முகப்பு |
காவிரி நீங்கு படலம்
|
|
|
3051.
|
செங்கை தூங்கிய தீர்த்த நீரொடும்
கொங்கின் பாற்செலக் குறிய மாமுனி மங்குகின்ற அம் மைந்தர் நேர் உறா அங்கண் மேவினார் அரும் தவத்தர் போல். |
1 |
|
|
|
|
|
|
|
3052.
| நேரு மைந்தர்கள் இருவர் நீனிறக் காரின் மேனியர் கறங்கு கண்ணினர் தீரர் ஆற்றவும் சினத்தர் ஒல் என ஆர வாரம் செய்து அணுகினார் அரோ. |
2 |
|
|
|
|
|
|
|
3053.
| அண்மை ஆகுவர் அகல்வர் மாமுனி கண் முன் எய்துவர் கரந்து காண்கிலார் விண் முகற்கு உளே மேவி ஆர்ப்பர் ஆல் மண் மிசைப்பினும் வருவர் சூழ்வரே. |
3 |
|
|
|
|
|
|
|
3054.
| கோது இல் ஆற்றல் சேர் கும்ப மாமுனி ஈது நோக்கியே இவரை முன்னமே காதினாம் நமைக் கருதி வந்தனர் மா தவத்தினோன் மைந்தர் ஆதலால். |
4 |
|
|
|
|
|
|
|
3055.
| பேர்கிலாத இப் பிரமகத்தி நோய் தீரும் ஆற்றினால் சிவன் தாள்களை ஆர்வமோடு இவண் அருச்சிப்பாம் எனா நேரின் மாமுனி நினைந்து நின்றர் அரோ. |
5 |
|
|
|
|
|
|
|
3056.
| ஆசு இல் கொங்கினுக்கு அணித்தின் ஓர் இடை வாசம் ஈது என மகிழ்ந்து வீற்று இரீஇ ஈசனார் தமை இலிங்க மேனியில் நேச நெஞ்சினான் நினைந்து தாபித்தான். |
6 |
|
|
|
|
|
|
|
3057.
| தூய குண்டிகைத் தோயம் அன்றியே சேய மாமலர் தீபம் தீம் புகை ஆய போனகம் ஆதி ஆனவை ஏயும் ஆற்றினால் இனிது தேடினான். |
7 |
|
|
|
|
|
|
|
3058.
| விழுமியது ஆகிய விரதர் வீயவே வழி இருந்திடும் வஞ்சர் ஆவிகொள் பழி அகன்றிடப் பரமன் தாள்மிசை அழிவு இல் அன்பொடே அருச்சித்தான் அரோ. |
8 |
|
|
|
|
|
|
|
3059.
|
மங்கை பாகனை மற்றும் பற்பகல்
சிங்கல் இன்றியே சிறந்த பூசை செய் தம்கண் மேவினான் அவன் கண் ஆகிய துங்க வெம் பவம் தொலைந்து போயதே. |
9 |
|
|
|
|
|
|
|
3060.
| அனைய காலையில் அரிய தீம் தமிழ் முனி வரன் செயல் முற்றும் நாடியே துனி இல் நாரதன் தொல்லை வானவர்க்கு இனிய கோமகன் இருக்கை எய்தினான். |
10 |
|
|
|
|
|
|
|
3061.
| தாணுவின் பதம் தனை உன்னியே வேணு ஆகியே மெய்த்தவம் செயும் சேணின் மன்னவன் செல்லும் நாரதற் காணும் எல்லையில் கழல் வணங்கினான். |
11 |
|
|
|
|
|
|
|
3062.
| எழுதி மன்ன என்று எடுத்து மார்பு உறத் தழுவி நன்றி இவண் சார்தியோ எனா உழுவல் அன்பினால் உரைப்ப வாசவன் தொழுத கையினான் இனைய சொல்லுவான். |
12 |
|
|
|
|
|
|
|
3063.
| இன்று காறும் நின் அருளின் யான் இவண் நன்று மேவினன் நாதன் பூசனைக் கொன்றது உண்டு தீங்கு உரைப்பன் கேட்டியால் குன்றம் அன்னது ஓர் குணத்தின் மேலையோய். |
13 |
|
|
|
|
|
|
|
3064.
| கோதின் மாமலர் குழுவு தண்டலைக்கு ஏது நீர் இலை இறந்து வாடும் ஆல் போதும் இல்லையால் பூசை செய்வதற்கு ஈதரோ குறை என்று இயம்பினான். |
14 |
|
|
|
|
|
|
|
3065.
