முகப்பு |
அசமுகிப் படலம்
|
|
|
3301.
|
நீங்காது உறை தனி நாயகன் நெடு மால் அயன் உணரா
ஓங்கார முதல் பண்ணவன் உறையும் கிரி செல்லப் பாங்காய் அணங்கினர் போற்றிடப் பயில் காழி வனத்தில் பூங்கா வனம் தனிலே சசி இருந்தே தவம் புரிந்தான். |
1 |
|
|
|
|
|
|
|
3302.
| சேண் நாடு புரக்கின்றவன் சிந்தித்து இடுகின்ற மாண் ஆகிய வினைமுற்று உற வருவான் தவம் புரிவாள் காணாள் அவன் வருகின்றது காலம் பல தொலைய நாள் தொறும் தன் மேனியின் நலம் மாழ்குற மெலிவாள். |
2 |
|
|
|
|
|
|
|
3303.
|
கொளையார் இசை அளிபாடிய குழல் இந்திரன் பிரிவால்
உளையா மனம் பதையாத் தவத்து உறைகின்றது ஒர்
அளவில்
வளையார் கலி உலகம் தனில் வாழ் சூர பன்மாவுக்கு
இளையாள் பலர் இளையார் புணர்ந்தாலும் சிறிது
இளையாள்.
|
3 |
|
|
|
|
|
|
|
3304.
|
கழிகின்றது ஒர் கடலே புரை காமம் தெறு நோயால்
அழிகின்றவள் எவர் தம்மையும் வலிதே பிடித்து
அணையும்
இழிகின்றது ஒர் இயல்பாள் முகில் இனம் வாய்
திறந்தது எனவே
மொழிகின்றது ஒர் கடியாள் அசமுகி என்பது ஒர்
கொடியாள். |
4 |
|
|
|
|
|
|
|
3305.
|
பொறை இல்லவள் அருள் இல்லவள் புகழ் இல்லவள்
சிறிதும்
நிறை இல்லவள் நாண் இல்லவள் நிற்கின்றது ஒர்
அறத்தின்
முறை இல்லவள் வடிவு இல்லவள் முடிவு இல்லாது
ஒர் கற்பின்
சிறை இல்லவள் உலகோர்க்கு ஒரு சிறை ஆம் எனத்
திரிவாள். |
5 |
|
|
|
|
|
|
|
3306.
|
கீழ் உற்றிடும் உலகு எத்தனை அவை யாவையும்
கிளர்ந்து ஓர்
வாழ் உற்றிடும் உலகு எத்தனை அவையாவையு மாடே
சூழ் உற்றிடும் உலகு எத்தனை அவையாவையும் சுற்றா
ஊழ் உற்றிடு தன்னூர் தனில் ஒரு நாழியில் வருவாள். |
6 |
|
|
|
|
|
|
|
3307.
|
பொய் உற்றவள் களவு உற்றவள் புரை உற்றிடு சுரை ஊன்
துய் உற்றவள் களிஉற்றவள் சோர்வு உற்றவள்
கொலை செய்
கை உற்றவள் விழியால் அழல் கால் உற்றவள் பவத்தின்
மொய் உற்றவள் படிறு உற்றவள் முனிவு உற்றவள்
மனத்தின். |
7 |
|
|
|
|
|
|
|
3308.
|
பொங்கும் சிகை அழல் மைத்தலை புகுந்தால் என
ஒளிரும்
செம் குஞ்சியது உடையாள் எவர் செருச் செய்யினும்
இடையாள்
துங்கம் கெழு தூணத்து இடை தோன்றி கனகனை முன்
பங்கம் படுத்து உயிர் உண்டு எழு பகுவாய் அரி
நிகர்வாள். |
8 |
|
|
|
|
|
|
|
3309.
|
சீயப் பெருமுகன் தாரகன் நிகர் ஆகிய திறலாள்
மாயத் தொழில் பயில்கின்றவள் மணி மால் வரை புரையும் காயத்தவள் அடல் கூற்றையும் கடக்கின்றது ஒர் வலியாள் தோயப் புணரிகள் ஏழும் ஒர் துணையில் கடந்திடுவாள். |
9 |
|
|
|
|
|
|
|
3310.
| மால் உற்றிட வாழ் சூரபன் மாவின் கிளை முழுதும் மூலத்தொடு முடிவித்திடும் முறை ஊழ் வினை என்னச் சூலத்தினை ஏந்தித் தனி தொடர் துன்முகி உடனே ஆலத்தினது உருவாம் என ஆங்கு உற்றனள் அன்றே. |
10 |
|
|
|
|
|
|
|
3311.
