முகப்பு |
மகா காளர் வருபடலம்
|
|
|
3357.
|
பை அரா அமளியானும் பரம் பொருள் முதலும் நல்கும்
ஐயனே ஓலம் விண்ணோர்க்கு ஆதியே ஓலம் செண்டார் கையனே ஓலம் எங்கள் கடவுளே ஓலம் மெய்யர் மெய்யனே ஓலம் தொல் சீர் வீரனே ஓலம் ஓலம். |
1 |
|
|
|
|
|
|
|
3358.
|
ஆரணச் சுருதி ஓர் சார் அடல் உருத்திரன் என்று ஏத்தும்
காரணக் கடவுள் ஓலம் கடல் நிறத்து எந்தாய் ஓலம்
பூரணைக்கு இறைவா ஓலம் புட்கலை கணவா ஓலம்
வாரணத்து இறை மேல் கொண்டு வரும் பிரான் ஓலம்
என்றாள். |
2 |
|
|
|
|
|
|
|
3359.
|
ஒய் எனச் சசி இவ் வாற்றால் ஓல் இட அது கேட்டு
எங்கள்
ஐயனைக் குறித்துக் கூவி அரற்றுவாள் போலும் என்னா
மையினைத் தடுத்துச் சிந்து மருத்து என வந்தான் என்ப
வெய்யரில் பெரிதும் வெய்யோன் வீரமா காளன்
என்போன். |
3 |
|
|
|
|
|
|
|
3360.
|
சாத்தனது அருளின் நிற்கும் தானை அம் தலைவன்
வானோர்
வேத்து அவை ஆன எல்லாம் வியத்தகு வீரன் உந்தி
பூத்தவன் முதலோர் யாரும் புகழ வெவ் விடத்தை உண்டு
காத்தவன் நாமம் பெற்றோன் காலற்கும் காலன்
போல்வான். |
4 |
|
|
|
|
|
|
|
3361.
|
இரு பிறை ஞெலிந்திட்டு அன்ன இலங்கு எழில்
எயிற்றன் ஞாலம்
வரு முகில் தடிந்தால் என்ன வாள் கொடு விதிர்க்கும்
கையன்
உரும் இடிக்குரல் போல் ஆர்க்கும் ஓதையன் உரப்பும்
சொல்லன்
கரவிழைத்து எங்ஙன் போதி நில் எனக் கழறி வந்தான். |
5 |
|
|
|
|
|
|
|
3362.
|
கொம் என வந்த வீரன் கூவிய சசியை நோக்கி
அம்மனை அழுங்கல் வாழி அசமுகி என்னும் வெய்யாள்
கிம்மியின் துணையும் அஞ்சேல் ஈண்டு உனைத்
தீண்டுகின்ற
கைம் முறை தடிந்து வல்லே விடுவிப்பன் காண்டி
என்றான். |
6 |
|
|
|
|
|
|
|
3363.
|
வீரனது உரையைக் கேளா மெல்லியல் அணங்கின்
நல்லாள்
பேர் இடர் சிறிது நீத்துப் பெயல் உறு துவலை தூங்கு
மாரியின் செலவு கண்ட வள வயல் பைம் கூழ் போல
ஆருயிர் பெற்றாள் மற்றை அசமுகி அவனைக் கண்டாள். |
7 |
|
|
|
|
|
|
|
3364.
|
ஓவரும் புவனம் யாவும் ஒருங்கு முத்தொழிலும் ஆற்றும்
மூவரும் துறக்கம் வைகும் முதல்வனும் திசை காப்பாளர்
யாவரும் என் முன் நில்லார் ஈண்டு எனை இகழ்ந்து சீறித்
தேவர் தம் குழுவின் உள்ளான் ஒருவனோ செல்வன்
என்றாள். |
8 |
|
|
|
|
|
|
|
3365.
|
வெறித்திடு கண்ணில் நோக்கி வெவ்விதழ் அதுக்கி வல்லே
கறித்தனள் எயிற்றின் மாலை கறகற கலிப்ப ஆர்த்தது
முறித்து இவன் தன்னை உண்டு முரண் வலி தொலைப்பன்
என்னாக்
குறித்த அசமுகத்தி நிற்பக் குறுகினன் திறல் சேர் வீரன். |
9 |
|
|
|
|
|
|
|
3366.
|
தட்டறு நோன்மை பூண்ட சசி தனைத் தமியள் என்றே
பட்டிமை நெறியால் பற்றிப் படருதி இவளை இன்னே
விட்டனை போதி செய்த வியன் பிழை பொறுப்பன்
நின்னை
அட்டிடு கின்றது இல்லை அஞ்சலை அரிவை என்றான். |
10 |
|
|
|
|
|
|
|
3367.
