முகப்பு |
அதி வீரன் வதைப் படலம்
|
|
|
3830.
|
அன்னதொர் பான்மை களாக இலங்கை
முன் உறு வார்கடல் ஆழ்ந்தது மூழ்க இந் நகர் போற்றி இருந்திடு கின்ற மின் நுனை வேல் அதி வீரன் உணர்ந்தான். |
1 |
|
|
|
|
|
|
|
3831.
| தனது புரங் கடல் சாருதல் காணா நனி துயர் எய்தினன் நாணும் அடைந்தான் சினவி உயிர்த்து அழல் சிந்த நகைத்தான் அனையவன் இன்னது அகத்திடை கொண்டான். |
2 |
|
|
|
|
|
|
|
3832.
| சுந்தர மேவரு சூரபன் மாவோ அந்தம் இல் தம்பியர் ஓவனையார் தம் மைந்தர்களோ மதியேன் அவர் அல்லால் இந்த இயற்கையை யார் புரிகிற்பார். |
3 |
|
|
|
|
|
|
|
3833.
| ஆயவர் என்னினும் ஆங்கு அது செய்தற்கு ஏயது ஒர் ஏதுவும் இன்று தம் ஊர்க்குத் தீயது செய்கலர் சிந்தையது அன்றால் மாயையும் ஈது மதிக்கிலள் போலும். |
4 |
|
|
|
|
|
|
|
3834.
| மூவரும் இச் செயல் முன்னலர் பின்னர்த் தேவர்கள் யார் இது செய்திட வல்லார் ஏவரும் நம் சிறை எய்தினர் வேள்விக் காவலன் ஆருயிர் காத்து மறைந்தான். |
5 |
|
|
|
|
|
|
|
3835.
| மாதிர மேலவர் வானிடை வைப்பின் மேதகும் விண்ணவர் விஞ்சையர் சித்தர் ஆதியர் நம் இறை ஆணையின் நீங்கார் ஈது புரிந்திட எண்ணுவர் கொல்லோ. |
6 |
|
|
|
|
|
|
|
3836.
| தவ்வற ஈண்டு அமர் தானவர் ஆற்ற மெய் வலி மாயைகள் மேவினர் ஏனும் தெவ்வடு சூர் முதல் திண் படை அஞ்சி இவ் இயல் தன்னை இழைக்கலர் போலும். |
7 |
|
|
|
|
|
|
|
3837.
| ஆதலின் அன்னவர் ஆற்றலர் என்னின் ஈது ஒரு செய்கை இழைத்தவர் யாரோ தாதை அகன்றுழி தானவர் ஓடும் காதலின் இந் நகர் காத்தது நன்று ஆல். |
8 |
|
|
|
|
|
|
|
3838.
| காயம் ஒடுங்கு கனல் சிரம் ஊடு போயது வல்லை புறம் செல நோற்று மாயை பெரும் படை வன்மைகள் வேதன் ஈய முன் வாங்கிய என் செயல் நன்றால். |
9 |
|
|
|
|
|
|
|
3839.
| தந்தை உறாது தணந்துழி ஆங்கு ஓர் மைந்தன் இருந்து தன் மா நகரோடும் அந்தில் அகன் கடல் ஆழ்ந்தனன் என்றால் நம் தமர் என்னை நகைப்பர்கள் அன்றே. |
10 |
|
|
|
|
|
|
|
3840.
| மன்னவன் ஈது மதித்திடின் மற்று என் தன்னை அடும் பெறு தாதையும் அற்றே பின் உளர் எள்ளுவர் பெற்றி இதாம் மேல் என் இயல் நன்று என எண்ணி இனைந்தான். |
11 |
|
|
|
|
|
|
|
3841.
| இனைந்த அதிவீரன் எனும் திறல் மைந்தன் கனைந்திடு கின்ற கடற்கு இடை ஆழ்வோன் அனந்தரம் ஊழ் வினை ஆற்றலின் அன்னான் மனம் தனில் ஈது ஒரு தன்மை மதித்தான். |
12 |
|
|
|
|
|
|
|
3842.
| ஒல் ஒலி சேருவர் வரிக் கடல் மீதாய்ச் செல்லுவான் யார் இது செய்தனர் என்றே வல்லையில் ஓர் குவன் மற்று அவர் தம்மைக் கொல்லுவன் மெய்ப்படு சோரி குடிப்பன். |
13 |
|
|
|
|
|
|
|
3843.
| என்று அதி வீரன் இரும் படையாவும் ஒன்று அற வாரி உருத்துனி அகத்துள் நின்று உளர் தங்களை நேடுபு கொண்டே வன் திரை வேலையின் மீ மிசை வந்தான். |
14 |
|
|
|
|
|
|
|
3844.