|
இன்னவை பலவும் கூறி இந்திரன் தவிசு ஒன்று இட்டு
முன் உற இருத்தித் தானும் முனிவரன் பணியால் வைக
அன்னது ஓர் அறிஞன் நின் ஊர் அரசியல் பிறவும் ஈசன்
தன் அருள் அதனால் மேல் நாள் வருவது தளரேல்
மன்னோ. |
15 |
|
|
|
|
|
|
|
3066.
|
ஆறு அணி சடையினானுக்கு அருச்சனை புரிதற்கு
இங்கு ஓர்
ஊறு உளது என்றே ஐய உரைத்தனை அதுவும் வல்லே
மாறிடும் காலம் ஈண்டு வந்த அப் பரிசை எல்லாம்
கூறுவன் கேட்டி என்னாக் கோமகற்கு உரைக்கல்
உற்றான். |
16 |
|
|
|
|
|
|
|
3067.
|
தன் நிகர் இலாத முக்கண் சங்கரன் பொதிய வெற்பின்
முன் உறைக என்று கும்ப முனிவனை விடுத்த வாறும்
அன்னவன் விந்தம் தன்னை அகன் பிலத்து இட்ட வாறும்
துன் நெறி புரிந்த வெம் சூர் மருகரைத் தொலைத்த
வாறும். |
17 |
|
|
|
|
|
|
|
3068.
|
அப் பழி தீரும் ஆற்றால் ஐந்து எனக் கொங்கின் நண்ணி
முப்புரம் எரித்த தொல்லை முதல்வனை அருச்சித்து ஏத்தி
மெய்ப் பரிவு ஆகி அங்கண் மேவிய திறனும் முற்றச்
செப்பினன் பின்னும் ஆங்கு ஓர் செய்கையை உணர்த்தல்
உற்றான். |
18 |
|
|
|
|
|
|
|
3069.
|
அரும் தவ முனிவன் கொங்கின் அமலனை அருச்சித்து
அங்கண்
இருந்திடுகின்றான் நாடி ஏகினன் அவன்பால் ஆகப்
பொருந்து குண்டிகையின் மன்னும் பொன்னி ஆறு
அதனை இங்கே
வரும் பரிசியற்றின் உன்றன் மனக்குறை தீரும் என்றான். |
19 |
|
|
|
|
|
|
|
3070.
|
குரவன் ஈது உரைத்தலோடும் குறு முனி கொணர்ந்து
வைத்த
வரநதி தனைக் இக் காவில் வர இயற்றிடும் ஆறு என்
கொல்
பெரும நீ உரைத்தி என்னப் பேர் அமுது அருத்தி
ஏத்திக்
கரிமுகத் தேவை வேண்டில் கவிழ்த்திடும் அதனை
என்றான். |
20 |
|
|
|
|
|
|
|
3071.
|
குணப்பெரும் குன்றம் அன்ன கோது இலா அறிவன்
இன்ன
புணர்ப்பினை இசைத்தலோடும் புரந்தரன் பொருமல்
நீங்கிக்
கணிப்பு இலா மகிழ்ச்சி எய்திக் காசிபன் சிறுவர்
கொண்ட
அணிப் பெரும் திருவும் நாடும் அடைந்தனன் போன்று
சொல்வான். |
21 |
|
|
|
|
|
|
|
3072.
|
எந்தை நீ இனைய எல்லாம் இயம்பினை அதனால் யானும்
உய்ந்தனன் கவலை யாவும் ஒருவினன் முனிவன் பாங்கர் வந்திடு மாறும் ஈண்டுவர உனது அருளால் இன்னே தந்தி மா முகற்குப் பூசை புரிகுவன் தக்கோய் என்றான். |
22 |
|
|
|
|
|
|
|
3073.
|
அருள் முனி இதனைக் கேளா அன்னதே கருமம் வல்லே
புரி கரி முகவற்கு ஐய பூசனை என்று கூறிப் பரவிய இமையோர் கோனைப் பார்மிசை நிறுவிப் போந்து சுரர் எலாம் பரவுகின்ற தொல்லை அம் பதத்தில் உற்றான். |
23 |
|
|
|
|
|
|
|
3074.
|
சேறலும் புணர்ப்பு வல்லோன் திங்களும் அரவும் கங்கை
ஆறொடு முடித்த அண்ணல் அருள்புரி முதல்வன்
தன்னை
மாறு அகல் மேனி கொண்டு வரன் முறை தாபித்து
அன்னான்
சீறடி அமரர் கோமான் அருச்சனை செய்து பின்னர். |
24 |
|
|
|
|
|
|
|
3075.
