மாயையுப தேசப்படலம்
 
3019.
கண்டனர் இவனே போலும் காய் சினத்து அவுணர் ஆவி
கொண்டனன் வேலை முன்னம் குடித்து உமிழ்கின்ற
                                       நீரான்
அண்டரை அருள்வானாம் கொல் அடைந்தனன்
                              அவனுக்கு இன்னே
உண்டியை உதவி ஆவி கொள்ளுதும் ஊன் ஒடு என்றார்.
1
   
3020.
என்று இவை புகன்ற பின்னர் இளவல் வாதாவி என்போன்
குன்று அதன் புடையில் ஓர் சார் கொறி உருக்கொண்டு
                                       போந்து
மென் தழை புதலின் மேய வில்லவன் எனும் மேலோன்
ஒன்றிய புலத்தின் மிக்கோர் உருவு கொண்டு உற்றான்
                                       அன்றே.
2
   
3021.
மீதுறு சடையும் நீறு விளங்கிய நுதலும் வேடம்
காது அணி குழையின் சீரும் கண்டிகைக் கலனும்
                                 மேற்கொள்
பூதியும் தண்டும் கையும் புனை உரி உடையும் ஆக
மாதவ வேடம் தாங்கி முனிவன் நேர் வல்லை சென்றான்.
3
   
3022.
மெய் தரு புறத்துக் காமர் வியன் உருக் கொண்டு
                                     தன் உள்
கை தவம் கொண்டு செம் கேழ்க் காஞ்சிரம் கனிபோல்
                                        மேய
மை திகழ் மனத்தின் நேர் போய் வண் தமிழ் முனிவர்
                                      போற்றி
ஐது என வணங்கி முக்கால் அஞ்சலி செய்து சொல்வான்.
4
   
3023.
அடிகள் நீர் போத இந்நாள் அரும் தவம் புரிந்தேன்
                                        இன்று
முடிவுற வந்தீர் யானும் முனிவர் தம் நிலைமை பெற்றேன்
கொடியனேன் இருக்கை ஈதால் குறுகுதிர் புனிதம் ஆகும்
படி என உரைத்துப் பின்னும் பணிந்தனன் பதங்கள்
                                        தம்மை.
5
   
3024.
பணிதலும் ஒருதன் கையில் பரவை அம்புனலை வாரி
மணி படு பதுமம் போல வாய்க் கொளும் முனிவன்
                                     தீயோன்
துணிவினை உணரான் ஆகித் துண் என உவகை
                                     தோன்ற
இணை அறு தவத்தின் மிக்கோய் எழுதி என்று
                           இதனைச் சொற்றான்.
6
   
3025.
ஆறு எதிர் எண்மர் ஆகும் ஆயிர முனிவர் தம்பால்
வேறு உள தவத்தர் தம்பால் மிக்க நின் இயற்கை தன்னில்
கூறு செய் அணுவின் காறும் குணம் இல சரதம் ஈது
தேறுதி இருக்கை ஏது செல்லுதும் வருக என்றான்.
7
   
3026.
என்று அருள் முனியை நோக்கி ஈது எனது உறையுள்
                                      என்னச்
சென்றனன் முடிவான் வந்த தீயவன் அவன் கொண்டு ஏகி
மன்ற தன் இருக்கை உற்று மரபு உறு தவிசில் சேர்த்திப்
பொன் திகழ் அடிகட்கு ஏற்ற பூசனை புரிந்து சொல்வான்.
8
   
3027.
எந்தை நீ யானும் ஏனை என் குலத்தவரும் உய்ய
வந்தனை போலும் இந் நாள் மற்று எனது இருக்கை
                                        வைகி
வெந்திடு புற்கை யேனும் மிசைந்தனை எனக்குச் சேடம்
தந்து அருள் புரிந்து போதி தவத்தரில் தலைவ என்றான்.
9
   
3028.
சொல்வல முனிவர் மேலோன் சூர் முதன் மருகாய் உள்ள
வில்வலன் மாற்றம் கேளா விழுமிது பரிவின் மிக்கோய்
ஒல்வது ஓர் உணவு நின் பால் உவந்து யாம் அருந்திப்
                                      பின்னர்ச்
சொல்வது கடனாம் என்று செப்பினன் தீமை தீர்ப்பான்.
10
   
3029.
மேலவன் இதனைக் கூற வில்வலன் வணங்கி எந்தாய்
சீலமோடு அடிசில் செய்வன் சிறிது போது இருத்தி என்று
காலை அங்கு அதனில் ஆண்டு ஓர் கயப் புனல்
                                படிந்து மூழ்கிச்
சாலவும் புனிதன் ஆகி அடுவது ஓர் சாலை புக்கான்.
11
   
3030.
அத்தலை நிலத்தை நீரால் ஆமயம் பூசி யாண்டும்
சித்திரம் உறுத்தி யாவும் தேடி வால் வளையின் சின்னம்
ஒத்த தண்டு உல மாசு ஏக ஒண் புனல் இடையே இட்டு
முத்திறம் மண்ணி மற்று ஓர் முழு மணிக் குழிசி
                                     உய்த்தான்.
12
   
