வீரசிங்கன் வதைப் படலம்
 
3785.
அன்னதோர் வேலை முன்னம் அகன்தலை யாளிப்                                      பேரோன்
துன்னு பல் அனிகத் தோடும் சூரனைக் காண்பான் ஏக
மன் அதி வீரன் என்னும் மதலை ஆயிரம் ஆம் வெள்ளம்
தன்னொடும் இலங்கை வைகித் தணப்பு அறப் போற்றி                                      உற்றான்.
1
   
3786.
ஆனது ஓர் மிக்க வீரத்து ஆண் தகை அவுணர் போற்ற
மா நகர்க் கோயில் நண்ண வட திசை வாயில் தன்னில்
மேல் நிமிர் அவுணர் தானை வெள்ளம் ஐஞ்ஞூறு ஒடு                                      அன்னான்
சேனை அம் தலைவன் வீர சிங்கன் ஆம் திறலோன்                                      உற்றான்.
2
   
3787.
உற்றது ஓர் வீரசிங்கன் ஒண் சிறைச் சிம்புளே போல்
வெற்றி அம் திண் தோள் ஏந்தல் விரைந்து சென்றிடலும்                                       காணூஉச்
சற்று நம் காவல் எண்ணான் தமியன் வந்திடுவான் போலும்
மற்று இவன் யாரை என்னாச் சீறினன் வடவையே போல்.
3
   
3788.
உண் குவன் இவன் தன் ஆவி ஒல்லை என்று உன்னிக்                                        காலும்
எண் கிளர் மனமும் பின்னர் எய்துமாறு எழுந்து நேர்                                         போய்
விண் கிளர் செலவில் தானை வெள்ளம் ஐஞ்ஞூறும் சுற்ற
மண்கிளர் கடல் போல் வீரவாகுவின் முன்னம் சென்றான்.
4
   
3789.
சென்றிடும் வீர சிங்கன் திறல் கெழு புயனைப் பாரா
இன்றளவு எமது காப்புள் ஏகினர் இல்லை யார் நீ
ஒன்று ஒரு தமியன் போந்தாய் உயிர்க்கு நண்பு இல்லாய்                                        நின்னைக்
கொன்றிடு முன் நீ வந்த செயல் முறை கூறுக என்றான்.
5
   
3790.
பொன் இயல் திண் தோள் வீரன் புகலுவான் இலங்கை                                         வாவி
மன்னியல் சூரன் வைகும் மகேந்திரம் சென்று மீள்வான்
உன்னினன் போந்தேன் ஈது என் உறுசெயல் வலியை                                         என்னின்
இன் இனி வேண்டிற்று ஒன்றை இயற்றுதி காண்பன்                                         என்றான்.
6
   
3791.
திறன் மிகு சிங்கன் அன்னோன் செப்பிய மொழியைக்                                         கேளா
இறையும் நம் அவுணர் ஆணை எண்ணலன் வலியன்                                         போலும்
அறிகுதும் ஈண்டு சேறல் அழகிது அன்று என்னா உன்னிக்
குறுகிய படைஞர் தம்மை இவன் உயிர் கோடிர் என்றான்.
7
   
3792.
என்றலும் அரியது ஒன்றை எயினர்கள் வேட்டைக் கானில்
சென்றனர் திரண்டு சுற்றிச் செருவினை இழைப்பதே போல்
பொன் திகழ் விசயவாகுப் புங்கவன் தன்னைச் சீற்றம்
வன்திறல் அவுணர் யாரும் வளைந்து அமர் புரியல்                                          உற்றார்.
8
   
3793.
வேலினை விடுப்பர் தண்டம் வீசுவர் முசலம் தூர்ப்பர்
சாலம் அது எறிவர் ஆலம் தன்னை ஓச்சிடுவர் வார்வில்
கோல்வகை தொடுப்பர் நாஞ்சில் கொடும் படை துரப்பர்                                          வெய்ய
சூலம் அது உய்ப்பர் கொண்ட தோமரம் சொரிவர் அம்மா.
9
   
3794.
கிளர்ந்து எழு பரிதி தன்னைக் கேழ்கிளர் உருமுக்                                 கொண்மூ
வளைந்து என அவுணர் வீரன் மருங்கு சூழ்ந்து ஆடல்                                 செய்யத்
தளர்ந்திலன் எதிர்ந்து தன்கைத் தாரை வாள் உறையின்                                 நீக்கி
உளந்தனில் முனிந்து அன்னோரை ஒல்லை சூழ்ந்து                                அடுதல் உற்றான்.
10
   
3795.
அரக்கு உருக்கொண்ட வெற்பின் அடு கனல் கடவுள்                                      எய்தி
உருக்கியே அதனை எல்லாம் ஒல்லையின் உடைக்கு                                      மாபோல்
நெருக்கிய அவுணர் தானை நீத்தம் அது உடைய வீரன்
திருக்கிளர் வாள் ஒன்று ஏந்திச் சென்று சென்று அடுதல்                                      செய்தான்.
11
   
3796.
பனிபடர் குழுமல் தன்னைப் பாய் இருள் செறிவை                                         அங்கிக்
கனிபடர் பொற்பில் தோன்றும் காய்கதிர் முடிக்கும் மா                                         போல்
நனிபடர் அவுணர் தானை நைந்திடச் சுடர் வாள் ஒன்றால்
தனிபடர் வீரவாகு தடிந்தனன் திரிதல் உற்றான்.
12
   
3797.
உறைந்தன குருதி வாரி ஒல்லையில் உவரித் தெண்ணீர்
மறைந்தன அவுணர் தானை மால்கரி பரிதேர்முற்றும்
குறைந்தன கரம் தாள் மொய்ம்பு கொடு முடி துணிந்து                                          வீழ்ந்த
நிறைந்தன அலகை ஈட்டம் நிரந்தன பரந்த பூதம்.
13
   
3798.
வெள்ளம் நூறு அவுணர் தானை விளிந்திட இனைய                                        பாலால்
வள்ளல் சென்று அடுதல் செய்ய மற்றுள அவுணர் யாரும்
உள்ளம் நொந்து இரங்கித் தத்தம் உயிரினை ஓம்பல்                                        செய்து
பொள் என நிலனும் வானும் புலம் தொறும் இரியல்                                        போனார்.
14
   
3799.
போதலும் வீர சிங்கன் பொள் எனச் சினம் மேல்                                    கொண்டு
மாதிரம் கடந்து மேல் போய் வளர் தரும் வாகை                                    மொய்ம்பன்
மீது ஒரு சூலம் தன்னை விட்டனன் விட்ட காலை
ஏதி அங்கு அதனால் அன்ன திரு துணி படுத்தி                                   ஆர்த்தான்.
15
   
3800.
ஆர்த்தலும் மடங்கல் பேரோன் ஆண்தகை வீரன்                                       மேன்மை
பார்த்தனன் தனது பாணி பற்றிய படைகள் தம்மில்
கூர்த்தது ஓர் குலிசம் வீசக் குறுகி வாள் அதனான்                                       மாற்றிப்
பேர்த்து ஒரு படை யெடா முன் பெயர்ந்தவன் முன்னம்                                       சென்றான்.
16
   
3801.
சென்று தன் மணிவாள் ஓச்சிச் செம்கைகள் துமித்துத்                                      தீயோன்
ஒன்று ஒரு முடியும் கொய்தே உவர்க் கடலிடையே வீட்டி
நன்று தன் உறையுள் செல்ல நாந்தகம் செறித்து                                      முன்னோர்
வென்றி கொண்டு அகன்றான் என்ப வேலவன் விடுத்த                                      தூதன்.
17