|
இக்கொடு தென்னங் காயும் ஏனலின் இடியும் தேனும்
முக்கனி பலவும் பாகும் மோதக முதல முற்றும் தொக்குறு மதுர மூலத் தொடக்கமும் சுவைத் தீம்பாலும் மிக்க பண்ணியமும் ஆக விருப்பு உற நிவேதித்தான் ஆல். |
25 |
|
|
|
|
|
|
|
3076.
|
இவ்வகை நிவேதித்தே பின் எம்பிரான் தன்னை ஏத்த
மைவரை அனைய மேனி மதகரி முகத்துத் தோன்றல்
கவ்வையோடு அனந்த கோடி கண நிரை துவன்றிச் சூழ
அவ்விடை விரைவால் தோன்ற அஞ்சினன் அமரர்
கோமான். |
26 |
|
|
|
|
|
|
|
3077.
|
அஞ்சலை மகவான் என்ன ஐங்கரக் கடவுள் கூற
நெஞ்சகத்து உணுக்கம் நீங்கி நிறைந்த பேர் உவகை
எய்தி
உஞ்சனன் என்று வள்ளல் உபயமா மலர்த்தாள் மீது
செம் செவே சென்னி தீண்டச் சென்று முன் வணக்கம்
செய்தான். |
27 |
|
|
|
|
|
|
|
3078.
|
பூண் திகழ் அலங்கல் மார்பில் பொன் நகர்க்கு
இறைவன் முக்கண்
ஆண் தகை சிறுவன் தாள் மேல் அன்பு ஒடு பணிந்து
போற்ற
நீண்டது ஓர் அருளால் நோக்கி நின் பெரும் பூசை
கொண்டாம்
வேண்டிய பரிசு என் என்றான் வேழமா முகனை
வென்றான். |
28 |
|
|
|
|
|
|
|
3079.
|
இந்திரன் அது கேட்டு ஐய எம்பிராற்கு ஆக ஈண்டு ஓர்
நந்தன வனத்தை வைத்தேன் அன்னது நாரம் இன்றிச் செம் தழல் உற்றால் என்னத் தினகரன் சுடரால் மாய்ந்து வெம் துகள் ஆனது அண்ணல் மேல் அடு புரமே என்ன. |
29 |
|
|
|
|
|
|
|
3080.
| என்னலும் ஏந்தல் கேளா ஏழ் பெரும் தலத்தின் நீரும் முன் உறத் தருகோ வான முழுப் பெரும் கங்கை தானும் பல் நதி பிறவும் இங்ஙன் விளத்திடோ பரவை யாவும் துன்னுறு விக்கே ஒன்று சொல்லுதி வேண்டிற்று என்றான். |
30 |
|
|
|
|
|
|
|
3081.
|
ஐங்கரக் கடவுள் இவ்வாறு அறைதலும் அனைத்தும்
நல்கும்
பங்கயத்து அயனும் மாலும் பரவு உறு பழையோய்
இங்ஙன்
அங்கு அவற்கு ஒன்றும் வேண்டேன் அது நினக்கு
அரிதோ யான் ஒன்று
இங்கு உனைக் கேட்பன் என்னா இனையன இசைக்கல்
உற்றான். |
31 |
|
|
|
|
|
|
|
3082.
|
சகத்து உயர் வட பொன் மேருச் சாரலின் நின்றும்
போந்து
மிகத்துயர் எவர்க்கும் செய்யும் வெய்யவள் சிறுவர்ச்
செற்று
மகத்து உயர் விதியின் சேய்க்கு வருவித்த நிமலன்
பொன் தாள்
அகத்தியன் கொங்கின் பால் வந்து அருச்சனை புரிந்து
மேவும். |
32 |
|
|
|
|
|
|
|
3083.
|
அன்னவன் தனது மாட்டு ஓர் அணிக மண்டலத்தின்
ஊடே
பொன்றி என்று உரைக்கும் தீர்த்தம் பொருந்தியே
இருந்தது எந்தாய்
நல் நதி அதனை நீ போய் ஞாலம் மேல் கவிழ்த்து
விட்டால்
இன்னது ஓர் வனத்தின் நண்ணும் என் குறை தீரும்
என்றான். |
33 |
|
|
|
|
|
|
|
3084.
