| முகப்பு |
விந்தகிரிப் படலம்
|
|
|
|
|
|
2936.
|
அந்தப் பொழுதத்து அளி கொண்டு உடையோர்
சிந்தைக்கு எளிதாம் சிவன் மெய் அருளான் முந்து உற்று உணர் நாரத மா முனிவன் விந்தக் கிரி முன் உற மேவினன் ஆல். |
1 |
|
|
|
| |
|
|
|
|
|
2937.
| மேவிப் பல ஆசி விளம்புதலும் தேவப் படிவம் கொள் சிலம்பு தொழா ஆ அற்புதம் வந்தது எம் அண்ணல் என ஏவப்படும் பான்மை இசைத் திடுவான். |
2 |
|
|
|
| |
|
|
|
|
|
2938.
| மேருத் தனி வெற்பு விதிக் கரியோன் மூரிச் சிலை ஆகிய மொய்ம்பு அதனால் தாரித்து உலகு ஈன்றவள் தன் மரபால் பேர் அன்பொடு வந்து பிறக்கையினால். |
3 |
|
|
|
| |
|
|
|
|
|
2939.
| குன்றுக்கு இறையாய் உறு கொள்கையினால் என்றைத் தொட விண்ணில் எழுந்து உறலால் இன்றிப் புவி யாவையும் நித்தன் அடும் அன்றைப் பகல் காறும் அளித்திடலால். |
4 |
|
|
|
| |
|
|
|
|
|
2940.
| ஓர் ஆயிரம் ஆம் முடி உள்ளது அதனால் காரார் களன் மேய கவின் கயிலை சாரா ஒரு சார் உறு தன்மையினால் சூரான் அவனால் தொலைவில் அதனால். |
5 |
|
|
|
| |
|
|
|
|
|
2941.
| தாழும் கதிரும் தகு மேல் நெறியில் வாழும் சசியும் மலிதாரகையும் ஏழ் என்றிடும் கோளும் யாவர்களும் சூழும் படி நின்றிடும் தொன்மையினால். |
6 |
|
|
|
| |
|
|
|
|
|
2942.
| கொன்னே இமையோர் குடி கொண்டு அதனால் பொன் நேர் கொடு உயர்ந்து பொருந்துதலால் பல் நேமிகள் சூழ் வரு பான்மையினால் தன் நேர் இலை என்று தருக்கியதே. |
7 |
|
|
|
| |
|
|
|
|
|
2943.
| பரந்தும் பர் நிமிர்ந்திடும் பைம் பொன் வரை பெரும் தன்மை மதித்திடும் பெற்றியை நீ தெரிந்திலை கொல் அன்ன செயற்கை எலாம் விரைந்து உன்னொடு செப்பிய மேவினனே. |
8 |
|
|
|
| |
|
|
|
|
|
2944.
| என்றான் முனிவோன் இது கேட்டிடலும் ஒன்று ஆகியதே உருவாய் எதிரும் வன் தாழ் கிரிமா மறம் உற்று உயிரா நன்றால் இஃது என்று நகைத்து அறையும். |
9 |
|
|
|
| |
|
|
|
|
|
2945.
| இல்லாய் உள தொல் இறுமாப்பு அகலப் பல்லார் இகழப் பகரும் விதியான் அல்லார் எனவே நனி நாணம் உறா வில்லாகி வளைந்தது மேன்மை அதோ. |
10 |
|
|
|
| |
|
|
|
|
|
2946.
| பொன் ஆர் இமவான் புரி நோன்பு அதனால் அன்னான் இடை வந்து அமர் உற்றனள் ஆல் மன்னாகும் அவன் மகள் ஆயினளோ எந்நாளும் யாரையும் ஈன்று அருள்வாள். |
11 |
|
|
|
| |
|
|
|
|
|
2947.
| பாங்கு உற்றிடும் பாரினை ஆற்றுவன் என்று ஓங்கு உற்றனன் எவ்வுலகும் பரியா ஆங்கு உற்றனவோ பல அன்னவையும் தாங்கு உற்றது கண் நுதல் சத்தி அதே. |
12 |
|
|
|
| |
|
|
|
|
|
2948.
| வில் சூழ் கதிரோன் முதல் விண்ணவர்கள் தன் சூழ்ந்தனர் அல்லது சந்ததமும் எல் சூழ்ந்து இலரோ எழுதீ உளவாம் கல் சூழ்ந்து இலரோ கடல் சூழ்ந்து இலரோ. |
13 |
|
|
|
| |
|
|
|
|
|
2949.
| பன்னில் குவடும் பல உண்டு எனவே உன் உற்றிடுமோ உயர் கள்ளிகளின் சென்னித் தொகையைத் தெரிசிக்கின் அயன் தன் ஒத்து இலனோ தலை நான்கு உளவே. |
14 |
|
|
|
| |
|
|
|
|
|
2950.
|
கடிது ஆகிய சூர் இது கல் எனவே
அடராமல் விடுத்தனன் அன்று அதனை நெடிதே அது உன்னிலன் நீள் பரிதிப் படையானினும் ஆற்றல் படைத்துளனோ. |
15 |
|
|
|
| |
|
|
|
|
|
2951.
| தண் உற்றிடும் பொன்மை தயங்கு உருவம் நண் உற்றனம் என்று உளம் நாடினனோ எண் உற்றவன் நல் உணர்வு எய்திலன் ஆன் மண்ணில் புனை பாவை வனப்பு அதுவே. |
16 |
|
|
|
| |
|
|
|
|
|
2952.
