முகப்பு |
மாயை நீங்கு படலம்
|
|
|
2294.
|
ஏகிய காலையில் இணை இல் மாயவள்
மோகமொடு அயல் உற முனியை நோக்கியே போகுவன் யான் இனிப் புதல்வர்ப் பேணுவான் நீ கவலேல் என நிறுவிப் போயினாள். |
1 |
|
|
|
|
|
|
|
2295.
| போதலும் முனிவரன் புந்தி உள் உறும் ஆதரம் உந்திட அவள் பின் ஏகியே ஏதிலன் ஆம் என எனை விட்டு ஏகுதல் நீதி அது ஆகுமோ உரைத்தி நீ என்றான். |
2 |
|
|
|
|
|
|
|
2296.
| ஆய் இழை புகலுவாள் அழுங்கல் மாதவ சேயினர் பொருட்டு உனைச்சேர்ந்தது அன்றி ஈண்டு ஏயது நின்னுடன் இருக்க அன்றி யான் மாயவள் அறிக என மறைந்து போயினாள். |
3 |
|
|
|
|
|
|
|
2297.
| அருவினள் சேறலும் அற் புதத்தவள் வரு பொருள் யாவையும் மறைந்து போயின வெரு அரு முறை புரி வேந்தை விட்டு அகல் திருவொடு பெயர்வது ஓர் செல்வம் போலவே. |
4 |
|
|
|
|
|
|
|
2298.
| மாணலன் எய்திய மாயை தன் உருக் காண் அலன் ஆகிய கமலத்தோன் மகன் பூண் அலன் தெளிவினைப் பொருமி ஏங்கியே ஆண் அலன் அழி உற அழுங்கி மாழ்குவான். |
5 |
|
|
|
|
|
|
|
2299.
| வாவியும் தடங்களும் வரையும் ஏனவும் தேவரும் காமுறச் செறிந்த அற்புதம் யாவையும் காண்கிலான் இரங்கி நின்றனன் ஆவியில் குரம்பையன் ஆகும் என்னவே. |
6 |
|
|
|
|
|
|
|
2300.
| மைந்தனது உறுதுயர் மலரின் மேவிய தந்தை தன் உணர்வினால் தகவின் நாடியே அந்தர நெறியில் வந்து அங்கண் மேவலும் எந்தை வந்தனன் கொல் என்று எழுந்து தாழவே. |
7 |
|
|
|
|
|
|
|
2301.
| ஆசிகள் செய்து நின் அரிய நோன்பு ஒரீஇக் காசிப மெலிவது கழறுக என்றலும் பேசினன் நிகழ்ந்தன பிரமன் கேட்டு உளம் கூசினன் அவன் மனம் கொள்ளத் தேற்றுவான். |
8 |
|
|
|
|
|
|
|
2302.
| வேதமும் கலைகளும் உணர்ந்து மேலதாம் மூது அறிவு எய்திய முனிவ நீ ஒரு மாது தன் பொருட்டினால் மையல் எய்தியே பேதுறு கிற்றியோ பேதை மாந்தர் போல். |
9 |
|
|
|
|
|
|
|
2303.
| கண்டது ஓர் நறவமே காமமே என எண்டரு தீப் பொருள் இருமைத்து என்பர் ஆல் உண்டு உழி அழிக்கும் ஒன்று உணர்வை உள்ளம் மேல் கொண்டு உழி உயிரையும் கொல்லும் ஒன்று அரோ. |
10 |
|
|
|
|
|
|
|
2304.
| உள்ளினும் சுட்டிடும் உணரும் கேள்வியில் கொள்ளினும் சுட்டிடும் குறுகி மற்று அதைத் தள்ளினும் சுட்டிடும் தன்மை ஈதினால் கள்ளினும் கொடியது காமத் தீயதே. |
11 |
|
|
|
|
|
|
|
2305.
| ஈட்டு உறு பிறவியும் வினைகள் யாவையும் காட்டியது இனையது ஓர் காமம் ஆதலின் வாட்டம் இல் புந்தியான் மற்று அந் நோயினை வீட்டினர் அல்லரோ வீடு சேர்ந்து உளார். |
12 |
|
|
|
|
|
|
|
2306.
| நெஞ்சினும் நினைப்பரோ நினைந்து உளார் தமை எஞ்சிய துயர் இடை ஈண்டை உய்த்து மேல் விஞ்சிய பவக் கடல் வீழ்த்தும் ஆதலால் நஞ்சினும் தீயது நலம் இல் காமமே. |
13 |
|
|
|
|
|
|
|
2307.
| ஆதலில் காமம் உற்று அழுங்கல் நீ புணர் மாதரும் வஞ்சக மாயை ஆகும் ஆல் தீது இவண் இழைத்தனை தீரத் தொன்மை போல் நீ தவம் புரிக என நிறுவி ஏகினான். |
14 |
|
|
|
|
|
|
|
2308.
| மாறு அகல் நான்முகன் வாய்மை தேர்தலும் தேறினன் மையல் நோய் தீர்ந்து காசிபன் ஏறு அமர் கடவுளை இதயத்து உன்னியே வீறு ஒடு நோற்றனன் வினையின் நீங்குவான். |
15 |
|
|
|
|
|
|
|
2309.
| ஆண்டு அவண் அகன்றிடும் அணங்கு தன் சிறார் மூண்டிடு தீமகம் முயலும் எல்லையில் வேண்டியது உதவுவான் விமலன் போற்றியே பூண்டனள் பெரும் தவம் புகரின் ஏவலால். |
16 |
|
|
|
|
|
|
|
2310.
|
காசிபன் மாயையைக் கலந்த வண்ணமும்
ஆசுறும் அவுணர்கள் வந்த வண்ணமும் பேசினம் அங்கு அவர் பெற்ற பேற்றினை ஈசனது அருளினால் இனி இயம்புவாம். |
17 |
|
|
|
|
|
|