முகப்பு |
இந்திராணி மறுதலைப் படலம்
|
|
|
3333.
|
தக்க வேழகத் தலையாள் கூறிய
அக் கொடும் சொலை அணங்கு கேட்டலும் தொக்க தன் செவித் துளையில் அங்கிவேல் புக்கதே எனப் பொருமி விம்மினாள். |
1 |
|
|
|
|
|
|
|
3334.
| கைம் மலர்க் கொடே கடிதில் தன் செவி செம்மி வல்வினைத் தீர்வு நாடியே விம்மி அங்கு உறும் வெய்யள் கேட்டிட இம் எனச் சில இசைத்தல் மேயினாள். |
2 |
|
|
|
|
|
|
|
3335.
| ஏடி நீ இவண் இசைத்த தீ மொழி நேடி ஓர்ந்துளார் நிரய மாநெறி ஊடு சேர்வர் ஆல் உரைத்த நிற்கு மேல் கூடு தீமையார் குறிக்கற் பாலரே. |
3 |
|
|
|
|
|
|
|
3336.
| வேதம் யாவையும் விதித்த நான்முகன் காதலன் தரும் கடவுள் மங்கை நீ நீதி இல்லதோர் நெறியின் வாய்மையைப் பேதையார் எனப் பேசல் ஆகுமோ. |
4 |
|
|
|
|
|
|
|
3337.
| தீங்கி யாவர்க்கும் செய்திடாதவர் தாங்கள் துன்புறார் தமக்கு வேண்டினோர் ஆங்கு எவர்க்கு முன் அல்லல் செய்வரால் ஈங்கு நீ இவை எண்ணலாய் கொலோ. |
5 |
|
|
|
|
|
|
|
3338.
| தருமம் பார்த்திலை தக்க மாதவக் கருமம் பார்த்திலை கற்பும் பார்த்திலை பெருமை பார்த்திலை பிறப்பும் பார்த்திலை உரிமை பார்த்திலை உறவும் பார்த்திலை. |
6 |
|
|
|
|
|
|
|
3339.
| பழியும் பார்த்திலை படி இகழ்ந்திடு மொழியும் பார்த்திலை முறையும் பார்த்திலை வழியும் பார்த்திலை வருவ பார்த்திலை இழியும் தீய சொல் இளம்பல் பாலையோ. |
7 |
|
|
|
|
|
|
|
3340.
| ஆன்ற தொல்வளன் ஆற்றல் ஆயுள் பின் ஊன்று சீர்த்திகள் ஒருவு உற்றோர்க்கு இது தோன்று நீ இவை துணியல் வாழி கேள் சான்று நின் குலத் தகுவர் யாவரும். |
8 |
|
|
|
|
|
|
|
3341.
| இத்திரற்கு அலால் ஏவர் பாலினும் சிந்தை வைத்திடேன் தீது இல் கற்பினேன் வந்து எனக்கு இது வகுத்தி நின் கிளை உய்ந்திடத்தகும் உரையது அன்றியே. |
9 |
|
|
|
|
|
|
|
3342.
| நூன்மை யாவையும் நுனித்து நாடிச் செம் கோன்மை அன்றியே கொடுமை செய்து உள மேன்மை மன்னரும் வேறு உளார்களும் பான்மையால் பிலம் படுவர் திண்ணமே. |
10 |
|
|
|
|
|
|
|
3343.
| மீள் இல் வெம் துயர் வேலை சார்ந்து உளான் நாளும் நாதன் என்று அறைதி யார்கணும் கோளும் நல்லவும் குறுகும் அல்லலும் நாளை உங்கள் பால் நணுகு உறாதவோ. |
11 |
|
|
|
|
|
|
|
3344.
| நீதி ஆகிய நெறி இலாதவள் ஆதலான் மிக அறிவு மாழ்கியே தீது கூறினாய் செவ்விது அன்று அரோ மாது நீ இது மறத்தி உய்யவே. |
12 |
|
|
|
|
|
|
|
3345.
