முகப்பு |
வீரவாகு கந்தமாதனம் செல்படலம்
|
|
|
3713.
|
விரிஞ்சன் மால் தேவராலும் வெலற்கு அரும் விறலோன்
ஆகிப்
பெரும் சுரர் பதமும் வேத ஒழுக்கமும் பிறவும் ஆற்றி
அரும் சிறை அவர்க்குச் செய்த அவுணர் கோன் ஆவி கொள்வான்
பரம் சுடர் உருவாய் வந்த குமரனைப் பணிதல் செய்வோம். |
1 |
|
|
|
|
|
|
|
3714.
| இந்திரன் ஆதி ஆன அமரரும் எனையோரும் புந்தியில் உவகை பூத்துப் புடைதனில் ஒழுகிப் போற்றச் செந்திமா நகரம் தன்னில் சீயமெல் அணைமேல் வைகும் கந்தவேள் அருளின் நீரால் இனையன கருதல் உற்றான். |
2 |
|
|
|
|
|
|
|
3715.
|
நான்முகன் ஆதி ஆன நாகரும் முனிவரும் போல்
மேல் முறை அவுணர் ஆகும் வியன் தொகையவரும் எம்கோன்
கான் முளை நெறியர் ஏனும் கடியரை முடிவு செய்தல்
நூல் முறை இயற்கை ஆகும் நுவலரும் அறனும் அஃதே. |
3 |
|
|
|
|
|
|
|
3716.
|
இற்று இது துணிபாம் ஏனும் எண் எழில் சூரன் தன்னை
அற்றம் இல் சிறப்பின் வைகும் அவன்தமர் தம்மை எல்லாம்
செற்றிடல் முறையது அன்று ஆல் தேவர் தம் சிறை விட்டு உய்ய
மற்று அவன் தனக்கு ஓர் ஒற்றை வல்லையில் விடுத்து மன்னோ.
|
4 |
|
|
|
|
|
|
|
3717.
|
தூண்டு
நம் ஒற்றன் மாற்றம் சூரனாம் அவுணன் கேளா
ஈண்டு இடு சிறையின் நீக்கி அமரரை விடுப்பன் என்னின்
மாண்டிடல் இன்றி இன்னும் வாழிய மறுத்து உளானேல்
ஆண்டு சென்று அடுதும் ஈதே அறம் என அகத்துள் கொண்டான்.
|
5 |
|
|
|
|
|
|
|
3718.
|
வடித்த செம்கதிர் வேல் அண்ணல் மால் அயன் மகவான் ஆதி
அடுத்த பண்ணவரை நோக்கி அவுணர் தம் கிளையை எல்லாம்
முடித்திடப் பெயர்தும் நாளை முன்னம் ஓர் தூதன் தன்னை
விடுத்தனம் உணர்தல் வேண்டும் வெய்ய சூர் கருத்தை என்றான்.
|
6 |
|
|
|
|
|
|
|
3719.
|
கடல் உடைக் கடுவை உண்டோன் காதலன் இனைய செப்ப
மால் உடைப் பதுமப் போதில் வைகினோன் மாயன் கேளா
அடல் உடைப் பெரும் போர் எந்தை ஆற்று முன் சூரன் முன்னோர்
மிடல் உடைத் தூதன் தன்னை விடுத்தலே அறத்து ஆறு என்றார்.
|
7 |
|
|
|
|
|
|
|
3720.
| என்றலும் குமர மூர்த்தி இப்பெரும் திறலோர் தம்முள் வென்றி கொள் சூரன் தன்பால் வீரமா மகேந்திரத்துச் சென்றிட விடுத்தும் யாரைச் செப்புதிர் என்னலோடு நன்று என அதனை நாடி நான்முகன் நவிறல் உற்றான். |
8 |
|
|
|
|
|
|
|
3721.
| மெல் என உலவைக் கோனும் வீரமா மகேந்திரத்தில் செல் அரிது எனக்கு மற்றே செய்பணி நெறியால் அன்றி ஒல்லையில் அங்கண் ஏகி ஒன்னலர்க் கடந்து மீள வல்லவன் இனைய வீரவாகுவே ஆகும் என்றான். |
9 |
|
|
|
|
|
|
|
3722.
