முகப்பு |
புதல்வரைப் பெறுபடலம்
|
|
|
2834.
|
அப்பொழுது அவுணர் கோமான் ஆற்றிய தவத்தின்
சீரால்
பதும கோமளை என்று ஓதும் பாவைதன் உதரம்
போந்து
புது மதிக் குழவியே போல் பொற்பொடு பொலிந்து
முன்னம்
மதலை அங்கு ஒருவன் வந்தான் மறலிக்கு மறலி
போல்வான். |
1 |
|
|
|
|
|
|
|
2835.
|
வந்தது ஓர் மதலை தன்னை மன்னவர் மன்னன் காணூஉ
அந்தம் இல் மகிழ்ச்சி பொங்க அவுணர்தம் கிளைஞர்க்கு
எல்லாம்
நந்திய வெறுக்கை தன்னை நலத்தக வீசல் உற்றான்
இந்திரன் முதலினோரும் யாவரும் இடுக்கண் எய்த. |
2 |
|
|
|
|
|
|
|
2836.
|
வீசிய பின்றை வானோர் மெல்லியர் அவுணர் மாதர்
ஆசிகள் புகன்று போற்றி அன்னது ஓர் மைந்தன்
தன்னைக்
காசொடு வயிர முத்தம் கதிர் பொலம் தொட்டில்
சேர்த்தார்
மாசு அகல் மதியமே போல் பைப் பைய வளர்தல்
உற்றான். |
3 |
|
|
|
|
|
|
|
2837.
|
கட்டழகு உடைய மைந்தன் கம்பலம் கொண்ட
செம்பொன்
தொட்டிலில் துயிலும் எல்லை ஒரு பகல் சுடரின் என்று
ஊழ்
விட்டது ஓர் நூழை தன்னால் மேவியே அனையன்
மெய்யில்
பட்டது அங்கு அதனை நாடிப் பரிதியைச் சுளித்துப்
பார்த்தான்.
|
4 |
|
|
|
|
|
|
|
2838.
|
பார்த்திடுகின்ற மைந்தன் பன்மணித் தொட்டில் நின்றும்
சீர்த்து எழுந்து அண்டம் பாய்ந்து செம் கதிர்ச்
செல்வன் பற்றிக்
கார்த்திடு புயங்கம் கவ்வும் படித்து எனக் கரத்தில்
கொண்டு
பேர்த்தும் ஓர் இறையில் வந்தான் தவத்தினும் பெரிது
ஒன்று உண்டோ. |
5 |
|
|
|
|
|
|
|
2839.
|
தான் உறை இருக்கை தன்னில் தகுவர் கோன் தனயன்
சாரா
ஆனது ஓர் செம் பொன் தொட்டில் அணிமணிக்
காலின் ஊடே
பானுவை வலிதில் கட்டிப் பண்டுபோல் துயின்றான்
அங்கண்
வானவர் அதனை நோக்கி மனம் வெரீஇ மறுக்கம்
உற்றார். |
6 |
|
|
|
|
|
|
|
2840.
|
பரிதி விண் சேறல் இன்றிப் பிழைத்தலும் பார் தந்து
உள்ளோன்
கருதி இந்திரனே ஏனைக் கடவுளர் யாரும் சூழ
நிருதர் கோன் தன்பால் வந்து நீடு இருள் பகைவன்
தன்னைத்
தருதி நின் மைந்தன் செய்த தனிச்சிறை நீக்கி என்றான். |
7 |
|
|
|
|
|
|
|
2841.
|
மறை புரிந்த நான் முகன் இவை புகறலும் வானத்து
இறை புரிந்திடும் இரவியை என்மகன் இன்னே
சிறை புரிந்ததை உணர்கிலேன் அவனது செய்யக்
குறை புரிந்தது என் பகர்தி என்று உரைத்தனன்
கொடியோன். |
8 |
|
|
|
|
|
|
|
2842.
| சொற்ற வாசகம் கேட்டலும் ஆர் உயிர்த் தொன்மை முற்று நாடிய நான்முகன் நின்மகன் முகமேல் அற்றம் இல் சுடர் ஆதபம் தீண்டியது அதனால் பற்றி வெய்யவன் சிறை புரிந்தான் எனப் பகர்ந்தான். |
9 |
|
|
|
|
|
|
|
2843.
| மகவு தன் செயல் கேட்டலும் சூரபன்மா வாம் தகுவர் கோன் மிக மகிழ்ந்து நீர் என் மகன் சார்ந்து மிகவும் நன்மொழி கூறியே ஆங்கு அவன் விடுப்பப் பகலவன் கொடு போதிரால் ஈண்டு எனப் பகர்ந்தான். |
10 |
|
|
|
|
|
|
|
2844.
