இரு நிதிக்கு இறையினும் உயர்ந்தோன்.
115
   
2100.
தந்தை அன்னையும் இறத்தலும் தமியனே ஆகிச்
சிந்தை வெம் துயர் உழந்து பின் ஒருவகை தேற
அந்த வேலையின் அவன் பெரும் திருவினை அகற்ற
வந்து தோன்றினன் மன மருள் செய்வதோர் வாதி.
116
   
2101.
முண்டிதப் படு சென்னியன் தாதுவின் முயங்கு
குண்டலத்தினன் கோல நூல் மார்பினன் நீற்றுப்
புண்டரித் தியல் நெற்றியன் கஞ்சுகன் புதியோன்
கண்டிகைக் கலன் புனைந்துளோன் வேத்திரக்
                              கரத்தோன்.
117
   
2102.
அவனைக் கண்டனன் அடி முறை வணங்கினன்
                               அருவாம்
சிவனைக் கண்டனன் ஆம் எனப் பெருமகிழ் சிறந்தான்
புவனிக்கு உள்ளவர் என்னினும் சாலவும் புதியர்
தவம் மிக்கோர் இவர் என்று கொண்டு உறையுளில்
                                 சார்ந்தான்.
118
   
2103.
பொன் அரும் கலம் திருத்துபு குய் உடைப் புழுக்கல்
நல் நலம் பெற அருத்தினன் முகமனும் நவின்றான்
பின்னர் அன்னவன் தனை எதிர் நோக்கினன் பெரியோய்
என் இவண் வந்தது என்றனன் வணிகருக்கு இறைவன்.
119
   
2104.
ஈசன் தந்திடு விஞ்சை ஒன்று எமக்கு உளது எவர்க்கும்
பேசும் தன்மையது அன்று அது குரவர் பால் பெரிதும்
நேசம் பூண்டவர்க்கு உரைப்பது நெஞ்சினில் சிறிதும்
மாசு இன்று ஆய நிற்கு உணர்த்துவன் அஃது என
                                    வகுத்தான்.
120
   
2105.
சரதமே இது சம்புவின் வந்தோர் தகை சால்
இரதம் உண்டது பொன் எனச் செய்தனம் எமக்கு ஓர்
அரிதும் அன்று அது போல்வன பலவுள அவைதாம்
விரத மாதவர் அல்லது யார் கொலோ விரும்பார்.
121
   
2106.
கார் இரும்பையும் நாகத்தில் காட்டுதும் கரிய
சீர் இரும்பினைப் பொன் என உரை பெறச் செய்வாம்
மேருவும் கயிலாயமும் என்று இரு வெற்பை
யாரும் நோக்கவெ காட்டுதும் இவை நமக்கு அரிதோ.
122
   
2107.
எய்தும் ஈயமும் இரதமும் வெள்ளியது எனவே
செய்தும் அன்றியும் வங்கத்தில் செம் பொனும்
                                தெரிப்பாம்
நொய்தின் அன்னது வலி உறக் காட்டுதும் நுவலும்
கை தவம் பயில் மாக்களுக்கு இனையன கழறாம்.
123
   
2108.
இரும்பினில் செம்பு வாங்குவம் ஈயமும் அற்றே
வரம்பு இலாதது ஓர் தரணி அண்டங்களை மரபின்
அரும் பொன் வண்ணம் அது ஆக்குவம் வல்லவாறு
                                       அறைய
விரும்பினாம் எனின் யாண்டும் ஓர் அளப்பில வேண்டும்.
124
   
2109.
ஒன்று கோடி பொன் ஆக்குவம் கோடியது உளவேல்
குன்று போலவே கோடியில் கோடி செய்குவம் ஆல்
நின் தனக்கு உள பொருள் எலாம் தருதியேல் நினது
மன்றல் மாளிகை நிதிக்கு இடம் இல் என வகுப்பாம்.
125
   
2110.
என்ன வேமொழி சோரனை வணங்கினன் இமைப்பின்
முன்னர் உள்ளதும் தான் தனது உரிமையால் முயலப்
பின்னர் எய்திய நிதியமும் பேழையான் அவற்றின்
மன்னு பூண்களும் கொணர்ந்தனன் முன்புற வைத்தான்.
126
   
2111.
வைத்த மா நிதி நோக்கலும் வணிகரில் திலகர்
உய்த்த செல்வமும் இது கொலோ ஓ என உரையாக்
கைத்தலம் கொடு கைத்தலம் புடைத்துடுக் கணங்கள்
நத்த வேலையில் ஒருங்கு பட்டால் என நகைத்தான்.
127
   
2112.
இந்த நின் பொருள் நம்முடை விஞ்சையில் இறைக்கும்
வந்திடாது நாம் உருக்குறு முகந்தனில் வழுவிச்
சிந்து கின்றதற்கு இலை இது நமது பின் திரியின்
அந்தம் இல் பொருள் கொடுக்குவம் வைத்தி என்று
                                அறைந்தான்.
128
   
2113.
முனியல் ஐய நீ வேண்டிய பெருநிதி முழுதும்
இனிது நாடியே கொணருவன் இருத்தி என்று உரைத்துப்
புனையும் ஆடையும் நிலங்களும் மணிகளும் பூணும்
மனையும் மாக்களும் பகர்ந்தனன் நிகர் இலா வணிகன்.
129
   
2114.
பெருமதத்தினை இழைத்திடு மருப்பு உயர் புழைக்கைப்
பெரு மதக்கரி என்னவே மயங்கினன் பெரிதும்
வரும் அதத்தமென்ற அறத்தையும் பகர்ந்து மெய்
                                     வணிகன்
தரும தத்தனாம் பெயரினை நிறுவினன் தரைமேல்.
130
   
2115.
இத் திறத்தினில் தேடிய பெருநிதி எனைத்தும்
கைத்தலம் கொடு தாங்கியே கரவன் முன் காண
வைத்து நிற்றலும் மகிழ்ந்தனன் அவை எலாம் வாங்கி
மொய்த்த செம் கனல் தீ இடை உருக்குதல் முயன்றான்.
131
   
2116.
திரட்டி யாவையும் ஓர் உரு ஆக்கினன் செழும் பொன்
இரட்டி தூக்கிய இரதம் ஆங்கு ஒரு சிலை இட்டு
மருட்டி ஆடக முழுவதும் உரைத்தவை வலிதா
உருட்டி மண் பெரும் குகையினில் மருந்தை உள்
                                    உறுத்தான்.
132
   
2117.
பண் உறுத்திய கனகம் உள்ளிட்டதன் பாலும்
எண் உறுத்திய மிசைக்கணும் களங்கம் ஒன்று இட்டு
மண் உறுத்தி நல் துகில் கொடு பொதிந்தனன் மருங்கில்
கண் உறுத்திய செம் தழல் புடை மிசை கரந்தான்.
133
   
2118.
நூற்று நான்கொடு நான்கு குக்குட புடம் நொய்தின்
வீற்று வீற்றதா விட்டது நோக்கினன் மிகவும்
மாற்று வந்தது பழுக்கும் ஓர் வராகியின் மருளேல்
காற்று இலாதது ஓர் உறையுள் காட்டு என்றனன் கரவன்.
134
   
2119.
சேமம் செய்தது ஓர் உறையுளைக் காட்டலும் சென்று
வாமம் செய்தது ஓர் இந்தனக் குவான் மிசை மறவோர்
ஈமம் செய்த செம் தழல் கொடு வராகி மேல் இட்டுத்
தூமம் செய்தனன் அங்கியும் அவன் எதிர் துரந்தான்.
135
   
