முகப்பு |
அரசு செய் படலம்
|
|
|
2788.
|
களித்திடு ஞிமிறும் வண்டும் கலந்திட நறவம் பொங்கித்
துளித்திடு துழாய் மால் தன்னைச் சூரன் ஆம் அவுணன்
பாரா
அளித்தவன் தன் மூதாதை ஆயினை அதனால் நின்னை
விளித்திடும் எல்லை தோறும் விரைந்து இவண் மேவுக
என்றான். |
1 |
|
|
|
|
|
|
|
2789.
|
செம் கமலத்தின் மேவும் திசை முகத்து ஒருவன்
தன்னைத்
துங்கமோடு அரசு செய்யும் சூரனாம் வீரன் பாரா
இங்கு நின் மைந்தரோடும் என்னிடம் தன்னில் ஏகி
அங்கம் ஐ வகையும் நாளும் அறைந்தனை போதி
என்றான்.
|
2 |
|
|
|
|
|
|
|
2790.
|
அறத்தினை விடுத்த தீயோன் அருக்கனை நோக்கி
நம் ஊர்ப்
புறத்தினில் அரண மீதாய்ப் போகுதல் அரிது கீழ்மேல்
நிறுத்திய சிகரி ஊடு நெறிக்கொடு புக்கு வான்போய்
எறித்தனை திரிதி நாளும் இளம் கதிர் நடாத்தி என்றான். |
3 |
|
|
|
|
|
|
|
2791.
|
அறை கழல் சூரபன்மன் அவிர் மதி தன்னை நோக்கிப்
பிறை என வளருமாறும் பின் முறை சுருங்கு மாறும்
மறைவொடு திரியுமாறும் மற்றினி விடுத்து நாளும்
நிறைவொடு கதிரோன் போல் இந் நீள் நகர் வருதி
என்றான். |
4 |
|
|
|
|
|
|
|
2792.
|
பொன் கழல் முதல்வன் தன்னைப் புரவலன் விரைவின்
நோக்கி
இங்கு நம் மூதூர் உள்ளோர் யாவரே எனினும் உன்னின்
அங்கு அவர் தம்பால் எய்தி அவர் பணி யாவும் ஆற்றிச்
செம் கமலம் போல் யாவர் தீண்டினும் குளிர்தி என்றான். |
5 |
|
|
|
|
|
|
|
2793.
|
சுடர் முடி அவுணர் செம்மல் தொல் பெரும் கூற்றை
நோக்கிப்
படி முழுது உயிரை நாளும் படுப்பது போல நம் தம்
கட மத கரியை மாவைக் கணிப்பு இலா அவுணர் தம்மை
அடுவது கனவும் உன்னாது அஞ்சியே திரிதி என்றான். |
6 |
|
|
|
|
|
|
|
2794.
|
அண்டரும் உலவை யானை அவுணர் மாத் தலைவன்
பாரா
எண்டரும் நம் மூதூரில் யாவரும் புனைந்து நீத்த
தண் துளி நறவ மாலை தயங்கு பூண் கலிங்கம் சாந்தம்
நுண் துகளாடு சுண்ணம் மாற்றுதி நொய்தின் என்றான். |
7 |
|
|
|
|
|
|
|
2795.
|
காவலன் வருணன் தன்னைக் கண் உறீஇ நம் மூதூரில்
நாவி வெண் பளிதம் சாந்தம் நரந்தமோடு அளாவித்
தீம்பால்
ஆவியின் வெளிய நொய்ய அரும் பனி நீரில் கூட்டித்
தூவுதி இடங்கள் தோறும் காற்று அது துடைக்க என்றான். |
8 |
|
|
|
|
|
|
|
2796.
|
வாசவன் தன்னை நோக்கி மால் கெழு திருவின்
மேலோன்
தேசு உறு துறக்கம் வைகும் தேவர்தம் குழுவினோடும்
ஆசை அம் கிழவரோடும் அரும் தவரோடும் போந்து
பேசிய பணிகள் ஆற்றித் திரிமதி பிழையேல் என்றான். |
9 |
|
|
|
|
|
|
|
2797.
|
இந்நெறி சூரபன் மன் யாவர்க்கும் வீற்று வீற்றாத்
தன் உறு பணியின் நிற்பான் சாற்றலும் அனையர் அஞ்சி
அன்னது செய்தும் என்றே அனையவாறு ஒழுக
அன்னான்
மன்னினன் அரசில் பின்றை மணம் செய உன்னினான்
ஆல். |
10 |
|
|
|
|
|
|
|
2798.
