முகப்பு |
பட்டாபிடேகப் படலம்
|
|
|
2774.
|
மற்று அவ் வீர மகேந்திரம் நண்ணியே
உற்று நாடி அவ் வும்பர் தம் கம்மியன் கற்ற விஞ்சை வியந்து களிப்பு உறீஇக் கொற்ற நீடு தன் கோயிலை நண்ணினான். |
1 |
|
|
|
|
|
|
|
2775.
| நண்ணுகின்று உழி நான்முகன் ஆதியாம் விண் உளோர்கள் வியன் முடி சூட்டுதும் அண்ணலுக்கு என்று அவற்றிற்கு வேண்டிய எண் இல் பல் பொருள் யாவும் உய்த்தார் அரோ. |
2 |
|
|
|
|
|
|
|
2776.
| கோவில் நண்ணிய கொற்றவன் மற்றொரு தாவில் பீடிகைதன் மிசை வைகியே மாவுலாவிய மால் கடல் தெண் புனல் தேவர் ஆட்டச் சிறப்புடன் ஆடினான். |
3 |
|
|
|
|
|
|
|
2777.
| ஆடி அம் பொனின் ஆடை உடீஇ மலர் சூடி ஒண் கலன் தூயன பூண்டு பின் பீடு சேர்தரு பின்னவர் பால் வர நீடு காதல் நிருதர் புகழ்வே. |
4 |
|
|
|
|
|
|
|
2778.
| நிகர் இலா நிருதர்க்கு இறை தொழப் புகரு மாமுனிவோரும் புகழ்ந்திட மிக நடுங்கிய விண்ணவர் போற்றி மகபதிக்கு மனம்தளர்வு எய்தவே. |
5 |
|
|
|
|
|
|
|
2779.
| வந்து சீய மணித் தவிசு ஏறினன் அந்த எல்லையில் அச்சுதற்கு ஆம் எனும் இந்திரத் திரு மா முடி ஏந்தியே சுந்தரத் தொடு நான்முகன் சூட்டினான். |
6 |
|
|
|
|
|
|
|
2780.
| கண்டு தானவர் காசிபன் காதலன் புண்ட ரீகப் பொலன் கழல் தாழ்ந்து எழா அண்ட ஒணா மகிழ்வால் அடும் தேறலை உண்டு உளாரின் உளம் களிப்பு எய்தினார். |
7 |
|
|
|
|
|
|
|
2781.
| அன்ன வேலை அமரர் முனிவர்கள் பொன்னவா நறும் போது கரம் கொடே மன்னர் மன்னன் மணி முடியின் மிசை முன்னி வாழ்த்தி முறை முறை வீசினார். |
8 |
|
|
|
|
|
|
|
2782.
|
பாங்கு உறு தவிசின் பாலில் துணைவர் பங்கயன் மால்
தம்மை
ஈங்கு இனிது இருத்திர் என்ன இருந்தனர் ஏவலாலே
ஓங்கிய மகவான் கொண்டான் களாசி ஒண் நிதியின்
கோமான்
தாங்கினன் அடைப்பை மற்றச் சமீரணர் கவரி
கொண்டார். |
9 |
|
|
|
|
|
|
|
2783.
|
நிருதர் தம் குருசில் ஆன நெடும் தகை உடைவாள்
கொண்டான்
பரிதியும் மதியும் அம்கண் பனிக்குடை நிழற்றி நின்றார்
வருணனும் மகாரும் ஆல வட்டம் வீசினர் யாழ் வல்ல
கருடர் கந்தருவர் சித்தர் கானம் அங்கு இசையா நின்றார். |
10 |
|
|
|
|
|
|
|
2784.
|
முத்தலை அயில் வேல் ஏந்தி முறை நெறி ஆற்றும் கூற்று
மெய்த் தழல் கடவுள் தானும் வேத்திரம் ஏந்தி யாண்டும் எத்திறத்தவரும் நீங்க எரி விழித்து இடியின் ஆர்த்துப் பத்தியின் நிறுவிச் சூரன் பல்புகழ் பரவி நின்றார். |
11 |
|
|
|
|
|
|
|
2785.
|
குரைகழல் நிருதி என்போன் கோடிக மதுகைக்
கொண்டான்
இருமை சேர் குரவர் தாமும் எல்லை தீர் முனிவர்
யாரும்
திரை கெழு கங்கைத் தூநீர் செம் பொனம் கலசம்
சேர்த்துத்
துருவையின் மறையால் வாங்கித் துவலை தூர்த்து
ஆசி சொற்றார். |
12 |
|
|
|
|
|
|
|
2786.
| அரம்பை மேனகையே மிக்க உருப்பசி ஆதி ஆகி வரம்பு அறும் அமரர் மாதர் வரன் முறை விதியின் நாடி நரம்பு இயல் சுருதி பாடல் இயத்தொடு படிந்து நண்ணித் திரம் பயில் நடனம் மூன்றும் செவ்விதில் புரியல் உற்றார். |
13 |
|
|
|
|
|
|
|
2787.
|
இத்திறம் அமரர் யாரும் ஏனையர் தாமும் ஈண்டித்
தத் தமது உரிமை தன்னைத் தவா நெறி தலைக்
கொண்டு ஆற்ற
மைத்தகு சூரபன்மன் மடங்கல் அம் தவிசின் மீதே
மெய்த் திரு நிகழ மன்னிப் பின் இவை விளம்பல்
உற்றான். |
14 |
|
|
|
|
|
|