சதமுகன் வதைப் படலம்
 
4352.
ஒண்ணில எயிற்றினர் ஒர் ஆயிரரை அட்டே
எண் இலன் அவைக்களம் இகந்து படர் காலைக்
கண்ணின் அழல் காலும் வகை கண்டு புடையாக
நண்ணு சத மா முகனை நோக்கி நவில்கின்றான்.
1
   
4353.
ஆறுமுகன் ஆளை இவன் ஆயிரரை இங்ஙன்
கோறல் புரிந்தான் எனது கொற்றம் முழுது எள்ளி
வேறல் உடையோர்கள் என மேன்மை பல செப்பிச்
சேறல் புரிவான் தவிசும் உம்பர் இடை செல்ல.
2
   
4354.
ஒட்டிய நம் வீரரை ஒறுத்து அகல் வனேனும்
விட்டது ஒரு தூதனொடு வெம் சமர் இயற்றி
அட்டல் பழி ஆகும் அவன் ஆற்றலை அடக்கிக்
கட்டி விரைவால் வருக எனக் கழற லோடும்.
3
   
4355.
சூர் குலம் முகில் பொருவு சூரன் அடி தாழா
ஏற்கும் விடை பெற்று இசைவின் ஏகுதல் புரிந்தான்
நாற் கடலும் மேவினும் நதுப் பரிய ஊழிக்
கால் கனலின் ஓதை தொடர் காட்சியது மான.
4
   
4356.
ஏகு சதமா முகன் இலக்கம் அற வீரர்
பாகம் வர எண்ணில் படை பாணி மிசை பற்றி
வேகமொடு சென்ற தனி வேலன் விடு வீர
வாகுவினை எய்தி ஒரு மாற்றம் அறைகின்றான்.
5
   
4357.
காவல் பல நீங்கி வரு கள்வ உலகு உள்ளோர்
ஏவரும் வியப்ப வரும் எங்கள் இறை முன்னம்
மேவினை இகழ்ந்து சில வீரர் உயிர் வௌவிப்
போவது எவன் நில் உனது போர் வலி அழிப்பேன்.
6
   
4358.
பட்டிமை உருக்கள் கொடு பாறல் அரிதாசை
எட்டு உள பரப்பு அதனுள் ஆண்டு அகல்வை யேனும்
விட்டிடுவனோ என விளம்பி வெரிந் எய்திக்
கிட்டுதலும் வீரன் இது கேட்டனன் எதிர்ந்தான்.
7
   
4359.
கொற்ற வேல் உடை அண்ணல் தன் மொழியினைக்                  கொண்டிலன் இகழ்ந்து என்னைப்
பற்ற ஆயிரர் தங்களை விடுத்தலும் படுத்தனன் பெயர்                                        காலை
மற்றும் ஈது ஒரு வயவனை உய்த்தனன் மன்னவன் இவன்                                        ஆவி
செற்று மா நகரம் தனை அழித்தனன் செல்லுவன் இனி                                        என்றான்.
8
   
4360.
கருதி இன்னணம் சதமுகன் எனப்படு காவலன் தனை                             நோக்கிக்
குருதி வேல் உடைப் பண்ணவன் அடிமனம் கொண்டு                             திண் திறல் வாகு
பொருதல் உன்னியே ஈண்டு அறை கூவினை பொள் எனப்                             படையோடு
வருதியால் எனத் தெள் விளி எடுத்தனன் மறலிக்கும்                             இறை போல்வான்.
9
   
4361.
எல்லை அன்னதில் சதமுகற் சூழ்தரும் இலக்கரும் எதிர்                                 ஊன்றி
வில் உமிழ்ந்திடு வெம்சரம் தொடுத்தனர் வேல் படை                                 விடுக்கின்றார்
கல் எனும் படி நேமிகள் உருட்டினர் கப்பணம் சிதறுற்றார்
வல்லை முத்தலைப் படை எழு ஓச்சினர் மழுக்கொடே                                 எறிகின்றார்.
10
   
4362.
அணிகள் பட்டவர் விட்ட இப் படை வகை அண்ணன்                           மேல் புகலோடும்
துணிகள் பட்டன நெரிந்தன எரிந்தன துகளுமாய்ப்                           போயிற்றால்
மணிகள் பட்டிடும் இரும் சிறைக் கலுழர்க்குள் வலியன்                           மேல் படு நொய்ய
பணிகள் பட்டன போன்றன வேறிலை படி எடுத்து                           உரைத்தற்கே.
11
   
4363.
இலக்கம் ஆகி முன் நின்ற பேர் ஆண்டகை இவர்                           செயலினை நோக்கி
இலக்கம் ஆய் முழுது உலகமும் துளக்கியே இராயிரப்                           பத்து எனும்
இலக்கம் மா முடி கொண்டது ஓர் சூளிகை இம் எனப்                           பறித்து ஏந்தி
இலக்கம் ஆகியே எதிர் பொரு தானவர் தங்கள் மேல்                           எறிந்திட்டான்.
12
   