2120.
ஓங்கி நாட்ட நீர் பொழிதர ஆர் உயிர் உலைய
வீங்குகின்ற மெய் வெதும்புற எங்கணும் வியர்ப்ப
மூங்கை ஆம் என மொழிகிலான் போவது முயலான்
பாங்கு இருந்திடு வணிகர் கோன் பட்டது ஆர்
                                   பகர்வார்.
136
   
2121.
எல்லை அன்னதில் பொதிந்திடு பொன் குகை எடுத்து
மெல்லெனத் தனது ஆடையில் கரந்தனன் வெய்யோன்
வல்லை அக்குகை போல ஒன்று இருந்தது மருங்கில்
செல்ல வைத்தனன் தழல் பெரும் புகையையும் தீர்த்தான்.
137
   
2122.
தத்த இக்குகை நின்கையில் தாங்கினை தழல் மேல்
வைத்தி என்றனன் அவன் அது புரிதலும் மரபின்
அத் தகும் செயற்கு உரியன யாவையும் அமைத்து
வித்தகம் பெறச் சேமியா ஒரு செயல் விதித்தான்.
138
   
2123.
உண்டி இகந்து உரை யாடலை ஆகிப்
பெண்டிரை வெஃகல் பெறாய் பிறர் தம்மைக்
கண்டிடல் இன்று கருத்தினில் எம்மைக்
கொண்டு இரு முப்பகல் கோது இல் குணத்தோய்.
139
   
2124.
நெய் கமழ் செம் சடை நீலி தன் முன்னோர்
மொய்கனல் வேள்வி முடித்திடல் உண்டால்
செய்கடன் அன்னது தீர்த்த பின் நாலாம்
வைகலின் ஏகுதும் மற்று இவண் என்றான்.
140
   
2125.
அம் முறை செய்க என ஆங்கு அவன் அடியை
மும் முறை தாழ்ந்து முதல் பெரு வணிகச்
செம்மல் அவன் புடை சென்றிலன் நின்றான்
மைம்மலி சிந்தையன் வல்லை அகன்றான்.
141
   
2126.
காவதம் ஓர் ஒரு கன்னலின் ஆகப்
போவது செய்து புறத்து உரு மாறி
வாவினன் வேறு ஓர் வளாகம் அது உற்றான்
ஏவலின் வைகினன் இத்தலை வணிகன்.
142
   
2127.
முப்பகல் போதலும் மூது அறிவு உள்ளோன்
செப்பிய நாள்வரை சென்றுள அன்றே
இப்பகல் வந்திலன் என்னை அவன் சொல்
தப்புவனோ எனவே தளர்கின்றான்.
143
   
2128.
நீடிய தொல் புகழ் நீலி இருக்கை
நாடினன் மேதகு நல் நகர் எங்கும்
தேடினன் மால் உறு சிந்தையன் ஆனான்
வாடினன் மீண்டனன் மாளிகை வந்தான்.
144
   
2129.
அடுத்து முன் வைத்த அரும் குகை தன்னை
எடுத்தது நோக்க இரும்பது ஆக
வடுத்தவிர் சிந்தையன் மாயை கொல் என்னா
விடுத்தனன் அன்னது வீழும் முன் வீழ்ந்தான்.
145
   
2130.
அத்தம் அனைத்தும் அகன்றிடல் ஓடும்
பித்தின் மனத்தொடு பீழையன் ஆகி
எய்த்தனன் ஆயுளின் எல்லையும் எய்தத்
தத்தனும் விண் இடை சார்ந்தனன் அன்றே.
146
   
2131.
அறம் தனை விற்ற அரும் செயலாலே
மறம் தரு தத்தனும் மால் கரி ஆகிப்
பிறந்தனன் முன் உறு பெற்றியது எல்லாம்
மறந்தனன் என்று மனத்து இடை கொண்டு.
147
   
2132.
மாற்றுவன் இப்பவம் வல்லையின் என்னாச்
சாற்றினன் முன்பு தவம் புரி வேலை
நோற்றிடும் ஓர் பகல் நோன்பு அவை தான் இவ்
ஆற்றல் இபத்து உழை ஆகுக என்றான்.
148
   
2133.
இப்பரிசு அங்கண் இயம்புத லோடும்
அப்பொழுது அன்னவன் ஆண்டு உறு வேழம்
மெய்ப்படி வந்தனை வீட்டினன் யாரும்
செப்ப அரிதாகியதே உருவு ஆனவன்.
149
   
2134.
அந்தர துந்துபி ஆர்த்தன வானோர்
சிந்தினர் பூ மழை சேண் இடை நின்றும்
வந்தது தெய்வதம் ஆன மதன்பால்
இந்திரன் ஆம் என ஏறினன் அன்றே.
150
   
2135.
பாசிழை மங்கையர் பற்பலர் சுற்றா
வீசினர் சாமரை விண்ணுறை கின்றோர்
ஆசிகள் கூறினர் அங்கு அவன் நிற்கும்
தேசிகனார் அடி செங்கை குவித்தான்.
151
   
2136.
நோக்கினன் மாதவ நோன்மை உளானை
வாக்கினில் வந்தன வந்தனை செய்தான்
நீக்கரும் வல்வினை நீக்கினை என்னா
மேக்கு உயர் புங்கவர் விண் உலகு உற்றான்.
152
   
2137.
விண் இடையே அவன் மேவுதலோடு
மண் இடை நின்றிடு மாதவன் முன்போல்
எண்ணரு நோன்பது இயற்றுலும் அன்னோன்
கண்ணிய தென் திசை காவலன் வந்தான்.
153
   
2138.
முன் உறு கூற்றுவன் முப்பகை வென்றோய்
உன் நிலை நோக்கி உவந்தனம் நம்பால்
என்னை கொல் வேண்டியது என்றலும் அன்னோன்
தன் அடி வீழ்ந்து இது சாற்றுதல் உற்றான்.
154
   
2139.
உந்திய சீர்த்தி உசத்தியன் மான் என்
மைந்தன் மணம் செய வந்தனன் அன்னாள்
முந்து உறு நென்னல் முடிந்தனள் முன் போல்
தந்து அருள் என்று இது சாற்றுதல் ஓடும்.
155
   
2140.
அத் தகு போழ்தினில் அந்தகன் என்போன்
இத் தவன் வேண்டிய ஏந்திழை ஆவி
வைத்தனம் ஏயது வல்லையின் மீட்டு இங்கு
உய்த்திடுவாய் என ஒற்றொடு சொற்றான்.
156
   
2141.
கொற்றவன் இங்கு இது கூறி மறைந்தான்
சொற்றது உணர்ந்திடு தூதுவன் முன்போய்
உற்றிடும் அவ் உயிரைக் கொடு போந்து
மற்று அவள் யாக்கையுள் வந்து இடுவித்தான்.
157
   
2142.
உடற்குள் உயிர் வந்திடலும் புகுந்தது மெய் உணர்வு
                          சிறிது உயிர்த்த நாசி
துடித்தன கால் பதைத்தது உரம் துளங்கி முகம்
                விளங்கியதால் துவண்டது ஆகம்
எடுத்தன கை அசைந்தன தோள் இமைத்தன கண்
                  விழித்தனவால் இனைய காலை
மடக் கொடியும் துயில் உணர்ந்தாள் போல் எழுந்தாள்
                  எல்லோரும் மருங்கில் சூழ்ந்தார்.
158
   