|
கேட்ட நான்முகன் நன்று என விடை கொண்டு
கிளர்பொன்
நாட்டின் மேனகை முதலினோர் பாடலின் நலத்தால்
ஆட்டு பொன்மணித் தொட்டிலின் மிசை உறும்
அண்ணல்
மாட்டு மேவி நின்று அளவையில் ஆசிகள் வகுத்தான். |
11 |
|
|
|
|
|
|
|
2845.
|
அன்பின் மைந்தனைப் புகழ்ந்து முன் நிற்றலும்
அனையான்
என் பெறும் பரிசு உமக்கு என இன்னது ஓர் இரவி
துன்புறும் சிறை அகற்றுதி என்றலும் தொல்லோய்
உன் பெரும் படை தருதியேல் விடுவன் என்று
உரைத்தான். |
12 |
|
|
|
|
|
|
|
2846.
| உரைத்த மைந்தனுக்கு அயன் தனது அகன் படை உதவ நிரைத்த செம் கதிர்ச் செல்வனை விடுத்தனன் நிருதன் விரைத்த பங்கயக் கிழவனும் புதல்வனை வியந்து பரித்தியால் என உதவினன் மோக வெம் படையே. |
13 |
|
|
|
|
|
|
|
2847.
| படை அளித்தலும் பகலொடு பங்கயத் தவற்கு விடை அளித்தனன் தாதை அத் தன்மையை வினவி நடை அளித்தனன் புதல்வனுக்கு அன்னது ஓர் நன்னாள் இடை அளித்தனன் பானு கோபன் எனும் இயற்பேர். |
14 |
|
|
|
|
|
|
|
2848.
|
பானு கோபன் என்று ஒரு பெயர் பெற்ற அப்பாலன்
மானை நேர் விழி மங்கையர் மதன் என மயங்க
ஆன பேர் உருவு எய்தியே அம்புயத் திருவின்
கோன் ஒடே பொருதவன் தனைப் பெரும் திறல்
கொண்டான். |
15 |
|
|
|
|
|
|
|
2849.
| பரிதியின் பகையாம் இவன் பெற்றபின் பரிவால் நிருதர் காவலன் அங்கிமா முகத்தனை நிறம் சேர் இரணியன் தனை வச்சிர வாகுவை எழில் ஆர் மரு உலாம் குழல் பதும கோமளை தர மகிழ்ந்தான். |
16 |
|
|
|
|
|
|
|
2850.
| மைத்த கூர் விழி ஏனைய தேவியர் மகிழ்வால் உய்த்து நல்கிடச் சூரனாம் வெய்யவன் ஒருங்கே பத்து நூறு உள மும்மை சேர் பாலரைப் பயந்தான் இத்திறத்தவர் தம்முடன் அங்கண் வீற்று இருந்தான். |
17 |
|
|
|
|
|
|
|
2851.
|
சீற்றம் உற்றிடும் சிங்க முகன்கணே
தோற்றினான் அதி சூரன் என்ற ஓர் மகன் வீற்று நூற்றவர் மேவினர் அன்னவர் ஆற்றல் யாவர் அறைந்திட வல்லரே. |
18 |
|
|
|
|
|
|
|
2852.
| அந்த நாளில் அவன் தன் இளவல் ஆம் தந்தி மா முகத்து தாரகன் தன்னிடை முந்து செய் தவ மொய்ம்பின் ஒர் மாமகன் வந்து தோன்றினன் வான் கதிர்ப் பிள்ளை போல். |
19 |
|
|
|
|
|
|
|
2853.
| ஆம் இவன் அசுரேந்திரன் என்ற அவற்கு ஏமம் ஆன குரவன் இசைப்ப அந் நாமம் எய்தி நலம் பெறு காளையாய்க் காமன் என்னக் கவின்றனன் யாக்கையே. |
20 |
|
|
|
|
|
|
|
2854.
| ஓத அரும் கலை யாவும் உணர்கினும் ஏத மாவது ஓர் விஞ்சை இயற்றிடான் பாதகம் புரியான் பழி பூண்கிலான் நீதி அன்றி எவையும் நினைகிலான். |
21 |
|
|
|
|
|
|
|
2855.
| வீறு கொண்டு இகல் வீரம் புகன்று எதிர் மாறு கொண்டவர் உண்டு எனின் மற்று அவர் ஈறு கொண்டிட ஏற்று உர மேல் படை ஊறு கொண்டிட உன்னும் தகைமையான். |
22 |
|
|
|
|
|
|
|
2856.
| சிகரம் எண் இல சேட்படு கள்ளிதான் அகரும் நல்கி அமர்ந்து என அன்னது ஓர் மகனை நல்கி வளம் கெழு மாயமா நகர வாழ்க்கையின் நண்ணினன் தாரகன். |
23 |
|
|
|
|
|
|