|
சதுர் முகன் இனய ஆற்றால் சண்முகன் உளத்துக்கு
ஏற்பக்
கதும் என உரைத்தலோடும் கருணை செய்து அழகு இது என்னா
மதுமலர்த் தொடையல் வீரவாகுவின் வதனம் நோக்கி
முதிர் தரும் உவகை தன்னால் இத்திறம் மொழியல் உற்றான்.
|
10 |
|
|
|
|
|
|
|
3723.
|
மயேந்திர மூதூர் ஏகி வல்லை நீ அமலன் நல்கும்
சயேந்திர ஞாலத் தேரோன் தனை அடுத்து ஒரு நாள் அந்தக்
கயேந்திரன் மதலை வானோர் காப்பை விட்டு அறத்தாறு உன்னி
நயேந்திர வளத்தினோடும் உறைக என நவிறி யன்றே. |
11 |
|
|
|
|
|
|
|
3724.
|
அம் மொழி மறுத் துளானேல் அவுண நின் கிளையை எல்லாம்
இம் என முடித்து நின்னை எஃக வேற்கு இரையா நல்கத்
தெம் முனை கொண்டு நாளைச் செல்லுதும் யாமே ஈது
மெய்மையது என்று கூறி மீள்க என வீரன் சொல்வான். |
12 |
|
|
|
|
|
|
|
3725.
| வெம் திறல் அவுணர் ஈண்டும் வீரமா மகேந்திரத்தில் சுந்தரத் திருவின் வைகும் சூரபன்மாவின் முன் போய் எந்தை நீ அருளிற் றெல்லாம் இசைத்தவன் உள்ளம் நாடி வந்திடுகின்றேன் என்னா வணங்கியே தொழுது போனான். |
13 |
|
|
|
|
|
|
|
3726.
|
கூர்ந்திடு குலிசத்து அண்ணல் குமரவேள் ஒற்றன் தன்பின்
போர்ந்தனன் சென்று வீர பெரும் திறல் சூரன் மூதூர்
சார்ந்தனை சிறையில் வானோர் சயந்தனோடு இருந்தார் அங்கட்
சேர்ந்தனை தேற்றிப் பின் உன் செயலினை முடித்தி sஎன்றான்.
|
14 |
|
|
|
|
|
|
|
3727.
|
அவ்வழி அமரர் கோமான் அனையன அறைதலோடும்
செவ்விது நிற்றி யற்றே செய்வன் என்று அவனை நீங்கி
எவ்வம் இல் துணைவர் ஆகும் எண்மரும் இலக்கத் தோரும்
மெய்வரும் தொடர்பில் செல்லக் கண்ணுறீஇ விடலை சொல்வான்.
|
15 |
|
|
|
|
|
|
|
3728.
|
நீயிர்கள்
யாரும் கேண்மின் நெடும் திரைப்பரவை வாவித்
தீயதோர் மகேந்திரத்தில் சென்று சூர்முன்போய் நம் தம் நாயகன் பணித்த மாற்றம் நவிலுவன் மறுத்துளானேல் ஆயவன் மூதூர் முற்றும் அட்டபின் மீள்வன் அம்மா. |
16 |
|
|
|
|
|
|
|
3729.
|
என்றலும் வியந்து பின்னோர் யாவரும் இறைஞ்சலோடும்
பொன்திகழ் ஆகத்து ஊடு பொருந்துறப் புல்லிக் கொண்டு
வன்திறல் பூதர் தம் முன் மன்னவரோடும் அங்கண்
நின்றிட அருளி வல்லே நெடும் கடல் வேலைப் போந்தான்.
|
17 |
|
|
|
|
|
|
|
3730.
|
அலம் கலம் திரை கொள் நேமி அகன் கரை மருங்கின் மேரு
விலங்கலின் உயர்ந்த கந்த மாதன வெற்பு தன்னில்
பொலங்குவடு உச்சி மீது பொள் என இவர்தல் உற்றான்
கலன் கலன் கலன் என்று அம்பொன் கழல் அமர் கழல்கள்
ஆர்ப்ப. |
18 |
|
|
|
|
|
|
|
3731.