|
மதி முகத் திருவே போல்வாள் வானவர் புனைவன் தந்த
பதும கோமளை என்று ஓதும் பாவையைப் புகரோன்
நாடிச்
சதுர் முகன் முதல் ஆம் தேவர் தானவர் பிறரும் போற்ற
விதி முறை வதுவை செய்து விழைவொடு மேவி உற்றான். |
11 |
|
|
|
|
|
|
|
2799.
|
அன்னதன் பின்னர் வானோர் அசுரர் கந்தருவர் சித்தர்
கின்னரர் இயக்கர் நாகர் கிம்புருடர் ஆதி ஆனோர்
கன்னியர் அளப்பு இலாரைக் கடி மணம் செய்து கூடித்
துன்னுபன் மலர்த்தேன் உண்ணும் சுரும்பு என இன்பம்
துய்த்தான். |
12 |
|
|
|
|
|
|
|
2800.
|
அரிமுகத்து அவுணர் வேந்தற்கு அந்தகன் மகளாய்
உள்ள
திருமிகு விபுதை தன்னைச் சீர்மணம் செய்து நல்கி
நிருதி தன் புதல்வியான நேர் இழை சவுரி தன்னைக்
கரி முக இளவல் சேரக் கடிமணம் புரிவித்திட்டான். |
13 |
|
|
|
|
|
|
|
2801.
|
இவ்வகை மணம் செய் பின்றை இரு துணைவரையும்
நோக்கி
மெய்வளம் பெற நுங்கட்கு விதித்திடும் மூதூர் ஏகி
அவ்விரு கோடி வெள்ளம் அனிகமோடு இருத்திர்
என்னாத்
தெவ்வடு சூரன் அன்னோர் செல்லுமாறு ஏவினான் ஆல். |
14 |
|
|
|
|
|
|
|
2802.
|
ஏவியே தனது தானைக்கு இறைவரில் பலரை நோக்கி
நீவிர்கள் இரண்டு கோடி நீத்தம் ஆம் அனிகத் தோடு
தீவுகள் தோறும் ஆழி இடம் தொறும் செய்த மூதூர்
மேவுதிர் விரைவின் என்னா அனையரை விடுத்தான்
மன்னோ. |
15 |
|
|
|
|
|
|
|
2803.
|
மாறு இலாத் திசைகள் எட்டும் வான் உலகு ஏழும்
இப்பால்
கூறு பாதலங்கள் யாவும் ஒழிந்த வுங் குறுகியே தன்
ஈறு இலா ஆணை போற்ற எல்லை இல் அவுணர் தம்மை
ஆறு எனும் கோடி வெள்ளத்து அனிகமோடு ஏகச்
செய்தான். |
16 |
|
|
|
|
|
|
|
2804.
| விட்டிடு காலை தானே விண்ணுமண் ணுலகும் திக்கோர் எட்டொடு பிலன் ஓர் ஏழும் ஏனைய வரைப்பும் ஆகிக் கிட்டின செறிந்து மொய்த்த கேடில் சீர் அவுணர் தானை மட்டகல் வானம் பூத்த உடுக்களின் மலிந்த அன்றே. |
17 |
|
|
|
|
|
|
|
2805.
|
எங்கணும் தனது தானை இடையறா தீண்டலோடும்
துங்க வெம் சூரபன்மன் தான் உறை தொல் மூதூரில்
அங்கண் ஓர் இலக்கம் வெள்ளத்து அவுணர் தம்
தானை தன்னை
மங்கல இருக்கை தோறும் மரபுளி இருத்தி மன்னோ. |
18 |
|
|
|
|
|
|
|
2806.
|
கரி பரி யாளி எண்கு கடுவயப் புலியே ஏனம்
அரி மரை முகத்து வீரர் அவுணர் தம் தலைவர் ஆனோர் இருவகை நான்மை யோர்க்கும் எண் திசை நகரும் ஈந்து வருபடை அயுதத்தோடும் மகேந்திரம் காக்கச் செய்தான். |
19 |
|
|
|
|
|
|
|
2807.
|
ஞாயில்கள் செறிந்த நொச்சி நாற்பெரும் தகைமைத்து
ஆன
வாயில்கள் தோறும் நாப்பண் வளநகர் இஞ்சி தோறும்
கோயிலின் இருக்கை தோறும் குணிப்பு இலா வீரர்
தம்மை
நீயிர்கள் காமின் என்னா நிலைப்பட நிறுவி இட்டான். |
20 |
|
|
|
|
|
|
|
2808.
|
துர்க்குணன் தரும கோபன் துன்முகன் சங்க பாலன்
வக்கிர பாலன் தீய மகிடனே முதலோர் தம்மைத்
தொக்க மந்திரி களாகத் துணைக் கொடே சூரபன்மன்
மிக்க வானவர்கள் போற்ற வீற்று இருந்து அரசு
செய்தான்.
|
21 |
|
|
|
|
|
|