| ஏவர் என்று எனை எய்தல் பாலினோர் தேவர் சூழ்தரக் காப்பர் சிந்தை என் ஆவி ஐம்புலம் அளிக்கும் எங்கணும் காவல் உண்டு நீ கடிதில் போக என்றாள். |
13 |
|
|
|
|
|
|
|
3346.
| என்ற காலையில் எயிறு தீ உகக் கன்று சேயிதழ் கறித்து வெய்து உயிர்த்து ஒன்றொடு ஒன்று கை உருமில் தாக்கியே நன்று நன்று எனா நகைத்துச் சீறினாள். |
14 |
|
|
|
|
|
|
|
3347.
| மறுவில் வாசவன் மனைவி கூறிய உறுதி வெய்யவன் கூற்றம் செய்தில அறிவு இல் பேதை ஆய் அலகை தேறலால் வெறி கொள் பித்தனுக்கு உரைத்த மெய்மை போல். |
15 |
|
|
|
|
|
|
|
3348.
| ஆன காலையில் அச முகத்தினாள் ஊன வெம் துயர் உழக்கும் பெற்றியால் வானவர்க்கு இறை மாதை நோக்கியே தான் உரைத்தனள் இனைய தன்மையே. |
16 |
|
|
|
|
|
|
|
3349.
| கிட்டி நல்லன கிளத்தினேன் எனை ஒட்டி வந்திலை உரைத்தி மாறு உனை அட்டு நுங்குவன் அண்ணற்கு ஆகவே விட்டனன் இது மெய்மை ஆகும் ஆல். |
17 |
|
|
|
|
|
|
|
3350.
| ஆர்த்தி யாவுநீ அகல என்னுடைச் சீர்த்தி அண்ணன் பால் சேறல் சிந்தியாய் பேர்த்திடாது உனைப் பிடித்து வன்மையால் ஈர்த்துப் போகின்றேன் சரதம் மீது அரோ. |
18 |
|
|
|
|
|
|
|
3351.
| முடிவு இல் ஆற்றலார் மூவர் யாவரும் தடை செய்கிற்பினும் சமரின் ஏற்பினும் விடுவன் அல்லன் யான் விரைவினில் கொடே படர்வன் அன்னது பார்த்தி மேல் எனா. |
19 |
|
|
|
|
|
|
|
3352.
| வெய்யள் அவ் வயிராணி மென்கரம் கையில் பற்றியே கடிதின் ஈர்த்து உராய் மொய்யில் போயினாள் முரண் இலாதவள் ஐயகோ எனாஅரற்றல் மேயினாள். |
20 |
|
|
|
|
|
|
|
3353.
| பாவி தீண்டலும் புலம்பிப் பைந்தொடி ஆவி போந்து என அவசம் ஆகியே ஓவிலாத தொல் உணர்வு மாய்ந்தனள் காவி ஒண் கணீர் கலுழத் தேம்பினாள். |
21 |
|
|
|
|
|
|
|
3354.
| ஐயர் கையில் வந்து அவுண ரைச் செறுந்து உய்ய தீம் படை தோகை கண் உறா வெய்ய சூர் கிளை வீட்ட வந்தது என மை உலாய கண் வாரி மிக்கதே. |
22 |
|
|
|
|
|
|
|
3355.
|
காசிபன் தரும் கலதி கூற்றுவன்
பாசம் அன்ன கைப் பட்டு விம்மினாள் வாசவன் தனி மனைவி வெம் கொலைப் பூசை வாய்ப்படும் புள்ளின் பேடை போல். |
23 |
|
|
|
|
|
|
|
3356.
| நார் இலாதவள் நலிந்து கொண்டனள் பேரும் எல்லையில் பேது உற்றே உளம் சோருகின்றவள் சுற்று நோக்கியே யாரும் காண்கிலள் அரற்றல் மேயினாள். |
24 |
|
|
|
|
|
|