முகப்பு |
இலங்கை வீழ் படலம்
|
|
|
3802.
|
மலங்கொடு சுறவு தூங்கும் மறி கடல் மீது மேரு
விலங்கல் சென்றிட்டது என்ன விண் இடம் தன்னின் நீங்கி
அலங்கல் அம் திண் தோள் வள்ளல் அவுணர்தம் இருக்கை
ஆகும்
இலங்கை அம் குவடு மூன்றில் இடைப்படு சிகரம்
பாய்ந்தான். |
1 |
|
|
|
|
|
|
|
3803.
| நெடுவரை தன்னை வேலோன் ஈறு செய்திட்ட அண்ணல் விட வரு தமியோன் தொல்லை இலங்கையின் மீது பாய அடல் அதி வீரன் ஏனை அவுணர்கள் கலங்கி ஏங்கி இடி உறு புயங்கம் என்ன யாரும் மெய் பனித்து வீழ்ந்தார். |
2 |
|
|
|
|
|
|
|
3804.
|
வைப்பு உறு மகேந்திர வடாது புலம் ஆகி
இப்புறம் இருந்திடும் இலங்கை தனில் எந்தல் குப்புறுதலும் குலை குலைந்து அவுணரோடும் உப்பு உறு கடல் படிதல் கண்டு உவகை ஊற்றான். |
3 |
|
|
|
|
|
|
|
3805.
| தந்திமுக மாமதலை தன் அடி வணங்கா தந்தர விண்ணோர்க் கடல் அலைத்திடலும் அன்னோன் சிந்தை முனி வெய்த விடை சேர்த்த கயிறோடு மந்தர நெடும் கிரி மறிந்தபடி மானும். |
4 |
|
|
|
|
|
|
|
3806.
| ஆடல் கெழு மொய்ம்பினன் அடித்தலம் அது ஊன்ற மூடுதிரை வேலை இடை மூழ்கிய இலங்கை கூடு மகவு அண்ணல் குலிசம் தொடர நேமி ஊடு புகல் உற்றிடும் மை நாக வரை ஓக்கும். |
5 |
|
|
|
|
|
|
|
3807.
| மா மறைகள் தம்மை முனம் வஞ்சனை புரிந்தே சோமுகன் மறைந்த திரை தூங்கு கடல் ஊடே ஏமம் உறு பேர் உரு எடுத்தது ஒரு மாண் சேல் போம் என வாழ்ந்தது பொலம் கெழும் இலங்கை. |
6 |
|
|
|
|
|
|
|
3808.
| தொல்லை தனில் ஓர் விதி துயின்ற கடை நாளின் எல்லையது இகந்து கடல் ஏழும் எழ அங்கண் ஒல்லை பிலம் முற்ற புவி உய்ப்ப ஒரு கேழல் செல்லுவதின் ஆழ்ந்தது திரைக் கடல் இலங்கை. |
7 |
|
|
|
|
|
|
|
3809.
| சிந்துவின் அகன் கரை ஒர் திண் கிரி அழுந்த அந்தம் இல் இலங்கையும் அழுந்தி இடும் தன்மை முந்து ஒரு மடக் கொடி விருப்பின் முனி மூழ்க இந்திரனும் நேமியின் இடைப் புகுதல் போலும். |
8 |
|
|
|
|
|
|
|
3810.
| உலம் கொள் புய வீரன் அடி ஊன்றுதலும் முன்னோர் விலங்கல் பணி தன் உலகம் மேவியது கேளா அலங்கல் பெறு வாகை அவன் ஆற்றல் அது தாங்கி இலங்கை அது காண்பல் என ஏகியது போலும். |
9 |
|
|
|
|
|
|
|
3811.
| இலங்கை இது பான்மையின் இரும் கடலுள் மூழ்கக் குலங்களொடு வைகிய கொடும் தகுவர் யாரும் கலங்கினர் அழுங்கினர் கவன்றனர் துவன்றி மலங்கினர் புலம்பினர் மருண்டனர் வெருண்டார். |
10 |
|
|
|
|
|
|
|
3812.
| அற்றம் உறு தானவர்கள் ஆழ அனையோரைச் சுற்றிய அளப்பு இல சுறா உழுவை மீனம் பற்றிய வளைந்தன பலப்பல திரண்டே செற்றிய திமிங்கில திமிங்கில கிலங்கள். |
11 |
|
|
|
|
|
|
|
3813.
| கையதனை ஈர்ப்ப சில கால்கள் சில ஈர்ப்ப வெய்ய தலை ஈர்ப்ப சில மிக்க உயர் தோள்கள் மொய்யுடை மார்பு அதனை ஈர்ப்ப சில மொய்த்தே சையம் உறழ் யாக்கை உள தானவரை மீனம். |
12 |
|
|
|
|
|
|
|
3814.
| அத்தனொடி யாயை மனை அன்பின் முதிர் சேயைக் கொத்தின் ஒடு கொண்டு சிலர் கூவி எழுகின்றார் எய்த்தனர்கள் செய்வது என் இரும் படையும் விட்டுத் தத்தம் உயிர் கொண்டு சிலர் தாமும் எழல் உற்றார். |
13 |
|
|
|
|
|
|
|
3815.
| உற்ற சில தானவரை ஒய்யென அளாவித் திற்றி விழை வான் நனி திரண்டனர்கள் எல்லாம் பற்றுழி தனித்தனி பறித்தது பொருட்டால் பொற்றை புரை மீன்கள் பெரும் போர் வினை புரிந்த. |
14 |
|
|
|
|
|
|
|
3816.