2143.
அன்னை அவள் தனைத் தழுவி இரங்குற்றாள்
        தந்தை எடுத்து அணைத்துப் பல்கால்
சென்னிதனில் உயிர்த்தே தன் இரு குறங்கின் மீ
                   மிசையே திகழச் சேர்த்தி
என் அடிகள் என் கடவுள் எனது தவப் பயன் ஆகும்
                              எந்தை நென்னல்
சொன்னபடி தவம் இயற்றி உய்வித்தான் இவளை என்று
                            துணிவில் சொற்றான்.
159
   
2144.
சுற்றுகின்ற கிளைஞர்களும் அல்லோரும் அதிசயிப்பத்
                             தொல்லை ஞாலம்
பெற்ற திரு அனையாள் தன் பெண் அணங்கை முகம்
                      நோக்கிப் பேதை நீ ஈண்டு
உற்றதுவும் இறந்ததுவும் மீண்டதுவும் முறைப் படவே
                             உரைத்தி என்னப்
பொன் தொடியாள் அது வினவிப் புகுந்தது ஒரு பரிசு
                     அனைத்தும் புகலல் உற்றாள்.
160
   
2145.
நீடிய மங்கையர் பண்ணை தன் உடனே போந்ததுவும்
                         நெடு நீர்க் கான் ஆறு
ஆடியதும் மீண்டதுவும் கடகளிறு போந்ததுவும்
                            அதனைக் கண்டே
ஓடியதும் தான் ஒருத்தி தனித்ததுவும் கூவல் இடை
                             உலைந்து வீழ்ந்து
வீடியதும் மீண்டதுவும் தென் திசைக் கண் நிகழ்வனவும்
                             விரித்துச் சொற்றாள்.
161
   
2146.
சொன்ன மொழி அது கேளா மிக மகிழும் வேலை
                   தனில் துகள் இல் தூயோன்
கொன் நவிலும் முத்தலை வேல் கூற்றுவன் தன்
                   அருள் பெற்றுக் குறுகலோடு
முன் உறவே எதிர் சென்று பெரும் கிளையும் பன்னியும்
                              மா முனியும் பெற்ற
கன்னியும் வந்து வந்து அடி வணங்கிப் போற்றி செய
                 வரன் முறையே கருணை செய்தான்.
162
   
2147.
என் உயிரும் பெரும் கிளைஞர் தம் உயிரும்
               இல்லறத்திற்கு இயன்ற பன்னி
தன் உயிரும் நட்டோர்கள் தமது உயிரும் நின்றிட
                       யான் தவத்தில் பெற்ற
மின் உயிர் தந்து அருளினை ஆல் அரிதோ நிற்கு
                   இது அம்மா வேலை ஞாலம்
மன் உயிர் காத்து அளிப்பவனும் நீ எனவே எனது
                     உள்ளம் மதித்தது அன்றே.
163
   
2148.
வள்ளலை உன் திரு உளத்தை யார் உணர்வார்
              கவுச்சிகனா மகற்கு யான் பெற்ற
தெள் அமிர்தம் அனைய மொழி விருத்தை எனும்
              கன்னிகையைத் திசையின் நாடிக்
கொள்ளுதற்கு வந்தனையோ கூற்றுவனால் போன
                        உயிர் குறுகி மீண்டு
மெல்ல வரும் படி அழைத்துத் தந்திடுவான்
                வந்தனையோ விளம்பு கையா.
164
   
2149.
என முனிவன் தனை நோக்கி முகமன்கள் இவை
                      பலவும் எடுத்துக் கூறி
அனையவனை உடன் கொண்டு சுற்றத்தார் எல்லாரும்
                                அடைந்து சூழ
மனைவியொடும் புதல்வியொடும் மடமாதர் தங்களொடும்
                                 வல்லை யேகித்
தனது உறையுள் இடைப் புகுந்து வீற்று இருந்தான்
                  ஆற்ற அரிய தவத்தின் மேலோன்.
165
   
2150.
பின்பும் ஒரு சில வைகல் குச்சகனை அவண்
               இருத்திப் பெரியோய் இங்ஙன்
என் புதல்வி தனை அளிப்பன் உன் மதலை தனைக்
                    கொண்டே யேகுக என்னத்
தன் புதல்வற் கொடு வரலும் விருத்தை எனும்
               கன்னிகையைத் தழல் சான்று ஆக
அன்பினொடு நல் நாளில் ஒரை தனில் விதி முறையே
                         அருள் செய்தான் ஆல்.
166
   
2151.
அருள் புரிந்திடுதலும் அன்பினான் இயைந்து
இருவரும் இல்லறம் இயற்றப் பற்பகல்
கருணை செய் குச்சகன் கண்டு மா தவம்
புரிதரவே வட புலத்தில் போயினான்.
167
   
2152.
போதலும் இருந்திடும் புனித வேதியன்
மா தவ வலியினால் மாதின் நோன்பினால்
மேதினி வியந்திட மிருகண்டு என்ன ஓர்
காதலன் உதித்தனன் கணிப்பில் காட்சியான்.
168
   
2153.
அப் புதல்வற்கு ஆண்டு ஆறு சென்று உழி
மெய்ப் பிரமச் செயல் விளங்கு பான்மையால்
முப் புரி நூல் வினை முடித்துத் தாதை போல்
செப்ப அரும் மாதவம் செய்யப் போயினான்.
169
   
2154.
ஊற்றமாம் மிருககண்டூயன் என்றிடும்
ஆற்றன் மா முனிவரன் அகல அன்னவன்
தோற்றம் ஆகிய சுதன் தொன்மை நாடியே
போற்றினன் ஆதியில் புரியும் செய் கடன்.
170
   
2155.
சொல் கலை தெரி மருத்து வதி என்றிடும்
முற்கலன் மகள் தனை முறை வழாது பின்
நற்கலை அணி கலன் நல்கி நீக்கிய
வற் கலை உடையினான் வதுவை முற்றினான்.
171
   
2156.
இருந்தனன் அநாமயம் என்னும் பேரொடு
பொருந்திய வனத்து இடைப் புதல்வர் இன்றியே
வருந்தினன் தமரொடும் மாது தன்னொடும்
அருந்தவன் காசியை அடைதல் மேயினான்.
172
   
2157.
அடைந்தது ஓர் பொழுதினில் அமரர் யாவரும்
கடைந்திடு திரைக் கடல் அனைய கங்கை நீர்
குடைந்தனன் ஆடினன் குழுமி மாதவர்
மிடைந்திடும் மறுகு இடை விரைவில் மேவினான்.
173
   
2158.
பொன் திரண் மா மதில் புடையதாம் மணி
கன்றிகை என்பது ஓர் கடவுள் ஆலயம்
சென்றனன் சூழ்ந்தனன் திங்கள் வேணியான்
மன்று அமர் திருவடி வணங்கிப் போற்றினான்.
174
   
2159.
மெய்ப் படு மறை உணர் மிருகண்டு என்பவன்
அப் பெரும் கோயிலுக்கு அணித்து ஒர் பாங்கரில்
செப்பு உறும் ஆகமத் தெளிவு நாடியே
மைப் பெரும் கண்டனை வழிபட்டான் அரோ.
175
   
2160.
ஆதவம் பனி மழை அனிலத்து அச்சுறாப்
பாதவம் ஆம் எனப் பருவ மாறினும்
பேதை பங்கு உடைய எம் பிரானை உன்னியே
மா தவம் புரிந்தனன் மதலை வேண்டியே.
176
   