|
புஞ்சமார் தம் ஆலச் சூழல் பொதுளிய பொதும்பர் சுற்றி
மஞ்சு நின்று அறாத கந்த மாதனப் பிறங்கல் உம்பர்
விஞ்சு நுண் பொடி தோய் மேனி மேலவன் இவரும் பான்மை
அஞ்சன வரை மேல் வெள்ளி அடுக்கல் சென்று அனையது
அன்றே. |
19 |
|
|
|
|
|
|
|
3732.
|
கடும் கலி மான் தேர் வெய்யோன் கையுற நிவந்த செம்பொன்
நெடும் கிரி மிசை போய் வீரன் நிற்றலும் பொறை ஆற்றாது
நடுங்கியது உரும் உற்று என்ன நனி பகிர் உற்ற தங்கள்
ஒடுங்கிய மாவும் புள்ளும் ஒல் என இரிந்த அன்றே. |
20 |
|
|
|
|
|
|
|
3733.
|
உள் நிறை புள்ளும் மாவும் ஓல் இட ஒலிமேல் கொண்டு
துண் என அருவி தூங்கத் தோன்றிய குடுமிக் குன்றம்
அண்ணலைத் தரிக்கல் ஆற்றேன் அளியனேன் அந்தோ என்னாக்
கண் இடை வாரி சிந்தக் கலுழுதல் போலும் மாதோ. |
21 |
|
|
|
|
|
|
|
3734.
|
அடல் கெழு திண்தோள் வீரன் அடிகளின் பொறை ஆற்றாது
விடர்கெழு குடுமி வெற்பு வெருவலும் ஆண்டை வைகும்
படவரவு உமிழ்ந்த செய்ய பருமணி சிதறும் பான்மை
உடல் கெழு குருதி துள்ளி உகுக்குமாறு ஒப்பது அன்றே. |
22 |
|
|
|
|
|
|
|
3735.
|
அறை கழல் அண்ணல் நிற்ப அவ்வரை அசைய அங்கண்
உறை தரு மாக்கள் அஞ்சி ஒருவில வெருவி விண்மேல்
பறவைகள் போய துன்பம் பட்டுழிப் பெரியர் தாமும்
சிறியரும் நட்டோர்க்கு ஆற்றும் செயல் முறை காட்டுகின்ற.
|
23 |
|
|
|
|
|
|
|
3736.
|
மழைஉடைக் கடமால் யானை வல்லியம் மடங்கல் எண்கு
புழைஉடைத் தடக்கை யாளி பொருப்பு அசைவு உற்றகாலை
முழையிடைத் தவறி வீழ்வ முதியகால் எறியப் பட்ட
தழைஉடைப் பொதும்பர் பைங்காய் தலைத்தலை உதிர்க்குமா
போல். |
24 |
|
|
|
|
|
|
|
3737.
|
நன்றி கொள் பரிதிப் புத்தேள் நகு சிரம் ஆக என்று ஊழ்
துன்றி இரும் சடிலம் ஆகச் சுரநதி தோயத் திங்கள்
ஒன்று ஒரு பாங்கர் செல்ல ஓங்கு இரும் பிறங்கல் உச்சி
நின்றது ஓர் விசயத் தோளான் நெற்றி அம் கண்ணன் போன்றான்.
|
25 |
|
|
|
|
|
|
|
3738.
|
வலம் மிகு மொய்ம்பின் மேலோன் மலர்க் கழல் உறைப்ப ஆற்றா
தல மரு குவட்டின் நிற்றல் அன்று தீ முனிவர் உய்த்த
கொலை கெழு முயலகன் மெய் குலைந்திடப் புறத்துப் பொன்தாள்
நிலவு அணி சடையோன் ஊன்றி நின்றிடும் நிலைமை நேரும்.
|
26 |
|
|
|
|
|
|
|
3739.
|
மாசு
இருள் செறியும் தெண்ணீர் மறி திரை அளக்கர் வேலைப்
பாசடைப் பொதும்பர் வெற்பில் பண்ணவன் தூதன் நிற்றல்
காசியில் அரற்றத் தள்ளிக் களிறு உடல் பதைப்பக் கம்மேல்
ஈசன் அன்று அடிகள் ஊன்றி இருத்திய இயற்கை போலும். |
27 |
|
|
|
|
|
|
|
3740.