|
பாக சாதனன் இம்மாற்றம் பகர்தலும் பிறைசேர் சென்னி
மாக யானனத்து வள்ளல் மற்று இது எய்தும் என்னா
ஓகையால் அவனை அங்கண் நிறுவிப்போய் ஒல்லை
தன்னில்
காகம் ஆய் முனிபால் ஆன கமண்டலம் மிசைக்கண்
உற்றான். |
34 |
|
|
|
|
|
|
|
3085.
|
கொங்கு உறு முனிவன் பாங்கர்க் குண்டிகை மீதில்
பொன்னி
சங்கரன் அருளின் வந்த தன்மையும் புணர்ப்பு முன்னி
ஐங்கரன் கொடியாய் நண்ண அகத்தியன் அவன் என்று
ஓரான்
இங்கு ஒரு பறவைக்கு ஒல்லாம் எய்தியது என்று
கண்டான். |
35 |
|
|
|
|
|
|
|
3086.
|
கண்டனன் பிள்ளை கரதலம் எடா நின்று ஓச்ச
அண்டருக்கு அலக்கண் செய்த கயமுகத்து அவுணர்
செற்றோன்
குண்டிகை அதனைத் தள்ளிக் குளிர் புனல் கன்னி
அன்னான்
பண்டையில் இசைவு செய்தான் பாரில் நீ படர்தி
என்றான். |
36 |
|
|
|
|
|
|
|
3087.
|
என்னலும் காஞ்சி தன்னில் எம்பிரான் உலகம் ஈன்ற
அன்னைதன் அன்பு காட்ட அழைத்திட வந்த கம்பை
நல் நதிபோல விண்ணும் ஞாலமும் நடுங்க ஆர்த்துப்
பொன்னி ஆறு உலகம் தன்னில் பொள்ளெனப்
பெயர்ந்தது அன்றே. |
37 |
|
|
|
|
|
|
|
3088.
|
பெயர்தலும் உமை தன் பிள்ளை பிள்ளையின் உருவம்
நீத்துப்
பயில் தரு மறைநூல் வல்ல பார்ப்பன மகன் போல்
செல்லச்
சயம் மிகுதவத்தின் மேலோன் தன்மை அங்கு அதனை
நோக்கி
உயிர்முழுதும் அடவே தோன்றும் ஒருவன் போல்
உருத்து நின்றான். |
38 |
|
|
|
|
|
|
|
3089.
|
தேவனோ அவுணன் தானோ அரக்கனோ திறலின்
மேலோன்
யாவனோ அறிதல் தேற்றேன் ஈண்டு உறு நதியைச்
சிந்திப்
போவனோ சிறிதும் எண்ணா அகந்தையன் போலும்
அம்மா
யாவனோ வன்மை தன்னை அறிகுவன் விரைவின்
என்றான்.
|
39 |
|
|
|
|
|
|
|
3090.
|
விரைந்து அவன் பின்னர் ஏக மெய் வழிபாடு செய்வோர்
அரந்தையை நீக்கும் எம் கோன் அச்சுறு நீரன் போல
இரிந்தனன் போதலோடும் இருகையும் கவித்தம் ஆக்கித்
துரந்தனன் முனிவன் சென்னி துளக்கு உறத் தாக்க
உன்னி. |
40 |
|
|
|
|
|
|
|
3091.
|
குட்டுவான் துணிந்து செல்லும் குறு முனிக்கு அணியன்
ஆகிக்
கிட்டுவான் விசும்பின் ஊடு கிளருவான் திசைகள்
தோறும்
முட்டுவான் பின்பு பாரின் முடுகுவான் அனையன்
கைக்கும்
எட்டுவான் சேயன் ஆகி ஏகுவான் எவர்க்கும் மேலோன். |
41 |
|
|
|
|
|
|
|
3092.
|
இப்படி முனிவன் சீற்றத்து அலமர யாண்டும் ஏகித்
தப்பினன் திரிதலோடும் சாலவும் தளர்ச்சி எய்திச்
செப்ப அரிது இவன் தன் மாயம் செய்வது என்
இனியான் என்னா
ஒப்பரும் தவத்தோன் உன்ன எந்தை அஃது
உணர்ந்தான் அன்றே. |
42 |
|
|
|
|
|
|
|
3093.