2161.
அரும் தவம் ஓர் ஆண்டு ஆற்றத் தொல்லை நாள்
பொருந்திய மூ எயில் பொடித்த புங்கவன்
வரம் தனை உதவு வான் வந்து தோன்றலும்
இருந்தவ முனிவரன் இறைஞ்சிப் போற்றினான்.
177
   
2162.
முந்து உறு முனிவரன் முகத்தை நோக்கி நீ
சிந்தையில் விழைந்தது என் செப்புக என்றலும்
மைந்தனை வேண்டினன் வரத்தை நல்கென
எந்தையும் முறுவல் செய்து இனைய கூறுவான்.
178
   
2163.
தீங்கு உறு குணமே மிக்குச் சிறிது மெய் உணர்வு
                                   இலாமல்
மூங்கையும் வெதிரும் ஆகி முடமும் ஆய் விழியும்
                                     இன்றி
ஓங்கிய ஆண்டு நூறும் உறுபிணி உழப்போன் ஆகி
ஈங்கு ஒரு புதல்வன் தன்னை ஈதுமோ மா தவத்தோய்.
179
   
2164.
கோலமெய் வனப்பு மிக்குக் குறைவு இலா வடிவம் எய்தி
ஏல் உறு பிணிகள் இன்றி எமக்கும் அன்பு உடையோன்
                                        ஆகிக்
காலம் எண்ணி இரண்டே பெற்றுக் கலைபல பயின்று
                                      வல்ல
பாலனைத் தருதுமோ நின் எண்ணம் என் பகர்தி
                                   என்றான்.
180
   
2165.
மாண் தகு தவத்தின் மேலாம் மறை முனி அவற்றை ஓரா
ஆண்டு அவை குறுகினாலும் அறிவுளன் ஆகி
                               யாக்கைக்கு
ஈண்டு ஒரு தவறும் இன்றி எம்பிரான் நின்பால் அன்பு
பூண்டது ஓர் புதல்வன் தானே வேண்டினன் புரிக
                                 என்றான்.
181
   
2166.
என்று இவை துணிவினாலே இசைத்தலும் ஈசன் நிற்கு
நன்றி கொள் குமரன் தன்னை நல்கினம் என்று சொல்ல
நின்றிடு முனிவன் போற்றி நெஞ்சகம் மகிழ்ச்சி எய்தி
ஒன்றிய கேளிரோடும் உறைந்தனன் உறையும் நாளில்.
182
   
2167.
பூதல இடும்பை நீங்கப் புரைதவிர் தருமம் ஓங்க
மாதவ முனிவர் உய்ய வைதிக சைவம் வாழ
ஆதி தன் அருளினாலே அந்தகன் மாள அன்னான்
காதலி உதரத்து ஆங்கு ஓர் கருப்பம் வந்து அடைந்தது
                                       அன்றே.
183
   
2168.
அடைதலும் அதனை நோக்கி அறிதரு முனிவன்
                               ஆண்டை
விடையவன் அடியார் யார்க்கும் வேண்டிய வேண்டி
                                   ஆங்கே
நெடிது பல் வளனும் ஈந்து நிறை தரு திங்கள் தோறும்
கடன் இயல் மரபும் ஆற்றிக் காசியின் மேவினானே.
184
   
2169.
கறை உயிர்த்து இலங்கு தந்தக் காய்சின அரவம் கவ்வக்
குறை உயிர்ப் படிவத் திங்கள் அமிர்தினைக்
                           கொடுத்திட்டு ஆங்கு
மறை உயிர்த்து அருளும் செவ்வாய் மதலையை
                             வயாவின் மாழ்கிப்
பொறை உயிர்த்து அருளில் தந்தாள் பொறை தரு
                           திருவைப் போல்வாள்.
185
   
2170.
மீனமும் முடிந்த நாளும் மேவுற மிதுனம் செல்ல
ஊனம் இல் வெள்ளி தானும் ஒண் பொனும் உச்சம்
                                     ஆகும்
தானம் உற்று இனிது மேவத் தபனனே முதலா உள்ள
ஏனையர் முனிவர் நாகர் இடம் தொறும் இருப்ப
                                    மன்னோ.
186
   
2171.
நண்ணினன் புவியின் மைந்தன் நவமணிக் குலமும்                                 பொன்னும்
சுண்ணமும் மலரும் தாதும் தூய மென் கலவைச்
                                  சாந்தும்
தண் உறு நானச் சேறும் தலைத் தலைக் கொண்டு
                                   தாவில்
விண்ணவர் மண் உளோர்கள் வியப்புற வீசி ஆர்த்தார்.
187
   
2172.
தேவ துந்துபிகள் ஆர்த்த செய்தவை ஓம்பி மாற்றும்
மூவர்கள் அன்றி ஏனோர் முறை முறை ஆசி செய்தார்
ஆவது என்று உணர்தல் தேற்றாது இந் நகர் அன்றி
                                      நேமி
காவல் செய் உலகம் யாவும் களிமயக்கு உற்ற அன்றே.
188
   
2173.
தந்தையும் அதனைக் கேளாத் தடம் புனல் கங்கை மூழ்கி
அந்தணர் முதலோர்க்கு எல்லாம் ஆடகம் பலவும் நல்கி
முந்து உறு கடன்கள் ஆற்ற முளரிமேல் முனிவன் மேவி
மைந்தனுக்கு உரிய நாமம் மார்க்கண்டன் என்று செய்தான்.
189
   
2174.
மறுப்படாத் திங்கள் போல வளர்தலும் மதியம் தோறும்
உறுப்படை உப நிட்டானம் ஓதனம் பிறவும் முற்ற
நெறிப்படும் ஓர் ஆண்டின் நெடும் சிகை வினையும்
                                    ஆற்றிச்
சிறப்புடை இரண்டாம் ஆண்டில் செவி நெறி புரிதல்
                                    உற்றான்.
190
   
2175.
ஏதம் இல் ஐந்தின் முந்நூல் இலக்கண விதியும் செய்தே
ஓதிடும் கலைகள் எல்லாம் உள் உற உணர்த்தும் காலை
வேதமும் பிறவும் கொண்ட வியன் பொருள் தெரிந்து
                                      மேலாம்
ஆதியே சிவன் என்று எண்ணி அவனடி அரண் என்று
                                      உற்றான்.
191
   
2176.
அரனை முன் இறைஞ்சி அன்னான் அன்பரைத்
                          தாழ்ந்து தங்கள்
குரவனை வணக்கம் செய்து கோது அறு முனிவர்
                                 தம்மைப்
பரவியே பயந்த மேலோர் பாத பங்கயங்கள் சூடிப்
பிரமம் ஆம் ஒழுக்கம் நாளும் பேணினன் பிறப்பு
                                 நீப்போன்.
192
   
2177.
இந்தவாறு இயலும் காலை எண்ணிரண்டு ஆன
                                   ஆண்டும்
வந்ததால் அதனை நோக்கி மைந்தனை நோக்கி வாளா
தந்தையும் பயந்த தாயும் தனித் தனி இருந்து சால
வெம் துயர்க் கடலின் மூழ்கி விம்மல் உற்று இரங்கி
                                     நைந்தார்.
193
   