3031.
தாக்கு உறு திறலின் வெய்ய தழல் பொதி கருவி ஆன
ஆக்கிய செய்த ஒன்றில் அழலினை அதனுள் மூட்டித்
தேக்கு அகில் ஆரம் ஆட்டிச் சீர் உணத் தசும்பர்
                                      ஒன்றில்
வாக்கிய உலைப் பெய்து ஏற்றி மரபில் வால் அரி உள்
                                     இட்டான்.
13
   
3032.
பதன் அறிந்து உண்டி ஆக்கிப் பால் உற வைத்துப்
                                       பின்னர்
முதிரையின் அடிசில் இட்டு முன் உற தீம்பால் கன்னல்
விதம் மிகும் உணாக்கள் யாவும் மேவுற அமைத்துக்
                                     கொண்டு
புது மணம் கமழும் தெய்வப் புனிதம் ஆம் கறியும்
                                     செய்தான்.
14
   
3033.
ஆற்றலால் மேடம் போலாய் ஆர் இடர் உயிரை எல்லாம்
மாற்றுவான் அமைந்து நின்ற இளவலை வலிதில் பற்றிக்
கூற்றமே பேல மேவும் முனிவன் முன் கொணர்ந்து கையில்
ஏற்ற கூர் குயத்தால் ஆதி இரு துணி ஆக்கினான் ஏ.
15
   
3034.
அணிப் படு போர்வை நீக்கி அங்கமும் அகற்றி வாளால்
துணிப்பன துணித்தும் ஈர்ந்தும் சுவைத்திடும் உறுப்பு
                                   ஊன் எல்லாம்
குணிப்பொடு குட்டம் இட்டுக் குழிசிகள் பலவில் சேர்த்தி
மணிப் புனல் கொண்டு முக்கால் மரபினால் மண்ணல்
                                        செய்து.
16
   
3035.
உரைத்தவக் கறிக்கு வேண்டும் உவர் முதல் அமைந்த
                                        நல்கி
வருத்து உறு கனல் மேல் சேர்த்தி வாலிதில் புழுக்கல்
                                      செய்தே
அரைத்திடு கறியின் நுண் தூள் ஆதி தூய் இழுது
                                      பெய்து
பொரிப்பன பொரித்திட்டு ஆவி போந்திடா வண்ணம்
                                      போற்றி.
17
   
3036.
கறியின் உண் பொடியும் ஏனைக் கந்தம் ஆர் துகளும்
                                      அந்நாள்
வறையல் போகு உற்ற தூய வாலரிப் பொடியும் நீவி
உறை கெழு துப்பும் ஆக்கி ஒழுகு பல் காயம் கூட்டித்
திறன் ஒடும் அளாவி ஆங்கு ஓர் சில சில பாகு செய்து.
18
   
3037.
பின்னரும் பலகால் வேண்டும் பெற்றியில் கரித்துச் செம்மி
முன் உற அளிக்க நின்ற முதிரையின் புழுக்கல் அட்டுச்
செம் நல நீடும் கன்னல் தீம் புளிங் கறியும் செய்யா
அன்னதோர் தொடக்கம் யாவும் அருளினன் அருள்
                                      இலாதான்.
19
   
3038.
ஆசினி வருக்கை ஆதி அளவை இல் கனிகள் கீறித்
தேசு அமர் கன்னல் தீம் தேன் சேர்தரச் சிவணியேனை
வாசமும் மலரும் இட்டு வரம்பு இல அமைத்துப் புத்தேள்
பூசனைக்கு உரிய அன்பால் பொருக்கு எனக் குவவு
                                      செய்தான்.
20
   
3039.
குய்வகை உயிர்ப்பின் மாந்திக் குவலயம் விரும்புகின்ற
ஐவகை உணவும் ஆறு சுவைபட அளித்துப் பின்னும்
எவ்வகையனவும் தானே இமைப்பினில் அமைத்து வல்லே
கவ்வையினோடும் சென்று கடமுனி கழல் மேல்
                                    தாழ்ந்தான்.
21
   
3040.
எந்தை நீ இன்ன காலை இரும்பசி உடற்ற ஆற்ற
நொந்தனை போலும் மேனி நுணங்கினை தமியேன்
                                   ஈண்டுத்
தந்தனன் உணவு யாவும் தளர்வு அற நுகரு மாறு
வந்து அருள் என்று வேண்ட மற்று அதற்கு இயைந்து
                                    போனான்.
22
   
3041.
அட்டிடு சாலை மாட்டே அகத்தியற் கொடு போய்
                                      ஆங்கண்
இட்டது ஓர் இருக்கை தன்னில் இருத்தியே முகமன் கூறி
மட்டு உறு தூநீர் கந்த மலர் புகை தீபம் கொண்டு
பட்டிமை நெறியில் பூசை புரிந்து பின் பதநேர்கு உற்றான்.
23
   