|
விடலை திருமுன்னம் அதி வீரன் அனிகங்கள்
புடையில் வர நீரின் மிசை பொள் என எழுந்தான் அடு தொழில் இயற்றிடும் ஆதி தனை எய்தக் கொடிய விடம் வார் கடல் குலாய் நிமிர்வதே போல். |
15 |
|
|
|
|
|
|
|
3845.
|
விழுந்திடும் இலங்கை தனில் மேவும் அதிவீரன்
எழுந்து தன் தானையொடு இரும் கடலுள் அங்கிக்
கொழுந்து மிசை சென்று அனைய கோலமொடு நின்ற
செழும் திறல் கொள் மொய்ம்புடைய செம்மல் நிலை கண்டான்.
|
16 |
|
|
|
|
|
|
|
3846.
| கண்டனன் வெகுண்டு இதழ் கறித்து நகை செய்யா அண்டர் குழு வான் இவன் ஓர் ஆண்டகை நம் மூதூர் தெண் திரையில் ஆழும் வகை செய்தும் இவண் நின்றான் எண் திசை தொழும் தகுவர் ஆணை இனிது என்றான். |
17 |
|
|
|
|
|
|
|
3847.
| என்று மொழியா விரைவில் யாளி முகன் மைந்தன் கொன்று இவனது ஆருயிர் குடிப்பன் என உன்னிச் சென்றிடலும் ஆழ்ந்தவர் செயற்கை அது காண்பான் நின்ற தொரு பேர் அறிஞன் நீர்மையது கண்டான். |
18 |
|
|
|
|
|
|
|
3848.
| ஆன பொழுதுதத் தினில் அவன் புடையில் வந்த தானவர்கள் சூழ்ந்தனர் சமர்த் தொழில் இயற்ற மான விறலோன் தனது வாள் உறை கழித்தே ஊன் ஒடு உயிர் சிந்திட ஒல்லை அடல் செய்தான். |
19 |
|
|
|
|
|
|
|
3849.
|
அற்றன
சிரத் தொகுதி அற்றன கரங்கள்
அற்றன புயத்தொகுதி அற்றன பதங்கள் அற்றன பெரும் புறமும் அற்ற உடன் முற்றும் அற்றனர்கள் யாரும் உயிர் அற்றது அவர் பூசல். |
20 |
|
|
|
|
|
|
|
3850.
| பங்கி செறி செம் தலைகள் பாய் குருதி நீர் மேல் எங்கணும் மிதப்பன இரும் கடலின் ஊடே செம் கொடி படந்திடு செழும் பவள வைப்பில் அங்கமலம் ஆனவை அலர்ந்திடுதல் போலும். |
21 |
|
|
|
|
|
|
|
3851.
| அற்றம் அகல் வீரன் அவுணப் படை துணிப்பச் செற்றிய பிணத்தொகை திரைப் புணரி தூர்த்து மற்று மிசை போந்து மணியாலும் ஒர் இலங்கைப் பொற்றையது இயற்றியது போன்றுளது மாதோ. |
22 |
|
|
|
|
|
|
|
3852.
| தன் படை விளிந்து சலதிக் கடலுள் வீழ முன் பன் அதி வீரன் முனி யாவதனை நோக்கி என் புடையி னோரை எறிந்தாய் கடிதின் நின்னைத் தின்பனது காண்டி எனவே செரு முயன்றான். |
23 |
|
|
|
|
|
|
|
3853.
| சொல்லும் அதி வீரன் வரு தோற்றம் அது காணா வல்லை வருக என்று திறல் வள்ளலும் அழைப்ப எல்லை அதனில் செருவின் ஏற்று இவனை இன்னே கொல்லுக என அங்கண் ஒரு குந்தம் அது எறிந்தான். |
24 |
|
|
|
|
|
|
|
3854.
| உய்த்தது ஒரு கூர் அயில் உரத்தில் உறு முன்னர் மத்தகய நேர் விடலை மற்று அது தெரிந்தே கைத் தலம் இருந்திடும் கனல் புரையும் வாளால் அத்துணை இரண்டு துணியாய் விழ எறிந்தான். |
25 |
|
|
|
|
|
|
|
3855.
| கண்டம் உற ஞாங்கரது கண்டு திறன் மைந்தன் தண்டம் விரைந்து ஒன்று ஒரு தடக்கை கொடு எடுத்தே மண்டு அமர் செய் உன் உயிரை வாங்கும் இஃது என்னா அண்டர் புகழ் காளை தனது ஆகம் உற விட்டான். |
26 |
|
|
|
|
|
|
|
3856.