2178.
ஆங்கது மதலை காணா அடி இணை வணங்கி
                              அன்னோர்
பாங்கு உற அணுகி நீவிர் பருவரல் உறுகின்றீர் ஆல்
ஈங்கு இது என்னே என்னும் யாதும் ஒன்றும் அறிதல்
                                    தேற்றேன்
நீங்குமின் அவலம் நும்பால் எய்திய நிகழ்த்தும் என்றான்.
194
   
2179.
கூறிய மொழி உட்கொண்டு குமர நீ இருக்க நம்பால்
வேறு ஒரு துயரம் எய்தி மெலிவதும் உண்டோ மேனாள்
ஏறு உடை அமல மூர்த்தி யாண்டு நின் தனக்கு ஈர்
                                       ஐந்தும்
ஆறும் என்று அளித்தான் அந்நாள் அடைதலின்
                              அவலம் செய்தேம்.
195
   
2180.
என்று உரை செய்த தாதை இடர் உறு முகத்தை நோக்கி
ஒன்று நீர் இரங்கல் வேண்டாம் உயிர்க்கு உயிராகி
                                       என்றும்
நின்றிடும் அரனை ஏத்தி அருச்சனை நிரப்பிக் கூற்றின்
வன் திறல் கடந்து நும்பால் வல்லை வந்து அடைவன்
                                      மன்னோ.
196
   
2181.
இருத்திரால் ஈண்டே என்னா ஏதுக்கள் பலவும் செப்பிக்
கருத்து உற நெடிது தேற்றிக் கான் முறை வணங்கி நிற்பத்
திருத்தகு குமரர் புல்லிச் சென்னியும் மோந்து முன்னர்
வருத்தமும் நீங்கிச் சிந்தை மகிழ்ந்தனர் பயந்த மேலோர்.
197
   
2182.
இருமுது குரவர் தம் தம் ஏவலின் ஈசன் என்னும்
ஒருவனது அருளும் அன்பும் உடன் உற துணையாய்ச்
                                     செல்லப்
பொருவரு மகிழ்ச்சி பொங்கப் பொள் எனப் பெயர்ந்து
                                      போகித்
திருமணி கன்றி கைப்பேர்ச் செம்பொன் ஆலயத்தில்
                                     புக்கான்.
198
   
2183.
என்பு நெக்கு உருகக் கண்ணீர் இழிதர வலம் செய்து
                                       ஈசன்
முன்புற வணக்கம் செய்து முடி மிசை அடிகள் சூடித்
தென்புலத்து ஒரு சார் எய்திச் சிவன் உருச் செய்து
                                    பன்னாள்
அன்புடன் அருச்சித்து ஏத்தி அருந்தவம் இயற்றி
                                 இட்டான்.
199
   
2184.
ஈசனும் அவ்வழி எய்தி நல் தவம்
பூசனை அதனொடு புரிதியால் அது
மாசு இலது ஆதலின் மகிழ்ந்து நீ இனிப்
பேசுக வேண்டிய பெறுதற்கு என்னவே.
200
   
2185.
ஐயனே அமலனே அனைத்தும் ஆகிய
மெய்யனே பரமனே விமலனே அழல்
கையனே கையனேன் காலன் கை உறா
துய்ய நேர் வந்து நீ உதவ என்று ஓதலும்.
201
   
2186.
அஞ்சலை அஞ்சலை அந்தகற்கு எனாச்
செம் சரண் இரண்டையும் சென்னி சேர்த்தலும்
உஞ்சனன் இனி என ஓத ஒல்லையில்
நஞ்சு அணி மிடற்றினான் மறைந்து நண்ணினான்.
202
   
2187.
நண்ணிய பின்னரே நவையின் மைந்தனுக்கு
எண்ணி இரண்டு ஆண்டு எனும் எல்லை செல்லலும்
விண் இடை முகில் என விசை கொண்டு ஒல்லையில்
துண் என ஓர் யம தூதன் தோன்றினான்.
203
   
2188.
பண்டு முப்புரம் எரி படுத்த புங்கவன்
புண்டரீகப் பதம் பரவும் பூசனை
கண்டனன் வெருவி மார்க் கண்டன் தன்னை யான்
அண்டுவது அரிது என அகன்று போயினான்.
204
   
2189.
தீ எழ நோக்கியே சென்றிடாது சேண்
போயது ஓர் வல்லியம் போலும் தன்மையான்
வேயென வந்து பின் மீண்டு தென்புல
நாயகன் அடி தொழா நவிறல் மேயினான்.
205
   
2190.
இந்திரர் புகழ் தரும் இறைவ கேட்டியால்
அந்தியின் நிறம் உடை அண்ணல் பால் உறு
சிந்தையன் அவன் அடி சேரும் சென்னியோன்
சந்ததம் அவன் புகழ் சாற்றும் நோன்மையோன்.
206
   
2191.
ஈசனது அருச்சனை இயற்று கின்றனன்
ஆசறு மனத்தினன் அறிவன் அந்தணன்
காசியின் இடத்தன் மார்க்கண்டனாம் எனப்
பேசிய சிறப்புடைப் பெயர் பெற்று ஓங்குவான்.
207
   
2192.
அன்னதோர் பாலனை அணுக அஞ்சினன்
முன்னரும் ஏகலன் முக்கண் எம்பிரான்
தன் உழை இருந்தனன் தண்ட நாயக
உன்னுதி இது என உணரக் கூறினான்.
208
   
2193.
கூறிய அளவையில் கூற்றன் துப்பினை
ஆறிய செம் தழல் கருத்தினால் எனச்
சீறினன் உயிர்த்தனன் சிறுவன் ஆங்கு அவன்
ஈறு இலன் ஆகிய இறைவனே என்றான்.
209
   
2194.
தருதி என் கணகரை என்று தண்டகன்
உரை செய நின்றது ஓர் ஒற்றன் ஓடியே
வருதிர் நும் மழைத்தனன் மன்னன் என்றிடக்
கரணர்கள் வந்தனர் கழல் வணங்கினார்.
210
   
2195.
இறையவன் அவ்வழி எவரும் காண் ஒணா
அறை கழல் அண்ணலை அருச்சித்து ஏத்தியே
மறு அறு காட்சியான் மார்க்கண்டப் பெயர்ச்
சிறுவனுக்கு இறுவரை செப்பும் என்னவே.
211
   
2196.
சித்திர குத்தர் என்று உரைக்கும் சீரியோர்
ஒத்திடும் இயற்கையர் உணர்வின் மேலையோர்
கைத்தலம் இருந்ததங் கணக்கு நோக்கியே
இத்திறம் கேள் என இசைத்தல் மேயினார்.
212
   
2197.
கண் நுதல் இறையவன் கருதி மேலை நாள்
எண் இரண்டு ஆண்டு என இறுதி கூறினான்
அண்ணலே சென்றதால் அதுவும் ஆங்கு அவன்
பண்ணிய பூசனை அறத்தின் பாலதே.
213
   
2198.
முதிர் தருதவம் உடை முனிவர் ஆயினும்
பொது அறு திருவொடு பொலிவர் ஆயினும்
மதியினர் ஆயினும் வலியர் ஆயினும்
விதியினை யாவரே வெல்லும் நீர்மையார்.
214
   
2199.
ஆதலின் அமர் உலகு அடைவது ஆயினன்
பேது உறு நிரயமும் பிழைத்து நீங்கினான்
ஈது அவன் நிலைமை என்று இருவரும் சொல
மேதகு தண்டகன் வெகுட்சி எய்தினான்.
215
   
