கடல் பாய் படலம்
 
3766.
அழுங்கிய கழல் கால் வீரன் அவ்வழி அவனிக் கீழ்போய்
விழும் கிரி நிலைமை நோக்கி மீண்டும் நீ எழுதி என்னா
வழங்கினன் வழங்கும் எல்லை வல்லையில் கிளர்ந்து                                      தோன்றி
முழங்கு இரும் கடலின் மாடே முந்து போல் நின்றது                                      அன்றே.
1
   
3767.
வீரன் அங்கு எழலும் அன்னோன் விண்படர் விசைப்பின்                                    காலால்
பார் உறு வரைகள் யாவும் படர்ந்தன பாங்கர் ஆகச்
சாரதத் தலைவர் ஏனைத் தம்பியர் இலக்கத்து எண்மர்
ஆரும் அங்கு அவன் தன் பாலாய் அணிந்து உடன்                                    சேறல் என்ன.
2
   
3768.
விரைந்து வான் வழிக் கொள் வீரன் விசைத்து எழு                                காலின் அண்டம்
திரிந்தன உயிர்கள் முற்றும் தெருமரல் உற்ற தெண்ணீர்
சுரந்திடும் கொண்டல் யாவும் சுழன்றன வடவை உண்ண
இருந்திடும் ஊழிக் காலும் ஆற்றலா திரியல் போன.
3
   
3769.
பெருமிடல் பூண்ட தோன்றல் பெயர்தலும் விசைப்பின்                                     ஊதை
பரவின வெம்மை மாற்றிப் பரிதியைக் கனலைத் திங்கள்
வருணன் அது இயற்கை ஆக்கி வடவையின் முகத்துத்                                     தோன்றித்
திரை கடலில் இருந்த ஊழித் தீயையும் அவித்துச் சென்ற.
4
   
3770.
விரை செறி நீபத் தாரோன் விரைந்து செல் விசைக் கால்                                       தள்ளத்
திரைகடல் சுழித்து உள் வாங்கித் திறன் மகேந்திரத்தில்                                       சேறல்
அரசியல் புரி வெம் சூரன் அனிகங்கள் அவன் மேல்                                       சென்று
பொரு முரண் இன்றித் தம் ஊர் புகுவன இரிவ போலாம்.
5
   
3771.
விடைத்தனி ஆற்றல் சான்ற விடலை கால் வெற்பினோடும்
படித்தலம் கீண்டு முன்னம் பாதலம் காட்டிற்று அன்னான்
அடல் படு விசையின் காலும் அளியதோ வலியது                                       அன்றோ
கடல் புவி கீண்டு நாகர் உலகினைக் காட்டிற்று அன்றே.
6
   
3772.
பாசிழை அலங்கல் தோளான் படர்தலும் விசையின்                                         காலைக்
காய்சின உயிர்ப்புச் செம்தீக் கலந்துடன் தழீஇக் கொண்டு                                       ஏகி
மாசு உறு சூரன் வைகும் வள நகர் சுற்றி அன்னோன்
தூசியது என்ன முன்னம் கொளுவிய தூமஞ் சூழ.
7
   
3773.
பூஞ்சிலம்பு அரற்றும் தாளான் போது முன் விரைவின்                                        ஓதை
வேய்ஞ் சிலம் படுதோள் சூரன் வீரமா மகேந்திரத்தின்
நாஞ் சிலம் புரிசை பொன் செய் நளிர் வரை குளிர் பூம்                                        கிள்ளை
தாம் சிலம்பு உற்ற சோலை அலைத்தன தரையில் தள்ளி.
8
   
3774.
உறை புகு நெடிய வேலான் உயிர்ப்புறு கனன் முன் ஓடிச்
செறுநன் ஊர் கொளுவ அன்னான் சென்றிடு விரைவின்                                      கால் போய்
எறிபுனல் கடலைத் தாக்க இடைந்து மற்று அதுதான் ஏகி
முறை முறை திரைக்கை நீட்டி மூண்டிடா தவித்துப்                                      போமால்.
9
   