|
தாரகன் படைஞர் பல்லோர் சமர் இடை இரிந்து போனார்
பார் இடை உறாமே அந்தப் பருவரை முழைக்கண் உற்றார்
வீரன் மொய்ம்பு உடையோன் அங்கண் மேவலும் அவன் கண்டு
ஏங்கி
ஆர் உயிர் அலந்தார் தீயோர்க்கு ஆவது ஓர் அரணம் உண்டோ.
|
28 |
|
|
|
|
|
|
|
3741.
|
அனையது ஓர் சிமையக் குன்றம் அசைதலும் அங்கண் உற்ற
வனை கழல் விஞ்சை வேந்தர் மங்கையர் ஊடல் மாற்றி
இனிது முன் கலந்தார் அஞ்சி இன்புறாது இடைக்கண் நீத்து
வினை விளைவு உன்னி நொந்து விண்மிசை உயிர்த்துச் சென்றார்.
|
29 |
|
|
|
|
|
|
|
3742.
|
வரை மிசை நின்ற அண்ணல் வனை கழல் அவுணர் கோமான்
பொரு வரு நகர் மேல் செல்லப் புந்திமேல் கொள்ளா எந்தை
திரு உரு அதனை உன்னிச் செங்கையால் தொழுது மாலும்
பிரமனும் வியந்து நோக்கப் பேர் உருக் கொண்டு
நின்றான். |
30 |
|
|
|
|
|
|
|
3743.
|
பொன் பொலி அலங்கல் தோளான் பொருப்பின் மேல் பொருவிலாத
கொன் பெரு வடிவம் கொண்டு குலாய் நிமிர் கொள்கை செவ்வேள்
முன்பு ஒருஞான்று மேரு முடியில் வந்து அமர்க்கு எல்லாம்
தன் பெரு வடிவம் காட்டி நின்றதோர் தன்மை ஆம் ஆல்.
|
31 |
|
|
|
|
|
|
|
3744.
|
ஆண்டகை நெடும் தோள்வீரன் அண்டம் மேல்
மவுலிதாக்க
நீண்டிடும் எல்லை அன்னான் நின்றிடு குன்ற ஞாலம்
கீண்டது பிலத்தில் சேறல் கேடில் சீர் முனிகை ஊன்ற
மீண்டு பாதலத்தில் புக்க விந்தமே போலும் மாதோ. |
32 |
|
|
|
|
|
|
|
3745.
|
விண்ணவர் உய்த்த தேர் மேல் மேவலர் புரம் நீறு ஆக்கும்
பண்ணவன் ஒருதாள் ஊன்றப் பாதலம் புகுந்தவா போல்
கண்ணகல் வரையும் வீரன் கழல் பட அழுந்திற்று அம்மா
அண்ணல் அம் தாதை வன்மை அருள் புரி மகற்கு றாதோ.
|
33 |
|
|
|
|
|
|
|
3746.
|
கன்றிய வரி வில் செம்கைக் காளை பொன்தாளும் அந்தண்
குன்றொடு பிலத்துள் செல்லக் குறிப்பொடு விழிக்கு உறாமே
சென்றிட முடியும் சேண் போய்த் திசை முகத்து அயனும் மாலும்
அன்று அடி முடி காணாத அசலமும் போல நின்றான். |
34 |
|
|
|
|
|
|
|
3747.
|
ஆள் அரி அன்னோன் தாளும் அடுக்கலும் அழுந்தும் பாரின்
நீள் இருமுடிசேர் வானின் நிரந்தமாப் பறவை போதல்
சூள் உடை இமையோர் புள்ளும் மாவும் மாய்த்து ஓமில் வீரன்
தாளொடு முடியும் நாடிச் சார் தரும் தகைமைத்து ஆம் ஆல்.
|
35 |
|
|
|
|
|
|
|
3748.
