கிரவுஞ்சப் படலம்
 
2993.
பொன் திகழ் வரையின் நின்றும் குறுமுனி புவியே ஆறாத்
தென் திசைக்கு ஏகும் எல்லைத் திறல் அரிக்கு இளவல்
                                     வாழ்க்கை
வன் திறல் மாய மூதூர் வந்து எய்த ஆண்டை வைகும்
அன்றிலம் பேர் பெற்று உள்ள அவுணன் அத் தன்மை
                                    கண்டான்.
1
   
2994.
வான் உயர் உலகம் தன்னை வசுந்தரை ஆக்கும் பாரை
ஏனைய ககனம் ஆக்கும் எறிதிரைப் பரவை தன்னை
மேல் நிமிர் பிறங்கல் ஆக்கும் வெற்பினைப் புணரி
                                     ஆக்கும்
பானுவை மதியம் ஆக்கும் மதியினைப் பகலாச் செய்யும்.
2
   
2995.
அணுவினை மேரு ஆக்கும் அன்னது ஓர் மேரு வெற்பை
நுணுகிய அணுவே ஆக்கும் நொய்து எனப் புவனி
                                     தன்னைப்
புணரியது ஆக்கும் நேமிப் புணரியைப் புவனம் ஆக்கும்
இணர் உறு நேமித் தீயை எல்லை நீர் ஆகச் செய்யும்.
3
   
2996.
கன்னலின் அயுதத்து ஒன்றில் கடவுளர்க் கேனும் நீத்தோர்
என்னவர் தங்கட்கு ஏனும் எனைப் பல மாயம் சூழ்ந்து
பல் நெடும் காலம் செல்லப் படுத்திடும் என்னின் அம்மா
அன்னவன் வன்மை யாவும் ஆர் அறிந்து உறைக்கற்
                                        பாலார்.
4
   
2997.
அத்தகு தகுவர் கோமன் அடல் கிரவுஞ்சன் என்போன்
மெய்த் தமிழ் முனிவன் செல்லும் வியன் நெறி விந்தமே
                                        போல்
கொத்து உயர் குவடு மல்கிக் குன்று உருக் கொண்டு
                                      தன்பால்
உய்த்திடு மாறு போக்கி உறுதலும் குறியோன் கண்டான்.
5
   
2998.
காண்டலும் வியந்து நன்றிக் கடிவரை நடுவண் ஆக
ஈண்டிதோர் அத்தம் உண்டால் இவ்வழி நடத்தும் என்னா
ஆண்டு அதன் இடையே போக அந் நெறி குரோச
                                       எல்லை
மாண்டலும் இலதே ஆக மற்று ஒரு சுரம் உற்று அன்றே.
6
   
2999.
அந் நெறி கண்டு தொல் நூல் அறை முனி ஏகலோடும்
செல்நெறி மேல் இன்று ஆகத் திரும்பினன் செல்லும்
                                        காலை
முன் உள நெறியும் காணான் முனிவரன் மயங்க ஓர் சார்
பின் ஒரு வட்டை கண்டு பேதுறல் ஓடும் போனான்.
7
   
3000.
ஆறு அது செல்லும் எல்லை அடல் எரி கனைந்து சூழச்
சூறைகள் மயங்க மங்குல் துண் என மாரி தூவ
மாறு அகல் உருமுச் சிந்த வல் இருள் படலைச் சுற்ற
வீறு அகல் மாயை சூழ்ந்தான் எறுழ் வலி அவுணர்
                                      கோமான்.
8
   
3001.
மட்டு உறு குறிய செம்மல் மற்று அது நோக்கித் தீயோர்
பட்டிமை ஒழுக்கு ஈது என்னாப் பயின்றிடு போத நீரால்
உள் தெளி பான்மை நாட ஊழ்த்திறம் தெரிதலோடும்
கட்டு அழல் என்னச் சீறிக் கரதலம் புடைத்து நக்கான்.
9
   
3002.
நன்று நன்று அவுணன் கொல் ஆம் நமக்கு இது புரியும்
                                        நீரான்
இன்று இவன் வன்மை நீப்பன் யான் என அவுண
                                   வெய்யோன்
குன்று உரு அதனில் குற்றிக் குறுமுனி பாணித்
                                     தண்டால்
துன்றிரும் பூழை ஆக்கிச் சூள் இவை புகலல் உற்றான்.
10
   
3003.
மாண் மதி பெறாத வெய்யோய் மற்று நின் தொன்மை
                                       நீங்கி
நீள் மலையாகி ஈண்டே நின்று தீ அவுணர்க்கு எல்லாம்
ஏண் மிகும் இருக்கை ஆகி இரும் தவத்தோர்க்கும்
                                      ஏனைச்
சேண் மலி கடவுளோக்கும் தீத்தொழில் இழைத்தி பல்
                                         நாள்.
11
   
3004.
மாற்படு நமது பாணி வலி கெழு தண்டால் உன்றன்
பாற்படு புழைகள் யாவும் பல பல மாயைக்கு எல்லாம்
ஏற்புடை இருக்கை ஆக எம்பிரான் உதவும் செவ்வேள்
வேல் படை தன்னில் பின் நாள் விளிகுதி விரைவின்
                                     என்றான்.
12
   
3005.
பழிதரும் இனைய சாபம் பகர்ந்து தன் சிகரம் தன்னில்
உழிதரு புனலை வாங்கி உளம் கொள் மந்திரத்தால் வீசி
அழிதர மாயை நீக்கி ஆண்டு ஒரீஇ மீண்டு தென்பால்
வழி அது செவ்வன் நாடி வண் தமிழ் முனிவன் போனான்.
13