Try error :java.sql.SQLException: Closed Resultset: next
வீரவாகு சயந்தனைத் தேற்று படலம்
 
4158.
இத்திறம் அமரரோடு இந்திரன் மகன்
அத்தலை இருத்தலும் அனையர் யாவரும்
மொய்த்திடு சிறை அகம் முன் கண்டான் அரோ
வித்தக அறிவனாம் வீர வாகுவே.
1
   
4159.
மா கண்டம் ஒன்பான் புகழும் திறல் வாகு அங்கண்
ஆ கண்டலன் மைந்தனை விண்ணவர் ஆயினாரைக்
காய் கண்டகராம் அவுணத் தொகை காத்தல் கண்டான்
பேய் கண்ட செல்வம் தனைக் காத்திடும் பெற்றியே                                        போல்.
2
   
4160.
கண் ஓடல் இன்றித் துயர் வேலியில் காவல் கொண்ட
எண்ணோர் எனைக் கண்டிலராய் உணர்வு இன்றி மாழ்க
விண்ணோர்கள் காணத் தமியேன் செல வேண்டும்                                     என்றான்
மண் ஓர் அடியால் அளக்கும் தனி மாயன் ஒப்பான்.
3
   
4161.
ஓம் காரமூலப் பொருளாய் உயிர் தோறும் என்றும்
நீங்காது அமரும் குமரேசனை நெஞ்சில் உன்னி
யாங்கு ஆகுவதோர் அவன் மந்திரம் அன்பின் ஓதிக்
தீங்காம் அவுணர் செறி காப்பகம் சென்று புக்கான்.
4
   
4162.
தாமம் தரும் மொய்ம்புடை வீரன் சயந்தன் விண்ணோர்
ஏமம் தருவன் சிறைச் சூழலுள் ஏகலோடும்
தூமம் திகழ் மெய்யுடைக் காவலர் துப்பு நீங்கி
மா மந்திரம் ஆம் வலைப்பட்டு மயங்கல் உற்றார்.
5
   
4163.
எண் தானவரில் புடை காப்பவர் யாரும் மையல்
கொண்டார் குயிற்றப் படும் ஓவியக் கொள்கை மேவத்
தண்டார் அயில் வேல் படை நாயகன் தானை வேந்தைக்
கண்டார் சயந்தனொடு தேவர் கருதல் உற்றார்.
6
   
4164.
ஏமாந்து அவுணர் சிறுகாலையின் இன்னல் செய்ய
நா மாண்டனர் போல் அவசத்தின் அணுகும் எல்லை
மா மாண்படைய அருள் செய்த நம் வள்ளல் தூதன்
ஆமாம் இவன் என்று அகம் கொண்டனர் ஆர்வம்                                        உற்றார்.
7
   
4165.
அன்னார் அமரும் களம் சென்று அயில் ஏந்து நம்பி
நன் நாயகமாம் திரு நாமம் நவின்றுப் போற்றிப்
பொன் நாடு இறை கூர் திருநீங்கிய புங்கவன் தன்
முன்னா அணுகி இருந்தான் அடல் மொய்ம்பின்                                    மேலோன்.
8
   
4166.
செறிகின்ற ஞானத் தனி நாயகச் செம்மல் நாமம்
எறிகின்ற வேலை அமுதில் செவி ஏக லோடும்
மறிகின்ற துன்பின் சயந்தன் மகிழ்வு எய்தி முன்னர்
அறிகின்றிலன் போல் தொழுது இன்ன அறைதல் உற்றான்.
9
   
4167.
தாவம் பிணித்தது எனும் குஞ்சித் தகுவர் ஆனோர்
பாவம் தலை சூழ்வது போல் எமைப் பாடு காப்ப
மா வெம் படரில் இருந்தேம் கண் மருங்கின் ஐய
நீ வந்தது என்னை இனிது இங்கு நிகழ்த்துக என்றான்.
10
   
4168.
முறை உணர் கேள்வி வீரன் மொழிகுவான் முதல்வன்                                        தந்த
அறுமுக ஐயன் தன் பின் அடுத்து உளேன் அவன் தூது                                        ஆனேன்
விறல் கெழு நந்தி பாலேன் வீரவாகு என்பேர் நுங்கள்
சிறை விடும் பொருட்டுச் சூர்முன் செப்புவான் வந்தேன்                                        என்றான்.
11
   
4169.
என்னலும் அமரரோடும் இந்திரன் குமரன் கேளாச்
சென்னியின் அமிர்து உள் ஊறல் செய்தவத்து அயின்ற                                        மேலோர்
அன்ன தன் பின்னர் நேமி அமிர்தமும் பெற்று உண்டு                                        ஆங்கு
முன்னுறு மகிழ்ச்சி மேலும் முடி விலா மகிழ்ச்சி வைத்தான்.
12
   
4170.
அந்தர முதல்வன் மைந்தன் அறைகுவான் ஐய துன்பூர்
புந்தியேங் குறைவின் ஆதல் பொருட்டினால் போந்தாய்                                         அற்றால்
இந்தவன் சிறையும் நீங்கிற்று இடர் எலாம் அகன்றி                                         யாங்கள்
உய்ந்தனம் பவங்கள் தீரும் ஊதியம் படைத்தும் என்றான்.
13
   