|
கேட்டலும் உருத்து இவ் வார்த்தை கிளத்தினை நின்னை
யாரே
ஈட்டுடன் இவளைப் போற்று என்று இப்பணி தலை
தந்துள்ளார்
வேட்டனன் அவரைக் கேட்ப விளம்புதி என்றான் முந்தூழ்
மாட்டுறு கனலி என்னத் தன்குலம் முடிப்பான் வந்தாள். |
11 |
|
|
|
|
|
|
|
3368.
| தாரணி முதல மூன்றும் தலை அளி புரிந்து காப்பான் காரணி செறிந்து உற்றன்ன கரியவன் கடவுள் வெள்ளை வாரணம் உடைய ஐயன் மற்று இது பணித்தான் என்பேர் வீரரில் வீரன் ஆன வீரமா காளன் என்றான். |
12 |
|
|
|
|
|
|
|
3369.
|
என்றலும் அனைய வாய்மை இந்திரன் தனக்கும் ஈசன்
பொன் திரண் மார்பன் நல்கும் புதல்வற்கும்
பொதுமைத்து ஆகி
நின்ற அதுவாகத் தேவர் நிருதரால் வருந்தும் ஊழால்
சென்றவன் மகவான் ஏவல் ஆள் எனச் சிந்தை செய்தாள். |
13 |
|
|
|
|
|
|
|
3370.
|
புந்தியில் இதனை உன்னிப் பொள் எனச் சினம் மீக்
கொள்ள
இந்திரன் தொழுவன் கொல்லாம் எனை இடை தடுக்கும்
நீரான்
சிந்துவன் இவனை என்னாச் செம்கையில் சூலம் தன்னை
உந்தினள் அது போய் வீரன் உரன் எதிர் குறுகிற்று
அன்றே. |
14 |
|
|
|
|
|
|
|
3371.
|
குறுகி முன் வருத லோடும் குரூஉச் சுடர் அங்கி மூன்றும்
முறையினோர் இடை உற்று அன்ன முத்தலைப் படையைக்
காணூஉ
அறை கழல் வீரன் தொல் நாள் அங்கியை அட்டதே
போல்
எறி கதிர் வாளால் மைந்தன் இருதுணி படுத்தினானே. |
15 |
|
|
|
|
|
|
|
3372.
|
படுத்தலும் மணிகள் நீலப் பையரா உமிழ்ந்தது என்னக்
கடித்திடும் எயிற்றுப் பேழ்வாய்க் கரும் கணம் அழல்
கான்று என்ன
விடித்திடு கொண் மூவின் பால் எழுந்த மின் என்ன
அன்னாள்
விடுத்திடு சூல வைவேல் வெவ் அழல் பொழிந்தது
அன்றே.
|
16 |
|
|
|
|
|
|
|
3373.
|
காலத்தின் உலகம் உண்ணக் கடல் உறு வடவை தானே
ஆலத்தை மீது பூசி அசமுகி கரத்தில் கொள்ளச்
சூலத்தின் அமைந்தது அம்மா சோதனை கொடுப்பன்
என்னாச்
சீலத்தின் மிக்கோன் கூர்வாள் செந்தழல் பொழிவித்தது
அன்றே. |
17 |
|
|
|
|
|
|
|
3374.
|
சூளின் ஆர்த்து எறியும் வீரன் சுடர்கொள் முத்தலை
வேல் தன்னை
வாளினால் தடிதலோடும் மறி முகத்து அணங்கு சீறிக்
கேளினால் தனது பாங்கில் கிடைத்த துன் முகி கைச்சூலம்
கோளினால் கடிது வாங்கிக் கூற்றனும் உட்க ஆர்த்தாள். |
18 |
|
|
|
|
|
|
|
3375.
|
வசி கெழு சூலம் பற்றி மருத்துவன் துணைவி ஆன
சசிதனை இகுளை ஆகும் தையல் தன் கரத்தில் சேர்த்தி நிசியின் மால் பாந்தளோடு நெடும் கதிர் நேர் புக்கு என்ன விசையொடு கொடியள் சென்றாள் வீரமாகாளன் தன் மேல். |
19 |
|
|
|
|
|
|
|
3376.
|
ஒற்றை முத்தலை வேல் தன்னை ஒப்பிலான் மரும மீது
குற்றியம் உன்னி நீட்டிக் குறுகினள் அமர் செய் போழ்தில் கற்றை அம் சுடர்க் கூர் வாளால் காவலன் எறிதலோடும் இற்றது சூலம் கண்ட அசமுகி இடைந்து போனாள். |
20 |
|
|
|
|
|
|
|
3377.