| தன் கண் உறு வானவர் தாம் பலரும் என் கண் அமராமல் இகழ்ந்தனரோ நன் கண் நுதல் நாயகனார் கயிலை இன் கண் அருகு உற்றிலது எக்கிரியே. |
17 |
|
|
|
| |
|
|
|
|
|
2953.
| திருவைத் தவர்கண் துயில் செம் கண் அரா மருவித் தனை முந்து மறைத்திடு நாள் விரைவில் படர் ஊதை வெகுண்டு பறித்து ஒரு முத்தலை கொண்டது உணர்ந்திலனோ. |
18 |
|
|
|
| |
|
|
|
|
|
2954.
| கிளர்ப்பு உற்றிடும் சிம்புள் ஒர் கேசரி முன் அளப்பற்று இடு தன் உரு அண்டம் எல்லாம் வளர்ப்பு உற்றிடும் ஞான்று ஒர் மணிப் பரல் போல் குளப்பு உற்றனன் ஈது குறித்திலனோ. |
19 |
|
|
|
| |
|
|
|
|
|
2955.
| வரபத்திரை கேள் வன் மறம் புரியும் சரபத்து உரு உற்றுழி தாழ் சிறையின் விரவிப் படர் ஊதையின் மின் மினி போல் திரிகு உற்றனன் அன்னது தேற்றிலனோ. |
20 |
|
|
|
| |
|
|
|
|
|
2956.
| அறி உற்றிடும் பாரதம் ஆன எலாம் குறி உற்றிடும் தோல் முகர் குஞ்சரன் மேல் எறி உற்ற மருப்பினில் ஏடு எனலாய்ப் பொறி உற்றிடும் என்பது பொய்த்திடுமோ. |
21 |
|
|
|
| |
|
|
|
|
|
2957.
| தான் ஓர் வரை அல்லது தாரணி உண் கோனோ அலன் அல்லது கோ கதை வானோன் அலன் வாசவன் அல்லன் அவன் ஏனோ தனைமேல் என எண்ணியதே. |
22 |
|
|
|
| |
|
|
|
|
|
2958.
| என்னா வட வெற்பை இழித்து உரையா அந் நாகம் வியக்கும் அகந்தையினை நல் நாரத நீக்குவன் நாடுக எனா முன்னா உருநீத்தது மொய் வரையே. |
23 |
|
|
|
| |
|
|
|
|
|
2959.
|
எண் தரு முகுந்தர் கோடி எல்லையின் மாயை யாக்கை
கொண்டனர் திரண்டு நீண்டு குலாய் நிமிர்
கொள்கைத்து என்ன
விண் தொடர் விந்தம் ஆங்கு ஓர் விஞ்சையால்
அகன்று சேண் போய்ப்
புண்டரி கத்தன் மேய புரத்துணை நிமிர்ந்தது அன்றே. |
24 |
|
|
|
| |
|
|
|
|
|
2960.
|
உருக்கிளர் விந்தம் என்னும் உருகெழு பிறங்கல் மேல்
போய்ப்
பரக்கம் அது ஆகி அம் பொன் பனிவரை காறும்
ஆன்று
நெருக்கியது அனைய பான்மை நிலம் முழுதும் அளந்த
மேலோன்
திருக்கிளர் பொன்னந் தூசு புனைந்து எனத் திகழ்ந்தது
அம்மா. |
25 |
|
|
|
| |
|
|
|
|
|
2961.
|
விந்தம் இந் நெறியால் ஆன்று மேக்கு உறக் கிளர்ந்து
போகி
அந்தர நெறியை மாற்ற அலரி வெண்திங்கள் சேயோன்
புந்தி பொன் புகரே காரி புயங்க நாள் பிறரும் நோக்கிச்
சிந்தையில் துணுக்கம் எய்தி இனையன செப்பல் உற்றார். |
26 |
|
|
|
| |
|
|
|
|
|
2962.
|
தானவர் செயலோ என்பார் தருமம் இல் அரக்க
வெய்யோன்
ஆனவர் செயலோ என்பார் அல்ல வேல் அயன்மால்
என்னும்
வானவர் செயலோ என்பார் மாயம் மீது ஆகும் என்பார்
மேல் நிமிர் பிறங்கல் இன்றி வெள்ளிடை இலை கொல்
என்பார்.
|
27 |
|
|
|
| |
|
|
|
|
|
2963.
|
என் இது என்று போதத்து எம்பிரான் அருளால் நாட
அன்னது தெரித லோடும் ஆம் இது விந்த மேருத்
தன்னுடன் இகல் ஒன்று உண்டாய் தராதல வரைப்பில்
வானில்
சென்னெறி விலக்கிற்று என்று சிந்தனை செய்து தேர்வார். |
28 |
|
|
|
| |
|
|
|
|
|
2964.
|
செம்பொன் மால் வரையின் பாங்கில் சிவன் அடி
உன்னி நோற்றே
அம்புராசியை முன் உண்டோன் அமர்ந்தனன் அவன்
ஈண்டு உற்றால்
உம்பர் போய் நின்ற விந்தம் ஒடுங்கும் என்று யாரும்
ஓர்ந்து
கும்பமா முனியை உன்னி இனையன கூறல் உற்றார். |
29 |
|
|
|
| |
|
|