முகப்பு |
மாயையுப தேசப் படலம்
|
|
|
2270.
|
அன்னது சரதமே அறிதிர் ஆதலால்
இன்னமும் மொழிகுவன் இயற்று நோன்பு என முன்னுறு காசிப முனிவன் செப்பலும் நல் நய மாயவள் நகைத்துக் கூறுவாள். |
1 |
|
|
|
|
|
|
|
2271.
| மறை தெரி முனிவ நீ வாய்மை ஆகிய உறுதியை மொழிந்தனை உயர்ந்த வீடு உறும் அறிவுடை முனிவரர்க்கு அன்றி நாம் அருள் சிறுவருக்கு இத்திறம் செப்பல் ஆகுமோ. |
2 |
|
|
|
|
|
|
|
2272.
| நன் பெரும் செல்வமும் நவை இல் கொற்றமும் இன்பமும் அழிவிலாது இருக்கும் ஆயுளும் மன்பெரும் சீர்த்தியும் மறு இல் வாழ்க்கையும் அன்பு உடை இனையவர் அடைதல் வேண்டும் ஆல். |
3 |
|
|
|
|
|
|
|
2273.
| காதலால் அவை எலாம் கடிதில் பெற்றிட மாதவ முனிவர வருத்தி என்றலும் ஈது கொலோ உனது எண்ணம் நீ அவர்க்கு ஆதகும் இயல்பினை அறைதி என்னவே. |
4 |
|
|
|
|
|
|
|
2274.
| மாயவள் தன் சிறார் வதனம் நோக்கியே தூய இம் முனிவரன் சொற்றது உண்மையே ஆயினும் உங்களுக்கு ஆவது அன்று அவை நீயிர்கள் கேண்ம் என நெறியில் கூறுவாள். |
5 |
|
|
|
|
|
|
|
2275.
| மால் படு புந்தியின் மறு இல் சேதனம் பால் படும் உயிர்க்கு எலாம் பவத்தின் மாண் பயன் நூல் படு கல்வியின் நுவல் வளத்தினின் மேல் படுகின்றது இல் விழுமிது இல்லையே. |
6 |
|
|
|
|
|
|
|
2276.
| திருமை கொள் வளனொடு தீது இல் கல்வியாம் இருமையின் ஒன்றினை எய்திடாது எனின் அருமை கொள் அவ்வுயிர் அதனின் ஆற்றவும் பெருமையது உடையது பேயின் தோற்றமே. |
7 |
|
|
|
|
|
|
|
2277.
| பிறந்த நல் உயிர்க்கு எலாம் பெருமை நல்கிய இறந்ததோர் பொருண்மையது இரண்டின் வன்மையும் அறிந்தவர் தெரிவரேல் அரிய கல்வியில் சிறந்தது திரு வெனச் செப்பல் ஆகுமால். |
8 |
|
|
|
|
|
|
|
2278.
| சொல் தரு கலை எலாம் தொடர்ந்து பல் பகல் கற்றவர் ஆயினும் கழி நிரப்பினால் அற்றவர் ஆவரே ஆக்கம் வேண்டியே பற்று அலர் தம்மையும் பணிந்து நிற்பர் ஆல். |
9 |
|
|
|
|
|
|
|
2279.
| அளப்பரும் கல்வியும் ஆக்கம் யாவையும் கொளப்படும் தன்மையில் குறை உறாதவை வளர்த்தலின் மேதக வனப்புச் செய்தலில் கிளத்திடின் மேலது கேடில் செல்வமே. |
10 |
|
|
|
|
|
|
|
2280.
| நூல் உறு கல்வியை நுனித்து நாடியே வால் அறிவு எய்திய வரத்தினோர்களும் மேல் உறு திருவொடு மேவுறார் எனின் ஞாலம் அங்கவர் தமை நவையுள் வைக்குமால். |
11 |
|
|
|
|
|
|
|
2281.
| அளப்பரும் விஞ்சையே அன்றி மேன்மையும் உளப்படும் தருமமும் உயர்ந்த சீர்த்தியும் கொளப்படு கொற்றமும் பிறவும் கூட்டலால் வளத்தினில் சிறந்தது மற்று ஒன்று இல்லையே. |
12 |
|
|
|
|
|
|
|
2282.