|
ஓட்டமோடு உலவும் முன்னோன் ஒல்லையில் தனது மேனி
காட்டினன் முனிவன் காணாக் கதும் எனக் கலங்கி
அந்தோ
கோட்டிப முகனோ ஈண்டுக் குறுகினன் அவனை யானோ
ஈட்டொடு துரந்தேன் கொல் என்று ஏங்கினன் இரங்கு
கின்றான். |
43 |
|
|
|
|
|
|
|
3094.
|
இரங்கிய முனிவன் முன்னம் ஏந்தலைப் புடைப்பான்
கொண்ட
கரங்களை எடுத்து வானில் கார் உரும் ஏறு வெற்பின்
உரம் கிழித்து அரவே நீங்கா துரப்பினில் வீழ்வதே
போல்
வரம் கெழு தனாது நெற்றி வருந்து உறத் தாக்கல்
உற்றான்.
|
44 |
|
|
|
|
|
|
|
3095.
|
தாக்குதல் புரிந்தகாலைத் தாரகப் பிரமம் ஆன
மாக் கய முகத்து வள்ளல் வரம்பு இலா அருளினோடு
நோக்கி உன் செய்கை என்னை நுவலுதி குறியோய்
என்னத்
தேக்கு உறு தமிழ் தேர் வள்ளல் இனையது செப்பு
கின்றான். |
45 |
|
|
|
|
|
|
|
3096.
|
அந்தண குமரன் என்றே ஐய நின் சிரம் மேல் தாக்கச்
சிந்தனை புரிந்தேன் யாதும் தெளிவு இலேன் அதற்குத்
தீர்வு
முந்தினன் இயற்று கின்றேன் என்றலும் முறுவல் செய்து
தந்தியின் முகத்து வள்ளல் அலமரல் தவிர்தி என்றான். |
46 |
|
|
|
|
|
|
|
3097.
|
என்றலும் தவிர்ந்து முன்னோன் இணை அடி மிசையே
பல் கால்
சென்று சென்று இறைஞ்சி அன்னோன் சீர்த்தியது
எவையும் போற்றி
உன்திறம் உணரேன் செய்த தவற்றினை உளத்தில்
கொள்ளேல்
நன்று அருள் புரிதி என்ன நாயகன் அருளிச் செய்வான். |
47 |
|
|
|
|
|
|
|
3098.
|
புரந்தரன் எந்தை பூசை புரிதரு பொருட்டால் ஈண்டு ஓர்
வரம் தரு காமர் தண்கா வைத்தனன் அது நீர் இன்றி
விரைந்தது பொலிவு மாழ்கி வெறும் துகள் ஆதலோடும்
இரந்தனன் புனல் வேட்டு எம்மை இயல்புடன் வழிபட்டு
இந்நாள். |
48 |
|
|
|
|
|
|
|
3099.
|
ஆதலின் கொடி போல் யாம் முன்னரும் புனல்
குடிகை
மீது
காதலித்து இருந்து மெல்லக் கவிழ்த்தனம் அதனை ஈண்டுப்
போதல் உற்றிடவும் சொற்றாம் பொறாது நீ செய்த வற்றில்
யாதும் உட்கொள்ளேம் அவ்வாறு இனிது என மகிழ்தும்
அன்றே. |
49 |
|
|
|
|
|
|
|
3100.
|
ஈண்டு நீ புரிந்தது எல்லாம் எமக்கு இது ஓர் ஆடல்
என்றே
காண்டும் மால் அன்றி நின்பால் காய் சினம்
கொண்டேம் அல்லேம்
நீண்ட செம் சடை எம் ஐயன் நேயன் நீ எமக்கும் அற்றே
வேண்டிய வரங்கள் ஈதும் கேண் மதி விரைவில் என்றான். |
50 |
|
|
|
|
|
|
|
3101.
|
என்னா இது செப்பலும் எம் பெருமான்
முன் ஆகியது ஓர் முனிவன் பணியா உன்னார் அருள் எய்தலின் உய்ந்தனன் யான் நல் நாயகனே எனவே நவில் வான். |
51 |
|
|
|
|
|
|
|
3102.
| நின் பாலினும் அந் நெடுமால் உணரான் தன் பாலினுமே தமியேன் மிகவும் அன்பு ஆவது ஒர் தன்மை அளித்து அருள் நீ இன்பால் அது வெஃகுவன் எப்பொழுதும். |
52 |
|
|
|
|
|
|
|
3103.
|
இன்னே தமியேன் எனவே இனி நின்
முன்னே நுதலின் முறையால் இருகை கொன்னே கொடு தாக்குநர் தம் குறை தீர்த்து அன்னே என வந்து அருள் செய் எனவே. |
53 |
|
|
|
|
|
|
|
3104.