|
இடைந்தனள் ஏகி ஆண்டு ஓர் இருங்கிரி பறித்திட்டு
இன்னே
முடிந்தனை போலும் என்னா மொய்ம்புடன் அவன்மேல்
ஓச்சத்
தடிந்தனன் தடித லோடும் தாரைவாள் படையும் வல்லே
ஒடிந்தது கொடியள் காணா ஒல் ஒலிக் கடல் போல்
ஆர்த்தாள். |
21 |
|
|
|
|
|
|
|
3378.
|
வீரமா காள கேண்மோ வேதனே ஆதி விண்ணோர்
ஆரும்வந்து ஆசி கூற அகிலமும் ஆளுகின்ற
சூரன் ஆம் எமது முன்னோன் தோள் இடை உய்ப்பக்
கொண்டு
பேருவன் இவளை ஓராய் விலக்கினை பேதை நீராய். |
22 |
|
|
|
|
|
|
|
3379.
|
தடுத்திடல் முறையது அன்று ஆல் தாரகன் தானை வீரர்
அடுத்திடில் படுப்பர் கண்டாய் அன்றியும் யானே நின்னை எடுத்தனன் மிசைவன் துய்க்கின் இரும்பசி உலவாது என்னா விடுத்தனன் உய்ந்து போதி விளி உறேல் எளியை என்றாள். |
23 |
|
|
|
|
|
|
|
3380.
|
பாதகி இனைய மாற்றம் பகர்தலும் வீரன் கேளா
வேதியின் நினது சூலப் படையிற எறிந்தேன் நின்னை
மாது என அடாது நின்றேன் மற்று இதை உணர்ந்து
வல்லே
போதியால் இவளை விட்டுப் போக்கலை கரத்தை
என்றான். |
24 |
|
|
|
|
|
|
|
3381.
|
என்றலும் கொடியள் கேளா ஈங்கு இவன் வாளும் இன்றி
நின்றனன் இவனொடே போர் நேருதல் நெறியது அன்றால் அன்றியும் இவனை வெல்லல் அரிதினிச் சசியைக் கொண்டு சென்றிடல் துணிபாம் என்னாத் திரும்பினள் சேடி தன்பால். |
25 |
|
|
|
|
|
|
|
3382.
|
துன்முகி ஆகி நின்ற துணைவி தன் சிறைப் பட்டு உள்ள
பொன் மிகும் யாணர் மேனிப் புலோமசை
தனைத்தான் பற்றிக்
கொன்மலி அம் பொன் மேருக் குவட்டினைக்
கொடுபோங் காலின்
வன்மையினோடு கொண்டு மறிமுகத்து அணங்கு
போனாள். |
26 |
|
|
|
|
|
|
|
3383.
|
போகலும் அதனை ஐயன் பொருநரில் தலைவன் பாரா
ஏகுதி போலும் நில் என்று எய்தியே உடைவாள் வாங்கிச்
சேகுறு மனத்தாள் கூந்தல் செங்கையால் பற்றி ஈர்த்துக்
தோகையைத் தொட்டகையைத் துணித்தனன்
விண்ணோர் துள்ள. |
27 |
|
|
|
|
|
|
|
3384.
|
இருட்டு உறு பிலத்து உற்றோரை எடுத்து வெள்ளி
இடை இட்டு என்ன
மருட்டு உறு மதியள் ஆகி வருந்திய சசி என்பாளை
அருள் திறத்தோடு வீடு செய்து பின் அவுண மாதை
உருட்டினன் தனது தாளால் உரும் என உதைத்துத் தள்ளி. |
28 |
|
|
|
|
|
|
|
3385.
|
அயமுகி வீழ்தலோடும் அழுங்கியே அயலின் நின்ற
வயம் மிகு துன்முகத்து மங்கை தன் கரத்தில் ஒன்றைச்
செயிர் அறு சசியை நீயும் தீண்டினை போலும் என்னாத்
துயல் வரு தொடையல் வீரன் துணித்தனன்
சோரி பொங்க. |
29 |
|
|
|
|
|
|
|
3386.
|
மதர்த்திடு துன்முகி வன்கை வாளினால்
சிதைத்திடு மொய்ம்புடைச் சேனை காவலன் உதைத்தனன் அனையளும் ஓ என்றே உளம் பதைத்தனள் புலம்பியே படியில் வீழவே. |
30 |
|
|
|
|
|
|