|
அந்தம் இல் வலியோன் நிற்ப ஆயிடைத் துஞ்சும் பாந்தள்
தம் தொகை வீழ் உறாது தழீஇ மருங்காகக் கீழ்போய்
முந்து உயர் கமடம் சேர்ந்து முழங்கு தெண் டிரைக் கண் வைகும்
மந்தரம் என்னக் கந்த மாதனம் தோன்றிற்று அம்மா. |
36 |
|
|
|
|
|
|
|
3749.
| பதும நேர் கண்ணன் வேதாப் பலவகை முனிவர் தேவர் கதி படர் உவணர் சித்தர் கந்தரு வத்தர் ஒண் கோள் மதி உடுக் கதிர்கள் ஏனோர் வான் பதம் முற்றும் ஓங்கும் அதிர் கழல் வீரன் பல்வே றாரமாய் ஒளிர நின்றான். |
37 |
|
|
|
|
|
|
|
3750.
|
எண்
திசை முழுதும் நேமி எழுதிறத் தனவும் மற்றைத்
தெண் திரைக் கடலும் பாரும் சேண் கிளர் ஆழி வெற்பும்
அண்டமும் உலகம் யாவும் அகன் விழிபரப்பி நோக்கிக்
கண்டனன் அமலன் வைப்பும் கை தொழுது ஐயன் நின்றான்.
|
38 |
|
|
|
|
|
|
|
3751.
| ஆணம் இல் சிந்தை வீரன் அச்சுதன் முதலோர் வைகும் சேண் நகர் நோக்கி வீர திசை நகர் நோக்கிப் பாரின் மாண் நகர் நோக்கி வீர மகேந்திரம் நோக்கிச் சூரன் நீள் நகர் இதற்கு யாவும் நிகர் இலை போலும் என்றான். |
39 |
|
|
|
|
|
|
|
3752.
|
விண் உலாம் புரிசை வெம் சூர் வியன் நகர் அதனை நோக்கி
உண்ணிலா வெகுளி கொண்டான் ஒருகரம் அங்கண் ஓச்சி
நண் அலார் யாரும் துஞ்ச நாம் அறப்பிசைகோ என்னா
எண்ணினான் சிறையில் உற்றோர்க்கு இரங்கி அவ் வெண்ணம்
மீட்டான். |
40 |
|
|
|
|
|
|
|
3753.
|
விஞ்சையர் இயக்கர் சித்தர் வியன் சிறை உவணர் திங்கள்
செம் சுடர்ப் பரிதி நாள் கோள் தெய்வத கணத்தர் யாரும்
வஞ்சினத்து அடுதோள் வீரன் மால் உரு நோக்கல் ஆற்றாது
அஞ்சினர் வெருவச் செம்கை அமைத்தனன் அழுங்கல் என்றே.
|
41 |
|
|
|
|
|
|
|
3754.
|
கோள் இயல் கருடர் தாம் வீழ் மாதரை விழைந்து கூடி
வாள் உறு நகத்தின் ஊறு மதிக்கிலர் மயங்கித் துஞ்சி
வேள் எனும் நெடியோன் ஊன்றும் வெற்பொடும் பிலத்தில்
சென்று
கேளுடன் எழுந்து நாகர் கிளை தனக்கு அணங்கு செய்தார்.
|
42 |
|
|
|
|
|
|
|
3755.
|
ஆதி அம் குமரன் தூதன் ஆற்றலால் ஊன்றி நிற்பப்
பூதலம் கீண்டு வெற்புப் பொள்ளென ஆழ்ந்து கீழ்போய்ப்
பாதலம் குறுக அங்கண் பயில் அராத் தொகையை நாகர்
காதல் அம் கேண்மை நாடிக் கலந்தனர் விருந்து செய்தார்.
|
43 |
|
|
|
|
|
|
|
3756.
|
தேன் திகழ் தெரியல் வாகைச் சேவகன் கழல்கள் வெற்பின்
ஊன்றலும் அனைய பாங்கர் ஒருசிலர் அரக்கர் நோற்றார்
ஆன்றுயர் பதத்தை வெஃகி ஆங்கு அவர் பிலத்துள் வீழ்ந்து
மான்றனர் இரங்கல் உற்றார் வன் கணார்க்கு உய்வும் உண்டோ.
|
44 |
|
|
|
|
|
|
|
3757.