3042.
தெள்ளும் சுடர்ப் பொன் இயல்கின்ற தட்டை
                    திருமுன்னர் வைத்து நிரையா
வள்ளங்கள் வைத்து மிகு நாரம் உய்த்து மரபில் திருத்தி
                                    மறையோன்
உள்ளம் குளிர்ப்ப அமுது அன்ன உண்டி உறு பேதம்
                                 யாவும் உதவா
வெள்ளம் படைத்த நறு நெய் அதன் கண் விட்டான்
                            தன் ஆவி விடுவான்.
24
   
3043.
முறை வைப்பு நாடி முதன்மைக் கண் மேவு முதிரைப்
                             புழுக்கல் மறியின்
கறிவர்க்கம் ஏனை அவை சுற்றின் மேய கவின் உற்ற
                            கிண்ணம் இசையே
உறவிட்டு நீட மதுரித்த யாவும் உடன் உய்த்து ஒழிந்த
                                     வளனும்
செறிவித்து மேலை முனி கைக்குள் நீடு சிரகத்தின் நீர்
                                  உதவினான்.
25
   
3044.
பெரு நீர் அடங்கு சிறு கையின் ஊடு பெற உய்த்த
                              தோயம் அதனை
இரு பான்மை உண்டியது சூழும் வண்ணம் மிசையோடு
                                 சுற்றியது தான்
ஒரு கால் நுகர்ந்து பல காலினுக்கும் உதவிப் பின்
                                 உள்ள படியும்
அருகாது செய்து மிகவெ விரும்பி அயில்வான் தவங்கள்
                                     பயில்வான்.
26
   
3045.
அடுகின்ற உண்டி கறிவர்க்கம் ஏனை அவை அன்பு
                               இலாத அசுரன்
இடுகின்றது ஏது முடிவு எய்து காறும் இனிது உண்டு
                             பின்றை முனிவன்
கடி கொண்ட நாரம் அனையன் கொணர்ந்து கரம்
                        உய்ப்ப நுங்கி எழுவான்
பொடி கொண்டு தன் கை மலர் நீவி மிக்க புனல்
                      கொண்டு மண்ணல் புரியா.
27
   
3046.
மைக் காரின் மெய்யன் அருள் கின்ற நாரம்
               வாய்க்கொண்டு உமிழ்ந்து பலகால்
முக்காலின் நுங்கி வாய் பூசு அறுத்து முறை நாடி
                            அங்கம் எவையும்
மிக்கானும் ஊறு புரியாவது அன்றி வேறு உள்ள
                             செய்கை பலவும்
அக்காலை அங்கு ஒர் புடை உற்று இயற்றி அவண்
                      வீற்று இருக்கும் அளவில்.
28
   
3047.
வேதா அளித்த வரம் உன்னியே வில் வலன் என்னும்
                               வெய்ய அசுரன்
போதா விருந்த முனி ஆவி கோடல் பொருளாக
                            நெஞ்சின் நினையா
வாதாவி மைந்த இளையாய் விரைந்து வருக என்று கூற
                                     முனிவன்
தீது ஆர் வயிற்றின் இடையே எழுந்து திறல் மேடம்
                              ஆகி மொழிவான்.
29
   
3048.
எண்ணாமலே முன்பு கடல் உண்டதே போல எனது
                    ஊனும் உண்ட கொடியோன்
உண் நாடும் உயிர் கொண்டு வலிகொண்டு குறிதான
                       உதரம் கிழித்து வருவன்
அண்ணா வில் வலனே எனக் கூறி ஏ தம்பி அரிபோல்
                               முழங்கி இடலும்
மண் நாடர் புகழ் கும்ப முனி தீயர் செய்திட்ட மாயம்
                          தெரிந்து வெள்குவான்.
30
   
3049.
ஊன் கொண்ட கறி ஆகி நுகர் உற்ற வாதாவி உயிர்
                         போகி உண்ட இயல்பே
தான் கொண்டு முடிக என்று சடரத்தை ஒரு காலை
                      தமிழ் வல்ல முனி தடவலும்
கான் கொண்ட எரி மண்டு சிறு புன் புதற் போன்று
                     கடியோனும் முடிவு ஆகவே
வான் கொண்டல் என அங்கண் முன் நின்றவன் தம்பி
                    மாய் உற்றது உன்னி வருவான்.
31
   
3050.
மெய்க் கொண்ட தொல் நாள் உருக் கொண்டு முனி
      தன்னை வெகுள் உற்று ஒர் தண்டம் அதனைக்
கைக் கொண்டு கொலை உன்னி வரு போழ்தில்
              முனிவன் கரத்தில் தருப்பை ஒன்றை
மைக் கண்டர் படை ஆக நினை குற்று விட வில்வலன்
                         தானும் மடிவு எய்தலும்
அக் கண்டகக் கள்வர் உறை உற்ற இடம் நீங்கி
                     அப்பால் அகன்றனர் அரோ.
32