2200.
அந்தகன் அத்துணை அமைச்சன் ஆகிய
வெம் திறல் காலனை விளித்துக் காசியில்
அந்தணன் ஒரு மகன் அவனது ஆவியைத்
தந்திடுக என்றலும் தரணி எய்தினான்.
216
   
2201.
மற்று அவன் காசியில் வந்து மாசுஇலா
நல் தவன் இருந்துழி நணுகி நான் மறைக்
கொற்றவன் பூசையும் குறிப்பும் நோக்கியே
எற்று இவன் வருவது என்று எண்ணி ஏங்கினான்.
217
   
2202.
விழி இடைத் தெரிவுற மேவி மைந்தனைத்
தொழுதனன் யாரை நீ சொல்லுக என்றலும்
முழுது உலகு உயிர் எலாம் முடிக்கும் ஆணையான்
கழல் இணை அடிமை செய்கின்ற காலன்யான்.
218
   
2203.
போந்தது இங்கு எவன் எனப் புகலுவீர் எனின்
ஆய்ந்தது மொழிகுவன் ஆதி நாயகன்
ஈந்திடு காலம் எண் இரண்டு நென்னலே
தேய்ந்தது தென்புலம் சேர்தல் வேண்டும் நீர்.
219
   
2204.
தடுக்கும் தன்மையது அன்று இது சதுர்முகத் தவற்கும்
அடுக்கும் தன்மையே புதுவது புகுந்ததோ அன்றே
கொடுக்கும் தன்மை போல் காத்திடும் தன்மைபோல்
                                    கூற்றன்
படுக்கும் தன்மையும் கறை மிடற்று இறை அருள்
                                   பணியே.
220
   
2205.
ஆதலால் உமை விளத்தனன் அன்றியும் அமலன்
பாத மாமலர் அருச்சனை புரிவது பலரும்
ஓதவே மனம் மகிழ்ந்து உமைக் காணிய உன்னிக்
காதல் ஆகியே நின்றனன் தென் திசைக் கடவுள்.
221
   
2206.
அடுதல் ஓம்பிய செய்கையன் என்பதால் அவனைக்
கொடியன் என்பர் ஆல் அறிவிலார் செய்வினை குறித்து
முடிவு இல் ஆருயிர் எவற்றிற்கும் முறை புரிந்திடலால்
நடுவன் என்கின்றது அவன் பெயர் உலகு எலாம் நவிலும்.
222
   
2207.
சிந்தை மீதினில் யாவதும் எண்ணலீர் தென்பால்
அந்தகன் புரம் அடைதிரேல் அவன் எதிர் அணுகி
வந்து கைதொழுது ஏத்தியே நய மொழி வழங்கி
இந்திரன் பதம் நல்குவன் வருதிர் என்று இசைத்தான்.
223
   
2208.
மாற்றம் இங்கு இது கேட்டலும் மதி முடி அரனைப்
போற்றும் அன்பர்கள் இந்திரன் உலகினும் போகார்
கூற்றுவன் தனது உலகினும் நும்மொடு குறுகார்
ஏற்றம் ஆகிய சிவபதம் அடைந்து இனிது இருப்பார்.
224
   
2209.
நாதனார் தமது அடியவர்க்கு அடியவன் நானும்
ஆதலான் நுமது அந்தகன் புரம் தனக்கு அணுகேன்
வேதன் மால் அமர் பதங்களும் வெஃகலன் விரைவில்
போதி போதி என்று உரைத்தலும் நன்று எனப் போனான்.
225
   
2210.
போன காலனும் மறலியை வணங்கியே புகுந்த
பான்மை யாவையும் உரைத்தலும் உளம் பதை பதைப்ப
மேனி மார்பகம் வியர்ப்புற விழிகனல் பொழியக்
கூனல் வார் புருவக் கடை நிமிர்ந்திடக் கொதித்தான்.
226
   
2211.
அழைத்திர் மேதியை என்னலும் போந்ததால் அதன் மேல்
புழைக்கை மால் கரியாம் என வெரிநிடைப் புகுந்து
நிழற்று கின்றது ஓர் கவிகையும் துவசமும் நிவப்ப
வழுத்தி வீரர்கள் சுற்றிட அந்தகன் வந்தான்.
227
   
2212.
போந்து காசியின் முனி மகன் இருந்துழிப் போகிச்
சேந்த குஞ்சியும் முகில் புரை மேனியும் சினத்தில்
காந்து கண்களும் பிடித்தது ஓர் பாசமும் கரத்தில்
ஏந்து தண்டமும் சூலமும் ஆகியே எதிர்ந்தான்.
228
   
2213.
வந்து தோன்றலும் மார்க்கண்டன் என்பவன்
அந்தகன் வந்து அணுகினன் ஆம் எனச்
சிந்தை செய்தவன் செய்கையை நோக்கியே
எந்தையார் அடியேத்தி இறைஞ்சினான்.
229
   
2214.
அன்ன வேலையில் அந்தகன் மைந்த நீ
என் நினைந்தனை யாவது இயற்றினை
முன்னை ஊழின் முறைமையும் முக்கணான்
சொன்ன வாறும் துடைத்திடல் ஆகுமோ.
230
   
2215.
சிறிதும் ஊழ்வினைத் திண்மையும் தேர்கிலாய்
உறுதி ஒன்றும் உணர்கிலை போலும் ஆல்
இறுதியே பிறப்பு என்றிவை யாவரும்
பெறுவர் அன்னது பேசுதல் வேண்டுமோ.
231
   
2216.
பீடுசாலும் பெருந் தவர்க்காயினும்
கூடுறா இது கூடும் என்று உன்னியே
நாடி இன்னணம் நண்ணுதல் கற்று உணர்
ஆடவர்க்கும் இயற்கை அது ஆகுமோ.
232
   
2217.
ஈசனார் தம் இணை அடி மீ மிசை
நேச நெஞ்சினை நித்தலும் நீ புரி
பூசை வெம்பவம் போக்குவது அன்றியான்
வீசு பாசம் விலக்கவும் வல்லதோ.
233
   
2218.
சிந்துவின் கண் செறி மணல் எண்ணினும்
உந்து வானத்து உடுவினை எண்ணினும்
அந்தம் இன்றி என் ஆணையின் மாண்டிடும்
இந்திரன் தனை எண்ணிடல் ஆகுமோ.
234
   
2219.
இற்ற வானவர் தம்மையும் என்னின் நீ
உற்ற தானவர் ஆகி உள்ளோரையும்
முற்ற ஓதில் முடிவிலது ஆதலால்
மற்றை யோரை வகுத்திடல் வேண்டுமோ.
235
   
2220.
கனக்கு முண்டகக் காமரு கண்ணினான்
தனக்கும் உண்டு சதுர் முகற்கும் உண்டு மற்று
எனக்கும் உண்டு பிறப்பு இறப்பு என்றிடின்
உனக்கும் உண்டு என்று உரைத்திடல் வேண்டுமோ.
236
   
2221.
வாச மா மலர் இட்டு வழிபட
ஈசனார் முன் எனக்கு அருள் செய்தன
ஆசிலா இவ் அரசியல் ஏந்திய
பாச சூலம் படை மழுத் தண்டமே.
237
   
2222.
தேவர் காப்பினும் செய்து அளித்து ஈறு செய்
மூவர் காப்பினும் மொய்ம்பினர் ஆயினோர்
ஏவர் காப்பினும் காத்திட இன்று நின்
ஆவி கொண்டு அன்றி மீண்டும் அகல்வனோ.
238
   