|
கான் நின்றுள பொழில் ஏர் தனைக் காணா நனி சேணாள்
ஆ நன்று என வியவாப் புவி அமர் சோலை இது அன்றால் வான் நின்று உள வனத்தைக் கொடுவந்தே இவண் மகவான் தான் நின்று வைத்தான் இங்கு இது தப்பாது என நிற்பாள். |
11 |
|
|
|
|
|
|
|
3312.
| ஏலா இது காணாய் என ஈர்ந்தண் பொழில் எழிலை ஆலாலம் அது எனவே வரும் அசமாமுகி என்பாள் பாலானதுன் முகி தன்னொடு பகராவது காட்டிக் கோலாலம் அது உடனே அது குறுகும் படி வந்தாள். |
12 |
|
|
|
|
|
|
|
3313.
|
மட்டு உற்றிடு தண் காவினை வருடைத் தனி முகத்தாள்
கிட்டிச் சினை நனை மா மலர் கிளை யாவையும் நோக்கித் தட்டற்று இவண் உறைகின்றவர் தமை நோக்குவல் என்னா எட்டுத் திசையினும் நாடுதற்கு இடை உற்றனள் கடிதின். |
13 |
|
|
|
|
|
|
|
3314.
|
அது கண்டனன் அவண் நின்றதொர் ஐயன்
படைத்தலைவன்
முது கண்டகி இவளாம் அசமுகி என்பது ஒர் கொடியாள்
எது கண்டு இவண் வருகின்றனள் என்னோ கருத்து
இவள் தன்
கதி கண்டனன் நிற்பேன் எனைக் காணா நெறி அதனில். |
14 |
|
|
|
|
|
|
|
3315.
|
மற்று இங்கு இவள் செயல் யாவையும் வரலாற்றொடு
காணாத்
தெற்று என்று அவண் மீள்கின்று உழிச் செவ்வே எதிர்
போந்து
குற்றம் தனக்கு இசையும் திறம் முடிப்பேனெனக்
கொலை செய்
வில் தங்கிய புய வேடரில் வேறு ஓர் இடை நின்றான். |
15 |
|
|
|
|
|
|
|
3316.
|
நின்றான் அவன் அது கண்டிலள் நெஞ்சில் களி தூங்கக்
குன்றா முலை அசமா முகக் கொடியாள் அவளுடனே
சென்றாள் மலர்க்கா எங்கணும் திரிந்தாள் திரிந்து
அளவில்
பொன் தாழ் முலைச் சசி மா தவம் புரிகின்றது கண்டாள். |
16 |
|
|
|
|
|
|
|
3317.
|
அந்தா இவள் அயிராணி நம் அரசன் தனக்கு அஞ்சி
நந்தா வளம் தனைப் பெற்ற பொன் நகரத்தை விட்டு
இங்கே
வந்தாள் இவள் தன்னைக் கொடு வருவீர் என எம் கோன்
முந்தா தரமுடன் உய்த்தனன் முடிவு அற்ற தன் படையே. |
17 |
|
|
|
|
|
|
|
3318.
|
இங்கு உற்றதை உணராமையின் இமையோர் புரம் நாடி
அங்கு உற்றிலள் அயிராணி என்று அரசன் தனக்கு
உரைப்ப
வெம் கட்டழல் எனச் சீறினன் மீண்டும் சிலர் தமை இத்
திங்கள் புரை முகத்தாள் தனைத் தேடும்படி விடுத்தான். |
18 |
|
|
|
|
|
|
|
3319.
|
வான் எங்கணும் பிலம் எங்கணும் வரை எங்கணும் பரவை
தான் எங்கணும் திசை எங்கணும் தரை எங்கணும் தரையில் கான் எங்கணும் நமர் தேடினர் காணார் இவள் தன்னை ஊன் எங்கணும் வருந்தத் திரிந்து உழன்றார் இது உணரார். |
19 |
|
|
|
|
|
|
|
3320.
|
தண் தேன் அமர் குளிர்பூம் குழல் சசி என்பவள்
தனை நான்
கண்டேன் இனி இவள் மையலில் கவலாது ஒழிக என்றே
வண்டோல் இடு தொடை மன்னவன் மகிழ்வு எய்த
முன் உய்ப்பக்
கொண்டு ஏகுவன் யானே இவள் தனை என்று குறித்தாள். |
20 |
|
|
|
|
|
|
|
3321.
|
இத் தேமொழி தனை இந்திரன் ஈண்டே தனியாக
வைத்து ஏகினன் இவள் தன்னை வருந்தாது அளித்திட ஓர்
புத்தேளிரும் இலர் இங்கு இது பொழுதாம் அவன் புகுமுன்
கொத்தேன் மலர்க் குழலாள் தனைக்கொடு போவேன்
என்று அடைவாள். |
21 |
|
|
|
|
|
|
|
3322.