|
விட்டகாலை அத் தண்டினை வெலற்கு அரும் திறலோன்
அட்டிடான் தனிவாளினால் ஏற்றனன் அகலம் பட்டு மற்று அது நுண் துகளாக அப்பதகன் மட்டு இலாத ஓர் விம்மிதம் எய்தினன் மறுகி. |
27 |
|
|
|
|
|
|
|
3857.
| வேறு ஒர் முத்தலைப் படையது கொண்டு அதி வீரன் மாறு இலா விறல் மொய்ம்பினன் தன் மணி மார்பின் ஊறு செய்திறம் ஓச்சலும் கண்டு நம் உரவோன் சீறி ஆங்கு அது பற்றினன் செம்கையால் இறுத்தான். |
28 |
|
|
|
|
|
|
|
3858.
|
இறுத்த காலையில் இலங்கையில் யாளிமா முகன் சேய்
செறுத்து மற்று இவன் தனை அடல் அரிது எனச் சிந்தை
குறித்து மற்று ஒரு நாந்தகம் ஏந்தினன் குறுகி
வெறித்த கொண்டல் உட் கொட்புறு மின் என விதிர்த்தான்.
|
29 |
|
|
|
|
|
|
|
3859.
|
கறங்கினில் பெரு வட்டணை புரிந்து தன் கரமேல்
நிறம் கொள் வாளினை இடம் வலம் திரித்தனன் நெறியே
பிறங்கும் ஆர் கலித் தெண்டிரை அலைதரப் பெரிது
மறம் கொள் நாந்தகம் ஈனு கண்டு அலமரும் வகை போல்.
|
30 |
|
|
|
|
|
|
|
3860.
|
ஏது
இங்கு இது நான்முகன் தந்து உளது எவர்க்கும்
பேதகம் செயல் அரியதால் அன்னது பிடித்தேன் சாதி திண்ண நீ வருக எனா மிகை மொழி சாற்றிக் கோது இல் வீரன் முன் அணுகலும் அனையவன் கூறும். |
31 |
|
|
|
|
|
|
|
3861.
| நன்று நன்று நின் ஆற்றலும் ஆண்மையும் நம்மை வென்றியே எனின் யாவரும் மேல் உனை வியப்பார் நின்று நீ சில மொழிவது என் கடிது நேருதியால் வென்றி வீரரும் தமைப் புகழ்கிற்பரோ வென்றான். |
32 |
|
|
|
|
|
|
|
3862.
|
என்ன ஒன்னலன் கிடைத்தனன் வீரனும் எதிர்ந்தான்
அன்ன பான்மையர் வாள் அமர் ஆடினர் அகல்வான்
மின்னு மா முகில் தோன்றியே எதிர் எதிர் விரிந்து
பின்னருள் புகுந்து உடன் உடன் செறிந்த பெற்றிமை போல்.
|
33 |
|
|
|
|
|
|
|
3863.
| சென்னி நாடுவர் களத்தினை நாடுவர் செவிதாள் கன்ன நாடுவர் புயங்களை நாடுவர் கரங்கள் உன்னி நாடுவர் உரத்தினை நாடுவர் உகளப் பொன்னின் வார் கழல் நாடுவர் வாள் அமர் புரிவார். |
34 |
|
|
|
|
|
|
|
3864.
|
இணங்கு நீரவர் இருவரும் இனையன உறுப்பில்
அணங்கு செய்திடும் மரபினால் ஆயிடை உய்ப்பார்
நுணங்கு விஞ்சையின் வன்மையான் நொய்தின் மாற்றிடுவார்
மணம் கொள் செந்நிற வாள் கொடே வட்டணை வருவார். |
35 |
|
|
|
|
|
|
|
3865.
| போதம் இன்னதில் எம்பிரான் தூதுவன் பொருவான் ஏதி கொண்டுளான் தன்னையான் வலிந்திடல் இயல்போ ஆதலால் இவன் படை முறை வெல்வதே அறன் என்று ஓதி சேர் உளம் கொண்டனன் இடை தெரிந் துற்றான். |
36 |
|
|
|
|
|
|
|
3866.
| இடைபுகுந்த அதி வீரன் அது அடிகள் ஓர் இரண்டும் முடியும் ஆகமும் தோள்களும் ஆங்கு ஒரு முறையே சுடர் பிறங்கிய வாளினால் ஆண்தகை துணித்துக் கடிது வீட்டினன் நடுவன் வந்து அவன் உயிர் கவர்ந்தான். |
37 |
|
|
|
|
|
|