2223.
துன்பம் என்பது கொள்ளலை சூலிதன்
அன்பர் ஆயினும் அந்தம் வந்து எய்திடில்
தென் புலம் தனில் சேர்த்துவன் திண்ணமே
என்பின் நீ இனியே ஏகு என்று இயம்பலும்.
239
   
2224.
மைந்தன் ஆங்கு அது கேட்டு மறலி கேள்
எந்தையார் அடியார் தமக்கு இல்லையால்
அந்தம் என்பது உண்டாயினும் நின் புரம்
வந்திடார் வெள்ளிமால் வரை ஏகுவார்.
240
   
2225.
அனையர் தன்மை அறைகுவன் ஆங்கவர்
புனித மாதவர் ஆயினும் பொற்புடை
மனையின் வாழ்க்கையின் மல்கினர் ஆயினும்
வினையின் நீங்கிய வீட்டு இன்பம் எய்துவார்.
241
   
2226.
ஏதம் தீர் சுடர் தன்னையும் எண்ணும் ஐம்
பூதம் தன்னையும் போதிகன் தன்னையும்
பேதம் செய்பவர் பிறப்பு ஒழித்தோர் அவர்
பாதம் சேர்தல் பரபதம் சேர்வதே.
242
   
2227.
உன்னை எண்ணலர் உம்பரை எண்ணலர்
மன்னை எண்ணலர் மாமலர்ப் பண்ணவன்
தன்னை எண்ணலர் தண்துள வோனையும்
பின்னை எண்ணலர் பிஞ்ஞகன் அன்பினோர்.
243
   
2228.
நாதன் தன்னையும் நாதனது அம்புயப்
பாதம் சேர்ந்து பரவினர் தம்மையும்
பேதம் செய்வது பேதைமை நீர் என
வேதம் கூறும் விழுப்பொருள் பொய்க்குமோ.
244
   
2229.
செம்மை ஆகிய சிந்தையர் சீரியோர்
வெம்மை என்பதை வீட்டி விளங்கினோர்
தம்மையும் துறந்தே தலை நின்றவர்
இம்மை தன்னினும் இன்பத்தை மேவுவார்.
245
   
2230.
இன்மை ஆவது யாண்டும் இல்லாதவர்
நன்மை என்பது இயல்பு என நண்ணினோர்
புன்மையான பொருள் விரும்பார் அவர்
தன்மை யாவரே சாற்ற வல்லார் களே.
246
   
2231.
அன்னார் தன்மை தேர் கிலை வையத்தவர் போல
உன்னா நின்றாய் ஆங்கு அவர்தம் பால் உறுகின்ற
என் ஆவிக்கும் தீங்கு நினைத்தாய் இவை எல்லாம்
உன் ஆவிக்கும் இத் தலைமைக்கும் ஒழிவன்றோ.
247
   
2232.
தீதா கின்ற வாசகம் என்றன் செவி கேட்க
ஓதா நின்றாய் மேல் வரும் ஊற்றம் உணர்கில்லாய்
பேதாய் பேதாய் நீ இவண் நிற்கப் பெறுவாயோ
போதாய் போதாய் என்று உரை செய்தான் புகர்
                                  இல்லான்.
248
   
2233.
கேட்டான் மைந்தன் கூறிய மாற்றம் கிளர் செந்தீ
ஊட்டா நின்ற கண்ணினன் யான் அச்சுறும் ஆற்றல்
காட்டா நின்றாய் நம் உயிர் கூற்றன் கைக் கொள்ள
மாட்டான் என்றே எண்ணினை கொல்லோ வலி
                                   இல்லாய்.
249
   
2234.
என்றான் வானத் தேறென ஆர்த்தான் இவன் நேரே
நின்றால் வாரான் என்று நினைந்தே நெடு நீலக்
குன்றாம் என்னப் பாலகன் முன்னம் கொலை வேலான்
சென்றான் பாசம் வீசுவதற்குச் சிந்தித்தான்.
250
   
2235.
எறிந்தான் பாசம் ஈர்த்திடல் உற்றான் இது போழ்தில்
அறிந்தான் தானும் ஈசனை ஏத்தி அடி நீழல்
பிறிந்தான் அல்லன் மற்று இனி இந்தப் பெருமைந்தன்
மறிந்தான் அன்றோ என்று இமையோரும் மருள் உற்றார்.
251
   
2236.
ஈர்க்கும் பாசம் கந்தர முற்றும் இடர் இல்லா
மார்க் கண்டன் முன் தோன்றினன் நின்பால் வருதுன்பம்
தீர்க்கின்றாம் நீ அஞ்சலை என்றே திரை ஆழிக்
கார்க் கண்டத்துக் கண்ணுதல் ஐயன் கழறு உற்றான்.
252
   
2237.
மதத்தான் மிக்கான் மற்றிவன் மைந்தன் உயிர் வாங்கப்
பதைத்தான் என்னா உன்னி வெகுண்டான் பதி மூன்றும்
சிதைத்தான் வாமச் சேவடி தன்னால் சிறிது உந்தி
உதைத்தான் கூற்றன் விண் முகில் போல் மண் உற
                                     வீழ்ந்தான்.
253
   
2238.
வீழும் காலத்து அம்புயன் ஆதி விண்ணோர்கள்
வாழும் தன்மைத்து எவ் உலகு என்னா மறுகுற்றார்
சூழும் வேலை ஆர்த்திலது அண்டத்துத் தொகை
                                  எல்லாம்
கீழும் மேலும் நெக்கன பாரும் கிழிந்தன்றே.
254
   
2239.
பாங்காய் நின்ற தானையும் ஊரும் பகடும் தான்
ஏங்கா நின்றே பார் மிசை வீழா இறவுற்ற
தீங்காய் நின்ற செய்வினையாளர் சிதைவாகிப்
போங்காலத்தில் சேர்ந்தவர் தாமும் போகாரோ.
255
   
2240.
அந்தக் காலத்து எம் உயிர் காப்பான் அரன் உண்டால்
வந்தக் கூற்றன் என் செய்வன் என்னா வட தொன்நூல்
சந்தப் பாவில் போற்றுதல் செய்தே தனி நின்ற
மைந்தர் காணூஉ எம் பெருமானும் மகிழ் உற்றான்.
256
   
2241.
மைந்த நீ நமை வழுத்தி மாசு இலா
முந்து பூசனை முயன்ற தன்மையால்
அந்தம் இல்ல தோர் ஆயுள் நிற்குயாம்
தந்து நல்கினாம் என்று சாற்றினான்.
257
   
2242.
சாற்றும் எல்லையில் தனது தாளிணை
போற்று கின்றவன் பூசை செய்திடும்
ஏற்ற தாணுவுக்கு இடையது ஆகவே
கூற்றின் கூற்றுவன் குறுகுற்றான் அரோ.
258
   
2243.
மறையவன் கணும் மன்னு தென் புலத்து
இறையவன் கணும் இகல் பற்றின்று அரோ
அறிவர் தேர் குறின் ஐயன் செய்தன
முறையது ஆகுமால் முதன்மைப் பாலதே.
259
   
2244.
நின்ற மைந்தனும் நித்தன் மேனியை
ஒன்றும் அன்பினால் உன்னியே மணி
கன்றிகை எனும் கடவுள் ஆலயம்
சென்றுநாதன் தாள் சென்னி சேர்த்தினான்.
260
   