3775.
அண்ணல் அம் காளை ஏக உயிர்த்த கால் அவன் செல்                                           ஓதை
கண் அழல் துண்டம் ஓச்சும் கடும் கனல் எதிராது ஓடும்
உள் நிறை புணரி யாவும் ஒன்னலன் பதி மேல் சென்று
விண் நிலம் ஒழிந்த பூதம் அடுதலின் விளைத்த பூசல்.
10
   
3776.
வெள்வரைக் குவவுத் திண் தோள் வெலற்கு அரும்                             திறலோன் எண்கால்
புள் விசை கொண்டு செல்லப் புறம் தரப் புணரி அங்கண்
உள் வளைந்து உலாய சின்னை ஒண் சுறாப்பனை மீன்                             நூறை
தெள் விளித் திருக்கை தந்தி திமிங்கிலம் இரிந்து பாய்ந்த.
11
   
3777.
நாயகன் தூதன் ஏக நளிர் கடல் எதிர்ந்திடாது
சாய்வது மீன் முற்றும் தரங்க வெண் கரங்கள் தாங்கித்
தீய சூர் மூதூர் உய்த்துச் சென்றது பொன்று வோர்க்கும்
மேயின விச்சை உண்டி மிகத்தமர் வழங்கு மா போல்.
12
   
3778.
காழ்தரு தடக்கை மொய்ம்பன் கடுமை சொல் செலவின்                                         ஓதை
சூழ்தருகின்ற காலைத் துண் எனத் துளங்கி விண்மீன்
வீழ்தர வேலை தன்னில் வேலையும் மறிந்து செல்ல
வாழ் திரை எறி மீன் முற்றும் அந்தரம் புகுவ மாறாய்.
13
   
3779.
காமரு நயக்கும் காளை கது மெனச் செல்லப் பாங்கில்
தூமலர்க் கரத்தில் இட்ட சுடர் மணிக் கடக வாள் போய்
நேமி அம் குவடு சூழ்ந்து நிமிர் தரு திமிரம் ஓட்டி
ஏம நல் அண்ட வில்லோடு எதிர்ந்து போய் இகல்                                       செய்கின்ற.
14
   
3780.
விண்ணவர் யாரும் தேரும் படையுமாய் விரவ மேலோன்
நண்ணலர் புரம் மேல் ஓச்சு நகை அழல் பேதல் ஒத்தான்
கண் அழல் செலவும் போன்றான் கார்முகம் பூட்டி உய்த்த
மண் உலகு இடந்த கூர்வாய் வாளியும் என்னச் சென்றான்.
15
   
3781.
தரைதனை அலைத்து நோற்கும் தாபதர்க்கு அலக்கண்                                    செய்து
சுரர் திருக் கவர்ந்து வாட்டும் சூரனைக் கிளையினோடும்
விரைவுடன் முடிப்பான் முன்னி வெகுண்டு செவ்வேள்                                    அங்கு உய்த்த
ஒருதனிச் சுடர்வேல் போன்றும் போயினன் உயர் திண்                                    தோளான்.
16
   
3782.
இமிழ் தரு தரங்கப் பாலின் எறிகடல் மதித்து வானோர்க்கு
அமிர்தினை அளிப்பான் வேண்டி அகிலமும் உண்டு                                     தொல் நாள்
உமிழ் தரு திருமால் உன்ன உணர்ந்து மந்தரம் ஆம்                                     ஓங்கல்
நிமிர் தரு புணரி செல்லும் நிலைமை போல் வீரன்                                     போந்தான்.
17
   
3783.
சேண் தொடர் உலகும் பாரும் தெருமர அனலம் வீசிக்
காண்தகு விடத்தை ஈசன் களத்து இடை அடக்கி வைப்ப
ஈண்டு எமை விடுத்தி என்னா ஏத்தலும் அவன் அங்கு                                    உய்ப்ப
மீண்டு அது கடல் போந்து என்ன வீரருள் வீரன்                                    சென்றான்.
18
   
3784.
பொலம் கழல் வீரவாகு புணிமேல் இவ்வாறு ஏகி
அலங்கல் அம் திண் தோள் வெம் சூர் அணிநகர் வடாது                                     பாலின்
விலங்கலில் வீரன் யாளி வியன் முகத்து அவுணன்                                     போற்றும்
இலங்கை அம் தொல்லை மூதூர் அணித்து எனும் எல்லை                                     சென்றான்.
19