| ஆக்கம் இங்கு ஒருவரால் அணுக வேண்டுமேல் ஊக்கம் உண்டாவரேல் உறுவர் அன்னது நீக்கம் இல் கொள்கையின் நிற்பரே எனின் மேக்கு உறு பெரும் திரு விரைவின் மேவும் ஆல். |
13 |
|
|
|
|
|
|
|
2283.
| அவ்வளம் பல வகைத்து ஆகும் ஆங்கு அவை எவ்வரும் பெறுகிலர் இயல்பின் யாவையும் செவ்விதின் நீர் பெறச் சிந்தை செய்யுமின் உய்வது வேறு இலை உறுதி ஈது அலால். |
14 |
|
|
|
|
|
|
|
2284.
| எங்கள் பால் நென்னலின் யாமம் தோன்றலால் துங்கமா நிருதர் தம் கதியில் துன்னினீர் உங்களுக்கு ஒன்னலர் உம்பர் யாவரும் தங்கள் தம் முயற்சியால் தலைமை பெற்று உளார். |
15 |
|
|
|
|
|
|
|
2285.
| நீவிர்கள் அனையரின் நிவந்த கொள்கையர் ஆவிர்கள் போலும் ஆல் ஆக்கம் எய்துவான் மூவிரும் முயலுதிர் முயலும் பெற்றியை ஏவிரும் கேட்க யான் எடுத்துக் கூறுகேன். |
16 |
|
|
|
|
|
|
|
2286.
| ஆனது ஓர் இத்திசை ஆலம் தீவு எனத் தான் அறை கிற்பர் இத்தரைக்கு நேர் அதாய்ப் போனது ஓர் உத்தர பூமி ஆயிடை தானவர் நோற்றிடத் தகுவது என்பதே. |
17 |
|
|
|
|
|
|
|
2287.
| அப்புவி அதன் இடை ஆற்றற்கு ஈறு இலா இப்பரிசனம் ஒடும் ஏகி ஆயிடை ஒப்பு அறு குண்டமும் ஒழிந்த செய்கையும் மெய்ப்பட இயற்றுதிர் வேள்வி செய்யவே. |
18 |
|
|
|
|
|
|
|
2288.
|
காரி கொள் இந்தனம் கதழ விட்டு முன்
ஆர் அழல் மூட்டியே அழலின் பண்டமும் சோரியும் ஊன்களும் பிறவும் தூவியே வீரர்கள் புரிதிர் ஆல் வெய்ய வேள்வியே. |
19 |
|
|
|
|
|
|
|
2289.
| செம் கண் மால் அயன் முதல் தேவர் யாவரும் எங்கள் நாயகன் என இறைஞ்ச மேதகு கங்கை வார் சடை முடிக் கடவுள் போற்றியே பொங்கு தீ வேள்வியைப் புரிதிர் பற்பகல். |
20 |
|
|
|
|
|
|
|
2290.
| அம்மகம் புரிதிரேல் அருளின் முன் உறீஇ மைம் மலி மிடறு உடை வான நாயகன் மெய்ம்மையின் நீவிர்கள் வெஃகி ஆங்கு எலாம் இம்மையின் எய்து மாறு இனிது நல்குமால். |
21 |
|
|
|
|
|
|
|
2291.
| மூண்ட இவ் வேள்வியை முயல மூவிரும் ஆண்டு சென்று உற்றுழி அன்னதற்கு அவண் வேண்டிய பொருள் எலாம் வேறு வேறதா ஈண்டு உற உதவுவன் ஏகுவீர் என்றாள். |
22 |
|
|
|
|
|
|
|
2292.
| தந்திர நெறிகளும் தவறு இல் பான்மையும் மந்திர முறைகளும் மற்றும் உள்ளவும் இந்திரவளன் உறும் இயல்பின் மூவர்க்கும் முந்திர உதவிய முதல்வி நல்கினாள். |
23 |
|
|
|
|
|
|
|
2293.
| இன்னது ஓர் காலையில் ஈன்ற மாயவள் தன்னொடு தந்தையைத் தாழ்ந்து போற்றியே அன்னவர் விடுத்திட அவுணர் மேலையோன் பின்னவர் தம் ஒடும் பெயர் உற்று ஏகினான். |
24 |
|
|
|
|
|
|