|
தீனக் குரல் கடும் சொல் எனும் உருமேறு தெழிப்பக்
கூனல் பிறை எயிறு ஆகிய மின்னுப் புடை குலவக்
கானக் கரும் படிவத்தொடு கால் கொண்டு எழும்
விசையால்
வானப் புயல் வழுவிப் புவி வந்தால் என வந்தாள். |
22 |
|
|
|
|
|
|
|
3323.
|
ஊற்றம் கொடு வரு துன்முகி உடனே அசமுகிதான்
தோற்றம் கிளர் மணி வெற்பு எனத்துண் என்று
அவண் வரலும்
ஏற்றம் பெற நோற்றே தனி இருந்தாள் அது காணாக்
கூற்றம் தனைக் கண்டால் எனக் குலைந்தாள் வலி
குறைந்தாள். |
23 |
|
|
|
|
|
|
|
3324.
|
நிரோத மிசைத் தங்கிய நிருதக்குல மகளோ
பாரோர் மயக்கு உறு பேய் மகளோ பார் இடத்து
அணங்கோ
சூரோடு உறு தனிக் கொற்றவை தொழில் செய்பவள்
தானோ
ஆரோ இவள் அறியேன் என அஞ்சிக் கடிது எழுந்தாள். |
24 |
|
|
|
|
|
|
|
3325.
|
எழுகின்றவள் தனை நில் என இசைத்தே எதிர் எய்தி
மொழிகின்றனள் அயிராணி நின் முதிரா இள நலனும்
பழி இல்லதொர் பெரும் காமரும் பயன் அற்று இவண்
வறிதே
கழிவு எய்திடத் தவம் பூண்டிடல் கடனோ இது விடு நீ. |
25 |
|
|
|
|
|
|
|
3326.
|
ஆர் ஒப்பு உனக்கு உலகம் தனில் அருள் ஆழி அம்
பகவன்
மார்பத்து உறை திருமங்கையும் மற்று இங்கு உனக்கு
ஒவ்வாள்
பாரில் கரந்து இருந்தே தவம் பயில்வாய் இது என்
உன்னைச்
சேரத் தவம் புரிகின்றனன் திறல் சூரபன் மாவே. |
26 |
|
|
|
|
|
|
|
3327.
|
இந் நாள் வரை உனை நண்ணிய இமை யோர்க்கு
இறை உனது
நல் நாயகன் நாகப் பெரு நலன் உற்றவன் அன்றே
தன்னால் உணர்வு அரிது என்பார்கள் தன்பேர் அழகு
அதனால்
பன்னாள் அவன் உடன் மேவினை பாகில் படு கரி போல். |
27 |
|
|
|
|
|
|
|
3328.
|
தவறும் சுரர் உலகு ஒன்று உளன் சதவேள்வியன் எம்முன்
புவனம் பல அண்டம் பல புரக்கும் திரு உளன் ஆல்
இவன் அங்கு அவன் பணியே புரிந்து இளைத்தே கரந்து
உழல்வான்
அவன் இங்கு இவன் தனை ஏவல் கொண்டு அகிலம்
தனி ஆள்வான். |
28 |
|
|
|
|
|
|
|
3329.
|
அழிவு இல்லவன் அவன் இங்கு இவன் அழியும் பரிசு
உடையான்
பழி இல்லவன் அவன் இங்கு இவன் பழி வேலையில்
திளைப்பான்
கழியும் படர் உழந்தான் இவன் களிப்பு உற்று உளன்
அவனே
தொழுவன் பலரையும் இங்கு இவன் தொழுமோ அவன்
சிலரை. |
29 |
|
|
|
|
|
|
|
3330.
|
அந் நேரிலன் ஒடு மேவுவது அறிகின்றிலை அனையான்
தன் ஏவலின் ஒழுகித் திரி தமியோன் தனைத்
துணை என்று
இன்னே மெலிந்தனை ஈது உனக்கு இயல்போ நினது
எழிலும்
கொன்னே கழிந்தன பற்பகல் குறியா இது குணனோ. |
30 |
|
|
|
|
|
|
|
3331.
|
எத்தேவரும் முகில் ஊர்தியும் இகல் மேவரும் அவுணக்
கொத் தேவரும் அணங்கோரும் உன் குற்றேவல்
செய்திடவே
முத்தேவரும் புகழப்படும் மொய்ம்பு உற்றிடு சூர் முன்
உய்த்தே அவனொடு கூட்டுவன் உலகு ஆண்டு உடன்
இருக்க. |
31 |
|
|
|
|
|
|
|
3332.
|
பொன்னோடு இகல் பங்கேருகப் பூம் கோமளை தனையும்
அன்னோன் வெறுத்திடுவன் பிறர் அனைவோரையும்
அஃதே
உன்னோடு அளவு அறு காதலின் உறும் இங்கு இது சரதம்
என்னோடு இனி வருவாய் கடிது என்றாள் அறம்
கொன்றாள். |
32 |
|
|
|
|
|
|