4364.
ஏதிலான் விடு சூளிகை சிறகர் பெற்று இறந்து வீழ் மேருப்                                 போல்
மீது சென்று அமர் இயற்றியே நின்றிடும் வெய்யவர் மிசை                                 எய்தித்
தாது முற்றவும் சாந்துபட்டு ஒருங்கு உறத் தனு எலாம்                                 சிதைத்திட்டே
ஓதநீர் முகில் ஆர்ப்பொடு புவிக் கண் வீழ்ந்து உடைந்தன                                 உதிராகி.
13
   
4365.
கொடி செறிந்திடு சூளிகை தன்னுடன் அவுணர் தம் குழாம்                                     கொண்ட
முடி சிதைந்தன நாசி நீடு அலை எலாம் முடிந்தன முடிவு                                     இல்லா
வடிவு அமைந்திடு கன்ன கூடத் தொகை மாய்ந்தன நிலை                                     கொள்ளும்
அடிதகர்ந்தன கொடுங்கையும் மாண்டன ஒழிந்தவும்                                     அழிவுற்ற.
14
   
4366.

இலக்கர் தம்மையும் சூளிகை தன்னுடன் இமைப்                        பொழுதினில் அட்டு
நிலக்கண் வீரனின்று அடுதலும் சதமுகன் நிரை விழி                        கொடு நோக்கிக்
கலக்க நண்ணியே தமரினைக் காண்கிலன் கவன்றனன்                        தெளிவு எய்தி
உலக்கை சூலம் வேல் சக்கரம் தோமரம் ஓச்சுதல்                        உறுகின்றான்.
15
   
4367.
உற்ற காலையின் ஓண்திறல் மொய்ம்பினோன் உருகெழு                               சினம் செய்தோர்
பொற்றை நேர் தரு சிகரியைப் பறித்தனன் பொள் என                               எறி காலை
மற்று ஒர் வார் சிலை வணக்கியே வெய்ய தீ வாளி                               ஆயிரம் பூட்டி
இற்று வீழ்வகை இடைதனில் அறுத்தனன் எறிதரு கதிர்                               வேலான்.
16
   
4368.
அறுத்து நூறு கோல் பின்னரும் ஆங்கு அவன் ஆகத்தின்                                நடு எய்தச்
செறித்த காலையின் வீரவாகுப் பெயர்ச் செம்மல் போய்                                அவன் வில்லைப்
பறித்தனன் முறித்து எறிதலும் சதமுகன் பற்ற வீதிடை                                என்னாக்
குறித்து ஒர் ஐம்பதிற்று இருகரம் ஓச்சியே குரிசிலைப்                                பிடித்திட்டான்.
17
   
4369.
பிடித்த தானவத் தலைவனை அண்ணல் ஓர் பெரும் புயம்                            கொடு தாக்கிப்
படித்தலைப் படத் தள்ளலும் வீழ்ந்துளான் பதை பதைத்து                            எழுகாலை
அடித் தலத்தினால் உதைத்தனன் அசனியால் அழுங்கு                            உறும் அரவம் போல்
துடிப்பவே உரத்து ஒரு கழல் உறுத்தினன் சோரிவாய்                            தொறும் சோர.
18
   
4370.
கந்து எனப்படு மொய்ம்புடை வெய்யசூர் கட்டுரை முறை                              போற்றி
வந்து எதிர்ந்திடு சத முகத்து அவுணனை மிதித்திடும் அற                              மைந்தன்
அந்தகப் பெயர் அசுரனை ஆற்றல் பெற்று அமர்                              முயலகன் தன்னைத்
தந்தியைப் பதம் ஒன்று கொண்டு ஊன்றிய தாதைபோல்                              திகழ் கின்றான்.
19
   
4371.
மின்னல் வாள் எயிற்று அவுணன் மார்பகம் விடர் எனும்                              படி விள்ளவே
தன் ஒர் பாதம் உறுத்தி மற்று ஒரு தாளினைக் கொடு                              தள்ளியே
சென்னி யாவும் உருட்டினான் திசை முற்றும் நின்று                              பரித்திடும்
கன்னமார் மத மால் களிற்றினும் வன்மை சான்றிடு                              கழலினான்.
20
   
4372.
நூறு சென்னியும் இடறி ஆங்கு ஒரு நொடி வரைப்பின்                            முன் அவுணனை
ஈறு செய்தனன் அது முடித்த பின் எல்லை இல் சினம்                            எய்தியே
ஆறு மாமுக வள்ளல் வாய்மை இகழ்ந்து உளான்                            அவையத்தை முன்
ஈறு செய்து பின் நடுவன் இந் நகரத்தை என்று                            நினைந்தனன்.
21