|
தானவர்கள்
ஓர் சிலவர் தம் உணல் குறித்தே
வான் நிமிரும் ஓதை என வந்து தமை எற்றப் பூ நுனைய வாள் சுரிகை போர் அயில்கள் கொண்டே மீனம் ஒடு வெம் சினம் விளைத்து அமர் புரிந்தார். |
15 |
|
|
|
|
|
|
|
3817.
| சீர்த்தி கொள் இலங்கை கடல் சென்றிடலும் அங்கண் ஆர்த்தி பெறு மங்கையர்கள் அங்கை அவைபற்றி ஈர்த்த பிறர் இல் உற இசைந்து கரம் பற்றும் தூர்த்தரை நிகர்த்தன சுறா மகர மீனம். |
16 |
|
|
|
|
|
|
|
3818.
| மீன் ஒரு கை பற்றி இட வேறு ஒரு கரத்தைத் தானவர் வலித்து தடக்கை கொடு இசிப்ப மான் அனைய கண்ணியர் வருந்திடுதல் ஓர் ஐந்து ஆன புலன் ஈர்ப்ப உள் அழுங்குவது போலும். |
17 |
|
|
|
|
|
|
|
3819.
| திண் திறல் வலம்படு திருக்கை சுற மீனம் மண்டிய திமிங்கிலம் வரும் தகுவர் சூழல் கண்டு மிசை எற்றிடுதலும் கடிது வாளால் துண்டம் உறவே அவை துணித்து எழுநர் சில்லோர். |
18 |
|
|
|
|
|
|
|
3820.
| கட்டழல் விழிச் சுறவு கார் அவுணர் தம்மை அட்டு உணல் குறித்து வர அன்னவர்கள் நீவித் தொட்டனர் பிடித்து அகடு தூரும் வகை பேழ்வாய் இட்டனர் மிசைந்தனர் எழுந்தனர்கள் சில்லோர். |
19 |
|
|
|
|
|
|
|
3821.
| ஏற்ற புனல் ஊடு தெரிவு இன்றி எமர் என்றே வேற்று ஒரு மடந்தையர் வியன் கையது பற்றிப் போற்றி எழ அங்கவர் புறத்தவர் களாக மாற்றினர் இசைந்து சிலர் வாழ்க்கை மனம் வைத்தார். |
20 |
|
|
|
|
|
|
|
3822.
| இல் இவர் எனப் பிறரை ஏந்தி எழ அன்னோர் புல்லு தனி அன்பர் புடை போக ஒரு சில்லோர் அல்லல் உறுவார் தமை அடைந்த தொரு கன்னி மெல்ல அயல் போந்துழி மெலிந்து உழலுவார் போல். |
21 |
|
|
|
|
|
|
|
3823.
| தீமை புரி மால் களிறு திண் புரவி யாவும் ஏமரு சுறாத் தொகுதி ஈர்த்து விரைந்து ஏகித் தோ மறு பிணா மகரம் துய்ப்ப உதவுற்ற காமர் கெழு பெண் மயல் கடக்க எளிதன்றே. |
22 |
|
|
|
|
|
|
|
3824.
| மாற்று அறு சுறாச் சில மடப்பிடிகை பற்றி ஏற்ற பெண் வழிச் செல எதிர்ந்து அதனை நோக்கி வேற்று ஒர் பெடை ஆயது என வேர் உறுகை கையர்க்கு ஆற்றும் உபகார இயல் பாகியதை அன்றே. |
23 |
|
|
|
|
|
|
|
3825.
| சிந்துவதன் மீதில் எழு சில் அவுணர் ஆயோர் கந்தன் முருகேசன் விடு காளை செயல் காணா நம் தமையும் நின்றிடின் நலிந்திடுவன் யாங்கள் உய்ந்திடுதும் என்று கடிதோடி அயல் போனார். |
24 |
|
|
|
|
|
|
|
3826.
| பீடு செறி தம் கணவரைப் பிரிகிலாமே கூடும் வழி ஆழ்ந்த சில கோல் தொடி மின்னார்கள் ஆடை புனல் ஊடு புக அல்குல் தம் கையால் மூடி எழுவார் முலை முகத்தின் முகம் வைத்தே. |
25 |
|
|
|
|
|
|
|
3827.
|
சேண்
தொடர் இலங்கை கடல் சென்று உழிய தன்பால்
ஆண்ட சில மாதர்கள் அரத்த உடை கொண்டார் மீண்டு எழலும் நீர் பட வெளிப்படுவது அல்குல் காண்டகைய செம்மதி களங்கம் அடைந்து என்ன. |
26 |
|
|
|
|
|
|
|
3828.
| கார் அவுணர் மாதர் சிலர் காமர் கடல் வீழ்வார் நீரம் எழவே உடை நெகிழ்ந்து ஒருவி யேக மூரல் முகம் அல் உருவு முற்று உற மறைத்தே தேரை என ஒண் புனல் செறிந்து திரி உற்றார். |
27 |
|
|
|
|
|
|
|
3829.
| ஆசு உறும் அரைத் துகில் அன்றிட எழுந்தே தேசு உறு மடந்தையரில் ஓர் சிலவர் சேண் போய் மாசு உறு புயல் குழுவை வல்லை கரம் பற்றித் தூசின் இயல்பால் நடுவு சுற்றி உலவு உற்றார். |
28 |
|
|
|
|
|
|