| முத்தண் தமிழ் சேர் முனி ஈது அறைய அத்தன் குமரன் அவை நல்கினம் ஆல் இத்தன்மையவே அலது இன்னமும் நீ சித்தம் தனில் வேண்டிய செப்பு எனவே. |
54 |
|
|
|
|
|
|
|
3105.
| கொள்ளப் படு குண்டிகையில் குடிஞை வெள்ளப் பெரு நீர் மிசை உற்று அடிகள் தள்ளக் கவிழ் உற்றது தாரணிமேல் எள்ளில் சிறிதும் இலது என்றிடவே. |
55 |
|
|
|
|
|
|
|
3106.
| ஊனாய் உயிராய் உலகாய் உறைவோன் மேல் நாள் அருள் செய் வியன் மா நதிதான் போனால் அது போல் புனல் ஒன்று உளதோ நான் ஆடிடவே நலம் ஆனதுவே. |
56 |
|
|
|
|
|
|
|
3107.
| அந்நீர்மை யினால் அடியேற்கு இவண் நீ நன்னீர் நவை அற்றது நல்கு எனவே கைந் நீர்மையினால் கடுகின் துணையாம் முந்நீர் அயிலும் முனிவன் மொழிய. |
57 |
|
|
|
|
|
|
|
3108.
| காகத்து இயல் கொண்டு கவிழ்த்திட முன் போகு உற்ற புதுப் புனல் ஆற்றிடையே மா கைத்தலம் நீட்டினன் வான் உலவும் மேகத்து இறை மால் கடல் வீழ்ந்தது எனவே. |
58 |
|
|
|
|
|
|
|
3109.
| அள்ளிச் சிறிதே புனல் அம் முனிவன் கொள்ளப் படு குண்டிகை உய்த்திடலும் உள்ளத்தை நிரப்பி ஒழிந்தது எலாம் வெள்ளத் தொடு பார் மிசை மேவியதே. |
59 |
|
|
|
|
|
|
|
3110.
| முன் உற்றது போல் முனி குண்டிகை நீர் துன் உற்றது மேல் தொலையா வகையால் என் இப் புதுமை என நோக்கினன் ஆல் தன் உற்ற மனத் தவமா முனியே. |
60 |
|
|
|
|
|
|
|
3111.
| பேர் உற்றிடும் இப் பெரு நீர் அதனில் வாரிச் சிறிதே வரு குண்டிகையில் பாரித் தனன் இப்படி முற்று உறுவான் ஆர் இப்படி வல்லவர் ஆயினுமே. |
61 |
|
|
|
|
|
|
|
3112.
| அந்தத் திருமால் அயனே முதலோர் வந்தித்திடவே வரம் ஈந்து அருளி முந்து உற்றிடு மூல மொழிப்பொருள் ஆம் எந்தைக்கு அரிதோ இதுபோல் வதுவே. |
62 |
|
|
|
|
|
|
|
3113.
| என்றே நினையா இபமா முகவற் சென்றே பணியாச் சிறியேன் குறையா ஒன்று ஏதும் இலேன் உதவு உற்றனை நீ நன்றே கவிழும் நதி நீரையுமே. |
63 |
|
|
|
|
|
|
|
3114.
|
முந்தே முதல்வா முழுதும் உன் அருளால்
அந்தே அளவும் அளி இல் சிறியேன் உய்ந்தேன் இனியும் முனை உன்னுழி நீ வந்தே அருள் கூர் மறவேல் எனவே. |
64 |
|
|
|
|
|
|
|
3115.
| அற்று ஆக என அருள் செய்து அயலே சுற்றா வருதொல் படையோடும் எழாப் பற்று ஆனவர் நாடு பரம் பொருள் சேய் மற்றாரும் வியப்ப மறைந்தனன் ஏ. |
65 |
|
|
|
|
|
|
|
3116.
|
மறைகின்ற எல்லை தனில் குறு முனி விம்மிதம் ஆய்
மன் உயிர்கள் எங்கும்
உறைகின்ற தனி முதல்வன் புதல்வன் தன் கோலத்தை
உணர்ந்து போற்றி
அறைகின்ற காவிரியைக் கண் உற்று நகைத்து
வெகுண்டு அருள்கை நாடி
உறைகின்ற கொங்கு தனை ஒருவித்தென் திசை நோக்கி
ஒல்லை சென்றான். |
66 |
|
|
|
|
|
|