4171.
பூண்தகு தடந்தோள் வீரன் புகலுவான் சூர்மேல் ஒற்றா
ஈண்டு எனை விடுத்த வேல் கை எம்பிரான் வலிதே                                        நும்மை
ஆண்டிடுகின்றான் முன்னர் ஆக்கமும் பெறுதிர் பின்னும்
வேண்டியது எய்து கின்றீர் என்றனன் மேலும் சொல்வான்.
14
   
4172.
உலம் எலாம் கடந்த தோளீர் உன்னுதிர் உன்னி ஆங்கு
நலம் எலாம் வழிபட்டோர்க்கு நல்கிய குமரன் தன்னால்
தலம் எலாம் படைத்த தொல்லைச் சதுர்முகன் முதலாம்                                     வானோர்
குலம் எலாம் உய்ந்தது என்றால் உமக்கு ஒரு குறை                                     உண்டாமோ.
15
   
4173.
தேவர்கள் தேவன் வேண்டச் சிறைவிடுத்து அயனைக்                                       காத்த
மூவிரு முகத்து வள்ளல் முழுது அருள் செய்தான் நும்பால்
பாவமும் பழியும் தீங்கும் பையுளும் பிறவும் எல்லாம்
போவது பொருளோ தோற்றப் புணரியும் பிழைத்தீர்                                       அன்றே.
16
   
4174.
சீர் செய்த கமலத் தோனைச் சிறை செய்து                                   விசும்பினோடும்
பார் செய்த உயிர்கள் செய்த பரஞ்சுடர் நும்மை எல்லாம்
சூர் செய்த சிறையின் நீக்கத் தொடர்ந்திவண் உற்றான்                                   என்றால்
நீர் செய்த தவத்தை யாரே செய்தனர் நெடிது காலம்.
17
   
4175.
சங்கையில் பவங்கள் ஆற்றும் தானவர் செறிந்த மூதூர்
இங்கு இதன் அறிஞர் செல்லார் எம்பிரான் அருளினால்                                       யான்
அங்கணம் படர்வோர் என்ன அகம் மெலிந்து உற்றேன்                                       ஈண்டே
உங்களை எதிர்தலாலே உலப்பிலா உவகை பூத்தேன்.
18
   
4176.
என்றலும் மகிழ்ச்சி எய்தி இந்திரன் மதலை யாங்கள்
வன் தளைப் படுமுன் போனார் மற்று எமைப் பயந்தோர்                                       அன்னோர்
அன்று தொட்டு இன்று காறும் ஆற்றிய செயலும் அற்றால்
ஒன்றிய பயனும் யாவும் உரைமதி பெரியோய் என்றான்.
19
   
4177.
வீரன் அங்கு அதனைக் கேளா விண்ணவர் கோமான்                                     தொல் நாள்
ஆரணங்குடனே காழி அடைந்ததே எழுவாயாகச்
சீர் அலை வாயில் அந் நாள் சென்றிடு காறும் உள்ள
காரிய நிகழ்ச்சி எல்லாம் கடிதினில் கழறினான் ஏ.
20
   
4178.
மேதகு தடந்தோள் வீரன் விண்ணவர் கோமான் தொல்                                    நாள்
ஓதலும் சயந்தன் கேளா உரை செய்வான் அன்னை                                    தன்னைத்
தாதையை அடிகள் தன்னைச் சண்முகத் தனிவேல் செம்                                    கை
ஆதியை எதிர்ந்தால் ஒத்தேன் ஐய நின் மொழி கேட்டு                                    என்றான்.
21
   
4179.
இறைதரும் அமரர் தம்மோடு இந்திரன் புதல்வன் தன்னை
அறிவரில் அறிவன் கண் உற்று அறுமுகம் படைத்த                                     அண்ணல்
மறை இடை வதிந்த நுங்கள் வன்சிறை மாற்றும் வைகல்
சிறிது இவண் இருத்திர் என்று பின்னரும் செப்புகின்றான்.
22
   
4180.
தன் நிகர் இன்றி மேலாய்த் தன் பரம் ஒளியாய் ஆரும்
உன்னரும் பரமாய் நின்ற ஒருவனே முகங்கள் ஆறும்
பன்னிரு புயமும் கொண்டு பாலகன் போன்று கந்தன்
என்னும் ஓர் பெயரும் எய்தி யாவரும் காண வந்தான்.
23
   
4181.
பங்கய முகங்கள் ஆறும் பன்னிரு புயமும் கொண்டே
எங்கள் தம் பெருமான் போந்த ஏது மற்று என்னை                                       என்னில்
செங்கண் மால் உந்தி பூத்தோன் சிறுமையும் மகவான்                                       துன்பும்
உங்கள் தம் சிறையும் நீக்கி உலகெலாம் அளிப்பக்                                       கண்டாய்.
24
   
4182.
சிறு விதி வேள்வி நண்ணித் தீயவி நுகர்ந்த பாவம்
முறைதனில் வீரன் செற்று முற்றவும் முடிந்தது இல்லை
குறை சில இருந்த ஆற்றால் கூடியது உமக்கு இத்துன்பம்
அறுமுகப் பெருமான் அன்றி யார் இது நீக்கற் பாலார்.
25
   
4183.
தாள் கொண்ட கமலம் அன்ன கண் முகத்து எந்தை                                வேலால்
காட் கொண்ட கிரியினோடு தாரகர் கடந்த பூசல்
தோள் கொண்ட மதுகை சான்ற சூர் முதல் களைய                                முன்னம்
நாள் கொண்ட தன்மை அன்றோ நறை கொண்ட                                அலங்கல் தோளாய்.
26