2245.
புந்தி நைந்திடப் புலம்பி நாட்ட நீர்
சிந்தும் வேலையில் திளைத்துச் சாம்பிய
தந்தை அன்னைதாள் தழுவித் தாழ்ந்திடா
முந்தும் ஆகுலம் முழுதும் மாற்றினான்.
261
   
2246.
அங் கண் சில்பகல் அமர்ந்து நீங்கியே
செம் கண் ஏறுடைச் செல்வன் மல்கியே
தங்குகின்ற நல் தானம் யாவையும்
பொங்கு காதலில் போற்றல் மேயினான்.
262
   
2247.
அத்தன் ஆலயம் அனைத்தும் வைகலும்
பத்தியோடு முன் பரவியே மிகும்
சுத்தன் ஆகியே தொலைவில் ஆர் உயிர்
முத்தி எய்தினான் முழுதும் உணர்ந்துளான்.
263
   
2248.
விண்ணின் பால் உளன் விரும்பிப் போற்றுவோர்
கண்ணின் பால் உளன் கருத்தின் பால் உளன்
மண்ணின் பால் உளன் மற்று அவன் செயல்
எண்ணின் பாலதோ இசையின் பாலதோ.
264
   
2249.
முண்டகத்து இடை முளைத்தவன் துயில்
கொண்ட எல்லையைக் குணிக்கில் ஆவது என்
அண்டம் நல்கியோன் துஞ்ச ஆங்கு அவன்
கண்ட கற்பமோ கணக்கு இலாதவே.
265
   
2250.
அன்னவன் தனை அலக்கண் செய்திடும்
தென்னவன் உயிர் சிதைந்து போதலால்
பன்னகத்து இறை பரித்த பார் மிசை
மன்னு பல் உயிர் வளர்ந்து மல்கிற்று ஏ.
266
   
2251.
முடிவின்றாம் உயிர் முற்றும் பல்பகல்
மடிவு இன்று ஆகியே மலியும் பான்மையால்
படியின் மங்கையும் பரம் பொறாது மால்
அடியில் வீழ்ந்து தன் அயர்வு கூறினான்.
267
   
2252.
கொண்டல் வண்ணனும் குலிச பாணியும்
புண்டரீகம் மேல் பொலிந்த போதனும்
அண்டர் யாவரும் அணுகி ஆலமார்
கண்டன் மேவுறும் கயிலை மேவினார்.
268
   
2253.
காவி அம்மலர் கடுத்த கந்தரத்
தேவு பொன்பதம் சென்னி சேர்த்தியே
தாவில் பங்கயச் சதுர் முகத்தனும்
பூவை வண்ணனும் போற்றல் மேயினார்.
269
   
2254.
நீல கண்டனும் நிமலன் முன்னரே
சாலும் அன்பொடும் தாழ்ந்து போற்றலும்
மாலை நோக்கி நீர் வந்தது என் என
ஏலும் ஆற்றினால் இதனைக் கூறுவான்.
270
   
2255.
பங்கயமிசை வரு பகவன் ஆதியா
இங்கு உள தலைவர்கள் எவரும் இத்துணைத்
தங்கள் தம் அரசியல் தவாது போற்றினார்
அங்கு அவர் தமக்கு நீ அளித்த வண்ணமே.
271
   
2256.
ஐய நீ எனக்கு முன் அளித்த காப்பினைத்
துய்ய நின் திரு அருள் துணையது ஆகவே
வைகலும் புரிகுவன் வழாது மற்று அதற்கு
எய்தியது ஓர் குறை இசைப்பன் கேட்டி நீ.
272
   
2257.
நின் பெரும் திருவருள் நினைகிலாமையால்
தென்புலக் கோமகன் சிதைந்து போயினான்
மன்பதைக் குலம் பிற வளர்ந்து மிக்கன
துன்பம் உற்றனள் அவை சுமக்கும் பூ மகள்.
273
   
2258.
தன் புடை எவற்றையும் தாங்கு கின்றவள்
துன்புற உயிர் எலாம் தோன்றித் தோன்றியே
பின் பிறவா மலே பெருகி வைகுமேல்
என்படும் என்படும் எனது காவலே.
274
   
2259.
இறுத்திடும் அரசினுக்கு எவரும் இல்லை நீ
செறுத்திடல் அந்தகன் செய்த தீமையைப்
பொறுத்தருள் அவன் தனைப் புரிதி ஈங்கிது
மறுத்திடல் என்றடி வணங்கி வேண்டவே.
275
   
2260.
அந்தக எழுக என அமல நாயகன்
முந்து அருள் புரிதலும் முடிந்த கூற்றுவன்
வந்தனன் தொழுதனன் வணங்கி தாள் பட
உய்ந்தனன் அடியன் என்று உணர்ந்து போற்றினான்.
276
   
2261.
போற்றிடும் தருமனைப் புராரி நோக்கியே
சாற்றிடு கின்றனன் தயங்கு கண்டிகை
நீற்றொடு புனைந்து எமை நினையும் நீரர்பால்
கூற்றுவன் யான் எனக் குறுகு வாயலை.
277
   
2262.
நண் அரும் கதி பெறு நமது தொண்டரை
மண் உலகத்தவர் மனிதரே என
எண்ணலை அவர் தமை யாம் என்று எண்ணுதி
கண்ணுறின் அன்னவர் கழலின் வீழ்தியால்.
278
   
2263.
கண்ணிய மனம் மொழி காயம் ஈறதா
எண்ணிய கருவிகள் இடையது ஆகவே
புண்ணிய மொடு பவம் புரியும் ஏனையர்
விண்ணொடு நிரய மேல் மேவச் செய்தி நீ.
279
   
2264.
என்று அருள் புரிந்து நின் படையொடு ஏகு என
மன்றமர் அடிமிசை வணங்கி முன்னரே
பொன்றிய பகட்டு ஒடும் பொருநர் தம்மொடும்
தென் திசை புகுந்து தன் செயலின் மேவினான்.
280
   
2265.
சித்த சற்புரி தரு செங்கண் மான்முதல்
மொய்த்திடு கடவுளர் முனிவர் மும்முறை
நித்தனை வணங்கினர் கயிலை நீங்கினர்
தத் தமது உறையுளில் சார்தல் மேயினார்.
281
   
2266.
கொல் நவில் அடுபடைக் கூற்றன் பண்டு போல்
இன்னமும் விளைகுவது என்கொலோ எனா
மன் அருள் பெற்ற மார்க் கண்டன் மாக்கதை
பன்னினர் முன்னமும் படர்தற்கு அஞ்சும் ஆல்.
282
   
2267.
ஆதலில் குச்சகன் அரும் தவத்தில் ஓர்
மாது உயிர் அளித்தனன் மால் களிற்றினைக்
காது கை நீக்கி ஒண் கடவுள் ஆக்கியே
மேதகு விண் இடை மேவச் செய்தனன்.
283
   
2268.
உதவிய மிருககண் டூயன் மால் அயன்
முதலவர் புகழ் தரு முதன்மை பெற்றனன்
விதி முறை அவன் அருள் மிருகண்டு ஒப்பில் ஓர்
புதல்வனைப் பெற்றனன் புரிந்த நோன்மையால்.
284
   
2269.
அப்பெரும் திருமகன் ஆற்றும் நோன்பினால்
தப்பரும் விதியினைத் தணந்து கூற்றுவன்
துப்பினை அகற்றியே தொலைவு கண்டு பின்
எப்பொழுதத்தினும் இறப்பு இன்று ஆயினான்.
285