முகப்பு |
உருத்திரர் கேள்விப் படலம்
|
|
|
2734.
|
மன்னவர் மன்ன கேண்மோ மற்று இது புகல்வன் வேதா
முன் ஒரு கற்பம் தன்னில் மூவகை உலகும் நல்கித்
துன் உயிர் முழுதும் நல்கித் துண் என அகந்தை கொண்டு
தன்னையும் பரம் என்று உன்னித் தாணுவை அயர்த்தான்
அன்றே.
|
1 |
|
|
|
|
|
|
|
2735.
|
எந்தையை மறந்து போதன் யாவையும் விதித்த லோடும்
தந்திடும் அளவே அன்றிச் சராசரம் பெருகா வாக
நொந்தனன் குறை என்ன என்றே நோக்கினன் எமை
முன் ஈன்ற
ஐந்தொழில் முதல்வன் தன்னை அயர்த்தனன் போலும்
என்றான்.
|
2 |
|
|
|
|
|
|
|
2736.
|
இனி அவன் அருள் பெற்று அன்றி இவ் விதி முடியாது
என்னாத்
தனயனும் அளவு இல் காலம் தவம் புரிந்திடவும்
முக்கண்
பனி மதி முடியோன் அன்னான் பால் படாது ஒழிய
அந்தோ
வினையினேன் முன்னம் தாதை வெளிப்படும் எவன்
கொலோ
என்றான். |
3 |
|
|
|
|
|
|
|
2737.
|
கழி உடல் புயம் மேல் கொண்ட கண் நுதல் உறாதது
உன்னி
இழுதையர் என்ன ஏங்கி இன்னல் உற்று உயிர்த்து
வல்லே
அழுதனன் மகவென் செய்வான் அன்னது ஓர் வேலை
கண்ணீர்
விழ விழ அலகை ஆகி மிக எழுந்து ஈண்டிற்று
அன்றே. |
4 |
|
|
|
|
|
|
|
2738.
|
காண்டலும் அலகை ஈட்டம் கருத்திடர் உழப்ப வீழ்ந்து
மாண்டனன் போலச் சோர மன் உயிர்க்கு உயிராய் நின்ற
ஆண்தகை உணர்வு நல்கி அனையவன் கனவில் நண்ணி
ஈண்டு இனி வருந்தல் மைந்த எழுக எனா அருளிச்
செய்வான். |
5 |
|
|
|
|
|
|
|
2739.
|
மதித்தனை பரம் என்று உன்னை மறந்தனை எம்மை
அற்றால்
விதித் திறம் கூடிற்று இல்லை விரைந்தது முடிய நந்தம்
பதத்து உளார் தம்மை உன்றன் பாங்கு உற விடுத்தும்
என்றான்
உதித்திடல் இறத்தல் இன்றி உலகு அளித்து உதவும்
ஐயன். |
6 |
|
|
|
|
|
|
|
2740.
|
அந்நெறி கனவில் காணும் அற்புதத்து எழுந்து வேதன்
செந்நெறி பூண்டு வைகிச் சிந்தையில் தேற்றம் எய்தி
உன்னலும் அறுவர் ஐவர் உருத்திர கணத்தோர் தாதை
தன் அருள் அதனால் நெற்றித் தலத்தினும் போந்து
நின்றார். |
7 |
|
|
|
|
|
|
|
2741.
|
நிற்றலும் அவரை நோக்கி நெற்றி அம் தலத்தில் நீவிர்
உற்றதை எவன் கொல் என்ன உன் செயல் முடியும்
ஆற்றால்
மற்று எமை விடுத்தான் நம்பன் ஆதலின் வந்தேம்
என்றார்
பற்று அலர் புரம் மூன்று அட்ட பண்ணவன் வடிவம்
கொண்டோர்.
|
8 |
|
|
|
|
|
|
|
2742.
|
பரமனது உருவாய் நின்றோர் பதினொரு வோரும்
இவ்வாறு
அருள் செய விரிஞ்சன் கேளா அன்பினால் என்பால்
வந்தீர்
விரைவுடன் உயிர்கள் தம்மை விதிக்குதிர் என்னத்
தத்தம்
உருவு போல் பதினோர் கோடி உருத்திரர்
தொகையைத் தந்தார். |
9 |
|
|
|
|
|
|
|
2743.
|
ஆங்கு அது தெரிந்து வேதா ஆவிகள் வினைக்கு ஈடு
அன்றி
நீங்கள் இவ்வாறு செய்கை நெறியது அன்று
என்னலோடும்
ஓங்கிய உருத்தி ரேசர் ஒல்லை எம் பதத்தில் போதும்
ஈங்கு இவண் உயிரை முன்போல் ஈந்தனை இருத்தி
என்றார். |
10 |
|
|
|
|
|
|
|
2744.
|
என்று இவை உரைத்துப் போதன் யாவையும்
படைப்பான் நல்கி
ஒன்றிய உணர்வின் மிக்க உருத்திரர் யாரும் வெள்ளிக்
குன்று உடை முதல்வன் தொல் நாள் கொடுத்திடும்
புவனம் புக்கார்
அன்று தாம் அளித்து உளோரை அமர ரோடு இருத்திர்
என்றார். |
11 |
|
|
|
|
|
|
|
2745.
|
அவனியை அளித்தோன் தன்பால் அடைந்துளார்
அண்டம் தன்னில்
புவனம் மேல் இருந்தார் அன்னார் புரிந்திடத் தொல்
நாள் வந்த
பவர் முதல் உருத்தி ரேசர் பதினொரு கோடி உள்ளார்
இவர் சிவன் அருளால் வானோர் இனத்துடன் ஈண்டி
உற்றார். |
12 |
|
|
|
|
|
|