|
புண்டர நீற்று வள்ளல் புரை உருத் தேவர் நோக்கி
மண்டலம் புகழும் வீர மகேந்திரம் சேறற்கு அன்றால்
கொண்ட இவ் வுருவம் நோக்கில் குரைகழல் அவுணர் தம்மை
அண்டமும் இடித்துச் சாடும் நினைவு கொல் ஐயற்கு என்றார்.
|
45 |
|
|
|
|
|
|
|
3758.
|
வீரமா மகேந்திரத்தில் அவுணரும் வீற்று வீற்றுச்
சரர் உறும் அவுணர் தாமும் சயம் கெழு புயத்து வள்ளல்
பேர் உரு நோக்கி இங்ஙன் பிறந்த சொல் சழக்கே இன்னும்
தேருவது உண்டு நம்தம் திறல் வரைப் புணர்ப்பிது என்றார்.
|
46 |
|
|
|
|
|
|
|
3759.
|
ஒலி கழல் வீர வாகு ஓங்கலை ஊன்றி இந்த
நிலைமையின் நிற்றலோடும் நெடியமால் சுதனும் விண்ணோர்
தலைவனும் பிறரும் அன்னோன் தம்பியர் அளப்பு இல்லோரும்
கலிகெழு பூதர் யாரும் கண்டு விம் மிதத்தின் ஆர்த்தார். |
47 |
|
|
|
|
|
|
|
3760.
|
தேவர்கள் முனிவர் ஏனைத் திறத்தவர் யாரும் தம்தம்
ஓவரும் பதத்தின் நின்றே ஒல்வதோர் உறுப்பின் மேவக்
காவரு கடி மென் பூத்தூய்க் கை தொழுது ஐய வெம் சூர்
மேவரு நகர் சென்று எங்கள் வியன்துயர் அகற்றுக என்றார்.
|
48 |
|
|
|
|
|
|
|
3761.
|
ஆவது
ஓர் காலை எந்தை ஆறு இரு தடம் தோள் வாழ்க
மூ இரு வதனம் வாழ்க முழுது அருள் விழிகள் வாழ்க தூ உடை நெடு வேல் வாழ்க தொல் படை பிறவும் வாழ்க தேவர்கள் தேவன் சேயோன் திருவடி வாழ்க என்றான். |
49 |
|
|
|
|
|
|
|
3762.
|
ஆண்டகை தொழுத பாணி அணி முடிக் கொண்டு இவ் வாற்றால்
ஈண்டு சீர்க் குமர வேளை ஏத்தலும் அன்பின் கண்ணீர்
வீண்டு தெண் கடலுள் ஏகி வெள்ளம் மிக்கு வரை மாற்றப்
பூண்ட கண்டிகையை மானத் தோன்றின பொடிப்பின் பொம்மல்.
|
50 |
|
|
|
|
|
|
|
3763.
|
மீது கொள் பொடிப்பு மூட மெய்ப்புலன் சிந்தை ஒன்ற
ஓதுவ தவற என்பும் உருகிய செருக நாட்டம்
கோது இல் பேர் அருளின் மூழ்கிக் குதூகலித்திடுதல் ஓடு
மூது உலகு அனைத்தும் ஆவி முழுவதும் மகிழ்ந்த அன்றே.
|
51 |
|
|
|
|
|
|
|
3764.
|
அவ்வகை நிகழச் செவ்வேள் ஆர் அருள் அதனைப் பெற்று
மொய்வரை மீது நின்றோன் முழுது உலகு அளந்து சேண்போம்
இவ் உருவோடு செல்லின் இறந்திடும் உலகம் ஈது
செவ்விது அன்று என்னா வேண்டும் திருவடி அமைந்தான் அன்றே.
|
52 |
|
|
|
|
|
|
|
3765.
|
கிரிமிசை நின்ற அண்ணல் கிளர்ந்து வான் எழுந்து சென்னிக்
குருமணி மகுடம் அண்ட கோளகை புடைப்ப வீரன்
உருகெழு சீற்றச் சிம்புள் உருவு கெண்டே ஏகிற்று என்ன
வரை புரை மாட வீர மகேந்திரம் முன்னிப் போந்தான். |
53 |
|
|
|
|
|
|